Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கட்டிச்சோலை படுகொலையைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையாக இப்படுகொலை நிகழ்வு காணப்பட்டதுடன் சர்வதேச அரங்கிலும் இப்படுகொலையின் கொடூரம் வெளிக் கொணரப்பட்டது.
 

அரச படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று அம்பலப்படுத்தியவர் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமே. இப்படு கொலையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது துணிச்சலான செயற்பாட்டால் சர்வதேசத்தில் குறிப்பிட்ட காலம் இப்படுகொலை பற்றிய பேச்சு பிரபல்யமாகக் காணப்பட்டதுடன் அக் காலப்பகுதியில் லண்டன் பிபிசியிலும் இப்படுகொலை பற்றி அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்படுகொலையினை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு வரை அமைக்கப்பட்டு அனைத்து விசாரணைகளும் புஷ்வாணமாக சென்றன.
 

முதலைக்குடா, மகிழடித்தீவுக்கும், மண்முனைத் துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் அக் காலப்பகுதியில் பாரிய இறால் பண்ணை அமைந்திருந்தது. இந்த இறால் வளர்ப்புப் பண்ணையில்தான் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது. இந்த இறால் பண்ணை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளைப் பிரதேசத்தில் அமைந்திருந்த இந்ந இறால் பண்ணையில் பண்ணையை அண்மித்த கிராமங்களில் உள்ள வறியவர்கள் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் எனப் பெருமளவிலானோர் வேலை செய்து வந்தனர். பட்டிப்பளைப் பிரதேசத்தில் அக்காலப் பகுதியில் அரச படையினரது பல முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் மேற்கே உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்து தாக்குதலை மேற்கொண்டு வந்த காலம் அது.
பட்டிப்பளைப் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த அரச படையினருக்கு மண்முனைத் துறை ஊடாக உணவுப் பொருட்கள் வருவது வழக்கம். நாளாந்தம் அரச படையினர் கொக்கட்டிச்சோலை முதல் மண்முனைத்துறை வரை நடந்து சென்று பொருட்களை எடுத்து வருவர். பொருட்கள் எடுத்துச் செல்லும் வரை அவ்வீதியில் காவல் கடமையில் ஈடுபடுவதும் வழக்கம்.
 

நாளாந்தம் இவ்வீதியால் செல்லும் படையினருக்கும் இப்பண்ணையில் தொழில் புரிபவர்களுக்கும் சுமுகமான அறிமுகமும் இருந்து வந்தது. அனைவரும் பழகிய முகங்களாகக் காணப்பட்டனர்.
 

1987. 01. 28 ஆம் திகதி காலை வழக்கம் போல் இறால் பண்ணையில் தொழிலாளர்கள் தத்தமது கடமைகளை மேற்கொண்டவாறு காணப்பட்டனர். வழமைக்கு மாறாக இறால் பண்ணையைச் சுற்றி நாலா புறமும் படையினர் சூழ்ந்த  நிலையில் கொக்கட்டிச்சோலை மற்றும் அயல் கிராமங்களில் உள்ள படை முகாம்களில் இருந்தும் படையினர் இறால் பண்ணையை நோக்கிச் சூழ்ந்தனர்.  ஆவேசத்துடன் உள்ளே நுழைந்த  படையினர் கண்மூடித்தனமாக பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள்மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். இதனை எதிர்பாராத பொதுமக்கள் மரண பீதியில் நாலாபுறமும் ஓட பண்ணையைச் சுற்றி நின்ற படையினர் உயிர் தப்ப ஓடியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்க ஆண், பெண், இளைஞர்கள் வேறுபாடின்றி அப்பாவிப் பொதுமக்கள் 65 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு சிலரே உயிர் தப்பினர். ஒரே குடும்பத்தில் பலர் கூட இதன்போது படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் இப் படுகொலைக்குள்ளாக்கப்பட்டவர்கள் அனைவரும் உறவினர்களாகவே காணப்பட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலம் கேட்டது.
இப்படுகொலைதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கொக்கட்டிச்சோலையின் பெயரும் சர்வதேச ரீதியில் பிரபல்யமடையக் காரணமாக இருந்தது.  இப்படுகொலைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராராஜசிங்கம் சர்வதேசத்தில் குரல் எழுப்பியதால் பல தரப்பினராலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவும் சர்வதேச ரீதியாகத் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக அப்போதைய  அரசாங்கம் ஒரு கண்துடைப்புக்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை விசாரணைக்கு நியமித்தது. இவ்விசாரணையானது பல மாதங்கள் நீடித்தது. இவ்விசாரணையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் உட்பட பல பொது மக்களும் ஆணைக்குழு முன்பாக வாக்குமூலமளித்தனர்.


விசாரணையின் முடிவில் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் படையினர் தமது பொறுப்புகளை மீறி நடந்து கொண்டுள்ளதாகவும் அப்பாவிப் பொது மக்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டு அப் படையினருக்கும் படை அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் சம்பந்தப்பட்ட படையினருக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காது  பதவியுயர்வு வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கிய நிகழ்வே இடம்பெற்றது.


ஆணைக்குழு மூலம் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட மக்களும் வாக்கு மூலமளித்தவர்களும் ஏமாற்றமடைந்தனர். அன்றைய அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கமாகவே கொக்கட்டிச்சோலை படுகொலை நடந்தேறியது. அதனை மூடி மறைப்பதற்காக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன போட்ட திட்டமே ஜனாதிபதி ஆணைக்குழு. அதன் மூலமாக அனைத்து விடயங்களும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரால் திசை திருப்பப்பட்டன.
 

இப்படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.


இந்த நினைவுதின நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ. யோகேஸ்வரன் மற்றும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொள்வதோடு கௌரவ விருந்தினர்களாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

மணிகண்டன்

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=1851:--26-----&catid=293:article&Itemid=542

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனப்படுகொலையின் போது மாண்டுபோன அப்பாவி தமிழ் மக்களுக்கு நினைவஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனப்படுகொலையின் போது மாண்டுபோன அப்பாவி தமிழ் மக்களுக்கு நினைவஞ்சலி.


 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்..!

 

ஆணைக்குழுவின் தீர்ப்பு கடைசியில் வந்ததா இல்லையா..? ஒரு சர்வதேச மொள்ளமாறிக்கும் இதுபற்றியெல்லாம் கவலை கிடையாது..

நினைவுநாள் வணக்கங்கள் !!!

 

62312_469793236415361_2033774639_n.jpg

 

கொக்கட்டிச் சோலை கலாச்சார மண்டபத்தில் இன்று நிகழ இருந்த நிகழ்வை பொலிசார் அடாத்தாக நிறுத்தி, மண்டபத்துக்கு பூட்டும் போட்டு, வந்த மக்களை அச்சுறுத்தியும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இதே காத்தான்குடி படுகொலை என்றால் முழு ஹர்த்தால் அனுஷ்டிக்க சிங்களவனே தூண்டிவிடுவான். அதேவேளை முஸ்லீம் காடைகளால் மேற்கொள்ளப்பட்ட கல்முனைப் படுகொலை பற்றி யாரும் எதுவும் அனுஷ்டிக்க விடமாட்டினம். ஏன்னா அது உலகின் மனச்சாட்சியை தட்டிக்கேட்டிட்டா... என்னாகிறது..! தமிழனுக்கு மட்டும்.. எத்தனை தடைகள்..! :(:o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கட்டிச்சோலையில் மாண்டுபோன உறவுகள் அனைவரையும் நெஞ்சில் இருத்தி கண்ணீர்க் காணிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் 

62911_413173752091327_1418277880_n.jpg

69646_413173848757984_1217030627_n.jpg

69646_413173848757984_1217030627_n.jpg

1991 Kokkadichcholai massacre refers to the massacres of minority Sri Lankan Tamil civilians in the village Kokkadichcholai near the eastern province town of Batticaloa. The massacre happened on June 12, 1991 in which 152[1][2] civilians were killed. The Sri Lankan government instituted presidential commission to investigate the massacre. The commission found the commanding officer negligent in controlling his troops and recommended that he be removed from office. The commission also identified 19 members of the Sri Lankan military as responsible for mass murder. In a military tribunal that followed the presidential commission in the capital city of Colombo, all the 19 charged soldiers were later acquitted.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

நினைவு வணக்கங்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.