Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் 60 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 60 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை!
ஜன 29, 2013
  
யாழ்ப்பாணம் அருகே கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

32.jpg


யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் எனும் இடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்தபதி சிற்ப கலாசுரபி விஸ்வ பிரம்மஸ்ரீ கலியப்பெருமாள் புருஷோத்தமனால் 72 அடி சிலை வடிக்கப்பட்டுள்ளது.


இந்த சிலைதான் இலங்கையிலேயே மிக உயரமான கம்பீரமான ஆஞ்சநேயர் சிலையாகும்.


34.jpg


இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த புதன்கிழமை (23.01.2013)
நடைபெற்றது சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் யாழ்ப்பாணத்தின் பிரதான
சாலைகளில் ஒன்றான யாழ்.-காங்கேசன்துறை சாலையின் போக்குவரத்து சில மணிநேரம்
தடைப்பட்டது.

குடமுழுக்கு நிகழ்வினைத் தொடர்ந்து 48 நாட்கள்
மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. வரும் 11.03.2013 அன்று மண்டலாபிஷேகம்
நிறைவடையும். யாழ்ப்பாணம் நகரில் இருந்து மருதனார்மடம் 7 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/26370/64/60/d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதிப்படை(போக்கிரிப்படை)க்கு சிங்களவர் கொழும்பில் சிலை வைத்தால் நாங்கள் இந்திய முதல் உளவாளி அனுமானுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை வைப்போமல்ல ......இந்தியாவின் முதல் அடிமைகள் நாங்கள்தான்....இதுக்கு யாரும் உரிமை கோராமுடியாது....:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேயர்,எங்களுக்கு, என்ன முறையால சொந்தம்? :D

 

இராவணன் சிவபக்தன்!

 

இராவணனை அழித்தவன், சிவனுக்கு எதிரி!

 

அப்படியானால், எதிரியின் பக்தன்? :o

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேயர்,எங்களுக்கு, என்ன முறையால சொந்தம்? :D

 

இராவணன் சிவபக்தன்!

 

இராவணனை அழித்தவன், சிவனுக்கு எதிரி!

 

அப்படியானால், எதிரியின் பக்தன்? :o

 

இப்ப எதிரிக்கு காவடி எடுத்தால்தான் சமுகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்குது....:D

இலங்கையை எரித்த அனுமானுக்குக் கோயிலா? வெகுவிரைவில் ராஜீவ், மகிந்தா, கோத்தபாயாவுக்கும் ............



 

Edited by அலைமகள்

" யாதும்  ஊரே யாவரும் கேளீர் " கி.மு. 5000, பண்டைய தமிழன்!

 

நாங்கள் எந்த மதத்தையும் இனத்தையும் கலாச்சாரத்தையும் வரவேற்போம்  :o

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக 100 அடியில் புத்தர் சிலை விரைவில்வரும்....இதற்கான முன்னோட்டம்தான் ..இந்தசிலை...சிங்களவன் வைக்கிறானோ இல்லையோ....நம்ம   ஆட்கள் இதனை செய்வர்....

கும்பகரணன், இராவணனையெல்லாம் கண்டு அஞ்சாத ஆஞ்சநேயன், ஆபத்தில் இருப்போருக்கு ஆபத்பாந்த்மா, இந்த முறை தான் இலங்கைக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு வந்திருப்பதை கண்டு நிலை கலங்கிப்போயிருக்கிறான். :(

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

" யாதும்  ஊரே யாவரும் கேளீர் " கி.மு. 5000, பண்டைய தமிழன்!

 

நாங்கள் எந்த மதத்தையும் இனத்தையும் கலாச்சாரத்தையும் வரவேற்போம்  :o

 

அகூதா, இந்தக் கொள்கை தான், தமிழனின் அழிவுக்கு முக்கிய காரணம்!

 

இந்தச் சிலையில், ஏதாவது அழகு உங்களுக்குத் தெரிகிறதா? :D

 

இந்த மண்ணில், தலை முறை தலைமுறையாக வாழும், மக்களுக்கும் ஆஞ்சநேயருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா?

 

தோற்றுப்போய்விட்ட மக்கள் மீது, அந்தத் தோல்விக்குக் காரணமானவர்கள், திணிக்கும் திணிப்பாகவே,இது எனது பார்வைக்குத் தெரிகின்றது!

 

ஆக்ரோசமான இந்தச் சிலைக்கும், அமைதியான புத்தர் சிலைக்கும் என்ன வேறுபாடுகள் உள்ளன!

 

புத்தர் சிலை, ஆக்கிரமிப்பவர்களைப் பிரதிநிதிப்படுத்துவதால் தானே, அதை நாம் வெறுக்கிறோம்!

 

அதே காரணம், இதற்கும் பொருந்துகிறது என்றே நான் நினைக்கிறேன்!

 

அனுமான், இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று காரணம் கூறலாம்!

 

அப்படிப் பார்த்தால், புத்தரும், பிறப்பால் ஒரு இந்து தானே! (ஒரு கதைக்குச் சொல்லுகிறேன்!) :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

60 அடியில ஒரு கல்லுக்கு வர்ணம் அடிச்சுப்போட்டு சாமியாம் அதைப்பார்க்க ஒரு கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறன் எண்டு குறை நினைக்காதேயுங்கொ  அனுமார் எந்த ஜிம்முக்கு போய் என்ன மாதிரியான work  out செய்யிறவர்? 8 பக் வச்சிருக்கிறார் அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறன் எண்டு குறை நினைக்காதேயுங்கொ  அனுமார் எந்த ஜிம்முக்கு போய் என்ன மாதிரியான work  out செய்யிறவர்? 8 பக் வச்சிருக்கிறார் அதுதான்.

தும்பு, அது ஜிம்மில இருந்து வாறதில்லை!

 

ஜீன்ஸில இருந்து வாறது எண்டு நினைக்கிறன்!

 

அனுமான்ர தகப்பன், வாயுபகவான்,

இவர் தான் வீமனுக்கும் தகப்பனாம்! :D

காசு பறிக்கும் கும்பலின் இன்னொரு உத்தி இந்த மாதிரி புதுப் புது சிலைகளை அறிமுகப்படுத்துவது! அறிவற்ற மக்கள் இந்த மாதிரியான போலிகளை நம்பி ஏமாந்து விடுவர் 

கலை நயம் அற்ற ஒரு காடையர் கும்பலால் இந்த வானரத்துக்கு அலங்கோல சிலை வைத்து அந்தப் பிரதேசத்தையே கேவலப் படுத்தியுள்ளனர்.

இதன் பின்னணியில் இந்திய தூரகக் காட்டுமிராண்டிகள் அல்லது ஹிந்து சேவா சங்கம் என்னும் ஹிந்தி வெறி பிடித்த இந்தியக் காட்டுமிராண்டிக் கும்பல் இருக்கலாம்.

அது உண்மையான சிலையாக தெரியவில்லை..திருவிழாக்களுக்கு, அல்லது சினிமா படங்களுக்கு வைக்கப்படும் cut-out என்று..

நான் நினைக்கின்றேன் அந்த கோயில் புதுசு,


தும்பளையான் மற்றும் புங்கையூரன் நீங்கள் "புது christian" ஆ?
 

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மையான சிலையாக தெரியவில்லை..திருவிழாக்களுக்கு, அல்லது சினிமா படங்களுக்கு வைக்கப்படும் cut-out என்று..

நான் நினைக்கின்றேன் அந்த கோயில் புதுசு,

தும்பளையான் மற்றும் புங்கையூரன் நீங்கள் "புது christian" ஆ?

 

 

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம்! :D

 

ஆனால் இந்துவல்ல! :o

213i3cg.gif



இரண்டு இடமும் ஒன்றே தான் செய்கிறார்கள்  - cut-out க்கு பால் ஊத்துகிறார்கள்



அம்மன் -  சைவமா (ரா)? இந்துவா? :rolleyes:



ஆனால் ஒன்று அழகான ஆஞ்சநேயரை அலங்கோலமாக்கி விட்டார்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

213i3cg.gif

இரண்டு இடமும் ஒன்றே தான் செய்கிறார்கள்  - cut-out க்கு பால் ஊத்துகிறார்கள்

அம்மன் -  சைவமா (ரா)? இந்துவா? :rolleyes:

ஆனால் ஒன்று அழகான ஆஞ்சநேயரை அலங்கோலமாக்கி விட்டார்கள் :icon_mrgreen:

 

பார்வதி என அழைக்கப்படும், அம்மன் மட்டும் சைவம்! :D

இவரை, உமை அல்லது உமாதேவி என்றும் அழைப்பார்கள்!

தக்கன் என்ற அரக்கனின் (அரக்கனின் மகள் என்பதையும் கவனிக்கவும்) மகளாவாள்! 

 

சிவனையும், வேதங்களில் வரும் உருத்திரனையும் போட்டுக் குழப்பாதீர்கள். இருவரும் வேறு வேறானவர்கள்! :icon_mrgreen:

 

லட்சுமி என வரும்போது வைஷ்ணவம்!

 

சரஸ்வதி என்று வரும்போது வைஷ்ணவம்!

 

துர்க்கை என்று வரும்போதும் வைஷ்ணவம்!

பார்வதி என அழைக்கப்படும், அம்மன் மட்டும் சைவம்! :D

இவரை, உமை அல்லது உமாதேவி என்றும் அழைப்பார்கள்!

தக்கன் என்ற அரக்கனின் (அரக்கனின் மகள் என்பதையும் கவனிக்கவும்) மகளாவாள்!

சிவனையும், வேதங்களில் வரும் உருத்திரனையும் போட்டுக் குழப்பாதீர்கள். இருவரும் வேறு வேறானவர்கள்! :icon_mrgreen:

லட்சுமி என வரும்போது வைஷ்ணவம்!

சரஸ்வதி என்று வரும்போது வைஷ்ணவம்!

துர்க்கை என்று வரும்போதும் வைஷ்ணவம்!

இதேபோல்.. முருகனும் கந்தனும் வேறுவேறு ஆக்கள்.. முருகனை பற்றிய சரியான விபரங்கள் இல்லை.. ஆனால் கந்தன், ஸ்கன்டா, அலக்ஸான்டர் பற்றிய முழு விபரங்களும் உள்ளது..

தமிழர்கள் மாதிரி ஞானசூனியங்கள் உலகில் எங்குமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல்.. முருகனும் கந்தனும் வேறுவேறு ஆக்கள்.. முருகனை பற்றிய சரியான விபரங்கள் இல்லை.. ஆனால் கந்தன், ஸ்கன்டா, அலக்ஸான்டர் பற்றிய முழு விபரங்களும் உள்ளது..

தமிழர்கள் மாதிரி ஞானசூனியங்கள் உலகில் எங்குமில்லை..

 ஸ்கந்தா என்னும் ஒரு பாத்திரம் வேதத்திலும் உள்ளது!

 

இவர் சூரியனின் மனைவி சசிதேவிக்கும்,  அஷ்ட பாலகர் என அழைக்கப் படும், எட்டு முனிவர்களுக்கும் பிறந்த குழந்தையாகும்!

 

இவரது பிறப்பின் உண்மையான கதையை நான் இங்கு எழுதினால், அது ஐயப்பன் கதையை விடச் சுவாரசியமானது!  :D

 

இவர் ரிக் வேதத்தில் போர்க்கடவுள் ஆகக் கருதப்படுகின்றார்.

 

இவர் தான் தமிழ்க் கடவுளான முருகனைக் கந்தனாக்கியவர். மற்றும்படி முருகனுக்கு, ஆறு தலைகள் இருக்கவேயில்லை!

 

இப்போது முருகன், இந்துமதத்தின் அசைக்க முடியாத ஒரு பகுதியாகிவிட்டார். :o ,  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.