Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தைரியமற்ற பாம்புகள் தான் ஒருவரின் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி படர நினைக்கும். இது ஒரு கோழைப் பாம்பு.

 

இங்கு பாம்புகள் எவ்வளவு அதிகமோ அதே போன்று பற்றிப் படர்ந்து தன் வலைக்குள் சிக்க வைக்கும் சிலந்திகளும் அதிகம். பாம்புகளும் சிலந்திகளும் கொண்டது தான் இந்த சமூகம்.

 

இக் கதையில் கையாளப்பாட்ட சொற்களில் தனித்து ஒட்டாமல் நிற்கும் ஒரு சொல்லாக 'தனம்' என்று சொல்லு இருக்கு.

 

எல்லாம் சரி, நிழலி!

 

'தனம்' என்றால் என்ன? :icon_mrgreen:

 

செல்வம் என்று ஒரு பொருள் உள்ளது!  சீதனம் என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ? :D

  • Replies 60
  • Views 9.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இசைக்கலைஞன்
    இசைக்கலைஞன்

    அதே..   அழுக்கை அடக்கி மறைக்கிறவன் நல்லவன் எனப்படுவான்..

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    குழப்பம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ரதி? கதையின் முடிவை உங்களால் அடையாளம் காண முடியவில்லையா.... உங்களுக்குத் தோன்றுவதை எழுதினால்தான் என்னால் விளக்கம் கொடுக்கமுடியும் ரதி. வழமையான எழு

  • தப்பிலி
    தப்பிலி

    உங்களிட்ட கடிவாங்காம பாம்பு எப்படி தப்பிச்சுது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ ஈவ்டீசிங் கதை போல் உள்ளது.. :D அண்மையில் கமல் படம் வெளிவந்த பாதிப்பில் குழப்பமாக எழுதியுள்ளார் கதாசிரியர்..! :lol:

 

இசை.....

ஈவ்டிசிங் என்பது இலகுவாகச் சொல்லக்கூடிய வார்த்தை. அதனை விரும்பாத மனிதர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடும். சமூகம், சூழல், அகவாழ்வு, புறவாழ்வு இப்படியான பாதிப்புகளை ஈவ்டிசிங்தான் உருவாக்குகிறது. அது சரி அண்மையில் வந்த கமல் படத்தில் இத்தகைய காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா? நான் இன்னும் பார்க்கவில்லை :(

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை விளங்கவில்லை என்று சொல்கிற அளவுக்கு நான் சின்னப் பிள்ளை இல்லை அக்கா...ஆனால் கதையின் முடிவு தான் கொஞ்ச‌ம் குழப்பமாயிருக்குது அத்தோடு வழக்கமான உங்கட‌ எழுத்துப் பாணியை இதில் காணவில்லை.

 குழப்பம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ரதி? கதையின் முடிவை உங்களால் அடையாளம் காண முடியவில்லையா.... உங்களுக்குத் தோன்றுவதை எழுதினால்தான் என்னால் விளக்கம் கொடுக்கமுடியும் ரதி. :rolleyes:

வழமையான எழுத்துப்பாணி,......

இவர் இப்படித்தான் எழுதுவார். இவருடைய எழுத்துகள் இதற்குள்தான் நிற்கும் என்ற நிலையை உடைத்திருக்கிறது இச்சிறுகதை என்று நினைக்கிறேன் ரதி. என்னுடைய வேறு ஒரு நண்பியும் இதனை வாசித்துவிட்டு இதை எழுதியது நீ இல்லை என்று கூறினார். ஆச்சரியமாக இருக்கிறது. ரதி கவிதை வடிவத்திலேயே என்னுடைய அதிகமான ஆக்கத்தை வாசித்தவர்களுக்கு இந்தக் கதை வடிவத்திற்குள் பொருத்திப் பார்ப்பதற்கு முடியாமல் இருக்கலாம். அதற்கு அழகியல், வலிமை சார்ந்த மொழியாக கவிதைப்பக்கங்களுக்குள் இருந்த எழுத்து....., அக்குணாதிசயங்கள் அற்ற நிலையில் அறிமுகமாகும்போது அந்நியத்தன்மையைத் தோற்றுவிக்கிறது என்று நினைக்கிறேன். இருந்தாலும் இதுவும் ஒரு வெற்றிதான். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வரட்டுக் கவுரவங்களுக்கும், எழுதப் படாத சமூக விதிகளுக்கும், பழக்கப் பட்டுப் போன பாம்பு போல இருக்கு! :o

 

இந்த வகையான பாம்புகள், அடிக்கடி செட்டையை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவையாக இருக்கும்!  :D

 

இது என்ன தொடரா, வல்வை? :icon_mrgreen:

 

இப்படி ஒரு கொடுமையான கேள்வி தேவையா? :lol::D  தொடர்ந்து உங்களைச் சோதிக்க வேண்டாம் என்று யாழின் நலன்விரும்பிகள் எனக்கு கையூட்டு அனுப்பி வைத்துள்ளார்கள். விடயத்தை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். :lol:

 

வரட்டுக்கவுரவமும்,எழதப்படாத சமூகவிதிகள் என்றும் இவ்விடத்தில் எதனைக்குறிப்பிடுகிறீர்கள் ரோமியோ சிறிது விளக்கமாக சொல்லுங்கள்.

 

இரவு பட்டா பாம்புகள் செட்டை மாற்றுவதை இயற்கை என்று வாதாடும் ஆட்கள் உள்ள இடம் ரோமியோ கனக்க எழுதி என்னை கழுவேறிக்கு ஒப்புக் கொடுக்க முடியாது :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா?

 

கிருபன் அங்கதான் நீங்கள் நிற்கிறீர்கள்.

 

இந்தச் சிறுகதையை எழுதிவிட்டு பெண்ணும் பாம்பும் உள்ள படத்தைத் தேடிக் கொண்டு செல்லும்போது இந்தப்படம் கண்களில் தட்டுப்பட்டது. கதைக்கும் இந்த காட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை ஆனால் பெண்ணும், பாம்பும் இருக்கிறது. இதுவும் ஒரு விளம்பர உத்தி என்றுகூடச் சொல்லலாம். கதையின் வடிவம் தெரியாமல் ஒரு கதையை இலகுவில் எவரும் வாசிக்க விரும்பமாட்டார்கள். கதையின் முகப்பு ஈர்ப்புடையதாக இருந்தால்தான் வாசகர்கள் ஈர்க்கப்படுவார்கள். இந்தக் கதையை காட்சி அற்று மொட்டையாகப் போட்டிருந்தாலோ அல்லது கதையின் நேரடி வடிவத்தை வெளிப்படுத்தும் படத்தை இணைத்திருந்தாலோ அதனை வாசிக்கத்தூண்டும் தன்மை என்பது குறைந்தளவாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தை பார்க்கும்போது சட்டென்று என்னதான் எழுதப்பட்டிருக்கிறது என்று அறியும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.... என்று எதிர்பார்த்தேன். ஓ... சகாறாவும் மூன்றாந்தர ரசனையுள்ளவளா?!!!! :unsure:

 

உண்மையைச் சொல்லுங்கோ இந்தப்படத்தைப்பார்த்துத்தானே சிலாகைக்கதையை வாசிச்சனீங்கள் :icon_mrgreen:

சகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே. :D

இது தொடருமா? அல்லது முடித்து விட்டீர்களா? :rolleyes:

 

துளசி சிறுகதை முடிந்துவிட்டது எங்கே போய் தொடர்வது? :o

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லுங்கோ இந்தப்படத்தைப்பார்த்துத்தானே சிலாகைக்கதையை வாசிச்சனீங்கள் :icon_mrgreen:

 

இந்த வசனம் எனது உயர்தர இலக்கிய ரசனையைக் கொச்சைப் படுத்துவதாக உள்ளது. எனவே நீங்கள் திரும்பப் பெற்றேயாக வேண்டும். ^_^

துளசி சிறுகதை முடிந்துவிட்டது எங்கே போய் தொடர்வது? :o

 

ஆம். நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள். :)

 

ஆனால் நான் நினைத்தேன் அவர்கள் பயணம் முடியும் வரை அனுபவிக்கும் இயற்கை சார்ந்த/ மனிதர்கள் சார்ந்த பலவித பிரச்சனைகளை உள்ளடக்கி தொடர்வீர்கள் என்று. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கொடுமையான கேள்வி தேவையா? :lol::D  தொடர்ந்து உங்களைச் சோதிக்க வேண்டாம் என்று யாழின் நலன்விரும்பிகள் எனக்கு கையூட்டு அனுப்பி வைத்துள்ளார்கள். விடயத்தை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். :lol:

 

வரட்டுக்கவுரவமும்,எழதப்படாத சமூகவிதிகள் என்றும் இவ்விடத்தில் எதனைக்குறிப்பிடுகிறீர்கள் ரோமியோ சிறிது விளக்கமாக சொல்லுங்கள்.

 

இரவு பட்டா பாம்புகள் செட்டை மாற்றுவதை இயற்கை என்று வாதாடும் ஆட்கள் உள்ள இடம் ரோமியோ கனக்க எழுதி என்னை கழுவேறிக்கு ஒப்புக் கொடுக்க முடியாது :icon_mrgreen:

 

இப்படியான பாம்புகளுக்குச் சில பொதுவான குணங்கள் இருக்கும், வல்வை!

 

இவைகள் மிகவும் கடவுள் பக்தியுள்ளையாக இருக்கும். கோவிலில், முன்னுக்கு நிண்டு,(வசதியைப் பொறுத்து, சின்னச் சங்கிலியில் இருந்து, புலிப்பல்லு வரை) சாமியுடன் ஒன்றி நிற்பார்கள்! ஊர்ப் பெரியவர்கள் என்று தம்மைக் காட்டிக்கொள்வார்கள். மிகவும் குறைவான விதிவிலக்குகளும் உண்டு!இதை' வரட்டுக் கெளரவம் என்றேன்.

 

ஒரு பெண்ணை விரும்பினால், நேரடியாக அணுகுவது. இதை எமது சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்பது, எழுதப்படாத விதிகள் என்றேன். நிழலி சொன்னது மாதிரி, இவர்கள் 'கோழைகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்!

எனக்குப்பயம் என்று ஒண்டு வருவதென்றால் .பாம்பு என்ற உருவமே .இது வரை அது பற்றி உணர்வாலும்.செயலாலும் எந்த அனுபவமும் பெறவில்லை .........ஆனால் என்னமோ தெரியவில்லை அந்த சொல்லை ,அந்த உருவத்தை கேட்டாலே ஒருவித பயம் .......பாம்பு என்னும் திரியை கண்டதும் ,பார்க்க மனம் மறித்தது .ஆனால் பார்ப்போம் என்று வந்தால் எம் மதிப்புக்குரிய ,கவிப்பெருந்தகை கதை .........விட்டுடுவோமா ...........அருமை .........ஆனால் தலையங்கத்தைத்தவிர .கதை சூப்பர் ..........வாழ்த்துக்கள் அக்கா ..

எனக்குப்பயம் என்று ஒண்டு வருவதென்றால் .பாம்பு என்ற உருவமே .இது வரை அது பற்றி உணர்வாலும்.செயலாலும் எந்த அனுபவமும் பெறவில்லை .........ஆனால் என்னமோ தெரியவில்லை அந்த சொல்லை ,அந்த உருவத்தை கேட்டாலே ஒருவித பயம்.......

 

உங்களுக்கு இப்படி.... ஆனால் எங்கள் வீட்டில் அடிக்கடி பாம்பு வரும். சிலவேளை வீட்டு முகடுக்குள் வந்து நிற்கும். சிலவேளை விறகுகளுக்கிடையில் வந்து நிற்கும். (இது சாரைப்பாம்பு...). அதேபோல் சிறிய மெல்லிய விசப்பாம்பும் வந்து போவதுண்டு. பெயர் மறந்து விட்டேன். வீட்டினுள் பாம்பு வந்தால் நாங்கள் அடிப்பதில்லை. பக்கத்தில் மண்ணெண்ணெய் ஊற்றினால் அதற்கு எதிர்பக்கத்தால் சென்று சென்று வெளியேறும். :) விசப்பாம்பு என்றால் தான் பக்கத்தில் செல்வது பயம். விறுவிறென்று ஓடக்கூடியது என்பதால் எம்மை கொத்தி விடுமோ என்று பயம். :rolleyes:

அதே போல் கிணற்றடியில் நாக பாம்பு இடைக்கிட வந்து போகும். கொம்பேறி மூக்கன் பாம்பு இடைக்கிட செல்வதுண்டு. இவை உள்ளே வந்து நான் காணவில்லை.

நான் பிறந்த குழந்தையாக இருந்த போது கட்டிலில் படுத்திருந்த போது விச பாம்பு வீட்டு கூரையிலிருந்து திடீரென எனக்கு பக்கத்தில் வந்து விழுந்ததாகவும் அதை கண்டு விட்டு என் தந்தை என்னை தூக்கி விட்டார் என்றும் பின்னர் வளர்ந்தவுடன் கேள்விப்பட்டேன். :rolleyes:  அப்பவே என்னை கொத்தியிருக்கலாம் என்று பலர் மனசுக்குள் நினைக்கிறது தெரியுது... :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளில் எனது சகோதரி தன்னையும் இப்படி ஒரு பாம்பு பேருந்தில் 

தொடர்வதாக எனக்குக் கூறினார்.

 

மூன்றம் நாள் கொடுத்த மருந்தில் அந்தப் பாம்பு அவர் செல்லும் பேரூந்தில் செல்வதே இல்லை.

 

கழிசறைகள் 

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புகள்  வாய்ப்புக் கிடைக்கும்போது  தங்கள் குணத்தைக்  காட்டும். :lol:

சகாறா அக்கா, உங்களுடைய இந்த எழுத்துநடை உங்களால் திகில் தொடர் எழுத முடியும் என்று காட்டுகிறது. :D ஒரு திகில் தொடர் எழுதுங்களன்.... :D

உங்களுக்கு இப்படி.... ஆனால் எங்கள் வீட்டில் அடிக்கடி பாம்பு வரும். சிலவேளை வீட்டு முகடுக்குள் வந்து நிற்கும். சிலவேளை விறகுகளுக்கிடையில் வந்து நிற்கும். (இது சாரைப்பாம்பு...). அதேபோல் சிறிய மெல்லிய விசப்பாம்பும் வந்து போவதுண்டு. பெயர் மறந்து விட்டேன். வீட்டினுள் பாம்பு வந்தால் நாங்கள் அடிப்பதில்லை. பக்கத்தில் மண்ணெண்ணெய் ஊற்றினால் அதற்கு எதிர்பக்கத்தால் சென்று சென்று வெளியேறும். :) விசப்பாம்பு என்றால் தான் பக்கத்தில் செல்வது பயம். விறுவிறென்று ஓடக்கூடியது என்பதால் எம்மை கொத்தி விடுமோ என்று பயம். :rolleyes:

அதே போல் கிணற்றடியில் நாக பாம்பு இடைக்கிட வந்து போகும். கொம்பேறி மூக்கன் பாம்பு இடைக்கிட செல்வதுண்டு. இவை உள்ளே வந்து நான் காணவில்லை.

நான் பிறந்த குழந்தையாக இருந்த போது கட்டிலில் படுத்திருந்த போது விச பாம்பு வீட்டு கூரையிலிருந்து திடீரென எனக்கு பக்கத்தில் வந்து விழுந்ததாகவும் அதை கண்டு விட்டு என் தந்தை என்னை தூக்கி விட்டார் என்றும் பின்னர் வளர்ந்தவுடன் கேள்விப்பட்டேன். :rolleyes:  அப்பவே என்னை கொத்தியிருக்கலாம் என்று பலர் மனசுக்குள் நினைக்கிறது தெரியுது... :lol:

 

 

உங்களிட்ட கடிவாங்காம பாம்பு எப்படி தப்பிச்சுது? :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிட்ட கடிவாங்காம பாம்பு எப்படி தப்பிச்சுது? :D

 

துளசிக்கு, அப்ப பல்லு முளைக்கேல்லை, தப்பிலி! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இ.போ.ச. பஸ்சிற்குள்ளும் தனியார் போக்குவரத்து வாகனங்களுள்ளும் எத்தனையோ பாம்புகள் படமெடுப்பதை பார்த்திருக்கிறேன். நல்லதொரு கதையை நறுக்கென்று சொன்ன சகாராவுக்கு பாராட்டுக்கள்.

 

நன்றி தோழி.

 

இ.போ.ச காலத்துக்கதைகளை நண்பர்கள் வாயிலாக நிறையக் கேள்விப்பட்டுள்ளேன். இப்போதும் புலம்பெயர்ந்த இடங்களிலும் பாம்புகளின் பல்லவியை அதிகம் அறிகிறேன். அங்கு அவமானமாகக் கருதக்கூடியதான நிகழ்வுகள் இங்கு வெரி சிம்பிள். பாம்புக்கு பதில் சொல்ல சிலந்திகளும் வளர்ந்துள்ளன.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாறா அனுபவிச்சு எழுதின கதையை  நானும் அனுபவிச்சு வாசிச்சன்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள். கதையின் முகப்பில் வந்த சித்திரமும் முடிவில் வந்த சிலாகையும்  ஒரு குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தன.

 
பாம்பு, பாம்பாட்டி, மகுடி,கூடை, பார்வையாளர்கள் என்ற சீன் எப்போதுமே அகவெளியியில் உணர்வுகளின் cocktailலினைத் தோற்றுவிப்பன தான். பாம்பிற்கு மனிதனைப் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம் இல்லை, அல்லது பாம்பு வெளிப்படுத்தும் உணர்வுகளை மனிதனால் முற்றாகப் புரிய முடிவதில்லை. ஆனால் பாம்பாட்டிக்கு முகமுண்டு. பார்வையாளர்கள், பாம்பைப் பார்க்கும் அளவிற்குப் பாம்பாட்டியினையும் பார்ப்பார்கள். பாம்பின் விசம் அகற்றப்பட்டுவிட்டது என்று உறுதியளிக்கப்படினும் கூட எங்கே அந்தப் பாம்பு தன்னைத் கொத்திவிடுமோ என்ற தோரணையில், முதன்முதலாக வெடிகொழுத்தும் சிறுவனைப் போல, பாம்பாட்டி ஊதிக்கொண்டிருப்பதாய்ப் பார்ப்பவர்களிற்குத் தெரியும். மேலும், வயிற்றுப் பிளைப்பிற்காகப் பாம்பாட்டி ஊதிக்கொண்டிருக்கையிலும், மகுடி ஊதுவது தொழிலிற்கு அப்பால் பாம்பாட்டிக்குப் பிடித்ததொன்றோ என்றும் தோன்றும். அது போல, பாம்பு ஆடுவது மகுடி இசை அதற்குப் பிடித்ததால் நிகழ்கிறதா, அல்லது அதன் சக்தியினை மேவி அந்த இசை அதனை அவ்வாறு ஆட்டுவிக்கின்றதா என்றும் தோன்றும். மொத்தத்தில் பாம்பு, அது சிறைவைக்கப்பட்டிருக்கும் ஓலைப் பெட்டி, பாம்பாட்டி, மகுடி என்பனவெல்லாம் கட்டுப்பாடுகளாகவும், அத்துமீறல்களாகவும், இயல்பிற்கு அப்பாற்பட்டனவாகவும் பார்வையாளரிற்குத் தெரிகின்ற அதே நேரத்தில்; ஆபத்தான, இயல்பிற்குப் புறம்பான,அத்துமீறப்படும் அந்தத் தருணங்களைப் பாம்பாட்டியும் பாம்பும் ரசிக்கிறார்கள் என்றும் பார்வையாளர்களிற்கு எண்ணத்தோன்றும். மேற்படி காட்சி சார்ந்த பார்வையாளர்களின் இந்த அகவெளி முரண், சில்லறைகளைப் பெட்டிக்குள் விளச்செய்கின்றது. இருப்பினும், பார்வையாளர்களின் மனதிற்குள் வாழ்கின்ற ஒழுங்கு சார்ந்த ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, மகுடி நிறுத்தப்படின் அந்தப் பாம்பு அந்தப் பாப்பாட்டியினைக் கொத்தும், அப்படி அது கொத்தினால் பாம்பாட்டி சாவான் என்று அவர்களை நம்பச் செய்கின்றது. பாம்பு பாம்பாட்டியின் வாசிப்பை ரசிப்பது போல் தெரியினும், உண்மையில் அது கொத்துவதற்கான தருணம் பாத்துத் தான் ஆடுகிறது என்றும் பார்வையாளர் நம்புவர். ஆனால், இதெல்லாம் பாம்பிற்கும் பாப்பாட்டிக்கும் முற்றிலும் அப்பாற்பட்ட பார்வையாளரின் மனவெளி வாசிப்புக்குள் மட்டும் தான்.
 
உங்கள் கதையின் முகப்பில் வந்த அழகியினைச் சுத்திய பாம்பின் சித்திரமும், முடிவில் வந்த சிலாகையும் குறித்த காட்சி சார்ந்த பார்வையளாரின் அகவெளியினைக் காட்டிநிற்கின்றனவோ என்று தோன்றுகின்றது.

 

 

 

இன்னுமொருவன் இந்த உருவகக் கதையின் அகவெளி வாசிப்பு என்பதை இவ்வளவு தூரம் வேறொரு பொருளை உணர்த்தக்கூடிய வகையில் நீங்கள் எழுதியதை வாசிக்கும்போது பாம்பு, பாம்பாட்டி, பாம்பை சிறை வைத்த பெட்டி, பார்வையாளர் நோக்கில் இப்படித்தான் நடக்கும் ...நடக்கக்கூடும்......நடந்தேயாகும்  என்னும் மனப்பிரமையும்...,இந்தக் கதையில் கையாண்ட உருவகத்தைக் காட்டிலும் உங்கள் கருத்தில் கையாண்ட உருவில் உச்சம் தொட்டிருக்கிறது. அண்மையில் நீங்கள் பேசாப் பொருளில் பதிவிட்ட http://www.yarl.com/forum3/index.php?showtopic=114903 இந்தத் திரியில் கருத்தெழுத முடியாமல் இருந்ததற்கு மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள பாம்பு, பாம்பாட்டி, சிறை வைக்கப்பட்ட பெட்டி, பார்வையாளர் நோக்கு இத்தகைய மனவெளி வாசிப்புகளே பிரதான காரணிகளாக இருந்தன. இந்தக்கதையில் பார்வையாளரின அகவெளி நோக்கியே பாம்பு பெண் பிணைப்பு. இந்தக் காட்சியை வைத்தே  பார்வையாளர்களின் அகவெளியில் இந்தக் கதையை வாசித்துப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். நிச்சயமாக சிலாகையின் பயன்பாட்டை நேரடியாக வெளிப்படுத்துவதை அவ்வளவு சீக்கிரம் அகவெளி ஏற்றுக் கொள்ளாது. நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட பாம்பு, மகுடி, சிறைப்பெட்டி,பாம்பாட்டி, பார்வையாள அகவெளி அனைத்தையும் உள்ளடக்கியதிலிருந்து வெளியே வரும் நிர்வாண நிலை அவ்வளவு சாத்தியமில்லை. இவற்றுக்குள் உள்ளடங்கலாக இருக்கும்போது யதார்த்தத்தில் சிலாகைகள் அவசியமாகின்றன. இன்னுமொருவன் சந்தேகமே வேண்டாம். இந்தக் கதை பார்வையாளர்களின் அகவெளியால்தான் அதிக பார்வைகளை எட்டியிருக்கிறது.

 

ஆமா இன்னுமொருவன் எப்படியப்பா இப்படியெல்லாம் சிந்தித்து எழுதுகிறீர்கள்? உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் எவ்வளவு தூரம் உங்கள் அகவெளியில் உலவி உருவங் கொள்கின்றன. மீண்டும் மீண்டும் வியப்பிற்குரியவராகவே இருக்கிறீர்கள். நெருப்பு என்று தெரிந்தும் அதில் எரியாது நடப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் கற்கவேண்டும். இந்தக்கதைக்கு உங்கள் நேரத்தை ஒதுக்கி பதிவிட்டதற்கு நன்றி இன்னுமொருவன்.

 

ஐக் அடிக்கும் கதையை எழுதுவதற்கு தெரிவு செய்த இடம் சரியில்லை

 

உடையார் பாம்புகள் எங்கும் இருக்கும் என்பதற்காகத்தான் இந்தக் கதை அதன் தளம். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் இப்படியான பாம்புகளிற்கு இன்னும் வாய்பளிக்கும் வண்ணம் எமது மண்ணின்  கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது சகாரா . உலகெங்கும் இப்படியான பாம்புகள் உலவுகின்றன. .. பெண்கள் தான் உஷாராக வேண்டும். 

நடப்பை நகர்த்திய விதம் மிக நன்று... 

 

கல்கி உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

 

பண்பாடு மழுங்கடிக்கப்பட்டுவிட்டது என்று ஒன்றை நோக்கும்போது இன்னொரு பக்கத்தில் துணிவு பெண்களுக்கு அதிகரித்திருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். முன்பெல்லாம் பெண்கள் ஆண்களுக்கு பின்னால் நின்றிருந்தார்கள் இப்போது பெண்களும் ஆண்களோடு  நன்றும் தீதுமாக எல்லா இடங்களிலும் சரிசமமாகவே உள்ளார்கள். ஆண்களுக்குப் பின்னால் நடக்கும்போது பெண்களை நோக்கிய பாலியல் சார்ந்த வன்முறைகள் இல்லாமல் விடவில்லை. காலத்திற்கு ஏற்ப கலாச்சாரமும் நாகரீக மாற்றம் கொள்வதைத் தவறாகவும் பார்க்கமுடியாது. நன்றும் தீதும் ஒன்றாகத்தான் வளரும். பெண்கள்தான் உசாராக இருக்கவேண்டும் என்றுதான் நாம் அனைவரும் சொல்கிறோம். என்னைப் பொறுத்தவரை பெண்ணைப் போகப் பொருளாக பார்க்காமல் சக மனுசியாக ஆண்கள் நோக்கினால் போதும் அதுதான் நாகரீகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தைரியமற்ற பாம்புகள் தான் ஒருவரின் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி படர நினைக்கும். இது ஒரு கோழைப் பாம்பு.

 

இங்கு பாம்புகள் எவ்வளவு அதிகமோ அதே போன்று பற்றிப் படர்ந்து தன் வலைக்குள் சிக்க வைக்கும் சிலந்திகளும் அதிகம். பாம்புகளும் சிலந்திகளும் கொண்டது தான் இந்த சமூகம்.

 

இக் கதையில் கையாளப்பாட்ட சொற்களில் தனித்து ஒட்டாமல் நிற்கும் ஒரு சொல்லாக 'தனம்' என்று சொல்லு இருக்கு.

 

பாம்பில வீரப்பாம்பு , கோழைப்பாம்பு என்றெல்லாம் உண்டா நிழலி? :lol:

 

நிழலி எமது சமூகத்தில் சிலந்திகள் இல்லை என்று சொல்லமாட்டேன் பாம்புகளின் அளவுக்கு சிலந்திகள் இல்லையாக்கும். :icon_mrgreen:

 

கையாளப்பட்டது ஒட்டாமல் நிற்குதா :o:blink:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வசனம் எனது உயர்தர இலக்கிய ரசனையைக் கொச்சைப் படுத்துவதாக உள்ளது. எனவே நீங்கள் திரும்பப் பெற்றேயாக வேண்டும். ^_^

 

அகவெளி இரசனையை எங்கேய்யா கொச்சைப்படுத்தினோம்.... வரவர பார்வையாள மனவெளியில் நின்று இதுதான் இப்படித்தான் இப்படியாகத்தான் இருக்கும் என்று......கிகி அகவெளியை வாசித்துப்பழகுகிறேன் கிருபன். :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்பயம் என்று ஒண்டு வருவதென்றால் .பாம்பு என்ற உருவமே .இது வரை அது பற்றி உணர்வாலும்.செயலாலும் எந்த அனுபவமும் பெறவில்லை .........ஆனால் என்னமோ தெரியவில்லை அந்த சொல்லை ,அந்த உருவத்தை கேட்டாலே ஒருவித பயம் .......பாம்பு என்னும் திரியை கண்டதும் ,பார்க்க மனம் மறித்தது .ஆனால் பார்ப்போம் என்று வந்தால் எம் மதிப்புக்குரிய ,கவிப்பெருந்தகை கதை .........விட்டுடுவோமா ...........அருமை .........ஆனால் தலையங்கத்தைத்தவிர .கதை சூப்பர் ..........வாழ்த்துக்கள் அக்கா ..

 

வரவுக்கும் வாசிப்பிற்கும் பதிவிட்டதற்கும் நன்றி தமிழ்சூரியன். சும்மா சூப்பர் என்றுவிட்டெல்லாம் போகக்கூடாது கதையை வாசித்தவுடன் சட்டென்று மனதில் தோன்றுவதை எழுதிவிடவேண்டும். சரி சரி பாம்பென்றால் பயம் என்கிறீர்கள். நாகதம்பீரானுக்கு ஏதாவது கெடுதல் செய்தீர்களா? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளில் எனது சகோதரி தன்னையும் இப்படி ஒரு பாம்பு பேருந்தில் 

தொடர்வதாக எனக்குக் கூறினார்.

 

மூன்றம் நாள் கொடுத்த மருந்தில் அந்தப் பாம்பு அவர் செல்லும் பேரூந்தில் செல்வதே இல்லை.

 

கழிசறைகள் 

 

அண்ணன் தம்பிகள் உள்ளவர்களுக்கு இயல்பாகவே  ஒரு பாதுகாப்பு அமைந்துவிடும். அநேகமாக உரசுபவர்கள் நாளாந்தம் காணுபவர்களாக இருப்பார்கள். இந்தக் கதை அப்படியல்ல. முன்னெப்போதுமே அறிந்திராத...முகமே தெரிந்திராத பெண் என்ற பிம்பத்தின் மீதான மேற்கொள்ளப்பட்ட தொடுகை என்னும் அநாகரீகம். அந்தப்பாம்பு தான் பாலூட்டிய தாய்மையின் வடிவம் என்று சிந்திக்காத பேதலிப்பில் கண் மறைத்த காமம் புரையேறிய புடைப்பில் எழுந்திருக்கிறது.

 

வாத்தியார் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி உரைக்கிறேன். :)

 

பாம்புகள்  வாய்ப்புக் கிடைக்கும்போது  தங்கள் குணத்தைக்  காட்டும். :lol:

 

உண்மைதான் நிலாக்கா

உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி உரைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

-------

இப்போது பாம்புக்கு சற்று துணிவு வந்துவிட்டதுபோல் அலையோதும் உரசலுடன் அவள் கைகளுக்கு இடையால் பட்டென நுழைந்து அவள் தனத்தை வெறித்தனமாக தொட்டுவிட்டு சட்டென மறைந்தது.

--------

 இருளில் குனிவைத் தனக்குச் சாதகமாக எண்ணிய பாம்பு முன்னரைக்காட்டிலும் உசுனத்துடன் நெருங்கியது.

 

தனத்தை... தொட்ட, அல்ப திருப்தியோடை.. பாம்பு தப்பி ஓடியிருக்கலாம்.

கடைசியாய்... சிலாகையால், அடிவாங்கிச் சாகப் போகுது பாம்பு.

திரத்தி, திரத்தி கொத்த வருவதைப் பார்க்க... கொம்பேறி மொக்கன் பாம்பு போலை இருக்குது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அனுபவிச்சு எழுதின கதையை  நானும் அனுபவிச்சு வாசிச்சன்......

 

  :o:huh:

 

அனுபவிச்சு எழுதினதை நீங்கள் அனுபவிச்சு வாசிச்சீங்களா? :icon_mrgreen: 

 

ஒருவேளை இவரும் முயல் பிடிச்சிருப்பாரோ? :unsure::blink:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.