Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பாண்டவர் பெனடிக்ற் இராஜினாமா செய்யவுள்ளார்

Featured Replies

ஒருபோதும் எதிர்பாராத வகையில் பாப்பாண்டவர் இந்த மாத இறுதியில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாப்பாண்டவர் ஜோன் போல் II மரணமடைந்ததைத் தொடர்ந்து 85 வயதான இவர்  பாப்பாண்டவர் பெனடிக்ற் XVI  ஆகினார்.


கத்தோலிக்க திருச்சபை தலைவரின் எதிர்பாராத இப்பதவி விலகலுக்கான காரணங்கள் எதுவெனத் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

பாப்பாண்டவர்கள் பதவி விலகுவது ஒன்றும் புதிதான விடயமல்ல. ஆனால் பதவியிலிருக்கும்போதே பாப்பாண்டவர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல்த் தடவையாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/58703-2013-02-11-11-35-43.html



Pope Benedict XVI announces he is to resign

 

Pope Benedict XVI announces he is to resign in the evening of 28 February

 

http://www.bbc.co.uk/news/uk-21409149

  • தொடங்கியவர்

பதவி விலகுகிறார் பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர்!

 

பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திகான் அறிவித்துள்ளது.

 

அவரின் தற்போதைய வயது 85. இந்நிலையில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதற்கு முன்னர்  1415 ஆம் ஆண்டு 12 ஆவது பாப்பரசர் கிரிகெறி பதவிவிலகியுள்ளார். இதன்படி பதவி விலகும் இரண்டாவது பாப்பரசராக 16ம் ஆசிர்வாதப்பர் பதிவாகியுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/world.php?vid=492

  • கருத்துக்கள உறவுகள்
போப்பாண்டவர் திடீர் ராஜினாமா: 28ம் தேதியுடன் விலகுகிறார்
Posted by: Chakra Updated: Monday, February 11, 2013, 17:06 [iST]
 
ரோம்: புனித போப்பாண்டவரான பெனடிக்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16ம் போப்பாண்டவராக பெனடிக்ட் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
85 வயதான போப் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் 28ம் தேதியுடன் அவர் பதவி விலகிவிடுவார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் பிரடிரிகோ லோம்பார்டி இன்று அறிவித்தார்.
சமீபகாலமாக அவரால் போப்பாண்டவருக்கான பணிகளை மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ரோம் நகரில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் அவர் கையில் வைத்திருந்த உரையைப் படிக்க முடியாமல் சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த மாத இறுதியுடன் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுள் முன் என் மனசாட்சியை ஆய்வு வந்த பிறகே நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். முதுமை காரணமாக இனி போப்பாண்டவரின் பணிகளை செம்மையாக நிறைவேற்ற எனது உடல் நிலை இடம் தரவில்லை.
இன்றைய உலகில், அவரசமாக மாறுதல்களுக்கு இடையே நற்செய்தியை அறிவிக்கவும் இந்தத் தொண்டை செம்மனே செய்யவும் மனம் மற்றும் உடல் இரண்டின் வலிமையும் மிக அவசியம்.
ஆனால், கடந்த சில மாதங்களில் எனது உடல் வலிமை அதிகமாக குன்றிவிட்டது. இதனால் என்னால் இந்தப் பணியை சரியாக செய்ய முடியாது என்பதை உணர்ந்ததால் தான் பதவி விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பல நூறு கோடி கத்தோலிக்க கிருஸ்துவர்களின் தலைவரான போப்பாண்டவர் புனித பீட்டரின் வாரிசாகக் கருதப்படுபவர் ஆவார்.
ரோம் நகரில் உள்ள வாடிகன் நகரில் போப்பாண்டவரின் தலைமையகம் உள்ளது.
பெனடிக்டுக்கு முன் ஜான் பால் 26 ஆண்டுகள் போப்பாண்டவராக இருந்தார். அவரது மரணத்தையடுத்து பொறுப்புக்கு வந்த பெனடிக்ட் 8 ஆண்டுகளிலேயே பதவி விலகுவது குறிப்பிடத்தக்கது.
  • தொடங்கியவர்

உலகின் மிகப்பெரிய இந்த நிறுவனத்தை மறுசீரமைக்க ஒரு மூன்றாம் உலக நாட்டில் இருந்து ஒருவர் தலைவராக வரல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவருக்கு என்ன அழுத்தமோ :( ...சமீபத்தில் அவரால் பறக்கவிடப்பட்ட பறவையை கழுகோ,பருந்தோ கொத்திட்டுது ^_^

  • கருத்துக்கள உறவுகள்

Will the Next Pope Be Black?

Cardinal_Tukson.jpg?1360604100

Some time in March a puff of white smoke will rise over St. Peter's Square. Will it signal the first black Pope? 

After the surprising resignation of Pope Benedict XVI, there is speculation that Ghanaian Cardinal Peter Turkson is an early favorite. Nigerian Cardinal Francis Arinze is another potential contender. Either man would be the first black Pope. 

The Catholic Church today is not your grandfather's Catholic Church. That's not just because of Vatican II. The selection of a black Pope would represent the rapidly changing demographics of the Church. There areover 135 million Catholics in Africa, making it the second fastest-growing region for Catholicism after Asia

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபை உடனான பாலியல் துஸ்பிரயோகங்கள் சம்பந்தமான பிரச்சனைகளை இவர் தீர்க்க தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டும் பலமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வயது முதிர்ந்த காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் கத்தோலிக்க சபையைக் கட்டி மேய்க்க முடியாவிட்டால் வேறு என்ன செய்வது?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ, சரித்திரம் படைக்க வேணும் எண்டு மனிசன் முடிவெடுத்திட்டுது போல கிடக்கு! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஜேர்மனியிலை சோககீதம் ஒலிக்காத குறை.........ஜேர்மன் பாப்ஸ் தன்னாலை ஏலாது எண்டுட்டாராம்........
ஆனால் முந்தி நடந்த சோலியள் எல்லாம் இப்ப வெளிக்கிடவிட்டதாலை சாமி பயந்துபோனார் எண்டும் உள்க்கதை காத்துவாக்கிலை உலாவுது... :rolleyes:
 
800வருசத்துக்குப்பிறகு ஒரு போப்  இப்பதானாம் பதவி விலகுகிறாராம். மற்றும்படி சாகும்வரைக்கும் கடமையிலை இருந்தவையாம்.
  • தொடங்கியவர்

521824_420204738058080_1211315331_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயது முதிர்ந்த காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் கத்தோலிக்க சபையைக் கட்டி மேய்க்க முடியாவிட்டால் வேறு என்ன செய்வது?

 

உங்கடை கதையை பாத்தால் கருணாநிதி,சம்பந்தர் எல்லாரும் திடகாத்திரர்,தைரியசாலியள் எண்டுறியள்?

  • தொடங்கியவர்

கிட்டத்தட்ட இருநூறு கார்டினல்கள் அடுத்த ஆண்டகையை தெரிவுசெய்ய உள்ளார்கள். மேற்குலகத்தை சாராதவராக இருந்தால் மட்டுமே ரோமன் கத்தோலிக்கம் வளரும் என்கிறார்கள். காரணம் அங்கேதான் மத வளர்ச்சி உள்ளது.


ஆனால் அதை நிறைவேற்றும் பக்குவம் உள்ளதா என மாசி 28 இல் தெரியவரும்.

பதவி ஏற்பதும்  பதவி விலகுவதும் தான் பரபரப்பான செய்தியாகிறது.

பாவப்பட்ட சனங்களுக்கு ஏதும் சேவை செய்தால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

a+nazi+pope+ratzinger.jpg

 

 

இவர் போப் ஆக பதவியேற்றவுடன் ஹிட்லர்பெடியன் என இங்கிலாந்து பத்திரிகைகள் வர்ணித்திருந்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வத்திக்கானுக்கு புதியகாற்று வரவேண்டுமென சென்ற பாப்பாண்டவர் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது. கூடவில்லை.........இம் முறையாவது வரட்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரமான நீதிகள் கிடைக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப்பெரிய இந்த நிறுவனத்தை மறுசீரமைக்க ஒரு மூன்றாம் உலக நாட்டில் இருந்து ஒருவர் தலைவராக வரல் வேண்டும்.

 

மூன்றாம் உலக நாடு என்றால்.... ஆசியாவிலிருந்து இப்படியான பெரும் பொறுப்பு வகிக்க ஒருவரையும்... தெரிவு செய்யக் கூடாது.

ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் ஆட்சேபனை இல்லை.

ஐ.நா.சபையில்... ஆசியன்  ஒருவனை, உட்கார வைத்து, நாங்கள் பட்ட பாடு போதுமடா சாமி.smiley-angry017.gif

எனி எனி இந்த ஆசியன்கள் உலக பொது மன்றங்களில் வந்துதான் சேரப்போறாங்கள் . சனத்தொகை, படிப்பு இரண்டும் அங்கே உண்டு. அதே நேரம் வெள்ளைகள் தனியார் துறைகளில் பணத்துக்கு போய்விடுகிறார்கள்.

 

நமக்கு பாங்கியும், நம்பியும் ஒன்றாக கிடைத்தார்கள்.

  • தொடங்கியவர்

இலங்கை ஆண்டகை இரஞ்சித் மல்கமும் ஒரு அடுத்த பாப்பரசராக வரலாமாம் - அமெரிக்க சஞசிகையாம் போர்ப்ஸ் கூறுகின்றது:

 

Cardinal Ranjith a contender for Pope: Forbes

 

http://www.dailymirror.lk/news/25690-cardinal-ranjith-a-contender-for-pope-forbes-.html

  • தொடங்கியவர்

போப் ஆண்டவர் பதவிக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

 

சர்வதேச கத்தோலிக்க மதகுருவான போப் ஆண்டவர் பதவிக்கு இலங்கையைச் சேர்ந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

 

தற்போது, போப் ஆண்டவராகவுள்ள 16ம் ஆசிர்வாதப்பர் தனது முதுமை காரணமாக அப் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் வெற்றிடத்துக்கு இலங்கை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

http://onlineuthayan.com/News_More.php?id=759411833012665490

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.