Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்தில் தமிழர் நடுவம் ஆரம்பம்

Featured Replies

அன்பார்ந்த நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களே.

எமது ஆயுதப் போராட்டத்தின் மெளனமும் முள்ளி வாய்க்காலில் பேரவலமும் அதன்
பின்னரான எமது இனத்தின் விடிவிற்காய் காலத்தின் தேவை கருதியும் எமது
மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது
போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவும்.
புலம் பெயர் தேசமெங்கும் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களிற்கமைய
சனநாயரீதியில் எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகளிற்கு ஆதரவாகவும்
அவர்களோடு கைகோர்த்து போராட்டங்களை நடாத்தவும் சர்வதேசத்திடம்
தொடர்ந்தும் எமது பிரச்னைகளை எடுத்துரைக்கவும் தொடங்கப் பட்டதுதான் 
தமிழர் நடுவம் நெதர்லாந்து ஆகும்.

தமிழர் நடுவம் நெதர்லாந்தின் நோக்கமும் அதன் வேலைத் திட்டங்களும்.

1)யுத்தத்தால்

பாதிப்படைந்த போராளிகள் மற்றும் பொது மக்கள் அவர்களது குடும்பங்கள்
அவர்களிற்கான உதவிகள் மற்றும் சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்
கொடுத்தல்.

2)யுத்தத்தால் பாதிப்படைந்த மாற்றுதிறனாளிகளிற்கான வாழ்வாதர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

3)தாயகத்து மக்களின் சுதந்திரமானதும் சுயமானதும் வாழ்விற்காக
நெதர்லாந்தில் தொடர்ந்தும் சனநாய ரீதியிலான அரசியல் போராட்டாங்களை
முன்னெடுத்தல்.

4)எமது மண்ணிற்காவும் மக்களிற்காவும் மரணித்துப் போன போராளிகள்
மற்றும் மக்களிற்கான மரியாதை வணக்க நிகழ்வுகள் மூலம் அவர்களிற்கு மரியாதை
செலுத்துதல்.

5)தமிழரின் கலை கலாச்சார விழுமியங்களை தொடர்ந்தும் பாதுகாத்தும் அவற்றை
எமது அடுத்த தலை முறையினரும் தொடர்ந்தும் பேணி பாது காக்கும் நோக்கோடு
கலை சகாலாச்சார நிகழ்வுகளை முன்னெடுத்தல்.

6)எமது மக்களின் சுதந்திர வாழ்விற்கான அரசியல் ரீதியான போராட்ங்களை
முன்னெடுக்க நெதர்லந்து இளையோர் அமைப்பு . மகளிர் அமைப்புக்களோடும்
மற்றும் எமது மக்களிற்காக போராடும் ஏனைய அமைப்புக்களோடும் இணைந்து
போராடுதல்.

இவையே எமது அமைப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும். நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களே தமிழோடு தமிழராய் ஒருங்கிணைவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழர் நடுவம் நெதர்லாந்து

 http://tamilcenter.nl/?p=59 

ஏன் இப்படியான  அமைப்புக்கள் முகவரி இல்லாது  இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வினித், இவர்களது முகவரி உங்களுக்குத் தெரியாதா? இவற்றின் முகவரி சிங்களதேசம். பிரான்ஸ் நாட்டிலும் இப்படி ஒரு நிறுவனம் தோற்றமடைந்து அதன்பின்பே பரிதி அவர்கள் போட்டுத்தள்ளப்பட்டார். இது கொத்தா கேபி டங்கு ஆகியோரதும் அவர்களது கூலிகளதும் கூட்டுத்தயாரிப்பு.

நான் நினைக்கிறேன் நெதர்லாந்திலும் பல குழப்பங்கள் தொடங்குவதட்க்கான அறிகுறி தான் இது என்று புதிதாக முளைக்கும் அமைப்புகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்கவும்  :rolleyes:

வினித், இவர்களது முகவரி உங்களுக்குத் தெரியாதா? இவற்றின் முகவரி சிங்களதேசம். பிரான்ஸ் நாட்டிலும் இப்படி ஒரு நிறுவனம் தோற்றமடைந்து அதன்பின்பே பரிதி அவர்கள் போட்டுத்தள்ளப்பட்டார். இது கொத்தா கேபி டங்கு ஆகியோரதும் அவர்களது கூலிகளதும் கூட்டுத்தயாரிப்பு.

சரியாக சொன்னீங்க இது தான் உண்மை  :lol:

புதிய அமைப்பை வரவேற்போம். இவர்கள் பழைய அமைப்புப் போன்று "துரோகி" பட்டம் வழங்கி காலத்தை ஓட்டாது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தில் ஏற்கனவே பல அமைப்புகள் இருக்கும் நிலையில்

அந்த அமைப்புகளுடன் சேர்ந்து இயங்காமல் எதற்காக இன்னும் புதிய அமைப்புகள்..

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இவர்கள்தான், ஈகைத்தியாகி முருகதாசனின் நினைவுக்கல்லை இடித்து தேசியக்கொடியை சேற்ரில் எறிந்து அவ்விடத்தில் ச்றீலங்கன் தமிழர்க்காகப் போராடினார் என புதிய நினைவுக்கல் வைத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதுசரி அண்மையில் தாங்கள் தாயகம் சென்ற புகைப்படங்களைத் தற்செயலாகக் கண்டேன் ஒரு புகைப்படத்தின் பிண்ணணியில் இராணுவ வாகனம்போன்ற ஒன்று நிற்பதை அவதானித்தேன்.

ஐநாவை நோக்கிய தமிழர் பார்வைய திசை திருப்பும் புதிய யுக்தியே இப்பிடியான அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் தோற்றங்கள் ரமணன் சொன்ன மாதிரி தமிழர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய கால கட்டம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதா்லாந்திலயும் இனி மாவீரர் நாள் இரண்டெ தம்பி?

  • கருத்துக்கள உறவுகள்

நெதா்லாந்திலயும் இனி மாவீரர் நாள் இரண்டெ தம்பி?

அது ஏற்கனவே நடந்து விட்டதாக தகவல்.

ஏழுஞாயிறு! நன்றாகத்தான் ஆராய்ந்திருக்கிறீர்கள். அது ஒரு ஜீப் வண்டி. சுற்றுலாப் பயணிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்வதற்காக என்னுடைய உறவினர் ஒருவர் அதைக் கொண்டு வந்திருந்தார். நானும் அதில்தான் குமுனைக் காட்டுக்குள் சென்று வந்தேன். (பயணத் தொடரை முடிக்காதது என்னுடைய தவறுதான். இல்லையென்றால் இந்தக் கேள்வி வந்திருக்காது)

இந்த இணையத்தளம் டென்மார்க்கில் உள்ள One.com A/S, Kalvebod Brygge 24,1560 Kobenhavn V. Denmark,என்ற நிறுவனம் ஊடாக பதியப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் இணையத்தளத்தை பதிய உதவக்கூடிய நிறுவனங்கள் இல்லையா? இல்லை டென்மார்க்கில் உள்ள ஒரு குழு இதை இயக்குகின்றதா?  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ்த்தேசிய இனத்திற்கு ஏற்பட்ட அரசியல் வெளியை பிராந்திய வல்லாதிக்க சதிவலைப்பின்னலூடாக சில குறுகிய சுயநலவாத நபர்கள் எமது விடுதலைப்போராட்டத்தையும், தமிழீழ மக்களையும், பங்கு

போட்…டு அடிமைச்சகதிக்குள் தள்ளிவிட முனைவதும், தனிநபர்களது தன்னிச்சையான செயற்பாடுகள் தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், தேசிய அபிலாசைகளையும் சிதைத்து விடக்கூடிய ஆபத்தினைத் தடுத்துநிறுத்தியும் தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பேணி நெதர்லாந்தில் வாழும் தமிழீழ மக்களை ஒருகுடைக்கீழ் அணிவகுத்து செயற்படவைப்பதற்கு பொதுத்தன்மையான ஒருபலமான தமிழர் கட்டமைப்பாக
தமிழர் நடுவம் நெதர்லாந் உருவாகியுள்ளது.

ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருந்த அமைப்புக்கள் எழுத்திலும் பேச்சிலும் ஒற்றுமை பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் செயற்பாட்டு ரீதியாக இணைந்து செய்யவேண்டிய வேலைத்திட்டங்களில் கூட
தனித்தனியாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர். இது தமிழீழ மக்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை என்ற அபிலாசையை சிதறடிக்கின்றது. எனவே இத்தகைய செயற்பாடுகளை நெதர்லாந்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான காலத்தின் கட்டாயாத்திற்கு ஏற்ப தமிழர் நடுவம் பிறப்பெடுக்கின்றது.

நெதர்லாந்தில் ஏற்கனவே பல அமைப்புகள் இருக்கும் நிலையில்

அந்த அமைப்புகளுடன் சேர்ந்து இயங்காமல் எதற்காக இன்னும் புதிய அமைப்புகள்..

ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருந்த அமைப்புக்கள் எழுத்திலும் பேச்சிலும் ஒற்றுமை பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் செயற்பாட்டு ரீதியாக இணைந்து செய்யவேண்டிய வேலைத்திட்டங்களில் கூட
தனித்தனியாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர். இது தமிழீழ மக்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை என்ற அபிலாசையை சிதறடிக்கின்றது. எனவே இத்தகைய செயற்பாடுகளை நெதர்லாந்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான காலத்தின் கட்டாயாத்திற்கு ஏற்ப தமிழர் நடுவம் பிறப்பெடுக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் இவர்கள்தான், ஈகைத்தியாகி முருகதாசனின் நினைவுக்கல்லை இடித்து தேசியக்கொடியை சேற்ரில் எறிந்து அவ்விடத்தில் ச்றீலங்கன் தமிழர்க்காகப் போராடினார் என புதிய நினைவுக்கல் வைத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதுசரி அண்மையில் தாங்கள் தாயகம் சென்ற புகைப்படங்களைத் தற்செயலாகக் கண்டேன் ஒரு புகைப்படத்தின் பிண்ணணியில் இராணுவ வாகனம்போன்ற ஒன்று நிற்பதை அவதானித்தேன்.

spacer.gif

ஈகைப் பேரொளி முருகதாசனின் பெற்றோரை அவமதித்த ஒருங்கிணைப்புக் குழு?? நடந்தது என்ன? 25.11.2012http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=MUKI&article=4431

ஈகப்பேரொளி முருகதாசனின் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும், 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்! Monday, 11.02.2013, 10:55am 

http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=news&article=4760

நெருப்பில் வெந்த முருகதாஸ் உயிரோடு இருந்தால் உண்ணாவிரமிருந்த பரமேஸ்வரனை பரதேசி பரமேஸ்வரன் என்பது போல முருகதாசும் திட்டி எழுதப் பட்டிருப்பார்.  நெதர்லாந்தில் லண்டன் பிரான்ஸ் ஜேர்மன் வரிசையில் நெதர்லாந்தில் குழப்பம் விளைய ஆரம்பிக்கப் பட்டுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

வினித், இவர்களது முகவரி உங்களுக்குத் தெரியாதா?

இவற்றின் முகவரி சிங்களதேசம்.

பிரான்ஸ் நாட்டிலும் இப்படி ஒரு நிறுவனம் தோற்றமடைந்து அதன்பின்பே பரிதி அவர்கள் போட்டுத்தள்ளப்பட்டார்.

இது கொத்தா கேபி டங்கு ஆகியோரதும் அவர்களது கூலிகளதும் கூட்டுத்தயாரிப்பு.

தவறான  தகவல்.

பிரான்சில் இரு பகுதிக்கும் இடையில் ஒற்றுமையை  ஏற்படுத்த விரும்பிய  தாயகத்துக்காக பல காலம் உழைத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டமே நடுவர் அமைப்பு ஆகும்.

ஆனால் அது வெற்றியளிக்காதநிலையில் இன்று இது செயற்படமுடியாதநிலைக்கு வந்துள்ளது.

இதற்காக அவர்களுக்கு இது   போன்ற பட்டங்களைக்கொடுப்பது சரியல்ல.

இதில் என்னையும் இணையக்கேட்டபோது அதற்கு கை  கொடுத்து தொடங்குங்கள்

நேரம் வரும்பொது இணைகின்றேன் என ஊக்கம் கொடுத்திருந்தேன்.

ஆனால்...............??? :(

Edited by விசுகு

கொள்ளையை சேர்ந்து அடித்தாலென்ன பிரிந்து அடித்தாலென்ன கணக்கு ஒன்றுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இவர்கள்தான், ஈகைத்தியாகி முருகதாசனின் நினைவுக்கல்லை இடித்து தேசியக்கொடியை சேற்ரில் எறிந்து அவ்விடத்தில் ச்றீலங்கன் தமிழர்க்காகப் போராடினார் என புதிய நினைவுக்கல் வைத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதுசரி அண்மையில் தாங்கள் தாயகம் சென்ற புகைப்படங்களைத் தற்செயலாகக் கண்டேன் ஒரு புகைப்படத்தின் பிண்ணணியில் இராணுவ வாகனம்போன்ற ஒன்று நிற்பதை அவதானித்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116631&page=2

கடந்த வருடம். தங்கள் அரசியல் இலாபத்திற்காக அவசரமாக அனைத்துலக

செயலகத்தால். முருகதாசனின் குடும்பத்தினரின் அனுமதியின்றி நிறுவப்பட

நினைவுகல்லை முருகதாசனின். குடும்பத்தினரே அகற்றி விட்டு இந்தியாவில்

இருந்து அவர்களால் செய்து எடுத்து வரபட்ட நினவுகல்லை நிறுவியுள்ளனர்

பழைய நினைவுகல்லை தங்கள் வீட்டு வளவில் கொண்டுபோய் வைத்துள்ளார்கள்

இதுதான். நடந்தது. தங்கள் கல்லை பிடுங்கிய கோபத்தில் அனைத்துலக செயலகம்

முருகதாசன் குடும்பத்தை துரோகி ஆகியுளர்கள்.

இந்த புதிய அமைப்பாவது  மாவீரர் தினம்  விழையாட்டு போட்டி    இசை நிகழ்ச்சி  நடத்துவது  . தியாகி துரோகி பட்டம் குடுப்பது தமிழ் ஈழத்திற்கான போராட்டம் என்றில்லாம் உருப்படியாக எதையாவது செய்கிறதா என பார்ப்போம்.  :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இப்போலாம் நாலு பேர் சேர்ந்து லெட்டெர் பாட் கட்சி இந்தியால தொடங்கிற மாதிரி புலத்திலையும் தொடங்கிடாங்க நாலு பேர் சேர்ந்தா காணும் ஒரு அமைப்புக்கு போட்டியா வந்திடலாம்னு கனவு காணுறாங்க ஆலமரத்திக்கு போட்டியா மழைக்கு நேற்று முளைச்ச காளான்கள் எல்லாம் சிலிப்பிக்கிட்டு வெளிக்கிட்டு நிக்குது

Edited by SUNDHAL

இருக்கலாம் சுண்டல். மக்களுக்கு சேவை செய்யாதவர்கள் மக்களால் துக்கி எறியப்பட்டது தானே வரலாறு.ஒவ்வொருவரின் செயல்களை அவதானிப்பது தான் இப்போ முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் சுண்டல். மக்களுக்கு சேவை செய்யாதவர்கள் மக்களால் துக்கி எறியப்பட்டது தானே வரலாறு.ஒவ்வொருவரின் செயல்களை அவதானிப்பது தான் இப்போ முக்கியமானது.

உண்மைதான்

அதனால்தான் என்னால் முடிந்த ஆதரவைக்கொடுத்தேன்

ஆனால் மீண்டும் ஆலமரத்தை தேடிபோக  வைத்துவிட்டார்கள் சுண்டல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.