Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு

Featured Replies

  • தொடங்கியவர்

பகுதிப் பாடல்கள்:

 

2) ஆனந்தத் தேன்காற்று (மணிப்பூர் மாமியார்)

 

பாடல்தான் இன்ப அதிர்ச்சி. இன்னுமொருவன் குறிப்பிட்ட்ட அந்த நபர் இவர்தான். அழகாக்ப் பாடினார். ரம்யாவும் ஒரு சிறந்த பாடகி.

 

நன்றி இசைக்கலைஞன் இணைப்பிற்கு. மிகவும் அருமையான குரல்வளம் அந்த மனிதரிற்கு. ஒன்றை  அவதானித்தேன், சில பாடல்கள் அரங்கில் கசந்து, இணைப்பில் வேறுவிதமாக இருக்கின்றன. ஆனால் இந்த மனிதரின் இசை, இணைப்பைக்காட்டிலும் மிக அற்புதமாக நேரில் இருந்தது. எல்லாம் எங்கள் மனத்தின் ஆதிக்கங்கள் தான் :D
 
இவ்வளவு செலவழித்த ஏற்பாட்டாளர்கள், பணத்தில் மட்டும் பேராசையாக இருந்திராது, நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் சற்றுக் கவனம் எடுத்திருப்பின் எத்தனை சிறப்பாக இருந்திருக்கும். எம்மவர்களில் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது, ஒரு பொருள் எங்கேனும் மலிவாகக் கிடைப்பின் அங்கு சென்று, மிகுதி எதையும் பொருட்படுத்தாது பெற்றுக்கொள்வார்கள். ஆனால் சில சேவைகள் ஒரு குறிப்பிட்ட பொருளோடோ சேவையோடோ நின்றுவிடுவதில்லை. சேர்விஸ் முதலியன ஒன்று சேர்ந்து ஒரு பக்கேஜ் ஆக அவை வெளிப்படவேண்டும்: நல்ல உதாரணம் உணவு விடுதி. fast-food வாங்குவதற்கும் ஒரு சிறந்த உணவு விடுதிக்கு fine dining செல்வதற்கும் இடையில் அது தான் வித்தியாசம். ஒரு விலை நிர்ணயிப்பவர்கள் அந்த விலைக்கான சேவையினை வழங்காத பட்சத்தில் அது ஒரு scam ஆகிவிடும். அதைத்தான் Trinity நிறுவனத்தார் செய்தார்கள். ஏற்பாட்டாளர்களின் அடாவடித்தனம் தான் ரசிகர் உரிய மனநிலையினை அடையமுடியாமைக்கான அடிப்படை. வந்த கூட்டம் நிகழ்ச்சிக்கு உரிய முறையில் நடந்துகொள்வதை உறுதிசெய்யவேண்டியது கூட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புத்தான். சொல்லுக்கேட்காத ரசிகர்களை பாதுகாப்புக் கடமையில் இருப்பவர்களைக் கொண்டு அப்புறப்படுத்தத் தான் வேண்டும். அது எதுவும் நடக்கவில்லை.
 
இசைக் குழுவைப் பொறுத்தவரை, கிறியேற்றிவ் டைறக்ற்றர் என்ற பொறுப்பையும் அவர்களே (பிரபாகரன்) எடுத்திருந்தார்கள். அந்த வகையில், பாடல் தெரிவு மட்டுமல்ல பாடல்களை எவ்வாறு வரிசைப்படுத்துவது, எவ்வாறு ரசிகரின் மனநிலையினi நிகழ்ச்சியின் ஓட்டத்தோடு கூட்டிச் செல்லவது, ஒலித்தட்டில் இருப்பதற்கு மேலாக ஒவ்வொரு பாடலும் மேடையில் மஜிக்கினை உருவாக்குவதற்கு என்ன செய்வது போன்றன எல்லாம் கிறியேற்றிவ் டைறக்ரர் என்ற பாததிரத்தின் பொறுப்பு. நிச்சயம் நிகழ்ச்சிக்குப் பல்வேறுபட்ட ரசனை உடையவர்கள் வருவார்கள். ஆனால் இது ஒன்றும் புதுப்பிரச்சினை அல்ல. எத்தனையோ உலகப்புகழ்பெற்ற கலைஞர்கள் இதை செயற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இசைக்கலைஞரை ரசிகர் மதிப்பது அவசியம். ரசிகரை இசைக்கலைஞரும் மதித்தே தீரவேண்டும். ரசிகன் பற்றிய கரிசனை அவர்களிற்கு இருக்கத்தான் வேண்டும். எந்தப் பெரிய ஜாம்பவானாக இருப்பினும், இரசிகனைக் கட்டிப்போடத்தவறின் ரசிகன் விமர்சித்தே தீருவான்.
 
மொத்தத்தில் எம்மவரின், பணம் பண்ணுவதாயின் உச்சப் பணம் பண்ணணும், பணம் செலவழிப்பதாயின் மிகச்சொற்பம் செலவழித்துப் பொருளை மட்டும் பெறணும் சேவை தேவையில்லை என்ற மனநிலை மாறும் வரை, எமது சமூகத்தில் நாம் எதிர்பார்க்கும் வகை யான நிகழ்வுகளிற்கான சாத்தியம் மிக அரிதே. :(
  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாரும் கேட்ட அவரின் பெயர் " ஜாசி கிஃப்ட்"

http://en.wikipedia.org/wiki/Jassie_Gift

 

Jassie-Gift.jpg

 

சில படங்களுக்கு இசையமைத்தும்,பாடியும் உள்ளார். அவரின் "லஜ்ஜாவதியே என்னை அசத்துர ரதியே" மிகப் பிரபலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுதிப் பாடல்கள்:

 

1) நானாக நானில்லை (தூங்காதே தம்பி தூங்காதே..)

2) ஆனந்தத் தேன்காற்று (மணிப்பூர் மாமியார்)

 

ம்தலாவது பாடல் பாலு அவர்களுடையது. வழக்கம்போல அசத்தியிருந்தார். இரண்டாவது பாடல்தான் இன்ப அதிர்ச்சி. இன்னுமொருவன் குறிப்பிட்ட்ட அந்த நபர் இவர்தான். அழகாக்ப் பாடினார். ரம்யாவும் ஒரு சிறந்த பாடகி.

 

 

"ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே"  பாடல் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்....இங்கும் அதன் தரம் குறையவில்லை. நன்றி இசைக்கலைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

 நீங்கள் எல்லாரும் கேட்ட அவரின் பெயர் " ஜாசி கிஃப்ட்"

http://en.wikipedia.org/wiki/Jassie_Gift

 

ஜீவா.. இவரல்ல அவர்..

"ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே"  பாடல் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்....இங்கும் அதன் தரம் குறையவில்லை. நன்றி இசைக்கலைஞன்.

 

எனது பாக்கியம் அண்ணா.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாட்டை நல்லவடிவாய் கவனிச்சு பாக்கேக்கேக்கைதான் தெரியுது குறுக்காலைபோவார்ற்ரை அட்டகாசம்......வாசனை தெரியாத ஜென்மங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாட்டை நல்லவடிவாய் கவனிச்சு பாக்கேக்கேக்கைதான் தெரியுது குறுக்காலைபோவார்ற்ரை அட்டகாசம்......வாசனை தெரியாத ஜென்மங்கள் :D

 

மேடை இருந்த பகுதியைச் சுற்றி உணவுக்கடைகள், கோப்பிக்கடைகள் இருந்தன.. தண்ணிக்கடையும் இருந்தது.

 

vip-bar-and-lounge-rogers-centre-toronto

 

அதில் தண்ணியடித்துவிட்டு கோப்பையை உடைத்து சத்தம் கேட்டதாக ஒருவர் சொன்னார். ஒருவர் வெறியில் விழுந்து தலையில் இரத்தமும் வடிந்ததாம்.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருந்த இருக்கைகளின் வரிசையில் அரைநேரத்திற்குப் பிறகு அருகில் இருந்தவர்கள் பீர் கான்களைக் கொண்டுவந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருக்க சங்கடமாக இருந்தது. :(

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

மேடை இருந்த பகுதியைச் சுற்றி உணவுக்கடைகள், கோப்பிக்கடைகள் இருந்தன.. தண்ணிக்கடையும் இருந்தது.

 

vip-bar-and-lounge-rogers-centre-toronto

 

அதில் தண்ணியடித்துவிட்டு கோப்பையை உடைத்து சத்தம் கேட்டதாக ஒருவர் சொன்னார். ஒருவர் வெறியில் விழுந்து தலையில் இரத்தமும் வடிந்ததாம்.. :D

 

அது தானே. ரத்தம் காணாமல் சிங்கனுகள் வெளியில் வருவாங்களோ?? :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேடை இருந்த பகுதியைச் சுற்றி உணவுக்கடைகள், கோப்பிக்கடைகள் இருந்தன.. தண்ணிக்கடையும் இருந்தது.

 

vip-bar-and-lounge-rogers-centre-toronto

 

அதில் தண்ணியடித்துவிட்டு கோப்பையை உடைத்து சத்தம் கேட்டதாக ஒருவர் சொன்னார். ஒருவர் வெறியில் விழுந்து தலையில் இரத்தமும் வடிந்ததாம்.. :D

 

இன்னுமொருக்கால் இளையராஜா கனடாவுக்கு வருவார் எண்டு நினைக்கிறியளோ? :lol:

உங்கை போன காசுக்கு நான் எண்டால் பிள்ளைகளை மக்டொனலுக்கும் கூட்டி சென்று சந்தோசமாக சாப்பிட்டு அங்கை இருக்கும்  கலர் கலர்  பலூனும் எடுத்து கொடுத்து  அபப்டியே னக்கும் ஒரு பாதுகாப்பு பலூனும் வாங்கொ  கொண்டு வந்து வீட்டில  நல்ல குழைந்தைகளுக்கான படமும் பார்த்து  பிள்ளைகளை  9  மணிக்கு பெட்டுக்கு  விட்டு விட்டு, கிடக்கிற  விஸ்கி ல  2 பேக்கை  உள்ள தள்ளி போட்டு  குழைந்தை பெறுவது எப்படி என்ற ஆராட்சியை நானும் ஆத்துக்காரியும் சேர்ந்து ஆராய்ந்து இருப்போம்.மறக்காமல் பாதுகாப்பு பலூனையும் கையில் வைத்துக் கொண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இருந்த இருக்கைகளின் வரிசையில் அரைநேரத்திற்குப் பிறகு அருகில் இருந்தவர்கள் பீர் கான்களைக் கொண்டுவந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருக்க சங்கடமாக இருந்தது. :(

 

ஆமைகள்...எல்லாம் ஆமைகள்......ஆனால் சருகுஆமைகளை நேரடியாகவே பார்த்த பாக்கியவதி நீங்கள்!!!!!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிகழ்வு ஒரு வெற்றி கரமானதோ தோல்வியானதோ யாருக்கு தெரியும்?, ஆனால் ஒவொருவரும் யானை பார்த்த-நான் பார்க்கவே இல்லை- குருடர் மாதிரி ஒன்று மாறி ஒன்று எழுதுகிறோம். - ...

பொதுவில் பார்த்தல்;

பலருக்கு நேரப்பிரச்சனை,

இங்கே எத்தனை கலியாணம், பிறந்த நாள் விருந்துகள் குறிந்த நேரத்திற்கு தொடங்குகிறது? நான் பார்த்த பல நிகழ்வுகள் பிந்திதான் தொடங்கியது..நாங்கள் ரோயேர்ஸ் சென்டர் இல் இருந்த உடன் எல்லாம் சுவிச் போட்டவுடன் நடக்கிற காரியம் அல்ல..காசு கொடுத்தவுடன் நாங்கள் எல்லாம் வெள்ளை தோல் ஆக்களில் தகுதிகள் வருமa?

-நாங்கள் கனடியன் என்ற படியால் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பாப்போ தெரியவில்லை?

- தொடர்புபட்ட உணர்வு ஒன்று, இளையராஜா குழு வந்த போது TVI அறிவிப்பாளர்/ பெண் ஒருவர் பேட்டி எடுக்கிறார்- பெரும்பாலான எல்லோரிடமும் கேட்பா "கனடாவிற்கு இது முதல் தரமா? அல்லது முன்னரே வந்திருகீர்களா? " இது என்ன மாதிரியான கேள்வி, எல்லோரிடமும் கேட்பதர்ற்கு, அதை அறிவதால் யாருக்கு என்ன பயன்- ? தான் ஒரு கனடியன், அல்லாவிடின் நாங்கள் கனடாவில் இருக்கிறோம் என்கிற போலி பந்தாவை தவிர வேறு ஒன்றும் இல்லை.

இங்கே இன்னுமொரு பதிவு பதிந்துள்ள - நான் நினைக்கிறன் ஒரு இந்தியன் என்று/ஆங்கிலத்தில் பதிந்தவர்- அவருக்கும் நேரம் கணிக்க தெரியவில்லை/ நம்ம இசைக்கு தெரியவில்லை..இப்படி எல்லோரும் பிந்தி முந்தி போகலாம். அதை நிகழ்த்துபவர்கள் போக்கக் கூடாதோ? உங்கட மனச் சாட்சியை கேளுங்கோ...

பலருக்கு, மற்றவர்கள் விசில் அடித்தது, -குடித்தது- இதில் கருத்து எழுதிய பலருக்கு சரிவரவில்லை...அவர்களும் இந்த நிகழ்ச்சியை தங்களுக்கு பிடித்த விதத்தில் அனுபவிப்பதற்காகத்தான், டிக்கெட் வாங்கி வந்தார்கள், என்று கருதினால் அது பெரிதாக பாதிக்காது..நான் முதலே சொன்னமாதிரி எனது காதின் அருகில் வைத்து விசில் அடிப்பது தவறு, அதே நேரத்தில் பொதுவாக விசில் அடிப்பது தவறு என்று சொல்ல மாட்டேன்..இளைய ராஜாவின், ஒவ்வாமை என்றால் என்னவென்று விளங்கவில்லை.

25000 சனத்தை சேர்த்தால் எத்தனை எத்தனை விதமான மக்கள் வருவார்கள் என்று தெரிய வேண்டும்...

மற்றது ....

பெரிய பிரச்சனை;

தரம் குறைந்த/ மிகவும் தரம் குறைந்த ஒலியமைப்பு ....இணைப்பில் உள்ள பல பாடல்கள் ஊரில உள்ள ஐகிரீம் பழ வானில் இருந்து வருவது போல இருக்கிறது ..அதற்க்கு முக்கிய காரணம் எங்கள் வாகனங்களில் உள்ள 8/10/12 /16(என்னுடையதில் எந்தனை என்றே எனக்கு தெரியாது) ஸ்பீக்கர்ஸ் உள்ள ரேடியோ உபகரணங்கள்...அவற்றில் கேட்டு விட்டு..இப்படி ஒரு வெளியில் கேட்டால், அதனுடைய பாதி/ காவால்சி தன்னும் வராது////

பல பேர் பாட்டு தெரிவு பிழை என்று சொல்லுகிறீர்கள்? எப்படியான பாடல்களை 6 மனிதிதியாலம் கேட்ட்கலாம் என்று நினைகிறீர்கள்?

அப்படி ஒரு லிஸ்ட் ஒன்றை தாருங்கள்...?

இன்னுமொன்று...

வேறு சிலரும் சொன்னது என்று நினைக்றேன்--இளைராஜாவின் பாடல்கள், ஒன்று இரண்டு, ஐந்து, பத்து இருவது ...ஆனால் தொடர்ந்து 4 -5 மணித்தியாலம்; பலகை/ பிளாஸ்டிக் கதிரையில் இருந்து பார்க்கிறது என்றால் ...எடுறா போத்தில ஊத்தடா இன்னும் கொஞ்சம் ...

மொத்தத்தில் ...100/200/500 டாலர்ஸ் கொடுத்து போட்டு; ஆறு கடல் பாயவில்லை என்று சொன்னால் ... டொலரின் பெறுமதி தெரிவில்லை என்றுதான் அர்த்தம்... :(

  • கருத்துக்கள உறவுகள்

வொல்க்கனோவின் பலகருத்துக்களுடன் உடன்படமுடிகிறது. நன்றி.

 

 

Spoiler
எல்லோருக்கும், எல்லாநேரத்திலும், எல்லாவிடயங்களிலும் சரியாகக் கருத்தெழுதமுடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வு ஒரு வெற்றி கரமானதோ தோல்வியானதோ யாருக்கு தெரியும்?, ஆனால் ஒவொருவரும் யானை பார்த்த-நான் பார்க்கவே இல்லை- குருடர் மாதிரி ஒன்று மாறி ஒன்று எழுதுகிறோம். - ...

பொதுவில் பார்த்தல்;

பலருக்கு நேரப்பிரச்சனை,

இங்கே எத்தனை கலியாணம், பிறந்த நாள் விருந்துகள் குறிந்த நேரத்திற்கு தொடங்குகிறது? நான் பார்த்த பல நிகழ்வுகள் பிந்திதான் தொடங்கியது..நாங்கள் ரோயேர்ஸ் சென்டர் இல் இருந்த உடன் எல்லாம் சுவிச் போட்டவுடன் நடக்கிற காரியம் அல்ல..காசு கொடுத்தவுடன் நாங்கள் எல்லாம் வெள்ளை தோல் ஆக்களில் தகுதிகள் வருமa?

-நாங்கள் கனடியன் என்ற படியால் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பாப்போ தெரியவில்லை?

- தொடர்புபட்ட உணர்வு ஒன்று, இளையராஜா குழு வந்த போது TVI அறிவிப்பாளர்/ பெண் ஒருவர் பேட்டி எடுக்கிறார்- பெரும்பாலான எல்லோரிடமும் கேட்பா "கனடாவிற்கு இது முதல் தரமா? அல்லது முன்னரே வந்திருகீர்களா? " இது என்ன மாதிரியான கேள்வி, எல்லோரிடமும் கேட்பதர்ற்கு, அதை அறிவதால் யாருக்கு என்ன பயன்- ? தான் ஒரு கனடியன், அல்லாவிடின் நாங்கள் கனடாவில் இருக்கிறோம் என்கிற போலி பந்தாவை தவிர வேறு ஒன்றும் இல்லை.

இங்கே இன்னுமொரு பதிவு பதிந்துள்ள - நான் நினைக்கிறன் ஒரு இந்தியன் என்று/ஆங்கிலத்தில் பதிந்தவர்- அவருக்கும் நேரம் கணிக்க தெரியவில்லை/ நம்ம இசைக்கு தெரியவில்லை..இப்படி எல்லோரும் பிந்தி முந்தி போகலாம். அதை நிகழ்த்துபவர்கள் போக்கக் கூடாதோ? உங்கட மனச் சாட்சியை கேளுங்கோ...

பலருக்கு, மற்றவர்கள் விசில் அடித்தது, -குடித்தது- இதில் கருத்து எழுதிய பலருக்கு சரிவரவில்லை...அவர்களும் இந்த நிகழ்ச்சியை தங்களுக்கு பிடித்த விதத்தில் அனுபவிப்பதற்காகத்தான், டிக்கெட் வாங்கி வந்தார்கள், என்று கருதினால் அது பெரிதாக பாதிக்காது..நான் முதலே சொன்னமாதிரி எனது காதின் அருகில் வைத்து விசில் அடிப்பது தவறு, அதே நேரத்தில் பொதுவாக விசில் அடிப்பது தவறு என்று சொல்ல மாட்டேன்..இளைய ராஜாவின், ஒவ்வாமை என்றால் என்னவென்று விளங்கவில்லை.

25000 சனத்தை சேர்த்தால் எத்தனை எத்தனை விதமான மக்கள் வருவார்கள் என்று தெரிய வேண்டும்...

மற்றது ....

பெரிய பிரச்சனை;

தரம் குறைந்த/ மிகவும் தரம் குறைந்த ஒலியமைப்பு ....இணைப்பில் உள்ள பல பாடல்கள் ஊரில உள்ள ஐகிரீம் பழ வானில் இருந்து வருவது போல இருக்கிறது ..அதற்க்கு முக்கிய காரணம் எங்கள் வாகனங்களில் உள்ள 8/10/12 /16(என்னுடையதில் எந்தனை என்றே எனக்கு தெரியாது) ஸ்பீக்கர்ஸ் உள்ள ரேடியோ உபகரணங்கள்...அவற்றில் கேட்டு விட்டு..இப்படி ஒரு வெளியில் கேட்டால், அதனுடைய பாதி/ காவால்சி தன்னும் வராது////

பல பேர் பாட்டு தெரிவு பிழை என்று சொல்லுகிறீர்கள்? எப்படியான பாடல்களை 6 மனிதிதியாலம் கேட்ட்கலாம் என்று நினைகிறீர்கள்?

அப்படி ஒரு லிஸ்ட் ஒன்றை தாருங்கள்...?

இன்னுமொன்று...

வேறு சிலரும் சொன்னது என்று நினைக்றேன்--இளைராஜாவின் பாடல்கள், ஒன்று இரண்டு, ஐந்து, பத்து இருவது ...ஆனால் தொடர்ந்து 4 -5 மணித்தியாலம்; பலகை/ பிளாஸ்டிக் கதிரையில் இருந்து பார்க்கிறது என்றால் ...எடுறா போத்தில ஊத்தடா இன்னும் கொஞ்சம் ...

மொத்தத்தில் ...100/200/500 டாலர்ஸ் கொடுத்து போட்டு; ஆறு கடல் பாயவில்லை என்று சொன்னால் ... டொலரின் பெறுமதி தெரிவில்லை என்றுதான் அர்த்தம்... :(

 

ரகுமானின் இசைக்கச்சேரி நடந்த பின் இப்படி பல முறைப்பாடுகள் வரவில்லை என்றால் ஏன் என்று இரு இசைக்கச்சேரியையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ளலாம். 
 
யாரும் ஹரிகரனை கூட்டிக்கொண்டு வந்து அவர் இளையராஜாவுக்கு பாடிய பாடல்களை பாடுவிக்காமல் குரலில் முற்றிலும் மாறுபட்ட குரலை உடைய ஜெயச்சந்திரனின் பாடலை பாட விடுவார்களா?? 100 என்ன 1000 இசைக்கலைஞர்கள் வந்தாலும் இனிய இசைக்கச்சேரியை தர முடியுமா??
 
விழாவை ஒழுங்கு செய்தவர்களுக்கு தெரியும் அன்றைய கால நிலை பற்றி நன்கு தெரியும்.குழுவினரில் பெரும்பாலோர் முதல் நாளே வந்து விட்டார்கள். சற்று நேரத்துகே கூட்டி வந்திருக்கலாம்.யாரோ அரசியல் வாதிகளின் பேச்சு இடைக்கிடை இடம் பெற்றதாகவும் அதனால் அதிக நேரம் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்று விஜய் தொலைகாட்சியில் நடை பெற்றது.அதற்கு முதல் மக்களிடம் தங்களின் தெரிவை வாக்களிக்க சொல்லி பின்னர் அந்த ஒழுங்கில் இசை நிகழ்ச்சி நடை பெற்றது.அப்பொழுதே இளையராஜாவுக்கு மக்களின் தெரிவுகள் தெரிந்திருக்கும். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. இவரல்ல அவர்..

தவறுக்காக வருந்துகிறேன் மாம்ஸ்.

 

குரலைப் பார்த்ததும் இவர் போலவே இருந்தார் அதனால் வந்த குழப்பம்.

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. :)

 

பி.கு.- குறித்த பதிவு தவறாக இருப்பதால் நிர்வாகம் விரும்பினால் அதை நீக்கிவிடவும். :)

வொல்கனோ 'Trinity Event' காரர்ர ஆள் போல கிடக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை..

 

பணம் செலுத்தி நிக்ழ்வைக் காணப்போகிறவர்கள் நுகர்வோர் அல்லவா??!! நேரம் தாமதமாக ஆரம்பித்ததால் நுகர்வோருக்கான சேவையில் குறைபாடு என்றுதான் அர்த்தம். பத்துப் பாடல்கள் குறைந்தாலும் இழப்பு நுகர்வோருக்குத்தானே..

 

மற்றது.. நான் தாமதமாகச் சென்றது குறித்தும் எழுதியிருந்தீர்கள். மூன்று மணிநேரம் செல்லும் என்பது எனக்கு எப்பவுமே நடந்திராதது. இனிமேல் தெரியும். :lol:

 

இசைக்குழுவைத் தாமதமாக்கியதில் எமது பங்கும் உண்டு. :rolleyes: எஅங்களது வாகனங்களும் இசைக்குழுவினர் வருகைக்குத் தடையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

 

இசைக்குழுவினர் North York பகுதியில் Travelodge விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அறிந்தேன். விழா அரங்கத்துக்கு அருகில் அன்று காலையிலேயே அழைத்துவரப்பட்டு தங்கவைத்திருக்கலாம். அவர்களுக்கும் புது அனுபவம்.. கோட்டை விட்டுவிட்டார்கள்.

 

மற்றையது பாடல் தெரிவு. எல்லோரும் இதில் குறை சொல்லவே வாய்ப்பு அதிகம். கிட்டத்தட்ட 4000 இதுவரையில் போட்டிருப்பார் என நினைக்கிறேன். அதில் 10 வீதமான பாடல்கள் சிறந்தவையாக இருந்தாலும் 400 பாடல்கள் தேறும். எனக்குப் பிடித்தது எனது அக்காவுக்கே பிடிப்பில்லை.. இதிலே எங்கேயிருந்து திருப்தி வரும்? :rolleyes:

 

விழாக்களுக்கு நேரம் பிந்திச் செல்வது பற்றியும் எழுதியிருந்தீர்கள். அங்கே பணம் கட்டி நாங்கள் போவதில்லை..

 

பணத்தை விட்டுவிடுவோம்.. ஒரு கலைஞனின் இசையை இரசிக்கவோ, அல்லது தனது பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு உள்ளத்தை வாழ்த்தவோ நேரம் தவறிச் செல்லக்கூடாது என்பது என் கருத்து. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் எம்மவர்களுக்காக இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள்.. sound proof stage அமைக்க முயற்சி செய்யுங்கள்..! :)

 

on-the-stage-they-compete-in-sound-proof

 

காணொளிப் பகிர்வுகளுக்கு நன்றி இசைக்கலைஞன். :)

  • தொடங்கியவர்
வல்கேனோ,
உங்களது வாதங்களிற்கு நன்றி. இருப்பினும் அவற்றோடு உடன்படமுடியவில்லை.
 
1)    இருபத்தையாயிரம் ரசிகருள் கண்ணை மூடிக்கொண்டு ஒரு ரசிகரைத் தெரிவு செய்தீர்கள் ஆயின், அவர்கள் நேத்திக்கடனிற்குத் தீக்குளிப்பதற்காகவோ, தம்மை ஒறுத்துப் போராட்டம் பண்ணவோ, ஏதேனும் வேள்வியில் ஆகுதி ஆகவோ நிகழ்ச்சிக்கு வரவில்லை. தமது ஓய்வு நேரத்தில் மகிழ்ந்திருப்பதற்காகப் பணம் செலுத்தி வந்தார்கள்.
2)    அனுமதிச்சீட்டை விற்றுப் பணம் பெற்றவர்கள், அனுமதிச்சீட்டுப் பெற்றவருடன் ஒரு ஒப்பந்தத்தில் நுழைகிறார்கள். ஒரு பொருளைத் தருகிறேன் என்று பணம் பெற்ற பின்னர் பொருளைக் கொடுக்காது விடுவது அல்லது வேறொரு பொருளைக் கொடுப்பது, அல்லது ஒப்பந்த தரத்திற்குக் குறைவான பொருளைக் கொடுப்பது வியாபார உலகில் எவ்வளவு சட்டரீதியான தவறோ, அதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல 100 மற்றும் 150 டொலர் ரிக்கற்றுக்களை வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி என்ற சேவை உடன்படிக்கைப் படி விற்றுவிட்டு, வாங்கிலை அடுக்கி மண்டையை மண்டையைப் பார்;த்தபடி இருக்கவைப்பதும். தவறான விளம்பரம், ஒப்பந்தத்திற்கு முரணான சேவை என்பன கண்டனத்திற்குரியன: உண்மையில் நுகர்வவோர் நீதிமன்றிற்கு ற்றினிற்றி இவன்சினர் அழைக்கப்படவேண்டும்.
3)    மேலும், வௌ;வேறு தரங்களின் பெயர்களில் மாதக்கணக்காய் ரிக்கற்றுக்களை விற்றுவிட்டு, நிகழ்விற்கு முந்திய இரவிலும் நிகழ்வின் அன்று காலையும் 150 ரிக்கற்றை 39க்கு விற்பது என்பதானது, என்றுமே ஒழுங்கமைப்பாளர்கள் இந்தக் ரிற்கற்றுக்களை வித்தியாசமாக நடத்த நினைத்திருக்கவில்லை என்பதற்கு ஆதாரம். சுரி இவ்வளவும் ரிக்கற் பற்றிக் காணும்.
4)    அடுத்து, விழாவிற்கு வந்த மக்களை எடுப்போம். நானும் நீங்களும் புகையிரதத்தில் ஒரே கட்டணம் செலுத்தி ஏறுகிறோம். புகையிரம் பொது இடம், பல சனம் வாற இடம் என்று வல்கேனோ எதிர்பார்க்கத்தானே வேணும் என்றுவிட்டு. நான் உங்கள் முன்; இருந்து எனது காலை உங்களிற்கு அருகிருந்த ஆசனம்தில் போட்டபடி, எனது சழி அடைத்த மூக்கினை எனது விரல்களால் நோண்டி எனது நெற்றியில் பூசிக்கொண்டிருந்தால் அது பற்றி உங்களிற்கு ஏதாவது தோன்றுமா? சமூகம் என்பது பல்வேறு மனிதரையும் உள்ளடக்கியது. அதில் ஒரு குறைந்தபட்ச நாகரிகம் நடவடிக்கையில் இருக்கவேண்டும், ஆனால் அதை அனைவரிடமும் எதிர்பாhக்;கமுடியாது என்று தெரிந்து தான் உலகில் சட்டங்கள் இருக்கின்றன. பொது நிகழ்வு என்று வரும் போது, தானும் ரிக்கற் எடுத்தவர் தானே என்றுபோட்டு,  மண்டபத்தின் நடுவில் நின்று கூத்தாடுவது ஏற்புடையதல்ல. இவர்களைக் கட்டுப்படுத்துவது விழா ஒழுங்கமைப்பாளரின் கடமைகளில் ஒன்று. ஏனெனில் இன்ன தொகை தாருங்கள் இன்ன சேவையினை உங்களிற்குத் தருவோம் என்று உடன்படிக்கை போட்டவர்கள் அவர்கள்.
5)    காதிற்குள் விசில் அடிக்காட்டில் பறவாயில்லை தாராளமா அடியுங்கள் என்கிறீர்கள். அவர்கள் பாடல் முடிவுகளில் மட்டும் விசிலடிக்கவில்லை. தோன்றியபோதெல்லாம் அடித்தார்கள். 
6)    குடிக்கணுமா குடியுங்கள். குடித்தபின் பொது இடத்தில் தள்ளாடாது நடக்க முடியும் வரை குடியுங்கள். நிகழ்வைத் தவறணை ஆக்கி நீங்கள் அசைந்துதிரிவதை இரசிப்பதற்காக அவனவன் சனி இரவைத் தாரை வார்க்கவில்லை. மேலும் ஒருபோத்தல் பியரை உள்ளீடு செய்வதும் பின்னர் அதை வெளியேற்ற பாட்டின் நடுவில் எல்லோரையும் மறைத்தபடி எழுந்து செல்வதும், பின்னர் வரும்போது கையில் இன்னுமொரு போத்தல் பியரோடு திருப்ப எல்லோரையும் மறைத்தபடி வருவதும் பலரால் தொடரப் படுகையில் இசையினை எங்கே ரசிப்பது? இது கூட்டத்தைபற்றிக் காணும்.
7)    இனி இசைக்கலைஞரிடம் வருவோம்:
இப்போ நான் ஒரு கதை வாசித்து எனக்கு அது மிகப்பிடித்துப் போகிறது என்று வையுங்கள். அதே கதையினை நீங்கள் படித்து உங்களிற்குப் பிடிக்கவில்லை என்று வையுங்கள். எனக்கு ஏன் பிடித்தது என்று நான் பகிர்ந்துகொண்டால் ஒருவேளை உங்களிற்கும் கதைபற்றி ஒரு புதுப்பார்வை கிடைக்கக்கூடுமல்லவா? இது இரு சாமானியர்களான என்னையும் உங்களையும் பற்றியது. இளையராஜா சாமானியர் அல்ல. அவர் ஒரு ஞானி. அத்தகைய ஞானி தனக்குப் பிடிக்காத மொக்கை பாட்டை ரியூன்போடுவாரா? அதுகும் அவர் பெவெக்சனிற்குப் பெயர் போனவர். அவரிற்குப் பிடித்தபடியால் தானே அவர் அவற்றை இயற்றினார். அப்டி இருக்க பல பாடல்கள் எங்களிற்குப் பிடிக்காமல் இருக்கின்றன. பாடல் தெரிவு சரியில்லை என்று சொன்னால் 'இளையறாஜா உனக்கென்ன பிரத்தியேக நிகழ்வா செய்தார். ஒவ்வொருவரிற்கு ஒவ்வொரு பாட்டு பிடிக்கும்' என்கிறீர்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் சொல்வது என்னவெனில், இசைக்கின்ற பாடல்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன, அவற்றின் மகிமை என்ன என்று இசைஞானி இருநிமிடம் ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் கூறின் எல்லாப்பாட்டும் எல்லோரிற்கும் ஏதோ ஒரு அனுபவத்தைத் தருமல்லவா? பிடிப்பு சுவை என்பன தனிநபர் விடயங்கள் தான். ஆனால் பல பத்து பாட்டுக்களை நிகழ்வில் இசைப்பவர்கள், ஏதோ ஒரு வகையில் அந்தப் பாடல்களை ஒழுங்கமைக்கணும். அந்த ஒழுங்கு நேர ஓட்டத்தோடு ரசிகனின் மூட்டினை இழுத்துச் செல்லணும். இது மேடை நிகழ்ச்சி வழங்குவொரின் கடமை.
 
நாங்கள் கனேடியன் என்றபடியால் எல்லாம் சரியாய் நடக்கோணும் என்ற நினைப்பா என்கிறீர்கள், ரிற்கற் காசை கனேடிய டொலரில் தானே பெற்றார்கள். ஆம், கனடாவில் நடக்கும் நிகழ்வுகள் இங்குள்ள தரத்திற்கு திட்டமிடப்படத்தான் வேண்டும். அதில் என்ன கேள்வி, இடியப்படம் 5 சதம் என்றாலும் கனேடிய சுகாதார விதி மீறப்படுவது உறுதிசெய்யப்படின் கடை பூட்டத்தான் படவேண்டும். 
கனடாவில் இருந்தால் போல் வெள்ளைக்காரத் துரை படிக்கிற பல்கலைக்கழகங்களிற்கு நாங்களோ எங்கள் பிள்ளைகளோ போவதா என்றோ? ஊதியத்தில் வெள்ளைக்குக் குறைவாய் ஒரே தொழிலிற்கு எங்களிற்கு ஊதியம் கிடைக்கலாம் என்றோ நினைக்கிறோமா. பின் எதற்கு எங்களவர் எங்களவரிற்காக நடாத்தும் நிகழ்வுகளில் மட்டும் இந்த இரண்டாம் பிரசைச் சிந்தனை. எங்களிற்காக எங்களால் உயர்வான நிகழ்வுகளை எதிர்பார்க்கவே முடியவில்லை என்றால், இரண்டாம் தரத்தில் தானே எங்கள் நிகழ்வுகள் தொடரமுடியும். எங்கிருந்து இந்த இரண்டாந்தரப் பிரசை மனநிலை பிறக்கிறது என்று புரியவில்லை? நிச்சயமாக இது கனடாவின் தவறில்லை.
 
இறுதியாக, நாங்கள் முப்பது வருடமாக அனேகமாக பொதுவில் ஒன்று சேர்வது தாயகம் சார்ந்தே இருந்தது. எங்களிற்குள் ஒரு அர்ப்பணிப்பு உணர்வு அந்நிகழ்வுகள் சார்ந்து தானாக வரும். ஆனால் இங்கு நாங்கள் பேசிக்கொண்டிருப்பது விலை குடுத்து நுகர்வோராக நாங்கள் அனுபவிக்க முயன்ற ஒரு இசை நிகழ்வு பற்றி. இதில் அரசியல், போராட்டம், அர்ப்பணிப்பு, வேள்வி, ஆகுதீ என்ற அடையாளச் சொற்களிற்கு இடமில்லை. வழக்கு என்னவெனில், உடன்படிக்கை போட்டு, பணம்பெற்று வித்த சரக்கை சொன்னபடி டெலிவரி செய் என்பது மட்டுமே.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமாதிரி பின்வாங்குகிறது என்று தெரியவில்லை...ஆனால் சொல்லவந்தது;

எனக்கு தெரிய ஒருவர் போனவர்; ஒட்டவாவில் இருந்து, தனது மனைவியையும்; சுகவீனமான குழந்தையும் விட்டு விட்டு, அவரை பற்றி ஒரு 10 வசனம் எழுதலாம்.. ஆனால் அவர் சொன்னது இதுதான், இது பரவாயில்லை, ஆனால் இதைவிட நன்றாக செய்திருக்கலாம். -அவருக்கே சரி என்றால் மற்றவர்களுக்கும் சரியாக இருக்கலாம்தானே.. கிடத்தட்ட எல்லோரது முடிவும் அப்படித்தானே...வல்லை சகாரா moliyil சொன்னதும் அதுதான், மெல்லாமாய் பறந்து போட்டு கீழ் இறங்கியது, எல்லோரும் அதைதான் சொல்லுகிறார்கள் என்று நான் நினைக்கிறன்

ஆனால் தானியத்தனிய என்று பார்த்தால்- எல்லாவற்றிலும் பிழைகள் சரிகள்....

சில பிழைகள் எங்களது உணர்வு சார்ந்த்தது போல எனக்கு இருக்குது; அது இன்னுமொருவருக்கு சரியாக வராது தானே...

எனக்கு பீர் குடிப்பவர்களை, ரசிக்க தெரியும்,,.அதனால்தான் அவர்கள் குடிப்பது எனக்கு பாதிக்காது.. அது இன்னுமொருவருக்கு/எனக்கு பாதிக்கும் என்றால் ...அந்த இடத்தை பொறுத்து அதனுடைய பிரதிபலிப்பு இருக்கும்- ஒரு இசை நிகழ்வில் பெரும்பாலும் ரசிப்பேன்

-இதில் சொல்லுவது சரியோ தெரியவில்லை;

நான் அண்மையில் இலங்கை போன போது , நாங்கள் ஒரு கைகுழந்தையை கொண்டு போன நாங்கள், எங்களுடன்-முன் பின் தெரியாத ஆள் - ஒரு தமிழ் பெண் பயணம் செய்தவ- எனது அம்மா மாதிரி - yes / no தவிர ஆங்கிலம் தெரியாத தலை முழுக்க திமிர் உள்ள- அம்மாக்கு அவ்வளது இல்லை-

வேற காலியான இருக்கைகள் சில இருந்தது, அவ மாறி இருக்கவில்லை. விமானம் பறக்க தொடங்கினால் பிறகு அவ தலை இடி என்று சொல்லி பனடோல் வாங்கி கொடுத்த பிற்பாடு, மனைவி கேட்ட எங்கே போகிறீர்கள் என்று

"கொழும்பு" என்று சொன்னா ,-அவ கொழும்பு என்றவுடன் மனைவி என்னை கதைக்க சொன்னா "கொழும்பு என்றால், எவடம் /வெள்ளவத்தையோ என்று கேட்டால் - இல்லை வட்டக்கச்சியோ/ எதோ ஒரு இடம் சொன்ன...பிறகு ஒரு கதை பேச்சு இல்லை. ஆனால் பிள்ளை அழுத போது சிவனே என்று அதில் இருந்தார், நான் ஒரு 10 தாரம் அங்கேயும் இங்கேயும் நடந்திருப்பேன்- நானும் எனது எனது மனைவியும் ஒரு 1 - 2 மணித்தியாலம் தான் சும்மா கண் மூடி இருந்திருப்போம்...ஆனால் அவ ஒரு கரைச்சல் கொடுக்கிற பேர்வழி அல்ல..ஆனால் உதவி செய்யாத , செய்யத்தெரியா பேர்வழி--(அவவிற்கு சாப்பாடு/ தண்ணி எல்லாம் நாங்கள்தான் ஒடர் பண்ணினது...)

ஆனால் திரும்பி வரும்போது சப்பட்டைகள்- ஏறின உடனேயே கச்சா முச்சா என்று கதைத்துக்கொண்டு வந்தார்கள்- அவர்கள் ஒரு 10 - 15 பேர் வந்திருப்பார்கள்...நாங்கள் நினைத்தோம் சரி..வரேக்க அந்த தமிழ் மனிசி எவ்வளோ நல்லம், இதுகள் என்ன செய்ய போகுதுகளோ தெரியவில்லை என்று..

அதுகள் என்ன செய்தார்கள் என்றால், இன்னுமொரு தமிழர் இருந்தவர்- போட்டு பிறையோடு வந்தவர் - அவரையும் கதைத்து- அந்த இருக்கையையே எங்களுக்கு விட்டுத்தந்தார்கள்...நாங்கள் நம்பவில்லை- சப்பட்டைகள் இப்படியோ என்று..ஆனால் அதுதான் நடந்தது...லண்டன் இறங்குவது முன் குழந்தை அழுத போது அவர்கள் ..பிள்ளைக்கு விளையாட்டு காட்டி விளையாடினார்கள்..படம் எடுத்தார்கள் ...

நானும் டிக்கெட் வாங்கித்தான் வந்திருக்கிறேன் என்று போட்டு நட்டு பிடித்து கொண்டு இருக்காமல் ..இன்னுமொருவரின்-இயலாமையை/சந்தோசத்தை அனுசரிக்க/உணர தெரிந்தால் எங்களுக்கும் சந்தோசமாக இருக்கும் அவர்களுக்கும் சந்தோசமாக இருக்கும் நினைக்றேன்- அது இயலும் எனில்-

ஏன் சொல்லுகிறேன் என்றால் ஏதுvum எதிர்பார்ப்பிலும்/விட்டுக்கொடுப்பிளும்தான் தங்கியுள்ளது ..

நேரத்தை பொருத்தவரையில், அவர்கள் செய்ததை ஓம் என்று சொல்லவில்லை -எரிமலை அளப்பி போட்டான் - ஆனால் நாங்களே போகாத இடத்தில், அவர்கள் வந்து சொன்ன நேரத்திர்ற்கு தொடங்கி யாரம் பார்க்கிறது ...2 மணித்தியாலம் என்பது ஒரு கொலைதான் -

முடிவாக கனக்க எழுதுகிற எனக்கு இப்படி நிகழ்சிகள் பார்த்த அனுபவம் குறைவு..கிட்டடியில் ஒன்று- 1 வருடத்திர்ற்கு முன்பு பார்த்தேன்- ஓசி டிக்டேட் -

நிகழ்ச்சி தொடங்க முன்பு உணவு தந்தார்கள்..இந்த இடத்தில் உள்ள திறமான ஹோட்டல் இருந்து உணவு எடுத்திருந்தார்கள், குடிவகை தந்தார்கள்- காசு கொடுக்க வேண்டும், 1-2 மணித்தியாலம் பிந்தி தொடங்கினார்கள், ஒரு தம்பி அதை பற்றி கதைக்கவில்லை..நான் கதைக்க ஏலாது தானே- அன்றும் சாதனா சர்கம் வருவது என்று வரவில்ல, ஆனால் இன்னுமொரு பாடகரை புதிகாக கொண்டு வந்தார்கள்...

அது ஒரு நல்ல நிகழ்ச்சி ஒருவரும் குறை சொல்லவில்லை..../என்னிடம் சொல்லவில்லை

....அங்கேயும் பிள்ளைகள் அழுதார்கள் இடையில் எழும்பி வீடு வந்து விட்டோம்

யாருடைய கருத்தையும் இகழ்ந்து சொல்லுவதற்காக கருத்து எதுவும் எழுதவில்லை - தவறுகளுக்கு மன்னிக்கவும் - இடைக்கிடை என்னைபற்றி புளுகி இருப்பேன் பொருத்தருள வேண்டும்

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

எனக்கு நிகழ்வு 90 வீதம் பிடிக்கவில்லை. பாலசுப்பிரமணியத்தின் மடைதிறந்து, கார்த்திக்கின் இரு பாடல், இளையறாயாவின் சில பாடல், விவேக்கின் நிகழ்வு, இப்படி தொட்டுத்தொட்டாக ஒரு பத்துவீதம் மட்டும் பிடித்தது.
 
 
உண்மையான விமர்சனம் இன்னுமொருவன். யானை தன் தலையில் மண்ணை வாரி கொட்டியது போல் தன்னுடைய 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கடின உழைப்பையும் அது ஈட்டிக் கொடுத்த பெயரையும், புகழையும் கெடுத்துக் கொண்டு விட்டார் இசைஞானி. அவரது இசைத் திறமைக்கும் இனிமைக்கும் மதிப்பளித்து,அந்தக் கடுங்குளிரிலும் கொட்டிக் கொண்டிருந்த பனியிலும் சென்றது நல்வதொரு மாலைப் பொழுதை வீண் விரயம் செய்தது போலாகி விட்டது. எஸ் பி.பாலசுப்ரமணியத்திற்கு மட்டுமே எனது வாழ்த்துக்கள் சேரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.