Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா

Featured Replies

பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா 

[Wednesday, 2013-02-20 07:38:52]
sarath_fonseka-seithy-150.jpg

தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவோ, உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி. சி. க்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் சட்ட பூர்மான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சி பிரித்தானியா மற்றும் இந்திய செய்திப் பத்திரிகைகள் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்த பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழப்பதற்கு முன்னரான புகைப்படங்கள் தொடர்பாக பி.பி.சி. சிங்கள சேவை கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சிங்கள சேவையின் கேள்விகளுக்கு பதிலளித்த சரத் பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் ;

2009 மே 19 ஆம் திகதி 10 மணிக்கு யுத்தம் நிறைவடைந்தது. ஆனால். அக்காலப்பகுதியில் பாலச்சந்திரன் உயிரிழந்ததாகவோ அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை. பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸின் சடலம் கிடைத்தது என்பதே உறுதிப்படுத்தப்பட்டது என்றார். இவ்வேளை இது தொடர்பான விசாரணைகளுக்கு முகம் கொடுக்கத் தயாரா என பி.பி. சி. ஊடகவியலாளர் கேட்டபோது, தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பாகவும் சட்ட பூர்வமான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்கத் தயாராகவிருப்பதாக பொன்சேகா பதிலளித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=76433&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கள்ளர் எண்டால், புத்தனா வந்து பதியிறதாம்? :wub:

அவனும் வந்து 'பாளியில' கிறுக்க, நீங்களும் அதை 'மொழிபெயர்க்க' அதுவும் நீங்க சொல்லுற மாதிரித்தான் இருக்கும்!

அவசரப்படாமல் இருங்கோ, அப்பு!

போர்க்குற்ற விசாரணை வாறநேரம், உங்களையும் கட்டாயம் கூப்பிடுவாங்கள்! :icon_idea:

எப்பிடியடிச்சாலும் அழாமல் இருக்கிறான் இந்த கைப்புள்ள..

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இவர ஜென்மம் புள்ளா ஜெயிலுக்கை போட்டாலும் இந்த கயவன் திருந்த மாட்டான்... இவன் அன்று தொட்டு இன்று வரை சொல்லுவது எல்லாம் பொய் பொய்யை தவிர உண்மை ஒன்றும் இல்லை....வன்னில 80ஆயிரம் மக்கள் தான் இருக்கினம் என்று பொய் கனக்கு சொன்னவன் இவன்...போர் முடிஞ்சாப் பிறக்கு வவுனியா முகாமுக்குள்ளை மட்டும் ஒரு லச்சத்துக்கு மேல எமது உறவுகளை அடைச்சு வைத்து இருந்தாங்கள்....போர் நடந்த காலங்கலில் கிளிநொச்சி தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரை உயிர் நீத்த உறவுகள் எத்தனை..........இவன் மனிதப் பிறப்பு இல்லை...மிருகப் பிறப்பு..... இவன் சொல்லுறது எல்லாம் பொய் என்று தமிழன் உலகத்துக்கு நிருபிக்க கூட நேரம் ஆகாது...ஆதாரத்தோடு நிருபிப்போம்...இவன் ஒரு பொய் கொலைக் கார கிரிமினல் என்று........ஒன்று படுவோம் ஒற்றுமையாய் வாங்கா....... வாழ்க்க தமில் வெல்க தனி ஈழம்....

மகிந்தா+ கோத்தா தன்னை காட்டிக்கொடுத்த நிலையில் பொன்சேகாவால் இதைத்தான் சொல்ல  முடியும்.

வேறு எதைத்தான் செய்ய முடியும்?

  • தொடங்கியவர்

கஜபாகு றெஜிமெண்ட், சிங்கபாகு றெஜிமெண்ட் என்ற கோடு வழியே இலங்கை ஆமி உடைந்து கோத்தா பக்கம் என்றும், பொன்சேக்கா பக்கம் என்று பிரிந்து செல்லும் நிலை, பொன்சேக்கா பதவி இழந்த நேரங்களில் இலங்கை இராணுவத்தில் காணப்பட்டது. இதனால் போட்டிகளில் வெல்லும் கட்சிக்கு, தோற்கும் கடசி துரோகிகளாக மாறும் நிலையை கொண்டுவரத்தக்க சந்தர்ப்பம் இருந்தது. 

ஆனால் எதிலுமே ஒற்றுமை காண முடியாவிடாலும் தமிழர் விடையத்தில் இலகுவில் ஒற்றுமை காணும் சிங்களதலைமைகள்  தம்மில் தாம் திரும்ப இணைந்து, இந்த படங்களை கையளிக்கும் சிங்கள ஆமிகள் போர்குற்றத்திற்கான வாக்கு மூலங்களை கொடுத்துவிட்டுவிடாமல் இருக்கத்தான் பொன்சேக்கா இதை சொல்கிறார்.

விக்கிலீகஸ் வெளிவிட்ட ராஜாங்க அமைச்சுக்கான தனது கேபிள் ஒன்றில், பற்றிசியா புனிக், பொன்சேக்கா பதவிக்கு வந்தால் பொறுப்பு கூறலில் மகிந்தாவை விட நியாமாக நடப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த்திருந்தார்.  இந்த செய்த்தியை படிக்க கிடைத்தால் அந்த அனுமானம் எவ்வளவு தவறானது என்பதை கண்டுகொள்ள அவருக்கு நேரம் தேவைப்படாது. 

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை எண்டு வந்தாலும் முக்கியமான ---தப்பிவிடும் வாய்ப்பு இருக்கு.. போர் முடியும் நேரத்தில் காட்டுமிராண்டிகள் இலங்கையில் நிற்கவில்லை. வெளிநாடு போய்ட்டுதுகள்.. வேறு யாரோ காட்டுமிராண்டிகள்தான் வேலையை பொறுப்பெடுத்திருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

தான் தப்புவதற்காக எதையும் செய்யும் நிலைக்கு  பொன்சேகா வந்திருப்பது தெரிகிறது. இதை சர்வதேசம் கவனிக்கும்.  நாமும் இதை சரியாக பாவித்தால் பல தலைகள் உருளும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத்தை சர்வதேசம் விசாரித்தால் மகிந்த குடும்பத்தை காட்டிக்கொடுப்பார். தற்போது இவர் மகிந்தவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சுயாதீனமாக தனது கருத்துக்களை வழங்குவார் என எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் மே 19 இல் படுகொலை; தடய ஆய்வில் புதிய தகவல்
7bdea47a6a7f78494453bf8271e132e9.JPG

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

பதுங்குகுழி ஒன்றில் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு ஒளிப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒளிப்படங்களின் சுயதரவுகளின் படி, 2009 மே 19ஆம் திகதி காலை 10.14 மணிக்கும், 12.01 மணிக்கும் இடையில் ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எனவே, பாலச்சந்திரன் மே 19ஆம் திகதி நண்பகலுக்கு சற்று முன்னதாகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இது கேள்விக்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=670301851020557486

  • கருத்துக்கள உறவுகள்

செத்த பாம்பு....இருந்து இருந்திட்டு சீறும் என்பது இதுதானோ.....

  • தொடங்கியவர்

அது சரியான அனுமானமாகத்தெரியவில்லை.வெளியில்வந்த பின்னர் பொன்சேக்கா பயப்படாமல் பலதடவைகள் ராசாவை தாக்கியவர். பிரட்டிரிக்கா வழக்கில் பொன்சேக்கா இலங்கையில் நடந்தது அரச குடும்பத்தால் நடத்திவைக்க பட்ட இனவழிப்பு என்று கோட்டில் சொல்லி பிரட்டரிக்கா ஜான்ஸை காப்பாறியிருந்தார் என்றால் அதன் பின்னர் அமெரிக்கா போன்றவை இவரின் சிறையில் கவனம் எடுத்திருக்கும். திஸ்சநாயகம், பிரட்டிரிக்காவுக்கு கிடைத்த வெளிநாட்டு வரவேற்பு இவருக்கு கிடக்க வில்லை. இவர் மகிந்தாவுக்கு பயந்தால், அமெரிக்காவிற்கு போய், அரசியல் நேரம் கணிந்துவர திரும்ப வர முடியும். இவரே அமெரிக்கவிலிருந்து தானாக வெளியேறியவர். இவர் இலங்கைக்கு திரும்பி வந்தது எதிர்பார்க்கப்படாதது. இவர் எந்த தடவையிலும் போர்குற்றத்தில் மகிந்தாவை காட்டிக்கொடுக்க மாட்டார். மேலும் பதவி கிடைத்தால் மிஞ்சியிருக்கும் தனது பழைய த்மிழ் எதிரிகளை தேடிப் போவார். அது கூட்டமைப்பு மட்டும் அல்ல. கருணாநிதி இலங்கை வந்தால் ரஜீவிக்கு செய்தது செய்ய தயாரானா ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் வெளிப்படையாக ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்காவுக்கு தெரியும்.இவரை அமெரிக்கா (பச்சை மட்டை வைத்திருந்தாலும்) ஏற்கும் என நான் நினைக்கவில்லை.ஆனால் தகுந்த சமயத்தில் இவரை பயன்படுத்துவார்கள்.ஏற்கனவே இவரின் வாக்குமூலங்கள் அமெரிக்காவிடம் உள்ளது.

அதனால் தான் திசநாயகம் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக பொன்சேகாவிற்கு ஆதரவளித்த கூட்டமைப்பின் செய்கை நினைவில் வந்து போனது. சிங்கள இனம் தமக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது இனத்தைக் காக்க எப்போதும் ஒன்று சேர்வார்கள். தமிழர்களின் ஒற்றுமையின்மை உலகம் அறிந்ததே!

  • தொடங்கியவர்

இவரின் இன்றைய அறிக்கையின் பொருள், கடந்த வாரம் கோத்தா இவர்தான் லசந்தாவை கொன்றார் என்று கூறி இவரை காட்டிக்கொடுத்தது மாதிரி தானும் ஒரு துரோகியாக மாறி மகிந்தா கூட்டத்தை காட்டிக்கொடுக்கப் போவத்திலை என்பதைக் காட்டவே. இது கனவான்களுக்குள் கனவாங்களாக திருடர்கள் தங்களைத் தாங்கள் அடித்துக்கொள்வார்கள், ஆனால் பொலிசில் காட்டிக்கொடுக்க போகமாட்டார்கள் என்பதைப் போன்றது.  இந்த வெளியீட்டில், மக்ரேயோ அல்ல மேலதிக விபரங்களை பிரசுரித்த சிங்களப்பத்திரிகைகளோ இவரை இதற்குள் இழுக்கவில்லை. பெயர்கள் குறிப்பிடப்பட்ட இராணுவத்தினர் கருத்துத் தெரிவிக்கவில்லை. கட்டளை போட்ட கோத்தா தெரிவிக்கவில்லை. கருணா இதுவரையில் எந்த அறிக்கையும் வெளிவிடவில்லை.

கருணாநிதி என்ற தமிழருக்கு கிடைத்த சபக்கேட்டால்தான் நிகழ்ந்தது என்றாலும், இவர் தமிழ் ஈழம், இலங்கை என்பவற்றுக்கு வெளியே போய் தமிழ் நாட்டவரை தாக்கியவர்.  இவரின் காலத்தில்தான் தமிழ் நாட்டு மீனவரையும் தெரு நாய்களை  சுடுவது போல சுடலாம் என்பதை தெரிந்துவைத்து சுட இலங்கை ஆரம்பித்தது.  இவர் தமிழ் நாட்டின் மீது மத்திய அரசை மீறி செய்த்த அலுவல்களால்த்தான் மத்திய அரசுக்கும் இவர் ஒரு பரம எதிரியானார். எனக்கு மகிந்தாவுக்கும் கோத்தாவுக்கும் கிடைக்கும் அதே பரிசிசுகள்தான் இவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஆவல். மன்னிப்பு கொடுத்து சாட்சியங்களாக மாற்றப்படவேண்டியவர்கள் களத்தில் இருந்தவர்களே.தலைமைகள் முழுவதும் வந்து நடந்தவைக்கு பொறுப்பு எடுக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மகிந்தவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக பொன்சேகாவிற்கு ஆதரவளித்த கூட்டமைப்பின் செய்கை நினைவில் வந்து போனது. சிங்கள இனம் தமக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது இனத்தைக் காக்க எப்போதும் ஒன்று சேர்வார்கள். தமிழர்களின் ஒற்றுமையின்மை உலகம் அறிந்ததே!

மகிந்தாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பு இவருடன் இணைந்திருந்ததாக செய்திகள் வந்தது தெரியாது. தேர்தல் UNPயின் பேரில், ரணிலின் நரித்தனங்களுடன் சிங்கள வாக்குகளை பெற முடியாது என்பதற்காக, இவரை போட்டு நடாத்தப்பட்டது. பொன்சேக்கா எந்தகாலமும் முதலாம், இரண்டாம் இடங்களுக்குள் தனது கட்சியுடன் வரலாம் என்று யாரும் நம்பவில்லை. இப்போது அந்த கூட்டு இல்லாததால் இனி இவருக்கு கூட்டமைப்பு வாக்களிக்காது.

எதிர்க் கட்சிகளுடன் இணைவதா அல்லது 146,000 அப்பாவித் தமிழரை கொன்று குவித்துவிட்டு வந்து அதை பயன் படுத்தி தன்னை அரசாராக்க முயன்றுகொண்டிருந்த மகிந்தாவுடன் இணைவதா என்ற கேள்வியுடன் அந்த தேர்தலில் கூட்டமைப்பு இவருடனும், மகிந்தாவுடனும் பேசியது. தமிழரைத் தோற்கடித்ததை வைத்து சிங்களவரிடம் வாக்கு கேட்க போன மகிந்தா கூட்டமைப்பை தனது வண்டிலில் போடும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க ஒரு அரசியல் காரணங்களும் இருக்கவில்லை. அமெரிக்கா பொன்சேக்காவை கொண்டுவர முயன்றுகொண்டிருந்த்தால் பற்றீசியா நேரடியாக கூட்டமைப்பை தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினா. கூட்டமைப்போ இந்தியாவும் இல்லை, அமெரிக்காவும் இல்லை என்ற ஒரு நேரத்தில், பொன்சேக்காவை எதிர்க்க சொல்லி இந்தியா கேட்காததால், அமெரிக்கா கேட்டபடி பொன்சேக்காவை ஆதரித்தது.

எதற்கும், நல்ல ஒரு மாற்று இருக்க, அதேநேரம் கூடாத ஒன்ற்த் தெரிய கூட்டமைப்பு போகவில்லை. இப்படியான சந்தர்பங்களில், கூட்டமைப்புக்கு இருந்த மாற்றுக்களை சுட்டிக்காட்டாமல், கூட்டமைப்பு போன பாதையை மட்டும் காட்ட முயல்வது அரசியல் ரீதியாக பிழையானது.

Edited by மல்லையூரான்

இதில் யாரையும் நம்பமுடியாது ......... பொன்சேகாவும் ராஜபச்சக்களும் ஒன்றுதான் எல்லாம் குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும், நல்ல ஒரு மாற்று இருக்க, அதேநேரம் கூடாத ஒன்ற்த் தெரிய கூட்டமைப்பு போகவில்லை. இப்படியான சந்தர்பங்களில், கூட்டமைப்புக்கு இருந்த மாற்றுக்களை சுட்டிக்காட்டாமல், கூட்டமைப்பு போன பாதையை மட்டும் காட்ட முயல்வது அரசியல் ரீதியாக பிழையானது.

தங்கள் விளக்கம் சரிதான். எனினும் கூட்டமைப்பு போன பாதை சரியல்ல. பொன்சேகாவிற்கு ஆதரவு அளித்ததும், முள்ளிவாய்க்கால் இரத்தப் பலி உறைய முன்னர் தமிழ் மக்களை பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு கேட்டதும் அரசியல் ரீதியான தவறுகள். எப்போதுமே சுயமாகச் சிந்திக்காமல் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பொம்மையாகச் செயற்படும் கூட்டமைப்பு கூடாத ஒன்றைத் தெரிவு செய்யவில்லை என்பது நகைப்புக்கிடமானது.

சொல்ல வந்த செய்தி இதுதான்.. பொன்சேகா தமிழ் மக்களின் ஆதரவோடு ஜனாதிபதியாக வந்திருந்தாலும் போர்க்குற்றதை மிகக் கடுமையாக மறுதலித்திருப்பார். தமிழ் மக்களின் அரசியல் நிலை இப்போதுள்ளது போன்றே மோசமாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா 

[Wednesday, 2013-02-20 07:38:52]
sarath_fonseka-seithy-150.jpg

தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவோ, உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி. சி. க்குத் தெரிவித்துள்ளார். 

http://www.seithy.com/breifNews.php?newsID=76433&category=TamilNews&language=tamil

பதிவாகிய விடயங்கள் எங்கே இருக்கு என்று சொன்னால்............

காணாமல் போனவர்கள் யாரும் பதிவாகி இருக்கிறார்களா என்று பார்க்க உதவியாக இருக்கும்.
  • தொடங்கியவர்

மகிந்தவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக பொன்சேகாவிற்கு ஆதரவளித்த கூட்டமைப்பின் செய்கை நினைவில் வந்து போனது. சிங்கள இனம் தமக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது இனத்தைக் காக்க எப்போதும் ஒன்று சேர்வார்கள். தமிழர்களின் ஒற்றுமையின்மை உலகம் அறிந்ததே!

1. கூட்டமைப்பு மகிந்தாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தது என்றால் பின்னர் அதற்குள் கூட்டமைப்பு அமெரிக்காவும்,  இந்தியாவும் மட்டும் சொல்வதையும் கேட்டுச் செய்கிறது என்பது வராது. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய இந்த events' probabilities are not mutually exclusive. அதாவது ஒன்றை தெரிந்தால் மற்றதை தெரிவு செய்ய முடியாது. உதாரணம், இந்தியா செல்வதைக் கேட்டால், மகிந்தாவை எதிர்க்க முடியாது அவருடன் இணங்கி 13ம் திருத்ததிற்கு பேச்சுவார்தை நடத்த வேண்டும். அப்போது பொன்சேக்காவை ஆதரிக்க முடியாது. அமெரிக்கா சொல்வதைக் கேட்பதாயின் மகிந்தாவை பதவியில் இருந்து விலக்க வேண்டும்; அதற்கு  இரண்டு வழி ஒன்று பொன்சேக்காவால் தேர்தலில் தோற்க்கடிக்கப்படுதல், அல்லது போர்குற்ற விசாரணை செய்தல். இவைகள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகாதாவை. எனவே கூட்டமைப்புக்கு இது வரையில் அமெரிக்கா சொலவதையும், இந்தியா சொல்வதையும் கேட்டு அரசியல் செய்யதுகொண்டு மகிந்தாவை எதிர்ப்பதற்காகவென்றே எதிர்க்க முடியுமாக இருக்கவில்லை. அதாவது ஆரம்பத்தில் (2009 முடிய) இந்தியா பக்கமும், இப்போ அமெரிக்கா பக்கமும் மெல்லிய சரிவைக் காட்டுகிறது. 

பொன்சேக்காவை அமெரிக்காவின் சொல்லை கேட்டு கூட்டமைப்பு ஆதரிக்காவிட்டால் இன்றைய அமெரிக்கவின் பிரேரணை முதன் நிலைமைகளில், எப்படி அமெரிக்கா பொன்சேக்கா தனது சொல்லை கேளாமல் நடந்த்தால் தான் முன்னால் கொண்டுவந்த அவரை ஒதுக்கி வைத்து விட்டு இன்றைய முன்னெடுப்புகளை செய்கிறதோ அதே மாதிரி கூட்டமைப்பையும் ஒதுக்கிவைத்திருந்திருக்கும். (அமெரிக்காவும் பொன்சேக்காவும் பொறுப்பு கூறலில் எதிர் எதிர்கரைகளில் தான் இருக்க போகிறார்கள் என்பதை தான் நீங்களும் சொல்கிறீர்கள். "பொன்சேகா தமிழ் மக்களின் ஆதரவோடு ஜனாதிபதியாக வந்திருந்தாலும் போர்க்குற்றதை மிகக் கடுமையாக மறுதலித்திருப்பார்." பிரெட்டிரிக்கா ஜான்ஸ் கேசில் இவர் அதை செய்துதான் அமெரிக்க நம்பிக்கையை இழந்தவர்) கூட்டமைப்பு ராஜதந்திரமாக இந்தியாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ பகைக்காததால் இருவருமே கூட்டமைப்பை தம்முடன் பேச்சுவார்த்தைக்கு என்று அழைக்கிறார்கள்.

ஒரு தடவை, 2009 பின்னர், கூட்டமைப்பு ஒரு மாதம் மன்மோகன் சிங்கை சந்டதிக்க டெல்கியில் நின்றும் அவர் நேரம் ஒத்துக்கவில்லை. அமெரிக்க அமைப்புகளும், ஊடகங்களும் இற்றை வரையும் கூட்டமைப்பை புலிகளின் Front End என்று கேலிதான் செய்து வந்தன. இப்போது எங்குமே நிலைமை மாறிவிட்டது.

ஆனால் நம்மில் சிலர் மாற விரும்பவில்லை. எனவே கூட்டமைப்பை எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கிறார்கள்.  :)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாலசந்திரன் உயிருடன் கிடைக்கவில்லை : பொன்சேகா

sarath-fonseka.jpgஇறுதி யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மகன் பாலந்திரன் என அடையாளப்படுத்தப்பட்ட யாரும் உயிருடன் பிடிபடவில்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த பாலசந்திரனின் மூன்று புகைப்படங்கள் தொடர்பில் எமது செய்திப்பிரிவு அவரிடம் வினவிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இறுதி யுத்தத்தல் சுமார் 450 சடலங்கள் வரையில் மீட்கப்பட்டன.

அவற்றை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனே அடையாளம் காட்டியதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த சடலங்களுடன் வேலுபிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் என்டனியின் சடலம் பிரதி அமைச்சரால் அடையாளப்படுத்தப்பட்டது.

எனினும் பாலசந்திரனின் சடலம் அவற்றுடன் காணப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த புகைப்படங்கள் உண்மையானது எனவும், பாலசந்திரன் மிகவும் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் செனல் 4 தொலைக்காட்சியின் புகைப்படவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

தோட்டத்தில் சந்தைக்கு பிடுங்கும் காய்கறிகளை தோட்டக்காரர் "இலாபம், இரண்டு, மூன்று, நான்கு....." என்று எண்ணும் ஒரு வழமை உள்ளது.

இப்போ "இலாபம், இரண்டு"

மானம்பூவின் இறுதிக்கட்டம் அண்மிக்கிறது. அனுமார் ஆட்டம் ஒய்ந்துவிட்டது(பிள்ளையான்) 

இப்போது பலரும் வாளையை சூழ்கிறார்கள். வாளைவெட்டு வெகு விரைவில். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

1. கூட்டமைப்பு மகிந்தாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தது என்றால் பின்னர் அதற்குள் கூட்டமைப்பு அமெரிக்காவும்,  இந்தியாவும் மட்டும் சொல்வதையும் கேட்டுச் செய்கிறது என்பது வராது. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய இந்த events' probabilities are not mutually exclusive. 

கூட்டமைப்பு சுயமாகச் சிந்தித்து எந்தவகையான முடிவுகளையும் எடுப்பதில்லை. எப்போதுமே பிற வல்லவர்கள் சொல்லுவதைத்தானே செய்து வருகின்றனர். எனவே கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைப்பதற்கு அவர்கள் இன்னமும் கடினமாகவும் வினைத்திறனுடனும் மக்கள் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலும் செயற்படவேண்டும்.

அடுத்ததாக கூட்டமைப்பு மகிந்தவை எதிர்த்தது என்று நான் குறிப்பிட்டது பொன்சேகாவை ஆதரித்த முடிவை சுட்டிக்காட்டத்தான். இவை இரண்டும் mutually exclusive. அதே நேரத்தில் கூட்டமைப்ப்பு அமெரிக்க, இந்திய ஆலோசனையுடன் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் மகிந்தவை எதிர்த்ததும் உண்மை என்பதால் இந்த events' probabilities are not mutually exclusive என்ற வாதம் சரிவராது.

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு சுயமாகச் சிந்தித்து எந்தவகையான முடிவுகளையும் எடுப்பதில்லை.

கூட்டமைப்பிடம் யார் எதை சொன்னார்கள், அதற்கு கூட்டமைப்பு என்ன முடிவை எடுத்தது என்றதை நேரடியாக சொல்லவராத வரைக்கும் இப்படியான பொதுவாக்கல் தந்துவங்கள் பொருள் இல்லாதவை.

கூட்டமைப்பும் தனக்குத்தான் ஆலோசகர்களை வைத்திருக்க உரித்துடையது. லொபி கம்பனிகள் இல்லாததால்தான் மேற்குநாடுகளுக்கு அரசியலை எடுத்துப் போக புலிகளால்  முடிந்திருக்கவில்லை.  மேலும் கூட்டமைப்புக்கும் உதவிக்கு உதவியாக ஒருவருக்கு ஒன்றை செய்து அவரிடம் உதவி பெற உரிமை உள்ளது. இது அரசியல் உலகில் ஒவ்வொரு கனமும் ஏற்படும் அரசியல் கூட்டுக்கள்.

இன்று, தான் செய்வது ராஜதந்திர போர் என்றுதான் கூட்டமைப்பு சொல்கிறது. கூட்டமைப்பு புலிகளின் Front End என்றும், புலிகளை பயங்கரவாதிகள் என்றும், தமிழர் எல்லாம் புலிகள் என்றும் கதிர்காமரும் சந்திரிக்காவும் வெற்றிகரமான பிரசாரம் செய்த பின், மிக கவனமான ஒரு ராஜதந்திர போரை கூட்டமைப்பு நடத்திவருகிறது.அரசியல் விளங்கியவர்களுக்கெல்லாம் இந்த விடயம் விளங்கும்

. அமெரிக்கா பொன்சேக்காவை நம்பி கூட்டமைப்பை அவருக்கு ஆதரவு அளிக்கச் சொன்னது. ஆனால் இன்று அமெரிக்கா பொன்சேக்காவுடன் கிட்டத்தட்ட எல்ல உறவுகளையும் முறித்துவிட்டது. பொன்சேக்காவுக்கு கீழான ஒரு உறவை மட்டும் கூட்டமைப்புக்கு கொடுத்த அமெரிக்கா இன்று கூட்டமைபை நேரடியாக பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கும் அளவுக்கு கூட்டமைப்பு தனது ராஜதந்திர முயற்சிகளை மேலெடுத்திருக்கிறது. இவ்வளவற்றையும் விள்ளங்கிக்கொள்ள முடியாவிட்டால், ராஜதந்திரம் என்ற சொல்லுக்கு பொருள் விளங்கிக்கொள்ள முடியாது. இதை விளங்கிக்கொண்டுவிட்டால் "கூட்டமைப்பால் எடுப்பார் கைபிள்ளையாக மட்டும்தான் ஆடமுடிகிறது" என்பது கூட்டமைபை எதிர்க்க வேண்டும் என்பதற்தாக சொல்லும் வார்த்தை. 

"அடுத்ததாக கூட்டமைப்பு மகிந்தவை எதிர்த்தது என்று நான் குறிப்பிட்டது":  இது அல்ல முதலில் சொன்ன வசனம். கூட்டமைப்பு "மகிந்தாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தது" என்றதுதான் சொல்ல பட்ட வசனம். இதன் பொருள் "சரியாக  நடக்கும்  மகிந்தாவை கூட்டமைப்பு துரோகத்தனமாக எதிர்க்கவேண்டும் என்பதற்க்காக எதிர்த்தது" என்பதாகும். அதை உண்மையில் சொல்ல வரவில்லை என்றால் பிழையை பிழை என்று ஏற்று விவாதத்தை சுருக்கமாக நிறுத்தலாம். ஆனால் சரித்து சரித்து நான் அதை சொல்லவில்லை இதைதான் சொன்னான் என்பது விட்ட பிழையை மூடி மறைப்பது.......   

யார் யார், தனியத் தனியாகவோ அல்லது இருவரையும் ஒன்றாக சேர்த்தொ, இந்த  கேடுகெட்ட கிட்லர் மகிந்தாவையும், பயங்கரவாதி முசோலினி பொன்சேக்காவையும் எதிர்ப்பவர்கள் எல்லோர் பின்னும் தமிழர் எல்லோரும் நிற்கவேண்டும். எனவே கூட்டமைப்பு பொன்சேக்காவை எதிர்க்காமல்  மகிந்தாவை எதிர்த்தால் அது பிழை அல்ல. மேலும் மகிந்தாவை பதவி நீக்க  கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு உதவுவதற்காக பொன்சேக்காவை ஆதரித்தால் அதில் பொன்சேக்கா திரும்ப தான் முள்ளிவாய்க்காலில் செய்தவற்றை செய்யமல் பார்த்துக்கொள்வது அமெரிக்காவின் கடமை. இதில் கூட்டமைப்பு பொன்சேக்காவுடன் நேராக சென்று ஒப்பந்தம் செய்யவில்லை அமெரிக்கா கேட்டுத்தான் செய்கிறது. பொன்சேக்காவை நம்பவில்லை. நம்புவது அமெரிக்கவைத்தான்.  இதில் கூட்டமைப்பு பொன்சேக்கவை நம்பிவிட்டது என்று வலிந்து ஒரு வாதாட்டதை வைப்பது கூட்டமைப்பை எதிர்ப்பதற்காக என்று எதிர்க்கும் செயல். 

இங்கே கவனிக்கத்தக்கதென்னவென்றால் புலிகள் சர்வதேசத்தை கேட்டு நடக்காததால் தோற்றார்கள் என்ற வாதத்தை வைப்போரே அதே பேனாவால், அதே கையால், கூட்டமைப்பு  "எப்போதுமே பிற வல்லவர்கள் சொல்லுவதைத்தானே செய்து வருகின்றனர்." எழுதி வைப்பதுதான். இது மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல் கூட்டமைப்பை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பது.

மெலியாரோ, வலியாரோ அமெரிக்கா இன்று இரண்டாவது தடவையாக பிரேரணையை கொண்டுவருகிறது. கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழர் எல்லோரும் இந்த வலியாரை கேட்டு நடப்போமாக. பிரேரணையில் மாற்றம் வேண்டுமாயின் அமெரிக்காவுடன் இணைந்து செயல்ப்பட்டு அமெரிக்காவிடம் மேலும் இறுக்கமான பிரேரணையை கொண்டுவரச் சொல்லி கேட்போமாக. மகிந்தாவை எமக்காகவென்று கூட்டமைப்பு எதிர்க்கவில்லையே வலியோருக்காகத்தானே எதிர்த்தது என்று கூட்டமைப்பில் பிழை பிடியாது இருப்போமாக. இல்லையேல் அது கூட்டமைபை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தாகும்.

அடுத்ததாக கூட்டமைப்பு மகிந்தவை எதிர்த்தது என்று நான் குறிப்பிட்டது பொன்சேகாவை ஆதரித்த முடிவை சுட்டிக்காட்டத்தான். இவை இரண்டும் mutually exclusive. அதே நேரத்தில் கூட்டமைப்ப்பு அமெரிக்க, இந்திய ஆலோசனையுடன் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் மகிந்தவை எதிர்த்ததும் உண்மை என்பதால் இந்த events' probabilities are not mutually exclusive என்ற வாதம் சரிவராது.
 
முதலில் நான் கருத்து # 20ல் எழுதியதை வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டும். அதை திரும்ப எழுதுவதால் முன்னேற்றம் வர இடமில்லை. இந்தியா கூட்டமைப்பிடம் பொன்சேக்காவை ஆதரிக்கும் படி கேட்ட அந்த செய்தியை முதலில் இங்கே பதியவும். அதை படித்துவிட்டுவிட்டு எனது கருத்து # 20யை திருத்த வேண்டுமாயின் திருத்திக்கொள்கிறேன். அதே நேரம் அமெரிக்கா, மகிந்தாவை 13ம் திருத்தைதை மட்டும் அமூலாக்கினால் இலங்கைக்கு எதிராக வரும் ஐ,நா பிரேரணையை இந்தியா எதிர்ப்பதை தான் எற்றுகொள்ளத்தாயாரக இருப்பத்தாக வெளிவந்த செய்தியும் இருந்தால் காட்டவும்.  அதன் பின்னர் இந்த வசனம் எவ்வளவு தப்பானது என்பதை பற்றி விவாதிப்போம்.

இந்தச் சொற்காட்டிற்குள் எனக்கு வழி தெரியவில்லை என்பது உண்மைதான் :)

மேலும் துரோகம் என்ற வார்த்தையை வெறும் உணர்ச்சிக்காகப் பயன்படுத்தும் உங்கள் வியாக்கியானத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நான் ஒருபோதும் கூட்டமைப்பு துரோகம் செய்தது என்று சொல்லவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை.

பல்வேறு அரசியல் கட்டுரைகளைப் படித்துத்தான் ஒரு நிலைப்பாட்டுக்கு ஒருவர் வரமுடியும். அதனால் நீங்கள் ஒரு நிலைப்பாட்டிலும் நான் ஒரு நிலைப்பாட்டிலும் இருக்கின்றோம். எனவே எனக்குப் சரியாகத் தெரிவது உங்களுக்குப் பிழையாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை. அத்தோடு நீங்களோ நானோ விவாதத்தில் வெல்வது வெல்லுபவருக்கு சிறு இன்பத்தைத் தரலாம். ஆனால் தமிழ் மக்களின் அரசியலுக்கு ஐந்து சதத்திற்கும் பிரயோசனமற்றது! :icon_mrgreen:

மீண்டும் சொல்வது இதுதான்..

கூட்டமைப்ப்பு அமெரிக்க, இந்திய ஆலோசனையுடன் கடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்தவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரிக்குமாறு தமிழ் மக்களைக் கோரியது அவர்களுக்கு சுயமாக அரசியல் செய்ய இன்னமும் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இதுவரை ஒரு திடமான கொள்கைகளையும் முன்வைக்காமல் குழப்பமான நிலையில் இருக்கும் கூட்டமைப்பு எடுப்பார் கைப்பிள்ளைதான்.

எனவே கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைப்பதற்கு அவர்கள் இன்னமும் கடினமாகவும் வினைத்திறனுடனும் மக்கள் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலும் செயற்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.