Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத் தூதரகம் முற்றுகை: ஸ்டாலின், வீரமணி உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது!

Featured Replies

தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் இன்று சென்னையில் உள்ள சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. தூதரகத்தை முற்றுகையிட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திருமாவளவன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகனை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதை கண்டித்தும், சிங்கள இனவாத தலைவர் ராஜபக்ச மீது போர் குற்றங்களுக்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் சென்னையில் இன்று சிங்களத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
 
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 9 மணிக்கு கருப்பு சட்டை அணிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறிய மேடையில் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இருந்தனர்.
 
 
முதல் கட்டமாக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தூதரகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அதன்பின், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் தூதரகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, ராஜபக்சவை கண்டித்து கோஷம் போட்டனர். ராஜபக்சவின் உருவ பொம்மையை கொளுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின், வீரமணி, திருமாவளவன் மற்றும் 5000க்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அனைவரையும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிங்களத் தூதரகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியா கம்பனி தானைத் தலைவரின் கண்ணுக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டியது. இப்போது ஈழ விவகாரத்தில் இந்தியா சிக்கும் வாய்ப்பை அறிந்ததும் கழகத்தலைவர் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டார். :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

stalin-05-3-2013-002.jpg

 

stalin-05-3-2013-003.jpg

 

நன்றி: நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை முள்ளிவாய்க்காலில்.. 100,000 பேர் இறக்க முன்னமே செய்திருந்தால் இப்போ எவ்வளவு நல்லா இருந்திருக்கும். புலிகள்.. மக்கள்.. வினையமாகக் கேட்ட போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லையே.

 

எதுஎப்படியோ.. தி மு க தலைமைக்குள் இல்லா விட்டாலும்.. சாதாரண தொண்டனுக்குள் தமிழீழ உணர்வும்.. தம்பியின் மீதான பாசமும்.. உணர்வும்.. புலிக்கொடி மீதான பற்றுதலும்.. இன்னும் சாகாமல் உள்ளமை மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிஸே! கைது செய்! இல்லாட்டிதான் இலங்கை தூதரகம் நோக்கி போவோம்!- மு.க.ஸ்டாலின் அடித்த கெஞ்சல்!

 

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக
அறிவிக்கக் கோரி திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பின் இலங்கை தூதரகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடப் போகாமலேயே
வள்ளுவர் கோட்டம் முன்பாகவே பொலிஸார் கைது செய்தே ஆக வேண்டும் என்று திமுக
பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக் பிடித்து கோரிக்கை விடுத்தார்.


பொதுவாக இலங்கை தூதரகரத்தை முற்றுகையிடுவதாக அரசியல் கட்சிகள்
அறிவிக்கும் போது கட்சித் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று
முழக்கமிடுவர். பின்பு தொண்டர்கள் இலங்கை தூதரகத்தை நோக்கி பேரணியாக
செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட தொலைவில் பொலிஸார் தடுத்து நிறுத்துவர்.
பினன்ர் கைது செய்து வானில் ஏற்றி அழைத்துச் செல்வார்கள்.


ஆனால் தமிழ் அமைப்புகள், இயக்கங்கள் போராட்டம் நடத்தினால் பொலிஸார்
தடுப்பையும் மீறி இலங்கை தூதரகம் நோக்கி முற்றுகையிட்டே ஆக வேண்டும் என்ற
நோக்கத்துடன் முன்னேற முயற்சிப்பார்கள்.. தள்ளு முள்ளு.. மல்லுக் கட்டு
நடைபெறும்..சில நேரங்களில் இரத்த களரியும் ஏற்படும்.


ஆனால் திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பு இன்று நடத்திய 'இலங்கை தூதரக' முற்றுகைப் போராட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா?.


நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் இந்த போராட்டத்துக்காக பல்லாயிரம் பேர் கூடி இருந்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்தான்! குறைந்தது பத்தாயிரம் பேர் என்பது மிகையல்ல..
அப்படி ஒரு கூட்டம்! .


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப.
வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன்
உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிராக ஆவேச
முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் போராட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது. இந்த முழக்கங்கள் ஒரு 10 நிமிடம் நீடித்தன. பின்னர்
'மைக்' பிடித்த திமுக நிர்வாகி ஒருவர், "முக்கிய அறிவிப்பு... இங்கு
கூடியிருக்கும் பத்தாயிரம் பேரில் தென் சென்னை மாவட்ட கழகத்தினர் (திமுக)
முதலில் பொலிஸ் வாகனத்தில் ஏற வேண்டும்.


அவர்கள் அனைவரும் வானில் ஏற்றப்பட்ட பின்னரே வடசென்னை மாவட்ட
கழகத்தினரும் மற்றவர்களும் பொலிஸார் வாகனத்தில் ஏற வேண்டும்'' என்று
அறிவித்தார். மீண்டும் முழக்கம் ஆரம்பித்தது.


அப்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக்கை பிடித்து ஒரு 'முக்கிய' அறிவிப்பை வெளியிட்டார். '


நண்பர்களே! இங்கு கூடியிருக்கும் நம்மை கைது செய்ய காவல்துறையிடம்
போதுமான வாகனங்கள் இல்லை என்று பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்... (பலத்த
கைதட்டல்)... இங்கே நிற்கும் எங்களை நீங்கள் கைது செய்யாவிட்டால் நாங்கள்
அப்படியே இலங்கை தூதரகத்தை நோக்கி நடக்க வேண்டியதிருக்கும்" என்று திடீர்
என அறிவித்தது பத்திரிகையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பொதுவாக முற்றுகைப் போராட்டம் நடத்துவர்கள் ஆகக் குறைந்த பட்சம் இலங்கை
தூதரகம் நோக்கி சில அடிகளாவது நகர்வது வழக்கம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான
டெசோ அமைப்பினரோ வள்ளுவர் கோட்டம் அருகேதான் நாங்கள் நிற்போம். எங்களை
இங்கேயே கைது செய்துவிடுங்கள்..


இல்லையெனில்தான் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக 'நகர்ந்து' செல்வோம் என்று கூறியது பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


கடைசியாக நடந்தது என்னவெனில் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று பொலிஸார்
அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரையும் 'வள்ளுவர் கோட்டத்திலேயே'
இருக்க சொல்லிவிட்டது.


வழக்கம் போல ஊடகங்களும் இலங்கை தூதரகத்தை மு.க. ஸ்டாலின் தலைமையில்
முற்றுகையிட "சென்ற" (நின்ற இடத்தைவிட்டு நகரவே இல்லை!)
பல்லாயிரக்கணக்கானோர் பொலிஸாரால் 'தடுத்து' (!) நிறுத்தி கைது செய்யப்பட்டு
"திருமண மண்டபங்களில்" (வள்ளுவர் கோட்டம் எப்ப கல்யாணம் மண்ட்பமானது?)
தங்க வைக்கப்பட்டனர் என்று செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.


இது இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் அல்ல.. "வள்ளுவர் கோட்ட
முற்றுகை" போராட்டம் என்று மூத்த செய்தியாளர் ஒருவர் கமெண்ட் அடித்தது
இன்னமும் காதில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

 

.................

நன்றி, facebook

கருணாநிதி ஈழத்தமிழ்ர் போராட்டன் முன்னேறுவதால் அதை ஜெயலலிதா-கருணாநிதி போராட்டமாக மாற்ற முயல்கிறார். கருணாநிதி தமிழ் நாட்டு பொது உடமைகளை சேதப்படடுத்தாமல் உள்ளுர் அரியல் செய்ய வேண்டும்.

ஸ்ராலின் தந்தை பதவியில் இருக்கும் போது இப்படி செய்திருந்தால் ஏதாவது நடந்திருக்கலாம் இப்போது செய்யும் போராட்டம் எதோ உள் நோக்கம் கொண்டதோ என்று யோசிக்கவேண்டி உள்ளது 

ஜெனிவா மகாநாடு முடிய அவனவன் போய் மானாட மயிலாட பார்த்துவிட்டு படுத்துடுவான். பாவம் ஈழத்தமிழர்.

முன்பு தமிழக அரசியல்வாதிகளுக்கு கோமாளிகள் என்று சரத்பொன்சேகா பட்டமளித்தார். அதை பொறுக்கமுடியாத ஈழத்து அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் ரத்தம் காயமுன்னர் சரத்பொன்சேகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்து கோமாளிப்பட்டத்தை தமதாக்கிக்கொண்டனர். இவ்வாறான எதிரப்புப் போராட்டங்களில் உணர்வுள்ளவர்கள் இல்லாமல் இல்லை ஆனால் அவ்வாறான உணர்வுகள் தொன்றுதொட்டு கட்சித்தலமைகளின் சுயநலன்களுக்காக பயன்படுகின்றதே அன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பலனையும் அளிப்பதில்லை. ஈழத்தில் கடசித் தமிழன் இருக்கும் வரை தமிழக அரசியல் வாதிகள் அவனை வைத்து பிழைப்பு நடத்துவார்களே அன்றி அவனை காப்பாற்ற மாட்டார்கள். புலம்பெயர் தமிழனும் அப்படியே. மக்கள் அவலங்கள் மாவீரர் தினங்கள் எல்லாவற்றையும் வைத்து பிழைப்பு நடத்துவார்களே அன்றி மக்கள் விடுதலை நோக்கிய முனைவு எப்போதும் இருந்ததில்லை. எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் எவரும் கண்டுகொள்வதில்லை. என்னும் சொல்லப்போனால் இன்றைய துள்ளல் எல்லாம் சுயமாக உணர்வுடன் எழுந்ததில்லை மாறாக சிங்கள சிப்பாய்கள் எடுத்த படங்களும் பிரித்தானிய தொலைக்காட்சி அதை வெளியிட்டதும் தான் இத் துள்ளலுக்கு காரணம். ஒருவன் இன்னாள் ஒடுக்குமுறையாளன் மற்றவன் முன்னாள் ஒடுக்குமுறையாளன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா மகாநாடு முடிய அவனவன் போய் மானாட மயிலாட பார்த்துவிட்டு படுத்துடுவான். பாவம் ஈழத்தமிழர்.

 

ஏனுங்க அர்ஜூன், உங்களுக்கு எது எடுத்தாலும் சந்தேகம்தானா? பல வருடம் கழித்து தமிழகத்தில் எழுச்சி மறுபிறவி எடுத்திருக்கிறது.. உங்களுக்கு பொறுக்கவில்லையா? எங்கள் குற்றத்தை விடுங்கள், நீங்கள் வலியை உணர்ந்தவர்கள், இத்தனை அழிவிற்குப் பிறகும் ஒன்று சேர முன்வர மாட்டீர்கள்? இப்படி எத்தனை நாட்களுக்கு நக்கல் விட்டுக்கொண்டே இருப்பீர்கள்?

 

ஏனுங்க அர்ஜூன், உங்களுக்கு எது எடுத்தாலும் சந்தேகம்தானா? பல வருடம் கழித்து தமிழகத்தில் எழுச்சி மறுபிறவி எடுத்திருக்கிறது.. உங்களுக்கு பொறுக்கவில்லையா? எங்கள் குற்றத்தை விடுங்கள், நீங்கள் வலியை உணர்ந்தவர்கள், இத்தனை அழிவிற்குப் பிறகும் ஒன்று சேர முன்வர மாட்டீர்கள்? இப்படி எத்தனை நாட்களுக்கு நக்கல் விட்டுக்கொண்டே இருப்பீர்கள்?

 

சந்தேகமில்லை உண்மையுடன் கூடிய யதார்த்தம் .

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பார்கள் ,நீங்கள் தமிழகத்தில் மீண்டும் எழுச்சி என்கின்றீர்கள் .இந்த மீண்டும் எழுச்சி என்பது ஒன்றல்ல இரண்டல்ல பலதடவைகள் வந்து போனவைதான்.(எம்மவரும் இதே நிலைப்பாடுதான்).

முள்ளிவாய்க்கால் அழிவும் அப்போ எம்மவர் எடுத்த நிலைப்பாடுகளும் முத்துக்குமார் தீ குளிப்பும் தமிழக தலைமைகளும் மக்களை திசை திருப்ப  எடுத்த முடிவுகளும் இன்னமும் கண் முன்னே நிழலாடுகின்றன .நாங்கள் எல்லோரும் அரசியல் செய்யத்தொடங்கி பல வருடங்காகிவிட்டது .

யாழில் நீங்களும் நானும் இன்னமும் இரண்டு ,மூன்று  வருடங்கள் தொடர்ந்து இருந்தால் யார் சொல்வது சரி எனபார்ப்போம் .யாரையும் அவநம்பிக்கைக்கு உள்ளாக விரும்பவில்லை ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சரியான தீர்வு வரும் என்பது எட்டாகனியாகிவிட்டது .சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அவற்றை தவறவிட்டால் மறுபடி சந்தர்ப்பம் வரமட்டும் பார்த்திருக்க வேண்டும் அது எமது நாட்டில் இப்போதைக்கு இல்லை. 

முன்பு தமிழக அரசியல்வாதிகளுக்கு கோமாளிகள் என்று சரத்பொன்சேகா பட்டமளித்தார். அதை பொறுக்கமுடியாத ஈழத்து அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் ரத்தம் காயமுன்னர் சரத்பொன்சேகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்து கோமாளிப்பட்டத்தை தமதாக்கிக்கொண்டனர்.

அது சம்பந்தரின் ராஜதந்திரம். மிக பயங்கர எதிரியை அண்டிக்கெடுப்பதுதான் சரி. இனி இவர் எப்படி சோப்பு போட்டுக்குளிச்சலும் தமிழருடன் தேர்தலில் நின்றவர் என்பதை இனவெறிச் சிங்களவர் மறக்கமாட்டார்கள். தேரத்லில் முன்னணியில் நின்ற பொன்சேக்காவை விழுத்தவே சம்பந்தர் இணந்தவர்.

 

இவ்வாறான எதிரப்புப் போராட்டங்களில் உணர்வுள்ளவர்கள் இல்லாமல் இல்லை ஆனால் அவ்வாறான உணர்வுகள் தொன்றுதொட்டு கட்சித்தலமைகளின் சுயநலன்களுக்காக பயன்படுகின்றதே அன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பலனையும் அளிப்பதில்லை. ஈழத்தில் கடசித் தமிழன் இருக்கும் வரை தமிழக அரசியல் வாதிகள் அவனை வைத்து பிழைப்பு நடத்துவார்களே அன்றி அவனை காப்பாற்ற மாட்டார்கள்.

போராடங்களில் பங்கு பற்றும் பொதுமக்கள் யாரையும் "சிலருக்கு மட்டும் உணர்வு இருக்கு என்பது போல " என்று கூறி கொச்சை படுத்த முடியாது. அது பொதுமக்களை தரக்குறைவாக கையாளும் அரசியல் எழுத்து.

 

"தமிழ் நாட்டில் ஏன் மக்கள் வோட்டு போடுகிறார்கள்?" என்று ஒரு கேள்வியை கேட்டு விட்டு "அது ஈழத்தில் தமிழர் பிரச்சனை இருப்பதால்" என்று யாரவாது தன்னைத்தான் அரசியல் ஆய்வாளராக காட்டிகொள்ள முயலும் ஒருவர் எழுதலாம். அதில் உண்மை இல்லை. ஜெயலலிதாவோ, அல்லது கருணாநிதியோ பதிவிக்கு வரும் காரணிகளின் உண்மையான அரசியல் பின்னணிகளின்பால் தான் இது ஆராயப்படவேண்டும்.

 

இதில் மிக பலமான வாதாட்ட கருத்தை திரும்ப திரும்ப யாழில் எழுத்துபவர் அரிசுன். ஆனால் அவர் அதை இந்த முறை அதை எழுதாமல், "கருணாநிதி இந்த ஈழ ஆதரவு முயற்சிகளை அடுத்த வருடம் மத்திய தேர்தல் வரை தொடர்ந்து ஈழத்தை வைத்து தேர்தல் வெல்ல முயலமாட்டர்" என்பது போல பொருள் பட இந்த போராட்டங்கள் மார்ச்சு வரைதான் நீடிக்கும் என்று எழுத்தியிருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து எழுதுவது ஈழ விவகாரத்தை கையில் எடுக்கும் சீமான், நெடுமாறன் போன்றவர்களை தமிழ் நாடு தமிழ் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்பதையே. அர்ச்சினுடன் சேர்த்து கருத்து எழுத போகும் போது இதை விளங்கி கொள்ள மறப்பது எழுத்தும் தர்க்க நியாங்களை தவிடு பொடி ஆக்குகிறது.  மேலே சொல்வது போல் தமிழக அரசியல்வாதிகளால் ஈழப்பிரச்சனையை வைத்து பிழைப்பு மட்டும் நன்றாக நடத்த முடிகிறாதாயின் வைகோ, நெடுமாறன் தமிழ் நாட்டு அசரியலில் மேலே வரமுடியாது என அர்ச்சுன் எழுத்தும் எதிர்வு கூறலின் காரணம் என்ன?. மேலும் கருணாநிதி ஏன் ஈழத்தமிழருக்கு எதிராக சென்று  தன்னை கோமாளிகள் என அழைத்த இலங்கை அரசிடம் கனிமொழியை அனுப்பினார். இது தெளிவாக ஈழ பிரச்சனைக்கு எதிராக போவதால்தான் தான் பிழைப்பு அரசியலை நடத்தமுடியும் என்று கருணாநிதி நம்பியதால் அல்லவா அவர் அப்படி செய்தார் என் சொல்கிறது.

 

புலம்பெயர் தமிழனும் அப்படியே. மக்கள் அவலங்கள் மாவீரர் தினங்கள் எல்லாவற்றையும் வைத்து பிழைப்பு நடத்துவார்களே அன்றி மக்கள் விடுதலை நோக்கிய முனைவு எப்போதும் இருந்ததில்லை.

சொல்ல எதுவும் இல்லாத போது புலம் பெயர் மக்கள் "பிழைப்பு நடத்துகிறார்கள்" என்பது மட்டும்தான் எழுத வருகிறது. இது "தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள்" எனபதற்கு பின்னால் வரும் போது இங்கும் எத்தயோ

கூற வருவதாக காட்டப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் பிழைப்பாக காட்டப்பட்டது தேர்தலையே. இதனால் புலம் பெயர் மக்களின் பிழைப்பற்றி விரிவாக எழுத முயலாமை அது வெற்று வாக்கியம் என்பதைத்தான் காட்டும். அது பிழைப்பு மட்டும்தான் என்றால் இலங்கை அரசு புலம் பெயர் மக்களுடன் இணைதிருக்குமேயன்றி அவர்களை எதிந்த்து தனக்கு வரத்தக்க பங்கை நாசம் செய்த்திருக்காது. இதை தெளிவாக முஸ்லீம் தலைமைகள் அரவணைத்துக்கொண்டுதான் கோத்தா முஸ்லீம்களை ஒடுக்க பொது பல சேனையை ஆரம்பித்தார் என்பதில் இருந்து அறிந்த்து கொள்ளலாம்.

 

 

 எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் எவரும் கண்டுகொள்வதில்லை. என்னும் சொல்லப்போனால் இன்றைய துள்ளல் எல்லாம் சுயமாக உணர்வுடன் எழுந்ததில்லை மாறாக சிங்கள சிப்பாய்கள் எடுத்த படங்களும் பிரித்தானிய தொலைக்காட்சி அதை வெளியிட்டதும் தான் இத் துள்ளலுக்கு காரணம். ஒருவன் இன்னாள் ஒடுக்குமுறையாளன் மற்றவன் முன்னாள் ஒடுக்குமுறையாளன்.

 

சனெல்-4 ஆரம்பத்தில் வெளிவிட்ட ஆதரங்களை பொய் மறுத்து Lies Agreed Upon தயாரித்த அரசு இன்று அவை இராணுவத்திற்குள்ளால் வெளிவருவததாக வெக்கம் கெட்டதனமாக சொல்லித் தப்ப முயல்கிறது.

 

போனமுறைரை தமிழர் செய்த சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை தான் பல மில்லியன்களை செலவளித்து குத்திகள் குட்டிகளை வைத்து நடாத்திய அடாவடி கொண்டாட்டங்கள் நிகர்க்க முடியாமல் போய்விட்டத்தால் அரசு தனது தந்திரத்தை இந்த முறை மாற்றுகிறது. இதனால் இந்த ஆர்பாடங்களினால் பலன் ஏதும் வராது என்று கூறிவிட்டு 15ம் திகதி மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றுக்குக்காக தனது பல ஐரோப்பிய தூதுவராலயங்களளை இணைத்து பல மில்லியன் கணக்கில் இறைக்க ஆரம்பித்துவிட்டது.. 

 

"ஆர்ப்பாட்டத்தை எவரும் கண்டு கொள்வதிலை"  என்ற கருத்தை இலங்கையில் இருந்துகொண்டு எழுத முடியும். இப்படி எழுதுவதுதான் இலங்கையின் தலதா மாளிகை ராஜதந்திரத்தின் ஒரு பாகம். 65 ஆண்டுகளாக நடந்த் ஆர்ப்பாட்டங்களை இலங்கையின் சர்வாதிகார அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகி இன்று இலங்கை அரசை ஐ.நாவுக்கு இழுத்து வந்து அவஸ்த்தை பட வைத்திருக்கிரார்கள். 

 

மேற்கு நாடுகளில் கவனத்தை ஈர்க்க ஒரே ஒரு வழி ஆர்ப்பாட்டமாகும். அவர்கள் அதை ஒரு தடவை தட்டிக்கழிக்கலாம். ஆனல் மறுதடவை கண்டுகொள்ளாவிட்டால் அதற்கான பலனை ஜனநாயக அரசுகள் அனுபவித்த்த்தானாக வேண்டும்.

 

ஒரு மில்லியனுக்கு சமனாக தமிழருக்கு மேற்கு நாடுகள் அகதி அந்தஸ்து கொடுத்து விட்டார்கள். இதை இலங்கை அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது. இந்த தமிழரின் போராட்டங்களின் பலனால் இலங்கையில் நடந்த கொலைகளை பற்றி ஐ.நா வின் மனித உரிமை ஆணையத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பிரமுகர்களின் விசாரணையை இலங்கை அரசு லஞ்சமும், லொபியும் கொடுத்து நிர்மூலமாக்கியது. அன்று நடந்த ஆர்ப்பாட்டங்களினால் சனெல்-4 போன்றவை இலங்கை நடந்த போர்க்குற்றங்களை வன்னி சென்றும் ஆவணப்படுத்த தொடங்கியிருந்தார்கள். இன்று சனெல்-4 ஆதாரங்களை இலங்கை அரசு அப்படி நிர்மூலமாக்கவிடாமல் பிரசுரிக்கிறது. இதனால் பாலசந்திரனின் கொலை, அன்று நடந்த செஞ்சோலை, அக்சன் பாம், திருகோணமலை மாணவர்கள் கொலைகள் போல மூடி மறைக்கப்படவில்லை.  இதில் கவனிக்க வேண்டியது, ஆதரங்களை பிரசுரிப்பது மட்டும் தான் சனெல்-4 செய்கிறது. இதை வெளியே கொண்டுவந்து சேர்க்க காரணமானவர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்து வைப்பவர்களே.

 

இந்த உண்மைகளை இலங்கை மூடி மறைக்கிறது. எனவே இந்த ஆர்ப்பாடங்களை திரும்ப அடக்கிவிடலாம் என்று நினைக்கிறது. இதை சர்வதேச பிரமுகர் விசாரணை போன்றதாக்க இ்லங்கை மனப்பால் குடிக்கிறது. இதற்கு உதவியாக இலங்கையில் ஒரு பிரச்சாரத்தை முடுக்கியிருக்கிறது. ஆதாவது பொது மக்களை வந்து எந்த இராணுவ அதிகாரிகள் சனெல்-4 க்கு ஆதாரங்கள் கொடுக்கிறார்கள் என்தை கண்டு பிடித்து தமக்கு தரசொல்லி கேட்கிறார்கள். இந்த அறிவிப்பை கேட்டவுடன் புலம் பெயர் மக்கள் இனி சனெல்-4 ஆல் எதுவும் வெளிவிட முடியாமல் போகும் என்று நினைப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்த நினவு எழுவதை தூண்டி, உறுதிப்படுத்த தனது பிரச்சசா பீரங்கிகளுக்கு "இராணுவம் கொடுத்ததை தான் சனெல் - 4 வெளிவிடுகிறது . இனி சனெல்-4 க்கு அப்படி ஒன்றும் வராது. ஆகவே இனி துள்ளக் கூடாது" என்று புலம் பெயர் மக்களுக்கு எச்சரிக்கை விட சொல்லி ஆணை அனுப்புகிறது.  இப்படி ஒரு பரிதாபக்கரையில் இலங்கை அரசு இறங்கியிருப்பது அரசின் தலதா மாளிகை ராஜதந்திரம் அதன் அதி உச்சத்திற்கு சென்று இப்போது சரிந்து விழுந்து கொண்டிருப்பதைதான் காட்டுகிறது.  இனித்தன்னும் புலம் பெயர் மக்களின் ஆர்ப்பாட்டங்களை அசட்டை செய்யாமல் செயலில் இறங்குமா என்றால் அது "மூடனும் மந்தியும் கொண்டமை விடா நிலைதான்".

அது சம்பந்தரின் ராஜதந்திரம். மிக பயங்கர எதிரியை அண்டிக்கெடுப்பதுதான் சரி. இனி இவர் எப்படி சோப்பு போட்டுக்குளிச்சலும் தமிழருடன் தேர்தலில் நின்றவர் என்பதை இனவெறிச் சிங்களவர் மறக்கமாட்டார்கள். தேரத்லில் முன்னணியில் நின்ற பொன்சேக்காவை விழுத்தவே சம்பந்தர் இணந்தவர்.

 

ஓ இதுதான் ராஜதந்திரமா?

 

அதாவது பென்சேகாவுடன் கூட்டுசேர்ந்து தாமும் சேர்ந்து பென்சேகவையும் தோற்கடித்து மகிந்த கோத்தாவை வெல்லவைத்த ராஜதந்திரம் !

 

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள். ராஜதந்திரப்போர் தொடரட்டும் ஈழம் மலரட்டும்.

அது விளங்கி இருப்பது நன்மைக்குத்தான். நல்ல நிறைந்த மனம் ஒன்றால் வாழ்த்தப்பட்டிருக்கும் போது இனி தமிழ் ஈழத்துக்ககாக யாரும் ஐ.நா முன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. அது தானாக வீடு தேடி வரும்.

 

கருணாநிதி கூட்டத்தை வைத்து வை,கோ, நெடுமாறன், சீமான் மீதும் தத்துவம் எழுதிவிடலாம் என்பது தெரிந்திருப்பவர்களுக்கு  ஏன் கூட்டமைப்பின் ராஜதந்திரத்தையும் ஒரு தடவை விளங்கவைக்க முயலக்கூடாது என்று ஒருதடவை நினைத்தேன்

 

சில புண்ணுக்கு புழுதி தானே நல்ல மருந்து. அவ்வளவுதான்.

 

கருணாநிதியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் போது பொன்சேக்கா கருணாநிதியைதான் கோமாளி என்று கேலி செய்திருந்ததை விளங்க கொஞ்சம் சிக்கல் இருந்தது போலிருந்தது. அதை மூலத்தின் வசனப்பிரோயகத்தில் வைத்து பொன்சேக்கா  தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று அழைத்ததாக காட்ட முயன்றதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர ஒருவரும் இல்லை என்பதால் 146,000 தமிழ் மக்களை கொன்ற அரசை எதிர்க்க  ஜனாதிபதி தேர்தலில் தனியாக நின்றிருக்க வேண்டும் என்றும் பொருள் வைத்து எழுத்தியபோது அரசியல் எது மட்டும் விளங்கும் என்பது சற்று சந்தேகமாக இருந்தது.

 

மகிந்தாவை கூட்டமைப்பு வெல்லவைத்தது கவலை மாதிரிக்காட்டிகொள்ளவதால்  புதிதாக தெரியப்படுத்த ஒன்றும் இல்லை. ஒருவேளை, மகிந்தாவின் ஆதரவாளர்கள், தாங்கள் 146,000 தமிழர்களை கொன்று ஈட்டிய வெற்றியை கூட்டமைப்பு தட்டிப் பறிக்க முயல்வதாக நினத்து அதை வெளியே சொல்ல முடியாமல் விக்குகிறார்களோ தெரியவில்லை. அது மட்டுமல்ல அடுத்த ராஜதந்திரத்தில் கூட்டமைப்பு தெரிவுக்கு குழுவுக்கு போகாமல் மேற்குநாடுகளை வைத்து அரசர் ஆட்சிக்கும் முடிவு கட்டுகிறது.

 

அப்போது வாழ்க தலதாமாளிகை ராஜதந்திரம்!.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

stalin-532013-150.jpg

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பின் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடப் போகாமலேயே வள்ளுவர் கோட்டம் முன்பாகவே போலீஸார் கைது செய்தே ஆக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக் பிடித்து கோரிக்கை விடுத்தார்.

  

பொதுவாக இலங்கை தூதரகரத்தை முற்றுகையிடுவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் போது கட்சித் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று முழக்கமிடுவர். பின்பு தொண்டர்கள் இலங்கை தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்துவர். பின்னர் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் செல்வார்கள். ஆனால் தமிழ் அமைப்புகள், இயக்கங்கள் போராட்டம் நடத்தினால் போலீசார் தடுப்பையும் மீறி இலங்கை தூதரகம் நோக்கி முற்றுகையிட்டே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னேற முயற்சிப்பார்கள்.. தள்ளு முள்ளு.. மல்லுக் கட்டு நடைபெறும்..சில நேரங்களில் ரத்த களறியும் ஏற்படும்.

 

ஆனால் திமுக தலைமையிலான டெசோ அமைப்பு இன்று நடத்திய இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா? நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டத்துக்காக பல்லாயிரம் பேர் கூடி இருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம்தான்! குறைந்தது பத்தாயிரம் பேர் என்பது மிகையல்ல.. அப்படி ஒரு கூட்டம்!

 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த முழக்கங்கள் ஒரு 10 நிமிடம் நீடித்தன.

 

பின்னர் மைக் பிடித்த திமுக நிர்வாகி ஒருவர், முக்கிய அறிவிப்பு... இங்கு கூடியிருக்கும் பத்தாயிரம் பேரில் தென் சென்னை மாவட்ட கழகத்தினர் (திமுக) முதலில் போலீஸ் வாகனத்தில் ஏற வேண்டும். அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்ட பின்னரே வடசென்னை மாவட்ட கழகத்தினரும் மற்றவர்களும் போலீசார் வாகனத்தில் ஏற வேண்டும் என்று அறிவித்தார். மீண்டும் முழக்கம் ஆரம்பித்தது. அப்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக்கை பிடித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

நண்பர்களே! இங்கு கூடியிருக்கும் நம்மை கைது செய்ய காவல்துறையிடம் போதுமான வாகனங்கள் இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்... (பலத்த கைதட்டல்)... இங்கே நிற்கும் எங்களை நீங்கள் கைது செய்யாவிட்டால் நாங்கள் அப்படியே இலங்கை தூதரகத்தை நோக்கி நடக்க வேண்டியதிருக்கும் என்று திடீர் என அறிவித்தது பத்திரிகையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

பொதுவாக முற்றுகைப் போராட்டம் நடத்துவர்கள் ஆகக் குறைந்தபட்சம் இலங்கை தூதரகம் நோக்கி சில அடிகளாவது நகர்வது வழக்கம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான டெசோ அமைப்பினரோ வள்ளுவர் கோட்டம் அருகேதான் நாங்கள் நிற்போம். எங்களை இங்கேயே கைது செய்துவிடுங்கள்.. இல்லையெனில்தான் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக நகர்ந்து செல்வோம் என்று கூறியது பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

கடைசியாக நடந்தது என்னவெனில் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று போலீசார் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரையும் வள்ளுவர் கோட்டத்திலேயே இருக்க சொல்லிவிட்டது. வழக்கம் போல ஊடகங்களும் இலங்கை தூதரகத்தை மு.க. ஸ்டாலின் தலைமையில் முற்றுகையிட சென்ற (நின்ற இடத்தைவிட்டு நகரவே இல்லை!) பல்லாயிரக்கணக்கானோர் போலீசாரால் தடுத்து (!) நிறுத்தி கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் (வள்ளுவர் கோட்டம் எப்ப கல்யாணம் மண்டபமானது?) தங்க வைக்கப்பட்டனர் என்று செய்தியை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

 

முற்றுகைப் போராட்டம் நடத்தி கைது(!) செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் போராட்டம் போலீசாரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

 

1971-ல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட அன்னை இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்,

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77391&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர்தான் தளபதி... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யத் துடிக்கும் எங்கள் ரத்த உறவுகளின்

உணர்வுகளை அரசியலாக்கும் கட்சித் தலைமைகள்

கண்டிக்கப்படவேண்டியவர்கள்  தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

கருணா என்ன பெயிண்ட் அடிச்சாலும் சரி கருணாவின் மீது படிந்த ஈழத்தின் ரத்தக்கறை மறையாது..

 

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. சும்மா ராஜபக்சேவை செல்லமாக ஒரு தட்டு தட்டி வைக்கும் நடவடிக்கையாகவே அது இருக்கும்..


இப்போது கருணா கும்பல் அதை தீவிரமாக வலியுறுத்துவதைப் பார்க்கும்போது என் சந்தேகம் உறுதியாகிறது.

 

- கார்ட்டூனிஸ்ட் பாலா

 

542683_4523394329267_1302958586_n.jpg

06-03-13.jpg

என்னும் சொல்லப்போனால் இன்றைய துள்ளல் எல்லாம் சுயமாக உணர்வுடன் எழுந்ததில்லை மாறாக சிங்கள சிப்பாய்கள் எடுத்த படங்களும் பிரித்தானிய தொலைக்காட்சி அதை வெளியிட்டதும் தான் இத் துள்ளலுக்கு காரணம். ஒருவன் இன்னாள் ஒடுக்குமுறையாளன் மற்றவன் முன்னாள் ஒடுக்குமுறையாளன்.

 

செனல்- 4 தொலைக்காட்சி தமது “மோதல் தவிர்ப்பு வலயம் - இலங்கையின் கொலைக்களம்” திரைப்படத்தை தயாரிக்க இலங்கையில் வசிக்கும் யாரும் உதவி செய்யவில்லை என்று செனல் 4 தொலைக்காட்சியின் முகமைத்துவ பணிப்பாளர் கெல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிக்கு இலங்கையில் ஆதாரங்கள் வழங்கியவர்களை கைது செய்யப்போவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டிருந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கெல்லம் மேக்ரே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,.

இலங்கையில் வசிக்கும் எந்த பொது மகனும் செனல்- 4வுக்கு ஆதாரங்களை வழங்கவில்லை. அத்துடன் இந்த ஆதாரங்களை திரட்டுவதற்கு செனல்- 4 தொலைக்காட்சி யாருக்கும் நிதி வழங்கவும் இல்லை.

இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற விதத்தை கொண்டு அரசாங்கம் அச்சுறுத்தல்களை மேற்கொள்வது முறையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியின் உண்மைத்தன்மையால் உலக நாடுகளின் கண்கள் தற்போது இலங்கையின் மீது கவனம் செலுத்தியுள்ளன. பொதுநலவாய நாடுகளும் இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்கிறது என்றும் மெக்ரே தெரிவித்தார்.

இதேவேளை, இந்த காணொளி தொடர்பில் கருத்துரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ' நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் மறைக்க முற்படுவதால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை" என்று தெரிவித்திருந்தமையையும் மெக்ரே மேற்கோள்காட்டியுள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3338

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.