Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழிக்க இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா சதித்திட்டம்!- விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

Featured Replies

2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் வலுவான நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் இலங்கையும் மேற்கொண்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது. கடற்புலிகளால் அரசாங்கத்தின் கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றை தொடர்ந்து அமெரிக்காவின் தூதுவராக அப்போது இருந்த ரொபர் ஓ பிளக் ராஜாங்க திணைக்களத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ளது.

இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படமுடியாத அளவில் மிகவும் வலிமையாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காணாமல் போனதாகவும் 4 பேரை விடுதலைப் புலிகள் சிறைபிடித்ததாகவும், அட்மிரல் சமரசிங்க தெரிவித்திருந்தமையையும் பிளெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தையும் அவர்களின் மீள் வலுவூட்டும் தளங்ளையும் அறிந்துக் கொள்ளக்கூடிய விசேட ரேடார் ஒன்றை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தமையையும் ரொபட் ஓ பிளெக் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ரேடாரை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்க அமெரிக்காவின் குழு ஒன்றும் இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் பிளெக் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகளை அழிப்பதற்கான புஸ்மாஸ்ட்டர் என்ற ஆயுதத்தை வழங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வொசிங்டளுக்கு அனுப்புமாறும் ரொபட் ஓ பிளெக் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடம் இந்தக்கடிதத்தில் கோரியிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13140:america-and-srilanka&catid=5:business-general&Itemid=101

நல்லத்தான் விளையாடி இருந்கிரிங்க ராபட்டு.

இப்ப எதுக்கு கிடந்தது பமுறிங்க?

இதெல்லாம் ஏற்கெனவே அம்பலமாகியதுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 We Can’t Take Our Troops To Court For Firing On Civilians’ In The Course Of Battle–Fonseka To Blake 

http://www.colombotelegraph.com/index.php/wikileaks-we-cant-take-our-troops-to-court-for-firing-on-civilians-in-the-course-of-battle-fonseka-to-blake/ 

புலம் பெயர்ந்த விசுகோத்துக்கள் விசில் அடிக்க ஒரு டப்பா  பிளேன் செய்து படம் காட்டி கடைசியில் எல்லாத்தையும் கவிழ்த்து கொட்டியாச்சு .

சர்வதேசம் என்றால் என்னவென்று இன்றுவரை தெரியால் ஜெனிவாவில் நின்று கத்தி ஆக போவது ஒன்றுமில்லை .

ஒரு சின்ன உதாரணம் - கனடா இன்று பாலஸ்தீனத்தை எச்சரித்து இருக்கின்றது இஸ்ரேலின் குடியேற்ற திட்டத்திற்கு  எதிராக ஐநா வில் வழக்கு தாக்கல் செய்தால் பரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ,

குடியேற்றம் செய்பவனை நிற்பாட்ட வழியில்லை அதை எதிர்பவனை எச்சரித்து இருக்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கிய போது அது சரி என்று வாதிட்டீகள்.இப்போ சர்வதேசம் பிழை என்கிறீர்கள்.உங்களின் கொள்கை தான் என்ன? புறணி பாடுவது தவிர வேறேதும் இல்லை என்பது தான் எனது கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன, தனிய சிங்களவன் எங்கட ஆட்களோட நின்று அடிபட்டு போரில் வென்றிருப்பாங்கள் என்று நினைக்கிறியளோ .... ?  

நீங்களும் அந்த விசில் கோஷ்டியில் ஒன்று போல கிடக்கு ,

சர்வதேசத்தை விளங்கிகொள்ள வேண்டும் என்பதையே விளங்கமுடியாமல் இருக்கின்றீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
தங்கள் தேவைக்கு தற்போதும் எதிர்காலத்திலும் 
கூடியவர்கள் வி.போராளிகள்.இதில் தாங்கள் அடிக்க சொல்பவர்களை அடிப்பவர்களும் அடங்கும்.உ+ம்:சிரியா,லிபியா
 
மற்றும் படி கொள்ளையுடன் விடுதலைக்காக போராடுபவர்கள் எல்லாம் இரண்டாம் பட்சம். இதற்கு உ+ம்: பலஸ்தீன விடுதலை இயங்கங்கள், வி.புலிகள்
 
ஐ.ஆர்.ஏ அமெரிக்காவால் தடை செய்யப்படவில்லை.ஆனால் வி.புலிகள் தடைசெய்யப்பட்டார்கள்.

அமெரிக்கா செய்த துரோகத்துக்கு பிராயசித்தமாக இப்போதாவது தமிழர்களுக்கு தீர்வை பெற்று தரவேண்டும்

நீங்களும் அந்த விசில் கோஷ்டியில் ஒன்று போல கிடக்கு ,

சர்வதேசத்தை விளங்கிகொள்ள வேண்டும் என்பதையே விளங்கமுடியாமல் இருக்கின்றீர்கள் .

அப்படி என்னதான் ஒரு வரியில் வைத்து கனடவை விளங்கிக்கொண்டுவிட்டு கனடாவை சர்வதேசமாக வரிந்து கட்டுகிறீர்கள்? கொஞ்சம் விளப்பமாக சொல்லாமே.

கனடா ஏன் வழக்கு போடக் கூடாது என்கிறது என்ற செய்தி உங்களுக்கு எதிரானது என்பதால் அதை நீங்கள் இணைக்காமால் தவிர்த்திருக்கிறீர்கள் பொல்லல்லவா உங்கள் எழுத்து காட்டுகிறது?

விளக்கம் தெரிஞ்சால் தானே எழுதுவதற்கு.இடைக்கிடை வந்து அவன் பிழை இவன் பிழை என்று ஒரு வரியில் எழுதி விட்டு ஆள் மாறி விடும்.கேள்வி கேட்டால் எங்களுக்கு அரசியல் தெரியாது என்று மேதாவி தனமாக எழுதி விடும்.ஒரு ஆரோக்கியமான கருத்து தமிழ் மக்களுக்காக வைத்திருக்கிறாரோ என்றால் பூச்சியம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் வலுவான நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் இலங்கையும் மேற்கொண்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது. கடற்புலிகளால் அரசாங்கத்தின் கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றை தொடர்ந்து அமெரிக்காவின் தூதுவராக அப்போது இருந்த ரொபர் ஓ பிளக் ராஜாங்க திணைக்களத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ளது.

இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படமுடியாத அளவில் மிகவும் வலிமையாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காணாமல் போனதாகவும் 4 பேரை விடுதலைப் புலிகள் சிறைபிடித்ததாகவும், அட்மிரல் சமரசிங்க தெரிவித்திருந்தமையையும் பிளெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தையும் அவர்களின் மீள் வலுவூட்டும் தளங்ளையும் அறிந்துக் கொள்ளக்கூடிய விசேட ரேடார் ஒன்றை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தமையையும் ரொபட் ஓ பிளெக் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ரேடாரை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்க அமெரிக்காவின் குழு ஒன்றும் இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் பிளெக் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகளை அழிப்பதற்கான புஸ்மாஸ்ட்டர் என்ற ஆயுதத்தை வழங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வொசிங்டளுக்கு அனுப்புமாறும் ரொபட் ஓ பிளெக் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடம் இந்தக்கடிதத்தில் கோரியிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13140:america-and-srilanka&catid=5:business-general&Itemid=101

புலிகளை முதன் முதலில் தடை செய்த நாடுகூட அமெரிக்காதான். அவர்களை அழிக்கவேண்டுமென்பதில் அதீத அக்கறை காட்டியவர்களும் அவர்கள்தான். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற போர்வையில் சிங்களத்திற்கு பணமும் ஆயுதமும் கொடுத்து தமிழர்களை அழிக்கத் துணைபோனவர்களும் அவர்கள்தான். இலங்கைக் கடற்படைப் பீரங்கிப் படகுகளுக்கான நீண்டதூர பீரங்கிகளை கொடுத்தவர்களும், இஸ்ரேலுடனான சிங்களத்தின் உறவுக்கு ஆரம்ப காலங்களில் வித்திட்டவர்களும் இவர்களே. இவர்களத் தொடர்ந்துதான் மேற்குலகம், கனடா என்று பலரும் எம்மைத் தடை செய்தார்கள்.

ஆனால், இன்றைக்கு எமது பிரச்சனை சர்வதேசத்தில் பேசப்படுவதற்கு அமெரிக்காவின் இன்றைய நிலைப்பாடு காரணம் என்றால் அதை நாம் பாவிப்பதில் தவறில்லை.  அமெரிக்கா செய்வது அவர்களின் சிய நலத்திற்காகத்தான் என்றாலும், எமது நோக்கத்தின் சிறிதளவேனும் நிறைவேறுகிறதென்றால் நாம் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லையே? ஆண்டாண்டு காலமாக தந்தை பூமி, தொப்புள் உறவு என்று நம்பவைத்தே கழுத்தறுத்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை விடவும், சொல்வதையே செய்து, இன்று ஓரளவிற்கேனும் சர்வதேசத்தில் எமக்காகக் கதைக்கும் அமெரிக்கா எவ்வளவோ மேல் என்றுதான் நான் நினைக்கிறேன். 

US ambassador to Sri Lanka threatens the LTTE - (2006)

http://www.wsws.org/en/articles/2006/01/sril-j14.html

But while saying “We want peace. We support peace,” Lunstead warned: “If the LTTE chooses to abandon peace, however, we wanted it to be clear, they will face a stronger, more capable and more determined Sri Lankan military. We want the cost of a return to war to be high.”

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்... நீங்கள் அர்ஜீனின் கருத்தை விரும்பு... நிலைக்குப் போயிட்டீங்களா..??!

உங்களிடம் ஒரு கேள்வி..

அமெரிக்கா எப்போதாவது எமது மக்களின் சாத்வீகப் போராட்ட வடிவிலான அரசியல் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகச் சொல்லி இருக்கிறதா..??! அது தந்தை செல்வா காலமிருந்து இன்று வரை..??!

அமெரிக்கா ஈழ விடுதலையில் எந்த ஒரு ஆயுத அமைப்பையாவது எப்போதாவது அங்கீகரித்திருக்கிறதா..??!

அமெரிக்கா ஈழ விடுதலை என்ற கோட்பாட்டை எப்போதாவது.. அங்கீகரித்திருக்கிறதா..??!

அது அங்கீகரித்தது எல்லாம்.. இனப்படுகொலை.. இனக்கலவரங்களையும்.. அரச பயங்கரவாதத்தையும்.. தமிழர்களின் பிரச்சனையை மையமாக வைத்து சிங்களத்தினூடு தான் செலுத்தக் கூடிய பிராந்திய ஆதிக்கத்தையுமே.

அலன் தம்பதிகளின் (அவர்களைக் கடத்தியவர் இன்று அமைச்சர்) கடத்தலின் பின் தொடங்கிய எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவப் பங்களிப்பு.. இன்று முள்ளிவாய்க்கால் தாண்டியும் சிங்களத்தோடு தொடர்கிறது..!

விடுதலைப்புலிகள் கப்பலை தாக்கினதாலையோ.. விமானம் பறக்க விட்டதாலையோ அல்ல..அமெரிக்கா - சிங்கள நெருக்கம் அமைந்திருக்கிறது.

ஜே ஆர் காலத்தில் இருந்து இன்று வரை அது தொடர்கிறது. மொசாட்டில் இருந்து.. சி ஐ ஏ வரை எமக்கு எதிராகச் செயற்பட்டது தான் வரலாறு. இவற்றை எல்லாம் தாண்டி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது புலிகள் மட்டுமே. அவர்களால் இந்த அந்நிய மேலாதிக்க சக்திகளை எதிர்கொள்ள முடியாமைக்கு...

1. எமது சரியான பங்களிப்பை நாம் புலிகளுக்கு வழங்காமை ஒரு காரணம்.

2. பூகோள அரசியல் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர்.. அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகிப் போனது..!

இதனைத் தவிர.. புலிகள் கப்பலை அடிச்சு..  பிளேன் விட்டு.. அதைக் கண்டு அமெரிக்கா பயந்தது என்றால்.. அது எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டின கதை தான்..!

புலிகள் கப்பலை தாக்கிறது 1992 இலேயே ஆரம்பமாகிட்டுது. புலிகள் விமானம் ஒன்றை பெற முயற்சிக்கிறார்கள் என்பது 1986 லேயே உலகிற்குத் தெரியும்..!

இந்த நிலையில்.. ஒரு வரலாற்று திறனாய்வும் இன்று புலிக் காய்ச்சலில் அர்ஜீன் உளறித் திரிவதை ஏற்கும் நிலைக்கு நீங்கள் போயிருப்பது ஏனோ..?????!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

நான் அர்ஜுனின் கருத்துக்கு விருப்பம் தெரிவித்தது அவரின் சுவாரசியமான நடைக்குத்தான். அவரின் அரசியல் கருத்துக்களை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. ஒருகாலத்தில் உங்களைப் போலவே நானும் அவரின் ஒவ்வொரு கருத்திற்கும் எதிர்க்கருத்து எழுதி வந்தேன். ஆனால் அவர் மாறவேயில்லை. அதனால் அவருக்கு பதில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். அவரின் புலியெதிர்ப்பு போக்கென்பது நாம் அறிந்ததுதானே?? 

சரி, உங்கள் கருத்துக்கு வருகிறேன். அமெரிக்கா தலமையிலான மேற்கு நாடுகளின் செல்வாக்கே புலிகளின் அழிவிற்கும் , எமது தாயக விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதை நான் மறுக்கவில்லையே. ஆனால் இன்று எமக்கிருக்கும் தெரிவுகள் என்ன? எதை ஆதாரமாக வைத்து நாம் போராட ஆரம்பிப்பது? எமக்கென்று அங்கீகாரம் நீங்கள் சொல்லியதுபோல இன்றுவரை இல்லை என்பது உண்மைதான். அப்படியிருக்க நாம் யாரை வைத்து எமது போராட்டத்தைத் தொடங்குவது? அமெரிக்க இறுதிவரை எம்மை அழித்தது, அதனால் அவர்கள் இப்போது கொண்டுவரவிருக்கும் தீர்மானத எதிர்ப்போம் என்கிறீர்களா?? இப்படியே அவன் பிழை, இவன் பிழ என்றிருந்தால் என்னதான் முடிவு?? அமெரிக்காவே எங்கலை அங்கீகரிக்கவில்லை என்றபின் யார்தான் எம்மை அங்கீகரிப்பார்கள்?? அதே அமெரிக்கா இன்று சிங்கலத்துக்கெதிராகப் போகும்போது நாம் ஏன் அதை எமக்காகப் பாவிக்கக் கூடாது ?? இன்றுவரை அமெரிக்கா இல்லாமல் ஏதாவது சின்னம் சிறிய ந்நாடையாவது எமக்குச் சாதகமாக ஐ. நா விலோ அல்லது வேறு எந்த மன்றத்திலோ எம்மால் நிற்க வைக்க முடிந்ததா?? இல்லையே? பிறகு ஏன் இந்த எதிர்ப்பு ?? 

அமெரிக்கா தனது சுயநலத்திற்காக எம்மை ஆதரிக்கட்டும், பரவாயில்லை, எமக்கு லாபம் வருகிறதென்றால். ஏனென்றால் எமக்கு அதை விட்டால் இப்போதைக்கு வேறு வழியிருப்பதாக எனது மூளிக்குத் தெரியவில்லை.

மற்றும்படி அர்ஜுன் ஒரு அரசியல் வித்தகர் என்று நான் ஒருநாளுமே ஏற்றுக்கொண்டது கிடையாது. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு முன்னால் புளொட் உறுப்பினர். தம்மை புலிகள் இயங்கவிடவில்லை என்கிற ஆத்திரத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர், அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்த வரை அமெரிக்கா எப்போது எமக்கு ஆதரவான சக்தி கிடையாது.

இன்று சிரியாவில் தற்கொலை தாக்குதல் நடத்தும் அமைப்பிற்கு.. சிரிய அரசு தனக்கு எதிரானது என்ற ஒரே காரணத்திற்காக.. அமெரிக்கா பகிரங்க இராணுவ உதவி செய்ய முன்வந்துள்ளது. ஆனால் புலிகள் மீது தடை கொண்டு வர தற்கொலை தாக்குதலையும் ஒரு காரணமாக முன்னிறுத்தியது.

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்கள் அரச விமான நிலையங்களை தாக்கி போர் விமானங்களைக் கைப்பற்றி உள்ளனர். அவற்றை இயக்கவும் முடியும். அமெரிக்கா அவற்றை இட்டு எல்லாம் அவர்களைப் பயங்கரவாதின்னு சொல்லி பட்டியலிடல்ல..!

சிரிய கிளர்ச்சிக்காரர்கள் மீது மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்கள்.. சிரிய அரசுக்கு நிகராகப் பதியப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் அதற்கு பகிரங்க ஆதரவு அளிக்கின்றன.

ஆக அடிப்படையில் அமெரிக்காவின் நலன் சார்ந்து அது.. எமது மனித உரிமை மீறல்களைக் கையாள்கிறது.

இன்னொரு வடிவில் சொன்னால் சிறீலங்கா அரசு செய்த கொடுமைகளின் தன்மையைக் குறைத்துக் காட்டி அதன் ஆதரவை தனதாக்க முனைகிறது..!

அமெரிக்கா ஐநா 3 வர் குழு பரிந்துரையை விட.. எல் எல் ஆர் சி பரந்துரைக்கு வழங்கும் முக்கியத்துவம் என்ன..??! அமெரிக்கா சர்வதேச விசாரணையை விடுத்து.. உள்ளக விசாரணைக்கு ஆலோசனை வழங்க என்ன காரணம்..??! அமெரிக்கா இராணுவ மட்டத்தில் சிறீலங்காவிற்கு இன்னும் உதவுவது போல.. இணைத்தலைமை நாடுகள் என்ற போர்வையில் சமாதான காலத்தில்.. தமிழர்கள் விடயத்தில் மூக்கை நுழைத்த அமெரிக்கா.. இன்று அது தொடர்பில் மெளனம் சாதிப்பது ஏன்..??!

அமெரிக்கா.. ஏன் இது தொடர்பில் இணைத்தலைமை நாடுகளை கலந்தாலோசிக்கவில்லை. அவற்றைக் கூட்டி ஒரு முடிவு எடுக்கவில்லை. அப்போ எதற்காக இணைத்தலைமை நாடுகள் என்ற ஒரு நாடகத்தை அமெரிக்கா சமாதான காலத்தில்.. அரங்கேற்றியது. புலிகளின் நகர்வுகளைக் கண்காணிக்கவா..??!

அமெரிக்காவின் நகர்வுகளில் தமிழர்கள் அடையக் கூடிய ஒரே நன்மை.. சிறீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் நடந்துள்ளது என்பதை அமெரிக்க நகர்வுகளுக்கு சமாந்தரமாக சர்வதேசத்திடம் கொண்டு செல்வதே அன்றி.. அமெரிக்கத் தீர்மானம்.. தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகத் தன்மையையும் இப்போதைக்கு அளிக்கக் கூடிய நிலையில் அமெரிக்கக் கொள்கை சிறீலங்கா விவகாரத்தில் தீவிர மாற்றம் கண்டிருப்பதாகத் தெரியவில்லை..!

அமெரிக்கா புலிகளைக் களத்தில் இருந்து முற்றாக அகற்ற நினைத்திருக்கவில்லை. மாறாக அவர்களைப் பலவீனப்படுத்தி.. அந்த பிராந்தியத்தில் தனது பிடிகளை பல முனைகளில் பலமாக்கவே எண்ணி இருந்தது. ஆனால்.. இந்தியா அதனை விரும்பவில்லை. புலிகளும் தமிழர்களின் தமிழீழ வேட்கையும்..  தனக்கு சவால் மிக்க இன்னொரு சக்தியாக வளர்வதை இந்தியா விரும்பவில்லை. அந்த வகையில் தான் புலிகளை அது முற்றாக அழிக்க விரும்பியது. ஆனால் அதனால் எழுந்த நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவிற்கு கிடைத்த ஒன்றே சாகும் வரை பார்த்திருந்துவிட்டு செத்த பின் வைக்கும் ஒப்பாரி. அதுவும் தீவிரமான ஒப்பாரியல்ல. சிங்களத்திற்கு விலைபேசும் ஒப்பாரி..!

நாம் அமெரிக்காவின் நகர்வுகளினூடு அனுகூலங்களைப் பெற நினைக்கிற அதே நேரம்... அங்குள்ள ஆபத்துக்களில் இருந்தும் வெளி வரும் நகர்வுகளைச் செய்தால் அன்றி.. அமெரிக்காவும் எமது அவலங்களை சிங்களத்திடம் கூறு போட்டு விற்றுவிட்டு.. தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றதும் எம்மைக் கைவிட்டு விட அதிக நேரம் எடுக்காது..! இதனை மனதில் இருந்திக் கொண்டு தான் அமெரிக்காவின் நகர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்..!

இணைத்தலைமை நாடுகளில் குந்தி இருந்து கொண்டு சமாதானப் பேச்சுக்கு புலிகள் அமெரிக்கா செல்வதை தடுத்த நாடு அமெரிக்கா. அப்படிப்பட்ட அமெரிக்கா.. எமக்கு நீதியான தீர்வு கிட்ட மனச் சுத்தியோடு உழைக்கும் என்பதை அறியாப் பிள்ளையும் ஏற்றுக் கொள்ளாது..!  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நடுவுநிலமையான நாடு ஒன்றின் அணுசரணையிலான்றி எமக்கு எதுவும் கிடைக்காதென்பது தர்க்கரீதியில் உண்மைதான். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை. எமது நலனில் மட்டுமே அக்கறை கொண்டு எமக்கு உதவக்கூடியவர்கள் என்று நாம் காத்திருந்தால் அது நடக்கப்போவதேயில்லை. இந்தியா நாம் அழிய வேண்டும் என்று எண்ணிக் கருமமாற்றியதென்பது உண்மையே. அதானால் அது நிச்சயம் எமக்கு ஆதரவு தரப்போவதில்லை.  அண்மைய ராகுல் காந்தியின் கருத்தும் அதையேதான் பிரதிபலிக்கிறது. அதுபோல அமெரிக்கா கூட முற்றுமுழுதாக தனது சுய லாபத்திற்காகத்தான் எமது பிரச்சினையைக் கைய்யிலெடுத்திருக்கிறது. 

அமெரிக்காவும் இல்லாத இந்தியாவின் செல்வாக்குமற்ற வேறு எந்த நாடாவது எமக்கு இன்று அங்கீகாரத்தையும் அல்லது சுய நலனில்லாத ஆதரவையும் தரும் என்று கருதுகிறீர்களா? அப்படியிருந்தால், நான் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்ப்பது என்கிற உங்களின் எண்ணத்தை ஆதரிக்கிறேன். 

அப்படியில்லாமல் அமெரிக்காவின் தீர்மானத்தை அவதானத்துடன் ஆதரிக்க வேண்டுமென்று நீங்கள் சொல்கிறீர்களென்றால், நானும் அதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

நீங்கள் மட்டுமல்ல இன்னும்பலர் இதே  பழைய பல்லவியுடன் வலம் வருகின்றார்கள் ,உங்களுக்கு தெரிந்த உலகம் இவ்வளவும் தான் என்று எனக்கு எப்பவோ தெரியும் .யாழில் இருப்பவர்களின் அரசியல் எனக்கு தெரிந்ததுதான் அதனால் தான் யாழில் எழுதுகின்றேன் .

புளொட் -நாங்களே உடைத்து வெறும் சக்கையாக விட்ட இயக்கம் .நான் போனதும் வேண்டுவதும் தமிழர்களின் விடுதலை ஒழிய இயக்க அடையாளமும் தலைமையும் அல்ல.நெடுக்கரும் ,ரகுநாதனும் பள்ளி கூட படிப்பு படித்திருக்காலாம் உலக அரசியல் அருச்சுவடிதான்.

நான் யாழில் வந்து எழுவது தனிய எனது புலிகளின் மீதான காழ்ப்பு இல்லை ,நான் சந்திக்கும் வெளிநாட்டு அரசியல்வாதிகளும் ,பத்திரிகை நிருபர்களும் சொல்லும் கருத்துத்தான் .பிரங்கஸ் கரிசனும் ,கோர்டன் வைசும்,எரிக் சொல்கேய்யும் நாங்கள் காலம் காலமாக எழுதியதை இப்போ உலகிற்கு அறிவித்திருக்கின்றார்கள்.

2009 பின் நான் இதை வந்து எழுதவில்லை ராஜீவின் கொலையுடனே இதே கருத்தை எழுதிவருகின்றேன் .

உந்த பச்சை ,சிவப்பிற்கு அடிபடும் சில்லறை இல்லை நான் ,நாளை ராஜபக்சா கூட ஒரு தீர்வு கொடுத்தால் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு எதுவும் செய்ய தயார் .அதற்காக ஒரு குறிப்பிட்ட வட்டத்துடன் தொடர்ந்தும் மனதிற்கு சந்தோசமாக வேலை செய்துக்கொண்டே இருக்கின்றேன் .

வெறும் சுயநலமாக இணையத்தில் வந்து இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று கத்திவிட்டு தன்ரை வேலை பார்க்க போகும்   கள்ள தமிழன் இல்லை நான் .

பிழை என்றால் அது சிங்கள அரசு என்றாலும் புலி என்றாலும் புளொட் என்றாலும் ஈபி என்றாலும் பிழைதான் .இவ்வளவு சிறுவர்களை பிடித்து ஒன்று இரண்டு மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட அதை கண்டும் காணாமல் இருந்த தமிழனை நான் எனது ஆயுளுக்கும் மன்னிக்கபோவதில்லை ,அவர்களை நான் மனிதர்களாகவே பார்ப்பதில்லை .இந்த விடயத்தில் என்னிடம் நன்கு வாங்கி கட்டிக்கொண்ட கனேடிய பிரமுகர்களும் அடக்கம் ,வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள் ஏனெனில் அவர்களுக்கே தெரியும் தாங்கள் செய்தது பெரும் துரோகம் என்று .

இன்றுவரை சிங்கள அரசு இவ்வளவு அநியாயம் செய்த பின்பும் தப்பி இருப்பதற்கு ஒரே காரணம் புலிகள் செய்த அநியாயம் அதை விட அதிகம் என்பதால் தான் .வெறும் முன்றாம் தர தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் போல காட்டு கூச்சல் போட்டு எதுவும் ஆகப்போவதில்லை,கொஞ்சம் அறிவையும் பயன்படுத்த பழகிகொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாரும் காட்டுக் கூச்சல் போடவில்லை. கத்துவது நீங்கள் மட்டும்தான். எங்களுக்கு அறிவில்லை என்று கண்டுபிடித்தது பெரிய விஷயம், அது உங்கள் போன்ற அறிவாளிகளால் மட்டுமே முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

அதுசரி, நீங்கள் உங்கள் உலகார்ந்த அரசியல் அறிவை எங்கு கற்றீர்கள்? உங்களின் அரசியல் அறிவை ஏன் உங்கள் கழகமே ஏற்றுக்கொள்ளாமல் போனது ?? உங்களின் அறிவைப் பாவித்து ஏன் கழகத்தை அப்போதே நல்வழிக்கு கொண்டுவர முடியாமல் போனது ? எதற்காக உங்களின் கழகத்தை நீங்களே உடைத்துப் போட்டீர்கள்??

புலிகள் அநியாயம் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் சிங்களத்தைக் காட்டிலும் அதிகமாகச் செய்தார்கள் என்று அருமையான பொன்மொழியைச் சொன்னீர்கள் பாருங்கள், அதிலேயே தமிழ்ர் மீதான உங்களின் அக்கறை வெளிப்பட்டுப் போனது. உங்களின் இந்தக் கருத்தைச் சிங்களவனே ஏற்றுக்கொள்ள மாட்டான். 

சிறுவர் படையணி, கட்டாய ராணுவப் பயிற்சி, மக்கள் கேடயம், மாற்றுக்கருத்தாளர் மீதான வன்முறை, சிங்கள மக்கள் மீதான தாக்குதல், தற்கொலைத் தாக்குதல்கள்......இவையெல்லாம் உண்மைதான். ஆனால் சிங்களம் இவற்றைவிடவும் குறைவாகத்தான் செய்தது என்று நீங்கள் நம்பினால், இதுவரையும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்திருக்கிறீர்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இதுவரை செய்துவந்த புலியெதிர்புப் போதும், இனியாவது தமிழர் நலனில் அக்கறை கொண்டு சிங்களம் புரிந்த கொலைகளை அம்பலபடுத்துவீர்களென்றால், அதுவுமில்லை. சிங்களத்தை விட புலிகள் அதிகம் கொடுமை செய்தார்கள் என்கிறீர்கள். பிறகு எப்படி உங்களின் மக்கள் மீதான கரிசணையை உண்மையென்று நம்புவது?

வெறும் கற்பனை வாதத்தில் இருபது வருடங்கள் புரண்ட பலருக்கு அதிலிருந்து வெளிவருவது மிக பெரிய பிரச்சனைதான் ,

இன்னும் தலைவர் இருக்கின்றார் ,ராஜீவை புலிகள் கொல்லவில்லை,சாள்ஸ் அன்ரனி ராடாரை வெட்டி விமானம் ஓட்டுவார் ,கிளிநோச்சி மண்ணுக்க மழை காலத்திற்குள் புதைய போகுது முழு ஆமியும் என்று எல்லா கதையும் கேட்டுக்கொண்டு தான் நாங்களும் இருந்தனாங்கள் .

காசை மட்டும் தாங்கோ தலைவர் முழு அலுவலும் பார்ப்பார் என்று சொல்லித்தான் முழு புலி ஊடகங்களும் பணம் சேர்த்தார்கள் ,அவ்வளவு விபரமாக உங்கள் கோஷ்டிகள் உலகம் எங்கும் இருந்தார்கள் சுற்றி என்ன நடக்கின்றது என தெரியாமல் ,ஓவ்வொரு நாடாக சொல்லி சொல்லி தடை செய்தார்கள் அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் .

இப்ப ஒரு புது அமெரிக்க தியரியுடன் களம இறங்கியிருக்கின்றிர்கள் .எத்தனை தரம் எரிக் சொல்கேயும் வன்னி போய் வந்தார் .இடையில் இந்தியாவும் போய் வந்தார் .ஏதோ நித்திரையால் எழும்பி வந்ததுபோலவும் ஒரு சில நாட்களில் நடந்து முடிந்தது போலும் எழுதுகின்றீர்கள் ,இது பல வருடங்களாக  தொடர்சியாக முயற்சித்து முடியாமல் எடுத்த முடிவு .இருபது வருடமாக உயிராயிதம் என்று விட்டு இப்ப அறிவாயுதம் என்கின்றார்கள் அந்த இருபது வருடங்களும் எங்கே போயிருந்தது உங்கள் அறிவு ,அதே போல் ஆயுதம் ,ஆயுதம் என்று கத்திவிட்டு இப்ப அகிம்சை அகிம்சை என்று ஏதோ திடீர் ஞானம் வந்தது போல் புசத்துகினார்கள் இருபது வருடமாக மற்றவன் சொல்ல சொல்ல துரோகிகள் என்று போட்டு இப்ப வெளிக்கிட்டு இருக்கினம் ஆளுக்கொரு திசையில் இருந்து ஞானிகளாக .

சிங்கள அரசு எமது எதிரி அவன் செய்ததற்கு ஒப்பாக எமது மக்களுக்கு கடைசி காலத்தில் புலிகள் அநியாயம் செய்தார்கள் ,மக்களை கொண்டுபோய் முள்ளிவாய்காலில் முடக்கியது புலிகள் தான் .

உலகம் சிங்கள அரசை ஒரு ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாகவும் புலிகளை பயங்கரவாதிகளாகவும் பார்க்கின்றது என்பதை கூட புரியாதவர்களாக இருந்தவர்கள் தான் நீங்கள் .

எங்கள் மக்கள் அழிவிற்கு முதல் காரணம்  புலிகள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

அரிச்சுனின் பாண்டித்தியம் புலிகளைப் பபற்றியது மட்டுமேதான். அவர் வலம் வருவது அந்த சிறிய வட்டத்திற்குள். இலங்கை சுதந்திரமடைய முதல் நடந்ததுதான் சோல்பரியின் இலங்கை விஜயம்(1944). இதில் நடந்த விவாதங்களை அறிந்து அரிச்சுனால் அதை கனேடியருக்கு விளங்கப்படுத்த முஸ்யுமாயின் தமிழ் ஈழம் தானக மலரவேண்டும்.

யாழில் Lunstead   தனக்கு கூட்டமைப்பு புலிகளுடன் தொடர்புடையது என்று தெரிந்த பின்னரும் தான் ஏன் சம்பந்தருடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார் என்பதை அமெரிக்க குடிவரவு திணைகளத்திற்கு விளங்கப்படுத்தியிருந்த தந்தியை பார்த்தோம்.  சம்பந்தர் முதிர்ந்த அரசியல்வாதி என்பதால், நடந்து முடிந்த பழைய ஜனநாயக போராட்டங்களை பற்றிதெரிந்தவர் என்ற முறையில் அவருடன் பேசும் போது ஏன் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் அன்று நடந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்கிறார்கள என்பதை தங்களால் கிரகிக்க முடிகிறது என்பதை சொல்லியிருந்தார்.

அந்த வெளிநாட்டு ராஜந்திரிகள் இலங்கையையும், தமிழரையும் பற்றி அறிந்திருந்தளவு ஆவது உள்நாட்டவனான நீங்களும்  அறிந்து கொள்ள முயலுங்கள். 

அவ்வளவை விளங்கியிருந்த  அமெரிக்கர்தான் அரசுக்கு துணை போய் தமிழ் மக்களை அழித்தது மட்டுமல்லாம் சிங்கள மக்களையும் அரசுக்கு அடிமையாக்கினார்கள் என்றால் அதை தன்னும் விளங்கிக்கொள்ள முடியாமல் தெரியுது தெரியுது எனக்கெல்லாம் தெரியுது என்று  துள்ளிக்குதிப்போர் எவ்வளவு அழிவை தமிழ் மக்களுக்குச் செய்கிறார்கள் என்பதை சற்று உணர முயலுங்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் கற்பனை வாதத்தில் இருபது வருடங்கள் புரண்ட பலருக்கு அதிலிருந்து வெளிவருவது மிக பெரிய பிரச்சனைதான் ,

இன்னும் தலைவர் இருக்கின்றார் ,ராஜீவை புலிகள் கொல்லவில்லை,சாள்ஸ் அன்ரனி ராடாரை வெட்டி விமானம் ஓட்டுவார் ,கிளிநோச்சி மண்ணுக்க மழை காலத்திற்குள் புதைய போகுது முழு ஆமியும் என்று எல்லா கதையும் கேட்டுக்கொண்டு தான் நாங்களும் இருந்தனாங்கள் .

காசை மட்டும் தாங்கோ தலைவர் முழு அலுவலும் பார்ப்பார் என்று சொல்லித்தான் முழு புலி ஊடகங்களும் பணம் சேர்த்தார்கள் ,அவ்வளவு விபரமாக உங்கள் கோஷ்டிகள் உலகம் எங்கும் இருந்தார்கள் சுற்றி என்ன நடக்கின்றது என தெரியாமல் ,ஓவ்வொரு நாடாக சொல்லி சொல்லி தடை செய்தார்கள் அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் .

இப்ப ஒரு புது அமெரிக்க தியரியுடன் களம இறங்கியிருக்கின்றிர்கள் .எத்தனை தரம் எரிக் சொல்கேயும் வன்னி போய் வந்தார் .இடையில் இந்தியாவும் போய் வந்தார் .ஏதோ நித்திரையால் எழும்பி வந்ததுபோலவும் ஒரு சில நாட்களில் நடந்து முடிந்தது போலும் எழுதுகின்றீர்கள் ,இது பல வருடங்களாக  தொடர்சியாக முயற்சித்து முடியாமல் எடுத்த முடிவு .இருபது வருடமாக உயிராயிதம் என்று விட்டு இப்ப அறிவாயுதம் என்கின்றார்கள் அந்த இருபது வருடங்களும் எங்கே போயிருந்தது உங்கள் அறிவு ,அதே போல் ஆயுதம் ,ஆயுதம் என்று கத்திவிட்டு இப்ப அகிம்சை அகிம்சை என்று ஏதோ திடீர் ஞானம் வந்தது போல் புசத்துகினார்கள் இருபது வருடமாக மற்றவன் சொல்ல சொல்ல துரோகிகள் என்று போட்டு இப்ப வெளிக்கிட்டு இருக்கினம் ஆளுக்கொரு திசையில் இருந்து ஞானிகளாக .

சிங்கள அரசு எமது எதிரி அவன் செய்ததற்கு ஒப்பாக எமது மக்களுக்கு கடைசி காலத்தில் புலிகள் அநியாயம் செய்தார்கள் ,மக்களை கொண்டுபோய் முள்ளிவாய்காலில் முடக்கியது புலிகள் தான் .

உலகம் சிங்கள அரசை ஒரு ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாகவும் புலிகளை பயங்கரவாதிகளாகவும் பார்க்கின்றது என்பதை கூட புரியாதவர்களாக இருந்தவர்கள் தான் நீங்கள் .

எங்கள் மக்கள் அழிவிற்கு முதல் காரணம்  புலிகள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

வேணுமானல் ஒரு வாக்கெடுப்பு நடாத்திப்பாருங்கள் தமிழ் மக்களுக்கு யார் நன்மை செய்தார்கள் என்பதை.தமிழ் மக்களுக்காக அகிம்சை வழியில் போராடிய பொன்னம்பலத்தில் இருந்து சுமந்திரன் வரைக்கும்,ஆயுத ரீதியாக போராடிய உமாமகேஸ்வரனில் இருந்து டக்ளஸ் வரை தமிழ் மக்கள் மிக நன்கே அறிவர்.புலிகள் பற்றி உங்களை போல் விமர்சிப்போர் புலிகள் அழிந்த பின்னும் அவர்களை குறை கூறியே காலத்தை களிப்பதையும் மக்கள் மிக நன்கே அறிவர்.புலிகள் அழிந்த பின் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தீர்களா என்றால் ஒன்றுமே இல்லை.பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.?
 
யாழ்களத்தில் எல்லோருக்கும் அரசியல் தெரியாது அரிச்சுவடி என கூறும் நீங்கள் உங்கள் பிஎச் டி தர எழுத்து ஒன்றை நீங்கள் இணைந்து 2005 இல் இருந்து இன்று வரை ஒன்றைக்காட்ட முடியுமா? இனிமேலாவது அப்படி ஒன்றை எழுதிக்காட்ட முடியுமா?
 
ஒன்றும் வேண்டாம் ஒரு கேள்வி பதில் திரி ஒன்றை திறந்து வாசகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க என்றாலும் உங்களால் முடியுமா?

Edited by nunavilan

வெறும் கற்பனை வாதத்தில் இருபது வருடங்கள் புரண்ட பலருக்கு அதிலிருந்து வெளிவருவது மிக பெரிய பிரச்சனைதான் ,

இன்னும் தலைவர் இருக்கின்றார் ,ராஜீவை புலிகள் கொல்லவில்லை,சாள்ஸ் அன்ரனி ராடாரை வெட்டி விமானம் ஓட்டுவார் ,கிளிநோச்சி மண்ணுக்க மழை காலத்திற்குள் புதைய போகுது முழு ஆமியும் என்று எல்லா கதையும் கேட்டுக்கொண்டு தான் நாங்களும் இருந்தனாங்கள் .

காசை மட்டும் தாங்கோ தலைவர் முழு அலுவலும் பார்ப்பார் என்று சொல்லித்தான் முழு புலி ஊடகங்களும் பணம் சேர்த்தார்கள் ,அவ்வளவு விபரமாக உங்கள் கோஷ்டிகள் உலகம் எங்கும் இருந்தார்கள் சுற்றி என்ன நடக்கின்றது என தெரியாமல் ,ஓவ்வொரு நாடாக சொல்லி சொல்லி தடை செய்தார்கள் அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் .

இப்ப ஒரு புது அமெரிக்க தியரியுடன் களம இறங்கியிருக்கின்றிர்கள் .எத்தனை தரம் எரிக் சொல்கேயும் வன்னி போய் வந்தார் .இடையில் இந்தியாவும் போய் வந்தார் .ஏதோ நித்திரையால் எழும்பி வந்ததுபோலவும் ஒரு சில நாட்களில் நடந்து முடிந்தது போலும் எழுதுகின்றீர்கள் ,இது பல வருடங்களாக  தொடர்சியாக முயற்சித்து முடியாமல் எடுத்த முடிவு .இருபது வருடமாக உயிராயிதம் என்று விட்டு இப்ப அறிவாயுதம் என்கின்றார்கள் அந்த இருபது வருடங்களும் எங்கே போயிருந்தது உங்கள் அறிவு ,அதே போல் ஆயுதம் ,ஆயுதம் என்று கத்திவிட்டு இப்ப அகிம்சை அகிம்சை என்று ஏதோ திடீர் ஞானம் வந்தது போல் புசத்துகினார்கள் இருபது வருடமாக மற்றவன் சொல்ல சொல்ல துரோகிகள் என்று போட்டு இப்ப வெளிக்கிட்டு இருக்கினம் ஆளுக்கொரு திசையில் இருந்து ஞானிகளாக .

சிங்கள அரசு எமது எதிரி அவன் செய்ததற்கு ஒப்பாக எமது மக்களுக்கு கடைசி காலத்தில் புலிகள் அநியாயம் செய்தார்கள் ,மக்களை கொண்டுபோய் முள்ளிவாய்காலில் முடக்கியது புலிகள் தான் .

உலகம் சிங்கள அரசை ஒரு ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாகவும் புலிகளை பயங்கரவாதிகளாகவும் பார்க்கின்றது என்பதை கூட புரியாதவர்களாக இருந்தவர்கள் தான் நீங்கள் .

எங்கள் மக்கள் அழிவிற்கு முதல் காரணம்  புலிகள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

தான் ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கத்தை தானே அழித்துவிட்டு வந்தாக பெருமை அடிப்பவர்; தான் அதன் தலைவருடன் போராட்ட காலங்களில் எடுத்தபடங்களை இன்றும் பெருமையுடன் போட்டு தன்னை அகிம்சை வாதியாக காட்டுபவர்; சோத்துக்கு தாளாம் போட்ட வாழ்க்கை வாழ்ந்து விட்டு வந்து அன்று உரிமைக்காக போராடிகொண்டிருந்தவர்களை  காட்டிக்கொடுத்து அகதி நிலை பெற்றவர்; இதன் பின்னர் நியாயம் பேசினால் அந்த நியாயம் மகிந்த சித்தாந்தத்திலும் இருக்காது.

எந்த நாடு புலிகளை பயங்காரவாதிகளாப் பார்த்தாலும் அந்த நாடு அரசுக்கு போருக்கு உதவிய 20 ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இருந்தால் அதன் பங்கான 350,000/20 = 17,500 அளவு அப்பாவிப்பொதுமக்களை , அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கும் புலிகள் கொன்றார்கள் என்று அவர்களால் ஒரு சபையிலும் நிரூபிக்க முடியாது. அவர்களை அவர்கள் முடியுமாயின் ஒரு சர்வதேச விசாரணை கூட்டும்படி நீங்கள் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். உங்களின் இந்த நல்ல வேண்டுகோளுக்கு அவர்கள் செவி சாய்க்கிறார்களா பார்ப்போம்.அப்போது உங்களுக்கு தெரியும் அவர்கள் புலிகள் விட்ட ஒருப்பக்க போர் நிறுத்தத்தை ஏற்று ஏன் அரசை தடுக்கவில்லை என்று.

சன்  டி வி யில் கருணாநிதி பற்றி வாக்கெடுப்பு ஒன்று நடத்துங்கள் நுணாவிலான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.