Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

இசை, திட்டம் அபாரம்! :icon_idea:

 

மற்றப்பக்கம், அப்பிடியே பொறி கலங்கிப்போய் நிக்குது! :o

 

அடிக்கடி 'நெத்தியடி' எண்டு சொன்னவங்களுக்கு, 'நெத்தியடி' எண்டா எப்பிடியிருக்கும் எண்டு விளங்கியிருக்கும்! :D

 

'அர்ஜுனா, இது தான் தருணம், இன்னுமேன் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்?'

 

எடுத்துவிடு உன் பாணங்களை, அழித்துவிடு, உன் எதிரிகளை!!!

 

ஹா.... ஹா.... கலக்கல், தலைவா! :icon_idea:

 ஸ்ரண்டுகள் விடாமல் ஒழுங்கான வாதட்டம் வைக்க வேண்டும்.

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிரணியில மாறாட்டம் பலமாக இருக்கிறது நடுவர்களே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 

எமது தரப்பின் வாதத்தில் எதிரணியினரே  குழம்பிபோய்  தங்கள் பக்கத்தில் இன்னொருவர்   புங்கையூரான் வாதத்தை  வைக்க முன்னரேயே தாங்கள்  தேற்றுப் போய் விடுவோம் என்கிற பயத்தில்.  எதிரணி தலைவரே  அவசரப்பட்டு தனது  பக்க அணியை  காப்பாற்றுவதற்காக  வாதத்தை வைத்து சென்று விட்டார் என்று வந்து பார்த்தால்புங்கையூரான்  ஏதே திருவள்ளுவர் என்கிற  நினைப்பில்  நாலு வரி எழுதி விட்டு போயிருக்கிறார். திரு வள்ளுவர் இரண்டே வரிதான்  இவர் பெரு வள்ளுவராம். பிறகு தனது அணியை எப்படியாவது காப்பாத்தலாம் என்கிற முயற்சியில் முகக் குறிகளோடு  இசை கலைஞன் குதிரையோடி இருக்கிறார்.

 

 

இது என்னப்பா பட்டி மன்றத்த படையப்பா ரேஞ்சு க்கு ஆக்கி இப்பிடி ஒரு ட்விஸ்ட் வைச்சிட்டாங்க இசை அண்ணா அணி..... :D

Who is next? I'm confused :D

 

 

இதென்ன புது விளையாட்டு.....அப்பிடியெண்டால் நாங்களும் எங்கடை ஆக்களுக்கு குத்துவிளக்கு கும்பம் வைச்சிருப்பமெல்லே :mellow:

 

 

சும்மா சும்மா உங்களுக்குள்ளேயே பஞ்ச் டயலொக்குகளையே பேசிறீங்கள் :D

 

ஆனா ஒண்டு கடுமையா கலங்கிப்போய் இருக்கிறீங்கள் எண்டு மட்டும் விளங்கிது. :lol:

 

 

எதிரணியில மாறாட்டம் பலமாக இருக்கிறது நடுவர்களே :unsure:

சுமோவுக்கு, விவாதம் (கருத்துப்பகுதியில) வரவேண்டிய கருத்தை, விவாதப்பகுதியில தவறாப் பதிஞ்சு போட்டன்!

 

அதுக்குப் போய், இந்தக் குதி, குதிக்கிறாங்கப்பா!  :o

 

எதிரணியினர் எல்லாரும் வலு ரென்சன் போல தான் கிடக்கு!  :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாம்ஸ் கலக்கிட்டார்.

ஆளோடை இராஜ தந்திரமும் சொல்லி வேலையில்லை.. :rolleyes::D:lol:

வெளிவிவகார அமைச்சருக்குரிய அத்தனை தகுதிகளும் கொட்டிக் கிடக்கு. :D:icon_idea:

 

சூப்பர் மாம்ஸ். :)

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை காதலிக்கும் பிகரை

நீ ஒரு போதும் காதலிக்காதே..

கண்டிப்பாக அது 'மொக்க' பிகராகத்தான் இருக்கும்...

பேசாம நான் உங்க ரெண்டாவது பொண்ணையே கட்டிக்கிறேன் மாமா! - பேசாம இருப்பதற்கு எந்த பொண்ணை கட்டினாதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது யாரு எந்த அணியில இருந்து வரப்போறாங்க?

எங்கப்பா நடுவர்களும் confused ஆகிட்டினமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்களே, எதிரணியினர் தொடர்ச்சியாகப் பட்டிமன்ற மரபுகளை மீறி வருகின்றனர். எதிரணித் தலைவர் தமது தொகுப்புரையை முடித்து விட்டாரா?

Edited by யாழ்வாலி

  • தொடங்கியவர்

அடுத்தது யாரு எந்த அணியில இருந்து வரப்போறாங்க?

எங்கப்பா நடுவர்களும் confused ஆகிட்டினமா? :D

 

என்னத்தை சொல்ல..........  புங்கை மேடைக்கு வந்தகையோடை என்னட்டை இருந்த செம்பை பறிச்சுகொண்டு மேடைக்கு பின்னாலை ஓடீட்டார் :lol: :lol: . என் அவசரமோ :icon_mrgreen: . இசையும் இதை கண்டு ரென்சாகி  ஒரு ஆவர்த்தனம் தாளிச்சு போட்டார் :lol: . நாங்கள் எல்லாருமே பண்டிதர்மார் இல்லைத்தானே ??? சின்னசின்ன குளப்படியள் அங்கையிங்கை வரத்தான் செய்யும் :D :D . பார்வையாளர்கள் ரென்சனாகாமல் தொடர்ந்து பாருங்கோ :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா அணி நடாத்திய ஊடுருப்பு தாக்குதலை முறியடிக்க வாலி அண்ணா நல்ல ஒரு மூத்த காய தான் களம் இருக்காய் இருக்கார்.....

ஊடுருப்பு தாக்குதல முறியடிச்சு..... எதிர் தாக்குதலை நடாத்தி எதிரிகளை ஓட வைப்பதில் வல்லவர்.......நல்லவர்...... சும்மா சக்கையா வெடிக்க போறார்...........

புங்கை அண்ணா வேற செம்போட போய் இருக்காராம்.....

அப்ப ரெண்டு பக்கமும் சர சர எண்டு வெடிக்க போது.....

கோவிந்தா கோவிந்தா.....

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் சாத்ஸ் அண்ணா ஒரே ஒரு வார்த்தை "சூப்பர்" சிரிச்சு சிரிச்சு முடியல்ல......

நகைச்சுவை.... வாதத்தில் ஆணித்தரம்... அப்பிடியே கடிச்சு குதறி எடுத்திட்டிங்க.......

பாராட்டுக்கள்

சாத்திரி உங்கள் வாதமும் ஏதிரணியை மட்டுமே தாக்குவதாக அமைத்துவிட்டது, நல்ல வாதங்கள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னா சிங் சக் எண்டு சொல்லுவாங்கள்  எண்டாலும் சூப்பர் சாத் அண்ணா 

  • தொடங்கியவர்

மீனுவும் பட்டிமன்றத்திலை பங்குபற்றியிருக்கு . இது மீனுவுக்கு கிடைச்ச பெருமை :lol: :lol: :D :D :icon_idea: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aspirin-bayer-dynamite-small-80370_zps95

c_zps1548c3a1.jpg

 

எதிர் அணியினருக்கு சாத்தியாரின் ஒரு சிறிய விவாதத்தை பார்த்ததும் இனம்புரியாத நடுக்கத்துடன் கூடிய தலையிடி வந்துவிட்டதாக தகவல்....அவர்களுக்கு நடுவர்கள் மூலமாக எல்லாத்துக்கும் பொதுவான மகாமருந்து விற்றமின் C யுடன் கூடிய அஸ்பிறினை சிபாரிசு செய்கின்றேன். :lol:  பிரசருக்கும் நல்லதாம் :(

ஜமைக்கா,கியூபாவை எமது நயினாதீவிற்கும்,செந்தாம் குளத்திற்கும் கசூரினா கடற்கரைக்கும் ஒப்பிடுகின்றார்கள் .அண்ணை மாருக்கு ஒரு ரிக்கெட் போடத்தான் கிடக்கு .

ALL INCLUSIVE இல் போய் இறங்கினால் தண்ணி ,சாப்பாடு இருபத்திநாலு நேரமும் இலவசம் .நீச்சல் தடாகத்தில் படுத்துகிடக்க  ஸ்பானிய ------கள் அந்தமாதிரி உடுப்புடன் வந்து கிளாசை நிரப்பிவிட்டு போக விரும்பிய சோட்ஸ் ஈற்றை  எடுத்து ஒரு கடி கடித்துக்கொண்டு இருப்பதில் உள்ள சுகம் இருக்கே ? ஆகா .

சாத்திரியாரின் புதிய இயக்கக்கதை சுவரசியமாகத்தான் இருந்தது. ஆனால் எப்போது விவாதத்திற்கான பொயின்ஸ்யை வைப்பார் என்றது பொறுத்திருந்த்தான் பார்க்க வேண்டும் போலிருக்கு.

 

 

இதனால்தான் மத்தியஸ்த்தர்கள் காட்டமாக கருத்து எழுதியிருந்தாலும் பாரவையாளர்கள் அர்ச்சுனின் விவாதம் நில மட்டத்தில் நிஜ வாழ்கையைப் பிரதி பலிக்கிறது என்று பலர் கருத்துக்கூறியிருந்தார்கள்.
 
சாத்திரியாரின் சில பொயின்ஸ்
 

என்ன கொடுமை இது கல்வித் தாராதரம் என்பது ஜரோப்பாவில் 60 வீதம் இருந்த பொழுது எமது தாயகத்தில் 95 வீதம் இருந்திருக்கிறது. தலைசிறந்த கல்லூரிகளையும் பல்கலை கழகங்களையும் கொண்டதாக இருக்கிறது எமது நாடு. கல்வி என்பது இப்பொழுதும் அதன் சிறப்போடுதான் இருக்கின்றது.

மேலே உள்ள கருத்து இயக்கக்கதைகளையும் விட அருமையாக இருக்கிறது. :lol: 

 

 

ஊரில் என்னுடைய தாத்தா இறக்கும் போது அவரிற்கு வயது 96.


 

தொலைக்காட்சியில் என்னைப்போல கட்டழகான ஆண்மகன் ஒருவர் இந்த ஸ்பிரேயை அடிப்பார் உடனேயே வீதியால் போகும் அழகிகள் எல்லாரும் அவரை ஓடிப்போய் தழுவுவார்கள். அந்த விளம்பரம்தான் என்னை அந்த ஸ்பிரேயை வாங்க வைத்தது.

 


எதிரணியினர் ஊரில் குளிக்காமல் முகம் கழுவாமல். பல் தீட்டாமல். கூட்டி துப்பரவு செய்யாமல் இருந்ததற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். வெளிநாட்டிற்கு வந்துதான் குளிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.


 

இந்த பயோ கத்தரிக்காய்க்கும் சாதாரண கத்தரிக்காய்க்கும் என்ன வித்தியம் என்று கேட்டேன். அதற்கு அவன் பயோ என்று எழுதியிருந்த மட்டையை எடுத்து விட்டு இதுதான் வித்தியாசம் என்றான். ஜுவா தன்னுடைய கடையில் காய்ந்து போன காய்கறிகளையெல்லாம் பயோ என்று எழுதிப்போட்டு ஏமாற்றி வியாபாரம் செய்வதை இங்கு வந்து கூறியுள்ளார் நடுவர்களே..தன்னுடை வியாபார தந்திரத்தை நியாயப் படுத்துவதற்காக டாவின்சியின் கூர்ப்பு கொள்கையை உதாரணம் காட்டிய ஒரேயொருவர் இவர்தான். எனவே அவரது கடையில் சமான் வாங்குபவர்கள் கவனமாக இருங்கள்.
ஆனால் அவரை பார்த்து ஒரு கேள்வி இங்கு முப்பது வயதிற்கு மேல் எத்தனை ஆண்களிற்கு மண்டையில் மயிர் இருக்கின்றது??? அவரால் பதில் சொல்ல முடியாது பாவம் அவரே பட்டி மன்றத்திற்கு தொப்பியோடு வந்திருக்கிறார்.

 

இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் இரண்டு வேலை .மகன் நித்திரையால் எழும்ப முதலேயே வேலைக்கு போனால் அவன் நித்திரையான பிறகுதான் வீட்டிற்கு வருவான். ஒரு நாள் இரவு நித்திரையில் திடுக்கிட்டு விழித்த மகன் தாய்க்கு பக்கத்தில் படுத்திருந்தவரை பார்த்து பயத்தில் அலறியபடியே தாயாரை தட்டி எழுப்பி அம்மா..அம்மா உனக்கு பக்கத்திலை யாரோ கள்ளன் வந்து படுத்திருக்கிறான் என்று கத்தியிருக்கிறான். டேய் அது கள்ளன் இல்லை அதுதான்தான்ரா உன்ரை அப்பா என்று தாயார் மகனை சமாதானப்படுத்தியிருக்கிறார்.


 

பாவம் இவர் தாயக செய்திகளையே படிக்கிறேல்லையெண்டு நினைக்கிறேன்.கடந்த பரீட்சையில் கல்வியில் தமிழ் மாணவர்கள் எவ்வளவு சிரமத்தின் மத்தியிலும் அதிகளவு புள்ளிகள் எடுத்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது இவரிற்கு புரியவில்லை.



 

பாவம் தனக்கு கொடுத்த தலைப்பையே மறந்து போய் வந்ததுமே நடுவர் சுமேயை பார்த்து மின்னலிடை என்று ஜொள்ளு விடத் தொடங்கியவரிற்கு எங்கள் அணியை பார்க்கும் போது

 


 

 

இன்று உங்களிற்கு கரிநாள் என்றிருந்தால் பேசாமல் சினிமாபற்றி எழுதிவிட்டு போய்விடுவார்.இவர் நிலைமை இப்படியிருக்க தேடல் இருந்தால் தான் மனித வாழ்வாம் அதனால் எதையொ தேடித்தானாம் கனடா வந்தாராம்.இவர் தேடி வந்தது கிடைத்து விட்டதா? ஜயா உழுகிற மாடு என்றால் உள்ளுரிலையும் உழும் வெளிநாடு வந்துதான் உழவேண்டும் இல்லை.
அடுத்தாய் வெளிநாட்டிலை இருந்தால்தானாம் ஜமேக்கா . கியூபா போகலாமாம்.எதுக்கு கஞ்சா அடிக்கவா??எங்களிற்கு காரைநகர் கஜேரனா கடற்கரைதானய்யா கியூபா. கீரிமலை கடல்தான் ஜமேக்கா இங்கை இல்லாத என்னத்தை அங்கை கண்டிருப்பார்.கூவிலில் கள்ளடித்து விட்டு கீரிமலையில் குளித்துவிட்டு கடலைவடை வாங்கி கடித்தபடி கடற்கரைமண்ணில் புரண்டு விட்டு கடைசியாய் சேந்தாங்குளம் சந்தியில் வந்து சத்தியெடுத்து விட்டு போகும் சுகம். இவர் சொன்ன கியூபாவில் வருமா??

.இரண்டும் இரண்டும் எத்தனை என்று கல்குலேற்றரில் கணக்கு பார்த்து சொல்பவர்களிற்கு பெருக்கல் .பிரித்தல்.கழித்தல் . வகுத்தல் என்று மனதிலேயே கணக்கு போட்டு பட்டென்று பதில் சொல்லும்.எங்கள் கல்வியை தரமில்லாத கல்வி என்று சொன்ன ஒரேயொருவர் இவர்தான்.

:unsure:  :unsure:  :unsure:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணாவின் விவாதம் சூப்பர். வழமை போல சிரிக்கவும், சிந்திக்கவும்
வைக்கும் வசன நடை. ஊர்கல்வி பற்றி, நான் ஊரிலே சாதாரண தர வர்த்தகத்திலே
படித்த வரவு, செலவு கணக்குகள், இன்றும் எனது வேலையில் பயன்படுகின்றது.
இங்கு பல்கலையில் படித்த அநேக விஷயம் மண்டைக்குள் இல்லை. ஊரிலே உயர்தரம்,
சாதாரண தரத்திலே படித்தவை இப்பவும் ஞாபகமாய் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமைக்கா,கியூபாவை எமது நயினாதீவிற்கும்,செந்தாம் குளத்திற்கும் கசூரினா கடற்கரைக்கும் ஒப்பிடுகின்றார்கள் .அண்ணை மாருக்கு ஒரு ரிக்கெட் போடத்தான் கிடக்கு .

ALL INCLUSIVE இல் போய் இறங்கினால் தண்ணி ,சாப்பாடு இருபத்திநாலு நேரமும் இலவசம் .நீச்சல் தடாகத்தில் படுத்துகிடக்க  ஸ்பானிய ------கள் அந்தமாதிரி உடுப்புடன் வந்து கிளாசை நிரப்பிவிட்டு போக விரும்பிய சோட்ஸ் ஈற்றை  எடுத்து ஒரு கடி கடித்துக்கொண்டு இருப்பதில் உள்ள சுகம் இருக்கே ? ஆகா .

 

 

சாப்பாடு இருபத்திநாலுமணி நேரமும் இலவசம்......
 
எங்கே  உங்களின் கரகோசம் அண்ணனின் காதை கிழிக்கட்டும்... :D  :lol:  :D

சாத்திரி அண்ணா, நெத்தியடி நெத்தியடி என்று கேள்விபட்டு இருக்கிறேன். இண்டைக்குத்த்தான் அதை பார்த்து இருக்கிறேன். சூப்ப்ப்ப்பர் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு இசையின் வாதத்தைப் பார்க்க மொக்கை மாதிரி இருக்குது :)  அதிகம் எதிர் பார்த்தேனோ தெரியாது :unsure: [மன்னிக்கவும் இசை] :)
சாஸ்திரி தன்ட வாதத்திறமையை நிருபீத்து இருக்கிறார் சுப்பர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணர் கரும்பு அர்ஜுன் சாத்திரி எல்லாரையும் பாராட்டிறன் :)  :) .

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து கங்காரு தேசத்து காளை பாய போகுது ....

சும்மா அதிர போகுதில்ல

புங்கையா கொக்கா?

இந்த பட்டி மன்றின் வெற்றியை அடுத்து

மாணவர் போராட்டத்தை பற்றிய இன்னொரு பட்டி மன்றமும் நடாத்த தீர்மானிக்க பட்டிருக்கு.....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119993#entry881073

சுண்டலுக்கு சமர்ப்பணம் .

426571_10151521087418394_514525350_n.jpg

தொழில் ----- சீரியல் பார்ப்பது , போன் பண்ணி விடுப்பு கேட்பது

உபதொழில் ------- பிள்ளை பார்ப்பது

சமையல் ------- வாரத்துக்கு ஒருதடவை செய்வது

கணவன் ------ எந்த ப...ழசயும் தின்றுவிட்டு நாள்முழுக்க வேலை செய்யும் ஒரு விலங்கு

மாமி ------ பழைய சம்பிரதாயம் , கலாசாரம் சொல்லி , முழு சட்டை போடசொல்லுபவர்

அம்மா ------ பிள்ளை பேறுக்கு மட்டும் வருபவா

பிள்ளைகள் ----- சன் டிவி பார்க்கவிட்டாமல் தொல்லை தருபவர்கள்

மேக்கப் ------- 4 மணித்தியாலமாக போட்டாலும் முடியாத ஒரு தொழில்

கடை சாப்பாடு --- கிழமைக்கு 6 தரம் வீடு தேடி வருவது

பார்ட்டிகள் ---- இருக்கும் நகைகள்,சாறிகளை போட்டுக்காட்ட உதவும் நிகழ்வுகள்

சாறிகள்---- என்ன விலையானாலும் ஒரு தடவை மட்டும் கட்டப்படுவது

சினேகிதிகள் --- உலக நடப்பு புதினம் சொல்ல்பவர்கள்

கள்ளர் ------- பார்டிக்கு அடுத்த நாள் வீட்டில் உள்ளதை அள்ளிக்கொண்டு செல்ல்பவர்கள்

கோவில் ----- பொழுது போக்கும் இடம்

விரதம் ----- ஊரில பிடிச்சனான் இங்க கஷ்டம்

வருத்தம் ----- கணவனை சமையலில் தள்ள அடிக்கடி வருவது

உடுப்பு கடை ---- சீலை வாங்கினா பிளவ்ஸ் பீரியா தச்சு குடுப்பவர்

handbag ----- மினி ஸ்டேட்மென்ட் , சொப்பிங் பில்லுகள் வருடகணக்காக இருக்கும் பெட்டகம்

எடை ---- வருடா வருடம் அதிகரிக்கும் ஒரு அளவை

குங்குமம் ----- ஐயர் குடுக்கும் போது நினைவுக்கு வரும் சிவப்பு கலர்

தாலி------- பார்ட்டிகளுக்கு மட்டும் அணிவது

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹஹா சூப்பர்

  • தொடங்கியவர்

செம்போடை பின்னாலை போன புங்கையை காணேலையப்பா :lol: :lol: . ஆராவது எங்கையாவது கண்டியளோ :D :D ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.