Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் உட்பட உணர்வாளர்கள் நள்ளிரவில் கைது.[படங்கள்]

Featured Replies

உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் உட்பட உணர்வாளர்கள் நள்ளிரவில் கைது.[படங்கள்]

 

kaithu-a.JPGஇலங்கை
இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது
வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் 
மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்ந்தது   .


உண்ணாவிரதத்தை ஆதரித்து, தமிழகம்
முழுவதும் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதனிடையே, மாணவர்கள் தங்கள்
கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக
தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் பிரதிநிதிகள் நேரில் வந்தால் மட்டுமே
பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வந்த
நிலையில்

இன்று 11.03.2013 அதிகாலை   1.45 மணியளவில் உண்ணாவிரத
பந்தல் அருகில் போலீஸ் படை குவித்து  போராட்டம் இருந்த லயோலா கல்லூரி
மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள்
இயக்குனர்.கௌதமன், இயக்குனர்.களஞ்சியம்,  ம.தி.மு.க. மல்லை சத்யா ,
வேளச்சேரி மணிமாறன் திருமலை(சி.பி.ஐ), கென்னடி,  மே 17 இயக்கம்
திருமுருகன், தோழர்.கயல்விழி ,தோழர்.இராஜா
ஸ்டாலின்,செந்தில்,அருண்செளரி,திருமலை உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும்
கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நாலக்கூடத்தில்  
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

லயோலா கல்லூரி மாணவர்கள் தமது உண்ணாவிரதத்திற்காக முன்வைத்துள்ள கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3.
சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு.
சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான
தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4.
சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற
தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து
அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.


kaithu-11.JPG

Share this post


http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13271%3Aarest-koyamedu&catid=36%3Atamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் காந்தின்ட அகிம்சை நாடு.....

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இன்னும் ஓரிரு நாட்கள் கழித்துத்தான் கைது செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இன்றைக்கு வெளிவந்த மாணவர்களின் பேட்டியை கண்ட அரசு உடனடியாகவே கைது செய்கின்ற முடிவை எடுத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் உறவினர்களின் விபரத்தை திரட்டி அவர்கள் மறைமுகமாக  மிரட்டப் படலாம். அதன் மூலம் மணவர்கள் அடங்கிப் போவார்கள். தமிழகத்தில்  பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவற்ற எந்தப் போராட்டமும்  ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்படும் சாத்தியமே அதிகம். அதனை அந்த கட்சிகளே செய்வார்கள். காரணம் அவர்கள் இலாபம் அங்கு இல்லை இதனை  உணராமல் எந்த போராட்டமும் தன்னிச்சையாக  வெற்றி பெற சந்தர்ப்பம் இல்லை. முத்துக் குமார் மூலம் எழுந்த உணர்ச்சி அலை கூட அனைத்து அரசியல் கட்சிகளின் தலையீட்டால்தான் மழுங்கடிக்கப்பட்டிருந்தது.  அதற்கு யாரும் விதி விலக்கு அல்ல.

Edited by sathiri

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

 

சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவர்களை நள்ளிரவில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

மேலும், உண்ணாவிரத பந்தலை சீல் வைத்தனர்.

 

மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை அருகில் உள்ள சமுதாய கூடத்தில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

 

 

மாணவர்கள் குற்றச்சாட்டு:

மேலும், உண்ணாவிரதப்பந்தலில் இருந்த நாற்காலிகளை காவல்துறையினர் அடித்து நொறுக்கியதாக மாணவர்கள் குற்றச்சாட்டு.

 

http://puthiyathalaimurai.tv/students-are-admitted-in-hospital

Edited by akootha

மாணவர்கள் ஏற்கனவே பல வெற்றிகளை சாதித்து விட்டார்கள்.

  • மாணவர்கள் தாமாக எந்த கட்சியும் சாராமல் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது ஒரு செய்தியை தமிழக/இந்திய  அரசியல் கட்சிகளுக்கும் ஒரு வரலாற்று திருப்பத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

  • மாணவர்களை எந்தவித நியாயமான காரணம் இல்லாமல் அகற்றியதால் உலகின் பெரிய மக்களாட்சி நாட்டு போலி சனநாயகத்தை உலகிற்கு காட்டியுள்ளார்கள்.
  • எல்லாத்துக்கும் மேலாக ஈழ தமிழ் மக்கள் விடயாமாக அடுத்த தலைமுறை தெளிவான சிந்தனை உள்ளவர்களாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு பேசாமல் இருந்திருந்தால், உண்ணாவிரதம் தானாக அடங்கிப்போயிருக்கக் கூடும்!

 

இவர்களைக் கைது செய்ததன் மூலம், இந்த மாணவர் போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கப் பட்டுள்ளது!

 

இந்திய ஜனநாயகம், மீண்டும் கூவத்துக்குள் எறியப்பட்டுள்ளதையே, இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது!

 

போராடிய மாணவர்களுக்கு எனது நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவர்களின் போராட்டம்.. தமிழக மக்களிடம் உண்மையான ஈழ உணர்வாளர்கள் யார் என்பதை அழகாக அடையாளம் காட்டியுள்ளது.

 

இந்தப் போராட்டம்... செய்த நன்மைகள்..

 

1.தமிழக மாணவர்கள் மத்தியிலும் தமிழக மக்கள் மத்தியிலும் ஈழ மக்கள் தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை கொண்டு சென்றுள்ளது.

 

2. ரெசோவின் நரித்தனம் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

3. ஜெயலலிதாவின் இரட்டை அணுகுமுறை அப்பட்டமாக்கப்பட்டுள்ளது.

 

4. உண்மையான ஈழ மக்கள் நலன் வேண்டுவோரை தெளிவாக இனங்காட்டியுள்ளது.

 

5. எந்த பெரிய அரசியல் சக்தியையும் அச்சுறுத்தக் கூடிய பலம் மாணவர்களுக்கு உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் கருணாநிதியும் பள்ளிகளை மூடி மாணவர்களின் எழுச்சியை நரித்தனமாக தடுத்தார்.

இப்போ ஜெயலலிதா அதை தன் பங்கிற்கு செய்து முடித்துள்ளார்.

 

ஆனால் கருணாநிதி.. அடக்க நினைத்தது எப்படி இன்னொரு வடிவில் வெளிக்கிளம்பியதோ.. அதேபோல்.. ஜெயலலிதா அடக்கியதும் இன்னொரு வடிவில் வெளிக்கிளம்பும்..! மாணவர்களின் சக்திக்கு எல்லா முக்கிய அரசியல் சக்திகளும் பயப்படுறாங்க என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாணவர்கள் உண்ணா நோன்பிருந்து... அதை இந்திய மாநில நடுவன் அரசுகள் ஏற்றிருக்கும் என்றில்லை. ஆனால்.. இப்படியான அராஜகத்தை ஏவிவிட்டதன் மூலம்.. தமிழக மக்களும் இந்திய மக்களும் தமது அரசுகளின் போக்குகள் குறித்து கேள்வியும் அழுத்தமும் கொடுக்கும் நிலை உருவாகும்.

 

நாளை கருணாநிதி இதனை கண்டித்து அறிக்கை விடாட்டி பாருங்க..! அதுவே போதும்.. இவர்களின் இரட்டை வேடத்திற்கு சாட்சி சொல்ல..! :icon_idea:

1802_431891206889433_1632563965_n.png

549318_431891243556096_1639929618_n.png

311102_431891193556101_1666085340_n.png

580573_431891200222767_1032054578_n.png

நள்ளிரவில் கைது: தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை போலீசார் நள்ளிரவி்ல் திடீரென கைது செய்தனர். மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா­க ­போ­லீ­சார் ­தெரிவித்­துள்­ளனர் .­

 

மா­ண­வர்­க­­ளுக்­கு ­ஆ­த­­ர­வு ­தெ­ரி­வித்­து ­வந்­த­வர்­க­­ளை­யு­ம் ­போ­லீ­­சார் ­கை­­து ­செய்­த­னர். ஆ­த­ர­வ­ா­ளர்­கள் ­அ­ரு­கில் ­உள்­ள ­ச­மு­தா­ய ­ந­ல ­கூ­டத்த்­தில் ­­­தங்­க ­வைக்­கப்­பட்­­ட­னர். உண்­ணா­வி­ர­தம் ­இ­ரு­ந்­து ­வந்­த ­பந்­த­லுக்­கும் ­போ­லீ­சார் ­சீல் ­வைத்­த­னர்.

 

 

போலீஸ் மீது புகார்:நள்ளிரவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்கள், பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

தடுப்பு காவல்: மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தர்களையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் தங்க‌ வைக்கப்பட்டிருந் தனர். மேலும் மல்லை சத்யா, சினிமா இயக்குனர்கள் ராம்,களஞ்சியம் உட்பட முக்கிய பிரமுகர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=664634

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வார்த்தையில் கூறுவதாயின் காந்தியைப்பற்றி பீத்தும் நாட்டில் காந்தியம் செத்துப்போச்சு 

எழுத்தாளர்கள் ஏற்கவே லையோலா கல்லூரியில் இருந்து மாணவர்கள் அப்புறப்படுத்தபட்ட போது அவர்கள் முயற்சியை கைவிடவில்லை என்பதை மறந்து ஆரூடம் எழுதுகிறார்கள்.

 

இப்போது இரவில்தான் கைது செய்யப்பட்டர்கள் என்பதை கவனிக்க வேண்டும். அரசு நேரடியாக மோத விருப்பவில்லை என்றதைத்தான் இது காட்டுகிறது. செய்தி பத்திரிகைகளில் வெளிவந்து தீர்மானங்கள் எடுத்தத்தின் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம்.

 

ஜெயலலித்தா  கருணாநிதிக்கு தடி கொடுத்திருக்கிறா என்பதும் மறுக்க முடியாத உண்மை.

 

இது முடிந்து விடவில்லை. முன்னர் அடக்கிய கருணாநிதி இப்போ உண்ணாவிரதமிருந்தவர்களின் காலில் விழுந்து தனது பக்கம் திருப்ப முயன்றார் என்பது எல்லோரும் பார்த்ததுதானே.

 

அப்போது காங்கிரஸ் மிக வலுனான ஆணைகளைக் கொடுத்து செய்வித்து வந்தது. இப்போது அதிர்வு நாடுமுழுக்க உணரப்படுகிறது. இந்த முறை காங்கிரசே அவதானமாகத்தான் செயல்படும்.

 

இனி தடுக்கத்தாக அழுத்தம் ஒன்று வரப்போவத்தில்லை. ஜெயலலிதா தனது பிரதமர் கனவுக்கு ஆப்பு வைப்பது மட்டும் அல்ல தேர்தலுக்கு முழுக்குபோடுவதாகத்தான் முடியும். 

 

 

[ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 00:34 GMT ] [ அ.எழிலரசன் ]

loyola-fasting-students.jpg

சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இந்தியா ஆதரவளிக்க

வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள்

நேற்று நள்ளிரவு தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

அளிக்க வேண்டும், சிறிலங்காவில் தமிழர்கள் சமஉரிமை பெற நடவடிக்கை எடுக்க

வேண்டும், சிறிலங்கா மீது பொருளாதார ‌தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட

8 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே லயோலா

கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்த இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தநிலையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரையும்

காவல்துறையினர் நேற்று நள்ளிரவி்ல் திடீரென கைது செய்தனர்.

மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் ராயப்பேட்டையில் உள்ள அரசு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா­க காவல்துறையினர்

­தெரிவித்­துள்­ளனர்.­

அத்துடன் மா­ண­வர்­க­­ளுக்­கு ­ஆ­த­­ர­வாக உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவர்களையும் கைது செய்த காவல்துறையினர்

­அ­ரு­கில் ­உள்­ள சமுதா­ய ­ந­ல ­கூ­டத்தில் ­­­தங்­க ­வைத்துள்ளனர்.

உண்­ணா­வி­ர­தம் ­இ­ரு­ந்­த ­பந்­த­ல் எவரும் நுழைய முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, தாம் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள

மாணவர்கள், உண்ணாவிரதப் பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை

காவல்துறையினர் அடித்து நொருக்கியதாக தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டித்துள்ளன.

லயோலா மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழ்நாடெங்கும் பெரும்

போராட்டமாக வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டே, இரவோடு இரவாக மாணவர்கள்

கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்படும் போது, பரவலான போராட்டங்களில் ஈடுபட மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

முன்னதாக, உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் கட்சியின்

முக்கிய தலைவர்களில் ஒருவரான கேவி தங்கபாலுக்கு கடும் எதிர்ப்புத்

தெரிவிக்கப்பட்டது.

அவர் மீது சிலர் கற்களையும் செருப்புகளையும் வீசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130311107922

 

தமிழ் நாட்டு நிலைமை டெசொ இல்லாமல் போராட்டங்கள் நடைபெறமுடியாது என்பது சுத்த கம்பக் என்பதைதான் தமிழ் நாட்டு அரசின் நடவடிக்கை பறைசாற்றியிருக்கிறது.

Edited by மல்லையூரான்

உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரையும் , மற்றும் அங்கு கூடி இருந்த தமிழ் உணர்வாளர்களையும் 300-க்கும் மேற்பட்ட பொலிசார் அடக்குமுறையை உபயோகித்து அத்துமீறி உள்நுழைந்து கைது செய்துள்ளது பாசிச 'ஜெ' அரசின் காவல்துறை.

 

 

இயக்குனர்.கௌதமன், இயக்குனர் களஞ்சியம், மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் ,தோழர் திருமலை(சி.பி.ஐ), தோழர் கென்னடி,தோழர் .திருமுருகன்,தோழர்.கயல்,தோழர்.இராஜா ஸ்டாலின், தோழர்.செந்தில், தோழர்.அருண்செளரி, தோழர்.திருமலை உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

 

கைது செய்யப்பட 200 க்கும் மேற்ப்பட்ட தமிழுணர்வாளர்கள் அரும்பாக்கத்திலுள்ள.............. "சமுதாய நலக்கூடம்,",நியூ தெரு,ஜாய் நகர், 3-வது ரோடு,அரும்பாக்கம்,சென்னை-106 என்ற முகவரியில் தங்க வைக்க பட்டுள்ளனர்.

 

சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவர்களை நள்ளிரவில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


மேலும், உண்ணாவிரத பந்தலை சீல் வைத்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை அருகில் உள்ள சமுதாய கூடத்தில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

 

429755_10200689544139266_1778772013_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

தங்கபாலு,தி.மு.க வை சேர்ந்தோர் மானவர்களை சந்திக்க சென்றதாகவும் மாணவர்கள் அவர்கலை சந்திக்க விரும்பவில்லை என கூறியதாகவும் பின்னர் அவர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசி விட்டு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எல்லோரும் போய் சந்தித்ததை கேள்விப்பட்டுவிட்டு கடைசியாகத்தான் போனார்கள். அதுவே கோபத்துக்கான காரணமாகவும் இருக்கலாம்.

இன்று வெளிமாவட்ட மாணவர்களும் சென்னை வந்து இவர்களுக்கு ஆதரவாக களமிரங்குவார்கள் என்ற உறுதியான செய்தியின் அடிப்படையிலேயே இக்கைது. வழக்கம்போல அரசின் நரித்தனம் + பொலிசாரின் கையாலாகாத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் போராட்டம், அரச அடக்குமுறையால்... ஒடுக்கப் பட்டது கவலை தரும் செய்தி.
அகிம்சை போராட்டம், தமிழனுக்கு விடிவு பெற்றுத்தராது என்பதற்கு, மாணவர்களின் கைது மீண்டும் ஒரு படிப்பினையாக இருக்கின்றது.
அரசியல்வாதிகளுக்கு, உண்மையிலேயே... ஈழத்தமிழர்கள் மேல் அக்கறையிருந்திருந்தால், மாணவர்களின் கோரிக்கையை... ஓரளவு தன்னும் பரிசீலித்திருந்திருக்கலாம்.

லயோலா கல்லூரி மாணவர்கள் கைதை கண்டித்து திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டம். மேலும் பத்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க ஆயத்தம் - செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

லயோலா கல்லூரி மாணவர்கள் கைதை கண்டித்து திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டம். மேலும் பத்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க ஆயத்தம் - செய்தி

 

அதுதான்.... சரி,

ஒரு கதவை மூடினால்... மற்றக் கதவு திறக்கப் பட வேண்டும். சரியான நகர்வு மாணவர்களே. :)

சென்னையில் முடிந்தது திருச்சியில் தொடங்கியது: இலங்கைக்கு எதிராக மாணவர்கள் உண்ணாவிரதம்

 

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை
கண்டித்தும், போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட
வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து திருச்சி தூய வளனார்
கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைக்கான
மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக 10 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 100க் கணக்கான மோணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம்
நடைபெற்று வருகிறது. பாதுகாப்புாக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது
நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்தும், இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த
வேண்டும் என்பது உட்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை லயோலா
கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவரையும் நேற்று நள்ளிரவு போலீஸார் வலுக்கட்டாயமாக அகற்றி
மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரட்டத்தை எப்படி அடக்க போக்கினம்....இது பெரிய மாணவர் போராட்டமாய் போக்கப் போக்குது....அங்கை மாணவர்கள் கைது...இந்த போராட்டத்தையும் குழப்ப அல்லது கைது செய்ய நினைத்தால்...மறு நாளே மற்ற மாணவர் புது போராட்டத்தை ஆரம்பிக்கனும்..இந்தியா அரசியல் வாதியலின் போலி முகதை கிழித்து எறியனும்...இப்படி நல்ல என்னத்தோடு போராடுங்கோ விடிவு கிடைக்கனும்..இதுவும் அவைக்கு புரிய வில்லை என்றால்....சொல்லுறவனுக்கு என்ன பாசையில் சொல்லனுமோ அதே பாசையில் சொல்லுஙோ...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரட்டத்தை எப்படி அடக்க போக்கினம்....இது பெரிய மாணவர் போராட்டமாய் போக்கப் போக்குது....அங்கை மாணவர்கள் கைது...இந்த போராட்டத்தையும் குழப்ப அல்லது கைது செய்ய நினைத்தால்...மறு நாளே மற்ற மாணவர் புது போராட்டத்தை ஆரம்பிக்கனும்..இந்தியா அரசியல் வாதியலின் போலி முகதை கிழித்து எறியனும்...இப்படி நல்ல என்னத்தோடு போராடுங்கோ விடிவு கிடைக்கனும்..இதுவும் அவைக்கு புரிய வில்லை என்றால்....சொல்லுறவனுக்கு என்ன பாசையில் சொல்லனுமோ அதே பாசையில் சொல்லுஙோ...

 

பையா...., லயோலா கல்லூரி மாணவர்களை நேற்று கைது செய்தவுடன், தமிழ்நாட்டில் மற்றக் கல்லூரிமாணவர்கள் அமைதியாக இருப்பதைப் பார்த்து கவலையாக இருந்தது. அந்தக்கவலையை திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதன் மூலம் போக்கி விட்டார்கள். இனிமேல் இது ஒரு தொடர் போராட்டமாகவே அமையப் போகின்றது. இதற்குப் பிறகாவது அரசியல் வாதிகள் தங்கள் மனநிலையை மாற்ற முன் வராவிட்டால், அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். மாணவர்கள் உசாராக இருப்பது, நல்ல சமிக்ஞையாக தெரிகின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் திட்டம் மிட்டுத் தான் இரவு போல மாணவ செல்வங்களை கைது செய்து இருக்கிறாங்கள் சிறி அண்ண்ணா...பகல் போல செய்தால் பின் விலைவுகள் அதிகமாய் இருக்கும் என்ற பயத்தில் தான் இன்று இரவு இந்த கைது...கைது செய்து 12 மனித்தியாலமும் ஆக்க வில்லை அதுக்கு கிடையில் திருச்சி மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பிச்சது இந்தியன் அரசியல் வாதியலின் அடி வயித்தை கலக்கி இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

11-strike33-300.jpg

 

ஈழத் தமிழருக்கு ஆதரவு- தமிழகத்தில் பற்றி எரியும் மாணவர்கள் போராட்டம்! பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பற்றி எரிந்து வருகிறது. இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை, தமிழீழம் அமைப்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர். இம்மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்களின் ஆதரவு வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலையிலேயே மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் லயலோ கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள், காரைக்குடி அழகப்பா கல்லூரி, ஆனந்தா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், மன்னார்குடி என ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்

 

சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இலங்கை அதிபர் ராஜபக் சேவை கண்டித்து அடையாறில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அடையார் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93915

நெல்லையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 

 

ராஜபக்சேவை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரி வித்து, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்ஸி சேவியர் கல்லூரி மாணவர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93914

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.