Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகமெங்கும் மாபெரும் மாணவர் புரட்சி வெடித்துள்ளது!!!

Featured Replies

பங்குனி 11, 2013

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும்  தமிழீழ பொதுவாக்கெடுப்பு கோரியும் கைதுசெய்யப்பட்ட லயோலாக் கல்லுாரி மாணவர்களை விடுவிக்கக்கோரியும் பெரும் மாணவர் போராட்டம் வெடித்துள்ளது.

இது பற்றிய மேலதிக தகவல்கள் ,

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி – திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

try%20stundents.jpg

இலங்கை படுகொலைக்கு ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும் தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று உண்ணாநிலை இருந்த கல்லூரி மாணவர்களை தமிழக காவல் துறை வலுக்கட் டாயமாக கைது செய்துள்ளதை கண்டித்தும். இலங்கைக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியிருக்கும் சுப்பிரமணியசாமியை கண்டித்தும் மன்னா

ர்குடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2500 பேர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து சுப்பிரமணியசாமி உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், லயோலா மாணவர்களை விடுதலை செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவபட்டன், சாயல்ராமன் ஆகியோர் களத்தில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ராஜபக்சேவை கண்டித்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் லயோலா கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் காரல்மார்க்ஸ் மாணவர்களை இன்று சந்தித்து ஆதரவு கேட்டார்.

பின்னர், 100 மாணவர்களை திரட்டி அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதியளிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லயோலா கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடி காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

சென்னை அடையாறில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

http://urumal.com/archives/தமிழகமெங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

Rajkumar Palaniswamy கைது செய்யப்பட்ட இயக்கத் தோழர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டுள்ளனர் . மீண்டும் அவர்கள் கோயம்பேடு போராட்டத் திடலுக்கு வந்துள்ளனர் . மாணவர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பி போராட்டத்தை மீண்டும் தொடங்குவார்களா , போராட்டம் மீண்டும் அதே இடத்தில் எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. நள்ளிரவில் காவல்துறை செய்த தவறுக்கு அரசு இப்போது பொறுப்பாகி உள்ளது. thanks-facebook

  • கருத்துக்கள உறவுகள்

http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/580645_4572901840272_82932303_n.jpg

யாழ்ப்பாணத்தில் இருந்து லொயாலாக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் செய்தி அன்பின் குரு அண்ணா .. ஒரு அவசர செய்தி .. லோயலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தின் முக்கியத்துவத்தை எம் ஈழ மக்களிடம் எடுத்துச்செல்லவும் .. பட்டினிப்போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஓர் ஊக்கம் கொடுக்கும் முகமாகவும் இன்று யாழ்பாண நகரத்தில் எம்மால் இரவோடு இரவாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்படுள்ளன.. இச்செய்தியின் முக்கியம் நன்குணர்ந்த நீங்கள் தயவுசெய்து இதனை இணைய உலகெங்கும் பரப்ப உதவிசெய்யுங்கள்... பலத்த இராணுவ கண்காணிப்பினுள்ளும் மாணவர் நாம் செய்தவற்றை லோயலா கல்லுரி மாணவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள்... கீழே அதன் முழுவடிவமும் துண்டுப்பிரசுரத்தின் பிரதியும் இணைக்கப்படுக்கது.. தயவுசெய்து இதனை தமிழ சகோதரர்களிடம் சேர்த்து விடவும்... அன்புடன் தம்பிகள்.. எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு... இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது.ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது... நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்.. திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. எமக்கு இங்கு சாப்பிட மாத்திரமே வாய்திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.. ‘’நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு’’ என்பது போல் சர்வதேசமும் சிங்கள அரசுடன் மறைமுகமாக கைகோர்க்கிறது.. இங்கு தினம் தினம் இசைப்பிரியாக்களும் பாலச்சந்திரன்களும் புதைக்கப்படுகிறார்கள்.. இந்நிலையில் எம்மக்களுக்கு நீதி சொல்ல தமிழகத்தை விட்டால் யாருமில்லை.. போராட இடம் கூட மறுக்கப்பட்ட நிலையில் எமக்காய் போராடும் எம் இரத்தத் உறவுகளே... லோயலா கல்லூரியில் எழுந்துள்ள இத்தீப்பொறியை தமிழக கல்லுரிகள் அனைத்துனுள்ளும் பரப்புங்கள் அன்று முத்துக்குமாரன் எழுப்பிய தீயை அரசியல் அணைத்தது போல் இன்று உங்களுடைய போராட்டத்தை அணையை விடாதீர்கள்.. சமரசங்கள் பல வடிவில் வரும் சோர்ந்து போய் விடாதீர்கள், ஏமாந்து போய் விடாதீர்கள். ‘’மாணவர் சக்தி மாபெரும் சக்தி’’

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இனம் விட்டு நிலம் விட்டு வாழ்ந்தாலும் என் இனத்திக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று எழுந்து விட்ட நீங்கள் எங்களை வீழவிட்டமா ட்டீர்கள் என்ற நம்பிக்கை

எம்மனதில் எழுந்துவிட்டது உங்கள் வீரம் மிக்க போராட்டம் நிச்சஜம் வெல்லும்

http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/580645_4572901840272_82932303_n.jpg

யாழ்ப்பாணத்தில் இருந்து லொயாலாக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் செய்தி அன்பின் குரு அண்ணா .. ஒரு அவசர செய்தி .. லோயலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தின் முக்கியத்துவத்தை எம் ஈழ மக்களிடம் எடுத்துச்செல்லவும் .. பட்டினிப்போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஓர் ஊக்கம் கொடுக்கும் முகமாகவும் இன்று யாழ்பாண நகரத்தில் எம்மால் இரவோடு இரவாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்படுள்ளன.. இச்செய்தியின் முக்கியம் நன்குணர்ந்த நீங்கள் தயவுசெய்து இதனை இணைய உலகெங்கும் பரப்ப உதவிசெய்யுங்கள்... பலத்த இராணுவ கண்காணிப்பினுள்ளும் மாணவர் நாம் செய்தவற்றை லோயலா கல்லுரி மாணவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள்... கீழே அதன் முழுவடிவமும் துண்டுப்பிரசுரத்தின் பிரதியும் இணைக்கப்படுக்கது.. தயவுசெய்து இதனை தமிழ சகோதரர்களிடம் சேர்த்து விடவும்... அன்புடன் தம்பிகள்.. எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு... இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது.ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது... நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்.. திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. எமக்கு இங்கு சாப்பிட மாத்திரமே வாய்திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.. ‘’நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு’’ என்பது போல் சர்வதேசமும் சிங்கள அரசுடன் மறைமுகமாக கைகோர்க்கிறது.. இங்கு தினம் தினம் இசைப்பிரியாக்களும் பாலச்சந்திரன்களும் புதைக்கப்படுகிறார்கள்.. இந்நிலையில் எம்மக்களுக்கு நீதி சொல்ல தமிழகத்தை விட்டால் யாருமில்லை.. போராட இடம் கூட மறுக்கப்பட்ட நிலையில் எமக்காய் போராடும் எம் இரத்தத் உறவுகளே... லோயலா கல்லூரியில் எழுந்துள்ள இத்தீப்பொறியை தமிழக கல்லுரிகள் அனைத்துனுள்ளும் பரப்புங்கள் அன்று முத்துக்குமாரன் எழுப்பிய தீயை அரசியல் அணைத்தது போல் இன்று உங்களுடைய போராட்டத்தை அணையை விடாதீர்கள்.. சமரசங்கள் பல வடிவில் வரும் சோர்ந்து போய் விடாதீர்கள், ஏமாந்து போய் விடாதீர்கள். ‘’மாணவர் சக்தி மாபெரும் சக்தி’’

அப்போது அமைப்புகளை சேர்ந்த நபர்கள் காவல்துறையை கேள்வி கேட்டனர் .

ஏன் எதற்காக உள்ளே வந்தீர்கள் . இது தனியார் திடல் தானே , நீங்கள் இங்கு எப்படி அத்து மீறி உள்ளே நுழைய முடியும் என்று கேள்வி எழுப்பினர் .

அதற்கு காவல்துறை நாங்கள் கைது செய்யத்தான் வந்திருக்கிறோம் என்றனர் .

உடனே தமிழ் அமைப்பினர் , கைது செய்வதற்கு ஆணை (வாரன்ட்) இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர் .

இருப்பினும் காவல்துறை அதை கண்டுகொள்ளவில்லை . மாணவர்களை நோக்கி முன்னேறியது . மாணவர்களை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு சங்கிலி அமைத்திருந்தனர் பிற மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் . காவல்துறை ஒவ்வொரு அடுக்காக தடியடி நடத்தி மனித சங்கிலியை உடைத்து மாணவர்களை நெருங்கினர் .மாணவர் அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு போய் வாகனத்தில் ஏற்றினர் .

313890_10200690600085664_1274010723_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் எழுச்சியை நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்
11-strike33-300.jpg
 
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பற்றி எரிந்து வருகிறது. இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை, தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மொத்தம் 27 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை, தமிழீழம் அமைப்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவே தனித் தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வர வேண்டும், தமிழகத்தில் இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர். இம்மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்களின் ஆதரவு வலுத்து வந்தது.

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலையிலேயே மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது,

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம்

சென்னை மாநிலக் கல்லூரி

சென்னை லயோலா கல்லூரி

சென்னை கே.ஆர்.எம்.எம் கல்லூரி

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி

அரியலூர் அரசுக்கல்லூரி

தஞ்சாவூர் அரசுக்கல்லூரி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம்.

திருச்சி தூய வளனார் கல்லூரி

திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்

காரைக்குடி அழகப்பா கல்லூரி..

காரைக்குடி ஆனந்தா கல்லூரி..

கும்பகோணம் பூம்புகார் கல்லூரி

பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் உள்ளிட்ட பல கல்லூரிகளின் மாணவர்கள் தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை, அம்பை மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில் உண்ணாவிரதம் இருந்து கைதான லயோலா மாணவர்களுக்கு ஆதரவாக நெல்லை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் அம்பை கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வாசலில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாணவர்கள் மணிகண்டன், திவாகர், மூர்த்தி, ரத்தினவேல், யோகேஷ், குணசேகரன், இன்பென்ட் பீட்டர், அருண்குமார், ராஜ்குமார், கனகராஜ், செல்வம் ஆகிய 11 பேரும் தொடர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்தனர்.

வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் இன்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். கல்லூரி வளாகத்தில் நடந்த உண்ணாவிரதத்துக்கு 3-ம் ஆண்டு மாணவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். 50 மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

பொன்னேரி எல்.என்.ஜி. கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையிலும் போராட்டம்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது சென்னையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்தியதற்கு கண்டணம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2,500 பேர் இன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

சமீபத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ராஜபக்சேவை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பு

இதேகோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை தனியார் கல்லூரி மற்றும் பூம்புகாரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் அம்பை கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் 1500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வற்புறுத்தியும் புதுவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 20 பேர் பஸ் நிலையம் எதிரே இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

http://tamil.oneindia.in/news/2013/03/11/tamilnadu-support-pours-for-loyola-team-171301.html

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி போராட்டம், 'இளைஞர்கள் கையில் தான் தங்கியுள்ளது' என்று தலைவர் சொன்னார்.

உணர்ந்து தக்க சமயத்தில் தோளோடு தோள் நிற்கும் மாணவச்செல்வங்களுக்கு நன்றி!!!

தமிழக மாணவமணிகளுக்கு எமது நல்வாழ்த்துகள். எமது போராட்டத்தில் நீதி இருக்கிறது; நியாயம் இருக்கிறது.

அறத்தின் ஆதரவு இருக்கிறது. எனவே வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையுடன் முன்செல்வோம். மாணவர்கள்

ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள தெளிவுடன் போராட்டத்தை முன்னெடுத்தால் பெருவெற்றியை அடையலாம்.தேர்தல்

ஒன்று நெருங்கிவருவதால் அல்லது தேர்தலுக்கே வழிவகுப்பதாக இப்போராட்டம் அமையலாம்.செல்வி ஜெயலலிதாவின்

முகமூடியும் கிழிக்கப்பட்டு உண்மை முகம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதால் அரசியல்களத்தில் நாம் எதிர்பாராத திருப்பங்களும்

ஏற்படலாம். எனவே நம்பிக்கையுடன் நல்லவைகளைச் செய்வோம்.

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவ செல்வங்களுக்கு நன்றி.

தமிழீழ போராட்டம் பொய்த்துவிட்டது என்று புலம்பும் சிறி லங்கா சிட்டு குருவிகள் சிதறி ஓடிவிட்டன.

தமிழீழம் கனவாகிவிட்டது என்று ஆரூடம் கூறிய போலி சாத்திரிகளும் அடங்கிவிட்டார்கள்.

உங்கள் எழுச்சி தொடர வாழ்த்துக்கள்.

தமிழ் ஈழம மலர்வதை அந்த கயவர் கூட்டம் தங்கள் கண்ணால் பார்க்கத் தான் போக்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்

part-025.jpeg

கூட்டமைப்பு, நா.க.த.அ, உலகதமிழர் பேரவை, எல்லாருக்கும் இங்கி (பேனா மை) வாங்கி குடுங்கப்பூ. மை தீர்ந்து போட்டுது..  ஆதரவாக ஒரு அறிக்கையும் காணோம்.. <_< <_<

கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட உணர்வை மதிக்கும் அதேவேளையில் இவர்களின் சக்தியை ஒருங்கிணைத்து, வல்லமையுள்ள, விலைபோகாத தலைமையுடன் சாத்தியபாடுகளைக் கொண்ட கோரிக்கைகளோடு செல்லும் பட்சத்தில் இப்போராட்டம் நிச்சயம் நீர்த்துப்போகாமல் வெற்றியடையும். அதுவே தமிழுணர்வாகளின் வேண்டுதல்களும், விருப்பமுமாகும்.

தமிழ் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் இப்போராட்ட செய்திகளை கண்டுகொள்ளாமல் ஒதுங்கியபோதும், புதியதலைமுறை தொலைக்காட்சி தொடர்ந்தும் நேரலைகளையும், பேட்டிகளையும் ஒளிபரப்புவது பாரட்டுக்குரியது.

நீங்கள் எவரையாவது மனதில் வைத்து  எழுதுகின்றீர்களா ராஐவன்னியன்???

வல்லமையுள்ள விலைபோகாத தலைமை ஒன்றுதான் இருந்தது. அது இப்பொழுது இல்லை. வேண்டும் என்றால் இந்த மாணவர்களிடம் இருந்து ஒன்று வந்தால் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

. நீங்கள் எவரையாவது மனதில் வைத்து  எழுதுகின்றீர்களா ராஐவன்னியன்???

ம்..எதிர்பார்த்து எழுதுவதெல்லாம் எங்கே நடக்குது...?? :huh:

ஆனால் ஒன்றுமட்டும் தோன்றுகிறது... மிக அருமையான வாய்ப்பு நெருங்கியபோது, அனைத்தையும் ஒற்றுமையில்லாமல் கோட்டைவிட்ட 'குடாக்குகள்' ஈழத்தமிழர்கள்...

அந்த நிலை இங்கேயும் வரக்கூடாது என்ற ஆதங்கம்தான்! :rolleyes:

உங்கள் கருத்தில் உடன்பாடில்லை

எந்த இனத்திலும் நூறுவீத் ஒற்றுமை அல்லது ஒரே கருத்து என்பது சாத்தியமற்றது.

ஆனால் உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்.

புரிந்து கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எது அந்தத் தலைமை என்பதை ராஜவன்னியன் அண்ணாதான் தைரியமாக.. மனதில் பட்டதைச் சொல்ல வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எது அந்தத் தலைமை என்பதை ராஜவன்னியன் அண்ணாதான் தைரியமாக.. மனதில் பட்டதைச் சொல்ல வேண்டும்..

அதைத்தான் நானும்  புடுங்கலாம் என்று பார்க்கின்றேன்

மனுசன் நழுவுகிறார் :D

  • கருத்துக்கள உறவுகள்

டிசைன் டிசைனா ஆப்பு வைப்பதில் டில்லி என்டைக்குமே கில்லி..

 1 ஸ்டு டிசைன் ஆப்பு.

http://tamil.oneindia.in/news/2013/03/11/tamilnadu-students-can-t-write-ias-exam-tamil-171310.html

இன்னும் ரயில்வே .. சுங்கம் பங்கம் என பல வழிகளில் வைப்பான்..

போகட்டும் ...இது ஏதோ போராட்டத்தை திருப்பி வேற வழில விடற மாறி இருக்கப்பா...

மாணவர்கள் உசாராக இருக்கணும்..

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் புடுங்கலாம் என்று பார்க்கின்றேன்

மனுசன் நழுவுகிறார் :D

அவர் தங்கபாலுவை சொல்லப்போறார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எது அந்தத் தலைமை என்பதை ராஜவன்னியன் அண்ணாதான் தைரியமாக.. மனதில் பட்டதைச் சொல்ல வேண்டும்..

இப்போதிருக்கும் தலைகளில் ஓரளவு வை.கோ தான்...

ஆனால் இவர் நல்லவராக இருந்தால் இக்காலத்திற்கு போதாது,..ம்..எப்படி சொல்வது...?  

வல்லமையுடன், அரசியல் சூழ்நிலைக்கேற்ற நுட்பமான வசீகரிக்கும்.தீர்க்கமான 'கமாண்டிங் தகமை' சற்றே குறைவுதான்.

இதற்கு முதல் புரட்சி  எழுதியிருந்தார்

அவர் என்ன எழுதியிருப்பார் என்று நினைத்து வந்தேனோ

அதை நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்

என்னே ஒற்றுமை.................. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.