Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுடன் கேள்வியின் செவ்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: கலோ யாழ்.. உனக்கு 15வது பிறந்த நாளாமே...

யாழ்: அப்படித்தாப்பா பேசிக்கிறாங்க..

கேள்வி: என்ன இப்படிச் சொல்லுறே

யாழ்: அப்ப எப்படிச் சொல்லுறதாம்.

கேள்வி: பிறந்த நாளும் அதுவுமா ஒரு உசாரா சொல்ல வேணாம்..

யாழ்: போப்பா கேள்வி.. எனக்கு இப்ப எல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

கேள்வி: இந்தச் சின்ன வயசில்.. என்ன வெறுப்பு உனக்கு.. காதல் தோல்வி..?!

யாழ்: காதல் தோல்வியா.. அதெண்டால் தொல்லை தீர்ந்துது என்று.. சம்பைன் அதுஇதென்று..பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கிட்டு எல்லோ இருப்பன்.

கேள்வி: அப்ப என்னதான் சோகம் உனக்கு...

யாழ்: என்ர உறவுகளே.. என் கூட ஒற்றுமையா இல்லையப்பா..!

கேள்வி: அதுக்குப் போயி.. இத்தனை சோகமா..??!

யாழ்: பின்ன.. இருக்காதா..??!

கேள்வி: சரி சரி அதைவிடு. காலம் மாற.. கோபங்கள் ஆற...சோகங்கள் தீர.. அவங்களும் மாறிடுவாங்கள்.

யாழ்: இருந்தாலும்.. என்னால முடியல்லையப்பா.

கேள்வி: சரி அதையே பேசிக்கிட்டு இராத.. அப்புறம்.... உனக்கு ஏதேனும் மாட்டிக்கிச்சு..

யாழ்: எங்க என்னத்தை மாட்டிறது.. எல்லாம் சுத்த வேஸ்டு..!

கேள்வி: இணைய உலகில 15 வருசமா இருக்கிறா.. ஒன்றுமே மாட்டல்லையா..?!

யாழ்: எவனப்பா என்னை கடலை போட விடுறான். அவனவன் தான் கடலை போட்டு செற்றிலாகிட்டு இருக்கான்...

கேள்வி: ஏன் நீயும் முயற்சிக்கிறது தானே..

யாழ்: எனக்கு தனிமடலும் இல்ல.. திண்ணையும் இல்ல.. ஸ்கைப்பும் இல்ல.. ஒரு பேஸ்புக் எக்கவுண்ட் மட்டும் தாப்பா.. மற்றும் படி.. என் மேல தான் எல்லாரும் சவாரி விடுறாங்கள்.

கேள்வி: ம்ம்.. உன் நிலைமை புரியுது. உனக்குத்தான் பேஸ்புக் எக்கவுண்ட் இருக்கே.. அப்புறம் என்ன..

யாழ்: பேஸ்புக் வேஸ்ட்டப்பா. ஒருத்தன் இன்றைக்கு சிங்கிள் என்றான்.. நாளைக்கு ரிலேசன்சிப் என்றான்.. ஒருத்தி.. இன்றைக்கு ரிலேசன்சிப் என்றாள்.. நாளைக்கு சிங்கிள் என்றாள். அதைவிட.. ஒருத்தி மரீட் என்றாள் இரண்டு வாரம் கழிச்சு அன்மரீட் என்றாள்..என்னமோ நடக்குது எல்லாம் மர்மமாவே இருக்குது.. யாரை தாப்பா நம்புறது அங்க...!

கேள்வி: அப்ப நீயும் சாடைமாடையா முயற்சித்துத்தான் பார்த்திருக்கிறா போல...

யாழ்: பின்ன காலம்.. மாறேக்க.. நானும் மாறித்தானே ஆகனும். முன்னமெல்லாம்.. எம் எஸ் என்.. பிளாக் என்று எகிறுப்பட்டாங்கள்.. இப்ப இது..!

கேள்வி: அது சரி யாழ்.. உன் எஜமானர் என்னவாம்.. ஆளின்ட சத்தத்தையே காணம்..

யாழ்: அந்தாளைப் பற்றி கேட்காத கேள்வி.. கேள்வி..!

கேள்வி: ஏன் யாழ்..ஏன் அப்படிச் சொல்லுறா.

யாழ்: அந்தாள் எனக்கு துரோகம் பண்ணிட்டுது..

கேள்வி: என்ன துரோகம் யாழ்.. நீ.. முன்னம் போல.. இப்பவும் நல்லாத்தானே இருக்கிறா..

யாழ்: ஆமா.. வெளிப்பார்வைக்கு நல்லா இருக்கிறன். உள்ள என்னென்ன நடக்குதென்று ஒன்றுமாப் புரியல்லைப்பா.

கேள்வி: உனக்கே புரியல்லையா.. என்ன தான் அப்படி நடக்குது புரியாமல் இருக்க..

யாழ்: முன்னமெல்லாம்.. எஜமானர் தான் சொல்வழி கேள் என்று.. என் மேல கை வைப்பார். இப்ப இரண்டு மூன்று பேர் கை வைக்கிறாங்களப்பா. ஆத்திரமா வந்தாலும் அந்தாளுக்காக அடக்கிக்கிட்டு இருக்கிறன். ஆளை வைச்சு அடிக்குதோ என்று ஒரு டவுட்டா இருக்குது.

கேள்வி: ச்சா இருக்காது. அந்தாள் அப்படிச் செய்யுமே..

யாழ்: போப்பா கேள்வி.. அந்தாள் 2009 மே க்குப் பிறகு கொஞ்சம் மனசு ஒடிஞ்சு தான் இருந்தது. என்னமும் பண்ணியிருக்குமோ என்ற பயமா வேற இருக்குது. உவங்கள் புதிசா வந்தவங்கள் வேற.. அடிக்கடி என்னை டிஸ்ராப் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்கள்.

கேள்வி: சரி சரி கவலைப்படாத யாழ். அப்படி உன்னை மாட்டி விட்டிருந்தாலும்.. உனக்குத்தான் நிறைய சொந்த பந்தங்கள் இருக்குதுகளே. அதுகள் உன்னைக் கைவிடுங்களா என்ன..

யாழ்: போப்பா கேள்வி.. நானும் அப்படித்தான் நம்பிக்கிட்டு இருந்தனான். இப்ப கொஞ்சக் காலமா.. நான் எங்க போறேன்னு எனக்கே தெரியாமல் இருக்குது..

கேள்வி: இந்த வயசில இப்படி எல்லாம் தடுமாறக் கூடாது யாழ். இது பொல்லாத ரீன் வயசு..!

யாழ்: நான் எங்கையப்பா தடுமாறிறன். தடுமாற வைக்கிறாங்கள் கேள்வி.

கேள்வி: அப்படி என்னதான் தடுமாற வைக்குது உன்னை..

யாழ்: நமீதாவை அரைகுறையுமா ஒட்டுறாங்கள்.. அனுஷ்காவை சேட்டை கழற்றிட்டு கொண்டு வந்து ஒட்டுறாங்கள்.. அஞ்சலிக்கு கரண்ட் அடிச்சிட்டு என்று பதற வைக்கிறாங்கள்.. என்னாலையே என்ன கட்டுப்படுத்த முடியல்ல... அதுமட்டுமா.. இனப்படுகொலையாளனை ஜனாதிபதி என்றாங்கள்.. போராட்டம் முழுக்க துரோகம் செய்தவனை அமைச்சர் என்றாங்கள்... காட்டிக்கொடுத்தவனை.. கட்டிப்பிடிக்கிறாங்கள்... இரத்தக் கண்ணீர் தானப்பா வடியுது.. உதுகளை நினைக்க.

கேள்வி: உன்ர நிலைமை விளங்குது யாழ். கவலைப்படாத.. ஒன்றிரண்டு குழப்படிகள் எங்கும் இருக்கத்தான் செய்யும்..அதுகளைப் பற்றி நீ கவலைப்படாத. செல்வ் கொன்றோல் தான் உனக்கு இப்ப முக்கியம். உதுகளை விட்டிடு. நடக்கிறது நடக்கட்டும். காலம் தான் பதில் சொல்லனும். அது சரி.. அப்ப பிறந்த நாளுக்கு என்ன செய்யுறதா உத்தேசம்..

யாழ்: எனக்கு என்னப்பா வேண்டிக் கிடக்குது. உவன் தம்பி பாலச்சந்திரன்ர போட்டோவை பார்த்ததில இருந்து நான் நானாக இல்லை. இதில என்ன கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கு எனக்கு...

கேள்வி: அப்படி எல்லாம் சொல்லக் கூடாது யாழ். தம்பிட சோகம் மாற்ற.. ஆற்ற முடியாத ஒன்று தான். அதுக்காக உலகத்தில உள்ளவை எல்லாம் சீவனை விட்டிடுவினமோ என்ன..??!

யாழ்: அவை விடமாட்டினம். நாங்கள் எங்கட சொந்தப் பொடிக்கு.. அவன்ர அவலச் சாவுக்கு ஒரு நீதி வேண்ட வேணாமோ..அது வரைக்காவது எனக்கு உந்தக் கொண்டாட்டங்களில விருப்பமில்லைக் கேள்வி. ஆனால் உதை வெளில சொல்லவும் பயம்.. அப்புறம்.. சொன்னா.. அணிக்குப் 10 பேர் என்று ஆயிரம் அணி பிரிச்சு.. ஆளையாள் அடிபடுவாங்கள். பகுத்தறிவு உனக்கா எனக்கா அதிகம் என்று வேற கேள்வி கேட்பாங்கள். தேவையா எனக்கு அது.

கேள்வி: நாய் வாலை குளோனிங் செய்தாவது நிமிர்த்தலாம் யாழ். எங்கட சனத்தில கொஞ்சத்தை திருத்திறது கஸ்டம். அதுகளை கவனத்தில எடுத்தால்.. ஒன்றும் வேலைக்காகாது.

யாழ்: சரி கேள்வி.. நீயாவது என்னை மதிச்சு.. வந்து ஒரு செவ்வி காணுறாய். அப்புறம் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேளை என்று சனம் உன் மேலையும் எகிறும்.. புறணிபாடும். கன நேரம் இஞ்ச மினக்கடாமல்.. அப்ப புறப்படு.

கேள்வி: நன்றி யாழ். சளைக்காமல்.. உள்ள சோகம் இருந்தாலும் வெளில அதை பெரிசா காட்டிக்காமல் நீ.. டக் டக் என்று கேள்விகளுக்கு பதில் தந்ததற்கு. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் யாழ். இணைய உலகில்.. இன்னும் பல்லாண்டு காலம் நீ வாழிய வாழி.

யாழ்: நன்றி கேள்வி. ரா ரா பாய் பாய்.

:):icon_idea:

Edited by nedukkalapoovan

நன்றாக இருக்கு, பாராட்டுக்கள். யாழ் இன்னும் வளர வாழ்த்துகள்

Edited by வந்தியதேவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட feedback ஏற்றுக் கொள்ளப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்காட்டியுள்ள கருத்தை அகற்றிவிடுங்கள்.. வந்தியதேவன். உங்களின் feedback க்கு நன்றி. :)

நன்றி நெடுக்ஸ், யாழ் இன்னும் பல உறவுகளை உள்வாங்கி புதுப்பொலிவுடன் மிளிரும்

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி நன்றாக உள்ளது, பாராட்டுக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவே இருக்கு . நான் உங்களை ஒருக்காப் பேட்டி காணவேணும் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சொல்ல  வாறதை நாம் ஒவ்வொருவரும் உணர்வோமாக.............

(நன்றி  தம்பி

யாழை  பேச வைத்தமைக்கு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் செவ்வி படித்து கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

நன்றாகவே இருக்கு . நான் உங்களை ஒருக்காப் பேட்டி காணவேணும் நெடுக்ஸ்.

நாங்க செவ்வி காண்பமே தவிர கொடுக்கிற அளவுக்கு இல்லை..! :lol:  நன்றி சுமே அக்கா. :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுடன் பேசியது யாழ் மாதிரி இல்லையே.. நெடுக்ஸின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் பயபுள்ளை மாதிரியல்லவா இருக்கு. 15 வயதில ரிலேசன்சிப்புக்கு பயந்தவர்கள் எவராவது இருப்பார்களா? 

அது எந்த வகையான ரிலேசன்சிப் என்றதில இருக்குது கிருபண்ணா. எல்லாருக்குள்ளும் ஒரு பயம் எப்பவும் இருக்கும்... அது யாழுக்கும் இருக்குமில்ல..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: சரி அதையே பேசிக்கிட்டு இராத.. அப்புறம்.... உனக்கு ஏதேனும் மாட்டிக்கிச்சு..

யாழ்: எங்க என்னத்தை மாட்டிறது.. எல்லாம் சுத்த வேஸ்டு..!

கேள்வி: இணைய உலகில 15 வருசமா இருக்கிறா.. ஒன்றுமே மாட்டல்லையா..?!

யாழ்: எவனப்பா என்னை கடலை போட விடுறான். அவனவன் தான் கடலை போட்டு செற்றிலாகிட்டு இருக்கான்...

கேள்வி: ஏன் நீயும் முயற்சிக்கிறது தானே..

கேள்விக்கு லைட்டா யாழில ஒரு பிளான் இருக்கு, ஆனால் பாவம் யாழுக்கு அதப் புரிஞ்சுகொள்ளும் வயசு இன்னும் வரேல்ல :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு லைட்டா யாழில ஒரு பிளான் இருக்கு, ஆனால் பாவம் யாழுக்கு அதப் புரிஞ்சுகொள்ளும் வயசு இன்னும் வரேல்ல :lol:

நல்லா இருக்கிற யாழ் பயலை கெடுத்திடுவாங்க போல இருக்கே..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாட்டோடை சாட்டா யாழுக்கும் முலாம் பூசப் போறிங்கள் போல.. :rolleyes::icon_idea:

நல்லா இருக்கிற யாழ் பயலை கெடுத்திடுவாங்க போல இருக்கே..! :lol::D

கோர்த்து விடத் தானே அண்ணா நாங்கள் இருக்கிறம்.. <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

-------

யாழ்: நமீதாவை அரைகுறையுமா ஒட்டுறாங்கள்.. அனுஷ்காவை சேட்டை கழற்றிட்டு கொண்டு வந்து ஒட்டுறாங்கள்.. அஞ்சலிக்கு கரண்ட் அடிச்சிட்டு என்று பதற வைக்கிறாங்கள்.. என்னாலையே என்ன கட்டுப்படுத்த முடியல்ல... :):icon_idea:

யாழ் பிறக்கும் போதே.... அம்பிகாவும், ராதாவும், சிலுக்கு ஸ்மிதாவும் அரை குறையாய் வந்து போனவர்கள் தான்.

இப்ப நமிதாவும், அஞ்சலியும் வந்தவுடன் யாழ் ஏன் கவலைப்படுது. ஓ.... யாழ் வயசுக்கு வந்திட்டுதா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாட்டோடை சாட்டா யாழுக்கும் முலாம் பூசப் போறிங்கள் போல.. :rolleyes::icon_idea:

கோர்த்து விடத் தானே அண்ணா நாங்கள் இருக்கிறம்.. <_<:lol:

யாழுக்கு எதுக்கு முலாம்.. அது நல்ல பொலிஸா தானே இருக்குது. :)

கோர்த்துவிடுற சுலபம்.. அப்புறம் வாற பிரச்சனைகளை சந்திக்கிறதுக்கு "சக்தி கொடு" என்று ஆகாயத்தைப் பார்த்து கெஞ்ச விடக் கூடாதில்ல..! யாழ் பயல் பாவம். அவனையாச்சும் விட்டிடுங்க..! :lol::D

யாழ் பிறக்கும் போதே.... அம்பிகாவும், ராதாவும், சிலுக்கு ஸ்மிதாவும் அரை குறையாய் வந்து போனவர்கள் தான்.

இப்ப நமிதாவும், அஞ்சலியும் வந்தவுடன் யாழ் ஏன் கவலைப்படுது. ஓ.... யாழ் வயசுக்கு வந்திட்டுதா? :D

அப்ப அவை எல்லாம் அவனுக்கு மம்மிஸ்... இப்ப அவனும் வயசுக்கு வந்திட்டானில்ல..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, அம்மா ராதா மாதிரி... பிற்காலத்தில் உடம்பு வைக்காமல் இருக்க இப்பவே... ஜிம், டான்ஸ், எல்லாம் கத்துக்கணும்.
சாப்பாட்டில்.... ஆட்டிறைச்சி, தேங்காய்ப்பால் ஒண்ணும்... சேர்க்கப்படாது. அப்ப... தான், யாழ் பையனுக்கு பிடிக்கும். :D

படத்தில் இருப்பது கார்த்திகா .துளசி இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் இருப்பது கார்த்திகா .துளசி இல்லை .

எங்களுக்கு கிடைத்த நம்பகமான வட்டாரத் தகவல் படி அது, துளசி தான் அர்ஜூன்.

அப்படி இல்லை என்றால்... நீங்கள் துளசியின் படத்தை இணைத்து... அது கார்த்திகா அல்ல‌... என்று, நிரூபிக்க வேண்டும். :D  :lol:

Edited by தமிழ் சிறி

சினிமாவை பற்றி குறிப்பாக நடிகைகளை பற்றி என்னைவிட நம்பகமான தகவல் எங்கு இருக்கு  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவை பற்றி குறிப்பாக நடிகைகளை பற்றி என்னைவிட நம்பகமான தகவல் எங்கு இருக்கு  :icon_mrgreen:

சும்மா... சொல்லாதீங்க அர்ஜூன். இதற்கு என்ன சொல்லுறீங்கள். :D

http://www.youtube.com/watch?v=Ys2sBJJV7dY

radha-and-thulasi-nair-attend-kadali-mov

இவவா  துளசி?

YES.

வேலை செய்யும் இடத்தில் படத்தை இணைக்க முடியாமல் இருக்கு .முதல் நீங்கள் இணைத்தது கோ -நாயகி கார்த்திகா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சிறீயண்ணா உங்களை நம்பி நானும்..... ஆனால் சில ஊடகங்களும் குழம்பிப் போய் அது துளசி.. ராதா என்று தான் போட்டிருக்கினம்.

tulasi-nair-3.jpg

இது தான் துளசி. :)

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி விக்கும் விலையில்.... துளசி கண்ட படி சோறு சாப்பிட்டு, உடம்பை இன்னும்... ஊத வைக்கக் கூடாது என்பது தான்... எமது கவலை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசாம துளசிட ஊரில அரிசி விலையை நாலு மடங்காக்கிட வேண்டியது தான். :)

யாழ்: ஆமா.. வெளிப்பார்வைக்கு நல்லா இருக்கிறன். உள்ள என்னென்ன நடக்குதென்று ஒன்றுமாப் புரியல்லைப்பா.

கேள்வி: உனக்கே புரியல்லையா.. என்ன தான் அப்படி நடக்குது புரியாமல் இருக்க..

யாழ்: முன்னமெல்லாம்.. எஜமானர் தான் சொல்வழி கேள் என்று.. என் மேல கை வைப்பார். இப்ப இரண்டு மூன்று பேர் கை வைக்கிறாங்களப்பா. ஆத்திரமா வந்தாலும் அந்தாளுக்காக அடக்கிக்கிட்டு இருக்கிறன். ஆளை வைச்சு அடிக்குதோ என்று ஒரு டவுட்டா இருக்குது.

கேள்வி: ச்சா இருக்காது. அந்தாள் அப்படிச் செய்யுமே..

யாழ்: போப்பா கேள்வி.. அந்தாள் 2009 மே க்குப் பிறகு கொஞ்சம் மனசு ஒடிஞ்சு தான் இருந்தது. என்னமும் பண்ணியிருக்குமோ என்ற பயமா வேற இருக்குது. உவங்கள் புதிசா வந்தவங்கள் வேற.. அடிக்கடி என்னை டிஸ்ராப் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்கள்.

கேள்வி: சரி சரி கவலைப்படாத யாழ். அப்படி உன்னை மாட்டி விட்டிருந்தாலும்.. உனக்குத்தான் நிறைய சொந்த பந்தங்கள் இருக்குதுகளே. அதுகள் உன்னைக் கைவிடுங்களா என்ன..

யாழ்: போப்பா கேள்வி.. நானும் அப்படித்தான் நம்பிக்கிட்டு இருந்தனான். இப்ப கொஞ்சக் காலமா.. நான் எங்க போறேன்னு எனக்கே தெரியாமல் இருக்குது..

இது சூப்பர் அண்ணா. :lol:

மோகன் அண்ணா இருக்கும் போது யாழ் அந்தமாதிரி என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். :) மற்றவர்கள் கருத்துகளை வாசித்தே அவர் மேலும் மதிப்பு அதிகரித்தது. :)

ஆனால் இப்பொழுது நிர்வாகம் உள்ளதன் படி பார்த்தால் யாழ் திசைமாறி செல்கிறது என்பதே எனது கருத்தும். :rolleyes: அதை அடிக்கடி நானும் நேரடியாக சொல்லி இருக்கிறேன்.

இப்பொழுது கருத்துகள் அகற்றப்பட்டால் அல்லது தணிக்கை செய்யப்பட்டால் அதன் பின்னர் அக்கருத்துகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவாறு அர்த்தமே மாறிவிட்டிருப்பதை பல தடவை பார்த்திருக்கிறேன். அதேபோல் யாழில் தமிழீழ ஆதரவாளர்கள் மேல் அதிகளவில் தாக்குதல் நடத்தப்படுகிறது. விசம தனமான கருத்துகள் வைப்பவர்கள் பக்கம் நிர்வாகமும் ஆதரவு போல் நடக்கிறது. எது எப்படியோ அவர்கள் தமது தவறுகளை எதிர்காலத்தில் திருத்திக்கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இப்பொழுது யாழ் இயங்குவதற்கு காரணம் நிழலி அண்ணா தான். அதையும் மறக்க கூடாது. அந்த வகையில் தவறுகளை சுட்டிக்காட்டி அவருக்கு நாமும் உதவ வேண்டும். :rolleyes:

என்னப்பா நடக்குது இங்கை? :lol:

பேசாம.. ராதா சேச்சிட்ட கேட்டு துளசிய பேசி முடிச்சிடுவம்..! அவன் இன்னும் மேஜர் ஆகல்ல.. பேச்சு வார்த்தை பண்ணி.. துளசியோட கோர்த்து விட்டால்.. (நம்ம யாழ் துளசி இல்ல.. அப்பாடா.. தப்பிச்சன்.. அப்புறம் நம்ம தலை சிதறிடும்..) மேஜராக கொட்டு மேளம் தான்..! :lol::D

துளசிக்கு, யாழ் பையன் பொருத்தமாயிருக்கும். நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் பண்ண வேண்டியது தான்......    (பையன் 26 அல்ல, அப்பாடா....... நானும் தப்பிச்சேன்.) :D  :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.