Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசிலிருந்து... தி.மு.க. விலகியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.மு.கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்பு.


மேலதிக செய்திகள் விரைவில்......


-நக்கீரன்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

wabc_iwitness_BreakingNews600x150.jpg

 

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து விலகுகிறோம்-கருணாநிதி


அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் பேசவில்லை-கருணாநிதி.


திமுக ஆதரவு வாபஸ்- மத்திய அரசு கவிழுமா?


 

-தற்ஸ் தமிழ்-



kalaigar-11111.jpg

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்பு


சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

 

அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போகவிட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.


நன்றி நக்கீரன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுக

By Sriram Senkottai, சென்னை

First Published : 19 March 2013 11:14 AM IST

ஐ.மு.கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.கருணாநிதி, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார்.

மத்திய ஆளும் அரசின் அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்துமே திமுக வெளியேறுவதாகத் தெரிவித்தார் கருணாநிதி.

மேலும், செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கைக்கு எதிரான அமெரிக்க அரசின் தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று கவலை தெரிவித்தார் திமுக தலைவர் கருணாநிதி.

தமிழ் கலாசாரங்களை அழித்தொழிக்கும் செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்குத் துணை போகும் மத்திய அரசில் இருந்து திமுக விலக முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இருந்தாலும், செய்தியாளர்களின் கேள்விகளின் போது,

உங்களின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என்று கேட்டார் ஒரு செய்தியாளர். அதற்கு கருணாநிதி,

இன்னும் நாள் இருக்கிறது. இன்று இருக்கிறது, நாளை இருக்கிறது, வரும் 21ம் தேதி வரை நேரம் இருக்கிறது. இதற்கு இடையில், நாங்கள் முன் நிறுத்திய மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்மானம் கொண்டு வந்தால், கருத்துகளை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

எனவே நாடாளுமன்றத் தீர்மானத்தைப் பொறுத்து முடிவு என்று அவர் கூறினாலும் கூட, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது இன்றே இறுதி முடிவு எடுத்திருக்க வேண்டும். கால அவகாசம் குறைவாக இருப்பதால், அது இயலாது. ஆகவே, திமுகவின் விலகல் முடிவு மறுபரிசீலனைக்கு உட்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, தற்போது விலகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தொண்டர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

அது ஈழத்தமிழருக்காக இல்லை அதள பாதளத்துக்குப்போற தி.மு.கவின் அரசியல் எதிர்காலத்தை நிலை நிறுத்த.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவோ செய்திருக்க வேண்டியதை..

 

இந்திய அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்.. தி மு கவின் தமிழினத் துரோகம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள நிலையில்..  கட்சித் தலைமைக்குப் போட்டி நிறைந்துள்ள வேளையில்.. தமிழகத்தில் மாணவர்களின் நீதியான போராட்டம் வலுப்பெற்று ரெசோ வலுவிழந்துள்ள நிலையில்.. அதிமுக ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக வை விட அதிகம் சட்டமன்றத்தில் செய்துள்ள நிலையில்.. தமிழக மக்களிடம் எழுந்துள்ள ஈழத்தமிழர் உணர்வலையை கருத்தில் கொண்டு.. வாக்கு வங்கிக்கு அதனைப் பயன்படுத்தும் நோக்கில்.. மத்திய அரசில் செல்வாக்கிழந்துள்ள தி முக அங்கு தனது செல்வாக்கை சரிக்கட்ட.. மீண்டும்.. ஈழத்தமிழர் துயரை தனக்கான ஆறுதல்ப் பரிசாக்கி.. மகிழ்கிறது.. என்று சொல்வதை விட.. இதில் வரவேற்க புதிதாக ஒன்றும் இல்லை..! அதுவும் இந்தியாவால் நீத்துப் போகச் செய்யப்பட்ட.. அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வரைபு வரும் வரை காத்திருந்துவிட்டுத்தான் இதைச் செய்கிறார்கள்.. இதனால் என்ன பயன்...???!

 

இதில் மக்களை ஏமாற்றும் தந்திரமே மிகுந்துள்ளது. மாணவர் எழுச்சியினை ஒடுக்கும் அல்லது மக்களை அதிலிருந்து திசை திருப்பும்..  ஒரு நோக்கமும் இதில் இருக்கலாம். எனவே தமிழக மக்களும் உலகத் தமிழினமும் இந்த நகர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருந்து செயற்படுவது நன்று. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கை புள்ள இன்னுமா இந்த ஊர் நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GdLtcDUtyvU

  • கருத்துக்கள உறவுகள்

trstrike.jpg

மத்தியரசிலிருந்து தி.மு.க விலகலாம்- காங்கிரஸ் கும்பலுடன் இணைந்து நாடகம் ஆடும் கொலைஞர் கருணாநிதி

 

 

இதுவரை மத்திய அரசுக்கு தி.மு.க வழங்கிவரும் ஆதரவை திரும்ப பெற்றுள்ளதாக கொலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அமெரிக்காவால் ஜ.நா மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை வலுவற்றதாக ஆக்கியமை,தன்னால் உருவாக்கப்பட்ட டெசோ அமைப்பின் தீர்மானங்களை பரிசீலிக்கவில்லை போன்ற காரணங்களை கூறியே மத்திய அரசிலிருந்து தி.மு.க விலகுவதாக நாடக கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்று அல்லது நாளை பிரதமரை சந்தித்து தி.மு.க அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று அனைவரினதும் கவனத்தை தம் பக்கம் திருப்பியுள்ள நிலையில் மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பும் விதமாக கருணாநிதி காங்கிரஸ் கும்பலுடன் இணைந்து இந்த புதிய நாடகத்தை ஆரம்பித்துள்ளார்.


பொறுங்கோ பொறுங்கோ நாளைக்கு அடுத்த அறிக்கை வரும். ஏதாவது சடைஞ்சு ஒரு கருத்தைச் சொல்லீட்டு அறிக்கை விடுவார் நம்ம அறிக்கை மன்னன். தி.மு.க மீண்டும் காங்கிசை கல்யாணம் கட்டுகின்றது என்று. குடும்பத்துக்குள் கணவன் மனைவிக்கும் வந்த கருத்து வேறுபாடுபோல்தான் இதுவம் என்று. அல்லது ஏனைய அமைச்சர்கள் வெளியேறுவதை விரும்பவில்லையென்று.. நடக்கட்டும் நல்ல கொமடிப் படம் பாத்த மாதிரி இருக்கும். துன்பங்களை மறந்து கைப்புள்ளையின்ரை விளையாட்டை ரசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளாததால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் இந்தியா வலுவான திருத்தங்களை மேற்கொள்ள திமுக வலியுறுத்தியது. ஆனால் திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த திமுக, ஏற்கெனவே அறிவித்தபடி மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, திமுகவின் முடிவு ஆச்சரியப்படக் கூடியது அல்ல.. இது நல்ல நாடகம். அவர்கள் ஜெயலலிதாவைக் கண்டு பயப்படுகின்றவர்கள். அடுத்த ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ மீண்டும் மத்திய அரசில் திமுக இடம்பெறக் கூடும். மதவாதக் கட்சி ஆட்சிக்கு வரக் கூடாது என்று கூறிக் கொண்டு மீண்டும் காங்கிரஸ் அரசில் திமுக சேரும். இதுதான் நடைபெறப் போகிறது என்றார்.

சாமி, இலங்கை விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கே.. தெரியுமா?. அப்படியே, இப்போ தமிழ்நாட்டுப் பக்கம் ஒரு எட்டு வரலாமே!

:D :d :D

Thatstamil

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்
http://tamil.oneindia.in/news/2013/03/19/tamilnadu-upa-government-trouble-dmk-pulls-out-171809.html ''ஈழப் போரில் மாண்ட போராளிகளின் காலடி மண்ணெடுத்து திலகமாக இட்டுக் கொண்டு''.. கருணாநிதி Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/19/tamilnadu-upa-government-trouble-dmk-pulls-out-171809.html

ஒரு பழுத்த அரசியல்வாதிக்கு இளைய மாணவர் சமுதாயம் கொடுத்த இந்த அரசியல் பாடத்தை சகல தமிழக கட்சிகளும் உணரவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.

 

நடுவண் அரசு இனியும் தமிழக அரசியல் வாதிகளை கோமாளிகள் என எண்ணுவதும் விடுவதும் அவர்கள் உரிமை, ஆனால் மக்கள் பற்றி தெளிவாக இருப்பார்கள்.

இந்திய ஊடகங்கள் மாணவர் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வேளையில் இந்த 'விலகல்' இந்தியா முழுவதும் மாணவர் போராட்டத்தை பற்றிய செய்தியை கொண்டுவர உதவட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
karunanithiiiiiiiii.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எடுத்த விலகல் முடிவை 2009 மே க்கு முன்பே இந்த முடிவை எடுத்திருந்தால் ஈழ தமிழர்களின் நிலைமையே மாறியிருக்கும்.   :(  

  • கருத்துக்கள உறவுகள்

திமுக விலகலால் உடனடி பாதிப்புகள் இல்லை என்கிறார்கள்..! ஆனால் நில சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போகலாலாம். அதனால் அந்தச் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளாமல் இருப்பார்கள் என ஊகிக்கிறார்கள்..!

Edited by இசைக்கலைஞன்

"ஏம்பா வெலகினேன் வெலெகினேன் எங்கிறீங்க. நம்ம நாரி நோக மாற நன்னா ஒதைச்சிட்டான். ஆனா தப்பி பிழைச்சு ஓடு வந்துட்டேன் என்னு உள்ளதை பேசையா. பின்னாலி திரும்பி பாரையா 2G வாளோடை துரத்திட்டு வாறானா இன்னு"

 

தமிழனிடம் இனி பொத்தி மூட எதுவும் இல்லை. கிந்தியன் தமிழ் நாடு பிரிந்தாலும் கூட ஏன் நாயே என்று கேட்க மாட்டோம் என்றிருக்கிறான். இது கருணாநிதி விலகியதைப் பாறி யாரும் கருத்துக்கூட தெரிவிக்கவில்ல.

 

இந்த கோமாளி அவர்களை 1000 தடவை போகிறேன் போகிறேன் என்று மிரட்டி நன்றாக தயார் படுத்து விட்டார். 10 வருடம் கருணாநிதியை தங்கள் கால் கழுவ வைத்திருந்தார்கள். இனி மத்திய கோடுகளில் வழக்குகள் தாக்கள் செய்து  தாங்கள் சேர்ந்து செய்த களவுகளுக்கு கனிமொழியை தண்டிப்பார்கள்.

ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து

 

இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இது போன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள நீங்காத பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் எண்ணம் நிறைவேறாது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பது திண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் போராட்டத்தால்த்தான் தி.மு.க. விலகல் நாடகம் நடத்தியது. அது வெல்லாம் அமெரிக்காவை அதன் தீர்மானத்தை இரண்டாம்
முறை நீர்க்க பண்ணியதின் பின்னரே. இனி அந்த தீர்மானத்தை ஒரு தமிழிசிக்கு பிறந்த எவனும் வரவேற்க தயங்குவான். அது நிச்சயமான பின்னர்தான் விலகல் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

 

கருணாநிதி இனி உண்ணாவிரதம் கிடந்து செய்தாலும் இறந்த இளசுகள், குழந்தைகள், தாய்களான 150,000 பேரில் ஒருதரும் உயிர்க்க போவதில்லை. இந்த விடயத்தில் வலப்பக்கமாக போயிருக்க வேண்டிய காலன் இடப்பக்கமாக போய் செய்த தவறு இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழம் திண்டு கொட்டை போட்டவங்களுக்கு கருணாநிதியின்ரை திருகுதாளம் எல்லாம் தெரியும்.உலகத்திலையே யமனைப்பச்சடி போட்ட அரசியல்கள்ளன் கருணாநிதி........

 

போங்கப்பா போய் வேலையை பாருங்கோப்பா :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

wr20130318001331.jpg 
 

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதின்ட போலி முகம் இப்ப எல்லருக்கும் தெரிஞ்சு போச்சு....முக புத்தகத்தில் கருணாநியை பற்றி எவள‌வு அசிங்கமாய் கேவலாமாய் கதைக்கிறாங்கள் தமிழ் நாட்டு உறவுகளும் புலம் பேர் உறவுகளும்....

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவின் நாடகமா?அமெரிக்க திர்மானம் இறுதி அறிக்கை செய்தபின் இனி திருத்தம் கொண்டு வரப்போவதல்லை பிறகு என் கூட்டனியை விட்டு விலக வேண்டும்.கேட்டால் காங்கிரசு எங்களை ஏமாற்றி விட்டது சரி அப்படி என்றால் நிங்கள் இதை ஒரு 10 நாட்களுக்கு முன்பே செய்திருந்தால் எதாவது மாற்றம் வந்திருக்கும் அதறக்கு வழி இல்லாமல் எல்லாம் முடிந்த பிறகு எதற்க்கு விலக வேண்டும்

 

fb

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசிலிருந்து... தி.மு.க. விலகியது.

 

ஆத்தா செத்தவீட்டுக்கு வராதவன் துவஷத்துக்காவது வந்தியே என் ராசா ...!

ஆத்தா செத்தவீட்டுக்கு வராதவன் துவஷத்துக்காவது வந்தியே என் ராசா ...!

 

என்ன சுபேஸ் ஆத்தான்ரை துவசத்துக்கு கைப்புள்ள வந்திருக்கெண்டு நினைச்சீங்களா? கைப்புள்ள இன்னும் வெளிலே வரேலல்லை. சும்மா சொல்லித்தான் இருக்கு. அந்தப் பய புள்ளை வெளியை வந்தாப் பிறகு பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய அரசிலிருந்து... தி.மு.க. விலகியது.

 

 

திருப்பியும் சொல்லுறன் கருணாநிதியின்ரை உந்த அறிக்கையும் எங்களுக்கு அழிவுதான் பரிசு......கருணாநிதி வம்சத்துக்கு அரசியலும்,சினிமாவும் தொழில்......அதை வைச்சு பிழைப்பு நடத்துறவைக்கு நல்லதுகெட்டது கண்ணுக்கு தெரியாது........தெரியக்கூடாது.
 
 
மீண்டும் தமிழக அரசியலுக்கு ஈழத்தமிழன் பலியாகின்றான். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.