Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்ததில் பிடித்த குட்டி கதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காட்டில் ஒரு சிங்கம்,

ஒரு ஆட்டை அழைத்தது.

''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.

ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து

.அதனுடைய கருத்தைக் கேட்டது.

ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,

''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.

சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது

.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது,

''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

via fb 

 

 

 

 

அது தான் யாழில் பல பேர் எழுதாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கினமாக்கும் :lol:
  • Replies 82
  • Views 308.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படித்ததில் பிடித்தது..

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..

அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..

ஐந்து ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்..

இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..

ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட
முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்.

via fb 



 

அது தான் யாழில் பல பேர் எழுதாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கினமாக்கும் :lol:

 

:lol:  :lol:

  • தொடங்கியவர்

ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்"

"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி

, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.

இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்...

via fb 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, குட்டிக் கதைகள்... அபராஜிதன்.
தொடர்ந்து இணையுங்கள், வாசிக்க.... ஆவலாயுள்ளோம்.

 

  • தொடங்கியவர்

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.

"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.

மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.

உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.

via fb 

நீதிக்கதை"

பொறுப்பு

=========

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்

via fb

நல்ல, குட்டிக் கதைகள்... அபராஜிதன்.

தொடர்ந்து இணையுங்கள், வாசிக்க.... ஆவலாயுள்ளோம்.

நன்றி அண்ணா  வருகைக்கு :)

  • தொடங்கியவர்

தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும். 

எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.

ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில் இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.

குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது, அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை 'விதியின் மனிதன்' என அழைத்துக்கொண்டான்.

நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.

அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.

போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர்.  இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.

பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு இருந்தன.

இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். "ரஷ்யக் குளிர் நெப்போலியனை தோற்கடித்தது!"என வரலாறு எள்ளி நகையாடுகிறது.

அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். "என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!"என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன். 

"முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்". "முடிந்தது" என்றார் நெப்ஸ். "அடுத்து" என கம்பீரமாக கேட்க, "எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் - ஒரே தொழில் போட்டி" எனவும் சிரித்துக்கொண்டே, "சரி! அடுத்து?"எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!" "ஹ்ம்ம்" என்ற நெப்போலியன்...

"கிளம்புங்கள்!" என படைகளிடம் சொல்லிவிட்டு - வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. "ஒன்...டூ...த்ரீ!" என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து "இப்படிதான் இருந்தது எனக்கு!" என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.

எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.

நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன். 

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.

ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். "அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!" என்றபொழுது நெப்போலியன், "அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்" என்றார்.

"முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை" என்ற குள்ளமான உருவம் கொண்ட வானுயர தன் உழைப்பால் எளிய குடும்பத்தில் இருந்து பேரரசனாக உயர்ந்த நெப்போலியனின் நினைவு நாள் இன்று (மே 5). ஐம்பாதாண்டு காலம் மட்டுமே வாழ்ந்த தனி சரித்திரம் அவன்.


 

 

http://kalvi.vikatan.com/index.php?nid=1508

 

  • தொடங்கியவர்

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர்.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின, அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தது.

அவள் கணவரும் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார்.மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே என்று கேட்டார்.அதற்கு அவள் கணவர் ...

”என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் ” என்றார்.

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்

via fb 

  • தொடங்கியவர்

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். 
...

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்

. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. 

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”

அச்சமின்மையே ஆரோக்கியம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர்.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின, அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தது.

அவள் கணவரும் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார்.மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே என்று கேட்டார்.அதற்கு அவள் கணவர் ...

”என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் ” என்றார்.

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்

via fb 

 

 

இந்த உண்மை எப்பத் தான் யாழ் கள ஆண்களுக்கு விளங்கப் போகுதோ :lol: ...நல்ல,நல்ல கதைகள் தொடர்ந்து இணையுங்கள் அபராஜிதன்

  • தொடங்கியவர்

படித்ததில் பிடித்தது #

ஆற்றில் வெள்ளம்

கரை புரண்டு ஓடுகிறது.

இக்கரையில் இரண்டு பேர்

நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.

எப்படி அக்கரைக்குப்

போவது?

இந்த நேரத்தில்

ஒரு காளை மாடு அங்கே வந்தது.

அதுவும் அக்கரைக்குப்

போக வேண்டும்.

ஆனாலும் அதற்கு ஓடம்

எதுவும்

தேவைப்படவில்லை.

அப்படியே ஆற்றில்

பாய்ந்தது... நீந்த

ஆரம்பித்தது. இதைப்

பார்த்த இரண்டு பேரில்

ஒருத்தன் குபீர்

என்று ஆற்றில்

குதித்தான். அந்தக்

காளை மாட்டின் வாலைக்

கெட்டியாகப் பிடித்துக்

கொண்டான்.

காளை மாடு சுலபமாக

அவனை இழுத்துச்

சென்று அக்கரையில்

சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’

கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய்

வந்து ஆற்றில் குதித்தது.

இதுதான் நேரம்

என்று இவனும் ஆற்றில்

விழுந்து அந்த நாயின்

வாலைப் பிடித்துக்

கொண்டான். இந்த

மனிதனையும் இழுத்துக்

கொண்டு நாயால் ஆற்றில்

நீந்த முடியவில்லை.

திணறியது.

ஒரு கட்டத்தில் நாய்,

‘வாள்... வாள்’ என்று கத்த

ஆரம்பித்து விட்டது.

விளைவு _

இருவருமே ஆற்று நீர்

போகும்

திசையிலேயே மிதந்து போய்க்

கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய

திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற

திசை வேறு.

கரை சேர நினைக்கிற

மனிதர்களின் கதை இது.

சிலர்

கரையிலேயே நின்று விடுகிறார்கள்.

சிலர் காளையின் வாலைப்

பிடித்துக்

கொள்கிறார்கள். சிலர்

நாயின் வாலைப் பற்றிக்

கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன

சொல்கிறது தெரியுமா?

நீங்கள் கரை சேர

விரும்புகிறீர்களா?

அப்படியானால் எதையும்

பற்றிக் கொள்ளாதீர்கள்.

ஏற்கெனவே பற்றிக்

கொண்டிருப்பதை எல்லாம்

விட்டு விடுங்கள்!

ஆற்றின்

நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.

உள்ளே ஏதாவது பொருள்

இருக்கும் என்கிற

ஆசையில் ஒருத்தன் நீந்திச்

சென்று அதைப்

பற்றுகிறான். நீண்ட நேரம்

ஆகியும்

கரை திரும்பவில்லை.

நடு ஆற்றில் போராடிக்

கொண்டிருக்கிறான்.

கரையில்

நின்று கொண்டிருக்கிற

நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா...

கம்பளி மூட்டையை இழுத்துக்

கொண்டு உன்னால் வர

முடியவில்லை என்றால்

பரவாயில்லை...

அதை விட்டுவிடு!’’

ஆற்றின்

நடுவே இருந்து அவன்

அலறுகிறான்: ‘‘நான்

இதை எப்பவோ விட்டுட்டேன்...

இப்ப இதுதான்

என்னை விடமாட்டேங்குது

. ஏன்னா,

இது கம்பளி மூட்டை இல்லே.

கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள்

தடுமாறிப் போகிறார்கள்.

சரியாகப் பற்றுகிறவர்கள்

கரையேறி விடுகிறார்கள்.

பற்றையே விடுகிறவர்கள்

கடவுளாகி விடுகிறார்கள்!

via fb 

இந்த உண்மை எப்பத் தான் யாழ் கள ஆண்களுக்கு விளங்கப் போகுதோ :lol: ...நல்ல,நல்ல கதைகள் தொடர்ந்து இணையுங்கள் அபராஜிதன்

நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

--------

ஒரு கட்டத்தில் நாய்,

‘வாள்... வாள்’ என்று கத்த

ஆரம்பித்து விட்டது.

-------

 

நாய் "வள், வள்" என்று குரைக்கும்.

"வாள், வாள்" என்று கத்தாது. :D 

நல்ல கதைகள் அபராஜிதன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நாய் "வள், வள்" என்று குரைக்கும்.

"வாள், வாள்" என்று கத்தாது. :D 

நல்ல கதைகள் அபராஜிதன். :)

நாய், சமஸ்கிரிதம் படித்திருந்தால், அதனால், 'வள்' என்று சொல்ல முடியாது. :D 

 

கதைக்கு நன்றிகள், அபராஜிதன்!

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் எல்லாத்தையும் முழுக்க படித்துவிட்டு ஒரு நன்றி கூட சொல்லாமல் போகலாமா. :rolleyes:  :) கோடி நன்றிகள் உறவே :)

  • தொடங்கியவர்

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள். 

அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து 


காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.

ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா. 

அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல. 

இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.


 அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்

 

 



நாய் "வள், வள்" என்று குரைக்கும்.
"வாள், வாள்" என்று கத்தாது. :D 
நல்ல கதைகள் அபராஜிதன். :)

 

நாய் வள் வள் என்று  குரைக்கும் 

 

வாள் வாள்  என்று  கத்தும்   :lol: 

 
நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் 

 

நாய், சமஸ்கிரிதம் படித்திருந்தால், அதனால், 'வள்' என்று சொல்ல முடியாது. :D

 

கதைக்கு நன்றிகள், அபராஜிதன்!

நாய் வள் வள் என்று  குரைக்கும் 

 

வாள் வாள்  என்று  கத்தும்   :lol: 

 
நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் 


கதைகள் எல்லாத்தையும் முழுக்க படித்துவிட்டு ஒரு நன்றி கூட சொல்லாமல் போகலாமா. :rolleyes:  :) கோடி நன்றிகள் உறவே :)

  

 
நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் :)

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொண்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் ' என்று பார்த்துவர உள்ளே சென்று சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார்

5 பீர் முழுவதும் முடிந்தது.

ஒரு வித்தியாசமும் தெரியல, தொடர்ந்தார் 2 FULL..

அப்பொழுதும் ஒன்னும் ஆகல. மீண்டும் முதலிருந்து 5 பீர் ஆரம்பிதார், கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல், கேடடார் ..

"யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ?

" அதற்கு நம்ம கடவுள் " பதில் : நான் தான்பா உங்களை ஆளும் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.

கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும்..! நடகட்டும்..!

நீதி :நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே உங்களை பற்றி முடிவு செய்கிறார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

......இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

 

நல்ல அனுபவபூர்மான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

......அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே என்று கேட்டார்.அதற்கு அவள் கணவர் ...

”என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் ” என்றார்.

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!

 

முற்றிலும் உண்மையே..பலருடைய வாழ்வில் இதை கண்டிருக்கிறேன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றி, அபராஜி!  :rolleyes:

 

  • தொடங்கியவர்

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ''மழை வருமா?''எனக் கேட்டான்.'

'வராது''என்றான் அமைச்சன்.

வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது கடும்மழை வந்து நன்றாய் நனைந்துபோனான். திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழைவரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.

அவனோ,''மன்னா எனக்குத் தெரியாது.ஆனால் என்கழுதைக்குத் தெரியும். அது மழை வரும்முன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டான், என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.

 

via -fb 

 

நல்ல அனுபவபூர்மான கருத்து.

 

 

முற்றிலும் உண்மையே..பலருடைய வாழ்வில் இதை கண்டிருக்கிறேன்.

 

 

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றி, அபராஜி!  :rolleyes:

 

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும்..:)

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றி,

தொடரருங்கள் 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டு வைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம்.

வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம்.

சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.

ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம்.

இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம், காட்டு ராஜா எனக்கு சமமானவங்களா இவனுங்க, எனக்கு மரியாதை இல்லையா, அவனுங்களுக்கு சம பங்கா அப்படின்னு நினைச்சிக்கிட்டு பட்னு ஓநாயை அறைஞ்சுதாம்.

ஓநாய் அடி வாங்கிட்டு மயக்கமா விழுந்திடுச்சி.

சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொல்லுச்சி.

நரியும் பவ்யமா மானோட காது ஒண்ணை மட்டும் தனக்கு எடுத்துக்கிட்டு, மிச்சத்தை சிங்கம் பக்கமா தள்ளுச்சி.

சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும் மரியாதையும் வந்துச்சி அப்படின்னு கேட்டுச்சி.

நரி இன்னும் பணிவா சொல்லுச்சாம், அதோ அங்கே மயங்கி கிடக்கிற ஓநாய் கிட்டே கத்துக்கிட்டேன், அப்படின்னு சொல்லிட்டு ஒடிச்சிடுச்சி.

நீதி : தகாத நட்பு கூடாது.

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றி,

தொடரருங்கள் 

 

நன்றி அண்ணா கருத்துக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் கவனமாக இருந்தால் போதும் என்றநிலை

ஆனால் தற்பொழுது தள்ளியே வைக்கவேண்டியநிலை.

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இணையில்லா இணைப்புகள் !

இதயத்தை வருடிச் செல்லும் கதைகள் !!

 

தொடருங்கள் ,வாழ்த்துகள் !!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.

ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?

அதற்கு சாவி சொன்னது. நீ என்னை விட பலசாலிதான்.

அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.

ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.

 

via fb 

முன்பெல்லாம் கவனமாக இருந்தால் போதும் என்றநிலை

ஆனால் தற்பொழுது தள்ளியே வைக்கவேண்டியநிலை.

தொடருங்கள்

 

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் 

இணையில்லா இணைப்புகள் !

இதயத்தை வருடிச் செல்லும் கதைகள் !!

 

தொடருங்கள் ,வாழ்த்துகள் !!!

 

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் 

  • தொடங்கியவர்

மற்றவர்களும் நம்மைப்போலவே..

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.

அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.

கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.

அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும்,

கரு,கருவென்று இருந்தார்.

வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,

''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.

என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.

பெட்டகக் காப்பாளர் சொன்னார்,

பரவாயில்லை,கொடுங்கள்.

நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று,

உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,

சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,

அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.

உலக இயல்பு...

..........................

நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.

நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.

எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்

நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை

வந்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.