Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எசமானில்லாத நாய்கள்

Featured Replies

யார் தீனி போடுகின்றார்களோ

அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள்

தீனியில் பங்கு கேட்ட நாய்களை

கடித்துக்குதறியது.

 

சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது

சில நேரம் தன்பாட்டில் கடித்து

எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது

 

வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள்

மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள்

வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!!

"எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்"

 

சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது

அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி

அழைத்துச் சென்றார்கள்

 

எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள்

வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு

 கப்பாத்து பண்ணிவிட்டார்கள்

 

இது நாய்களின் அந்திம காலம்

வேட்டையாடவும் தென்பில்லை

செல்லப்பிராணியாகவும் இல்லை

குரைக்கின்றது ஊழையிடுகின்றது

விசர்பிடித்து அலைகின்றது

 

முன்னர்

தெருவில் சென்ற பிணங்களைப் பார்த்து

வீட்டுக்குள் இருந்து குரைத்த நாய்கள்

இப்போது தெருவில் நின்று

வீட்டைப்பார்த்து குரைக்கின்றது

 

ஒரு நாய் குரைத்தால்

ஊரில் உள்ள எல்லா நாயும் குரைக்கின்றது

ஏன் என்று ஆராய்ந்தபோது

ஒவ்வொரு நாயும் தான்தான் வைரவரின்

வாகனம் என்று மல்லுக்கு நிற்கின்றது

 

நாய்கள் மேல் சென்று

காவல் காக்கவேண்டிய வைரவர்

நாய்களை விலக்குப் பிடித்து களைத்து

பாட்டத்தை விழுந்து செத்துப்போனார்.

 

சூலத்தில் போட்ட வடைகளுக்கு

நாய்கள் இப்போது கடிபடுகின்றது

பீட்சா தின்ற நாய்கள்

வடையில் யார் ஓட்டை போட்டதென்று

சண்டை பிடிக்கின்றது.

 

கப்பாத்து செய்யப்பட்ட நாய்களின்

வள் வள் என்ற சத்தம் குறைந்துகொண்டே

போகின்றது

காலப்போக்கில் காணாமல் போய்விடும் !

 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் வாழாத சூனியவெளியிலும் நாய்கள் நின்று குரைக்கும் என்பதை மறந்துவிட்டீர்கள் போலிருக்கின்றது ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  கெட்ட நாய்களை யாழ் களத்துக்கு கிட்டவும் அண்டக்கூடாது. :icon_mrgreen:

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு உவமானக் கவிதை. :)

  • கருத்துக்கள உறவுகள்

இது நாய்களின் அந்திம காலம்

வேட்டையாடவும் தென்பில்லை

செல்லப்பிராணியாகவும் இல்லை

குரைக்கின்றது ஊழையிடுகின்றது

விசர்பிடித்து அலைகின்றது

 

முன்னர்

தெருவில் சென்ற பிணங்களைப் பார்த்து

வீட்டுக்குள் இருந்து குரைத்த நாய்கள்

இப்போது தெருவில் நின்று

வீட்டைப்பார்த்து குரைக்கின்றது

 

 

பல உண்மைகளை இயல்பாக வரிகள் காட்டிநிற்கின்றன.

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப்பற்றி  இதற்கு மேல் எவராலும் எழுதமுடியாது

 

பாவம் நன்றியுள்ள  நாய்கள்

அவை அப்படியே ஆகக்கடவது............

  • கருத்துக்கள உறவுகள்

 

கப்பாத்து செய்யப்பட்ட நாய்களின்

வள் வள் என்ற சத்தம் குறைந்துகொண்டே

போகின்றது

காலப்போக்கில் காணாமல் போய்விடும் !

 

 

 

போகும்

 

துரோகம் துள்ளும் உண்மை என்றோ ஒருநாள் வெல்லும்

சண்டமாருதன் யாரை பாடினாரோ தெரியாது. ஆனல் சில நாய்களிடம் கப்பாத்து பண்ணக் கூட ஒன்றும் இல்லை. யாழில் மூன்று பச்சை இலவசமாக கொடுபடும் வரை இந்த பெட்டை நாய்களின் ஊளை அடங்காது. :(

சிங்கள நாய்கள் தின்ற எழும்புக்கு சில நாய்கள் அடிபடுகின்றன எப்படா அவை தங்களுக்கு போடுமென்று

 

அதை பெறுக்க முடியாத நாய்கள் ஊளையிடுகின்றது.

 

வலை சுருட்டியிருந்த பல நாய்கள் இப்போ தங்கள்தான் மேதாவிகளென ஊரைக்கூட்டி ஊளையிடுகின்றன கதை, கவிதை, ஆய்வுகட்டுரைகள் என, இதுதான் விதி, சிங்கள நாய்கள் விடும் எலும்பை திண்ணுங்களென்று.

 

சண்ட மாருதன் எஜமான் இல்லை என்ற கருத்தை வைத்து நாய்கள் தங்கள் பாடு என்று எழுதுகிறார். ஆனால் கோத்தா தன்னும் எஜமான் பற்றி ஊர்ஜிதமாக எதையும் சொல்ல வில்லை. எனவே எஜமான் என்று கதையை தொடங்கி அந்த பாதைவிட்டுவிட்டு நாய்கள் புதிய எஜமானார்கள் பின்னால் செல்கின்றன என்கிறார். எஜமானாருக்கு என்ன நடந்தது என்பது கூட ஒரு போர்குற்ற வழக்கு. பிரான்சிஸ் கரிசன் புலித்தேவன் நடேசனுக்கு சாட்சிகள் உண்டு என்கிறார். இதுவரையில் எஜமானை கண்டதாக சாட்சிகள் வெளியே வரவில்லை. அந்த பிரச்சனை இருக்கும் வரை சண்ட மாருதன் தனது கவிதை எஜமானில் தொடங்கி காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான் K.P யை இடை நிலை எஜமான்களாகி, இன்றை புலம் பெயர் தலைவர்களை மிச்சம் ஆக்குகிறார்.  இதில் கப்பாத்து பண்ணி சாமபல் போட்டு தைத்து புதிய எஜமான்கள் பின்னால் அனுப்பி வைக்கும் ஈனத்தொழிலை யாரும் கைப்பற்றிவிடாமல் தன்னிடம்  வைத்துக்கொண்டார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மாருதன் அண்ணாக்கு ரொம்ப பெரிய மனசு நன்றி உள்ள பிராணிகலாம் நாயுடன் இணைத்து பேசி இருகின்றார்.... அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்திகளை விட நன்றி உள்ள நாய் எவளவோ மேல்.....

  • தொடங்கியவர்

விசுகு மற்றும் யாழ் அன்பு உங்கள் புரிதலின் பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. புலிகள் குறித்து இந்தக்கவிதை எழுதப்படவில்லை.

 

யார் தீனி போடுகின்றார்களோ

அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள்

தீனியில் பங்கு கேட்ட நாய்களை

கடித்துக்குதறியது.

 

(நான் குறிப்பிடுவது ஒல்லாந்தர் ஆங்கிலேயர்களை, அக்காலத்தில் அவர்களுக்கு வாலாட்டியவர்கள் சமூகத்துக்கு செய்த ஒடுக்குமுறைகளை)

 

சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது

சில நேரம் தன்பாட்டில் கடித்து

எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது

 

வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள்

மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள்

வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!!

"எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்"

 

( இது அந்நியர்கள் வெளியேற்றம் குறித்து எழுதியது)

 

சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது

அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி

அழைத்துச் சென்றார்கள்

 

(ஆங்கிலக் கனவுகளுடன் சென்றவர்கள், கப்பாது என்பது பூர்வீகத்தை இழப்பதை குறிக்க முற்பட்டேன்)

 

எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள்

வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு

 கப்பாத்து பண்ணிவிட்டார்கள்

 

(புதிய எசமானர்கள் சிங்களவர்கள்)

 

இது நாய்களின் அந்திம காலம்

வேட்டையாடவும் தென்பில்லை

செல்லப்பிராணியாகவும் இல்லை

குரைக்கின்றது ஊழையிடுகின்றது

விசர்பிடித்து அலைகின்றது

 

(ஒரு இனத்தின் முடிவுகாலத்தையே குறிப்பிடுகின்றேன்)

 

முன்னர்

தெருவில் சென்ற பிணங்களைப் பார்த்து

வீட்டுக்குள் இருந்து குரைத்த நாய்கள்

இப்போது தெருவில் நின்று

வீட்டைப்பார்த்து குரைக்கின்றது

 

(இது ராமநாதன் காலத்தில் கீழ்சாதிப்பிணங்கள் மேல்சாதித்தெருக்களில் எடுத்துச்செல்லப்பட்டதுக்கு எதிரான வழக்கும். இப்போது புலம்பெயர் நாட்டில் இருந்தபடி சாதியம் பேசுவது காத்தான் குடியில் ஈச்சமரம் வந்துவிட்டதென்று கத்துவதை மனதில் வைத்து எழுதியது)

 

ஒரு நாய் குரைத்தால்

ஊரில் உள்ள எல்லா நாயும் குரைக்கின்றது

ஏன் என்று ஆராய்ந்தபோது

ஒவ்வொரு நாயும் தான்தான் வைரவரின்

வாகனம் என்று மல்லுக்கு நிற்கின்றது

 

( இது தலமையற்ற வழிநடத்தலை குறிப்பிட்டு)

 

நாய்கள் மேல் சென்று

காவல் காக்கவேண்டிய வைரவர்

நாய்களை விலக்குப் பிடித்து களைத்து

பாட்டத்தை விழுந்து செத்துப்போனார்.

 

(கடவுளால் கூட எம்மை ஒன்றுபடுத்த முடியாது)

 

சூலத்தில் போட்ட வடைகளுக்கு

நாய்கள் இப்போது கடிபடுகின்றது

பீட்சா தின்ற நாய்கள்

வடையில் யார் ஓட்டை போட்டதென்று

சண்டை பிடிக்கின்றது.

 

(எரிகிற வீட்டில் புடுங்குவது வரை லாபம் என்ற போக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த புலம்பெயர்ந்தவர்களின் அலட்சியப்போக்கும் )

 

கப்பாத்து செய்யப்பட்ட நாய்களின்

வள் வள் என்ற சத்தம் குறைந்துகொண்டே

போகின்றது

காலப்போக்கில் காணாமல் போய்விடும் !

 

 

 

இராமநாதன் காலத்தில் இலங்கையில் தமிழரை தனி இனமாகவும் ஒல்லந்தரை ஆட்சி கதிரையிலும் கண்டு பிடித்து கவிதை எழுதிய சண்டமாருதன் எதற்கு எஜமான், எஜமானர்கள் என்று இரண்டு பதங்களை பாவித்தார் என்பது இன்னமும் புரிய வில்லை.   :mellow: மேலும் தலைப்பில் யாருக்கு எஜமான் இல்லை என்கிறார் எனபதையும் யார் அந்த எஜமானாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார் என்பதை பற்றியும் எழுதினாராயின் அவரின் கவிதையை பற்றிய எமது விமர்சனகளை நாம் வைக்க தயாராக இருக்கிறோம்.

 

கவிதையின் புதிய விளக்கத்தின் பின்னர், பச்சை குத்தியர்வர்களை பற்றி முன்னர் நான் எழுதியது இன்னும் ஒரு படி கருத்தால் உயர்கிறது. இவர்கள் கையில் ஒவ்வொருநாளும் 3 பச்சை இலவசமாக கிடைக்கும் வரை இப்படி ஒழித்துவிளையாடும் கவிதைகளுக்கு கூட ஓடி ஓடி  பச்சை குத்தி தங்களை மட்டும் அல்ல அவர்கள் யாழில் வந்து கவிதை படிப்பவர்களையும் கேணைகளாக்குகிறார்கள். அவர்களின் மனத்தில் உண்மை இருந்தால்  இன்று தங்கள் படித்த பட்டத்தை வைத்து தமக்கு புரியாத கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கு பச்சை குத்தும் போது தாம் அவற்றை முதலில் விளங்கிக்கொள்கிறார்கள என்பது ஊர்ஜிதம் செய்து கொள்ளட்டடும். :lol:  :lol:  :lol:  :lol:  :lol:

 

இந்த ஒழிவு மறைவு விளக்கத்தை வெளியே வரவழைத்து இதில் பச்சை குத்தியவர்களுக்கு மாற்றுக் கருத்து எழுதிய எங்கள் மானத்தை காப்பாற்றி வைத்த விசுகருக்கு நன்றி. :)

 

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இராமந்தன் காலத்தில் இலங்கையில் தமிழரை தனி இனமாகவும் ஒல்லந்தரை ஆட்சி கதிரையிலும் கண்டு பிடித்து கவிதை எழுதிய சண்டமாருதன் எதற்கு எஜமான், எஜமானர்கள் என்று இரண்டு பதங்களை பாவித்தார் என்பது இன்னமும் புரிய வில்லை.   :mellow: மேலும் தலைப்பில் யாருக்கு எஜமான் இல்லை என்கிறார் எனபதையும் யார் அந்த எஜமானாக இருக்க வேண்டும் என்றும் நினைகிறார் என்பதை பற்றியும் எழுத்தினாராயின் அவரின் கதையை பற்றிய எமது விமர்சனகளை நாம் வைக்க தயாராக இருக்கிறோம்.

 

கவிதையின் புதிய விள்க்கத்தின் பின்னர், பச்சை குத்தியர்வர்களை பற்றி முன்னர் நான் எழுதியது இன்னும் ஒரு படி கருத்தால் உயர்கிறது. இவர்கள் கையில் ஒவ்வொருநாளும் 3 பச்சை இலவசமாக கிடைக்கும் வரை இப்படி ஒழித்துவிளையாடும் கவிதைகளுக்கு கூட ஓடி ஓடி  பச்சை குத்தி தங்களை மட்டும் அல்ல அவர்கள் யாழில் வந்து கவிதை படிப்பவர்களை கேணைகளாக்குகிறார்கள்.அவர்களின் மனத்தில் உண்மை இருந்தால்  இன்று தங்கள் படித்த பாட்டத்தை வைத்து தமக்கு புரியாத கவிதைகளுக்கும், காடுரைகளுக்கு பச்சை குத்தும் போது தாம் அவற்றை முதலில் விளங்கிக்கொள்கிறார்கள என்பது ஊர்ஜிதம் செய்து கொள்ளட்டடும். :lol:  :lol:  :lol:  :lol:  :lol:

 

இந்த ஒழிவு மறைவு விளக்கத்தை வெளியே வரவளைது இதில் பச்சை குத்தியவர்களுக்கு மாற்றுக் கருத்து எழுதிய எங்கள் மானத்தை காப்பாற்றி வைத்த விசுகருக்கு நன்றி. :)

 

இதில் எந்த ஒழிவு மறைவும் இல்லை. பல்வேறு விதமாக புரிந்துகொள்ளக்கூடிய விசயம் இருக்கின்றது. அது அவரவர் புரிந்துகொள்வதைப்பொறுத்தது. இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் தீவிர தேசீயவாதிகள் சிந்திக்கமுன் வழமைபோல உணர்ச்சிவசப்படுகின்றார்கள் அதுதான் பிரச்சனை.  இந்தப் பழக்கத்தால் பலரை கடந்த காலத்தில்  மண்டையில் போட்டார்கள். மற்றபடி இதற்குள் எழுதுவதற்கு எதுவும் இல்லை.

இதில் எந்த ஒழிவு மறைவும் இல்லை. பல்வேறு விதமாக புரிந்துகொள்ளக்கூடிய விசயம் இருக்கின்றது. அது அவரவர் புரிந்துகொள்வதைப்பொறுத்தது. இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் தீவிர தேசீயவாதிகள் சிந்திக்கமுன் வழமைபோல உணர்ச்சிவசப்படுகின்றார்கள் அதுதான் பிரச்சனை.  இந்தப் பழக்கத்தால் பலரை கடந்த காலத்தில்  மண்டையில் போட்டார்கள். மற்றபடி இதற்குள் எழுதுவதற்கு எதுவும் இல்லை.

 

என்னவொரு தூர நோக்கு சிந்தனை, உங்கள் கவிதைகளுக்கு ஒரு பொழிப்புரையையும் அடுத்த முறை இணைத்துவிடுங்கள்.

 

அதுசரி சுயமாக சிந்திக்க தெரியாதவன்கள் சிங்கள நாய்களின் அடிவருடிகள்; அவன்களின் சுட்டுவிரல் ஏவலில் போட்டுத்தல்லியவை/ போட்டுக்கொண்டிருப்பவை எண்ணுக்கணக்கற்றவை. சொந்த மூளையை பாவிக்காதவனெல்லாம்

 

வாழ்கின்றான் பிச்சையெடுத்து, என்ன செய்ய இதுதான் தற்போதைய விதி

இதில் எந்த ஒழிவு மறைவும் இல்லை. பல்வேறு விதமாக புரிந்துகொள்ளக்கூடிய விசயம் இருக்கின்றது

 

அப்பட்டமாக ஒன்றுடன் ஒன்று முரணும் பலகருத்துகள் இதில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார். முரணும் பல கருத்துக்களுக்கு தான் தான் ஆசிரியர் என்றும் மார் தட்டுகிறார். இதன் பின்னர், கொள்கை இல்லாமல் நடந்து கொள்ளும் பிழைப்பு நாய்களை பற்றி கவிதை எழுதியிருக்கிறார். எப்படி இலங்கை அரசு சட்டங்களை பலவிதமாக திரிக்கிறதோ அதே பாணியிலேயே தனது கவிதையிலும் ஒழுங்கான விளக்கத்தை விட்டுவிட்டு திரிப்பை பின் பற்றுவதாக கூறுகிறார்.  என்னே பகிடி. ஆனால் விசுகரின் விளக்கம் பிழை என்னும் போது  பச்சை குத்தியோரின் விளக்கம் சரிதான் என்கிறார். பச்சை குத்திய அவர்கள் முன் வந்து தாங்கள் விளக்கங்களை எழுதுவார்களா?

 

கவிதை புலிகளை தூற்றுகிறது என்ற விசுகுவின் விளக்கம் மட்டும் பிழை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் கவிதை தமிழ் இனத்தைத்தான் தூற்றுகிறது என்பதாகும். அவர் இது வரையில் தான் புலிகளை மட்டும் திட்டி வந்த பாதையில் இருந்து விலகி இப்போ தமிழ் மக்களை திட்டும் பாதையில் இறங்கியிருப்பதாக விசுகருக்கு விளக்கம் அளிக்கிறார். (இப்படி ஒரு இனத்தை, பொதுமக்களை தூற்றத்தான் இந்த கவிதை எழுதப்பட்டது என்று ஆசிரியராலேயே விளங்க வைக்கபட்ட பின்னர் அந்த கவிதையை யாழில் அனுமதிக்கலாமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய பகுதி. உதயனில் வன்னி மக்கள் மாடுகளாக விவரிக்கப்பட்டதாக வன்னியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேலும் இதே மாதிரி சிலர் தங்களை முஸ்லீங்களாக, சிங்களவர்களாக  நடித்துக்கொண்டு  அந்தந்த மக்களைப்பற்றி இப்படிக் கவிதைகளை யாழில்எழுத முடியுமா? யாழின் இனவாத தடுப்புக்கொள்கைகளை அது மீறாதா?)

 

கவிதையில் காணப்படும் இராமநாதன் காலத்தை பற்றி சரித்திர முரணல்களுக்கு சரித்திரத்தை அறியாமல் கவிதை எழுதுகிறார்களா என்றால் அது இல்லை. எழுதிய கவிதையை காப்பாற்றாமல் பச்சை குத்தியோரை காப்பற்றுகிறார். சிங்கள மக்கள் கூட வெள்ளை எஜமானர்களிடம் தான் சுதந்திரமாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை. JVP இரண்டு புரட்சிகளை சிங்கள ஆட்சிக்காலத்தில் தான் நடத்தியது. இதானல் முதலாவது புரட்சியில் 60,000 வரையும், இரண்டாவது புரட்சியில் 120,000 இளைஞர்களைக் கொலை செய்தது சிங்களம் என்பது மூடி மறைக்கப்பட்ட செய்தி. ஆனால் ஒரு சிங்கள மகன் தன்னும் வெள்ளையர் ஆட்சியில் புரட்சியில் இறங்கவில்லை. ஆதாவது வெள்ளையர் தங்களை நாய்களாக்கவில்லை என்பது அவர்களின் உணர்வு. கவிதையில் சொல்லப்படும்  நாய்களான தமிழரின்  இடதுசாரிக் காராளசிங்கம் போன்றோர் மட்டுமே வெள்ளைகளை எதிர்த்து புரட்சி செய்து தமிழ் நாட்டில் ஒழிக்க வேண்டிய நிலைக்கு வந்தார்கள். ஒருவேளை கவிதை சிங்கள மேட்டுக்குடிகளுக்கு பொருந்துகிறதோ தெரியாது, ஆனால் தமிழருக்கு வெள்ளையர் ஆட்சிகாலத்தில் பொருந்தவில்லை. எனவே கவிதையை எழுதிய பொருளில் இருந்து மாற்றி பச்சை குத்தியோரை காப்பாற்ற பச்சை குத்தியோருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லாத இரமாநாதன் காலத்திற்குள் கவிதையை இழுத்து சென்று மறைக்கிறார். இது நடத்தையில், தான் பெற்ற பிள்ளையை வக்கிரம் செய்யும் உதாரணம்.

 

பல இடங்களில் முன்னுக்குப்பின் முரணாக எழுதப்பட்ட கவிதையை முரணல்களை தவிர்த்துதான் பொருள் கொள்ள முடியும். இராமநாதன் காலத்தில் நாய்கள் தங்கள் எஜமான்களை வைத்து சிங்களவர்களை காப்பாற்றியது பற்றி கவிதையில் இல்லை. மேலும் சிங்களங்களை அறிவில் நாய்களைவிட குறைவாக கவிதை கொள்வதினாலேயே ஒரு இனம் முழுக்க நாய்களாகி 65% அரச உத்தியோகத்தையும், 75% பாதுகாப்பு சேவையையும் வைத்து கொண்டு இலங்கையிடம் முன்னேற்றிய நாடுகள் கடன்படத்தக்க நிர்வாகத்தை வெறும் நாய்கள் நடத்திக்காட்டி முடிய,  நாட்டை நடத்தமுடியாமல் தள்ளாடும் இந்த சிங்கள மேட்டுக்குடிகளை பற்றிக்கவிதை சொல்லாமல் தவிர்க்கிறது என்று கொள்ள வேண்டும். 

 

பாவம் அவர் ஊரை ஏய்பதாக நினத்துத்தான் வந்தார். ஆனால் இதில் ஏமாந்தது விழுந்து விழுத்து பச்சை குத்தியவர்களும், அவரும் மட்டுமே. பாடலுக்கு இட்ட தலைப்பை விளங்க வைத்த பின்னர் நாமும் பாடலுக்கு எத்தனை விளக்கம் கொடுக்க முடியும் என்று பார்க்கலாம்.  அவர் ஏன் எஜமான், எஜமானர்கள் என்று இரண்டு பதங்கள் பாவித்தார்  என்பதை விளக்காமல் சறுக்குகிறார். ஆனால் கவிதையில் பொடி வைத்து பச்சை குத்துவோரை ஏய்க்கத்தான் எழுதியதாக ஒத்து கொள்கிறார். "எஜமான்" என்று அவர் தலைவர் பிரபாகனை கூறிவிட்டு மற்றவர்களை ஏமாற்றுகிறார். இந்த கவிதையை படித்து பச்சை குத்தியவர்களில் யாரும் அதைவிட வேறு பொருள் கொள்ளவில்லை. அப்பட்டமாக காணப்படும் முரணல்களை சரிசெய்து அப்படி ஒரு சரியான விளக்கம் வைக்க முடியுமாயின் அது வேண்டுமென்றே  ஒருவருக்கும் விளங்கமால் இருக்க ஒழிவு மறைவாக எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை

என்னதான் நீங்கள் அழுது புரண்டாலும்

இப்ப இது தான் வசூல் கொடுக்கும் பாணி.............

 

புரிந்தும் புரியாமலும் பார்த்து விடுவார்கள்

மடி நிறைந்துவிடும்

 

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை

நரிகளிடம் தமிழன் ஏமாந்த வரலாறு பல ஆயிரம்

அதில் இதுவும் ஒன்று.

இங்கே விழுந்த பலரைப்பார்த்தால் புரியும்

தமிழரின் விடுதலைப்போராட்டத்தின் தெளிவை......................

"இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் தீவிர தேசீயவாதிகள் சிந்திக்கமுன் வழமைபோல உணர்ச்சிவசப்படுகின்றார்கள் அதுதான் பிரச்சனை."

 

எவ்வளவு அருமையான வசனமாக இருந்தாலும் எஜமானுக்கு கட்டுப்படும் நாய் போன்ற நடத்தை. இருட்டில் இருப்பவர் அவர் மட்டும்தான். அவரை இருட்டில் வைத்திருப்பவர் எஜமானர்கள்தான். இதனால்த்தான் இருட்டில் இருக்கும் எஜமானர்களின் காவல் நாய்கள் எதுவுமே இல்லாமல் ஆனால் மருண்ட போதெல்லாம் குரைக்கின்றன.

 

அவதூறு எழுத என்று சிலர் யாழ்களத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  திரிக்க என்று பண்டிதர்கள் வலம் வருகிறார்கள். திசை திருப்ப ஞானம் போதித்து,  துன்புறுத்தல்களை, வக்கிரங்களை அவை எல்லாம் இயற்கையாக காட்ட தியானிகள் செயல்படுகிறார்கள். தூண்டிவிட்டு குறங்கள் செய்ய கொலைகளை ஊக்குவிக்க பலர் உண்டு. அரசிடம் பிடித்துக்கொடுக்க ஸ்கைப்பை மூக்குக் கண்ணாடியில் மாட்டிகொண்டு அலைகிறார்கள். உண்மை பெயரை கண்டு பிடித்தால்தான் எழுதுவது உண்மை என்று வாதாட பலர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வாழைப்பழத்தில் ஊசி எற்ற என்று ஜிப்னாடிசம், மெஸ்மெரிசம் படித்த விஞ்ஞானிகள் பலர் யாழில் விழித்தகண் மூடாமல் சிவராத்திரி கொண்டாடுகிறார்கள்.

 

இவ்வளவற்றையும் கண்ட சண்ட்மாருதன் தன் அனுபவத்தால் யாழில் உள்ளோர் ''இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்" என்று குழம்புகிறார்.

 

அடுத்த முறை இ்ங்கையில் இருந்து எழுதிவரும் கருத்துக்களை ஏன் அப்படிக் குழப்பமாக இருக்கிறது என்பதை ஒருதடவை கேள்வி கேட்டுவிட்டு பதியட்டும். அதை செய்ய மற்றப்பதனால் தான் இப்படி குழப்பமாக பழமொழிகளை மட்டும் அல்ல கவிதைகளை மட்டும் அல்ல அவற்றின் பொருளகளையே பதிந்துவிடுகிறார். :(<_<

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லை

என்னதான் நீங்கள் அழுது புரண்டாலும்

இப்ப இது தான் வசூல் கொடுக்கும் பாணி.............

 

புரிந்தும் புரியாமலும் பார்த்து விடுவார்கள்

மடி நிறைந்துவிடும்

 

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை

நரிகளிடம் தமிழன் ஏமாந்த வரலாறு பல ஆயிரம்

அதில் இதுவும் ஒன்று.

இங்கே விழுந்த பலரைப்பார்த்தால் புரியும்

தமிழரின் விடுதலைப்போராட்டத்தின் தெளிவை......................

 

சும்மா ஒரு கேள்வி விசுகு அண்ணாவிடம்.. :)

 

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து போரியல்நுட்பங்களில் சிறந்தவர், பலகளங்களின் நாயகன் என்று தலைமையாலேயே பாராட்டப்பட்ட கருணா, உலக வல்லரசுகளுக்கே தண்ணி காட்டி போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த கேபி எல்லாரும் இப்படி மாறக்காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்? விலை போய் விட்டார்கள் என்றால் புலிகள் அமைப்பில் இருந்த போது காணாத பணத்தை, புகழை எதிர்பார்த்தா போனார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்படியானவற்றுக்கு விடை தேடினீர்கள் என்றால் அவர்களுக்குப் புரிந்த ஏதும் உங்களுக்கும், எமக்கும் புரியக்கூடும் விசுகு அண்ணா, அதுதான் இவை குறித்த உங்கள் பார்வை என்ன என்று கேட்டேன்? :):icon_idea:

உங்கள் கேள்வி, சண்டமாருதன் கவிதைக்கான பொருளை விளங்கப்படுத்திய பின்னரும் நீங்கள் மட்டும் விளங்க கஸ்டப்படுகிறிர்களா என்ற ஐயத்தை ஏற்ப்படுத்துகிறது.

 

சில hints தருகிறேன் பொருள் பிடிபடுகிறதா என்று பாருங்கள்.

 

வடமாகண சபைத்தேர்தல் வருகிறது. பொதுபல சேனை முஸ்லீம்களின் மீதான வன்முறைகளை தேர்தலுக்காக தளர்த்துவது ஆபத்து. அதனால் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை கவர பதியுதின் ஆர்வமாக முஸ்லீம் தமிழ் குடியேற்ற பிச்சனையை  ஊதிக்கொண்டிருக்கிறார். இவருக்கு யாழில் யாராவது கைகொடுக்க முடியுமா என்பது ஒரு அவசர கேள்வி.

 

புலிகளை, கூட்டமைப்பை முஸ்லீம்களின் எதிரிகளாக காட்டி எழுதிய கதையெல்லாம் இப்போது தியாகராஜ பாகவதர்கால "சிந்தாமணி' படத்தின் நிலையை அடைந்துவிட்டது. யாரவது ஒரு புதுக்கதாநாயகனை போட்டு அந்த விடயத்தை திரும்ப திறில் ஆக்க வேண்டியிருக்கு. கிறிஸ்தவர்களுக்கு நெதர்லாந்தில் நல்ல ஒரு அமிர்தா பச்சன் கிடைத்திருக்கார்.  முஸ்லிம் பக்கம் ஒன்று வேண்டும்.

 

இதனால் தான் புதிதாக விஜய், சூரியா, அசின், பிசின் என்று பிரட்டத்தாக கல்லெல்லாம் பிரட்டுகிறார்கள். இதில் ஒரு கதாநாயகன் தான் இந்த இராமநாதன்.  இவரை முஸ்லீம் எதிரியாக காட்டுவது மிக்க எளியது என்று நினைக்கிறார்கள். ஏன் எனில் இந்த நாய்தான் முன்னர் ஒரு இனக்கலவரத்தில், அடி வேண்டியோர் எஜமான்கள் போட்ட எலும்புத்துண்டுகளை நக்கிக்கொண்டிருந்த போது,  தனது எஜமானர்களுக்கு சட்டப்படி நடப்பது என்றால் என்ன என்று பாடம் படிப்பித்த நாய்.

 

என்ன உங்களுக்கு இப்போது ஏதாவது புரிகிறதா? புதிய முறையில் முயற்சிக்க  நீங்களும் ஒரு கை கொடுக்க முடியுமா? பச்சை மிச்சம் இருக்கா? வசதி எப்படி?

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு கேள்வி விசுகு அண்ணாவிடம்.. :)

 

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து போரியல்நுட்பங்களில் சிறந்தவர், பலகளங்களின் நாயகன் என்று தலைமையாலேயே பாராட்டப்பட்ட கருணா, உலக வல்லரசுகளுக்கே தண்ணி காட்டி போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த கேபி எல்லாரும் இப்படி மாறக்காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்? விலை போய் விட்டார்கள் என்றால் புலிகள் அமைப்பில் இருந்த போது காணாத பணத்தை, புகழை எதிர்பார்த்தா போனார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்படியானவற்றுக்கு விடை தேடினீர்கள் என்றால் அவர்களுக்குப் புரிந்த ஏதும் உங்களுக்கும், எமக்கும் புரியக்கூடும் விசுகு அண்ணா, அதுதான் இவை குறித்த உங்கள் பார்வை என்ன என்று கேட்டேன்? :):icon_idea:

 

 

அதிக  துரம் போகத்தேவையில்லை  

பிரபாகரனையும் புலிகளையும்   போராளிகளையும் மாவீரரையும் இதைவிட கேவலமாக எழுதமுடியாது.

அப்படி எழுதியதை நீங்கள் ஒத்துக்கொள்வதாயின் அது ஒவ்வொருத்தரதும் தனிப்பட்ட விருப்பம்

 

இங்கு நீங்கள்

2 பேரைத்தான் உதாரணம் காட்டுகின்றீர்கள்

நான் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்

அதைவிட பல மடங்கு அதிகமான பொதுமக்கள் 

இவர்களை எடுத்துக்கொள்கின்றேன்

வித்தியாசம் அவ்வளவு தான்

ஆனால்  இடைவெளி  ரொம்ப ரொம்ப  அதிகம்..........

 

முரளிதரன் போரியல் நுட்பத்தில் தலைவருக்கு அடுத்து............

எங்கேயோ  போய்விட்டீர்கள் யீவா............ :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிக  துரம் போகத்தேவையில்லை  

பிரபாகரனையும் புலிகளையும்   போராளிகளையும் மாவீரரையும் இதைவிட கேவலமாக எழுதமுடியாது.

அப்படி எழுதியதை நீங்கள் ஒத்துக்கொள்வதாயின் அது ஒவ்வொருத்தரதும் தனிப்பட்ட விருப்பம்

 

இதில் புலிகளைச் சாடியதை விட புலிகளைச் சாட்டி வயிறு வளர்த்த கூட்டத்தைப் பற்றிச் சொல்வதாகத்தான் நான் விளங்கிக்கொண்டேன். கவிதையின் சிறப்பே அது தானே அவரவர் பார்வைக்கேற்ப பொருள்படும்.

 

இங்கு நீங்கள்

2 பேரைத்தான் உதாரணம் காட்டுகின்றீர்கள்

நான் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்

அதைவிட பல மடங்கு அதிகமான பொதுமக்கள் 

இவர்களை எடுத்துக்கொள்கின்றேன்

வித்தியாசம் அவ்வளவு தான்

ஆனால்  இடைவெளி  ரொம்ப ரொம்ப  அதிகம்..........

 

இதில் எழுத ஆயிரம் விடையங்கள் இருக்கு. மறுபடியும் ஆரம்பத்திலை இருந்தா என்ற சலிப்பும், எழுதியும் புரியும் நிலையில் அனேகம் பேர் இல்லை எனும் போது இதில் எழுதி நேரத்தை வீணாக்குவதுடன், பிரசர் ஏறுவது தான் மிச்சம்.

இந்த இருவரைக் குறிப்பிடக்காரணம் போராட்டம் தேசியம் குறித்து பேசும் நாம் அவர்கள் செய்ததில் ஒரு மயிரளவாவது பிடுங்கி இருக்க மாட்டோம், அவர்களின் பிரிவின் பின்னான தோல்வி அதுக்கு நிதர்சனம்.

அத்தோடு தமிழீழம் கிடைக்கும், அல்லது போராட்டம் வெற்றியடையும் என்று தெரிந்திருந்தால் புலிகள் முள்ளிவாய்க்காலைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் வந்திராது. மாற்று வழிகளைத் தேடி இருப்பார்கள்.

ஆக முடிவு அவர்களுக்கே தெரிந்த ஒன்று இன்னும் அவர்களைச் சாட்டி பிழைப்பு நடத்தியவர்களுக்குத் தான் அவற்றை உணர, அல்லது அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை.

 

முரளிதரன் போரியல் நுட்பத்தில் தலைவருக்கு அடுத்து............

எங்கேயோ  போய்விட்டீர்கள் யீவா............ :(  :(  :(

 

இப்படிச் சொல்லி நாங்களே எங்களுக்கு சொறிஞ்சு விட்டுக் கொள்ளலாம், உண்மை அனைவருக்கும் தெரியும். :wub:

 

இதில் புலிகளைச் சாடியதை விட புலிகளைச் சாட்டி வயிறு வளர்த்த கூட்டத்தைப் பற்றிச் சொல்வதாகத்தான் நான் விளங்கிக்கொண்டேன். கவிதையின் சிறப்பே அது தானே அவரவர் பார்வைக்கேற்ப பொருள்படும்.

 

வேறு பல பொருள் இந்த கவிதைக்கு வரலாம். (அதாவது கிருஸ்ணனை நீலம் என்றும் கூறலாம், பச்சை என்றும் கூறலாம். ஆனால் ஆகாயத்தை நீலம் என்றும் பச்சை என்றும் கூற முடியாது. நிர்மலமான வானம் நீலமே. கவிதை ஒன்று இல்லாத கருத்துக்கு இடம் கொடுத்தால், நக்கீரர் நாளில் இருந்து குற்றம் குற்றமே. தேவியின் மயிர் ஆனாலும் மயிரில் மணம் இல்லை. ) ஆனால் நீங்கள் சொல்லவருவது போல புலிகள் காலத்தைப் பற்றி கவிதை கூறவில்லை.

 

விசுகு மற்றும் யாழ் அன்பு உங்கள் புரிதலின் பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. புலிகள் குறித்து இந்தக்கவிதை எழுதப்படவில்லை.

 

 

 

இதில் எழுத ஆயிரம் விடையங்கள் இருக்கு. மறுபடியும் ஆரம்பத்திலை இருந்தா என்ற சலிப்பும், எழுதியும் புரியும் நிலையில் அனேகம் பேர் இல்லை எனும் போது இதில் எழுதி நேரத்தை வீணாக்குவதுடன், பிரசர் ஏறுவது தான் மிச்சம்

 

 

கவிதையை விளங்கிக்கொள்ள முடியாதவரைக்கும் உங்களுக்கு நீங்கள் பிரசை எற்றமட்டும்தான் முடியும். கவிதையை பற்றி கருத்தெழுத முடியாது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.