Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தம் தொலைந்த வாழ்வு

Featured Replies

கருத்துக்களைப் பகிர்ந்த புத்தன், விசுகு அண்ணா, சாந்தி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 

நன்றியிருக்கட்டும் மிகுதி எங்கே, வசந்தி ஓடிப்போயிட்டாவா அல்லது கெட்டுப்போயிட்டாவா?

  • Replies 239
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 7


வசந்தி தேவகியைப் பார்த்து கதச்சீங்களோ அக்கா என்று கேட்டாள். ஓம் வசந்தி இன்று காலையில்தான் வசந்தனோட கதைச்சனான். தான் கொஞ்சநாள் ஒரு பிள்ளைக்கு டியூசன் எடுத்தனான்தான். அதுக்காக காதல் எல்லாம் இல்லை. அவ வீணா கற்பனை பண்ணி வைச்சிருந்தா அதுக்கு நானோ பொறுப்பு என்று சொன்னவன். தன்னை இனித் தொந்தரவு செய்ய வேண்டாமாம் என்று தேவகி கூறிக்கொண்டிருக்கும் போதே வசந்தி மயங்கி விழுந்திருந்தாள்.

தேவகிக்கு கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல. என்ன செய்யிறதென்று ஒரு கணம் தான் யோசிச்சிருப்பாள். உள்ளே சென்று கணவனை அழைத்து வந்து வசந்தியைத் தூக்கித் திண்ணையில் கிடத்திவிட்டு வசந்தியின் பெற்றோரிடம் கணவனை அனுப்பினாள். எதுக்கு வீண் வம்பு. குமர்ப்பிள்ளையின் விசயம். ஒண்டு கிடக்க ஒண்டு நடந்தால் என்ர தலை தான் உருளும் என தனக்குள் நினைத்தபடி தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து வசந்தியின் முகத்தில் தெளித்தாள். தண்ணீர் பட்டதும் வசந்தியின் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு கண்களை மெல்லத் திறந்தாள்.

தேவகியைப் பார்த்ததும் எல்லாம் நினைவுக்குவர ஐயோ அக்கா என்று சொல்லிப் பெருங் குரலெடுத்து  அழ ஆரம்பித்தவளை தன் தோளில் சாய்த்து அனைத்து ஆறுதல்ப்படுத்த முனைந்தாள் தேவகி. சில ஆம்பிளையள் உப்பிடித்தான் வசந்தி. நீங்கள் சின்னப் பிள்ளை. அனுபவம் பத்தாது. தாய் தகப்பனுக்குப் பயந்தவங்கள் ஏன் காதலிக்கிறாங்களோ தெரியேல்லை. இப்பவாவது வசந்தனைப் பற்றித் தெரிந்துதே. அந்த அளவுக்கு நல்லதுதான் என்று கூறி முடிய, அக்கா என்னால வசந்தனை மறக்க ஏலாது. அவர் என்னை மறக்கலாம். இந்த ஜென்மத்தில நான் கட்டினா அவரைத்தான் அல்லது இப்பிடியே இருந்திட்டுப் போவன் என கேவிக் கேவி வசந்தி கூற, இப்ப யார் என்ன சொன்னாலும் வசந்தியின் மண்டையில் ஏறப்போவதில்லை என எண்ணியபடி சரி பரவாயில்லை. பிறகு உதைப்பற்றிக் கதைப்பம். இப்ப உங்கட வீட்டில இருந்து யாராவது வருவினம் வீட்டை போங்கோ என்றார். அக்கா நீங்கள் வசந்தன்ர விசயத்தைச் சொல்லிப் போட்டீங்களே என்று வசந்தி கேட்டதற்கு இல்லை மயங்கி விளுந்திட்டீர் என்று மட்டும் தான் சொன்னனான். பாவம் உம்மட அம்மா அப்பாவுக்கு நான் சொல்லி அவையின்ர மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. ஆனால் எல்லாத்தையும் மறந்து படிப்பில கவனத்தை வையும். எல்லாம் தன்ர பாட்டில மறந்திடும் என்றார். வசந்தி எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளின் மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டது.

வசந்தியின் தாய்தான் மகளின் நிலை கேட்டு ஓடிவந்தார். என்னதான் கோபம் இருந்தாலும் மயங்கி விழுந்துவிடாள் என்றதும் மனம் பதறத்தான் செய்தது. என்ன கறுமமோ எக்குத் தப்பா ஏதும் நடந்திட்டுதோ என்றும்  ஏதேதோ யோசனை ஓடியது. உள்ளுக்குள் ஏற்பட்ட நடுக்கத்தை மறைத்தபடி என்னம்மா கோவிலுக்குப் போறன் என்று சொல்லிப்போட்டு இங்க வந்து நிக்கிறாய் என்றார் மகளைப் பார்த்து. வசந்தி ஏதும் சொல்ல முதலே நான்தான் அக்கா வசந்தியின்ர ரிசல்ஸ் பற்றிக் கேட்டு இங்க கூட்டிக்கொண்டு வந்தனான் என்றதும் வசந்திக்கும் தாய்க்கும் கூட நின்மதி ஏற்பட்டது.

வசந்தி எழுந்திருக்க நினைத்தாலும் சோர்வு விடவில்லை. எந்தகக் காயத்தின்  வலியும்  தாங்கிகொள்ள முடியும். ஆனால் மனம் சோர்ந்துவிட்டால்  எதுவும் செய்ய விடாது. வசந்தி எத்துனை திடமானவள். இப்படி வாடிப்போய் சோர்வுடன் நடந்து செல்வதை தேவகி இரக்கத்துடன் பார்த்தாள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. நான் தான் வலியக் காதலைச் சொல்லியிருப்பினும் கொஞ்சம்கூட என்னில் அன்பில்லாமலா என்னைக் காதலித்தார். இல்லை நடித்தார். இத்தனை நாள் பழக்கத்தை எப்படித் தூக்கி எறிய முடியும்? பொழுது போக்குக்காக என்னோட கதைச்சிருக்கிறார். நல்ல காலம் நெருக்கமாப் பழகி நான் என்னை இழக்கவில்லை. என்னத்தை இழக்கிறது. மனதை பறிகொடுத்தபிறகு எதை இழந்தென்ன விட்டென்ன. வசந்தனை விட என் வாழ்வில் வேறு யாருக்கும் இடம் இல்லை என எண்ணியவள், தாய் எதோ கேட்டதையும் தான் கவனிக்காததையும் உணர்ந்து என்னம்மா என்றாள். உள்ளதைச் சொல்லு வசந்தி,அவனோட  ஒரு தப்பும் நடக்கேல்லைத் தானே என்றதும், என்னம்மா நீங்கள் என்னை கேவலமா நினைச்சுப் போட்டியளே என்று  மன வருத்தத்துடன் கூறினாள். அவளின் குரல் தாய்க்கு அவள்மேல் இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதில்லை மயங்கி விழுந்தது  என்றதும் நான் என்னென்னவோ நினைச்சுப் பயந்துபோனன் என்று சமாளித்தார்.

மாதங்கள் சில ஓடின. வசந்தி வெளியில் அதிகம் திரிய எண்ணவில்லை வசந்தனைப் பார்க்கவும் ஆசை கொள்ளவில்லை. படிப்பில் கவனத்தை வைத்தாள். சில வேளைகளில் கோவிலுக்குப் போவாள். தாய் பொருட்கள் வாங்கக் கடைக்கு அனுப்பினால் போவாள். மற்றப்படி வீட்டில் தான். வசந்தன் இப்ப கொழும்பில என்று ஒருநாள் தேவகி அக்கா சொன்னார். அவளுக்கு அது ஒரு ஆறுதலைத் தந்தது என்றே தோன்றியது.

மாதங்கள் நகர்ந்து  ஒருவருடம் ஓடியது. வசந்தி இம்முறை நன்றாகப்  பரீட்சை எழுதியதை உணர்ந்தாள். இடையில் லண்டன் எக்ஸ்சாமும் எடுத்து திறமைச் சித்தி எய்தி இருந்தாள். அவளின் ஒன்றுவிட்ட சித்தப்பா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வேலை செய்தபடியால்,   கணக்குப் பதிவாளர் வேலை ஒன்று இருக்கு. முதல் ஒரு மாதம் சம்பளம் தர மாட்டினம். நல்லாச் செய்தால் அடுத்த மாதத்திலிருந்து சம்பளம். எதுக்கும் போய் பாக்கச் சொன்னார். சரி ரிசல்ஸ் வரும் வரைக்குமாவது பொழுது போகட்டும் என எண்ணிய வசந்தி அடுத்த வாரத்திலிருந்து வேலையை ஆரம்பித்தாள். அவளின் சுறுசுறுப்பும் அமைதியும் அவளை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அடுத்த மாதமே சம்பளத்துடன் வேலையும் கொடுத்துவிட்டனர். இரு மாதங்களில் புதிதாக அந்த இடத்தில் கச்சேரி ஒன்று ஆரம்பிக்க இருப்பதாகவும், அங்கு திட்டமிடல் அலுவலர் வேலைக்கு ஆட்களை எடுக்கப் போவதாகவும் வசந்தியிடம் திறமை இருப்பதால் அதற்கு விண்ணப்பிக்கும் படியும் உதவி அரசாங்க அதிபரே கூறியதில் வசந்திக்கு தலை கொள்ளாச் சந்தோசம்.

அன்று வீட்டுக்குப் போனதும் பெற்றோரிடம் தன் சந்தோசத்தைப் பகிர்ந்தாள். தாய்க்கு பணம் வருகிறதே என்னும் சந்தோசம். தந்தைக்கு காதலில் விழுந்த மகள் அதை நினைத்து சீரழியாமல் இப்படி நல்ல நிலைக்கு வந்துவிட்டாளே என்று சந்தோசம். எதுக்கும் இப்ப வேலைக்கு போடுங்கோ அதுக்குள்ள ரிசல்சும் வந்திடும் தானே. பிறகு முடிவெடுக்கலாம் என்று மகிழ்வோடு கூறிவிட்டுச் சென்றார்.

தொடரும் ........................
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றியிருக்கட்டும் மிகுதி எங்கே, வசந்தி ஓடிப்போயிட்டாவா அல்லது கெட்டுப்போயிட்டாவா?

 

வருகைக்கு நன்றி வந்தி. வசந்தி கெட்டும்போகேல்ல, ஓடியும் போகேல்ல :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

//மாதங்கள் நகர்ந்து  ஒருவருடம் ஓடியது. வசந்தி இம்முறை நன்றாகப்  பரீட்சை எழுதியதை உணர்ந்தாள். இடையில் லண்டன் எக்ஸ்சாமும் எடுத்து திறமைச் சித்தி எய்தி இருந்தாள்.//

 

லண்டன் பரீட்சை எழுதியபின் ஏன் ஃபிரான்சுக்கு முதலில் போனவ?  :rolleyes:  தொடருங்கள்.. :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

லண்டன் பரீட்சை எழுதியபின் ஏன் ஃபிரான்சுக்கு முதலில் போனவ?  :rolleyes: 

 

கருத்துப் பகிர்வுக்கு நன்றி இசை. பிரான்சுக்கு எனக்குத் தெரியாமல் எப்ப வசந்தி போனவ???

 

 

ம்ம்................ ஆண்களின் காதல் ..................... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு தான் முழுக்க வாசித்தேன்.கதை நல்லாய்தான் போகுது.தொடருங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி இசைப்பிரியன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி இசைப்பிரியன்.

சுமே என் தண்னியோ :D நான் சுவைப்பிரியன்(பழைய சஜீவன்) :rolleyes:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக் கிழமை எண்டு கொஞ்சம் போட்டது. பெயரே மாறிப் போச்சு. மன்னிச்சுக் கொள்ளுங்கோ சுவைப்பிரியன். :lol:

 



பகுதி 8

வசந்தி வேலைக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கும் அழைப்பு வந்துவிட்டது. நிறையப் பேர் இந்த ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர் என சிறிய தந்தை கூறியும் வசந்திக்கு பெரிதாகப் பயம் ஏற்படவில்லை. ஏனெனில் அவ்வூரில் வசந்தியுடன் போட்டிபோடுமளவு பெரிதாக எவரும் இல்லை. இருந்தும் தன்  திறமையின் மேல் அவளுக்கிருந்த நம்பிக்கையும் அப்படி எண்ண  வைத்தது.
நேர்முகத் தேர்வன்று காலையில் எழுந்து சேலை அணிந்து கையில் மணிக்கூடும் ஒரே ஒரு காப்பும் போட்டு, உதட்டுச் சாயம் மற்றும்  தேவையற்ற ஒப்பனைகள் இன்றி, நெற்றியில் கறுப்புப் பொட்டும் திருநீறும் மாத்திரம் அலங்கரிக்க வசந்தி கிளம்பினாள். காலை இளவெயில் தேகத்தில் பட்டு ஒரு புத்துணர்வைக் கொடுத்தது. என்ன கேட்பார்கள் என்ன பதில் கூறலாம் என எண்ணிக்கொண்டே நடந்தவள், அலுவலகத்தை நெருங்க முதலே பார்த்தாள். என்ன நிறையப் பேர் நிக்கினம் ஒரேயடியாக நேர்முகத் தேர்வோ என எண்ணினாள். நிறையப் பேரைப் பார்த்ததும் அவளின் நடை கொஞ்சம் தயங்கியது.

என்ன பயம் எனக்கு எனத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு ஒரு அடி எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவன் கண்ணில் பட்டான். நெஞ்சு ஒருமுறை திடுக்கிட்டுத் திணறியது. ஒரு வினாடிதான் அவனைப் பார்த்திருப்பாள். தேகத்தில் உடனே ஒரு நடுக்கம் கோபம் என உணர்வுகள் பரவின. இவனும் தேர்வுக்குத்தான் வந்திருக்கிறானோ?? அல்லது சும்மா வந்து நிக்கிறானோ என்றெல்லாம் எண்ணியவள், தன்னைச் சமாளித்து நேர்த்தியாக்கிக்கொண்டு அவன் நின்ற பக்கமே பார்க்காது விரைந்து  நடந்து சென்று கட்டடத்துள் நுழைந்தாள். அங்கு போனபின் தான் அவளுக்கு விளங்கியது வசந்தனின் தங்கையும் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தாள். அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் திரும்பி நின்றுகொண்டாள் வசந்தி. அவன் தன் தங்கையைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். தன்னைப் பார்க்க வரவில்லை அவன் என்ற நினைப்பு மனதுள் ஓடிய வேகத்திலேயே அவளுக்குச் சிரிப்பும் வந்தது. என்னைத் தெரியாது எனச் சொன்னவன் ஏன் என்னைப் பார்க்க வரப் போகிறான் என்று எண்ணியபின் அவளின் தடுமாற்றம் சிறிது குறைந்து தெளிவு ஏற்பட்டது.

நான்காவதாக அவளை அழைத்தனர். இருவர் அவளை மாறி மாறிக் கேள்விகேட்க அவளுக் தடுமாற்றமே  இன்றி பதில் கூறினாள். குறித்த விடயத்தை தட்டச்சுச் செய்யும்படி கூறியவுடனும் அவள் விரைந்து அவர்கள் சொல்பவற்றை சுருக்க எழுத்து முறையில் தட்டச்சுச் செய்து மீண்டும் அவர்கள் கூறியதை எவ்விதப் பிழைகளும் இன்றி வாசித்தும் காட்டினாள். தேர்வு நடத்திய இருவருக்கும் இவளில் முழுத் திருப்தியும் ஏற்பட்டதை அவர்களின் முகங்கள் காட்டின.

வெளியே வந்தவளுக்கு ஏனோ தெரியவில்லை கட்டாயம் தனக்கு அந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அத்தோடு ரிசல்ஸ் வந்தவுடன் அதைக் கொண்டுவரும்படியும் அவர்கள் கூறியது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ஸ் வந்துவிடும். உடனே கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு வெளியே வந்தவள், அவளை அறியாமலே வசந்தன் நின்ற திசை பார்த்தாள். ஒரு கணம்தான். பின் தலை திருப்பிக்கொண்டு நீ நின்றால் என்ன. எனக்கும் நீ யாரெனத் தெரியாது என்பதுபோல் நடந்து சென்றாள்.

அவன் தன்னைப் பார்த்துகொண்டு இருப்பானோ என்னும் எண்ணம் தோன்றியது. கொழும்பில் இருந்து இங்கு வந்துவிட்டானோ?? ஆள் இளப்ப கொழுத்து வெள்ளையாகி பார்க்க முன்பைவிட அழகாக இருப்பதுபோல் பட்டது. கொழும்புத் தண்ணியாக்கும் என்று எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டவளை மனச்சாட்சி இடித்தது. உன்னை நிராகரித்தவனைப் பற்றி வெட்கம் கெட்டு இப்படி நினைக்கிறாயே என. நான் அவரை வெறுக்கவில்லையே என தன்னையே சமாதானம் செய்துகொண்டு வீடு வந்து சேர்ந்தாள் அவள்.

என்ன வேலை தந்திட்டாங்களோ என்று தாய் கேட்டார். உடன சொல்ல மாட்டினம் அம்மா. என்ர ரிசல்ஸ் வந்த உடன கொண்டுவரச் சொன்னவை என்றாள் கடிதம் போடுவாங்கள் போல வசந்தி என்றபடி அப்பா வந்தார். ஓமப்பா ஆனால் ரிசல்ஸ் நல்லா வந்தால் கட்டாயம் இந்த வேலை எனக்குத்தான் என்றாள் நம்பிக்கையோடு. நல்ல ரிசல்ஸ் வந்தால் வேலைக்குப் போறதோ அல்லது யூனிவேசிற்றிக்கு போறதோ என்றாள் தந்தையைப் பார்த்து. அதுதான் எனக்கும் குழப்பமாக் கிடக்கு. உங்கட சித்தப்பன் வேலை கிடைச்சால் அதைச் செய்யிறதுதான் புத்திசாலித் தனம் என்று சொல்லுறான். போகப் போக நல்ல சம்பளமும் நிரந்தர அரசாங்க உத்தியோகமும் என்று சொன்னவன் என்றுவிட்டு அரை மனதோடு மகளுக்கு சரியான பதில் தான் கூறவில்லை என்ற உணர்வும் மேலோங்க அவளைப் பார்த்தார்.

இன்னும் ஒரு கிழமை இருக்குத் தானே அப்பா வடிவா யோசிக்கிறான் என்றவளை இடைமறித்து, படிச்சு முடிச்சும் வேலைக்குத்தானே போகப்போறாய் வசந்தி. அதுக்கு இப்பவே கிடைச்ச வேலையைச் செய்தால் என்ன என்றார் தாய். நீ சும்மா இரு. இதில வசந்திதான் முடிவு எடுக்க வேணுமே தவிர நாங்கள் இல்லை. ஒரு கிழமை யோசியுங்கோ வசந்தி என்றுவிட்டு அவர் நகர கிடைகிறதை விட்டுப் பறக்கிறதுக்கு ஏன் ஆசைப்படுவான் எனத் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டு தாய் செல்வதைப் பார்த்தாள். அம்மா கூறுவதிலும் தவறு இல்லை. அவருக்குப் பெரிதாகக் கல்வி அறிவு இல்லை. அதனால் கல்வியின் அருமையும் தெரியவில்லை. நல்ல காலம் அப்பாவுக்கும் பெரிதாக இல்லைத்தான். ஆனால் அவர் எவ்வளவு புரிந்துணர்வோடு நடக்கிறார் என எண்ணித் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

ஒரு வாரமாக யோசித்ததில் அவளுக்கு ஒரு தெளிவு வந்திருந்தது. அப்பாவும் பாவம் கஷ்டப் படுறார் தானே. நான் வேலைக்குப் போனால் அந்தச் சம்பளம் எவ்வளவு உதவும். அதனால் வேலை செய்வதுதான் நல்லது. நான் படிக்கத் தொடங்கினால் அப்பா காசு கட்டுவார்தான். ஆனாலும் ஏன் இப்பிடி ஒரு நல்ல அப்பாவைக் கஸ்ரப் படுத்துவான் எனத் தீர்மானித்தவள் தந்தையிடமும் தன் தீர்மானத்தைக் கூறினாள். பிறகு நீங்கள் என்னைக் குறை கூறக்கூடாது வசந்தி என்றுவிட்டு அவரும் சம்மதித்தார். அடுத்தநாள் ரிசல்ஸ் வந்துவிட்டது. 2B 2C மோசமில்லை. ஆனால் நல்லாத்தானே படிச்சனான். ஒரு A கூட வரவில்லையே என வருத்தமாக இருந்தது. பரவாயில்லை இதே நால்ல ரிசல்ஸ் தானே என தந்தை ஆறுதல் கூறியது தந்தையின் பால் அவளுக்கிருந்த மதிப்பை இன்னும் உயர்த்தியது.

அன்றே அலுவலகத்துக்குச் சென்று அவளின் ரிசல்சைக் காட்டியவுடன் அவளுக்கு வேலை கொடுக்கப்பட்டு விட்டது. அவள் அதை எதிர்பார்த்ததுதான் எனினும் கிடைத்தவுடன் மகிழ்வு இரட்டிப்பாகியது. புதிதாகத் தொடங்கப்பட்ட கச்சேரி என்பதால் வேறு வேறு பதவிகளுக்காகச் சிலர் எடுக்கப்பட்டும், வேறு இடங்களிலிருந்து  மாற்றலாகியும் சிலர் வந்தனர். இவள் தலைமை அதிகாரியின் காரியதரிசியாக நியமிக்கப்பட்டு,  வாகனம் வீட்டில் வந்து ஏற்றி இறக்குமளவு இவள் வேலை அவருக்கும் பிடித்துவிட, மூன்று மாதத்திலேயே வசந்தியின் வாழ்வு உயர்ந்துவிட்டது. அவளின் சுறுசுறுப்பும் அழகும் கம்பீரமும் கூடிப் போனதில் அங்கு வேலை செய்யும் இரு ஆண்களுக்கு அவளில் காதல் ஏற்பட்டது. அவர்களில் ஒருவன் நேரடியாகவும் இன்னொருவன் பெற்றோர் மூலமாகவும் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். தாய்க்கு வேலை கிடைத்தவுடனேயே மகளைக் கட்டிக் குடுப்பதில் விருப்பமில்லை. சின்ன வயதுதானே ஏன் அவசரப்படுவான் என்றார். தந்தைதான் தானா வாற சம்பந்தத்தை ஏன் விடுவான். பொருத்தத்தைப் பார்ப்போம். பொருந்தினால் கொஞ்சநாள் கழித்துச் செய்யலாம் என்று கூறி வசந்திக்கும் விடயத்தைத் தெரியப்படுத்தினார். வசந்தி  தந்தையிடம் தான் இப்போதைக்குத் திருமணம் செய்யப்போவதில்லை என்று தீர்மானமாகக் கூறிவிட்டாள்.  அவரும் அதைப் பெரிது படுத்தவில்லை. சரி அம்மா கொஞ்சக்காலம் வேலையைச் செய்யுங்கோ என்றுவிட்டார்.
அது அவளுக்கு நின்மதியைக் கொடுத்தது. அவளும் தானும் தன் வேலையுமாகக் காலங்கழிக்கத் தொடங்க மீண்டும் விதி வசந்தனோடு வந்தது.

அவள் வேலை முடிந்து போகும்போது அலுவலக வாகனத்திலேயே செல்வாள்.  வேலை முடித்து வரும்போதும் தூரத்தில் ஒருவர் வண்டியைக் கை காட்டி மறிப்பது தெரிந்தது. கிட்ட வரும்போது பார்த்தால் வசந்தன். அவளுக்கு உடனே பதற்றம் ஏற்பட்டது. இவன் என்ன இப்படி வீதியில் மறிக்கிறான் என்று கோபமும் ஏற்பட்டது. ஏற்கனவே என் பெயர் இவனால் கெட்டு இப்பதான் எல்லோரும் அதை மறந்திருக்கிறார்கள். மீண்டும் ஏன் வருகிறான் என எண்ணிக்கொண்டு நிக்க வேண்டாம் என சாரதிக்குக் கூறமுதலே சாரதி வண்டியை நிறுத்திவிட்டார். அவன் பின்னால் வந்து வசந்தி உம்முடன் கதைக்க வேண்டும் கொஞ்ச நேரம் நிக்கிறீரோ என்றான்.

தொடரும் ..............   

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, சுமே!

 

ஆனால், பிரச்சனை என்னவெண்டால், நான் படித்தது முழுக்க, முழுக்க ஆண்கள் கல்லூரி என்ற படியால, இந்தப் பொம்பிளைப் பிள்ளயளின்ர சோலி இல்ல்லாமல் வாழ்க்கை நகர்ந்து போய் விட்டது!

 

தூரத்தில இருந்து பார்த்துகொள்ளிறதில ஒரு திருப்தி! 

 

உங்கட கதையை வாசிக்கத் தான், இந்தப் பொம்பிளை சைக்கொலோகி கொஞ்சம் விளங்குது! வாசிக்க நல்லவும் இருக்கு! தொடருங்கோ, சுமே! :icon_idea:

தொடருங்கள் சுமே....வசந்தனிற்கு ஏன் இந்த வேலை? கிடைத்த விடுதலையை சந்தோஷமாக கொண்டாடுவதைவிட்டுவிட்டு

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வசந்தன் கதைத்தவுடன் வசந்தி ஐஸ்கிரீமாக உருகிவிடுவார்.. பிறகு பழைய காதல் தூசு தட்டப்படும்.. அதன்பிறகு தப்புத்தண்டா நடந்து.... இன்னும் எவ்வளவு இருக்கு..!!!? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, சுமே!

 

ஆனால், பிரச்சனை என்னவெண்டால், நான் படித்தது முழுக்க, முழுக்க ஆண்கள் கல்லூரி என்ற படியால, இந்தப் பொம்பிளைப் பிள்ளயளின்ர சோலி இல்ல்லாமல் வாழ்க்கை நகர்ந்து போய் விட்டது!

 

தூரத்தில இருந்து பார்த்துகொள்ளிறதில ஒரு திருப்தி! 

 

உங்கட கதையை வாசிக்கத் தான், இந்தப் பொம்பிளை சைக்கொலோகி கொஞ்சம் விளங்குது! வாசிக்க நல்லவும் இருக்கு! தொடருங்கோ, சுமே! :icon_idea:

 

பெண்களை படிக்கும் காலத்தில் கிட்டப் போய் சயிட் அடிக்கவில்லையா??? இளமைக்காலமே வீண் புங்கை.

 

 

தொடருங்கள் சுமே....வசந்தனிற்கு ஏன் இந்த வேலை? கிடைத்த விடுதலையை சந்தோஷமாக கொண்டாடுவதைவிட்டுவிட்டு

 

ஆருக்கு விடுதலை ??

 

 

அடுத்து வசந்தன் கதைத்தவுடன் வசந்தி ஐஸ்கிரீமாக உருகிவிடுவார்.. பிறகு பழைய காதல் தூசு தட்டப்படும்.. அதன்பிறகு தப்புத்தண்டா நடந்து.... இன்னும் எவ்வளவு இருக்கு..!!!? :D

மிச்சக் கதையை உங்களை எழுத விடலாம் போல கிடக்கு இசை. :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை படிக்கும் காலத்தில் கிட்டப் போய் சயிட் அடிக்கவில்லையா??? இளமைக்காலமே வீண் புங்கை.

 

 

 

ஆருக்கு விடுதலை ??

 

 

மிச்சக் கதையை உங்களை எழுத விடலாம் போல கிடக்கு இசை. :D

இங்கை நின்டு புறுபுறுக்காமல் போய் கதையை முடிக்கிற அலுவலைப்பாருங்கோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை ஒரு நீண்ட தொடராக எழுதுவதாக எண்ணியே ஆரம்பித்தேன். ஆனால் தொடர்ந்து எழுதுவதா அல்லது கதையை சுருக்கி முடிப்பதா என்னும் குழப்பத்தில் இருக்கிறேன். வாசிக்கும் நீங்கள் தான் எனக்குக் கூற வேண்டும் தொடருவதா அல்லது இன்னும் சில பகுதிகளுடன் முடிவுக்குக் கொண்டுவருவதா என்று.

 

 ஆண் சமுதாயமே ஒரு பொறுக்கிக் கூட்டம்  ( சில பேர் விதிவிலக்கு) . யார் என்று தெரியாது எண்டவர் வசந்திக்கு வேலை கிடைத்ததும் வந்திட்டார்

 

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, 

 

தொடருங்கோ, சுமே!

 

கதை நல்லாயிருக்கு, சுமே!

 

ஆனால், பிரச்சனை என்னவெண்டால், நான் படித்தது முழுக்க, முழுக்க ஆண்கள் கல்லூரி என்ற படியால, இந்தப் பொம்பிளைப் பிள்ளயளின்ர சோலி இல்ல்லாமல் வாழ்க்கை நகர்ந்து போய் விட்டது!

 

தூரத்தில இருந்து பார்த்துகொள்ளிறதில ஒரு திருப்தி! 

இதை நாங்க  நம்புறம்

 

 

உங்கட கதையை வாசிக்கத் தான், இந்தப் பொம்பிளை சைக்கொலோகி கொஞ்சம் விளங்குது! வாசிக்க நல்லவும்

இருக்கு!

 

விண்ணாணம் கேட்பதற்கு தமிழனுக்கு சொல்லிக்கொடுக்கணுமா?

 

தொடருங்கோ, சுமே! :icon_idea:

 

 

ஏதோ நம்மால் முடிந்தது :D



 ஆண் சமுதாயமே ஒரு பொறுக்கிக் கூட்டம்  ( சில பேர் விதிவிலக்கு) . யார் என்று தெரியாது எண்டவர் வசந்திக்கு வேலை கிடைத்ததும் வந்திட்டார்

 

இந்த கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்

அப்படி இல்லையென்றால்தான் கவலை தப்பு. :lol:

 

இந்தவிதிவிலக்கு என்று போட்டவர்களால்தான் ஆண் குலத்துக்கே அவமானம் :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை ஒரு நீண்ட தொடராக எழுதுவதாக எண்ணியே ஆரம்பித்தேன். ஆனால் தொடர்ந்து எழுதுவதா அல்லது கதையை சுருக்கி முடிப்பதா என்னும் குழப்பத்தில் இருக்கிறேன். வாசிக்கும் நீங்கள் தான் எனக்குக் கூற வேண்டும் தொடருவதா அல்லது இன்னும் சில பகுதிகளுடன் முடிவுக்குக் கொண்டுவருவதா என்று.

 

 

அவ்வப்போது நானும் உங்களது ஆக்கங்களை எட்டிப் பார்ப்பேன்..கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில்லையே தவிர,யார் என்ன பகிர்ந்து இருக்கிறார்கள் என்பதை ஒரு கிழமைக்கு ஒருக்காவவது வந்து பார்த்து செல்வேன்..

 எழுதிக்கொண்டு இருந்துட்டு திடீர் என்று பிறேக் போட்டு நிறுத்தி விட்டு போவதால் மேலும் வாசிக்க தோன்றாது..உங்களுக்காக மட்டும் சொல்ல இல்லை அக்கா..எழுதி இடையில் விட்டு சென்று இருக்கும் அனைவருக்காகவும் சொல்கிறேன்...அல்லது விடுப்பு பார்க்கும் நிலையில் இருந்தும் சொல்ல இல்லை.

மேலும் தொடர்களை குறைப்பதும், விடுவதும் உங்களைப் பொறுத்தது..சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு சொல்லிட்டன்...

  • கருத்துக்கள உறவுகள்

வசந்திக்கு என்ன நடந்தது என்டு எழுதாட்டில் இனி மேல் வேறு கதை எழுதினாலும் வாசிக்க மாட்டோம் :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி உறவுகளே கோவிக்க வேண்டாம் நான் தொடர்ந்து இதை எழுதி முடிக்கிறேன். :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 9

ஒரு வினாடி இறங்க எத்தனித்த வசந்தி, அடுத்த வினாடியே தன்னை சுதாகரித்துக் கொண்டு, இனிமேல் நானும் நீங்களும் கதைக்க ஒன்றும் இல்லை. என்ன கதைக்கிறதெண்டாலும் அப்பாட்டைக் கதையுங்கோ. என்னை வழி மறிக்கிற வேலை வேண்டாம். றைவர் நீங்கள் காரை எடுங்கோ என்றாள். வசந்தன் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகம் போன போக்கிலிருந்து தெரிந்தது. அவள் அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. வீட்டுக்குச் சென்று எதுவும் நடக்காததுபோல் இருக்க முனைந்தாள். தான் வசந்தனைப் பழிவாங்கிவிட்ட அற்ப மகிழ்வும் ஏற்பட்டது.

ஒரு வாரம் செல்ல அவள் வேலையால் வந்தபோது அப்பா வீட்டில் இருந்தார். அவள் முகம் கழுவி வந்தபின் வசந்தனின் தாயும் தகப்பனும் இப்பதான்  போனவை என்றார். ஏன் வந்தவை எனத் தெரியாததுபோல் கேட்டாள். வசந்தனுக்கு உன்னைச் செய்யிறதுக்கு தங்களுக்குச் சம்மதமாம். வசந்தன் கட்டினால் உன்னைத்தான் கட்டுவன் என்று ஒற்றைக்காலில நிக்கிறானாம். தான் முதல் அவசரப்பட்டு ஏசிப்போட்டன் என்று மன்னிப்பும் கேட்டவர் என்று அம்மா முடித்தாள். நான் கலியாணமே கட்டுறதில்லை எண்டு சொல்லிப்போட்டனே அப்பா என்றாள். எனக்கும் நீங்கள் எங்களோடையே இருக்கிறதில சந்தோசம்தான். ஆனா காலாகாலத்தில நீங்கள் கலியாணம் முடிச்சாத்தானே தங்கச்சிமாரையும் கட்டிக் குடுக்கலாம். அதோட நாங்களும் எவ்வளவு நாளைக்கு உங்களோட இருக்க முடியும். அதுக்குப் பிறகு நீங்கள் தனிச்சுப் போவியளே. காலா காலத்தில அததைச் செய்தால்த்தான் நாங்களும் நின்மதியா இருக்கலாம் என்றார். அவளுக்கு உடனே சம்மதம் என்று கூறத்தான் ஆசை ஆனாலும் அடக்கிக் கொண்டு எதுக்கும் யோசிச்சுச் சொல்லுறன் என்றாள்.

மீண்டும்  மனதில் வசந்தன் கிளைபரப்பினான். அவருக்கு என்னில அன்பிருந்த படியால்த்தானே திரும்பவும் தானா வந்து என்னோட கதைக்க முயற்சி செய்தவர். நான் கதைக்க மாட்டன் என்று சொன்ன பிறகும் தாய் தகப்பனை அனுப்பினவர். கொழும்பில தான் வேலை செய்கிறாரோ. அல்லது வேறு எங்கினையோ. என்னதான் அவரில கோபம் இருந்தாலும் அவரில எனக்கிருக்கிற காதல் மாறவில்லையே. அதனால கோபத்தை மறந்து அவரைக் கலியாணம் கட்டுறதுதான் புத்திசாலித்தனம் என முடிவெடுத்துவிட்டுக் காத்திருந்தாள். ஒரு வாரமாகத் தந்தை எதையும் கேட்காதது யோசனையைத் தந்தது. தவிப்பும் கூடியது. அப்பா அப்பிடியே விட்டால் என்ன செய்வது. எதற்கும் நான் அப்பாவிடம் சொல்லுவம் என்றுவிட்டு தந்தையின் வரவுக்குக் காத்திருந்தாள்.

அவளை முந்திக்கொண்டு தந்தையே என்னம்மா முடிவெடுத்தாச்சோ என்று கேட்டது அவளுக்கு நின்மதியைத் தந்தது. இருந்தும் தன் முகத்தை வைத்துத் தந்தை கண்டுபிடித்திருப்பாரோ என்ற கூச்சமும் ஏற்பட்டது. சரி அப்பா நான் கலியாணத்துக்குச் சம்மதிக்கிறன் என்றுவிட்டு அப்பாவைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். சந்தோசம் அம்மா மேற்கொண்டு அலுவலை நான் பாக்கிறன் என்றார் அவர்.

தந்தையும் தாயும் ஒரு நல்ல நாள் பார்த்து வசந்தனின் வீட்டுக்குப் போனார்கள். கையோட நாளும் குறிக்கச் சொல்லுவம் என்று அம்மா அப்பாவிடம் கூறுவது கேட்டது. அவர்கள் போய் வரும் மட்டும் இவளால் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. மனம் அலை பாய்ந்துகொண்டே இருந்தது. வசந்தனின் தந்தை படித்தவர். இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறார். சொந்தமாக வாகனமும் கொடுத்திருக்கின்றனர்.

வசந்தனுக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அவர்கள் இவர்கள் போல் இல்லை. செருக்குப் பிடிச்ச குடும்பம் என்று பெயரெடுத்தவர்கள். தாய் கூட பெரிதாக சிரித்துப் பேசமாட்டார். சகோதரர்களும் அப்படித்தான். சிலநேரம் வீட்டில் நல்ல கலகலப்பாக இருப்பார்கள் ஆக்கும் என இவள் நினைத்து முன்பு ஒருமுறை வசந்தனிடமும் இதுபற்றிக் கேட்டிருக்கிறாள். நாங்கள் சந்தோசமான குடும்பம் தான் வந்து பாருமன் என்று கூறிக் கதையை நிறுத்திவிட்டான். அப்பாவையும் அம்மாவையும் எப்படி நடத்துவினமோ தெரியாது என்று உள்ளே ஒரு கவலையும் ஓடியது.

இவளின் தவிப்பு அதிக நேரம் நீடிக்க விடாது அவர்களும் வந்து சேர்ந்தனர். தந்தையின் முகத்திலிருந்து எதையும் அறிய முடியவில்லை. தாயின் முகம் கொஞ்சம் மகிழ்வு குன்றிக் காணப்பட்டது. இவள் ஒன்றுமே கேட்காது தந்தை சொல்லும் வரையும் நின்றாள். இன்னும் இரண்டு மாதத்தில நாள் வைச்சிட்டுச் சொல்லி அனுப்புவினமாம். எங்களையும் பாக்கச் சொன்னவை. நான் ஒருக்காக் கையோடை சாத்திரியின் வீட்டை போட்டு வாறன் என்றுவிட்டு அப்பா சென்றுவிட, அம்மாவிடம் எப்பிடி அம்மா எல்லாரும் கதைச்சவையே என்றுவிட்டு அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அது உணர்ச்சியற்று இருந்தது. மேனுக்கு வேலை வெட்டி ஒண்டும் இன்னும் இல்லை. அதுக்குள்ளே  அளவுக்கு மிஞ்சின ஆசை என்றுவிட்டு மீண்டும் அம்மா மௌனமானாள். இவளுக்கு என்ன நடந்தது என்று அறியவேண்டும் என்று ஆசை. ஆனாலும் தாய் கூறும் வரை பொறுமை காத்தாள்.

வீடு வளவு சீதணமாத் தரச் சொல்லிக் கேக்கினம். இருக்கிறது ஒரு வீடு தந்துபோட்டு நாங்கள் நடுத்தெருவுக்குப் போகவேண்டியதுதான் என்று அம்மா பெருமூச்சு விட்டாள். நீங்கள் என்ன சொன்னனீங்கள் என்று தாயைத் திரும்பக் கேட்டாள். கொப்பா வயல்க் காணி மூண்டு ஏக்கர் தந்து காசும் ஒரு லட்சம் தாறம் எண்டவர். யோசிச்சுச் சொல்லுறம் எண்டு சொன்னவை. அம்மாவின் வார்த்தைகளில் வெறுப்புத் தெரிந்தது.

இவள் ஒன்றும் கூறாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள். உள்ளுக்குள் கோபம் ஏற்பட்டதுதான். ஆனால் அவளால் என்ன செய்ய முடியும். பெண் என்ன தான் திறமை உள்ளவளாக இருந்தாலும், ஆண்  ஒன்றும் இல்லாமல்  இருந்தாலும், ஆணின் கையே கலியாணச் சந்தையில் உயர்கிறது. வசந்தன் பாவம் என்ன செய்வார். பெற்றவை சொல்லுறதைக் கேட்கிறார். வசந்தனை விட வேறு யார் என்றாலும் சீதனம் கொடுக்கத்தான் வேணும். இல்லை ஒன்றும் தர மாட்டம் என்றால் விட்டுவிட்டு வேறு பெண்ணைப் பார்க்கப் போய் விடுவார்கள். இதுவே வேறு ஒருவன் என்றால் கலியாணம் வேண்டாம் என்று அடித்துச் சொல்லியிருப்பாள். வசந்தன் என்றதால் எதுவும் சொல்ல முடியவில்லை.

சரி நான் வேலை செய்யிறன் தானே என்ர சம்பளத்தில இருந்து அப்பாவுக்குக்  குடுப்பம் என எண்ணிக்கொண்டாள். வசந்தன் நல்லவர் தானே. கலியாணம் கட்டின பிறகு அவரோட கதைப்பம் என எண்ணி தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டாள். மூன்று நாட்களின் பின் அப்பா வரட்டாம் என வசந்தனின் தம்பி கூறிச் சென்றான். அப்பா போட்டு வந்து மூண்டு ஏக்கர் காணியும் ஒருலட்சம் காசுக்கும் ஒமெண்டுவிட்டினை என்று மகிழ்வாகக் கூறினார். நாள் வைச்சிட்டினமோ என அம்மா கேட்க நாளைக்கு அதைச் சொல்லி விடீனமாம் என்று விட்டு அப்பா கால் கழுவக் கிணற்றடிக்குச் சென்றார்.

தொடரும் ......... .... ...

 

ம்ம்..... தொடருங்கள் சுமே! 

  • கருத்துக்கள உறவுகள்
  • வசந்தனின் அப்பா படித்தவர் என்றாலும் ஒரு படித்தவர் போல் நடந்துகொள்ளவில்லை..
  • வசந்திக்கு மானரோசம் கொஞ்சம் கம்மி.. :D

இது யாரையாவது புண்படுத்துமாக இருந்தால் வருந்துகிறேன்.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.