Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ தலைவாழை இலையில காகத்துக்கு சோறு வைச்சிருக்கா

இங்க காகத்தைக் கூப்பிட்டால் நரி தான் வரும். அதனால இல்லைகள் நீண்டுபோய் இருந்ததால் நானே வெட்டி எல்லாருக்கும் உணவு பரிமாறிவிட்டேன்.( கணவர் பிள்ளைகளுக்கு) :D

  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீ தலைவாழை இலையில காகத்துக்கு சோறு வைச்சிருக்கா

நான் வீட்டில் இல்லை. எனது மாமியார் ஈழத்திலிருந்து வந்திருந்தவர் வெள்ளிக்கிழமை சாப்பிட வெட்டிவிட்டார். விடயத்தை விளங்கப்படுத்தி இனிமேல் வெட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு கடையில் வாழை இல்லை வாங்கிக் கொடுத்தேன்.

மனிசி பாக்கிற வேலை  :lol:

உந்த வாழை இலையாலை.... மாமியார், மருமோள்  சண்டை வந்திருக்கும்.... சுமோவின் சமயோசித நடவடிக்கையால்... தப்பிவிட்டது. :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் வெளிநாடு வந்தும் வெள்ளிகிழமையில் தலைவாழை இலையில் சாப்டனும் என்று நினைச்ச மாமிய பாராட்டாம இருக்க முடியாது....

அழகாக இருக்கிறது சுமே. என்ன வகையான திராட்சைகள்  வைத்துள்ளீர்கள். பழ மரங்களை பட்டியலிடவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கிறது சுமே. என்ன வகையான திராட்சைகள்  வைத்துள்ளீர்கள். பழ மரங்களை பட்டியலிடவும்.

உங்களைத்தான் காணவில்லை என்று பார்த்தேன். பீச்,ப்ளம்,செர்ரி,கிவி,ஆப்பிள், ஒலிவ்,ப்ளுபெரி, மாதுளை என்பன சிறிய மரங்களாக வைத்துள்ளேன். வளர விடுவதில்லை. இருவகைத் திராட்சைகள் உண்டு.பெயர் தெரியவில்லை. இரண்டும் கருப்புத்தான். ஒன்று சிறிது விதை இல்லை. மற்றது பெரியது.

ஒவ்வொரு படங்களாகப் போடுகிறேன். 

எண்டாலும் வெளிநாடு வந்தும் வெள்ளிகிழமையில் தலைவாழை இலையில் சாப்டனும் என்று நினைச்ச மாமிய பாராட்டாம இருக்க முடியாது....

நல்ல காலம் ஒரு கிழமை நான் நாட்டில் இல்லை என்றால் வரும்போது மரம் மொட்டையாக நின்றிருக்கும். :D

சுமோ உங்கட வீட்டை அலை வரேக்கைத் தலைவாழை இலையில் தான் சாப்பாடு தரணும் , சரியா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ உங்கட வீட்டை அலை வரேக்கைத் தலைவாழை இலையில் தான் சாப்பாடு தரணும் , சரியா :D

தலை வாழை இலையில் கட்டாயம் சாப்பாடு தரலாம். ஆனால் என்வீட்டு வாழை இலைதான் வேணும் என்று  கேட்கக் கூடாது. :D :D

உங்களைத்தான் காணவில்லை என்று பார்த்தேன். பீச்,ப்ளம்,செர்ரி,கிவி,ஆப்பிள், ஒலிவ்,ப்ளுபெரி, மாதுளை என்பன சிறிய மரங்களாக வைத்துள்ளேன். வளர விடுவதில்லை. இருவகைத் திராட்சைகள் உண்டு.பெயர் தெரியவில்லை. இரண்டும் கருப்புத்தான். ஒன்று சிறிது விதை இல்லை. மற்றது பெரியது.

ஒவ்வொரு படங்களாகப் போடுகிறேன். 

மாதுளை நிலத்திலா நாட்டியுள்ளீர்கள். -4 பாகைக்குக் கீழே போனால் உள்ளே வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 'புளூபெரி' நாட்டினேன் சரிவரவில்லை. அதற்கு அமிலத்தன்மையுள்ள நிலம் வேண்டும். எனக்கு பழ  மரங்களில் ஆர்வம்.  செரி, பிளம்ஸ், பீச், அப்ரிகொட், கூஸ்பெரி, ராஸ்பெரி, ரெட் கரண்ட், அப்பிள், திராட்சை, ஒலிவ், ஏசியன் பியர்ஸ் வைத்துள்ளேன்.

சிலவற்றில் ஒரு மரத்தில் மூன்று வகையானவற்றை  ஒட்டியுள்ளேன். நீங்களும் முயற்சிக்கலாம். ஒரே மரத்தில் வேறு வேறு வர்ணங்களில் பழங்கள் தொங்குவதைப் பார்க்க நன்றாக இருக்கும். அத்துடன் வேறு வேறு காலங்களில் காய்ப்பதால், கொஞ்சம் நீண்ட காலத்திற்குப் பழம் அறுவடை செய்யலாம். விரும்பினால் முயற்சித்துப் பாருங்கள். அத்துடன்  ஏசியன் பியர்ஸ்  சுவையாக இருக்கும். அப்பிளும் பியர்சும் சேர்ந்த மாதிரி ஒரு சுவை. சிலவேளை சுப்பர் மார்க்கெட் இல் பழம்  விற்பார்கள். இடம் இருந்தால் வைத்துப் பாருங்கள்.

தலை வாழை இலையில் கட்டாயம் சாப்பாடு தரலாம். ஆனால் என்வீட்டு வாழை இலைதான் வேணும் என்று  கேட்கக் கூடாது. :D :D

எனக்கு உங்கட வீட்டு வாழையிலை தான் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீட்டுத் தோட்டம் மிக அழகாக உள்ளது. 

பகிர்விற்கு நன்றிகள் சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, தோட்டம் நல்லாயிருக்கு! நன்றிகள்! :D

அதென்ன, ஐயர், ஆயிரத்தெட்டுச் சங்காபிசேகம் செய்யிற மாதிரி, தோட்டமெல்லாம் ஒரே 'பிளாஸ்டிக்' சட்டியளாக் கிடக்கு!

எனக்கு, எல்லாமே நிலத்தில் வைப்பது தான் பிடிக்கும்! :rolleyes:

களிமண் சாடியள், விலைகூடப் போல கிடக்கு! :D

அழகிய தோட்டம்

தோட்ட வேலை மனதுக்கு இதமானது

கன்றுகள் வளர வளர, அதை பார்க்கும் சந்தோஷமே ஒரு தனி சுகம்

நான் மரங்களுடன் கதைப்பேன் பல நேரம், நன்றி கூட சொல்லிடுவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தோட்டத்தை கண்டு களித்த உறவுகளுக்கு நன்றி.

சிலவற்றில் ஒரு மரத்தில் மூன்று வகையானவற்றை  ஒட்டியுள்ளேன். நீங்களும் முயற்சிக்கலாம். ஒரே மரத்தில் வேறு வேறு வர்ணங்களில் பழங்கள் தொங்குவதைப் பார்க்க நன்றாக இருக்கும். அத்துடன் வேறு வேறு காலங்களில் காய்ப்பதால், கொஞ்சம் நீண்ட காலத்திற்குப் பழம் அறுவடை செய்யலாம். விரும்பினால் முயற்சித்துப் பாருங்கள். அத்துடன்  ஏசியன் பியர்ஸ்  சுவையாக இருக்கும். அப்பிளும் பியர்சும் சேர்ந்த மாதிரி ஒரு சுவை. சிலவேளை சுப்பர் மார்க்கெட் இல் பழம்  விற்பார்கள். இடம் இருந்தால் வைத்துப் பாருங்கள்.

மாதுளை நிலத்தில் தான் உள்ளது. ஆனால் பூவோ காயோ வரவில்லை. கடந்த வருடம் ரோஸ் மரங்களில் ஒட்டிப் பார்த்தேன். ஒன்றே ஒன்றுதான் தப்பியது மிகுதி ஒன்றும் வரவில்லை. இம்முறை பழ மரங்களில் ஒட்டிப் பார்க்கிறேன்.

சுமே, தோட்டம் நல்லாயிருக்கு! நன்றிகள்! :D

அதென்ன, ஐயர், ஆயிரத்தெட்டுச் சங்காபிசேகம் செய்யிற மாதிரி, தோட்டமெல்லாம் ஒரே 'பிளாஸ்டிக்' சட்டியளாக் கிடக்கு!

எனக்கு, எல்லாமே நிலத்தில் வைப்பது தான் பிடிக்கும்! :rolleyes:

களிமண் சாடியள், விலைகூடப் போல கிடக்கு! :D

முன்பு ஆறு களிமண் சாடிகள் வைத்திருந்தேன். சிலது வெடித்துவிட்டது சிலது தவறுதலாக உடைந்து விட்டது. ஒன்று இரண்டு பூங்கன்றுகள் என்றால் பரவாயில்லை. நடக்க இடமின்றி நட்டு வைத்தால் வங்கியில் கடன் தர மறுத்துவிட்டனர் களிமண் சாடி வாங்க.
உண்மையில் அடிக்கடி நான் சாடிகளை இடம் மாற்றுவேன். தூக்கி வைக்க, மண் மாற்ற இலகுவானது.

அழகிய தோட்டம்

தோட்ட வேலை மனதுக்கு இதமானது

கன்றுகள் வளர வளர, அதை பார்க்கும் சந்தோஷமே ஒரு தனி சுகம்

நான் மரங்களுடன் கதைப்பேன் பல நேரம், நன்றி கூட சொல்லிடுவேன்

அப்ப என்னைப் போல் தான் நீங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயக்கா எமக்கு காட்சியாய் தந்த அவரது வீட்டுத் தோட்டத்துக்காக இந்தப்பாடல்...

https://www.youtube.com/watch?v=8z43aKYivBo

நீங்கள் நம்புறீங்களோ இல்லையோ. மரங்கள் பேசும். அவை தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும். இதை நான் உணர்ந்து இருக்கிறேன். பேச்சு என்றால் தனியே மொழி இல்லை. ஒரு தொடர்பாடல் ஊடகம். அது தனது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்துவதை தான் பேசும் என்று சொல்கிறேன்.

நான் முதன் முதலில் எனது மாமி வீட்டில் ஒன்றவிட்ட ஒரு நாள் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது பேசுவதை கண்டிருக்கிறேன். காற்றே இல்லாமல் அசைந்தாடும். சில வேளைகளில் பூச்செடிகள் மேலே தண்ணீர் தெளித்து விளையாடியும் இருக்கிறேன். அவை என்னை கண்டதும் மகிழ்வதை கண்டும் இருக்கிறேன்.

பின்னொரு நாளில் காட்டிலே எனக்கு ஒரு மர நண்பன் இருந்தான். அவனடியில், அவனருகில் சென்றால் என் கவலைகள் எல்லாம் நீங்கி மனசிலே ஒரு புத்துணர்வு ஏற்படும். அவனுக்கும் என்னை கண்டால் இலைகளை உதிர்த்து கிளைகளை காற்றே இல்லாமல் சிலிர்ப்பி தனது மகிழ்வை வெளிப்படுத்துவான். இப்பவும்  நான் அவனை நினைப்பதுண்டு 

இது கற்பனை அல்ல. அனுபவித்தவர்களுக்கு தான் விளங்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன் பகிர்வுக்கு.

எம் உணர்வுகள் கூட சிலவேளை செடிகளுக்கு விளங்குமோ என்னவோ. என்னிடம் உள்ள ரோசாக்களில் ஒன்று ஊதா நிறப் பூ. ஆனால் வருடத்தில் ஒருதடவை மட்டும் பூத்துவிட்டுப் பின்னர் பூக்கவில்லை. எல்லாம் அழகைப் பூத்து நிற்க அதுமட்டும் பூக்காமல் இருந்ததில் எனக்குக் கோபம். அதைப் பார்த்து சனியன் பூக்குதில்லை என்று திட்டுவேன். எப்படியாவது அதைக் கிளப்பி எறிந்துவிட்டு அந்த இடத்தில் வேறொன்றை நடவேண்டும் என்று நான்கு மாதங்களாக எண்ணியும் பிடுங்க மனம் வரவில்லை. இந்த குளிரில் எல்லாம் அப்படியே நிற்க அதுமட்டும் பட்டுப்போய் இருந்தது. ஒருபக்கம் நானாக பிடுங்கி எரியவில்லையே என்னும் நின்மதி. மறுபக்கம் பட்டுவிட்டதே என்னும் வருத்தமும் எழுந்தது.

சில மரங்கள் தற்கொலை கூட செய்யும். மிருகங்கள் (நாய்) கூட தன்னைத்தானே வருத்தி தற்கொலை செய்வதை பாத்திருக்கிறேன். அவை உணவை எடுப்பதில்லை. அவற்றுக்கு பிடித்த உணவை வைத்தால் கூட. அது போல தான் உங்களின் உணர்வை புரிந்து கொண்டு அந்த ரோசா செடி தற்கொலை செய்திருக்கலாம்.

எனக்குப் பகலவனிடம் பிடித்ததே, நேர்மையும், கருத்துக்களை, ஒளிவுமறைவில்லாமல், வெளிப்படுத்தும் தன்மையும் தான்! :D

புங்கை அண்ணா என்னை வைத்து காமடி கீமடி ஒன்றும் பண்ணலையே  :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பகலவன்.. புங்கை முந்திவிட்டார்போல் இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டம் அழகாக இருக்கு.

எனக்கும் தோட்டமென்றால் ஒரே பைத்தியம், என் வீட்டில் முருங்கை, மா, தேசி, கொய்யா, வேம்பு, கருவேப்பிலை, பப்பாசி, வாழை, தோடை, வல்லாரை, கீரை, பயித்தங்காய், பாவற்காய், புடலங்காய், பிசுகங்காய், பொன்னாங்கானி, சுண்டங்கத்தரி, மிளகாய்,  போஞ்சி (மூன்று வாகை),  கற்பூரவள்ளி, ரோஸ், சிதம்பரத்தை, கள்ளி, நாயுண்ணி, இன்னும் சில பெயர் வருகுதில்லை, பெரிய சில மரங்களும் உண்டு பெயர் தெரியா

மாலை வந்தவுடன் தண்ணிவிடுவதும், சமைத்த கழிவுகள் & முயல் புழுக்கைகளை மரங்களுக்கு போடுவதுதான் முதல் வேலை.

படங்களை இணைத்துவிடுங்கோ உடையார். வேம்பு??

எனக்கும் அவுஸ் தான் விருப்பம் இருப்பதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை இணைத்துவிடுங்கோ உடையார். வேம்பு??

எனக்கும் அவுஸ் தான் விருப்பம் இருப்பதற்கு. 

இத முதல்ல அவுசுக்கு  சொல்லிட்டிங்களா  :(

இத முதல்ல அவுசுக்கு  சொல்லிட்டிங்களா  :(

யோவ் நாங்கள் அகதி அடிக்கேலை/அடிக்கிறேலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG_0077_zpsdbb4fcbd.jpg

IMG_0061_zpsade0fa62.jpg

IMG_0050_zpse904f367.jpg

IMG_0056_zps2ece0e2a.jpg

IMG_0062_zpsc0a22a0c.jpg

IMG_0063_zps40558b0d.jpg

IMG_0064_zps1367ca84.jpg

IMG_0065_zps258b8989.jpg

IMG_0080_zpsee1f9b3d.jpg

IMG_0081_zps368c0a10.jpg

IMG_0084_zps3ccd16bb.jpg

IMG_0085_zpsd05fb904.jpg

IMG_0086_zps72ea6935.jpg

இண்டைக்கு இவ்வளவும் காணும் என்று நினைக்கிறன் :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.