Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி ஏனைய கட்சிகள் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரெலோ மாநாட்டில் தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
telo-logo-seithy-2-150.jpg
 

தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (27-04-2013) நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  

இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அவையாவன,

 

தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கிவந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படவில்லை. பதிவுசெய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள் சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்படவேண்டும் எனவும் இந்த மத்தியகுழு தீர்மானிக்கின்றது.

 

இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் கூடிய விரைவில் தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படவேண்டும் எனவும் மத்தியகுழு வேண்டுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியாக பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் அல்லது தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் இதில் சேரவிரும்பும் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய இனத்தின் ஒற்றமையை பலப்படுத்தி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தீர்வொன்றை வென்றெடுக்கவேண்டும் என்றும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=81455&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ கட்சிகள் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தீர்மானம்! 
 
tna-280413-seithy-150.jpg

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவு செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மாநாட்டிலே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  

இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன.

அவையாவன,

 

தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்ககூடிய அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவுசெய்யப்படவில்லை.

 

பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள் சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்கவேண்டும்.

 

ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது.

 

இந்த முயற்சிகள் வெற்றிபெற முடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூடிய விரைவில் தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய குழு வேண்டுகின்றது.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னணியாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அல்லது தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் இதில் சேரவிரும்பும் தமிழ் தேசிய இனத்தின் அபிலாஸைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய இனத்தின் ஒற்றமையை பலப்படுத்தி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும் என்றும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

tna-280413-seithy-001.jpg

 

 

tna-280413-seithy-002.jpg

 


http://www.seithy.com/breifNews.php?newsID=81478&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஒழுங்கமைக்கப்படாவிட்டால்

தமிழரசுக் கட்சி தனிமைப்படும் காலம் வெகு விரைவில் வரலாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஒழுங்கமைக்கப்படாவிட்டால்

தமிழரசுக் கட்சி தனிமைப்படும் காலம் வெகு விரைவில் வரலாம்

 

தமிழரசுக் கட்சியல்ல.. சம்பந்தன் ஐயாவின் அநாவசிய பிடிவாதம்.. தனிமைப்படும் காலம் நெருங்கிவிட்டது.

 

அவர் தான் மட்டும் ஆயுதம் ஏந்தாத.. சுத்தமான அரசியல்வாதின்னு சொல்லிக்கிட்டு சிங்களவன் முன்னாடி பதவிக்கு நிற்க ஆசைப்படுகிறார். அவருக்கு என்று ஒன்றிரண்டு வாலுகள் வேற..! :)

அதேவேளை இந்த ஒற்றுமைப்படுபவர்கள் எல்லாம் நல்ல மக்கள் சேவைக்காக ஒற்றுமைப்படல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் இருக்கும் புலிகளின் ஆதரவுக் கட்சி என்ற அந்த மக்கள் ஆதரவுத் தளமே.. இவர்களை இங்க இழுத்து வைச்சிருக்குது. சங்கரியும்.. சித்தார்த்தனும் சம்பந்தனிலும் கேடு கெட்டவர்கள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியல்ல.. சம்பந்தன் ஐயாவின் அநாவசிய பிடிவாதம்.. தனிமைப்படும் காலம் நெருங்கிவிட்டது.

 

அவர் தான் மட்டும் ஆயுதம் ஏந்தாத.. சுத்தமான அரசியல்வாதின்னு சொல்லிக்கிட்டு சிங்களவன் முன்னாடி பதவிக்கு நிற்க ஆசைப்படுகிறார். அவருக்கு என்று ஒன்றிரண்டு வாலுகள் வேற..! :)

அதேவேளை இந்த ஒற்றுமைப்படுபவர்கள் எல்லாம் நல்ல மக்கள் சேவைக்காக ஒற்றுமைப்படல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் இருக்கும் புலிகளின் ஆதரவுக் கட்சி என்ற அந்த மக்கள் ஆதரவுத் தளமே.. இவர்களை இங்க இழுத்து வைச்சிருக்குது. சங்கரியும்.. சித்தார்த்தனும் சம்பந்தனிலும் கேடு கெட்டவர்கள்..! :icon_idea:

சாதாரண மக்களுக்கு தாங்கள் வயதில் முதிர்ச்சி அடைகின்றோம் என்ற எண்ணம்

வரும்போது தனக்கு அடுத்து யார் பொறுப்புக்களைச் சுமப்பது என்ற யோசனை வரும்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தன்  பதவிக்கு எப்போது ஆப்பு வரும் 

என்ற யோசனை மட்டுமே வருகின்றது . இது தமிழனின் தலைவிதி :)

  • கருத்துக்கள உறவுகள்

பழையபடி பாலகுமார் அண்ணைக்கு விசுவாசமான ஈரோஸ் ஆக்கள்.. மற்றும் தலைவருக்கு விசுவாசமான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி ஆக்கள்.. மேற்படி கட்சிகளை.. மீள்பதிவு செய்து அவற்றையும் உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. ஒட்டுக்குழு குளிர்காயும் கூட்டணியாக அன்றி உண்மையான மக்கள் உரிமைக்காக உழைக்கும் கூட்டணியாக மாற்றி அமைக்க தாயக.. தமிழக மற்றும் புலம்பெயர் தலைமைகள் உழைக்க வேண்டும். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மலையக.. இஸ்லாமிய கட்சிகளையும் உள்வாங்க முயற்சிக்க வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கான

முக்கிய காரணம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின்

பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவே .

 

ஈழத் தமிழரின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மாறாமல் கூட்டமைப்பைக் 

கொண்டு செல்லும் எந்தத் தலைமையுடனும்  த தே ம மு ஒன்று சேரும் என்பது 

என் தனிப்பட்ட கருத்து   

 

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கான

முக்கிய காரணம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின்

பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவே .

 

ஈழத் தமிழரின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மாறாமல் கூட்டமைப்பைக் 

கொண்டு செல்லும் எந்தத் தலைமையுடனும்  த தே ம மு ஒன்று சேரும் என்பது 

என் தனிப்பட்ட கருத்து   

 

கஜேந்திரகுமார்   வெளியேறினது ,  குதிரைகஜேந்திரனுக்கும்  பத்மினிக்கும் 

 

தேர்தலில்  போட்டியிட  இடம்  வழங்கவில்லை  என்பதுதான்  உண்மை .
புலம்பெயர்  தமிழர்களின்  உசுப்பேத்தல் ,பணத்தை  நம்பி  சம்பந்தரையும்,
மாவையையும் தோற்கடிக்க  களம்  இறங்கி  கட்டுகாசை  இழந்து  

Mrs.மகேஸ்வரியை  M .P ஆக்கினது தான்  இவர்கள்  செய்த  சாதனை . 

 

 

இவர்கள்  எல்லோரும்  பிரிவினை   கேட்கமாட்டோம்  என்று  அரசியல்   யாப்பின்கிழ் சத்தியபிரமாணம்  எடுத்துத்தான்  தேர்தல்  கேட்கிறார்கள்

 

 

 

 

 

 

 

 
 

 

.
 

 

 

அது சரி சிறி டெலொ எப்பா கூட்டமைப்பில்  ஓட்டிக் கொண்டது?



அது சரி சிறி டெலொ எப்பா கூட்டமைப்பில்  ஓட்டிக் கொண்டது?

தமிழரசுக் கட்சியும்   தமிழ்க் காங்கிரசும்  இணைந்து  77இல்  கூட்டணியாக 

 
இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள் .இதில் குமார் 
பொன்னம்பலம்   தான் கேட்ட தொகுதி தரவில்லை என்பதற்காக கூட்டணியை 
எதிர்த்து யாழப்பாணத்தில் போட்டியிட்டு  தோல்வி கண்டார் .இதைதான் 
2010இல் கஜேந்திரகுமார் செய்தார் .அதாவது ,அப்பனுக்கு மகன் தப்பாமல் 
பிறந்துள்ளார் .
 
எல்லோரும்  இந்திய அரசை கேட்டோம் ,ஒரு ராஜீவ் காந்திக்காக ஒட்டுமொத்த 
ஈழத்தமிழரை கொல்லப் போகின்றீர் களா ? ஒரு சம்பந்தருக்காக எல்லா 
திருகோணமலை மக்களையும் அரசியல் அனாதைகளாக மாற்ற 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில புலம்பெயர் அமைப்புகளும் 
முயன்றன .அப்படியாயின் எங்கே இவர்களின் அடிப்படைக் கொள்கைகள் ?
 
திருமலையை இழந்தமாக இருந்தால் தொடர்சியான நிலப்பரப்பை காரணம் 
காட்டி வட -கிழக்கு இணைப்பை  கேட்கமுடியுமா ?இதனால் தானே 
முஸ்லிம்களின் மாகாணக் கோரிக்கை அடிபட்டுப்போனது .

 

பழையபடி பாலகுமார் அண்ணைக்கு விசுவாசமான ஈரோஸ் ஆக்கள்.. மற்றும் தலைவருக்கு விசுவாசமான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி ஆக்கள்.. மேற்படி கட்சிகளை.. மீள்பதிவு செய்து அவற்றையும் உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. ஒட்டுக்குழு குளிர்காயும் கூட்டணியாக அன்றி உண்மையான மக்கள் உரிமைக்காக உழைக்கும் கூட்டணியாக மாற்றி அமைக்க தாயக.. தமிழக மற்றும் புலம்பெயர் தலைமைகள் உழைக்க வேண்டும். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மலையக.. இஸ்லாமிய கட்சிகளையும் உள்வாங்க முயற்சிக்க வேண்டும்..!

சம்பந்தர்  லண்டன்  வந்தபொழுது  சந்தித்து இந்த  ஆலோசனையை 

சொல்லி இருக்கலாமே ?(மக்களில் அக்கறை இருந்தால்ல்ல்  :D   )
 
 
ஆனந்தசங்கரி  உதயசூரியன்  சின்னத்தை முடக்கிய பொழுது ஏன் தனக்கு 
விசுவாசமான தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்களின் சைக்கிள் சின்னத்தை 
பயன்படுத்தவில்லை ?
 
இஸ்லாமியர்களையும் ,கட்சிகளையும் ,அவர்களது செயற்பாடுகளை விமர்சிக்கும் 
நீங்களா ,அவர்களை உள்வாங்க சொல்லி கேட்பது ?இது உங்களுக்கே முரண்பாடாக 
தெரியவில்லையா ?(ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லையடி   :D  )

அவசரப்படுவதில் இதில் ஒன்றும் இல்லை. பழைய போராளிக்கட்சிகள் தங்களை தாங்கள் அவதானமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  அரசு இவர்களை எப்படி மடக்கலாம் என்று இவர்களின் கோவைகளை என்றும் தூசி தட்டியே வைத்திருக்கும் என்பது இவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. பிரச்சனை ஒன்றும் இல்லாத அசாத் சாலியின் முன்னேற்றங்களில் இவர்கள் கவனம் செலுத்த வேண்டும். கணகரத்தினத்தை பற்றி அறிந்து வைத்துகொள்ள வேண்டும்.  இவர்களின் ஒரு பிழையான சின்ன நகர்வு இவர்களை அரசு கணகரத்தினத்தை விட கேவலமான நிலையில் போட இடமளித்துவிடும். தங்களை கஜேந்திரகுமாருடனோ, அல்லது கஜேந்திரனுடனோ அல்லது பத்மினி சிதம்பரநாதனுடனோ சேர்த்துப் பார்க்கக்கூடாது.

 

இலங்கை அரசின் இன்றைய நிலையில் அதனிடம் கூட்டமைப்பைப் பதிந்தால் அது தேவமிர்தமாகும் என்று கூறி தமிழ் மக்களை ஏய்க்க முயலக்கூடாது. தமிழ் மக்களுக்குச் சுய நிர்ணய அதிகாரம் கேட்பதாக கூறிக்கொண்டு, அரசு  பிரித்துவைக்கும் தந்திரங்களுக்கு இடமளித்து அதன் வலையில் விழுந்து அதனிடம் கூட்டமைப்பை பதிந்தால்த்தான் எங்களுக்கு ஒற்றுமை வரும் என்ற விவாதத்தைக் கைவிட வேண்டும். சிங்கள அரசிடம் பதிந்து தேர்தலில் நிற்கத்தான் வேண்டுமாயின் அது தெளிவான பதிவிமோகமே.

 

உதய சூரியனில் போட்டியிடுவதாக கூறி அரசுக்குச் சார்பான ஆனந்தசங்கரியின், சித்தார்தனின் கையில் அதிகாரத்தை கொடுக்கப் போராளிக்கட்சிகள் தமிழரசுக்கட்சியை நிர்ப்பந்திக்கக் கூடாது.

 

வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது போராளிக்கட்சிகள் தம்மை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த இடைஞ்சலைக் கொடுக்கிறதாயின் போராளிக்கட்சிகளை அழித்துவிட்டு எல்லோரும் தமிழரசுக்கட்சியில் சேர நினைக்கலாம். ஒன்றுசேர்ந்த தமிழரசுக்கட்சிக்கும், கட்சியாகப் பதியப்பட்ட கூட்டமைப்புக்கும் சட்ட ரீதியில் வித்தியாசமிருக்காது. மிகுதி எல்லாம் உள்குத்து வெட்டுக்களே. 

 

ஒற்றுமையாக கூட்டமைப்பை பதிய முயன்றால் அரசு  சட்டப் பிரச்சனைகளை முன் எடுக்கும். அரசு, இவர்கள் கூட்டமைப்பை உடைக்க முயன்றால், சட்டப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீக்கி தனக்கு சாதகமாக இருக்கத்தக்கவகையில் , அதை பதிய வேண்டிய வசதிகள் எல்லாவற்றையும் செய்துகொடுக்கும். அதன் பின்னர் இவர்கள் தேர்தலில் வென்றால் இவர்கள்தான் தமிழரின் பிரதிநிதிகள் என்று மேலை நாடுகளுக்கு காட்ட இவர்களுடன் பேச்சு வார்தையும் நடத்தும். அதன் பின்னர் இவர்கள் கணகரத்தினம் மாதிரி சுவிசுக்கு ஐ.நா கூட்டங்களுக்கு போய்வரவேண்டியவர்கள் ஆவார்களே தவிர இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு தடவை இவர்கள் சம்பந்தரின் கட்டுப்பாட்டை மீறி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாயின் அது இன்றைய முயற்சிகள் எல்லாவற்றுக்கும் முடிவாகும். பேச்சுவார்த்தை நிகழ்த்த முடியாமல் இவர்கள் தேர்தல் வெல்வது ஒன்றுக்கும் தேவை இல்லாதது. இவர்கள் அப்படிப்பட்ட பிரயோசனம் இல்லாத ஒரு தேர்தலை வெல்ல முயலக்கூடாது.

 

அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் அல்ல மகாவலி கங்கை நீரோடத்தில் கலந்தாலும் சரி, இன்றைய அபிப்பிராயங்களின் படி, போராளிக்கட்சிகள் ஒரு போதும் மேற்கு நாடுகளால் அங்கீகரிக்கப்படப்போவதில்லை. எனவே கூட்டமைப்பை போராளிக்கட்சிகளுக்காக மட்டும் பதிந்து வெல்வது மேற்கு நாடுகளின் ஐ.நா முயற்களில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

அரசை மேற்கு நாடுகள் பொறுப்பு கூறவைக்க முயன்றால் அதன்போது அவர்கள் புலிகளையும்  போராளிக்கட்சிகளையும் சும்மா போக விடுவார்கள் என்று அவசரமாக எண்ணக்கூடாது. இது அணுக்கப்பட வேண்டிய முறை மேற்குநாடுகளின் "Defense" முறைகளை பாவித்தே. புலிகளின் இன்றைய ஆதரவாளர்கள் இதை விளங்கிக்கொள்கிறார்கள். அவர்கள் சர்வதேச சுயாதீன விசாரணையை வரவேற்கிறார்கள். அதற்கு மேலாக சர்வதேச சுயாதீன  விசாரணைக்கு கோரிக்கை விடுகிறார்கள். அவர்கள் விசாரணையைச் சந்தித்து அதன் பின்னால் வரும் பெறுபேறுகளை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால்  போராளிக்கட்சிகள் தங்களை தாங்கள் தயார்ப் படுத்தாவிட்டால் அவர்கள் தேவானந்தா, கருணா போன்றவர்களின் நிலையை அடைய வேண்டும். அல்லது தமிழ் மக்களுக்கு மேற்கு நாடுகள் மூலமாக கிடைக்ககூடிய நீதியை முடக்க வேண்டிவரும்.

 

பொறுப்புக் கூறல் என்பது இவர்கள் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்களா என்பது அல்ல. அன்று என்ன செய்தார்கள் என்பது பற்றியது. இதனால்த்தான் அரசு யாழ்ப்பாணத்தில் ஆமிக்கு போடும் ரோட்டுக்களை அபிவிருத்தியாக காட்டிய போது மேற்கு நாடுகள் அதைத் தட்டிக்கழித்துவிட்டு ஜெனிவா பிரேணையை கொண்டு வந்தார்கள். அரசு யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்தால் அது பொறுப்புக் கூறல் ஆகாது என்பது அவர்கள் சொல்லும் செய்தி. அதாவது அரசு மனச்சாட்சியான அபிவிருத்தியை இன்று எடுத்தாலும் கூட அவர்கள் சொல்லும் 40,000 மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் விசாரணை இன்றி மன்னிக்கப்படக்கூடாது என்பதாகும்.

 

இளைப்பாறிய நீதிபதி விக்கினேஸ்வரன் இதை போராளிக்கட்சிகளுக்கு விளங்க வைக்க வேண்டும். அவர்களை இதற்கு  எதிராக பயணிக்க நியாயம் இருப்பதாக சொல்லக்கூடாது.  கட்சிகள் தமது இருப்பை தக்க வைக்காமல் பொது நிலையில் விக்கினேஸ்வரனை முதல் அமைச்சராக போட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் துரோகி பட்டம் கட்டி முடிஞ்சு ....

கடசீல எல்லாம் விக்கினேஸ்வரன் தலையில போறிச்சாச்சு....

அடுத்ததா லைனில அவர்தான் ......

லெக்சனோட அதை குடுக்காட்டா .....?????? :lol:

  • 5 months later...

எல்லாருக்கும் துரோகி பட்டம் கட்டி முடிஞ்சு ....

கடசீல எல்லாம் விக்கினேஸ்வரன் தலையில போறிச்சாச்சு....

அடுத்ததா லைனில அவர்தான் ......

லெக்சனோட அதை குடுக்காட்டா .....?????? :lol:

எல்லாம் அவன் செயல்  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முன்னாள் போராளி (1983-1986), அல்லது அண்மைக்கால ஒட்டுக்குழுக்கள் (1986-2002/2009) எல்லாரும் போகட்டும். தமிரசுகட்சியின் முதுகில் ஏறி வோட்டு வேட்டை செய்பவர்கல் இவர்கள். இவர்களுக்கு கோமாளி சிவாஜிலிங்கம் தலிவராகட்டும், மண்டையன் குழு தலைவர் செயலர் ஆகட்டும். சங்கரி பொருளாளர், குதிரை கஜன் பேச்சாளர். விளங்கிடும் இந்த கூட்டு!

ஐங்கரநேசன், அனந்தி, டெனீஸ்வரன் இன்னும் இந்த கட்சிகளில் இருக்கும் நல்லவர்களையும், மேலும் புதிய இள்ஞர்களையும் உள்வாங்கி தமிழரசுக்கட்சி தனித்து நிற்கலாம். கஜன் பொன்னர் விரும்பினால் ஜுனியர் பார்ட்னராக ஒரு கூட்டில் சேரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் கூட்டணி அமைத்து வெளியேறுவது, தமிழரசுக் கட்சிக்கு நல்லது. தமிழரசு கட்சியுடள் ஒட்டிக்கொண்டு இருப்பதால்தான் இவர்களில் சிலர் அரசியலில் இதுவரை நிலைத்து இருக்கிறார்கள். சிக்கல் என்னன்றால், இவர்கள் அவ்வப்போது இப்படி கூடி பேசுகிறார்களே தவிர ஆக்ஷன் ஏதுமில்லை. சீக்கிரம் கிளம்புங்கப்பா...

 

கஜேந்திரகுமார்   வெளியேறினது ,  குதிரைகஜேந்திரனுக்கும்  பத்மினிக்கும் 

 

தேர்தலில்  போட்டியிட  இடம்  வழங்கவில்லை  என்பதுதான்  உண்மை .
புலம்பெயர்  தமிழர்களின்  உசுப்பேத்தல் ,பணத்தை  நம்பி  சம்பந்தரையும்,
மாவையையும் தோற்கடிக்க  களம்  இறங்கி  கட்டுகாசை  இழந்து  

Mrs.மகேஸ்வரியை  M .P ஆக்கினது தான்  இவர்கள்  செய்த  சாதனை . 

 

 

இவர்கள்  எல்லோரும்  பிரிவினை   கேட்கமாட்டோம்  என்று  அரசியல்   யாப்பின்கிழ் சத்தியபிரமாணம்  எடுத்துத்தான்  தேர்தல்  கேட்கிறார்கள்

 

 

 

 

 

 

 

 
 

 

.
 

 

 

 

 

புளொட் சித்தார்த்தனுக்கும், ஆனந்தசங்கரிக்கும் தேர்தலில்  போட்டியிட  இடம்  வழங்கமுடியுமானல்........ஏன் கஜேந்திரனுக்கும் , பத்மினிக்கும் வழங்கமுடியாது ?, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கான காரணம் பற்றி இது வரை ஏன் கூட்டமைப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை ? தீபச்செல்வன் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்று தான்............, 2010 தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஈழத்தமிழரின் மிக முக்கிய எதிரியான இந்தியாவினால் தயாரிக்கப்பட்டது.

புளொட் சித்தார்த்தனுக்கும், ஆனந்தசங்கரிக்கும் தேர்தலில்  போட்டியிட  இடம்  வழங்கமுடியுமானல்........ஏன் கஜேந்திரனுக்கும் , பத்மினிக்கும் வழங்கமுடியாது ?, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கான காரணம் பற்றி இது வரை ஏன் கூட்டமைப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை ? தீபச்செல்வன் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்று தான்............, 2010 தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஈழத்தமிழரின் மிக முக்கிய எதிரியான இந்தியாவினால் தயாரிக்கப்பட்டது.

 

அடுத்த படியும் இருக்கு.

 

2013 தேர்தலை கொண்டு வந்தது இந்தியா. அதில் போட்டியிட வேண்டும் என்று கூட்டமைப்பை நிர்ப்பந்தித்தது சர்வதேசம்.

 

(தமிழ் தேசிய முன்னணிக்கு சர்வதேச அழுத்தம் கிடையாது, போட்டியிடத் தேவை இல்லை. சர்வதேச அழுத்தம் நேராக விழுந்தால் கூட்டமைப்பிடம் தொகுதிகள் கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். சித்தார்த்தன், சங்கரி அரசியல் எதிர்காலம் இல்லாதவர்கள். கூட்டமைப்பு மீது அழுத்தம் கொடுக்காதவர்கள். கூட்டமைப்பு மீது இருக்கும் வெளிநாட்டு அழுத்தங்களை சரியாக காணததால் கஜேந்திர குமார் வெளியில் தள்ளப்பட்டவர். அவர் இனித்தன்னும் அது இருப்பதை கண்டுபிடித்து அதிலிருந்து சறுக்க கண்டுபிடிக்க வேண்டும், அல்லது அதற்கு வளைந்து கொடுக்க பழக வேண்டும். இரண்டும் இல்லையாயின் இப்படி முறித்து கொள்ளும் வழி மட்டும்தான் இருக்கும்.

 

அதை வைத்து இன்றைய நாளில் தமிழ் மக்களுக்க உழைக்கத்தக்க வழிகள் குறைவு.  கஜேந்திர குமார் வெளியேற்றப்பட்ட காரணம் அரசியல் துரோகமாக இருந்திருந்தால் கூட்டமைப்பு அதை வெளியே சொல்லி  அவருக்கு எதிராக வைத்து தேர்தல் பிரசாரம் செய்து வெற்றியை கூட்டப்பார்த்திருக்கும். வெளியேற்றப்பட்டத்தின் காரணம், யதார்த்தத்தை கண்டு பிடிக்காமையே.  

 

இது ஒரு வகை மையோப்பியா. - இராஜதந்திரத்தில் வளைந்து கொடுத்தேயாக வேண்டும். சரியான நேரத்தில், சரியானதில் வளைந்து கொடுப்பது வெற்றியை தேடித்தரும். பிழையான முடிவுகள் எடுத்தால் அது வெறுமனே அடிவருடியாக மட்டும்தான் மாற்றும். போர் முடிந்த கையோடு ஆனந்த சங்கரி மகிந்தாவுக்கு கடிதங்க்கள் எழுதி சமாதானத்துக்கான அமெரிக்கப் பரிசுகள் பெற்றவர், ஆனால் இன்று அவரை இந்தியாவரைக்கும் எந்த நாடும் நாடுகிறதில்லை.  கூட்டமைப்பு சர்வதேசத்திற்கு விடுக்கொடுத்தது ராஜதந்திரமாக முடிந்ததா அல்லது அடிவருடித் தனமாக முடிந்தத்தா என்பது இன்றைய பரபரப்பு தமிழ் ஊடகங்களின் எழுத்துக்களை வைத்துச் சொல்ல முடியாது. இன்னும் 10 வருடங்களுக்கு பின்னர் தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வந்ததா இல்லையா என்றதை பார்த்து மட்டும்தான் சொல்லலாம். ) 

 

இதில் எல்லாம் நின்று வாக்குவாதப்பாடமல் முன்னால் போகவேண்டியதுதான். 

 

அனந்தி, சர்வேஸ்வரன், அயூப் ஆசீன் எல்லொருக்கும் நல்ல நல்ல பதவிகள். இனி சண்டையை விட்டுவிட்டு, கொக்கா கோலவுக்கு தடை விதிக்காமல் கொக்கா கோலவை உள்ளுர் பானமாக தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும், நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் இவர்கள் கொடுக்கும் ஆதவால் தெற்கில் இல்லாமல் வடக்கில் பால் பண்ணைகள், கமநல அபிவிருத்திகள்  திறக்க வேண்டும். 

முன்னோக்கி பொகவேண்டுமாணால் இதுகளை தவிர்க்க முடியாதுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

டெலோ சிறி அணி,டெலோ சிவாஜிலிங்கம் அணி,டெலோ அடைக்கலநாதன் அணி ,டெலோ குட்டிமணி அணி,டெலோ தங்கதுரை அணி இவர்களிடையே புரிந்துணர்வு வரவேணும் அதன்பின்பு தாயகமக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கலாம்....இன்று தாயக மக்கள் அரசியல் விழிப்புணர்வுடந்தான் இருக்கின்றார்கள்....தேர்தலில் உங்களது கட்சியின் வாக்குகளால் நீங்கள் வெற்றியடையவில்லை.....தமிழ் என்ற உணர்வுதான் ......நீங்கள் வெற்றியடைய காரணம்.......தனிநாயகமாக நின்று வீணை வாசித்த நாயகத்துக்கே யாழ்வாசித்த மக்கள் கூட்டம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.