Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூப்பர் STAR அண்ணாமலை ரஜனியும்.. தமிழும்

Featured Replies

எனது பல நண்பர்கள் திருமணமாகி பலருக்கு அவர்களைப் போலவே அழகான அறிவான குழந்தைகள் கிடத்திருக்கும் சந்தர்ப்பதில் இதை எழுதுவதை இட்டு பெரு மகிழ்ச்சி. எனக்கு அவர்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை எனினும், சக நண்பனாக ஒரு நண்பன் புலம்புவதை செவிமடுப்பார்கள் என நினைக்கிறேன் ‌

ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் இதை ஆரம்பிக்கலாம்.

பிரித்தானியாவில் சிலகாலம் உயர் தர இரசாயனவியல் கற்பிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னிடம் ஒரு குஜராத்,இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவி கல்வி கற்று வந்தார். அந்த குடும்பத்திற்கு இந்தியாவில் உறவினர்கள் இல்லை. இந்தியாவிற்கு வெளியே அவர்களின் 5 ஆவது தலை முறை குடும்பமாக இருந்தும் (முதலில் கென்யா பின்பு பிர்த்தானியா), அவர்கள் வீட்டில் குஜராத்தி மட்டுமே கதைப்பதையும் அந்த மாணவி குஜராத்தி வாசிக்க முடிந்ததயும் கண்டு அவர்களிடம் காரணத்தைக் கேட்டேன். அதற்கு அந்த மாணவி கூறிய பதில் என் மன‌தில் பதிந்து விட்டது. மொழி எமது அடையாளம். மொழி எமது கலாச்சாரத்தையும் எமது முன்னொரின் வராலாறையும் காவிச்செல்கிறது எனது மொழியால் நான் பெருமை அடைகிறேன் இதையே எனது அடுத்த தலைமுறைக்கும் காவுவேன் என்றபோது எனக்கு புல்லரித்தது.

தமிழ் எமது மக்கள் கூட்டதுக்குரிய மொழி. நீங்களும் நானும் எங்கிருந்து வந்தோம், எந்த கூட்டத்தை சார்ந்தவர்கள் என்பதற்கான பெருமைக்குரிய அடையாளம். ஏனோ எங்களுக்கு அது விளங்கவில்லை. ஏனோ நாங்கள் எமது குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதை தரக்குறைவாக எண்ணுகிறோம். இதை விளங்க எனக்கு ஒரு உதாரணம் தான் நினைவிற்கு வந்தது.

சிறு வயதில் அம்மா சிறு வேலை சொல்லியும் செய்யாத நாம் பக்கத்து வீட்டு பர்வதம் அக்கா சொன்ன வேலையை தலை மேற்கொண்டு செய்வோம். இது ஒரு silly politics அதாவது அம்மாவிடம் கெட்ட பெயர் வாங்கினாலும் பரவாயில்லை பக்கத்து வீட்டில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். ஏனோ சிறிது வளர்ந்தபின் தவறை உணர்ந்து அம்மாவிற்கு உதவி செய்வோம் என எண்ணும் போதெல்லாம் காலம் கடந்து விட்டிருக்கும் அல்லது நானும் அம்மாவும் வேறு வேறு இடத்தில் இருப்போம்,நினைத்தாலும் முடியாது. இதேபோல் நாமும் எம்மை அறியாமல் எமது குழந்தைகளுக்கு தமிழ் படிப்பிக்காமல் தற்போது பிற்போடுகிறோம், பின்பு  அதற்கு சந்தர்ப்பமே கிடைக்காமல் போய் விடும்.

நான் அறிந்து இதற்குரிய முதற் காரணம் பெற்றோரின் (எமது)  பாடசாலை அனுபவம்.

எனது நண்பன் ஆங்கிலப் நாள் பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்றபோது, நானும் அண்ணாமலை ரஜனி எடுத்த  சபதம் போல் மனதிற்குள் எடுத்த சபதம். "ஒரு நாள் இல்லை ஒரு நாள் நானும் உன்னைப் போல.. இல்லை எனது மகனும்/மகளும் உன்னைப்போல ஆங்கிலம் கதைக்க வக்கலை நான் பிரதீபன் இல்லை". நல்லது எனது மகள் மகன்/மகள் ஆங்கிலத்தில் படிக்கினம்,நல்லது. ஆனால் எமது தவறு நாங்கள் தமிழை இரண்டாவது மொழியாகக் கூட மறுத்தது "ஊசி போகுதெண்டு உலக்கையை கை விட்ட கதையாகப் போய் விட்டது".

நீங்கள் ஐரோப்பாவிலோ பிரித்தானியவிலோ அல்லது அமெரிக்காவிலோ அல்லது AUSTRALIA விலோ இருங்கள். ஆங்கிலம் கற்கலாம் அல்லது அந்நாட்டிற்குரிய முதன்மை மொழியைக் கற்கலாம். ஏனெனில் அது அந்நாடின் முதன்மை மொழி. ஆக முதலாவதாக அங்கிலம் கற்றே ஆக வேண்டும். ஆனால் ஏன் தாய் மொழிக்கு இரண்டாவது இடம் கூட இல்லை. ஆசிரியரிடம் கூட செல்லத் தேவை இல்லை, பெரும்பாலான பெற்றோர்களுக்கு தமிழ் தெரியும், நீங்களே கற்பிக்க முடியும் தானே? எமக்கெல்லாம் த‌மிழ் கற்பித்தது அம்மா தானே? தமிழ் இர‌ண்டாவது மொழியாக கற்றால் என்ன தீண்டத்தகாததா? சில பெற்றோர் ஏனோ பிள்ளைகளுக்கு மேலதிக பாரம் ஏறி விடும் என்கிறார்கள்.5 வயதில் பரத நாட்டியம் பழகும் போதும், வாய்ப்பாட்டு பழகும்போதும், ட்ரும் செட் பழகும்போதும்,நீச்சல் பழகும் போதும் வராத பாரமா தமிழ் படிப்பதால் வரப்போகிறது. வாய்ப்பாட்டு பழகும் பிள்ளை தான் எதை பாடுகிறேன் என்றே விளங்காமல் கோவிலில் (அம்மா ஆங்கில உச்சரிப்பில் எழுதிய) தமிழ் தேவாரத்தை பாடுகிறது.சிலரோ "அவையள் தமிழ் கதைக்கினம் தானே அது காணும்" எண்கிறார்கள். சரி அவர்கள் தமிழ் கதைக்கினம் அப்ப அடுத்த தலை முறை????. அதுவும் செய்யாது.

வாரத்தில் ஒரு மணி நேரம் உங்கள் வரலாற்றிற்காக, தமிழுக்காக, உங்களின் மூன்றாம் தலை முறைக்காக‌ ஒதுக்க முடியாத அளவுக்கு நேரமின்மை எனில் நீங்கள் ஒபாமாவை விட நேரமின்மையானவர். இலங்கையில் பாட்டி இறந்தால் கனடாவில் ஒரு வருடத்திற்கு கோவிலுக்கு கோவிலுக்கு போகாத பழகத்தை அடுத்த தலை முறைக்கு (மகனுக்கு/மகளுக்கு) காவத் தெரிந்த எமக்கு, எனது முன்னைய 100 தலை முறை காவிய தமிழ் சுமையாகி விட்டது.

இது பொது நலக் கட்டுரை அல்ல. உங்கள் சுயநலம் சார்ந்ததே எமது மொழிய அடுத்த தலை முறைக்கு கடத்துவதும். த‌மிழ் அழியாது. 2000 ஆண்டாக வாழ்ந்த தமிழை நாம் காப்பாற்றத் தேவை இல்லை அது வாழும்.

ஆனால் எம‌து குடும்பத்தின் வ‌ர‌லாறு, உங்க‌ளது பூட்டப் பிள்ளை உங்க‌ளை ஒரு தட‌வையேனும் உங்க‌ளை நினைப்ப‌த‌ற்குரிய‌ பொறுப்பு,அனைத்தும் உங்க‌ள் தாய் மொழியை உங்க‌ள் அடுத்த‌ த‌லை முறைக்கு க‌ட‌த்துவ‌தால் சென்று விடும். உங்க‌ள் அடையாள‌ம் இன்னும் 10 த‌லைமுறை சென்றாலும் அழியாது.  

என் இந்த‌ அல‌ட்ட‌லை ஒருவ‌ரேனும் வாசித்து அவ‌ர்க‌ளின் ம‌க‌ன்/ம‌க‌ளிற்கு த‌மிழ் க‌ற்பிப்பார் எனின் அவ‌ர‌து காலில் வீழ்ந்து ம‌னமார‌ வ‌ண‌ங்குகிறேன்

நன்றி

வல்லுனர் வட்டத்திற்காக‌ (For Proffesionals’ forum)

நட்புட‌ன்

உதயம்

Edited by உதயம்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், உதயம்! மிகவும் நல்ல ஒரு விடயம். அதுவும், உங்களைப் போன்ற இளையவர்களிடமிருந்து, இப்படியான முன்னெடுப்பைக் காணும்போது, தமிழ் வாழும் என்று ஒரு நம்பிக்கை, துளிர்விடுகின்றது!

ஒரே வார்த்தையில், அந்தக் குஜராத்திப் பெண் கூறுவது போன்று, 'மொழி என்பது எமது அடையாளம், அதை மறந்தால், நாம் எமது அடையாளத்தை இழந்து போய் விடுவோம்!

பதிவுக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்தை மையமாக வைத்து எழுதியுள்ளீர்கள் உதயம்.இந்த விடயத்தில் பிரித்தானியா படு மோசம்.தங்கட பிள்ளைகள் தமிழ் கதைப்பதை பெருத்த அவமானமாகவே பெற்றோர் கருதுகிறார்கள்.தமிழ் படிப்பிக்க சொன்னால் பிள்ளைக்கு அந்த பரீட்சை இருக்கு,இந்த பரீட்சை இருக்கு என காரணம் சொல்கிறார்கள்.தமிழ் அவ்வளவு கேவலமாய் போயிட்டு என்று நினைக்க வேதனையாய் இருக்கு.மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம் என்பது அவர்களுக்கு புரியாமல் இருப்பது தான் வேதனை

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் சதா அலட்டிக்கொண்டிருக்கிற ஒருபொண்ணாப்பார்த்து கல்யாணம் கட்டினால் இந்தப்பிரச்சினை தீர்ந்திது... Pஇள்ளையளை கதச்சே தமிழ்பேச வைத்துவிடுவார்கள்...:)

:D

:D

நல்ல பதிவு உதயம் அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீட்டில் உந்த சிக்கல் வராது துளசி... :D

உங்கள் வீட்டில் உந்த சிக்கல் வராது துளசி... :D

அவ்வளவுக்கு என்ட அலட்டலால் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று விளங்குது சுபேஸ் அண்ணா. :lol::)

ஆனால் அலட்டுவதால் மட்டும் தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்திச்செல்ல முடியாது. தகுந்த முறையில் தமிழும் தமிழ்பற்றும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு சில பிள்ளைகள் மிக நன்றாக தமிழ் கதைப்பார்கள், எழுதுவார்கள்.

சிலர் ஓரளவுக்கு கதைப்பார்கள், ஆனால் எழுத மாட்டார்கள்.

சிலருக்கு தமிழ் கொஞ்சம் தெரிந்தாலும் கதைக்க மாட்டார்கள்.

சிலருக்கு தமிழே தெரியாது.

இன்னும் சிலருக்கு தமிழ் படிக்க ஆசை. ஆனால் பெற்றோர் விடுவதில்லை. அல்லது படிக்க வைக்கும் சூழ்நிலையில் பெற்றோர் இல்லை. அப்படியான பிள்ளைகள் இணையத்தில் தமிழ் படிக்கலாமா என்று தேடுகிறார்கள்.

எனவே பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வு வர வேண்டும், தமிழை விருப்புடன் கற்க வேண்டும் என நினைத்தால் சிறு வயதிலிருந்து அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். கொஞ்சம் வளர்ந்த பின்னர் தமிழ் படிப்பிப்போம் என நினைப்பவர்கள் தான் பின்னர் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள், பிள்ளைகளும் தமிழ்படிக்க விரும்புவதில்லை, தெரிந்தாலும் கதைக்க வெட்கப்படுவார்கள் அல்லது தாய் தந்தையரின் வற்புறுத்தலுக்காக கதைப்பார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பகிடிக்கு சொன்னேன் துளசி.... :)

அவ்வளவுக்கு என்ட அலட்டலால் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று விளங்குது சுபேஸ் அண்ணா. :lol::)

:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

....தமிழ் எமது மக்கள் கூட்டதுக்குரிய மொழி. நீங்களும் நானும் எங்கிருந்து வந்தோம், எந்த கூட்டத்தை சார்ந்தவர்கள் என்பதற்கான பெருமைக்குரிய அடையாளம். ஏனோ எங்களுக்கு அது விளங்கவில்லை. ஏனோ நாங்கள் எமது குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதை தரக்குறைவாக எண்ணுகிறோம்.

.....எம‌து குடும்பத்தின் வ‌ர‌லாறு, உங்க‌ளது பூட்டப் பிள்ளை உங்க‌ளை ஒரு தட‌வையேனும் உங்க‌ளை நினைப்ப‌த‌ற்குரிய‌ பொறுப்பு,அனைத்தும் உங்க‌ள் தாய் மொழியை உங்க‌ள் அடுத்த‌ த‌லை முறைக்கு க‌ட‌த்துவ‌தால் சென்று விடும். உங்க‌ள் அடையாள‌ம் இன்னும் 10 த‌லைமுறை சென்றாலும் அழியாது.

நல்ல கருத்து உதயம்..

எனது குழந்தைகளும் பள்ளி இறுதி வகுப்பு வரை விருப்பப் பாடமாக தமிழையே கற்றனர். பின்னர் பொறியியல் கல்லூரி சென்றவுடன் மொழிக்கான பாடங்கள் இல்லை. ஆனால் நடைமுறையில், தமிழை பயன்படுத்தி இலக்கணப் பிழை இல்லாமல் எழுத, இளசுகளுக்கு அதிக சந்தர்ப்பங்கள் இப்பொழுது மிககுறைவாகவே உள்ளன....

இணையம், கைப்பேசி வந்தவுடன் அவைகளே குழந்தைகளின் நாள் முழுவதும் பழகும் தோழனாகி விட்டன.. அவர்களை அதட்டி வேறு விடயங்களில் கவனம் செலுத்துங்களென்றால், இக்கால குழந்தைகள், அப்பனை வில்லன்களாக நோக்குகின்றனர். :D

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தான கருத்துக்கு நன்றி உதயம்.. இதை சிரமேற்கொள்வதில் புலம்பெயர் நாடுகளில் இரண்டு வகையான சிக்கல்களைக் காணலாம்.

  1. பெற்றோர் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்களாக இருந்தால், பிள்ளைகளிடம் இலகுவாக செய்திகளைச் சொல்லுவதற்கு அதை உபயோகித்துவிடுவார்கள்.. இதனால் பிள்ளைகளின் தமிழ் வளர்ச்சி குன்றும். :unsure:
  2. பிள்ளைகளும் லேசுப்பட்டவர்கள் அல்லர்.. பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியும் என்றால் தமது வசதிக்காக திரும்பவும் ஆங்கிலத்திலேயே பேசிப் பேசி தம்மாலான முயற்சியை மேற்கொள்வார்கள்.. :lol:

Edited by இசைக்கலைஞன்

இரண்டு மொழிகளைப் பேசுவது பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
இது விஞ்ஞான ரீதியான ஆய்வு முடிவு.
 
  • கருத்துக்கள உறவுகள்

தாய்மொழியை அடுத்த‌ த‌லை முறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமைகளை உணர்ந்தவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நல்லதொரு பதிவு.

குறிப்பாக பிரித்தானியவில் 80களுக்கு முன் வந்திருந்தவர்கள் பொது இடங்களில் தமிழைப் பேசுவதற்கு தயங்கினர் மற்றும் கூச்சப்பட்டனர். இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். இந்த நிலை, தமிழ்மொழியை அடுத்த‌ த‌லை முறைக்கு எடுத்துச் செல்லும் வழிகளையும் அமைக்க ஆவனசெய்யும் என நம்பலாம்.

இது இல்லாத இடங்களில்தான் பிரச்சனை இருக்கிறது.

இவர்கள் பேசுவது பிள்ளைகளுக்கு புரியாது. இவர்களுக்கு புரியாமல் பிள்ளைகள் பேசுவதில் அவர்களுக்கு ஒரு பெருமை.

பின்பு காலம் கடந்திருக்கும்.

எல்லாம் கைவிட்டு போயிருக்கும்.

தனக்கும் உதவாமல்............. பிறந்த மண்ணுக்கும் உதவாமல்.

அரச பணத்தில் ஏதாவது முதியோர் இல்லத்தில் படுத்திருக்கும் ஒரு உடல்.

  • தொடங்கியவர்

வணக்கம், உதயம்! மிகவும் நல்ல ஒரு விடயம். அதுவும், உங்களைப் போன்ற இளையவர்களிடமிருந்து, இப்படியான முன்னெடுப்பைக் காணும்போது, தமிழ் வாழும் என்று ஒரு நம்பிக்கை, துளிர்விடுகின்றது!

ஒரே வார்த்தையில், அந்தக் குஜராத்திப் பெண் கூறுவது போன்று, 'மொழி என்பது எமது அடையாளம், அதை மறந்தால், நாம் எமது அடையாளத்தை இழந்து போய் விடுவோம்!

பதிவுக்கு நன்றிகள்!

நன்றி புங்கை அண்ணை

நல்லதொரு கருத்தை மையமாக வைத்து எழுதியுள்ளீர்கள் உதயம்.இந்த விடயத்தில் பிரித்தானியா படு மோசம்.தங்கட பிள்ளைகள் தமிழ் கதைப்பதை பெருத்த அவமானமாகவே பெற்றோர் கருதுகிறார்கள்.தமிழ் படிப்பிக்க சொன்னால் பிள்ளைக்கு அந்த பரீட்சை இருக்கு,இந்த பரீட்சை இருக்கு என காரணம் சொல்கிறார்கள்.தமிழ் அவ்வளவு கேவலமாய் போயிட்டு என்று நினைக்க வேதனையாய் இருக்கு.மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம் என்பது அவர்களுக்கு புரியாமல் இருப்பது தான் வேதனை

உண்மை தான், பிர்த்தானியாவாழ் தமிழர்களும் கனடா வாழ் தமிழர்களும் தமிழை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை

பேசாமல் சதா அலட்டிக்கொண்டிருக்கிற ஒருபொண்ணாப்பார்த்து கல்யாணம் கட்டினால் இந்தப்பிரச்சினை தீர்ந்திது... Pஇள்ளையளை கதச்சே தமிழ்பேச வைத்துவிடுவார்கள்... :)

:D

:D

Good luck for finding one..!

நல்ல பதிவு உதயம் அண்ணா. :)

நன்றி துளசி

நல்ல கருத்து உதயம்..

எனது குழந்தைகளும் பள்ளி இறுதி வகுப்பு வரை விருப்பப் பாடமாக தமிழையே கற்றனர். பின்னர் பொறியியல் கல்லூரி சென்றவுடன் மொழிக்கான பாடங்கள் இல்லை. ஆனால் நடைமுறையில், தமிழை பயன்படுத்தி இலக்கணப் பிழை இல்லாமல் எழுத, இளசுகளுக்கு அதிக சந்தர்ப்பங்கள் இப்பொழுது மிககுறைவாகவே உள்ளன....

இணையம், கைப்பேசி வந்தவுடன் அவைகளே குழந்தைகளின் நாள் முழுவதும் பழகும் தோழனாகி விட்டன.. அவர்களை அதட்டி வேறு விடயங்களில் கவனம் செலுத்துங்களென்றால், இக்கால குழந்தைகள், அப்பனை வில்லன்களாக நோக்குகின்றனர். :D

உண்மை தான் அண்ணா.. பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்க வேண்டியதும் முக்கியத்துவத்தை கூறுவதும் எமது கடமை, அதைத் தொடர்வது அவர்கள் சுதந்திரம். தற்போதைய பிள்ளைகளுக்கு எமது மொழி ஏன் எமக்குத் தேவை என‌ எங்களால் சரியாக விளங்கப் படுத்த முடியுமாயின் அவ்ர்கள் 10 வயதிலேயே புரிந்து கொள்வார்கள். மிகவும் விபரமானவர்கள்

சத்தான கருத்துக்கு நன்றி உதயம்.. இதை சிரமேற்கொள்வதில் புலம்பெயர் நாடுகளில் இரண்டு வகையான சிக்கல்களைக் காணலாம்.

  1. பெற்றோர் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்களாக இருந்தால், பிள்ளைகளிடம் இலகுவாக செய்திகளைச் சொல்லுவதற்கு அதை உபயோகித்துவிடுவார்கள்.. இதனால் பிள்ளைகளின் தமிழ் வளர்ச்சி குன்றும். :unsure:
  2. பிள்ளைகளும் லேசுப்பட்டவர்கள் அல்லர்.. பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியும் என்றால் தமது வசதிக்காக திரும்பவும் ஆங்கிலத்திலேயே பேசிப் பேசி தம்மாலான முயற்சியை மேற்கொள்வார்கள்.. :lol:

உண்மை தான் டங்கு அண்ணா.. ஆனால் அதை சாட்டாக கூறமுடியாது தானே. நாமும் சில முயற்சி எடுக்க வேண்டும் தானே. எனது கவலை எமது சுயத்தை மறந்து எம்மை வேறொருவராக காட்டிக் கொள்ளும் அல்லது காட்ட முயற்சிக்கும் பெற்றோரைப் பற்றியதே. இந்த விடயத்தில் நாங்கள் எம்மை பெருமையாக நினைக்க வேண்டும். நாம் ஏன் எம்மை வேரொருவராக இனம் காட்ட வேண்டும்.

இரண்டு மொழிகளைப் பேசுவது பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
இது விஞ்ஞான ரீதியான ஆய்வு முடிவு.
 
ஈசன் யார் கேக்கிறாங்க அண்ணை

தாய்மொழியை அடுத்த‌ த‌லை முறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமைகளை உணர்ந்தவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நல்லதொரு பதிவு.

குறிப்பாக பிரித்தானியவில் 80களுக்கு முன் வந்திருந்தவர்கள் பொது இடங்களில் தமிழைப் பேசுவதற்கு தயங்கினர் மற்றும் கூச்சப்பட்டனர். இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். இந்த நிலை, தமிழ்மொழியை அடுத்த‌ த‌லை முறைக்கு எடுத்துச் செல்லும் வழிகளையும் அமைக்க ஆவனசெய்யும் என நம்பலாம்.

நன்றி பான்ச்

இது இல்லாத இடங்களில்தான் பிரச்சனை இருக்கிறது.

இவர்கள் பேசுவது பிள்ளைகளுக்கு புரியாது. இவர்களுக்கு புரியாமல் பிள்ளைகள் பேசுவதில் அவர்களுக்கு ஒரு பெருமை.

பின்பு காலம் கடந்திருக்கும்.

எல்லாம் கைவிட்டு போயிருக்கும்.

தனக்கும் உதவாமல்............. பிறந்த மண்ணுக்கும் உதவாமல்.

அரச பணத்தில் ஏதாவது முதியோர் இல்லத்தில் படுத்திருக்கும் ஒரு உடல்.

காலம் கடந்து கிடைக்கும் ஞான‌ம் எண்டுறீங்கள் :)

Edited by உதயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.