Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்-போரால் பாதீக்கப்பட்ட மக்கள் இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேந்தன் சொல்வது ஒரு வகையில் சரி. ஆனால் இலங்கை முழுவதும் என்று பார்த்தால் எந்தத் தமிழ் கட்சியும் 10 வீதமளவில்தான் வருவார்கள். தேர்தல் நடக்க இருக்கின்ற வட மாகாணம் என்று நான் இதைப் பார்க்கலாம். வன்னி மாவட்டங்களில் ஈபிடிபிக்கு அவ்வளவு ஆதரவு இல்லை என்பதனால், 20 வீதம் என்பது 15 வீதமாக குறைய வாய்ப்பு உண்டு.

உங்கள் ஆய்வுகளும் எதிர்வு கூறல்களும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. டாக்கிக்கு இருக்கும் ஆதரவு இந்த முறை மக்கள் தெளிவாக தெரியப்படுத்துவார்கள். 

  • Replies 71
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலஸ் அவர்கள் அம்பாந்தோட்டையில் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகவில்லை :icon_mrgreen: , இது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. தமிழ்மக்கள் வாக்களித்து அவர் அமைச்சராக இருப்பதால் அவர் தமிழ்மக்களின் ஒருபகுதியினரை அல்லது வாக்களித்த தமிழர்களை பிரதிநிதிதுவபடுத்துகின்றார். இதை மறுக்கமுடியாது. டக்கிலஸ் அவர்கள் காலத்துக்கு ஏற்றவாறு அரசியல் செய்கின்றார் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை தாமே கூறிகொள்பவர்கள் யதார்த்தத்தை உணராமல் மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையை மறந்து புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் விருப்புகளுக்கு ஏற்ப செயற்படுகின்றனர் இதனாலேயே இவர்களால் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. வரட்டு கௌரவங்களும் மோட்டுத்தனமான கொள்கைகளும் எம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படாது. சொந்தபணத்தில் தான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றால் புலிகள் எவ்வளவோ செய்திருக்கலாம் ஆனால் ஏன் செய்யவில்லை? மக்களிடம் பணம் புடுங்குவதிலும் வரி அறவிடுவதிலும் தான் அவர்கள் காலம் கழிந்தது.

புலம்பெயர் தமிழர்கள் எப்பொழுதும் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் காவலாளிகளோ அல்லது பிரதிநிதிகளோ ஆகாமுடியாது. நீங்கள் தமிழ் மக்களின் காவலாளிகள் என்று உங்களை நீங்களே கூறுவீர்களாயின் தமிழ் மக்களை எங்கே அல்லது எப்பொழுது காப்பாற்றினீர்கள் என்று கூறமுடியுமா? மாறாக புலிகள் தமிழ்மக்களை பகடைகாயாக்கி தாமும் கொன்று சிங்களவனையும் கொல்ல வைத்ததுதான் மிச்சம். அப்பொழுதுகூட எவராவது தமிழர்களை யத்த பிரதேசங்களில் இருந்து விடிவியுங்கள் என்று குரல் கொடுத்தீர்களா? ஒருவராவது ? இல்லை ஏனென்றால் உங்களுக்கு மக்களின் மீது அக்கறையில்லை மாறாக என்னவிலை கொடுத்தேனும் புலிகளை காப்பாற்ற வேண்டும், அவர்கள் புலம்புவதை நாமும் புலம்பிதிரியவேண்டும்.  நாம் இங்கு சிங்கள இனவாதத்தை பற்றி கதைக்கவில்லை அவர்கள் யார் என்பதையும் நாம் நன்றாக அறிவோம். இங்கு விவாதத்துக்குரியது என்னவென்றால் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழர்களால் என்ன செய்யமுடிந்தது என்பதே.

பணத்தினை பற்றி கதைக்காதீர்கள், யார்தான் பணம் கொள்ளையிடவில்லை.  புலிகள் மற்றும் அவர்கள் முகவர்கள் அடிக்காத கொள்ளையா மற்றவர்கள் செய்கின்றார்கள் :icon_mrgreen:  

இலங்கையில் இதுவரை நடந்த எந்தத் தேர்தலுமே நீதியான முறையில் நடைபெறவில்லை. ஆட்சியிலிருந்த எல்லா அரசுகளுமே தேர்தல் தில்லுமுள்ளுகளில் ஈடுபட்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டவைதான். அந்த வகையில் டக்கிளஸ் கூட அதேவகையான முறையில்த்தான் தேர்தலில் தெரிவாகி வருகிறார். முதன் முதலாக 1991 இல் என்று நினைக்கிறேன், பிரேமதாசவுடன் சேர்ந்து வெறும் 11 வாக்குகளை தீவகத்தில்  மட்டுமே பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துச் சிங்களப் பேரினவாத அரசுகளினதும் செல்லப்பிள்ளையாகிய அவர் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் கடுமையான இராணுவ அடக்குமுறை தனது துணை ராணுவக்க் குழுவின் கொலைகள், மிரட்டல்கள், தேடர்தல் வாக்கு மோசடிகள் , அரச ஆதரவு ஆகியவற்றைப் பாவித்து எப்படியாவது மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகி வருகிறார். அதை நீங்கள் மக்கள் தெரிவு என்று சொல்வீர்களென்றால், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

நாங்கள் தமிழ்மக்களின் காவலாளிகள் இல்லையென்றால் நீங்களும் டக்கிளஸும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசும்தான் தமிழினக் காவலாளிகள் என்கிறீர்களா?? பாலுக்குப் பூனை காவல் காத்த கதைதான் போங்கள். இன்று தாயகத்தில் அரச பயங்கரவாதமும், டக்கிளஸின் துணை இராணுவக் குழுவின் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், தமிழர்கள் தமது கருத்தினயோ அல்லது விருப்பினையோ சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். தமக்கு நடந்துவரும் அநியாயங்கள் பற்றி வாய்திறந்து பேசத்தன்னும் நீங்கள் ஆதரிக்கும் துணை ராணுவக் குழுவின் தலைவரோ அல்லது அவரை வழிநடத்தும் சிங்கள அரச பயங்கரவாதமோ அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை. அப்படிப் பேச எத்தனித்த பலரும் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். எழுதத் துணிந்த பத்திரிக்கையாளர் பலரையும் உங்கள் தலைவர் தானே முன்னின்று கொன்று தள்ளினார். பத்திஅரிக்கைக் காரியாலயங்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன, ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்படியான மக்கள் நலன் சார்ந்த கடமைகளைச் செய்யும் உங்கள் தலைவர் நிச்சயம் தமிழினக் காவலர் தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

புலிகள் மக்களைக் கொண்டு போகவில்லை. புலிகள் பின்வாங்கிப் போனபோது மக்களும் அவர்களுடன் சென்றார்கள். தங்களைக் கொல்ல வரும் மிருகங்களிடமிருந்து புலிகள் தம்மைக் காப்பார்கள் என்கிற நம்பிக்கை இறுதி வரை அம்மக்களிடம் இருந்தது. இது உங்களைப் போன்ற அரச பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒருவரால் உணர முடியாது. ஆனால், போரின் இறுதி வாரங்களில் தம்மை வேண்டுமென்றே இலக்கு வைத்துக் கொல்ல சிங்களப் பேரினவாதம் பகீரதப் பிரயத்தனம் செய்யும்போது அவர்களுக்கு புலிகளை விட்டு விலகுவதைத் தவிர வேறு மார்க்கமிருக்கவில்லை.

தமிழினக் காவல்ர்கள் புலிகள்தான். அந்த உரிமையை நீங்களோ அல்லது உங்களின் தலைவரோ அல்லது அவரை ஆட்டுவிக்கும் சிங்களப் பயங்கரவாதமோ பெற்றுவிட முடியாது. புலிகளை அழித்தீர்கள், பின்னர் தமிழர்களுக்கென்று இனி எவருமே இருக்கக் கூடாதென்று திட்டமிட்டஉ இன்னுமிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்களையும் கொல்கிறீர்கள். இருப்பவர்கள் அனைவரையுமே கொன்றுவிட்டு, தமிழினக் காவலாளிகள் என்ன செய்தார்கள் என்று நீங்கள் கேட்பது புதுமை.

புலிகள் எக்காலத்திலும் பனம் கொள்ளையிடவில்லை. ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களைப் போலவே அவர்களும் அரச வங்கிகளைக் கொள்ளையடித்தார்கள்.ஆனால் தமது சொத்தை நிரப்பவல்ல. ஆனால் உங்கள் தலைவர் இன்று கொள்ளையடிப்பது தமிழ் மக்களின் பணத்தை.....அதுவும் தனது சொந்த வயிற்றுக்காகக்.

"புலிகள் மக்களைக் கொண்டு போகவில்லை. புலிகள் பின்வாங்கிப் போனபோது மக்களும் அவர்களுடன் சென்றார்கள். தங்களைக் கொல்ல வரும் மிருகங்களிடமிருந்து புலிகள் தம்மைக் காப்பார்கள் என்கிற நம்பிக்கை இறுதி வரை அம்மக்களிடம் இருந்தது. இது உங்களைப் போன்ற அரச பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒருவரால் உணர முடியாது. ஆனால், போரின் இறுதி வாரங்களில் தம்மை வேண்டுமென்றே இலக்கு வைத்துக் கொல்ல சிங்களப் பேரினவாதம் பகீரதப் பிரயத்தனம் செய்யும்போது அவர்களுக்கு புலிகளை விட்டு விலகுவதைத் தவிர வேறு மார்க்கமிருக்கவில்லை"

இவ்வளவும் தங்கபவுன் அண்ணை . :icon_mrgreen:

வேந்தன் சொல்வது ஒரு வகையில் சரி. ஆனால் இலங்கை முழுவதும் என்று பார்த்தால் எந்தத் தமிழ் கட்சியும் 10 வீதமளவில்தான் வருவார்கள். தேர்தல் நடக்க இருக்கின்ற வட மாகாணம் என்று நான் இதைப் பார்க்கலாம். வன்னி மாவட்டங்களில் ஈபிடிபிக்கு அவ்வளவு ஆதரவு இல்லை என்பதனால், 20 வீதம் என்பது 15 வீதமாக குறைய வாய்ப்பு உண்டு.

டக்கிளசுக்கு கருத்துகணிப்பு நடத்தி ஆதரவை பெற்றுகொள்ள முடியாது. ஜனநாயகம் இல்லா இடத்தில் மக்கள் உண்மை சொல்ல மாட்டார்கள். இந்த 20% வீதம் எந்த ஒரு நேர்மையான தேர்தல் நடந்தும் பெறபட்டாத பிரச்சர இலக்கம்.

உண்னையான ஜனநாயகத்தேரதல் வந்தால் குத்தியில் 20% 15% வீதமாக சரியாது.0 % வாகும். அரசு தனது கள்ள வோட்டுக்களை முழுவதையும் தனக்குத்தான் போடும். அரசு வன்முறையால் எற்றிவைத்திருக்காவிட்டால் குத்தியால் வடக்கில் ஒரு சிறு கல்லைதான்னும் தூக்க முடியாது. குத்திக்கு பின்னால் ஒரு அடியாள் கூட போக மாட்டான். பிள்ளையான் மாதிரியே குத்தியும் 100 % அரசியல் அநாதையாகிவிடுவார். அதன் பின்னர் இங்கே செயலாளர் நாயகம் செய்தது எவ்வளவு, கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேள்வி கேட்டு எழுதுபவர்கள் இன்னுமொரு புது ID திறக்க வேண்டி வரும்.

இவ்வளவும் தங்கபவுன் அண்ணை . :icon_mrgreen:

மணி.

இப்படி ஒற்றை வரி நக்கல் அரசியல் பேசி முன்னுக்கு வந்தவர்கள் வேறு யாரும் உலகில் இருக்க முடியாது.

மணி.

வாய்க்குள் வைத்து விக்க மட்டும்தான் சில விவாதங்களுக்கு இடம். அது வெளியே வந்தால் யராவது திருப்பி அள்ளித் தீத்திவிடுவார்கள் என்ற பயம்.

தொடருங்கள் ஒற்றை வரி நக்கலை. அது யாழில் தொடர்ந்து PhD விலாசம் பேச உதவும்.

தொடருங்கள் ஜம்பவான் எழுத்தை.

டக்ளஸ் மட்டும் அரசை அண்டிப்பிழைப்பவர் மற்றவர்கள் எல்லாம் யோக்கியம் என்ற கருத்து எம்மை நாமே ஏமாற்றுவது. தொன்றுதொட்டு அரசை அண்டிப்பிழைக்கும் வர்க்கத்தில் உயர்ந்த கூட்டம் இருந்துவருகின்றது. அரச உத்தியோகமும் சுயநலமான வாழ்க்கை முறையும் கொண்ட கூட்டம் எப்போதும் அரசை அண்டிப்பிழைத்தே வருகின்றது.

இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு கூட இலங்கை உற்பத்திப்பொருட்களை தின்னாவிட்டால் பத்தியப்படாது. அந்தவகையில் இன்றுவரை அரசின் பொருளாதரத்துக்கு முண்டு கொடுக்கின்றவர்களே.

டக்ளசை பற்றி விமர்சனம் செய்யும் புலம்பெயர்ந்த தேசீயவாதிகள் ஏன் தமிழ்த்தேசீயக் கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து இதுவரை இயங்கமுடியவில்லை? ஒரு தொண்டு நிறுவனத்தினை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணைந்து உதவியிருக்கலாம். அவலப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்திருக்கலாம். அப்படி இணைந்து செயற்பட்டிருந்தால் இன்றய நிலையில் வடகிழக்கில் தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பே வலுவான அரசியல் சக்தியாக இருந்திருக்கும். ஆனால் புலம்பெயரந்தவனுக்கு இருப்பது நாட்டாமை மனப்பான்மை. இங்கு இருந்துகொண்டு அங்கு அதிகாரம் செய்ய முற்படும் மனப்பான்மை. அதன் விழைவே நாடுகடந்த அரசாங்கம். ஆடு அறுக்க முதல் ----ஆறுக்கிற குணம். மனிதாபிமான உதவிகள் போர்க்குற்றத்திற்கான குரல்கள் புனர்வாழ்விற்கான இணைந்த செயற்பாடு ஆகிய சாத்தியப்படக்கூடிய வழிகளை அலட்சியப்படுத்தி சிம்மாசனத்தில் இருக்க விரும்ப்பும் குணம். இந்தக் குணத்தால் ஒவ்வொருவரும் தாயக மக்களுக்கு ஆதரவு வழங்குவதை விட அதிகாரம் செய்ய முற்படுகின்றனர். தேசீயம் என்ற கருத்தியலை வைத்து சுயநல அடயாளம் தோட முற்படுகின்றனர். அதனிலும் ஆக கழிசடை நிலைக்குச் சென்று டக்ளஸ் போன்றவர்களை திட்டித் தீர்த்தால் தாம் தேசீயவாதிகள் என்ற பிரகடனம் செய்கின்றனர். இவ்வாறான போக்கு இருக்கும் வரை டக்ளஸ் போன்றவர்களின் வளர்ச்சி மேலோங்கிக்கொண்டே இருக்கும்.

மக்ளிடம் இருந்து அன்னியப்பட்ட அரசியல் சிந்தனை முறையும் அதிகாரபோதையும் டக்ளஸின் செயற்பாடுகளை விட மோசமானவை. சரிபிழைக்கு அப்பாற்பட்டு டக்ளசின் செயற்பாடுகள் மக்களுக்குள்ளாகவே இருக்கின்றது. மக்களால் அவர் நிரகரிக்கப்படலாம் அல்லது ஆதரிக்கப்படலாம். ஆனால் டக்ளசை விமர்சித்து நல்லவன் என்ற பெயர்வாங்க முற்படும் புலத்து தேசீயம் மக்களில் இருந்து அன்னியப்பட்டு அரசியல் தொடர்புகள் அற்று அதிகார சுயநல அடயாளந்தேடும் போதையில் மிதக்கின்றது. அந்தவகையில் டக்ளஸ் ஒரு படிமேலே என்பது யதார்த்தம். டக்ளசை விட சிங்களப்பேரினவாதத்தை ஆதரிப்பது புலத்து தேசீய சிந்தனை முறை.

இலங்கையில் இதுவரை நடந்த எந்தத் தேர்தலுமே நீதியான முறையில் நடைபெறவில்லை. ஆட்சியிலிருந்த எல்லா அரசுகளுமே தேர்தல் தில்லுமுள்ளுகளில் ஈடுபட்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டவைதான். அந்த வகையில் டக்கிளஸ் கூட அதேவகையான முறையில்த்தான் தேர்தலில் தெரிவாகி வருகிறார். முதன் முதலாக 1991 இல் என்று நினைக்கிறேன், பிரேமதாசவுடன் சேர்ந்து வெறும் 11 வாக்குகளை தீவகத்தில்  மட்டுமே பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துச் சிங்களப் பேரினவாத அரசுகளினதும் செல்லப்பிள்ளையாகிய அவர் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் கடுமையான இராணுவ அடக்குமுறை தனது துணை ராணுவக்க் குழுவின் கொலைகள், மிரட்டல்கள், தேடர்தல் வாக்கு மோசடிகள் , அரச ஆதரவு ஆகியவற்றைப் பாவித்து எப்படியாவது மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகி வருகிறார். அதை நீங்கள் மக்கள் தெரிவு என்று சொல்வீர்களென்றால், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

யதார்த்த நிலையில் இல்லாத புலி ஆதரவாளர்களும் கூட்டமைப்பினருமே இவ்வாறு புலம்பி திரிகிறார்கள் இவர்களின் புலம்பல்கள் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது வரும் வடமாகானசபை தேர்தலில் தெரிந்துவிடும். கூட்டமைப்பினர் எதை சொல்லி வாக்கு கேட்கபோகின்றனர் என்று தான் தெரியவில்லை :lol:  :lol: . ஒருவேளை எங்களுக்கு வாக்கு போட்டால் அரசாங்கத்துடன் இணைந்து வடமாகனத்தை கட்டியெழுப்புவோம் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாங்கள் தமிழ்மக்களின் காவலாளிகள் இல்லையென்றால் நீங்களும் டக்கிளஸும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசும்தான் தமிழினக் காவலாளிகள் என்கிறீர்களா?? பாலுக்குப் பூனை காவல் காத்த கதைதான் போங்கள். இன்று தாயகத்தில் அரச பயங்கரவாதமும், டக்கிளஸின் துணை இராணுவக் குழுவின் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், தமிழர்கள் தமது கருத்தினயோ அல்லது விருப்பினையோ சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். தமக்கு நடந்துவரும் அநியாயங்கள் பற்றி வாய்திறந்து பேசத்தன்னும் நீங்கள் ஆதரிக்கும் துணை ராணுவக் குழுவின் தலைவரோ அல்லது அவரை வழிநடத்தும் சிங்கள அரச பயங்கரவாதமோ அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை. அப்படிப் பேச எத்தனித்த பலரும் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். எழுதத் துணிந்த பத்திரிக்கையாளர் பலரையும் உங்கள் தலைவர் தானே முன்னின்று கொன்று தள்ளினார். பத்திஅரிக்கைக் காரியாலயங்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன, ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்படியான மக்கள் நலன் சார்ந்த கடமைகளைச் செய்யும் உங்கள் தலைவர் நிச்சயம் தமிழினக் காவலர் தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

புலிகள் இருந்தபோதும் அங்கு கருத்து சுதந்திரம் இருந்ததில்லை, யாரும் ஏதும் கூறினால் அவர்களுக்கு துரோகி என்று முத்திரை குத்தி மண்டையில் போட்டதுதான் மிச்சம். மக்களுடைய அபிப்பிராயங்களை கேட்டுநடந்திருந்தால் இன்று புலிகள் இருந்திருக்கக்கூடும். புலிகளுக்கு எப்பொழுதும் தமிழ்மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்ததில்லை ஆனால் மக்கள் மௌனமாக இருந்தார்கள் காரணம் உயிர்பயம் அப்படி இருந்ததனால் புலிகளுக்கு ஒட்டுமொத்த ஆதரவு இருந்தது என்று கூறுவது மடைத்தனம். பத்திரிகைகள் அனைத்தும் புலி புகழ் பாடவேண்டும் அல்லது பத்திரிக்கை நடத்தமுடியாது. அந்த காலகட்டத்தில் இருந்து பழகிய சில பத்திரிகைகள் அதில் இருந்து இன்னும் வெளிவரமுடியாமல் இருப்பது வேடிக்கை.

புலிகள் மக்களைக் கொண்டு போகவில்லை. புலிகள் பின்வாங்கிப் போனபோது மக்களும் அவர்களுடன் சென்றார்கள். தங்களைக் கொல்ல வரும் மிருகங்களிடமிருந்து புலிகள் தம்மைக் காப்பார்கள் என்கிற நம்பிக்கை இறுதி வரை அம்மக்களிடம் இருந்தது. இது உங்களைப் போன்ற அரச பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒருவரால் உணர முடியாது. ஆனால், போரின் இறுதி வாரங்களில் தம்மை வேண்டுமென்றே இலக்கு வைத்துக் கொல்ல சிங்களப் பேரினவாதம் பகீரதப் பிரயத்தனம் செய்யும்போது அவர்களுக்கு புலிகளை விட்டு விலகுவதைத் தவிர வேறு மார்க்கமிருக்கவில்லை.

தமிழினக் காவல்ர்கள் புலிகள்தான். அந்த உரிமையை நீங்களோ அல்லது உங்களின் தலைவரோ அல்லது அவரை ஆட்டுவிக்கும் சிங்களப் பயங்கரவாதமோ பெற்றுவிட முடியாது. புலிகளை அழித்தீர்கள், பின்னர் தமிழர்களுக்கென்று இனி எவருமே இருக்கக் கூடாதென்று திட்டமிட்டஉ இன்னுமிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்களையும் கொல்கிறீர்கள். இருப்பவர்கள் அனைவரையுமே கொன்றுவிட்டு, தமிழினக் காவலாளிகள் என்ன செய்தார்கள் என்று நீங்கள் கேட்பது புதுமை.

ஆமாம் புலி ஒன்றுமே செய்யவில்லை மக்கள் தான் மடைத்தனமாக புலிகளின் பின்பு போனார்கள். ஒருவேளை அவலத்தை தந்தவர்களுக்கு அவலத்தை குடுப்பார்கள் என்று நினைத்தார்கள் போலும் :icon_mrgreen:  ஆனால் அவலத்தை தந்தவர்களிடம் இருந்து காணாது என்று கேட்டு பெற்றுக்கொண்டார்கள் மக்களையும் அழித்தார்கள் அதுதான் வேதனை. கிளிநொச்சி பரந்தன் ஆனையிறவு முல்லைத்தீவு இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை புலிகள் தம்மை காப்பார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருந்ததா ? மிக நல்ல நகைச்சுவை.  காவலர்கள் என்றால் தமிழில் என்ன அர்த்தம் என்று பார்த்துவிட்டு வாருங்கள், புலிகள் மக்களை எங்கே பாதுகாத்தார்கள்? பணம் புடுங்குவதர்க்கும் தாம் ஒளிந்து கொள்வதற்கும் மக்களின் பெயரால் அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை பெறுவதற்குமே மக்களை பயன்படுத்தினார்கள். வாழவேண்டிய இளம் ஆண்கள் பெண்கள் எல்லாம் அனுபவமில்லாத காலங்களிலே பலியிடப்பட்டார்கள்.  வீட்டில் இருந்த இளம் ஆண்களை பெண்களை எல்லாம் வலுக்கட்டாயமாக பிடித்து சென்று பலியிட்டார்கள். எத்தனை குடும்பமா அவர்களின் அன்பான உறவுகளை இழந்து வாழவழி தெரியாமல் நடுத்தெருவில் நிற்கின்றது இவை எல்லாம் நீங்கள் கூறும் புலிகள் தந்த அவலமே.  அவலத்தை தந்தவனுக்கு திருப்பி தருவதற்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் .

டக்ளஸ் மட்டும் அரசை அண்டிப்பிழைப்பவர் மற்றவர்கள் எல்லாம் யோக்கியம் என்ற கருத்து எம்மை நாமே ஏமாற்றுவது. தொன்றுதொட்டு அரசை அண்டிப்பிழைக்கும் வர்க்கத்தில் உயர்ந்த கூட்டம் இருந்துவருகின்றது. அரச உத்தியோகமும் சுயநலமான வாழ்க்கை முறையும் கொண்ட கூட்டம் எப்போதும் அரசை அண்டிப்பிழைத்தே வருகின்றது.

இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு கூட இலங்கை உற்பத்திப்பொருட்களை தின்னாவிட்டால் பத்தியப்படாது. அந்தவகையில் இன்றுவரை அரசின் பொருளாதரத்துக்கு முண்டு கொடுக்கின்றவர்களே.

டக்ளசை பற்றி விமர்சனம் செய்யும் புலம்பெயர்ந்த தேசீயவாதிகள் ஏன் தமிழ்த்தேசீயக் கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து இதுவரை இயங்கமுடியவில்லை? ஒரு தொண்டு நிறுவனத்தினை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணைந்து உதவியிருக்கலாம். அவலப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்திருக்கலாம். அப்படி இணைந்து செயற்பட்டிருந்தால் இன்றய நிலையில் வடகிழக்கில் தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பே வலுவான அரசியல் சக்தியாக இருந்திருக்கும். ஆனால் புலம்பெயரந்தவனுக்கு இருப்பது நாட்டாமை மனப்பான்மை. இங்கு இருந்துகொண்டு அங்கு அதிகாரம் செய்ய முற்படும் மனப்பான்மை. அதன் விழைவே நாடுகடந்த அரசாங்கம். ஆடு அறுக்க முதல் ----ஆறுக்கிற குணம். மனிதாபிமான உதவிகள் போர்க்குற்றத்திற்கான குரல்கள் புனர்வாழ்விற்கான இணைந்த செயற்பாடு ஆகிய சாத்தியப்படக்கூடிய வழிகளை அலட்சியப்படுத்தி சிம்மாசனத்தில் இருக்க விரும்ப்பும் குணம். இந்தக் குணத்தால் ஒவ்வொருவரும் தாயக மக்களுக்கு ஆதரவு வழங்குவதை விட அதிகாரம் செய்ய முற்படுகின்றனர். தேசீயம் என்ற கருத்தியலை வைத்து சுயநல அடயாளம் தோட முற்படுகின்றனர். அதனிலும் ஆக கழிசடை நிலைக்குச் சென்று டக்ளஸ் போன்றவர்களை திட்டித் தீர்த்தால் தாம் தேசீயவாதிகள் என்ற பிரகடனம் செய்கின்றனர். இவ்வாறான போக்கு இருக்கும் வரை டக்ளஸ் போன்றவர்களின் வளர்ச்சி மேலோங்கிக்கொண்டே இருக்கும்.

மக்ளிடம் இருந்து அன்னியப்பட்ட அரசியல் சிந்தனை முறையும் அதிகாரபோதையும் டக்ளஸின் செயற்பாடுகளை விட மோசமானவை. சரிபிழைக்கு அப்பாற்பட்டு டக்ளசின் செயற்பாடுகள் மக்களுக்குள்ளாகவே இருக்கின்றது. மக்களால் அவர் நிரகரிக்கப்படலாம் அல்லது ஆதரிக்கப்படலாம். ஆனால் டக்ளசை விமர்சித்து நல்லவன் என்ற பெயர்வாங்க முற்படும் புலத்து தேசீயம் மக்களில் இருந்து அன்னியப்பட்டு அரசியல் தொடர்புகள் அற்று அதிகார சுயநல அடயாளந்தேடும் போதையில் மிதக்கின்றது. அந்தவகையில் டக்ளஸ் ஒரு படிமேலே என்பது யதார்த்தம். டக்ளசை விட சிங்களப்பேரினவாதத்தை ஆதரிப்பது புலத்து தேசீய சிந்தனை முறை.

சுத்தமாக குழம்பிப்போன நிலையில் எழுதப்பட்ட கருத்து. உள்ளே எதுவே இல்லை. சங்கைக்குரிய செயலாளர் நாயகம் அரசால் அழித்தொழிக்கப்படுகிறார் என்ற செய்தியை கேட்டவுடன் மாமியாரின் கோபத்தை மரும்கள் அம்மிக்கல்லுமீது காட்டுகிறார்கள். நாயுக்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்குவது போல இலகுவாக வசை பாட புலம் பெயர் தமிழர்தான் கிடைப்பார்கள். 

செயலாளர் நாயகத்தை அரசு இவ்வளவு விரைவில் அறுத்து ஒறுக்கும் என்றதை நானும்  இதுவரையில் எதிர் பார்த்திருக்வில்லை. ஆனாலும் உள்ளக வியபரம் தெரிந்தவர்கள் அதற்கான காலம் வந்து விட்டது என்று கூறும் போது இந்தக் கருத்து மாதிரி அழுது வடிந்து என்ன பலன். அரசு நினைத்தால் செயலாளர் நாயகத்தை செய்த இடத்து புல்லும் இல்லாமல் அழித்துவிடும் என்பது எல்லோரும் அறிந்த உண்மைதான்.

கோபத்தை காட்ட வேறு வழி இல்லாத்தால் அண்டிப்பிழைப்புக்கு புதிய அகராதி வரைவிலக்கணத்தை எழுதி, புதிய இலங்கை சரித்திரத்தையும் தனது திசைக்கு ஏற்றபடி எழுதி, பின்னர் குத்தியை சாதாரண அரச உத்தியோகத்தனுமாக்கி விட்டுத்தான் கருத்து ஆரம்பமாகிறது.

1. அண்டிப்பிழைப்பதற்கு புதிய கருத்து: அரசாங்கதில் வேலை செய்வது.

2. புதிய சரித்திரம் : வெள்ளையர் ஆட்சியில் அல்ல தமிழர் அரசாங்க உத்தியோகத்தில் முதன்மை வகித்தது. அது சிங்கள ஆட்சியில் ஆகும்.

3. கோத்தாவால் விவரிக்கப்பட்ட வடக்கின் முடிசூடா மன்னன், பாரம்பரிய தொழில் அபிவிருத்தி அமைச்சர், செய்லாளர் நாயகம்: வடக்கில் அரச உத்தியோகம் பார்த்ததில் அரசில் அண்டிப்பிழைப்பவர்.

இவ்வளவு ததிங்கின தொம்முக்கும் பிறகும் சபேசன் குறிப்பிடும் " குத்தியை அழித்து ஒழித்துவிட வேண்டிய காலம் அரசுக்கு வந்து விட்டது" என்ற செய்தி இந்த கருத்தில் புலம் பெயர் மக்கள் குத்தியை செய்யும் தூற்றலாகவே கொள்ளப்படுகிறது.  இதை அரசு ஏன் செய்கிறது என்றால், புலம் பெயர் மக்கள் தாம் உழைக்கும் உழைப்பெல்லவற்றையும் இலங்கை அரசு உற்பத்திசெய்யும் பொருக்களில் மட்டும் செலவளிப்பத்தால் மிடுக்கேறும் அரசின் நடவடிக்கை என்கிறது கட்டுரை. இது வரை யாழின் பிரபல உறவு அகுதா ஏன் இலங்கை பொருள்களை பூறக்கணிக்க வேண்டும் என்று கூறிய காரணங்களுடன் புதிதாக ஒன்றை இந்த கருத்து சேர்த்துக்கொள்கிறது. ஆதாவது புலம் பெயர் மக்கள் இலங்கை பொருள்களை புறக்கணிக்காவிட்டல் அரசு குத்தியை அழித்தொழிப்பதை நிறுத முடியாமல் போய்விடுமென்று ஏம்பலிக்கிறது இந்த கருத்து. குறைந்த பட்சம், தமிழரை காக்கவாக இல்லாவிட்டாலும், அரசு குத்தியை அழிப்பதில் இருந்து தடுக்கவாவது புலம் பெயர் தமிழ் மக்கள் இலங்கை உற்பத்திகளை புற்க்கணிக்க வேண்டும் என்கிறது இந்தத் கட்டுரை.

இந்த திரியில் மாதிரி வேறு எந்த திரியிலும் மாற்றுக்கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரணிக்கொண்டு தடுமாறியது கிடையாது.  ஒருமாற்றுக் கருத்து தமிழர்களின் காவலர்களாக தம்மை கூறிக்கொள்வோர்தான் புலம் பெயர் தமிழர்களும், கூட்டமைப்பும் என்கிறது. மற்றது புலம் பெயர்  தம்மை தமிழர் தமிழர்களின் காவலர்களாக விவரிக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள், அது கூட்டமைப்பு மட்டும்தான் என்கிறது. இந்த கருத்து கூட்டமைப்புடன் தமிழர் இணைந்து பணம் கொடுக்க மறுக்கிறார்கள் என்கிறது. குத்தியை செயலாளர் நாயகமாக விவரிப்போர் புலம் பெயர் மக்களின் பணம் மீது வைக்கும் கண்ணால் புலம் பெயர் மக்கள் கூட்டமைப்புடன் இணங்கி பணம் மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறும்  தியறியை மற்ற இரண்டு மாற்றுக்கருக்களுக்கும் விளங்கவில்லை போலிருக்கு

அதன் பின்னர் அடுத்த விடயமாக குத்தியின் வருமான விழுக்காட்டை பற்றி கவலை கொள்கிறது கருத்து. புலம் பெயர் தமிழர் எல்லோரும் பாதிக்கபட்ட மக்களுக்கு பணம் அனுப்ப முன்வராததால் டக்கிளசின் வருமானம் விழுந்துவிட்டத்தாக கட்டுரை கவலைப்படுகிறது.

இதன் பின்னர் தமிழ் ஈழத்துக்குக்காக பாடுபடுவதாக காட்டிக்கொள்ளும் கட்டுரை நா.க.அரசுக்கு அறிவுரை சொல்ல வருகிறது.  நா.க.அரசுக்கு பின் தொடை இறைச்சி வேண்டுமானால் வேள்வி வரும் வரை பொறுமை காக்க சொல்கிறது. வேள்வியன்று இன்றைய அரசாங்கம் என்ற கடாவை அறுத்த பின்னர் தமிழ் ஈழம் என்ற பின் தொடை இறைச்சியை நா.க.அரசு பெற்றுக்கொள்வார்கள் என்பதால் இப்போது தமீழ சாசனத்தை வெளிவிட வேண்டாம் எங்கிறது கருத்து.

செஞ்சோற்றுக்கு கடன் கழிக்க இவ்வளவு நாளும் செயலாளர் நாயகத்தையும், மேட்டுக்குடி சிங்கள அரசையும் புகழந்து பேசி விட்டு, தமிழ் சிங்கள உறவுக்காண உதாரணமாக காட்டிவிட்டு இன்று ஒருவரை ஒருவர் கழுத்தறுக்கிறார்கள் என்றவுடன் அழுது புலம்பி என்ன ஆகும்?

செயலாளர் நாயகத்தின் திருக்கூதுக்களுக்கு பயந்து இலங்கைக்கு போக பயந்து புலத்தில் மட்டும் வாழும் தமிழரை அதிகார போதையில் மிதக்கிறார்கள் என்று விவரித்து இந்த அரசியல் இன்னும் எத்தனை நாள் முனால் போகும். இன்று செயலாளர் ந்யகத்திற்கு வந்திருப்பதை கண்டு தன்னும் திருந்த வேண்டாம்? <_<

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தவறுகளையும், புலம்பெயர் தேசியவாதிகளின் தவறான செயற்பாடுகளையும் காரணம் காட்டி துணை இராணுவக் குழுவாகவே தொடர்ந்தும் செயற்படும் ஈபிடிபி அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தமுடியாது.

ஈபிடிபி அமைப்பு அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் இறுக்கமான பிடிக்குள்ளேயே இயங்குகின்றது. ஜனநாயகத்தை கட்சியின் பெயரில் வைத்திருந்தாலும் உட்கட்சி ஜனநாயகமற்ற நிலைமையே கட்சிக்குள் நிலவுகின்றது. அதாவது டக்ளஸ் நினைப்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. கொள்கைகள், கோட்பாடுகள் என்று எதுவும் கிடையாது. தங்கள் இருப்பை உறுதிப்படுத்த என்ன செய்யவேண்டுமோ அதுதான் கொள்கை. அதனால்தான் எவர் அரசாங்கத்தில் இருந்தாலும் அவர்கள் கட்டளைகளை சிரசில் வைத்து நிறைவேற்றினார்கள்/ நிறைவேற்றுகின்றார்கள்.

ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் கூட ஈபிடிபி அமைப்பின் செயற்பாடு இருந்தது. எனினும் கருணா பிளவின் பின்னர் கருணாவும், பிள்ளையானும் கிழக்கு மாகாண துணை இராணுவக் குழுக்களின் தலைவர்களாகச் செயற்பட்டபோது டக்ளஸ் அவர்களின் ஈபிடிபி அமைப்பு அங்கு அரசால் செயலிழக்க வைக்கப்பட்டது.

அத்தோடு ஈபிடிபியின் கட்சிச் சின்னமான வீணையைப் பாவித்து தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் மகிந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான சுயமாக இயங்கமுடியாத சுயமான அரசியல் கொள்கைகள் அற்ற அமைப்பை பெரும்பான்மையான தமிழ்மக்கள் ஒருபோதும் தமது உரிமைகளை வென்றெடுத்துத் தரும் ஓர் அமைப்பு என்று கருதியதில்லை. வெறும் சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பழிவாங்கல்களிற்காகவும் போடப்பட்ட வாக்குகளை வைத்து சில பாராளுமன்ற உறுப்பினர்களையும், உள்ளூராட்சித் தேர்தல்களில் சில உறுப்பினர்களையும், யாழ் மாநகர சபையையும் வைத்துக்கொண்டிருப்பதால் ஈபிடிபி தமிழர்களினால் விரும்பப்படும் ஒரு அரசியல் கட்சி என்று சொல்லமுடியாது.

மகிந்த அரசாங்கம் சொல்லுவதை அப்படியே ஏற்று நடக்கும் ஈபிடிபியின் நடவடிக்கைகள், ஒரு ஒட்டுக்குழு எப்படிச் செயற்படவேண்டும் என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் என்பது மிகவும் தெளிவானது. அதற்குப் பின்னரும் ஈபிடிபியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நன்மை புரிவன என்று கருதுவோர் ஒன்றில் புலிகளின் மீது வெறுப்பை உமிழ்வோர் அல்லது புலிகளின் தோல்வியின் பின்னர் விரக்தி நிலைக்கு சென்று குழப்ப நிலையில் இருப்போர்.

புலிகளின் மீது வெறுப்பை உமிழ்பவர்களுக்கு தமிழ் மக்களின் மீது அக்கறை இருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு. விரக்தி நிலைக்கு சென்று குழம்பியிருப்பவர்கள் குறைந்த பட்சம் தமிழர்களின் அரசியலில் உள்ள சரணாகதி அரசியலும், இணக்க அரசியலும் தமிழர்களுக்கு எதுவித நீண்டகாலத் தீர்வையும் பெற்றுத் தராது என்ற தெளிவையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் குறித்து முடிவெடுக்கவேண்டியது தாயகத்தில் உள்ள மக்கள். அவர் நல்லது செய்கின்றார் கெட்டது செய்கின்றார் அவரை தேர்தலில் ஆதரிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும் நூறுவீத உரிமை தாயகத்தில் உள்ள மக்களின் கைகளில் உள்ளது.

இங்கே இருந்து டக்களசை ஒட்டுக்குழு என்று திட்டித் தீர்ப்பதன் மூலம் தாங்கள் தேசீயவாதிகள் தாங்கள் தான் தேசீயத்தின் தர்மகத்தாக்கள் என்ற போதையில் ஒரு கூட்டம் அலைகின்றது. அதற்கான ஒரு வீத தகுதி கூட தங்களுக்கு இல்லை என்பதை இந்தக் கூட்டம் உணர மறுக்கின்றது.

அங்க மணலை கொள்ளையடித்தான் இங்க காச புடுங்கினான் என்று ஏன் புலத்தில் இருந்து இவர்கள் பினாத்துகின்றார்கள்? ஏன் இவர்கள் போருக்கு என்று சேர்த்த காசை கொள்ளையடிக்கவில்லையா? இல்லை போரால் அவலப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தார்களா? இல்லை இங்க ஒற்றுமையாய் ஒரு முன்னெடுப்பை நடத்தினார்களா? ஆகக் குறைந்தது ஒற்றுமையாய் ஒரு நினைவுதினம் கொண்டாடினார்களா? என்ன அடிப்படைத்தகுதியில் இவர்கள் டக்ளசை திட்டுகின்றார்கள் என்று புரியவில்லை. டக்ளசை விட பல பத்துமடங்கு கேவலமான நிலையில் தாம் இருப்பதை மிகச் சுலபமாக மறந்துவிட்டு டக்ளசை திட்டித் தீர்த்தால் தாம் உன்னத நிலையில் இருப்பதாக ஒரு கற்பனை உலகத்தில் இருக்கின்றார்கள்.

டக்ளசை ஆதரிப்பது எதிர்ப்பதற்கான நூறுவீத உரிமையும் தாயகமக்களிடம் உள்ளது. டக்களசை விமர்சிப்பதற்கான ஒரு வீத தகுதி கூட புலத்து தேசீயவாதிகளுக்கு அடிப்படையில் கிடையாது. டக்களசை விட பல பத்துமடங்கு கேவலமான நிலைக்கு புலத்து தேசீயவாதிகள் சென்று பல வருடங்களாகிவிட்டது. அந்தவகையில் தாயக மக்கள் டகளசை ஒரு மடங்கு வெறுக்கின்றார்கள் என்றால் இவர்களை பத்துமடங்கு வெறுக்கின்றார்கள் என்று பொருள். தாயகத்தில் உள்ள தமிழருக்கான அரசியல் உரிமைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தாயக மக்களுக்கு மட்டுமே உண்டு. ஒரு துளி அதிகாரமும் புலத்து தேசீயவாதிகளுக்கு கிடையாது. அவர்கள் முடிவுக்கு வேண்டுமானால் ஆதரவு வழங்கலாம்.

மிகவும் உண்மையான வரிகள் ..............

சில மாதங்கள் முன்பு த தே கூ வை சேர்ந்த சில உறுப்பினர்கள். பலாலி கட்டுவன் காங்கேசன்துறை பகுதியில் மக்கள் குடியமர்த்த பட வேண்டும் என்று தெல்லிப்பளை பகுதில் ஒரு ஆர்ப்பாடத்தை செய்திருந்தார்கள்.
அவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டிய ஒரு கருத்து இதுவாகும்.
 
பலாலி பகுதியில் குடியமர்த்துவது பற்றி ஆர்ப்பாட்டம் செய்வதென்றால். அந்த பகுதியில் யார் இப்போது இருக்கிறார்களோ அவர்கள்தான் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும். அவிடங்களை விட்டு பல காலம் முன்பே வெளியேறியவர்கள் வேறு இடங்களில் சொவ்காரியமாக வாழ்ந்துகொண்டு எப்படி ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்?
அங்கிருக்கும் பாம்புகள் பல்லிகள் மற்றைய ஊர்வன வேண்டுமானால் ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்யலாம்.
 
அங்கிருந்து வெளியேறியவர்களுக்கு அந்த அருகதை இல்லை.   

தாயகத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றும்படி ஆர்பாட்டம் செய்கின்றார்கள். அது அவர்கள் முடிவு. அதற்கேற்ப இங்கே ஆர்பாட்டத்தை செய்யுங்கள் என்பதே கருத்து. அதற்குப் பெயர்தான் அவர்களின் முடிவுக்கு இங்கிருந்து ஆதரவு. இதே போல் வதைமுகாமில் இருந்து விடுதலை செய்யும்படியான ஆர்ப்பாட்டம் நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம். அதற்கு இங்கிருந்து ஆதரவு. அதிகாரத்துக்கும் ஆதரவுக்கும் வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்வது என்ன? தமிழீழ அரசியல் சாசனம் வரைவோம் வாரீர். யாகம் நடத்துவோம் வாரீர். அமர்வுகள் நடத்துவோம் வாரீர். இதைத்தானே இங்கே முண்டியடிக்கின்றீர்கள் !! அதிகாரபோதை. தாயக மக்கள் எழுந்து நிற்பதற்கு ஆதரவை கொடுங்கள் என்றால் நீங்களோ தாயகத்தை ஆழும் அதிகாரக் கனவில் மிதக்கின்றீர்கள். இது ஒரு போதை. அதற்கு ஊறுகாயாகவே டக்ளசையும் கருணாவையும் தொட்டுக்கொள்கின்றீர்கள்.

பள்ளிவாயல்களை உடைத்த போது நாடுகடந்த அரசு நடத்திய பிராதனைகளில் எத்தனை பேர் பங்குபற்றினார்களோ. அல்லது எத்தனை பேர் அதை ஆதரித்து  அந்த திரியில் எழுதியிருக்கிறார்களோ? எத்தனை பேர் ஆர்ப்பாட்டங்களில் கூட்டமைப்பு தாக்கப்பட்ட போது அந்த திரிகளில் கருத்து எழுதினார்களோ. எத்தனை பேர் அந்த மனுக்களில் கையெழுத்திட்டார்களோ. குத்தி விட்ட களவுகளை மூடிமறைக்க பட்டத பாடு படுகிறார்கள்.  அதை அரசு செய்வதாக இருக்கலாம் என்று கூட படு பொய் எழுதுகிறார்கள். 

உதயனை எதிர்த்து பொதுமக்கள், பள்ளிகள் ஆரப்பாட்டம் செய்வதாக வந்து எழுதுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றும்படி ஆர்பாட்டம் செய்கின்றார்கள். அது அவர்கள் முடிவு. அதற்கேற்ப இங்கே ஆர்பாட்டத்தை செய்யுங்கள் என்பதே கருத்து. அதற்குப் பெயர்தான் அவர்களின் முடிவுக்கு இங்கிருந்து ஆதரவு. இதே போல் வதைமுகாமில் இருந்து விடுதலை செய்யும்படியான ஆர்ப்பாட்டம் நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம். அதற்கு இங்கிருந்து ஆதரவு. அதிகாரத்துக்கும் ஆதரவுக்கும் வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்வது என்ன? தமிழீழ அரசியல் சாசனம் வரைவோம் வாரீர். யாகம் நடத்துவோம் வாரீர். அமர்வுகள் நடத்துவோம் வாரீர். இதைத்தானே இங்கே முண்டியடிக்கின்றீர்கள் !! அதிகாரபோதை. தாயக மக்கள் எழுந்து நிற்பதற்கு ஆதரவை கொடுங்கள் என்றால் நீங்களோ தாயகத்தை ஆழும் அதிகாரக் கனவில் மிதக்கின்றீர்கள். இது ஒரு போதை. அதற்கு ஊறுகாயாகவே டக்ளசையும் கருணாவையும் தொட்டுக்கொள்கின்றீர்கள்.

சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருப்பவர்கள்தான் இங்கும் இருக்கிறார்கள் அங்கும் இருக்கிறார்கள்.

இவருடைய  பிரச்சனையும் ஒன்றுதான். எமது நிலத்தில் நாமாக எழுந்து நின்று வாழ வேண்டும்.
 
தூரம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
தவிர அங்கு இருப்பவர்கள் இராணுவ கரங்களுக்குள் இறுகி இருக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
 
அதை செய்யவில்லை இதை செய்யவில்லை.................. விளங்குகின்றது !
நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?
 
உங்களை போலவே அடுத்தவனும் தனக்கு பிடித்ததை செய்கிறான். நீங்கள் மட்டும் உங்களுக்கு பிடித்ததை மட்டும் செய்ய வேண்டும் அடுத்தவன்  உங்களுக்கு பிடித்த மாதிரி செய்ய வேண்டுமா ?? 
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்த நிலையில் இல்லாத புலி ஆதரவாளர்களும் கூட்டமைப்பினருமே இவ்வாறு புலம்பி திரிகிறார்கள் இவர்களின் புலம்பல்கள் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது வரும் வடமாகானசபை தேர்தலில் தெரிந்துவிடும். கூட்டமைப்பினர் எதை சொல்லி வாக்கு கேட்கபோகின்றனர் என்று தான் தெரியவில்லை :lol:  :lol: . ஒருவேளை எங்களுக்கு வாக்கு போட்டால் அரசாங்கத்துடன் இணைந்து வடமாகனத்தை கட்டியெழுப்புவோம் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

புலிகள் இருந்தபோதும் அங்கு கருத்து சுதந்திரம் இருந்ததில்லை, யாரும் ஏதும் கூறினால் அவர்களுக்கு துரோகி என்று முத்திரை குத்தி மண்டையில் போட்டதுதான் மிச்சம். மக்களுடைய அபிப்பிராயங்களை கேட்டுநடந்திருந்தால் இன்று புலிகள் இருந்திருக்கக்கூடும். புலிகளுக்கு எப்பொழுதும் தமிழ்மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்ததில்லை ஆனால் மக்கள் மௌனமாக இருந்தார்கள் காரணம் உயிர்பயம் அப்படி இருந்ததனால் புலிகளுக்கு ஒட்டுமொத்த ஆதரவு இருந்தது என்று கூறுவது மடைத்தனம். பத்திரிகைகள் அனைத்தும் புலி புகழ் பாடவேண்டும் அல்லது பத்திரிக்கை நடத்தமுடியாது. அந்த காலகட்டத்தில் இருந்து பழகிய சில பத்திரிகைகள் அதில் இருந்து இன்னும் வெளிவரமுடியாமல் இருப்பது வேடிக்கை.

ஆமாம் புலி ஒன்றுமே செய்யவில்லை மக்கள் தான் மடைத்தனமாக புலிகளின் பின்பு போனார்கள். ஒருவேளை அவலத்தை தந்தவர்களுக்கு அவலத்தை குடுப்பார்கள் என்று நினைத்தார்கள் போலும் :icon_mrgreen:  ஆனால் அவலத்தை தந்தவர்களிடம் இருந்து காணாது என்று கேட்டு பெற்றுக்கொண்டார்கள் மக்களையும் அழித்தார்கள் அதுதான் வேதனை. கிளிநொச்சி பரந்தன் ஆனையிறவு முல்லைத்தீவு இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை புலிகள் தம்மை காப்பார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருந்ததா ? மிக நல்ல நகைச்சுவை.  காவலர்கள் என்றால் தமிழில் என்ன அர்த்தம் என்று பார்த்துவிட்டு வாருங்கள், புலிகள் மக்களை எங்கே பாதுகாத்தார்கள்? பணம் புடுங்குவதர்க்கும் தாம் ஒளிந்து கொள்வதற்கும் மக்களின் பெயரால் அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை பெறுவதற்குமே மக்களை பயன்படுத்தினார்கள். வாழவேண்டிய இளம் ஆண்கள் பெண்கள் எல்லாம் அனுபவமில்லாத காலங்களிலே பலியிடப்பட்டார்கள்.  வீட்டில் இருந்த இளம் ஆண்களை பெண்களை எல்லாம் வலுக்கட்டாயமாக பிடித்து சென்று பலியிட்டார்கள். எத்தனை குடும்பமா அவர்களின் அன்பான உறவுகளை இழந்து வாழவழி தெரியாமல் நடுத்தெருவில் நிற்கின்றது இவை எல்லாம் நீங்கள் கூறும் புலிகள் தந்த அவலமே.  அவலத்தை தந்தவனுக்கு திருப்பி தருவதற்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் 

.புலிகளுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்ததில்லையா?? எப்போது கண்டுபிடித்தீர்கள்? சிங்க்ள அரசாங்கமே இப்படியான ஒரு கண்டுபிடிப்பை இதுவரை செய்யவில்லை என்று நினைக்கிறேன்ணேனென்றால் தமிழ்மக்கள் புலிகளுடந்தான் இருக்கிறார்கள் என்கிற காரணத்தினாலேயே அவர்களைக் கொன்றுதள்ளியது சிங்கள அரசு, அப்படியிருக்க புலிகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதுமே இருந்ததில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்போது யாருக்குத்தான் மக்களின் ஆதரவு இருந்தது ? டக்கிளசுக்கா??/ என்னை வைத்துக் காமெடி கீமெடி ஒன்றும் பண்ணவில்லையே??? 11 வாக்குகள் மட்டுமே பெற்று பாராளும்ன்ற உறுப்பினர் ஆனவர் என்கிற உலக சாதனையைப் படைத்தவ்ருக்குத்தான் எத்தனை மக்கள் ஆதரவு?? புல்லரிக்குது போங்கள்.

சரி, புலிகளுக்குப் பயந்து மக்கள் பேசாமலிருந்தார்களா?? இது எப்போது நடந்தது ?? இல்லாவிட்டால் அவர்கள் அப்படியே வந்து டக்கிளஸைக் கடவுளாக்கி அபிஷேகம் செய்துவைத்திருப்பார்கள் என்று கூறுகிறீர்கள்??  எல்லாம் புலிகளால் வந்த வினை !!!!!!!

புலிகள் மக்களை ஒருபோதும் பாதுக்காக்கவில்லை. டக்கிளஸ் மட்டுமே அதைச் செய்தார், எப்படியென்று கேட்கிறீர்களா?? சிங்கள மனிதாபிமான இராணுவத்துடன் சேர்ந்து அவர்களைப் பாதுகாத்து வருகிறார். 

புலிகளால் சேர்க்கப்பட்டுப் போய்க் கொல்லப்பட்டவர்கள் என்று நீங்கள் அழுவது தெரிகிறது, ஆனால் இதுவரை உங்களாலும், நீங்கள் முண்டுகொடுக்கும் சிங்கள அரசாலும் கொல்லப்பட்ட ஒரு தமிழனுக்காவது கவலைப்பட்டதுண்டா, அல்லது அப்படி எந்தத் தமிழனுமே சிங்களவர்களாலும், துணை ராணுவக்குழுவினாலும் கொல்லப்படவில்லை என்கிறீர்களா??

. உங்களின் நிலையை கிருபன் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். முடிந்தால் வாசித்துப்போட்டு மூடிக்கொண்டிருங்கள். 

:lol: இவ்வாறான சுயமாக இயங்கமுடியாத சுயமான அரசியல் கொள்கைகள் அற்ற அமைப்பை பெரும்பான்மையான தமிழ்மக்கள் ஒருபோதும் தமது உரிமைகளை வென்றெடுத்துத் தரும் ஓர் அமைப்பு என்று கருதியதில்லை. வெறும் சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பழிவாங்கல்களிற்காகவும் போடப்பட்ட வாக்குகளை வைத்து சில பாராளுமன்ற உறுப்பினர்களையும், உள்ளூராட்சித் தேர்தல்களில் சில உறுப்பினர்களையும், யாழ் மாநகர சபையையும் வைத்துக்கொண்டிருப்பதால் ஈபிடிபி தமிழர்களினால் விரும்பப்படும் ஒரு அரசியல் கட்சி என்று சொல்லமுடியாது.

மகிந்த அரசாங்கம் சொல்லுவதை அப்படியே ஏற்று நடக்கும் ஈபிடிபியின் நடவடிக்கைகள், ஒரு ஒட்டுக்குழு எப்படிச் செயற்படவேண்டும் என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் என்பது மிகவும் தெளிவானது. அதற்குப் பின்னரும் ஈபிடிபியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நன்மை புரிவன என்று கருதுவோர் ஒன்றில் புலிகளின் மீது வெறுப்பை உமிழ்வோர் அல்லது புலிகளின் தோல்வியின் பின்னர் விரக்தி நிலைக்கு சென்று குழப்ப நிலையில் இருப்போர்.

புலிகளின் மீது வெறுப்பை உமிழ்பவர்களுக்கு தமிழ் மக்களின் மீது அக்கறை இருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு. விரக்தி நிலைக்கு சென்று குழம்பியிருப்பவர்கள் குறைந்த பட்சம் தமிழர்களின் அரசியலில் உள்ள சரணாகதி அரசியலும், இணக்க அரசியலும் தமிழர்களுக்கு எதுவித நீண்டகாலத் தீர்வையும் பெற்றுத் தராது என்ற தெளிவையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.

Edited by ragunathan

.புலிகளுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்ததில்லையா?? எப்போது கண்டுபிடித்தீர்கள்? சிங்க்ள அரசாங்கமே இப்படியான ஒரு கண்டுபிடிப்பை இதுவரை செய்யவில்லை என்று நினைக்கிறேன்ணேனென்றால் தமிழ்மக்கள் புலிகளுடந்தான் இருக்கிறார்கள் என்கிற காரணத்தினாலேயே அவர்களைக் கொன்றுதள்ளியது சிங்கள அரசு, அப்படியிருக்க புலிகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதுமே இருந்ததில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்போது யாருக்குத்தான் மக்களின் ஆதரவு இருந்தது ? டக்கிளசுக்கா??/ என்னை வைத்துக் காமெடி கீமெடி ஒன்றும் பண்ணவில்லையே??? 11 வாக்குகள் மட்டுமே பெற்று பாராளும்ன்ற உறுப்பினர் ஆனவர் என்கிற உலக சாதனையைப் படைத்தவ்ருக்குத்தான் எத்தனை மக்கள் ஆதரவு?? புல்லரிக்குது போங்கள்.

சரி, புலிகளுக்குப் பயந்து மக்கள் பேசாமலிருந்தார்களா?? இது எப்போது நடந்தது ?? இல்லாவிட்டால் அவர்கள் அப்படியே வந்து டக்கிளஸைக் கடவுளாக்கி அபிஷேகம் செய்துவைத்திருப்பார்கள் என்று கூறுகிறீர்கள்??  எல்லாம் புலிகளால் வந்த வினை !!!!!!!

புலிகள் மக்களை ஒருபோதும் பாதுக்காக்கவில்லை. டக்கிளஸ் மட்டுமே அதைச் செய்தார், எப்படியென்று கேட்கிறீர்களா?? சிங்கள மனிதாபிமான இராணுவத்துடன் சேர்ந்து அவர்களைப் பாதுகாத்து வருகிறார். 

புலிகளால் சேர்க்கப்பட்டுப் போய்க் கொல்லப்பட்டவர்கள் என்று நீங்கள் அழுவது தெரிகிறது, ஆனால் இதுவரை உங்களாலும், நீங்கள் முண்டுகொடுக்கும் சிங்கள அரசாலும் கொல்லப்பட்ட ஒரு தமிழனுக்காவது கவலைப்பட்டதுண்டா, அல்லது அப்படி எந்தத் தமிழனுமே சிங்களவர்களாலும், துணை ராணுவக்குழுவினாலும் கொல்லப்படவில்லை என்கிறீர்களா??

புலிகளுக்கு தமிழ் மக்களின் ஒருபகுதியினரின் ஆதரவே இருந்தது (உங்களை போன்ற ஆக்களின்) தற்போது தமிழ் கட்சிகளுக்கு இருக்கும் ஆதரவை போன்றது. ஒட்டுமொத்த தமிழர்களும் புலிகளுக்கு ஆதரவை வழங்கவில்லை, அப்படி வழங்கியிருந்தால்

1) புலிகளின் பிரச்சார பிரிவுக்கு வேலையில்லாமல் போயிருக்கும்

2) போராடுவதற்கு பல்லாயிரக்கணக்கான இளையோர் கிடைத்திருப்பார் 

3) மக்களிடம் பணம் பறிக்கவேண்டிய தேவை இருந்திருக்காது மக்களாக முன்வந்து பணத்தை உதவிகளை செய்திருப்பார்கள்

4) இராணுவம் யாழ்ப்பாணத்தை பிடிக்கும்போது புலிகள் கூறியது போல் அனைத்து மக்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டும்.

மேற்கூறப்பட்ட விடயங்களில் இருந்தே புலிகளுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவு இருந்ததா என்று தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும், அதுவும் இல்லை புலிகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரவு கொடுத்தார்கள் எனின் விளக்ககுறைபாடு உள்ளதாகவே எண்ணவேண்டும்.

புலிகள் எப்பொழுதாவது மக்களின் கருத்துக்களுக்கு வாய்ப்பளித்தார்களா ? இல்லை இது அனைவருக்கும் தெரியும். இந்த மண்டையில் போடுறது என்ற பதம் புலிகளின் காலத்தில் எவ்வளவு பிரபல்யமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

உங்களை போன்றவர்கள் எத்தனை தமிழன் இறந்தாலும் கவலைப்படமாட்டீர்கள் ஆனால் புலிகள் என்றால் துள்ளிகுதிப்பீர்கள். வன்னி மக்கள் இன்று மிகவும் நொந்த நிலையில் இருக்கின்றார்கள் இவர்கள் பட்ட துன்பத்தின் 10% கூட யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழன் படவில்லை ஆனால் இன்று அவனே அவனது வன்னி சகோதரர்களை ஒரு மாற்றினம் போல் கேவலமான நிலையில் பார்க்கின்றான். ஒரு குடும்பத்துக்கு குடும்பத்தலைவன் அல்லது ஆண்மகன் அவசியம், எமது சமூகத்தில் ஆண்களே பெரும்பாலும் பொருளாதரமீட்டும் வேலையை செய்கின்றனர் அவர்களை இழந்த குடும்பங்கள் எப்படி வாழ்வது? அனைத்து வன்னி மக்களின் பொருளாதரமீட்டும் வழிகளும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்படியான சூழலில் இருக்கும் வன்னி மக்களுக்கு உதவிகளை செய்வதைவிடுத்து அவர்களின் வாழ்க்கைமுறையில் குறைபிடித்து அவற்றை செய்தியாக்கி பிழைப்புநடத்துகிறது  ஒரு ஈன கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் அறிக்கை நேற்றுத்தான் வந்தது. அதற்குள் அந்த அமைப்பின் தலைவர், செயலாளர், மற்றும் பல உறுப்பினர்களை இன்று தன்மானச் சிங்கம், தமிழினத்தின் காவலன் டக்கிளஸ் நாயகத்தின் வேட்டை நாய்க்கும்பல் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது. இந்த லட்சணத்தில் அவர் தமிழ் மக்களின் தன்னிகரற்ற கவலன் என்று ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு உள்நுளைந்திருக்கிறார் ஒருவர்.

செய்தியைப் பாருங்கள்,

உந்துருளிகளில் வந்திறங்கிய சுமார் 12 பேர்கொண்ட துணை ராணுவக் குழு உறுப்பினர்கள் புதிதாக அமைக்கப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு எனும் அமைப்பின் தலைவரான 48 வயது திரு. வி. சகாதேவன் மற்றும் காசாளர் திரு. புவிலன் புஷ்பராஜா ஆகியோரை நேற்று திங்கட்கிழமை பிறபகல் 2:30 மணியளவில் யாழ் செயலகத்தின் நுளைவாயிலில் வைத்துக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அரசாங்கத்தின் அமைச்சரும், ஈ.பி.டி.பி துணை ராணுவக் குழுவின் தலைவருமான டக்கிளஸ் தேவானத்தாவிற்கெதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தார்கள் என்பதற்காக இவர்கள் இருவரையும் அமைச்சரின் ஆயுதக் குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியிருக்கிறார்கள். 

தாக்குதல் நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் அப்பகுதியில் நின்றிருந்த துணை ராணுவக் குழுத் தலைவர், தனக்கெதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தவரகளைக் கண்டதாகவும், தனக்கு பாதுகாப்பிற்கு வந்திருந்த துணை ராணுவக்குழு உறுப்பினர்களை அமைச்சர் ஏவிவிட்டு அந்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலைல் படுகாயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு தமிழ் மக்களின் ஒருபகுதியினரின் ஆதரவே இருந்தது (உங்களை போன்ற ஆக்களின்) தற்போது தமிழ் கட்சிகளுக்கு இருக்கும் ஆதரவை போன்றது. ஒட்டுமொத்த தமிழர்களும் புலிகளுக்கு ஆதரவை வழங்கவில்லை, அப்படி வழங்கியிருந்தால்

1) புலிகளின் பிரச்சார பிரிவுக்கு வேலையில்லாமல் போயிருக்கும்

2) போராடுவதற்கு பல்லாயிரக்கணக்கான இளையோர் கிடைத்திருப்பார் 

3) மக்களிடம் பணம் பறிக்கவேண்டிய தேவை இருந்திருக்காது மக்களாக முன்வந்து பணத்தை உதவிகளை செய்திருப்பார்கள்

4) இராணுவம் யாழ்ப்பாணத்தை பிடிக்கும்போது புலிகள் கூறியது போல் அனைத்து மக்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டும்.

மேற்கூறப்பட்ட விடயங்களில் இருந்தே புலிகளுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவு இருந்ததா என்று தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும், அதுவும் இல்லை புலிகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரவு கொடுத்தார்கள் எனின் விளக்ககுறைபாடு உள்ளதாகவே எண்ணவேண்டும்.

புலிகள் எப்பொழுதாவது மக்களின் கருத்துக்களுக்கு வாய்ப்பளித்தார்களா ? இல்லை இது அனைவருக்கும் தெரியும். இந்த மண்டையில் போடுறது என்ற பதம் புலிகளின் காலத்தில் எவ்வளவு பிரபல்யமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

உங்களை போன்றவர்கள் எத்தனை தமிழன் இறந்தாலும் கவலைப்படமாட்டீர்கள் ஆனால் புலிகள் என்றால் துள்ளிகுதிப்பீர்கள். வன்னி மக்கள் இன்று மிகவும் நொந்த நிலையில் இருக்கின்றார்கள் இவர்கள் பட்ட துன்பத்தின் 10% கூட யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழன் படவில்லை ஆனால் இன்று அவனே அவனது வன்னி சகோதரர்களை ஒரு மாற்றினம் போல் கேவலமான நிலையில் பார்க்கின்றான். ஒரு குடும்பத்துக்கு குடும்பத்தலைவன் அல்லது ஆண்மகன் அவசியம், எமது சமூகத்தில் ஆண்களே பெரும்பாலும் பொருளாதரமீட்டும் வேலையை செய்கின்றனர் அவர்களை இழந்த குடும்பங்கள் எப்படி வாழ்வது? அனைத்து வன்னி மக்களின் பொருளாதரமீட்டும் வழிகளும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்படியான சூழலில் இருக்கும் வன்னி மக்களுக்கு உதவிகளை செய்வதைவிடுத்து அவர்களின் வாழ்க்கைமுறையில் குறைபிடித்து அவற்றை செய்தியாக்கி பிழைப்புநடத்துகிறது  ஒரு ஈன கூட்டம்.

புலிகளுக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்ததா?? ஐய்யோ எனக்குத் தெரியாதே!!நான் தமிழர்கள் எல்லோரும் துணை ராணுவக்குழு ஒன்றிற்குத்தான் ஆதரவை வழங்கினார்கள் என்றல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறேன்.  ஆமாம் புலிகள் வெறும் 5 - 10 பேரை வைத்துக்கொண்டுதான் போராடினார்கள். அவர்களுக்காவது ஆயிரக்கணக்கில் போராளிகள் கிடைப்பதாவது. அந்த ஆயிரக்கணக்கானணைளைஞர்கள் எல்லாம் எமது செயலாளர் நாயகத்தின் செயற்திறனைக் கண்டு எந்தவித பிரச்சாரப் பிரிவும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான அளவில் அல்லவா எம்முடன் வந்து சேர்ந்து கொண்டார்கள். அப்படியிருக்க அவர்கள் புலிகளில் சேர்வதெப்படி ??

ஆமாம், நீங்கள் சொல்வது சரி. தமிழ்மக்கள் இருவர் கூட புலிகளுக்கு பனத்தை கொடுக்கவில்லை. புலிகள் தமக்குத்தேவையான பனத்தையெல்லாம் மக்களிடம்தான் கொள்ளையடித்தார்கள். ஆனால் தமிழ்மக்களோ தமது காவல் தெய்வமான டக்கிளஸுக்கு தங்களிடம் இருந்த அனைத்தையுமல்லவா தாரை வார்த்துக் கொடுத்தார்கள். இதில மணல் கொண்டு எல்லாமுமல்லவா கொடையாக வழங்கப்பட்டது??

யாழ்ப்பானத்தை ராணுவம் பிடிக்கும்போது எந்தத் தமிழனும் புலிகளிடம் போகவில்லையே?? ஆனால் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து போன 5 லட்சம் சனமும் புலிகளின் பிரச்சாரப் பிரிவு கட்டிய கட்டுக்கதை.

புலிகள் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதேயில்லை. ஆனால் தானைத் தலைவர் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்துத்தான் அடிக்கடி பத்திரிக்கை காரியாலயங்களை எரிப்பார் , பத்திரிக்கையாசிரியர்களை மண்டையில் போடுவார். அல்லது நேற்று நடந்தது போல மக்கள் அமைப்புகளின் தலைவர்கலை தனது துணை ராணுவக்குழு வேட்டை நாய்களை வைத்து நொறுக்குவார். இதெல்லாம் மக்களின் கருத்திற்கு நாய்(யகம்) மதிப்புக் கொடுத்து செய்யும் வேலை கண்டியளோ??

மணடையில் போடுறதை முதன் முதலில பாவிச்சது உங்கட செயலாலர் நாயின்ர சொச்சங்கலான மண்டையன் குழு கன்டியளோ???? அவையக் கேட்டியளெண்டால் விவரம் தெரியும்.

உங்களுக்கு வன்னிச் சனத்தின்மேல சரியான அக்கறை கண்டியளோ?? அதுதான் 2009 இல 4 லட்சம் சனத்தை வளைச்சு வைச்சு கெமிக்கெல் வெப்பனும், மல்ரிபரலும் அடிசிச்சுக்கொண்டு வெறு 70,000 பேர்மட்டும்தான் இருக்கினம் என்௶உ உங்கட தானைத் தலைவர் செயலாளர் நாய் பாரளுமன்றத்திலும், பத்திரிக்கையிலும் அறிக்கை விட்டவர். அதுமட்டுமில்லாமல், இப்பகூட அவர் வன்னிசனத்தில் இரக்கப்பட்டுத்தான் புருஷன் இல்லாத பெட்டையலைக் கடத்திக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில உல்லாச விடுதி நடத்துறார். ஆனால் சனத்துக்கு உதெல்லாம் எங்க தெரியப்போகுது ??? எதுக்கெடுத்தாலும் அவரைக் குறை சொல்லுறதே பிழைப்பாப் போச்சு !!!

சிங்களப் பயங்கரவாதத்துக்கு எனது மக்களைக் கூட்டிக் கொடுக்கும் உனக்கே இவ்வளவு பேச முடியுமென்றால், அம்மக்களின் விடிவுக்காக உழைக்கும் எனக்கு அதை விடப் பேச முடியும் .

ரகுநாதன்

நான் இங்கு கூறவருவது, புலிகள், டக்கிலஸ் மற்றும் ஏனைய தமிழ் குழுக்கள் அனைவருமே தமக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களை தாக்கியிருக்கிறார்கள் கொன்றிருக்கிறார்கள். இங்கு பிரச்சனை அதுவல்ல. இங்கு நான் முதலில் கருத்து வைத்ததன் நோக்கமே புலிகள் நல்லவர் டக்கிலஸ் கெட்டவர் அல்லது டக்கிலஸ் நல்லவர் புலிகள் கெட்டவர் என்பது அல்ல. நீங்கள் புலிகள் மட்டும்தான் நல்லவர் டக்கிலஸ் கெட்டவர் என்று கூறியதாலேயே பதில் கருத்து எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

நான் கேட்கும் கேள்வி, கூட்டமைப்பினர் இதுவரை தமிழ் மக்களுக்காக உருப்படியாக என்ன செய்துள்ளனர் அல்லது செய்யமுடியாத ? வெறும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இத்தகைய ஆட்சியில் தமிழ்மக்களுக்கு எந்த நன்மையையும் வாங்கித்தந்துவிடமுடியாது மாறாக அவர்களுக்கு மேலும் இன்னல்களையே வாங்கி கொடுக்கும். தற்போதைய நிலையில் எதிர்த்து எதுவும் செய்யமுடியாது. எதிர்ப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய சொற்ப சலுகைகளும் கிடைக்காமல் போகும் அதேநேரம் அவர்களுடன் இணைவது மாதிரி இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக போராடலாம்.  எமது மக்களுக்காக எந்த நாடும் குரல் கொடுக்கபோவதும் இல்லை  போராடப்போவதும் இல்லை. அல்லது எந்த நாட்டையும் எதிர்பார்த்து இருக்கமுடியாது. நித்தம் நித்தம் மக்கள் வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு மதம் கொள்கை வேறுபாடுகளை கடந்து வாழ்க்கை அளிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எதில் ஆர்வமில்லையோ அதிலே தான் எனக்கு ஆர்வம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில படுகொலை.. மானிப்பாயில கோயில்ல கொள்ளை.. இப்ப ஊரையே சுருட்டிக் கொண்டிருக்கிற இந்த ஒட்டுக்குழு கொலைகாரன்.. கொள்ளைக்காரன்.. எல்லாம் இப்போ யாழின் பேசு பொருளாகிட்டார்..! ஏன் தமிழ் மக்களின் சன நாய் அக அரசியல்வாதி வேற..! அவருக்கு விளக்கம் கொடுக்க ஒரு கூட்டம்..! அதோட புலிகள் செய்யாததையோ இவர் செய்யுறார் என்று  ஒரு நியாயம் வேற. புலிகளே இவரட்ட இருந்து தான் பலதைக் கற்றது.. என்பது அவர்களுக்குத் தெரியவில்லைப் போலும்..!

முதலில இந்த ஒட்டுக்குழு தலைவரின் அடியாட்கள்.. தமிழ் மக்களுக்கு செய்யுறதாச் சொன்னவை என்ன செய்யினம் என்று கேள்வி கேட்டிக் கொண்டு திரியாமல்.. சிங்களவனோட ஒட்டி இருந்து கொண்டு சுருட்டல் ஆயுத அரசியல் செய்யும் தங்கட தலீவர் "வடக்கிக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" என்று சொல்லித் திரிஞ்சதிற்கு என்னாச்சின்னு ஒரு விளக்கத்தைக் கொடுத்தால் பறுவாயில்லை..! :lol:

இதுகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்ய வெளிக்கிட்டுத்தான் தமிழ் மக்கள் இன்று இந்த அவல நிலையில் இருக்கினம். இன்னும் இதுகளின் றோதனை மட்டும் தீருறதா இல்லை. முதலில இதுகள போட்டு முடிச்சிருந்தா.. தமிழீழம் எப்பவோ கிடைச்சிருக்கும்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

. இன்னும் இதுகளின் றோதனை மட்டும் தீருறதா இல்லை. முதலில இதுகள போட்டு முடிச்சிருந்தா.. தமிழீழம் எப்பவோ கிடைச்சிருக்கும்..! :):icon_idea:

ஐயோ அது பாசிசம், ஐயோ அது எகாதிபத்தியம் ஐயோ அது முதலாலித்துவம் ஐயோ அது மக்கள் விரோத செயல் ஐயோ அது அந்த இசம்,இந்த இசம்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயகத்தின் பொருளாளர் மீது தாக்குதல்

ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்து கொண்டிருந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயகத்தின் பொருளாளர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்னால் நடாத்தப்பட்ட இத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதோடு தாக்குதலாளிகள் மோட்டார் சைக்கிள்களுடன் பத்திரமாகத் தப்பியும் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இதில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பினைச் சேர்ந்த கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த எம்.பி.புவிலன் ( வயது 26 ) என்ற நபரே காயமடைந்தவராவார்.

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் உள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் நின்று ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக போரரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் என்ற தமது அமைப்பின் பெயரால் டக்ளஸ் தேவனந்தாவை விரட்டியடிப்போம் என்னும் தலைப்பிலான துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்து கொண்டிருந்த போதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது; நான்கு மோட்டார் சைக்கிள்களில்; தலா மூன்று பேர் வீதம் கொட்டான்கள் பொல்லுகளுடன் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

இதன் பின்னர் இது தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் தாக்குதலுக்குள்ளானவர்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேன் தாக்குதல் நடாத்தப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் சென்றதை நான் அவதானித்தேன்.

இதன்பின்னரே எம் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களால் தாக்குதுல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தாக்குதலாளிகள் தமிழில் மிக மோசமான வாhத்தைப் பிரயோகங்களை மேற்கொண்டே எம்மீது தாக்குதுல் மேற்கொண்டனர். இதன்போது நாம் தப்பியோடியபோதும் தொடர்ந்து வந்து அவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன்போதே எமது பொருளாளர் தாக்கப்பட்டார்.

தாக்குதலைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளானவர் நிலைகுலைந்து விழுந்ததும் தாக்குதலாளிகள் தப்பியோடி விட்டனர். இதன்பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர் என்றார்.

http://www.sankathi24.com/news/29402/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.