Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டயரி-- வருடம் 1986

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் எழுதி முடித்து இரண்டு கிழமைக்கு மேலாகிவிட்டது .(லப்டாப் இல் இருக்கு அது அத்தானின் கடையில் இருக்கு ).

குடும்பத்தில் ஒரு இழப்பு.மனைவியின் அண்ணர் காலமாகினார் .அவர்களின் வீட்டிலேயே ஜெர்மனி,லண்டனால் வந்த உறவினர்களுடன் நேரத்தை செலவழித்துவிட்டேன்.

லண்டனில் இருந்து வந்த ஒரு உறவினர் (மனைவி பக்கம் ) பழைய மகாஜனா பிரபல கிரிக்கேட் ,உதைபந்தாட்ட விளையாட்டு வீரர் விஜயசிங்கம்.இவர் சாண்டோ சின்ன தேவரின் உதவி டைரக்ரராக  இருபத்திஇரண்டு வருடங்கள் இருந்தவர்.இப்போ வயது போயிருந்தாலும் தனது சினிமா அனுபங்களை மிக சுவாரஸ்யமாக எம்முடன் பகிர்ந்துகொண்டார் .குறிப்பாகக எம் ஜி ஆர் ,ரஜனி பற்றிய அனுபவங்கள் .அவர் கூட நாலு ஐந்து படங்கள் டைரக்ட் பண்ணி இருக்கின்றார் ,நடித்து வேறு இருக்கின்றார் .

 

 

நான் டயறி  பற்றிக்கேட்டால்

நீங்கள்

சினிமா

நடிப்பு

டைரக்சன்.................??

என்று பேசுகின்றீர்கள்

அதுவும் செத்த வீட்டில்............ :(

 

ஒன்றும் புரியல :D

நான் டயறி  பற்றிக்கேட்டால்

நீங்கள்

சினிமா

நடிப்பு

டைரக்சன்.................??

என்று பேசுகின்றீர்கள்

அதுவும் செத்த வீட்டில்............ :(

 

ஒன்றும் புரியல :D

 

 

இது கூட விளங்கவில்லையா விசுகு? எந்தவீடா இருந்தாலென்ன என்னுடையா பந்த கதைகளை மட்டும் விடமாட்டேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் என்கண்ணில் இத்திரி பட்டிருக்கு. நன்றாக இருக்கு.என்னைப்போல் இல்லாமல் விரைவாக எழுதுங்கோ அர்ஜுன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நல்லதிரி அர்ஜுன் அண்ணா தொடருங்கள்....வாசிக்க ஆவலாயிருக்கின்றது.

 

  • தொடங்கியவர்

 நல்லதிரி அர்ஜுன் அண்ணா தொடருங்கள்....வாசிக்க ஆவலாயிருக்கின்றது.

இது எப்படி இருக்கு :icon_mrgreen:?

அர்ஜுன் புலிக்கு வால் பிடித்த மாதிரி இருக்கு :icon_idea:

Edited by arjun

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா!

  • தொடங்கியவர்

டயரி என்று எழுத தொடங்கியதால் அங்கு பதிந்த வடிவில் மாற்றியமைத்து விட்டேன் .
1986 july 21-Monday.------புளொட்டை விட்டு ஓடிய நாள் .

July 22 –சென்னை வந்து சேர்ந்து இருந்த வீட்டை விட்டு மாறி மண்ணடி என்ற இடத்திற்கு உள்ள BETHEL LODGE இற்கு போனேன்.

JULY 23-காலை முரளி,மனோவை எனது பயண அலுவல்களுக்காக சந்தித்தேன்.

JULY 24 –TRRF அதுதான் அகதி அமைப்பின் பெயர் .முழு கணக்கும் எழுதி ,அத்துடன் என்னிடம் இருந்த பணத்தையும்(RS 17,260.00) வைத்து ஒட்டி உமாவிடம் கொடுக்கசொல்லி பிரசாத்திடம் கொடுத்தேன் .

JULY25-பெசன்ட் நகர் போய் குமணன் ,ரவி,போலிஸ்,செல்வா,கணேஷ் சந்தித்திருக்கின்றேன் .குமணனை தவிர மற்றவர்கள் யாரென்று நினைவில் இல்லை .இரவு கண்ணே கனியமுதே படம் பார்த்தேன்.

JULY 28-என்னுடன் ஓடிவந்த நண்பனின் அம்மா ,அக்காவை இலங்கைக்கு போக வழியனுப்ப எக்மோர் ஸ்டேசன் சென்று அவர்கள் வரும்வரை பொழுது போகாமல் பாலகுமாரனின் “மௌனமே காதலாக” வாங்கி வாசித்துக்கொண்டு இருந்திருக்கின்றேன் .என்னில் அவர்களுக்கு தனி கரிசனம் இருந்தது போல் இருக்கு என எழுதியுள்ளேன்.(அந்த அக்கா தான் இப்போ எனது மனைவி)

AUGUST 2—THOMAS COOK இல் இருந்து காசு வந்து சேர்ந்தது .ஒரு தோழருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதில் என்னை தேடுவதாக அறிந்துகொண்டேன் .எதற்கும் கவனமாக இருக்கவேண்டும்.மனிதனின் மறுபக்கம் படம் பார்த்தேன் .

AUGUST 5-TUESDAY EARLY MORNING 4.30 A.M FLIGHT TO LONDON.
காலை பதினோரு மணி HEATHREW AIR PORT அடைந்தேன் .சிறிய விசாரணை பின்னர் பெரிய காத்திருப்பு இரவு HOTEL லுக்கு அழைத்து செல்கின்றார்கள்.

.AUGUST 6- காலை விசாரணை ஆரம்பம் . அப்பாவை பார்க்க இந்தியா போனதும் அங்கு எனது பழைய நண்பர்களை சந்தித்ததும் அவர்களுடன் சேர்ந்து இலங்கை இனக்கலவரத்தால் தமிழ் நாட்டிற்கு இடம்பெயர்ந்த அகதிகளுக்கு உதவி செய்யும் அமைப்பொன்றில் இணைந்து வேலை செய்தததையும் சொன்னேன் .அப்பா சுகம் பெற மட்டும் இந்தியாவில் தங்குவதென முடிவு செய்ததால் விசா முடிந்தும் சில மாதங்கள் தங்கிவிட்டதாக சொன்னேன் .
அந்த அதிகாரிக்கு நான் சொன்ன பதிலில் எதுவித ஆர்வமுமில்லை.விடுதலை இயக்கங்களில் இணைந்து ஆயுத பயிற்சி எடுத்தேனா ? பாஸ்போட் யார் மூலம் எங்கு எடுத்தேன் ? ஏஜன்ட் யார்? இவற்றையே கேட்டு துருவிக்கொண்டுஇருந்தார் .முடிந்தவரை இயக்கத்துடனான தொடர்பை தவிர்த்து பதில் சொன்னேன் .ஏஜன்ட் பற்றி குறிப்பாக ஒரு பெயரையும் விலாசத்தையும் சொன்னேன் .
விசாரணை முடித்து போய்விட்டார். இப்போ அவர்கள் என்னை கொட்டேலுக்கு கூட்டிக்கொண்டு போகவில்லை.விமானநிலையத்திற்கு அருகில் இருக்கும் கட்டிடத்திற்கு(QUEEN’S BUILDING) கொண்டுபோனார்கள்.அங்கு தமிழர் பலர் தங்கவைக்கபட்டிருந்தார்கள்.விமானத்தில் அழுதுகொண்டிருந்த சோடியும் இருந்தார்கள். நம்மட சனங்களை அங்கு கண்டது ஒருவித சந்தோசமாக இருந்தாலும் நாளை என்ன நடக்குமோ என்ற பயம் மறுபுறம் அரித்துக்கொண்டிருந்தது.உடுப்பை மாற்றிக்கொண்டு சாப்பிடபோவம் என்று பாக்கை திறக்க டயரியின் நினைவு வந்தது .கிளறி கொட்டி பார்த்துவிட்டேன் டயரியை காணவில்லை.கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை .இனி நடப்பது நடக்கட்டும் என்ற முடிவில் சாப்பிடும் இடத்திற்கு போகின்றேன்.
அங்கு எம்மவர்கள் எல்லாம் பட்டு தெளிந்ததாலோ என்னவோ மிக சந்தோசமாக ஆளுக்கு ஆள் பகிடி விட்டு கதைத்துக்கொண்டுஇருந்தார்கள் .நானும் அவர்களில் ஒருவராக ஐக்கியமாகிவிட்டேன்.அந்த இடம் ஒரு தற்காலிக தங்குமிடம் .விசாரணை திருப்தி என்றால் பிரிட்டனுக்குள் விடுவார்கள் அல்லது திருப்பி அனுப்பிவிடுவார்கள். மேலும் விசாரணை தேவை அல்லது திரும்பி போக மறுப்பவர்களை HARMONDSWORTH என்ற இடத்திற்கு கொண்டுபோகின்றார்கள் அங்கு பலர் மாதக்கணக்கில் தடுப்பில் இருக்கின்றார்கள் .இந்த மூன்றில் ஒன்றுதான் எனக்கும் நடக்க போகின்றது .
அங்கு ஒரு காசு போட்டு பாவிக்கும் தொலைபேசி மட்டும் இருந்தது அதற்கு பெரியதொரு வரிசை நின்றுகொண்டிருந்தது. நான் இங்கு வந்து நிற்பதை அம்மா ,அண்ணா ,அக்காவிற்கு அறிவிக்கவேண்டும் என்ற கட்டாயத்தால் நானும் வரிசையில் ஒருவனாகிவிட்டேன் .
தொலைபேசியை எடுத்த அக்கா கோவமும் சந்தோசமும் ஆக திட்டி தீர்த்தார். இந்த அக்கா பாட்டி ஒன்றில் புளொட் சந்ததியார் பிரச்சனயில் என்னையும் போட்டுவிட்டார்கள் என்று யாரோ சொல்ல அழுதுகொண்டு பாட்டியை விட்டு வீடு போனவர். அகதிகள் அதிகமாக இப்போது உலகமெங்கும் இருந்து பிரிட்டன் வருவதால் அவர்களை தங்கவைக்க கூட இடமில்லாமல் HOTEL விடுவதாக பி பி சி செய்தியில் காட்டிய போது அதில் என்னை அடையாளம் கண்டு அம்மா சொன்னதை தாங்கள் முதலில் நம்பாமல் அடுத்த முறை செய்திவரும்போது நான் ஒரு BAG குடன் HOTEL க்குள் நடந்துபோவதை பார்த்ததாகவும் சொன்னார் .
இரவு படுக்கைக்கு போகின்றேன் யாரோ விசும்பி சத்தம் கேட்கின்றது எழும்பி போய் பார்த்தால் எமது உறவொன்று அழுதுகொண்டிருக்கின்றார் .என்ன விடயம் என்று கேட்டேன் .இந்திய பாஸ்பொட்டில் இத்தாலி போக வந்ததாகவும் டிரான்சிட் எடுக்கும் போது லண்டனில் பிடித்துவிட்டார்கள் என்றும் சொன்னார். இமிகிரேசன் தன்னை இலங்கையர் என்று சொல்ல தான் ஒரேயடியாக மறுத்து தான் இந்தியர் தான் என்று நின்றதாகவும் இப்போது தன்னை திருப்பிஅனுப்பிவிடுவார்களோ என்று பயமாக இருப்பதாகவும் சொன்னார் .
அடுத்தநாள் அதிகாலை மூன்று மணியளவில் அவரை வந்து இமிகிரேசன் அலுவலர்கள் கூட்டிக்கொண்டு போனர்கள் பின்னர் அவர் திரும்பிவரவில்லை .இந்த நிகழ்வு அங்கிருந்த எல்லோருக்கும் ஒரு பயத்தை உருவாக்கி விட்டிருந்தது .

AUGUST-7
மீண்டும் விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போனார்கள் .அதே அதிகாரி எனது டயரியை மேசை மீது தூக்கிப்போட்டார்.P.P என்று எழுதியிருப்பது பாஸ்போட் தானே? யார் முரளி அவரின் விலாசம் என்ன? PLOT உடன் ஆனா தொடர்பு என்ன ? இவ்வளவு பெயர்களினதும் தொலைபேசி இலக்கங்கள் இருக்கின்றதே இவர்களுடன் தொடர்புகள் இருந்ததா? இப்படி பல கேள்விகள் கேட்டு பிய்த்தெடுக்க தொடங்கிவிட்டார் .வேறு வழியில்லை நடந்தது முழுக்க ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டேன்.அப்ப ஏன் முதலில் உண்மையை சொல்லவில்லை என்று கேட்டார் .நான் சில விடயங்கள் பயம் கருதி மறைத்தேனே ஒழிய பொய் சொல்லவில்லை என்றேன். எல்லாவற்றையும் எழுதிவைத்துவிட்டு மேலிடம் முடிவு எடுக்க சில நாட்கள் ஆகலாம் என்றுவிட்டு போய்விட்டார் .
எனக்கு டயரி அவர்கள் கையில் கிடைத்தது ஓரளவிற்கு நன்மை போல்தான் இருந்தது.நான் ஆயுத பயிற்சி எடுக்கவில்லை என்பதையும் அரசியல், அகதிகள் வேலைகளில் தான் இருந்ததையும் அது உறுதிபடுத்தி இருக்கு.அதே நேரம் பல விடயங்களை மறைத்ததையும் அது காட்டிக்கொடுத்துவிட்டது.

AUGUST 9-13 – வரை எதுவித தகவலும் இல்லை. கனடா போக வந்து பிடிபட்டவர்கள் தான் அந்த அழுதுகொண்டிருந்த ஜோடி.விமானம் ஏறியதில் இருந்து தன்னால் பயத்தில் அழுகையை அடக்கமுடியாமல் போய்விட்டது என்றார் .பலரும் மாறி மாறி விசாரணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார்கள்.எல்லோருக்கும் அவர் அவர் பிரச்சனை .லண்டனில் இருக்கும் உறவினர்கள்,நண்பர்கள் ,புளொட் நண்பர்கள் என்று பலர் வந்து சந்தித்தார்கள்.அத்தான் வரவில்லை.என்னில் அவருக்கு சரியான கோவம் என்று அக்கா சொன்னார். திரும்பி வர போவதாக தனக்கு ஒரு சொல்லும் சொல்லாமல் மீண்டும் ஒன்றுக்கும் உதவாத அண்ணருடனும்,மீண்டும் அந்த புளொட்காரர்களுடனும் தான் தொடர்பை வைத்திருக்கின்றான் என்று திட்டினாராம்.
புளொட் நண்பர்கள் BIRMINGHAM இருந்து லோயர் விக்கினேஸ்வரனை கொண்டுவந்து பிணை எடுப்பதாக சொல்லியிருந்தார்கள்.ஒன்றும் நடந்தததாக தெரியவில்லை.அண்ணரும் எல்லாம் பிரச்சனையாக கிடக்கு பிணை எடுக்க வீடு இருக்கவேண்டும் என்கின்றார்கள் என்று சாக்கு போக்கு சொல்லுகின்றான்.

AUGUST 14--- காலை இமிகிரேசன் இல் இருந்துவந்து பதினான்கு பெயர்களை வாசித்து நாளை HAMMANSWORTH இற்கு போக ஆயத்தமாக இருங்கள் என்று போய்விட்டான்.அதில் எனது பெயரும் இருந்தது.பலர் அழத்தொடங்கிவிடார்கள்.அங்கு கொண்டுபோனால் வெளியில் வருவது மிக கஷ்டம் என்று சொன்னார்கள் .ஒன்றில் திருப்பியனுப்புவார்கள் அல்லது மாதக்கணக்கில் இழுபடவேண்டும்.
அத்தானுக்கு போனை அடிக்கின்றேன் .எனக்கு உன்ரை ஆட்களை பற்றி தெரியும் என்றபடியால் ஏற்கனவே உன்னை வெளியில் கொண்டுவர ஏற்பாடு செய்துவிட்டேன் என்றார்.பின்னேரம் மூன்று மணியளவில் எனது பெயரை சொல்லி அழைத்தார்கள் .அது ஒரு சிறிய IMMIGRATION COURT . அத்தானும் அத்தானின் நண்பர் சுந்தரலிங்கமும் அங்கே இருந்தார்கள்.
டயரியில் உள்ளது இதுதான் .VERY UPSET ABOUT THE COURT.LOT OF QUESTIONS.ANGRY FED-UP, FRUSTRATED.விசாரணை முடிய திரும்பவும் QUEENS BUILDING இற்கு அனுப்பிவிட்டார்கள் .SAME OLD LIFE ? ? ?.

AUGUST 15- அதிகாலை பஸ் வந்து நிற்கின்றது .காலை சாப்பாட்டை முடித்துவிட்டு பஸ்சில் ஏறச் சொல்லிவிட்டார்கள். (LAXMIL HALL என எழுதியுள்ளேன் விளங்கவில்லை). பலர் அழத்தொடங்கிவிட்டார்கள்.அத்தானில் இன்னமும் எனக்கு நம்பிக்கை எப்படியும் என்னை வெளியில் எடுத்துவிடுவார் என்று.அவர் லண்டனில் ஒரு சின்ன விதானையார் மாதிரி.நாலு பேர்களை தெரிந்தவர்.அந்த நம்பிக்கைதான் .

BAG ஐயும் தூக்கிக்கொண்டு பஸ்சை நோக்கி போகின்றேன்.அத்தான் இன்று பிணை எடுக்க வருவதாக சொன்னார் என்று எனது பெயரை லிஸ்டில் CHECK பண்ணுபவரிடம் சொல்கின்றேன். அது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்றுவிட்டார்.பஸ்சில் ஏறப்போகும் போது யாரோ அழைப்பது போலிருக்க திரும்பினால் ஓர் அதிகாரி மீண்டும் எனது பெயர் சொல்லி கூப்பிடுகின்றார் .

தனது அலுவலகத்திற்கு கூட்டி சென்று சில பத்திரங்களில் கையெழுத்து இட வேண்டும் சில நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை என்கின்றார். வெளியில் விட்டால் காணும் என்று கேட்ட இடத்தில் எல்லாம் கையெழுத்தை வைத்துவிட்டு வெளியில் வருகின்றேன் .அத்தான் தனக்கே உரித்தான வாரும் தம்பி வழிக்கு என்ற சிரிப்பை உதிர்கின்றார் .

காரில் ஏறியதும் வாழமை போல் அவர் பாணியில் புத்திமதிகளை அள்ளி வீசுகின்றார் .இனியாவது அரசியல் ,சினிமா ,விளையாட்டு என்று திரியாமல் ஒழுங்காக படித்து ஒரு வேலையை எடுத்து உனக்கென்று வாழ்கையை அமைக்கின்ற அலுவலைபார்.
எல்லாத்திற்கும் செக்கு மாடுமாதிரி ஓம் ஓம் என்று தலையாட்டுகின்றேன். அடுத்த சில மாதங்களில் அடுத்த குண்டொன்றை தூக்கிபோட போகின்றேன் என்று அப்போது அவருக்கு தெரியாது, அதே போல அப்போது எனக்கும் தெரியாது இயக்கத்தில் இருக்கும் போது காணாத பயங்கரவாத நிகழ்வுகள் இரண்டை நான் லண்டனில் காணப்போகின்றேன் என்று. அது பற்றி முடிந்தால் பின்னர் எழுதுகின்றேன் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ம் தொடருங்கள் அர்யுன்

 

தொடருங்கள் அர்ஜுன்,

நீங்கள் இலண்டனில் சந்த்தித்த அந்த பயங்கரவாத நிகழ்வு என்ன என்பது .......  சரி நீங்கள் எழுதுங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் அர்ஜீன் அண்ணா

 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  தொலைந்து விட்டதா?

அல்லது

ஒபாமா  கடன்  வாங்கிய  லப்டாப்பை திருப்பி  இன்னும் தரவில்லையா??? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தொடருங்கள் அர்ஜுன் 
வாழ்க்கை ஒரு சிறந்த பாடம்தான் 

 

 

தொடருங்கள் அர்ஜுன் 
வாழ்க்கை ஒரு சிறந்த பாடம்தான் 

 

 

அதை உணர்ந்தவர்களுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இங்கு வரும் நேரமெல்லாம் உங்கள் டயறியை வாசிப்பேன்.இன்றும் வாசித்தேன்.ஒரு பச்சையும் குத்தியுள்ளேன். தொடருங்கள் அர்ஜுன் அண்ணா!

  • தொடங்கியவர்

வயது போக போக இப்படி கனக்க பிரச்சனைகள்  வரும் .உது மருந்துக்கும் மாறாது .உடம்பை என்றாலும் கவனமாக பார்த்து கொள்ளுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

டயறி தொடர்ந்து வர வேணும். இல்லாட்டி ஒபாவிடம் உங்கள் கணணி கையளிக்கப்படும் என்பதனை அறியத்தருகிறோம் Arjun அண்ணா. :lol:

டயறி சுவாரசியமாக போகிறது அடுத்த பகுதியையும் கிரமமாக இணையுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.