Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

நான் ரூம் வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டில் உள்ள அம்மம்மா வயதுடைய ஒருவருக்கு காலில் ஏதோ வெட்டி எலும்பு தெரியுமளவுக்கு காயம். ரத்தம் வந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது காயத்தை சுற்றிக்கட்டி விட்டு அடுத்தநாளுக்கு appointment கொடுத்து பின்னர் பெரிய தையல் போட்டுள்ளார்கள்.

இன்று நான் என்ன நடந்தது என்று அது பற்றி கேட்டு அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது எனக்கு தலை சுத்த தொடக்கி விட்டது. நின்று கொண்டு கேட்டுக்கொண்டிருந்த நான் பக்கத்தில் கதிரை எதுவும் இல்லாததால் அப்படியே நிலத்தில் இருந்து விட்டேன்.

இவ்வாறான சம்பவங்கள் பற்றி அடுத்தவர் சொல்ல கேட்கும் போது அல்லது நீண்ட நேர வீடியோவில் பார்க்கும் போது எனக்கு வழமையாகவே இவ்வாறு தலை சுத்துவதுண்டு. அதை அவருக்கும் சொன்னேன். சொல்லி விட்டு சிறிது நேரத்தில் வேறு கதிரை கொண்டு வந்து போட்டு விட்டு இருக்க அவர் தொடர்ந்து சொன்னார். திரும்ப தலை சுத்த தொடங்கி  விட்டது.

நான் பின்னர் வருகிறேன் என்று சொல்லி விட்டு எழும்பி அவர் ரூமை விட்டு வெளியே வரும்போது கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்து அப்படியே விழுந்து விட்டேன். அவருக்கு சத்தம் கேட்டதாக்கும், பிள்ளை விழுந்து போனீங்களோ என்று கேட்டார். எனக்கு நான் விழுந்திட்டனோ அல்லது நின்று கொண்டிருக்கிறேனோ என்று உடனே தெரியவில்லை. முழித்து தான் இருந்தேன். ஆனால் கண் இருட்டியபடி இருந்ததால் சுற்றுமுற்றும் பார்த்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நிமிடத்தின் பின்னர் தான் நான் விழுந்திருந்ததும் விழுந்த வீச்சுக்கு எழும்பி முழங்காலில் இருந்ததும் தெரிந்தது.

நான் உயர் தரம் படிக்கும் போது கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன். அங்கு சத்திரசிகிச்சை வீடியோ எல்லாம் பார்த்திருக்கிறேன். அப்பொழுது இவ்வாறு வருவதில்லை. ஆனால் சில வருடங்களாக இப்படி உள்ளது.

இதற்கு காரணம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? காரணத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. :rolleyes:

மருத்துவரிடம் கொண்டு போய் காட்ட சொல்லாதீர்கள். இப்பொழுது என்னை மருத்துவரிடம் அழைத்து செல்லுமளவில் யாரும் இல்லை. நானாக தான் செல்ல வேண்டும். நான் செல்லும் மருத்துவருக்கும் கொஞ்சம் தான் ஆங்கிலம் தெரியும். அவருடன் ஆங்கிலத்தில் தான் நான் உரையாடுவேன். எனக்கும் ஆங்கிலம் அரைகுறை. அதிலும் மருத்துவ ரீதியான ஆங்கில வார்த்தைகள் அவ்வளவாக தெரியாது. பிரெஞ்சு இப்ப தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.

யாரிடமாவது சொல்ல வேணும் போலிருந்தது. யாழ் தான் நினைவு வந்தது. ஏதும் புலம்புவது போலிருந்தால் இத்திரியை நீக்கி விடுங்கள். :(

Edited by துளசி

  • Replies 53
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துளசி, எத்தனையோ பண்பட்ட கள உறவுகள், பாரிஸில் இருக்கிறார்கள்! இந்தப் பாட்டி வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்காது உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு நல்ல மருத்துவரை உடனடியாகப் பார்க்கவும். அவர்கள், நிச்சயம் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்!

அனிமியா முதல் கொண்டு பல காரணங்களால் இது ஏற்படலாம்.

நீங்கள் கள உறவுகளை விரும்பாவிட்டால், தனி மடலிடுங்கள்!

துளசி,
 
எனக்கும் இந்த நாட்டுக்கு வந்த புதிசில இப்படி இருந்தது. மரக்கறி மட்டுமே அப்போது சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் புதிய சூழ்நிலைகாரணமாக மன அழுத்தம் போன்றன இருந்தன. Multi Vitamin போடச்சொன்னார்கள்.
 
போட பிறகு சரியாகிவிட்டது. இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.  :D
 
பெண்கள் இரும்புச் சத்து எடுப்பது நல்லது.
 
இரும்புச் சத்து குறைபாட்டு அறிகுறிகள்:
 
1. சொண்டு வெளிருதல்
2. சோர்வு
...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி.. :D அதாவது மேலே அன்பர்கள் கூறியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி நலம்பெற வாழ்த்துக்கள்..! :rolleyes:

இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வருவது இயற்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  A/L காலத்தில் இது எனக்கு மூன்று முறை நடந்ததால் எனது வைத்தியர் தான் மருத்துவ கல்லூரி ஆரம்பத்தில் அனுபவப்பட்டதாகவும் தான் திரும்ப திருப்ப பார்க்க நேர்ந்த பின்னர் இல்லாமல் போனதாகவும் சொன்னார். அந்த காலங்களின் பின்னர் நான் பார்த்த இரத்தம் வீடியோ காட்சிகளில் மட்டும் தான்.  இலங்கையின் கொலைக்களங்கள் மாதிரி படங்களை நான் எப்போதும் முழுவதாக பார்ப்பத்தில்லை. ஆனால் உங்களுக்கு இரத்தம் சம்பந்தமான கதையை  கேட்கும் போதே வருவது கொஞ்சம் கூட என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவ உதவி தேவையாக இருக்கலாம்.

அனீமியாவின் சில காரணங்கள் பாரதூரமானவை. சில நல்ல சாப்பாடு சாப்பிட மாறிவிடும். கள உறவுகளின் ஆலோசனைகளை பின் பற்றவும்.

Edited by மல்லையூரான்

இசை அங்கிளின் கடிகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் துளசி. :D

  • கருத்துக்கள உறவுகள்

உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் என்றால் சாப்பாட்டில் கவனம் எடுங்கள்...ஒரு முறையாவது வைத்திய பரிசோதனை செய்து பார்த்தால் நல்லம் துளசி..மொழி பிரச்சனையாக இருக்கிறது என்பதற்காக வைத்தியரிடம் போகாமல் இருக்க முடியுமா..???என்ன நீங்கள்...துளசியின்ட தேசிய உணவை விட்டு நல்ல உணவுகளை சாப்பிட்டாலே..உடல் நிலையில் மாற்றம் வரும்..

Edited by யாயினி

  • தொடங்கியவர்

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. :)

நான் தலை சுத்தி விழுந்தமைக்கு சந்தோசப்பட்டு வாழ்த்து தெரிவித்த இசை அண்ணாவுக்கும் நன்றி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நோயையும் நாம் அலட்சியமாக எடுக்கக் கூடாது துளசி. பிரெஞ்ச் நன்றாகக் கதைக்கக் கூடிய ஒருவரைக் கூட்டிக்கொண்டு வைத்தியரைப் பார்ப்பதே நல்லது.

  • தொடங்கியவர்

துளசி, எத்தனையோ பண்பட்ட கள உறவுகள், பாரிஸில் இருக்கிறார்கள்! இந்தப் பாட்டி வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்காது உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு நல்ல மருத்துவரை உடனடியாகப் பார்க்கவும். அவர்கள், நிச்சயம் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்!

அனிமியா முதல் கொண்டு பல காரணங்களால் இது ஏற்படலாம்.

நீங்கள் கள உறவுகளை விரும்பாவிட்டால், தனி மடலிடுங்கள்!

நன்றி அண்ணா, எனக்கு முன்பிலிருந்தே இரத்தத்தில் ஈமொகுளோபினின் அளவு குறைவாக தான் உள்ளது. முன்னொருதடவை யாழ் போதனா வைத்தியசாலையில் கூறியிருந்தார்கள். தலைமுடி உதிர்வதும் அதிகம். சிலவேளை Anemia ஆகவும் இருக்கலாம் தெரியவில்லை.

நான் இருக்கும் பகுதியில் தமிழர்கள் குறைவு. அதே போல் எனது இடத்திற்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியிலிருந்து வருவதற்கு தூரம் கொஞ்சம் அதிகம். அது தான் பிரச்சினை. நிச்சயம் ஏதும் ஒழுங்குகள் செய்ய முயற்சிக்கிறேன்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

துளசி,

எனக்கும் இந்த நாட்டுக்கு வந்த புதிசில இப்படி இருந்தது. மரக்கறி மட்டுமே அப்போது சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் புதிய சூழ்நிலைகாரணமாக மன அழுத்தம் போன்றன இருந்தன. Multi Vitamin போடச்சொன்னார்கள்.
 
போட பிறகு சரியாகிவிட்டது. இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.  :D
 
பெண்கள் இரும்புச் சத்து எடுப்பது நல்லது.
 
இரும்புச் சத்து குறைபாட்டு அறிகுறிகள்:
 
1. சொண்டு வெளிருதல்
2. சோர்வு
...

நன்றி அண்ணா,

எனக்கு இரும்பு சத்து குறைபாடு மட்டுமல்ல, நிறைய பிரச்சினை இருக்குமென நினைக்கிறேன். :icon_idea: blood pressure இதுவரைக்கும் low ஆக தான் இருந்துள்ளது. சாதாரணமாக 120/80 என இருக்க வேண்டும். எனக்கு 100/70 இல் தான் இருப்பது வழமை. இப்பொழுது எப்படி என்று தெரியாது. அதேபோல் blood sugar இன் அளவும் குறைவு என்று முன்னர் சொன்னார்கள். :rolleyes:

ஆனால் இவற்றுக்கு சாதாரண மயக்கம் தானே வர வேண்டும். இப்படி மற்றவர்கள் காயங்கள் அல்லது இரத்தம் பற்றி சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும் போது தலை சுத்தி விழுவதற்கும் இதற்கும் தொடர்புள்ளதோ தெரியவில்லை. :unsure: ஆனாலும் உணவில் கொஞ்சம் கவனம் செலுத்த முயற்சி செய்கிறேன். :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. :)

நான் தலை சுத்தி விழுந்தமைக்கு சந்தோசப்பட்டு வாழ்த்து தெரிவித்த இசை அண்ணாவுக்கும் நன்றி. :lol:

நீங்கள் தலை சுத்தி விழுந்தது என்று சொல்ல இசை நினைத்திருப்பார் நீங்கள் கர்ப்பமாய் இருக்கிறீர்கள் என்று  :lol:  :D  :icon_idea:
 
காசை மிச்சம் பிடிப்பதற்காக பிஸ்க்ட்டையும்,பக்கட் நூடில்ஸ்சும் சாப்பிடாமல் கொஞ்சம் சத்தான சாப்பாடாய் சாப்பிடுங்கள்
  • தொடங்கியவர்

இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வருவது இயற்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  A/L காலத்தில் இது எனக்கு மூன்று முறை நடந்ததால் எனது வைத்தியர் தான் மருத்துவ கல்லூரி ஆரம்பத்தில் அனுபவப்பட்டதாகவும் தான் திரும்ப திருப்ப பார்க்க நேர்ந்த பின்னர் இல்லாமல் போனதாகவும் சொன்னார். அந்த காலங்களின் பின்னர் நான் பார்த்த இரத்தம் வீடியோ காட்சிகளில் மட்டும் தான்.  இலங்கையின் கொலைக்களங்கள் மாதிரி படங்களை நான் எப்போதும் முழுவதாக பார்ப்பத்தில்லை. ஆனால் உங்களுக்கு இரத்தம் சம்பந்தமான கதையை  கேட்கும் போதே வருவது கொஞ்சம் கூட என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவ உதவி தேவையாக இருக்கலாம்.

அனீமியாவின் சில காரணங்கள் பாரதூரமானவை. சில நல்ல சாப்பாடு சாப்பிட மாறிவிடும். கள உறவுகளின் ஆலோசனைகளை பின் பற்றவும்.

நான் channel 4 காணொளிகள் பார்க்கும் போது இப்படி இருந்ததில்லை. அவற்றில் கதைப்பதை அதிகம் காட்டி இடைக்கிட தான் இவ்வாறான சம்பவங்களை காட்டுவார்கள். சிலவேளை தொடர்ச்சியாக பார்த்தால் தலை சுத்தலாம்.

நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு.

  • தொடங்கியவர்

உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் என்றால் சாப்பாட்டில் கவனம் எடுங்கள்...ஒரு முறையாவது வைத்திய பரிசோதனை செய்து பார்த்தால் நல்லம் துளசி..மொழி பிரச்சனையாக இருக்கிறது என்பதற்காக வைத்தியரிடம் போகாமல் இருக்க முடியுமா..???என்ன நீங்கள்...துளசியின்ட தேசிய உணவை விட்டு நல்ல உணவுகளை சாப்பிட்டாலே..உடல் நிலையில் மாற்றம் வரும்..

நன்றி அக்கா, தேவைப்பட்டால் வைத்தியரிடம் செல்வதுண்டு. ஆனால் அவ்வளவாக வைத்தியரிடம் செல்லும் தேவைகள் எழவில்லை. ஆனால் இது கடைகளுக்கு செல்வது போல் அல்ல. ஏதும் கேட்கும் போது பிழையாக விளங்கி பதில் சொன்னால் அல்லது கேள்வி விளங்காவிட்டால் பிரச்சினையில் தான் முடியும்.

யாரையும் தெரிந்து கொண்டு இந்த நாட்டுக்கு வரவில்லை. வந்த பின்னர் பழக்கமானவர்கள் யாரும் எனக்காக மினக்கட்டு நேரம் செலவழித்து உதவி செய்யக்கூடியவர்கள் இல்லை. கொஞ்ச காலம் போனால் என் பாட்டை நானே பார்ப்பேன். அது வரைக்கும் தான் பிரச்சினை.

இடைக்கிட என்றாலும் நல்ல உணவுகள் சாப்பிட முயற்சி செய்கிறேன். :)

  • தொடங்கியவர்

எந்த நோயையும் நாம் அலட்சியமாக எடுக்கக் கூடாது துளசி. பிரெஞ்ச் நன்றாகக் கதைக்கக் கூடிய ஒருவரைக் கூட்டிக்கொண்டு வைத்தியரைப் பார்ப்பதே நல்லது.

நன்றி அக்கா,

யாயினி அக்காவுக்கு எழுதிய பதிலையும் வாசியுங்கள். அதே போல் சிலநேரம் காசு கொடுத்து translator ஐ  கூட்டிக்கொண்டு சென்று சில அலுவல் பார்த்திருக்கிறேன்.

ஆனால் எமது பக்கம் பெரிதாக யாரும் வந்து போயிருக்க மாட்டார்கள் என்பதால் சில நேரங்களில் அவர்களுக்கு வருவது சிரமமாக இருக்கும். அதனால் சம்மதிப்பதில்லை. நான் அவர்கள் இடத்திலுள்ள doctor யாரிடமும் சென்று காட்ட முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இங்கு பதிவை வைத்துக்கொண்டு வேறு இடங்களில் காட்ட முடியுமோ தெரியவில்லை. விசாரித்து பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

நீங்கள் தலை சுத்தி விழுந்தது என்று சொல்ல இசை நினைத்திருப்பார் நீங்கள் கர்ப்பமாய் இருக்கிறீர்கள் என்று  :lol:  :D  :icon_idea:

காசை மிச்சம் பிடிப்பதற்காக பிஸ்க்ட்டையும்,பக்கட் நூடில்ஸ்சும் சாப்பிடாமல் கொஞ்சம் சத்தான சாப்பாடாய் சாப்பிடுங்கள்

அவர் அப்படி நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. :lol: சில வருடங்களாகவே எனக்கு இப்பிரச்சினை உள்ளது என கூறியுள்ளேன். அதை சரியாக வாசிக்காமல் அவர் என்னை நக்கலடித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. :icon_idea:

நான் இன்னும் வேலை செய்ய தொடங்கவில்லை. வேலை செய்ய தொடங்கிய பின்னர் சாப்பாட்டில் மிச்சம் பிடிப்பதை குறைக்கிறேன். :)

அதிகம் செலவழித்து கடனை அதிகரிக்காமல் இப்போதைக்கு ஏற்கனவே நான் சாப்பாட்டுக்கு செலவழிக்கும் காசில் தேவையில்லாததை குறைத்து தேவையானவற்றை வாங்க முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் துளசி

இது பெரும் பிரச்சினையாக தெரியவில்லை. பிரசர் குறைவதனால் வரலாம். அது வராதபடி  சாப்பாட்டிலும் தூக்கத்திலும் சிந்திப்பதிலும் ஒழுங்கு தேவை.  அதை முதலில் செய்யுங்கள்.  அத்துடன் உங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஒருமுறை ரத்த பரிசோதனை செய்யுங்கள்.

அவர் ஏதாவது சிக்கலாக தெரிவித்தால்..........

அதன்பின் மொழி சம்பந்தமான சிக்கல்  வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

நிச்சயம் உதவ முடியும்.

(நான் வரமாட்டேன். பெண் பிள்ளை  ஒன்றை தொடர்பு படுத்தி தருகின்றேன். ஆனால் அதற்கு முதல் மேலே எழுதியவற்றை  செய்யவேண்டும்)

சாப்பாடு, தூக்கம், சிந்திப்பது என எதிலுமே நான் ஒழுங்கில்லை. :icon_idea:

உண்மையில் எனக்கு ஊரிலிருந்த வரைக்கும் எனது blood group தெரியாது என்பதால் :lol: இங்கு blood group அறிய ஒருதடவை doctor ஐ கேட்டிருந்தேன். அதற்கு இன்னொரு இடத்திற்கு போக சொல்லி போனேன். நிறைய blood குத்தி எடுத்து விட்டார்கள். :( ஆனால் தனிய blood group பற்றி மட்டும் தான் தந்தார்கள். :rolleyes: பின்னர் தான் நினைத்தேன், ஒரேதாக blood test என்று சொல்லி எடுத்திருக்கலாம், அப்ப தான் அனைத்து விபரங்களும் வந்திருக்கும் என்று. :D

Visite médicale க்கு போனவருடம் appointment வந்தபோது blood test உம் செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு blood test செய்யவில்லை. :rolleyes:

இந்த மாதம் கொஞ்சம் பிஸி. அடுத்த மாத தொடக்கத்தில் நிச்சயம் blood test எடுக்க முயற்சி செய்கிறேன்.

உங்கள் உடல்நிலை  தெரிந்த தாங்களே இவ்வாறு இருந்தால் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் அக்கறைப்படுவர் துளசி.  அதனால் தான் ஆரம்ப வேலைகளை நீங்கள் செய்யணும் என்று வற்புறுத்துகின்றேன்.

உண்மையில் ஏதாவது பாராதூரமான பிரச்சினை  இருக்கலாம்.  அதை சாதாரணமாக  வைத்தியரை சந்திப்பதன் ஊடாக தெரிந்து கொள்ளமுடியும்.

அதைச்செய்து விட்டு வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆறப்போடுவது உடல் நலத்தைப்பொறுத்தவரை கேடு விளைவிக்கும் :( 

போன தடவை blood test எடுக்க சென்ற இடத்தில் பின்னேரங்களில் தான் வர சொன்னார்கள். எனக்கு 5 நாளும் பின்னேரத்தில் class இருக்கு. இந்த மாதத்துடன் A2 முடிந்து விடும் என்பதால் அடுத்த மாத தொடக்கம் என சொன்னேன்.

அல்லது ஒரு நாள் class க்கு செல்லாமல் இங்கு செல்ல வேண்டும். எதற்கும் doctor ஐ கேட்டு பார்க்கிறேன். இப்பொழுது எடுத்தால் நல்லது தான். பின்னர் என்றால் vacation க்கு doctor எங்காவது போனால் பிறகு இப்போதைக்கு சரிவராது. :rolleyes:

உண்மை............... காதல் இது கூட உளவியல் ரீதியாக ஏற்படும் ஒரு சூழலே .................எனது அனுபவத்தில் அங்கே பல போராளிகளை காயங்களுடனும் ,வீரமரணங்களுடனும் நேருக்கு நேர் எதிர் கொண்ட எனக்கு இங்கு வீதியில் ஒரு கார் விபத்து என்றால் கூட அதை திரும்பி பார்க்கும் நிலைக்கு என் மனம் இடம் கொடுக்குதில்லை .....எல்லாம் சூழலே .மனதை போட்டு வருத்தாமல் சாதாரணமாய் எடுத்து வாழ்க்கையை பயணியுங்கள் ....................இது என் மனதில் தோன்றிய .நான் எப்படி இருக்க வேண்டும் என்ற உளம் சொல்லும் சிந்தனையே ,நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்படி நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. :lol: சில வருடங்களாகவே எனக்கு இப்பிரச்சினை உள்ளது என கூறியுள்ளேன். அதை சரியாக வாசிக்காமல் அவர் என்னை நக்கலடித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. :icon_idea:

.

துளசியின் எழுத்துக்களை உற்றுநோக்கும்போது அவ சில வருடங்களாகவே "எச்சரிக்கை உணர்வு" இல்லாமல் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.. :unsure: நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டு வரவேணும் துளசி.. :icon_idea::D

துளசியின் எழுத்துக்களை உற்றுநோக்கும்போது அவ சில வருடங்களாகவே "எச்சரிக்கை உணர்வு" இல்லாமல் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.. :unsure:நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டு வரவேணும் துளசி.. :icon_idea: :D

அதை நான் ஆமோதிக்கிறேன் ............ஆமோதிக்கிறேன் ....................ஆமேன் ......... :D  :D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  கிறுதிக்கு சாப்பாட்டாலை ஒண்டும் வெட்டி புடுங்கேலாது...... துளசி! நீங்கள் வைத்தியரை நாடி நிவாரணம் தேடுவது நல்லது.உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இதே மாதிரி இருக்கின்றதா? ஒருசில நோய்கள் சந்ததி சந்ததியாகவே தொடர்கின்றது. ஜேர்மனியிலையெண்டால் பத்து நிமிசத்திலை என்ன வருத்தம் எண்டு சொல்லி அதுக்கு நிவாரணமும் சொல்லுவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.