Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

இன்று(19.06)  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபாவும் அவரோடு ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்ட இன்னும் பதின்னான்கு உறுப்பினர்களும் நிராயுதபாணிகளான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நாள். ஜூன் மாதம் 19ம் திகதி 1990 அன்று சென்னையில் சக்கிரியா காலனியிலுள்ள அடுக்குமாடிக் கட்டத்தொடரிலுள்ள வீடொன்றில் பதின்நான்கு நிராயுத பாணிகள் கொல்லப்பட்ட செய்தி சென்னை முழுவதும் பரவியது. கடல் அலைகளைக் கடந்து ஈழத்தையும் சென்றடைந்தது.

naba.jpg

ஈழப் போராட்டத் தலைவர்களுள் ஆஜனுபாகுவான உயர்ந்த உருவமும் அமைதியான தோற்றமும் கொண்ட பத்மநாபா ஆரம்ப காலங்களில் தோழர் ரஞ்சன் என அழைக்கப்பட்டார். முன்னர் ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராகவிருந்த பத்மநாபா 1980 ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் மந்த நிலையில் காணப்படுகிறது என்று அந்த அமைப்பிலிருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார். நாபா உடன் வெளியேறிய ஏனையோரும் இணைந்து EPRLF இன் மத்திய குழு ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். அந்த மத்திய குழுவின் செயலாளர் நாயகமாகப் பத்மநாபா தெரிவு செய்யப்படுகின்றார்.

இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்களுள் முதல் முதலாக கிராம மட்டங்களில் வெகுசன அமைப்புக்களை உருவாக்கிக்கொண்டது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே (EPRLF) ஆகும்.

கிராமிய அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என்று வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்பதற்கான அடிப்படைகளை EPRLF உருவாக்கிக் கொண்டது. ஒவ்வொரு அமைப்பிற்கும் உள்ளக வெளியகப் வெளியீடுகள், அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
1981 ஆம் ஆண்டின் இறுதியிலேயே மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற இராணுவப் பிரிவை உருவாக்கிக்கொண்டு பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த வேளையில் சமூக ஏகாதிபத்தியமாக தேய்ந்துகொண்டிருந்த சோவியத் ரஷ்யாவின் தமிழ் நாட்டு முகவர்களின் தலையீடுகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு புறத்தில் வெகுஜன அமைப்புகளின் மீதான அக்கறை அருகிவர மறுபுறத்தில் ‘பிராந்திய நல்லிணக்கம்’ என்ற அடிப்படையில் இந்திய அரசுடன் உறவை வளர்த்துக்கொள்கின்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் அந்த அமைப்புன் புதிய போலித்தனமான அரசியலுக்கு எதிரான உட்கட்சிப் போராட்டங்கள் வலுவடைகின்றது. அப்போராட்டத்தில் நாபாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஓரணியிலும் முற்போக்கான குழுவினர் இன்னொரு அணியிலும் கருத்தியல் விவாதங்களை மேற்கொள்கின்றனர்.

1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்திய அரசும் அதன் உளவுப் பிரிவும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவு செய்துகொண்ட இயக்கங்களுள் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் ஒன்று.

நூற்றுக்கணக்கான கிராமப்புற இளைஞர்களை விட்டில் பூச்சிகள் போல இந்திய அரசு பயிற்சிக்கு அழைத்துச் சென்றது.

இக் காலப்பகுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் உறுப்பினர்களைக் கண்காணிபதற்கு என்று உளவுப்படை ஒன்று உருவாக்கப்படுகிறது.

மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) என்று அழைகப்பட்ட அந்த உளவு அமைப்பின் செயற்பாடுகள் EPRLF அமைப்பினுள் பல மோதல்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கிறது.

இந்திய அரசின் உற்பத்தியான PLA இராணுவப் பிரிவு அரசியலில் அரிவரி கூடத் தெரியாத டக்கள்ஸ் தேவாநத்தாவினால் தலைமை தாங்கப்படுகிறது. டக்களஸின் இராணுவ சாகசங்களாலும், உடல் வலிமை காரணமாகவும், இயல்பான பண்புகளாலும் இராணுவப் பிரிவின் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தார். இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்வினால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் நாபா குழுவினர் டக்ளஸைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். 1986 ஆம் ஆண்டில் டக்ள்ஸ் தேவாந்தாவிற்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையின் பணம் மற்றும் ஆயுதக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட டக்ளஸ் – நாபா பிளவு நிரந்தரமாகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் கைப்பொம்மை போல நாபாவும் இந்தியாவின் கைப்பொம்மையாக சுரேசும் செயற்பட மத்திய குழுவிலும் அமைப்பு முழுவதிலும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய ஜனநாயக மற்றும் முற்போக்கு இளைஞர் சக்திகள் டக்ளஸ் இற்கு ஆதரவு வழங்கினர்.

1986 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நம்பிக்கைக்கு உரிய கபூர் என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு தலைவராக நியமிக்கப்படுகிறார். டக்ளஸ் குழு தனியாக இயங்க ஆரம்பிக்கிறது.

1986 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்படுகின்றது. ஆரம்ப நிலைப் போராளிகளிலிருந்து முகாம்கள் வரை இயக்க உறுப்பினர்கள் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனர். பலர் ஏன் மரணித்துப் போகிறோம் என்று அறியாமலே அனைதைகள் போன்று தெருக்களிலும் புலிகளின் முகாம்களிலும் கொல்லப்படுகின்றனர்.

சுரேஷ் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட கபூர் உட்பட பலர் கொல்லப்படுகின்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இந்தியத் தலையீட்டுக்கு எதிராகவும் மக்கள் திரள் வழிமுறைகளுக்காக்வும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் பலரும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகின்றனர். எஞ்சியிருந்த சிலரைப் புலிகள் இயக்கத்தினர் தேடித்தேடி அழிக்கின்றனர். பலர் தமிழ்ப் பகுதிகளிலிருந்து வெளியேறி இந்தியா உட்பட வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர்,
இவர்களின் வெளியேற்றத்தோடு போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை முன்வைத்த இறுதிக் குரல்களும் மௌனிக்கப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான போராளிகளோடு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ‘புரட்சிகர’ சுலோகங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்திய உளவுத்துறையின் தயவின்றி ஒரு காத தூரம் கூட நகர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

வாழ்வாதாரத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்திய அரசைத் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகின்றது.

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.

SURESH_PREMACHANDRan-298x300.jpg

இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.

1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.

varathan-3.jpg

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.
 
சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியாகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரால் துரோகிப் பட்டம் வழங்கப்பட்டு இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் கொல்லப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு பத்மநாபா சுரேஷ் குழுவினர் இந்திய இராணுவத்தோடு வெளியேற வரதராஜப்பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை திருகோணமலையில் முன்வைக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாச மாகாண சபையைக் கலைத்துவிடுகின்றார்.

வரதராஜப்பெருமாளை இந்திய இராணுவம் தனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறது. பத்மநாபாவும் மத்திய குழுவில் சிலரும் இந்திய இராணுவத்தில் வலைக்குள் தாம் முழுமையாகச் சிக்குண்டதை உணர்ந்துகொண்டதாகவும் அது தொடர்பான மத்திய குழு ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடைவேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து வெளியில் செல்கிறார்.

அவ்வேளையில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த கொலையாளிகளால் பத்தமநாபாவும் பதின்மூன்று மத்திய குழு உறுப்பினர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்.

martyrs-day-2013-300x225.jpg

80களின் ஆரம்பத்தில் ரஞ்சன் தோழர் என்று தொலைதூரக் கிராமங்கள் பலவற்றில் அறியப்பட்ட நாபா, உண்ண உணவின்றி மக்களின் விடுதலைக்காக உழைத்திருப்பதை அந்தக் கிராமத்து மக்களே சாட்சியாகச் சொல்வார்கள்.

அமைதி நிறைந்த தோற்றம் கொண்ட நாபா அதிகமாகப் பேசுவதில்லை. தனது அருகிலுள்ள அனைவரின் மீதும் அன்போடு நடந்துகொள்வார். லண்டனில் மேற்படிப்பிற்காக வந்த நாபா விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காகவே திரும்பிச் சென்றவர்.

இந்திய அரசினதும் அதன் உளவுப்படையினதும் சதிவலைக்குள் சிக்குண்டு சமூக விரோதச் செயல்களுக்குத் தலைமை வகித்து ‘துரோகியாக’ கொல்லப்பட்டார். இறுதியில் நாபாவைக் கொலை செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.

பத்மநாபாவின் பெயரால் மக்களின் அவலங்கள் குறித்துத் துயர்கொள்வதாகக் கூறும் குழுக்கள் இந்த உண்மைகளை மறைத்துவிடுகின்றன..

பத்மநாபாவை விமர்சிக்கத்துணிவற்ற அதிகாரவர்க்கத்தின் அடியாள் கும்பல்கள் ஜூன் 19ம் திகதியை தியாகிகள் தினம் என்று கொண்டாடி மகின்ழ்கின்றன.
 
http://inioru.com/?p=36145

  • Replies 192
  • Views 16.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டாவது தடவை ஒட்டப்படுகிறது.

அதென்னமோ தெரியல்ல.. ஒட்டுக்குழுக்கள் செத்தா அதற்கு புலிகள் தான் காரணம் என்பது ஒட்டுக்குழுக்களின் எழுதாத விதியாப் போச்சுது. இன்னொரு ஆட்டிக்குட்டியொரு இணையத்தளங்களுக்கும் வேற வாய்ப்பில்ல.. கிருபண்ணாவுக்கும் முன்னாள் மாக்ஸியவாதிகளை மறக்க முடியல்ல..!

இவர்கள் மக்களைப் பொறுத்தவரை தண்டிக்கப்பட வேண்டிய கொடூரப் பாதகர்கள்..! மக்கள் இந்தக் கொலைகளைப் பற்றி ஆராய்வதில்லை. அது ரோ செய்தால் என்ன சிறீலங்கா உளவுப்படை செய்தால் என்ன. உதுகள் செத்துத் தொலைவது மக்களுக்கு நல்லது என்பது தான் மக்களின் முடிவு.

இதில் ஒருவர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளார். அவர் டக்கிளஸ் தேவானந்தா. கட்டுரை எழுதியவருக்கு அவர் வேண்டப்பட்ட ஆள் போல..!

மேலும்.. புலிகள் யாழ் குடாவை இந்தியப் படைகளிடம் இருந்து கைப்பற்றிய போது.. சண்டையில் ஈடுபட்ட.. ஈபி ஆட்களைத் தவிர பிறர் கொல்லப்படவில்லை. மாறாக சரணடையச் சொன்னனர். அப்படி சரணடைந்த பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல்.. வலிந்து சண்டையிட்ட தமிழ் தேசிய இராணுவ ஆட்களைத் தவிர சரணடைந்த பலர் விடுவிக்கப்பட்டு சாரை சாரையாக கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் போயினர். சிலர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டனர். அப்படி இணைந்து கொண்டோரில் சாந்தன் போன்றவர்களும் அடங்குவர். ஆனால் இக்கட்டுரையில் அந்த உண்மைகளை எல்லாம் அப்படியே தூக்கிக் கடாசியாச்சு. ஒட்டுக்குழுக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் அவர்களின் கட்டுரையில் பிரதிபலிக்கிறார்களே தவிர வரலாற்றை அல்ல. ஆகவே இப்படியான கட்டுரைகளை வேலை மிணக்கட்டு ஒட்டிறவை உதுகளையும் கொஞ்சம் கவனிச்சு ஒட்டுறது நல்லம். :icon_idea:

Edited by nedukkalapoovan

புலிகளுக்கு - புலிகளால் கொல்லப்பட்ட எல்லாரும் "துரோகிகள் " புலிகள் எல்லாம் "தியாகிகள்",
ஒட்டுக்குழுக்களுக்கு இது அப்படியே தலைகீழா தெரியும் ...
பிறகு எப்படி எல்லாரும் ஒரே குடையின் கீழ் வரமுடியும்?

இந்த எண்ணம் இருக்குமட்டும் ஒன்றை ஒன்று முற்றாக அழித்தொழிக்க வெளிக்கிட்டு
இப்போ ஒருத்தருக்கும் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்தாகி விட்டது

இதனைச் சொல்ல....

ஒட்டுக் குழுக்களுக்கு...உரிமை இல்லை.

சந்திலை... சிந்து பாடுவதை, ஒட்டுக் குழுக்கள் நிறுத்தினால்,

தமிழினம் தன்ரை, பாட்டில் விடிவு பெறும். :)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு - புலிகளால் கொல்லப்பட்ட எல்லாரும் "துரோகிகள் " புலிகள் எல்லாம் "தியாகிகள்",

ஒட்டுக்குழுக்களுக்கு இது அப்படியே தலைகீழா தெரியும் ...

பிறகு எப்படி எல்லாரும் ஒரே குடையின் கீழ் வரமுடியும்?

இந்த எண்ணம் இருக்குமட்டும் ஒன்றை ஒன்று முற்றாக அழித்தொழிக்க வெளிக்கிட்டு

இப்போ ஒருத்தருக்கும் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்தாகி விட்டது

புலிகள் தண்டனை வழங்கிய துரோகிகள் எவருமே மக்களால் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லப்பட்டவர்கள் அல்ல. மேலும் துரோகிகளை புலிகள் பகிரங்கமாக காரணத்தைச் சொல்லித்தான் தண்டித்தார்கள். துரோகிகள் எனப்படுவோர் மக்களுக்கும் தேசத்திற்கும் எதிராகச் செயற்பட்டவர்கள்.

ஆனால் ஒட்டுக்குழுக்களுக்கு புலிகளைத் தண்டிக்க என்ன அருகதை இருக்கிறது. ஒட்டுக்குழுக்கள் மக்களுக்கும் தேசத்திற்கும் செய்த நன்மை என்ன..???!

இங்கு பேசப்படும் தியாகிகள் எனப்படுவோர்.. செய்த பாதகங்கள் சாதாரண மக்களின் வாழ்வைக் கூட பாதித்துள்ளன. அந்த வகையில்.. இவர்களின் சாவுக்கு மக்கள் அனுதாபப்படவோ.... இரங்கல் செய்யவோ தயாராக இல்லை. இவர்களைப் புலிகளோடு யாரும் ஒப்பிடவே முடியாது. மக்கள் மனங்களில் புலிகளின் நிலை என்பது சொந்தப் பிள்ளைகள் என்பதாகவே உள்ளது. இவர்கள் காடையர்களாக கொலைக்காரப் பாதகர்களாக உள்ளனர். அதுதான் துரோகிகளுக்கும் உண்மைத் தியாகிகளுக்கும் உள்ள வேறுபாடு.

இந்தத் துரோகிகளைத் தியாகிகள் என்பதே அநியாயமானது.

சுரேஸ் பிரேமசத்திரனை நோர்வேயில் வைத்து மக்கள் நையப்புடைத்து அனுப்பிய பின் தான் அவர் கொஞ்சம் என்றாலும் தன்னிலை உணர்ந்தார். ஆனால்.. இதே காலப்பகுதியில் பெரும் குத்தாட்டம் போட்ட குத்தியர் இந்தக் கட்டுரையில் திட்டமிட்டுப் புறக்கணிக்கக்கப்பட்டிருப்பதானது.. அவருக்கு வேண்டப்பட்டவர்கள் இதனை ஆக்கியதற்கான ஆதாரமாக இருக்கிறது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு - புலிகளால் கொல்லப்பட்ட எல்லாரும் "துரோகிகள் " புலிகள் எல்லாம் "தியாகிகள்",

ஒட்டுக்குழுக்களுக்கு இது அப்படியே தலைகீழா தெரியும் ...

பிறகு எப்படி எல்லாரும் ஒரே குடையின் கீழ் வரமுடியும்?

இந்த எண்ணம் இருக்குமட்டும் ஒன்றை ஒன்று முற்றாக அழித்தொழிக்க வெளிக்கிட்டு

இப்போ ஒருத்தருக்கும் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்தாகி விட்டது

சரி ஒரு குடையை விடுவம்.....புலியாலை சொல்லப்பட்ட துரோகிகள் 2009க்கு பிறகு எங்கை இருக்கினம்? இப்ப என்ன செய்யினம்?சரி கொல்லப்பட்டாலும் மிச்சம் மீதிகள் எங்கை எங்கை?ஆர்ப்பாடத்தையும் காணேல்லை..அணிவகுப்பையும் காணேல்லை....அடச்சீ.....நானொருமடையன் அங்கைதான் பிரச்சனை முடிஞ்சுதெல்லே...பிறகென்னத்துக்கு கொடி குத்துவிளக்கெண்டு...........

தமிழனை தமிழன் கொன்றான் இதில் இன்னும் அதற்குள் நியாயப்படுத்தல்கள்.

//செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.//

இப்படி ஒரு கேணத்தனமான பிட்டை வேறு போடுகின்றார்.

இதில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை. உலகத்துக்கும் நண்பர்கள் இல்லை.

தமக்கே அவர்கள் நண்பர்கள் இல்லை (மாத்தையா கருணா பிள்ளையான் என பட்டியல் நீள்கின்றது).

அவர்களை போராளிகள் என்றோ புரட்சிக்காரர்கள் என்றே உலகம் ஒப்பாது. (கடசிவரை உலகம் ஒப்புக்கொள்ளவில்லை)

இந்தியா என்ற மாபெரும் சக்தியை புறக்கணித்து தமிழீழம் தமிழருக்கு உரிமை என்பது சாத்தியமி்ல்லை என்று நம்பிய ஒப்பற்ற மனிதர் பத்மநாபா.

எல்லாவற்றையும் புறக்கணித்து முள்ளிவாய்க்காலில் பரிதாபமாக பயங்கரவாதமாக முடிந்த போராட்டத்தின் கதையில் நியாயப்படுத்த எதுவும் இல்லை. அப்படி அல்ல இப்படி இப்படி அல்ல அப்படி என்று சுயஇன்பம் மட்டும் காண்கின்றார்கள். கண்டு அனுபவி்க்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கெடுகாலம் சற்று மறைவாய்ப் போனால் :rolleyes:

காணாது போவர் களத்தில் - இன்றேல்

கரவு ஐடியுடன் வருவர் மீண்டே.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியாகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

சரியான தண்டனையை மக்களின் விருப்புக்கு இணங்க புலிகள் வழங்கினார்கள். புலிகள் முள்ளிவாய்க்காலில் கட்டாய இராணுவத்துக்கு சேர்த்தார்கள் என வரதராஜபெருமாள் சொன்ன போது நீங்களும் கட்டாயமாக மக்களை பிடித்து இராணுவப்பயிற்சி கொடுத்தீர்கள், பங்கர் வெட்ட பயன்படுத்தினீர்கள் என்று கேட்ட போது அவரால் பதிலளிக்க முடியாமல் போனதே இதற்கான 100 % நிருபணமானது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை தமிழன் கொன்றான் இதில் இன்னும் அதற்குள் நியாயப்படுத்தல்கள்.

//செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.//

இப்படி ஒரு கேணத்தனமான பிட்டை வேறு போடுகின்றார்.

இதில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை. உலகத்துக்கும் நண்பர்கள் இல்லை.

தமக்கே அவர்கள் நண்பர்கள் இல்லை (மாத்தையா கருணா பிள்ளையான் என பட்டியல் நீள்கின்றது).

அவர்களை போராளிகள் என்றோ புரட்சிக்காரர்கள் என்றே உலகம் ஒப்பாது. (கடசிவரை உலகம் ஒப்புக்கொள்ளவில்லை)

இந்தியா என்ற மாபெரும் சக்தியை புறக்கணித்து தமிழீழம் தமிழருக்கு உரிமை என்பது சாத்தியமி்ல்லை என்று நம்பிய ஒப்பற்ற மனிதர் பத்மநாபா.

எல்லாவற்றையும் புறக்கணித்து முள்ளிவாய்க்காலில் பரிதாபமாக பயங்கரவாதமாக முடிந்த போராட்டத்தின் கதையில் நியாயப்படுத்த எதுவும் இல்லை. அப்படி அல்ல இப்படி இப்படி அல்ல அப்படி என்று சுயஇன்பம் மட்டும் காண்கின்றார்கள். கண்டு அனுபவி்க்கட்டும்.

நீங்கள் மட்டும் .... யாருக்கும் தெரியாமல் ஈழம் அமைத்து. அதை ஒழித்து வைத்து அதில் வாழ்கிறீர்கள் ஆக்கும்???

நீங்கள் எழுதியதுதான் உண்மை...
பத்மநாபா தான் ஒப்பற்ற தலைவர்.
அதுதான் அசோகா கோட்டலில் குடியிருந்து ஒப்பற்ற விபச்சாரம் செய்தவர்.
 
உயிரை பணயம் வைத்து இந்திய காவல் அரணுக்குள் புகுந்து முளையிலேயே ....
நாபா இந்தியாவில் இருந்து கொண்டுவந்த கேரளா காரிகளை  போட்டுத்தள்ளிய புலிகள் பயங்கர வாதிகள்தான்.

தமிழரின் அவல நிலைக்கு காரணம்  தேடி எங்கும் அலையத்  தேவை இல்லை. இந்த இணையத்தில் வரும் கருத்துக்களை தொடர்ந்து வாசித்தால் புரிந்துவிடும்.

இயக்கங்களில் ஒரு தவறுமில்லை. அவர்கள் யாழ்பாணத்தவரின் விருப்புக்களை  பிரதிபலித்து  பலிக்கடாவாகினர்.   என்னுடைய இனம் அல்லாதவர்கள் கலாசார காமுகர்கள். என்னுடைய கருத்தை ஏற்காதவர்கள் எதிரிகள். என்னை முற்று முழுதாக ஏற்காதவர்கள் முட்டாள்கள். என்னை சார்ந்தவர்களும் எனது கருத்தை ஒத்தவர்களும் மட்டுமே உத்தமர்கள். புத்திசாலிகள் மற்றவரை அழித்தொழிப்பதில் தவறில்லை. இதுவே யாழ்ப்பான தமிழரின் பெரும் போக்கு.  இது மாறுவதற்கு நிறைய காலம் தேவைப்படும். உலகெங்கும் சிதறி அறிவையும் அனுபவத்தையும் பெற்றும் அதிகம் மாறுவதாகத் தெரியவில்லை. புலம் பெயந்த தேசத்தில் அடுத்த சந்ததிக்கும் அதை கொடுத்து வருகிறார்கள். இது மாற வேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழர் அல்லாதவர்க்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

காதலிச்ச பெட்டை கடிதத்தை வாங்கவில்லை என்றால் ..........

நேரடியாக எழுதி ஆலோசனை கேட்கலாம்.

சரி ஒரு குடையை விடுவம்.....புலியாலை சொல்லப்பட்ட துரோகிகள் 2009க்கு பிறகு எங்கை இருக்கினம்? இப்ப என்ன செய்யினம்?சரி கொல்லப்பட்டாலும் மிச்சம் மீதிகள் எங்கை எங்கை?ஆர்ப்பாடத்தையும் காணேல்லை..அணிவகுப்பையும் காணேல்லை....அடச்சீ.....நானொருமடையன் அங்கைதான் பிரச்சனை முடிஞ்சுதெல்லே...பிறகென்னத்துக்கு கொடி குத்துவிளக்கெண்டு...........

"துரோகிகளின்" முதுகெலும்பு புலிகளால் முறிக்கப்பட்டு விட்டது..பின் அவர்களுக்கு

இருந்த ஒரே வழி "யார்" காலில் விழுந்தாவது உயிரை காப்பது தான்....

சகோதரன் தமிழனே விரட்டி விரட்டி கொல்லும் போது

பிச்சை (உயிர்/உணவு) போடும் சிங்களவன் சொல்லு கேப்பானா?

தமிழரின் அவல நிலைக்கு காரணம்  தேடி எங்கும் அலையத்  தேவை இல்லை. இந்த இணையத்தில் வரும் கருத்துக்களை தொடர்ந்து வாசித்தால் புரிந்துவிடும்.

இயக்கங்களில் ஒரு தவறுமில்லை. அவர்கள் யாழ்பாணத்தவரின் விருப்புக்களை  பிரதிபலித்து  பலிக்கடாவாகினர்.   என்னுடைய இனம் அல்லாதவர்கள் கலாசார காமுகர்கள். என்னுடைய கருத்தை ஏற்காதவர்கள் எதிரிகள். என்னை முற்று முழுதாக ஏற்காதவர்கள் முட்டாள்கள். என்னை சார்ந்தவர்களும் எனது கருத்தை ஒத்தவர்களும் மட்டுமே உத்தமர்கள். புத்திசாலிகள் மற்றவரை அழித்தொழிப்பதில் தவறில்லை. இதுவே யாழ்ப்பான தமிழரின் பெரும் போக்கு.  இது மாறுவதற்கு நிறைய காலம் தேவைப்படும். உலகெங்கும் சிதறி அறிவையும் அனுபவத்தையும் பெற்றும் அதிகம் மாறுவதாகத் தெரியவில்லை. புலம் பெயந்த தேசத்தில் அடுத்த சந்ததிக்கும் அதை கொடுத்து வருகிறார்கள். இது மாற வேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழர் அல்லாதவர்க்கும் நல்லது.

ஈழ தமிழரால் உலக மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்புகள் எத்தனை

என்று கணக்கிட்டால் எங்களது உண்மையான அறிவு நிலையும் தெரியும்

யாரும் சொல்லிகொடுத்தால் அதை கவனமாக படிப்போம் ...இல்லை என்றால் ஞான சூனியம் தான்

சரியான தண்டனையை மக்களின் விருப்புக்கு இணங்க புலிகள் வழங்கினார்கள். புலிகள் முள்ளிவாய்க்காலில் கட்டாய இராணுவத்துக்கு சேர்த்தார்கள் என வரதராஜபெருமாள் சொன்ன போது நீங்களும் கட்டாயமாக மக்களை பிடித்து இராணுவப்பயிற்சி கொடுத்தீர்கள், பங்கர் வெட்ட பயன்படுத்தினீர்கள் என்று கேட்ட போது அவரால் பதிலளிக்க முடியாமல் போனதே இதற்கான 100 % நிருபணமானது.

இதை சொன்னா துரோகிகள் என்கிறார்கள்..

எல்லாரும் பலமாக இருக்கும் போது படம் காட்டிவிட்டு ...

கத்தி கழுத்துக்கு வரும்போது....முதல் தள்ளி விடப்படுவது சாதாரண பொது மக்கள் தான்

1989 இலும் அது தான்...2009 இலும் அது தான்  :)

எங்களது எல்லா போராளிகளும் ஒன்றையே செய்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"துரோகிகளின்" முதுகெலும்பு புலிகளால் முறிக்கப்பட்டு விட்டது..பின் அவர்களுக்கு

இருந்த ஒரே வழி "யார்" காலில் விழுந்தாவது உயிரை காப்பது தான்....

சகோதரன் தமிழனே விரட்டி விரட்டி கொல்லும் போது

பிச்சை (உயிர்/உணவு) போடும் சிங்களவன் சொல்லு கேப்பானா?

ஈழ தமிழரால் உலக மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்புகள் எத்தனை

என்று கணக்கிட்டால் எங்களது உண்மையான அறிவு நிலையும் தெரியும்

யாரும் சொல்லிகொடுத்தால் அதை கவனமாக படிப்போம் ...இல்லை என்றால் ஞான சூனியம் தான்

டெலோ தாஸ் குறுப்பை சேர்ந்த பலரை புலிகள் இந்தியாவிற்கே கொண்டு சென்று விட்டார்கள்.

கிழக்கை சேர்ந்த புளொட்டை புலிகள்தான் வண்டி ஏற்றினார்கள்.
ஈப்பி அது முதலேயே பிச்சை எடுத்துதான் ரோட்டில் நின்றது. மக்கள் பிச்சை போடுவதை நிறுத்தியதும் அவர்களும் வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.
 
இந்த காலில் விழுந்து "உயிரை பாதுகாத்தவர்கள் யார்"?? 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்னமோ தெரியல்ல.. ஒட்டுக்குழுக்கள் செத்தா அதற்கு புலிகள் தான் காரணம் என்பது ஒட்டுக்குழுக்களின் எழுதாத விதியாப் போச்சுது. இன்னொரு ஆட்டிக்குட்டியொரு இணையத்தளங்களுக்கும் வேற வாய்ப்பில்ல.. கிருபண்ணாவுக்கும் முன்னாள் மாக்ஸியவாதிகளை மறக்க முடியல்ல..!

தமிழர்களின் போராட்ட வரலாற்றில் நடந்தவற்றைப் பற்றி ஒவ்வொருவரும் தமது அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து கருத்துக்கள் விமர்சனங்கள் வைக்கும்போது உண்மைகள் அடிபட்டுப் போகலாம். எனவேதான் பலதையும் படித்து பகுத்தாராய்ந்து உண்மைகளை பொய்களில் இருந்து விலக்கி வடிகட்டி எடுக்கவேண்டும். அதனால்தான் இப்படியான கட்டுரைகளை இணைப்பதுண்டு.

மேலும் தியாகிகள் தினம், வீரமக்கள் தினம் என்று தமது இயக்கங்கள் சார்ந்து நினைவு நாட்களை நடாத்துபவர்கள் தமது வேறுபட்ட அரசியலைத்தான் அடையாளப்படுத்துகின்றனர்.

தியாகிகள் தின நிகழ்வுகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்றோர் போவதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் 

புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தமைக்காக புலிகளையும்

அவர்களை ஆதரித்தமைக்காக என்னையும்

என் பிள்ளையையும் வெறுக்கும்  திருவாளர் அர்யூன் அவர்கள்

தனது ஒரே ஒரு தலைவர் பத்மநாபாதான் முதன் முதலாக இதை ஆரம்பித்து வைத்தார் என்பதனையும்

அந்த தலைவரை தான் இன்றும் ஆதரிப்பதையும்  இங்கு ஏன் இந்த இரட்டை வேடம் என்பதையும் விளக்குவாரா????

(இந்த கட்டுரை புலிகளுக்கு எதிராக எழுதப்பட்டிருந்தாலும் அதிலேயே  உள்ள விவகாரங்களையே  கேட்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளை பிடியில் ஈ என் டி எல் எவ் னதும் பங்களிப்பு இந்த ஒருதலைப்பட்ச நோக்கம் கொண்ட எழுத்தில்.. முற்றாக மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிள்ளை பிடி மட்டுமல்ல. பொம்பிளைப் பிள்ளைகளைக் கடத்திச் சென்று இந்திய இராணுவத்திற்கும் தமது உயர் மட்ட உறுப்பினர்களுக்கும் சப்பிளை செய்து பின்னர் கொன்று புதைத்தனர். இவர்களின் மிகப் பெரிய வதை முகாம்.. மானிப்பாய் வீதியில் யாழ் நகரை அண்டி இயங்கியது. அந்தக் காலத்தில் பள்ளிச் சிறுவர்கள் கூட அந்தப் பாதையால் போக.. முடியாதிருந்தது. அந்தளவுக்கு கெடுபிடிகள்..! :icon_idea:

நாளைக்கு கனடாவில் நடைபெறும் நினைவு நாளில் ஒரு சில வார்த்தைகள் பேசலாம் என யோசிக்கின்றேன்.

அதற்கு இங்கு பலர் குறிப்புகள் தந்ததற்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வரிகள் இத்திரியில் எழுத முடியாதவர் எதனை பேசப் போகிறீர்கள்??

இடம் காலம் பொருள் ஏவல் என்று இருக்கு .

அதைவிட களம் வேறு தளம் வேறு. இவையெல்லாவற்றையும் விட மாறுபட்ட ஆழுமை என்பது முற்றிலும் வேறு .அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சந்தித்தவர்களுக்கு மட்டும் அது விளங்கும் .

யாழ் களத்திலும் நிறைய பி எச் டிக்கள் உள்ளனர். புத்தி ஜீவிகளும் நிறைய பேர் உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.