Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

45 வருடங்களின்பின் மறுவாசிப்புப்புக்காக - வ.ஐ.ச ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது 45 வருடங்களின்முன்னர் நான் எழுதிய முதல்கவிதை. இன்றும் பொருத்தமாக உயிர்புடன் இருக்கிறதாக பாராட்டப் படுகிற கவிதை. புதிய நிலமையில் உங்கள் மறுவாசிப்பிக்காக. இறுதி வெற்றி நமதே. இது முதல் இடுகை நிராகரிக்கப்பட்டது. இதனை அனுமதியுங்கள் அல்லது யாழில் என் அங்கத்துவத்தையும் நிராகரித்துவிடுங்கள்.

Please allow it or remove my yarl membership with the poem

 

MY FIRST POEM

 

The Pali river, quietly flowing

By V.I.S. JAYAPALAN

(translated and edited by

LAKSHMI HOLMSTRÖM)

 

Scattered intermittently

across the plains,

fields are being ploughed.

But sudden sounds of machines

cannot dispel

the abiding silence.

 

 

Without any pageantry,

quietly

the Pali river flows onward.

The tall grasses, uncontrollable,

whisper to the wind

exchanging secrets.

Innumerable birds make music.

The viraal fish leap into the air

and splash down again into the water.

All the same

something safeguards the silence.

 

 

Beyond the bend

screened by a granite rock

just next to dense bullrushes,

upon the sandy shore, under

the shade of the marutha trees

which tower on both sides,

filtering the light —

 

 

the pretty girls of our village

share the local gossip

in fine detail.

They laugh, they tease,

get angry, quarrel,12

wash their clothes; bathe.

 

 

All the same,

silently

the river flows onward.

The foot-prints of Pandara Vanniyan

who marched his troops

across theses sands, long ago,

are still here.

Here it was he rested,

conferred with his army chieftains,

planned his attack;

washed his dusty feet,

drank from his cupped hands,

closed his eyes in the shade

of the same marutha tree

contented in his visions of victory

and the retreat of the white men.

 

 

Beyond the bend,

behind the same rock-screen

our village girls still bathe.

Without pomp or pageantry

the river flows on.

Note: Kulasegaram Vairamuthu Pandaravanniyan was the last king of Vanni,

and one of the last of the local chiefs to challenge British rule, losing finally, in

1811.

 

 

 

பாலி ஆறு நகர்கிறது

அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது

இயந்திரங்கள் ஆங்காங்கு

இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில் 
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்

ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து 
கேலி செய்து
சினந்து

வாய்ச் சண்டை யிட்டு

துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும் 
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது


அந் நாளில்

பண்டார வன்னியனின்* 
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்

அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.

1968

* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.

 

 

 

 

 

 

 

 

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இதனை... 1968´ம் ஆண்டில் நீங்கள் எழுதியற்கு ஆதாரம் உண்டா?
பொய்யும்... புரட்டும் சொல்லி, மனிதன் வாழ்வதில்... அர்த்தமில்லை.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீயின் கேழ்வி ஆச்சரியமாய் இருக்கு.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

 

இக்கவிதை முதன் முதலில் 1968 மல்லாவி யோகபுரம் பாடசாலை ஆண்டுமலரில் வெளியானது.

 

இதன்பின்னர் 1970 ஈழநாட்டிலும் பின்னர் தீபம் (சென்னை)1லும் வெளிவந்தது. அதன்பின் நூறுதடவையாவது மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும்.

புத்தக உருவில் முதலில்  1984ல் தமிழகத்தில் வெளியான பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுப்பு நூலிலும் பின்னர் 1987l கிரியா வெளியிட்ட நமக்கென்றொரு புல்வெளி கவிதை தொகுப்பிலும்  2002 பெருந்தொகையிலும்க் இடம்பெற்றது.  வெளிவந்தது

 

நண்பர் சிறீ ஏன் ஆதாரம் கேட்டார் என்பது ஆச்சரியமாய் இருக்கு. தப்பென்று சொல்லவில்லை. இந்தக் கேழ்வி எனக்குப் புதிசு. 

 

http://www.noolaham.org/wiki/index.php?

 

title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

http://noolaham.net/project/05/412/412.pdf

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞனுக்கு,முகவரி கொடுத்த கவிதை இது, தமிழ் சிறி!

 

இதைப் 'பாலியாறு நகர்கிறது' என்ற பெயரில்,ஜெயபாலன் தான் எழுதினார்! :D

 

இதற்கும் மேல் ஆதாரம் தேவைப்பட்டால், கலாநிதி சண்முகதாஸ், நுஹ்மான், நிர்மலா நித்தியானந்தன், ஆகியோரைக் கேட்டுப் பாருங்கள்! :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞனுக்கு,முகவரி கொடுத்த கவிதை இது, தமிழ் சிறி!

 

இதைப் 'பாலியாறு நகர்கிறது' என்ற பெயரில்,ஜெயபாலன் தான் எழுதினார்! :D

 

இதற்கும் மேல் ஆதாரம் தேவைப்பட்டால், கலாநிதி சண்முகதாஸ், நுஹ்மான், நிர்மலா நித்தியானந்தன், ஆகியோரைக் கேட்டுப் பாருங்கள்! :icon_idea:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29916

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அழகான கவிதை 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அவர்களே, எனக்குத்தெரிந்து பண்டாரவன்னியன், எல்லாளன், சோழன் எல்லாமே எனது அண்ணரே. என்னமோ தெரியவில்லை, இக்கவிதையைப்படித்ததும் ஒருதடவை அழுதுவிட்டேன்.நன்றி தோழா. நான் இதை நீண்டகலத்துக்குமுன்பு வாசித்திருக்கிறேன், அப்போது எனக்கு இப்படியான உணர்விருந்ததோ! இல்லை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலியாற்றில் பலதடவை குளித்து .... கும்மாளம் போட்டிருக்கிறேன்.


சிறீயின் கேழ்வி ஆச்சரியமாய் இருக்கு.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

 

இக்கவிதை முதன் முதலில் 1968 மல்லாவி யோகபுரம் பாடசாலை ஆண்டுமலரில் வெளியானது.

 

இதன்பின்னர் 1970 ஈழநாட்டிலும் பின்னர் தீபம் (சென்னை)1லும் வெளிவந்தது. அதன்பின் நூறுதடவையாவது மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும்.

புத்தக உருவில் முதலில்  1984ல் தமிழகத்தில் வெளியான பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுப்பு நூலிலும் பின்னர் 1987l கிரியா வெளியிட்ட நமக்கென்றொரு புல்வெளி கவிதை தொகுப்பிலும்  2002 பெருந்தொகையிலும்க் இடம்பெற்றது.  வெளிவந்தது

 

நண்பர் சிறீ ஏன் ஆதாரம் கேட்டார் என்பது ஆச்சரியமாய் இருக்கு. தப்பென்று சொல்லவில்லை. இந்தக் கேழ்வி எனக்குப் புதிசு. 

 

http://www.noolaham.org/wiki/index.php?

 

title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

http://noolaham.net/project/05/412/412.pdf

மண் வாசனையாய் இருக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரும் யாழ் களத்தில் படித்த அழகான கவிதை. பண்டாரவன்னியன் இடத்தில் தலைவர் பிரபாகரனை நினைத்துப் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை... 1968´ம் ஆண்டில் நீங்கள் எழுதியற்கு ஆதாரம் உண்டா?

பொய்யும்... புரட்டும் சொல்லி, மனிதன் வாழ்வதில்... அர்த்தமில்லை.

 

உண்மை தெரிஞ்ச பிறகாவது மன்னிப்பு கேட்கும் பழக்கம் இருக்கா :unsure:
  • கருத்துக்கள உறவுகள்

இதனை... 1968´ம் ஆண்டில் நீங்கள் எழுதியற்கு ஆதாரம் உண்டா?

பொய்யும்... புரட்டும் சொல்லி, மனிதன் வாழ்வதில்... அர்த்தமில்லை.

 

நல்ல கேள்வி. நிலைதடுமாறும் மனிதர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி..! இதன் பயனாக சில ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. :)

 

இந்தக் கவிஞரையும் கவிதைகளையும் நாங்க எல்லாம் யாழ் களத்தில் தான் அறிகிறோம்.. புங்கையூரன் அண்ணா. இவர் அந்தளவுக்கு செல்வாக்குள்ள கவிஞராக இருந்திருக்கிறாரா.. இருந்திருந்தால்.. ஏன் இவரின் கவிதைகள் பாடவிதானத்தில் சேர்க்கப்படவில்லை..???! :icon_idea::rolleyes:

விபுலானந்தர்.. சோமசுந்திரப் புலவர்.. பண்டிதமணி தேசியவிநாயகம்பிள்ளை... பண்டிதமணி கணபதிப்பிள்ளை.. என்று இன்னோரென்ன கவிஞர்களின் கவிதைகளும் விமர்சனங்களும் பாடவிதானத்தை அலங்கரித்ததே..!

 

நாங்கள் சிலருக்கு சும்மா அளிக்கும் முக்கியத்துவமே அப்புறம் நமக்கு விசமாகவும் மாறிவிடுகிறது..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எவரதும் மனதை நோகடிப்பது தவறு, நான் அறிய எண்பதுகளிலேயே நாம் அறிந்த கவிதையாளராக ஜெயபாலன் அவர்கள் இருந்துள்ளார். அவ்வேளையில், சாருமதி, வில்வரெத்தினம், போன்றோருடன் நான் இவரைப் பார்த்திருக்கிறேன். மேலும், இது அவருக்கான என்னுடைய சாட்சியமும் இல்லை அது தேவையுமில்லை. தவிர அவர்களுடன் ஒன்றிய கருத்துடையவராக நான் அறியவில்லை. ஜெயபாலனது கவிவளத்துடன் யாரும் சந்தேகம் கொள்ளல் கூடாது. மற்றும் ஒரு படைப்பாளிக்கு இச்சமூகம்மீது எதோவொரு காரணத்தால் ஆத்திரம் இருந்துகொண்டே இருக்கும். அது பாரதியாக இருக்கலாம் அன்றேல் இங்கு குறிப்பிடும் ஜெயபாலனாக இருக்கலாம். நாம் பார்க்கத் தவறும் விடையங்களை அன்றேல் பார்க்கும் விடையங்களை இன்ணொரு கோணத்தில் அணுகி அதை எமக்குத் தருவதே படைப்பாளியது கடமை அவர் தன் பணி செய்துகிடக்கிறார். அவரைக் கீறி ரணமாக்காதீர்கள். இதில் நான் உடன்படமாட்டென்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளி என்ற சுயபோர்வைக்குள் இருந்து கொண்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது.. அந்த உணர்வுகளை கிழித்தெறிந்து ரண களமாடுபவர்களை எல்லாம் மக்கள் கேட்டுக் கேள்வி இன்றி.. படைப்பாளியாக ஏற்றுக் கொள்ளனும் என்றில்லைத்தானே. இத்தனை ஆண்டுகளாக போரியல் வரலாற்றை அரசியல் துரோகங்களை வக்குரோத்துத் தனங்களைக்.. கடந்து வந்த மக்களும் சிந்திக்க சிலாகிக்கச் செய்வார்கள் தானே. அதனையும் படைப்பாளிகள் என்ற போர்வையில் மக்களை நோக்கி ஆக்கங்களை முன் வைப்பவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்..!

 

இந்தக் கவிஞர்.. ஒரு காலத்திற்கு மட்டுமே கவிஞராக இருந்துள்ளார். எங்களைப் போன்ற மற்றும் இளைய தலைமுறையினருக்கு இவரை யார் என்றும் தெரியாது. அறிந்து கொள்ள வேண்டிய கடப்பாடும் இருக்கவில்லை..! இப்போ.. புதுவையாரைத் தெரிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு போன்றதல்ல இவர்கள். பாரதி கொள்கை தவறாதவன். புதுவை கொள்கை தவறாதவன். அவர்களோடு இவர்களை வைத்து ஒப்பிடவே கூடாது. அத்தோடு அவர்கள் எல்லாம்.. மக்களின் பொது விருப்பறிந்து அதற்குள்.. தங்களை வைத்துக் கொண்டனர். அதனால் அவர்கள் மக்களால் எப்போதும் போற்றப்படுகிறார்கள். ஆனால் பச்சோந்திப் படைப்பாளிகளை மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள். அதனால் தான் இவர்களின் நாமமும் படைப்பும் மங்கிப் போயுள்ளது என்று நினைக்கிறேன்.

 

அதனை உணர்ந்து இவர்கள் செயற்படனும். அப்போதுதான் மக்கள் இவர்களின் ஆக்கங்களை விரும்பிப் படிப்பார்கள். மக்கள் படிக்க விரும்பாத ஆக்கங்களைப் படைப்பவர்கள் எல்லாம் மக்கள் படைப்பாளியாக முடியாது. சுய படைப்பாளிகளாக மட்டுமே இருக்க முடியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தக் கவிஞர்.. ஒரு காலத்திற்கு மட்டுமே கவிஞராக இருந்துள்ளார். எங்களைப் போன்ற மற்றும் இளைய தலைமுறையினருக்கு இவரை யார் என்றும் தெரியாது. அறிந்து கொள்ள வேண்டிய கடப்பாடும் இருக்கவில்லை..! இப்போ.. புதுவையாரைத் தெரிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு போன்றதல்ல இவர்கள்.

 

ஈழத்து இலக்கிய வரலாற்றையும் கவிதைத் துறையில் முன்னோடியாக இருந்தவர்களையும் அறியவேண்டுமென்றால் இலக்கியத் தேடல் இருக்கவேண்டும். அதைவிடுத்து பாடப் புத்தகங்களில் உள்ளவர்கள்தான் முக்கியமானவர்கள் என்று நீங்கள் கருதுவது உங்களது குறுக்கப்பார்வையையே காட்டுகின்றது. அத்தோடு உங்களுக்குத் தெரிந்திருக்காவிட்டால் அதைப் பற்றிய ஆழமாகப் தேடி அறிந்து கருத்துக்களை வைப்பது நல்லது.

கவிஞர் ஜெயபாலனின் அரசியல் கருத்துக்களோடு இணக்கமில்லை என்பதற்காக அவரது கவிதை ஆளுமையை கொச்சைப்படுத்துவது வெறும் காழ்ப்புணர்வும் செருக்கும் கொண்டதால்தான் வருவது. நெடுக்ஸ் போன்று இணையங்களில் அனாமேதயமாக இருந்துகொண்டு அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொண்டு இருப்பவர்களின் அங்கீகாரத்தை கவிஞர் ஜெயபாலன் போன்ற கலைஞர்கள் இரந்து வேண்டிப் பெறவேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழத்து இலக்கிய வரலாற்றையும் கவிதைத் துறையில் முன்னோடியாக இருந்தவர்களையும் அறியவேண்டுமென்றால் இலக்கியத் தேடல் இருக்கவேண்டும். அதைவிடுத்து பாடப் புத்தகங்களில் உள்ளவர்கள்தான் முக்கியமானவர்கள் என்று நீங்கள் கருதுவது உங்களது குறுக்கப்பார்வையையே காட்டுகின்றது. அத்தோடு உங்களுக்குத் தெரிந்திருக்காவிட்டால் அதைப் பற்றிய ஆழமாகப் தேடி அறிந்து கருத்துக்களை வைப்பது நல்லது.

கவிஞர் ஜெயபாலனின் அரசியல் கருத்துக்களோடு இணக்கமில்லை என்பதற்காக அவரது கவிதை ஆளுமையை கொச்சைப்படுத்துவது வெறும் காழ்ப்புணர்வும் செருக்கும் கொண்டதால்தான் வருவது. நெடுக்ஸ் போன்று இணையங்களில் அனாமேதயமாக இருந்துகொண்டு அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொண்டு இருப்பவர்களின் அங்கீகாரத்தை கவிஞர் ஜெயபாலன் போன்ற கலைஞர்கள் இரந்து வேண்டிப் பெறவேண்டியதில்லை.

 

தலைசிறந்த தகுதி வாய்ந்த.. ஈழத்துப் படைப்பாளிகள் தான் பாடப்புத்தகங்களில் இடம்பிடிக்க முடியும். சும்மா வங்குரோத்து படைப்பாளிகள் எல்லாம் அப்படி அமைய முடியாது. மேலும்.. கவிஞர்கள் என்பவர்களுக்கு தமிழ் புலமை என்பது முக்கியமானது. இணையத் தமிழை சரிவர எழுதத் தெரியாத தவறை திருத்த உணராத ஆக்களுக்கும் நீங்கள் படைப்பாளி அந்தஸ்து கொடுப்பீர்கள். ஏன்னா.. அவர்களுக்கு காக்கா பிடிப்பது உங்கள் வழமை..!

 

இலக்கியத் தேடல் என்பது இன்னொரு இணையத்தளத்தைப் படிப்பதும் பகிர்வதும் அல்ல. அதனைக் கடந்து கால நோக்கில் தேட வேண்டும். நான் நினைக்கவில்லை அந்தளவுக்கு நீங்கள் தேடல் அறிவு கொண்டவர் என்று. அப்படி என்றால்.. மூத்த தமிழ் இலக்கியவாதிகளின் சிறப்புப் பற்றி ஒரு நாலு வரி.. சொல்லுங்கள் பார்க்கலாம்..??! நிறைய இலக்கிய தேடல்  செய்வதாக எண்ணிக் கொள்ளும்.. நீங்கள் அதைச் செய்யனும்..!

 

மேற்படி கவிஞரை இலங்கைக்குள்ளும்.. வெளியிலும் கேள்விப்பட்டதே இல்லை. யாழ் தான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

 

கவிஞன் என்பவன் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும். அது ஒரு அடிப்படைத்தகுதி. அந்த உணர்தல் இன்றி மக்களை நோக்கி ஆக்கங்களைப் படைக்க முடியாது. அந்த உணர்தல் இந்தப் படைப்பாளியிடம் இல்லை என்பது தான் எங்கள் கருத்து. மற்றும்படி இவரை தனிப்பட்ட முறையில் நான்  மக்கள் விரும்பத்தக்க.. ஒரு படைப்பாளியாக இனங்காணவில்லை. அதற்கான தேவை எனக்கும் இல்லை. :icon_idea:

 

அப்புறம் முக்கிய குறிப்பு: நாங்கள் எங்களை எங்கேயும் எப்போதும் அறிவுஜீவின்னு சொன்னதில்லை. நீங்களா அப்படி கற்பனை செய்து கொள்ளுறீங்க. அறிவுஜீவின்னு சொல்லுற பதத்திற்கு ஒரு வலுவான வரைவிலக்கணம் உண்டு. அதனை அவ்வளவு இலகுவாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாது. எப்படி எங்களைச் சிலர் தேசியவாதின்னு கற்பனை பண்ணிக்கினமோ அதையே தான் நீங்களும் செய்கிறீர்கள். அது உங்கள் அறியாமை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தலைசிறந்த தகுதி வாய்ந்த.. ஈழத்துப் படைப்பாளிகள் தான் பாடப்புத்தகங்களில் இடம்பிடிக்க முடியும். சும்மா வங்குரோத்து படைப்பாளிகள் எல்லாம் அப்படி அமைய முடியாது. மேலும்.. கவிஞர்கள் என்பவர்களுக்கு தமிழ் புலமை என்பது முக்கியமானது. இணையத் தமிழை சரிவர எழுதத் தெரியாத தவறை திருத்த உணராத ஆக்களுக்கும் நீங்கள் படைப்பாளி அந்தஸ்து கொடுப்பீர்கள். ஏன்னா.. அவர்களுக்கு காக்கா பிடிப்பது உங்கள் வழமை..!

 

இலக்கியத் தேடல் என்பது இன்னொரு இணையத்தளத்தைப் படிப்பதும் பகிர்வதும் அல்ல. அதனைக் கடந்து கால நோக்கில் தேட வேண்டும். நான் நினைக்கவில்லை அந்தளவுக்கு நீங்கள் தேடல் அறிவு கொண்டவர் என்று. அப்படி என்றால்.. மூத்த தமிழ் இலக்கியவாதிகளின் சிறப்புப் பற்றி ஒரு நாலு வரி.. சொல்லுங்கள் பார்க்கலாம்..??! நிறைய இலக்கிய தேடல்  செய்வதாக எண்ணிக் கொள்ளும்.. நீங்கள் அதைச் செய்யனும்..!

 

மேற்படி கவிஞரை இலங்கைக்குள்ளும்.. வெளியிலும் கேள்விப்பட்டதே இல்லை. யாழ் தான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

 

கவிஞன் என்பவன் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும். அது ஒரு அடிப்படைத்தகுதி. அந்த உணர்தல் இன்றி மக்களை நோக்கி ஆக்கங்களைப் படைக்க முடியாது. அந்த உணர்தல் இந்தப் படைப்பாளியிடம் இல்லை என்பது தான் எங்கள் கருத்து. மற்றும்படி இவரை தனிப்பட்ட முறையில் நான்  மக்கள் விரும்பத்தக்க.. ஒரு படைப்பாளியாக இனங்காணவில்லை. அதற்கான தேவை எனக்கும் இல்லை. :icon_idea:

நான் எவருக்கும் காக்கா பிடிப்பதுமில்லை. வக்காலத்து வாங்குவதுமில்லை.

அத்தோடு என்னுடைய கொள்ளளவு எனக்கு நன்றாகவே தெரியும். அதற்கு மேலால் இருப்பதாகக் காட்டி எனக்கு நானே முதுகு சொறிவதில்லை. <_< 

ஈழத்து இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு உள்ளதால் எனக்கு போதிய அளவு அறிவு இருக்கின்றது. அதற்காக உங்களுக்கு எழுதிக் காட்டி நிரூபிக்க வேண்டியதில்லை. ஏனேனில் இலக்கியத் தேடல் என்றாலும் சரி, அல்லது வேறு துறையின் மீதான தேடல் என்றாலும் சரி, அவற்றை நான் எனது சுயவிருப்பினடிப்படையிலேயே செய்கின்றேன். பிறருக்கு கெட்டிக்காரன், திறமைசாலி என்று காட்டித் தகுதியற்ற புகழையும் பட்டங்களையும் தேடிக் கொள்வது ஒரு சிலருக்குத் தேவையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியான தேவைகள் இல்லை. ^_^ 

மேலும் இணையங்களிலும், விக்கிபீடியாக்களிலும் தேடிப் பெறும் அறிவு முழுமையானதல்ல. எனவே நான் எனது தேடல்களை இணையங்களோடு மட்டுப்படுத்துவதில்லை. அத்தோடு தெரியாத விடயங்களைத் தெரிந்தது போன்று எழுதி அம்மணப்படுவதிலும் நாட்டமில்லை! :lol: 

கவிஞர் ஜெயபாலனை யாழ் மூலம்தான் அறிந்து கொண்டீர்கள் என்பதற்காக அவரை யாழில் உள்ளவர்கள்தான் தெரிந்து வைத்துள்ளார்கள் என்று நீங்கள் கருதுவது உங்கள் உலகம் மிகவும் சிறியது என்பதைத்தான் காட்டுகின்றது. வளர்ச்சியும், முதிர்ச்சியும் காலக் கிரமத்தில் வந்து சேரும்போது நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்! :icon_idea: 

கூகிளில் தேடாமல் ஈழத்தில் புதுக்கவிதையிலும் மரபுக் கவிதையிலும் புகழ் பெற்றவர்களின் ஒரு சிலரின் பெயரை (சோமசுந்தரப் புலவரையும், புதுவை இரத்தினதுரையையும் ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டீர்கள்) நேர்மையாகத் தந்தால் உங்களுக்கு உண்மையிலேயே கவிதைத் துறையில் ஆர்வம் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்வேன். :icon_mrgreen: 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் எவருக்கும் காக்கா பிடிப்பதுமில்லை. வக்காலத்து வாங்குவதுமில்லை.

அத்தோடு என்னுடைய கொள்ளளவு எனக்கு நன்றாகவே தெரியும். அதற்கு மேலால் இருப்பதாகக் காட்டி எனக்கு நானே முதுகு சொறிவதில்லை. <_< 

ஈழத்து இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு உள்ளதால் எனக்கு போதிய அளவு அறிவு இருக்கின்றது. அதற்காக உங்களுக்கு எழுதிக் காட்டி நிரூபிக்க வேண்டியதில்லை. ஏனேனில் இலக்கியத் தேடல் என்றாலும் சரி, அல்லது வேறு துறையின் மீதான தேடல் என்றாலும் சரி, அவற்றை நான் எனது சுயவிருப்பினடிப்படையிலேயே செய்கின்றேன். பிறருக்கு கெட்டிக்காரன், திறமைசாலி என்று காட்டித் தகுதியற்ற புகழையும் பட்டங்களையும் தேடிக் கொள்வது ஒரு சிலருக்குத் தேவையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியான தேவைகள் இல்லை. ^_^ 

மேலும் இணையங்களிலும், விக்கிபீடியாக்களிலும் தேடிப் பெறும் அறிவு முழுமையானதல்ல. எனவே நான் எனது தேடல்களை இணையங்களோடு மட்டுப்படுத்துவதில்லை. அத்தோடு தெரியாத விடயங்களைத் தெரிந்தது போன்று எழுதி அம்மணப்படுவதிலும் நாட்டமில்லை! :lol: 

கவிஞர் ஜெயபாலனை யாழ் மூலம்தான் அறிந்து கொண்டீர்கள் என்பதற்காக அவரை யாழில் உள்ளவர்கள்தான் தெரிந்து வைத்துள்ளார்கள் என்று நீங்கள் கருதுவது உங்கள் உலகம் மிகவும் சிறியது என்பதைத்தான் காட்டுகின்றது. வளர்ச்சியும், முதிர்ச்சியும் காலக் கிரமத்தில் வந்து சேரும்போது நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்! :icon_idea: 

கூகிளில் தேடாமல் ஈழத்தில் புதுக்கவிதையிலும் மரபுக் கவிதையிலும் புகழ் பெற்றவர்களின் ஒரு சிலரின் பெயரை (சோமசுந்தரப் புலவரையும், புதுவை இரத்தினதுரையையும் ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டீர்கள்) நேர்மையாகத் தந்தால் உங்களுக்கு உண்மையிலேயே கவிதைத் துறையில் ஆர்வம் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்வேன். :icon_mrgreen: 

 

 

நீங்களே உங்களை ஒரு நிறைகுடமுன்னு நினைக்கிறப்போ.. நாங்களும் எங்கள் மட்டில் அப்படி நினைத்துக் கொள்ளலாம் தானே..!! இதனை யார் பரிசோதித்துப் பார்க்கப் போயினம்..???!

 

மேலும்.. நிறை குடம் நீங்களே நாங்கள் கேட்டதற்கு உங்களை நிறைவுத் தன்மையை வெளிக்காட்ட முற்படாத போது.. நாங்கள் ஏன் எங்கள் நிறைவுத் தன்மையை வெளிக்காட்டனும். சுய கெளரவம் அறிவை மிஞ்சிடுமில்ல..!

 

கெட்டித்தனமா எழுதிறதா எல்லாரும் நினைச்சுக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பமில்லையா..!

 

மேலும்.. இன்றைய உலகம் இலத்திரனியல் படைப்புக்களையும்.. அச்சுப்படைப்புக்களையும் கொண்ட ஒரு இடைவெளியில் உள்ளது. இலத்திரனியல் ஆக்கங்களோடு அதிகம் புழக்கமுள்ள எமக்கு அதில் கூடிய நிறைவு கிடைக்கப் பெறும் மார்க்கங்கள் தெரிவதில் தவறில்லை. கூகிளும்.. விக்கிபீடியாவிற்கும் அப்பால்.. நீங்கள்.. என்ன அகழ்வாராய்ச்சியகத்திலா தேடல் செய்து கொண்டிருக்கிறீர்கள்..!!!

 

இப்படியே நீங்களும் நீங்கள் வால்பிடிப்பவர்களுமே திறமுன்னு நினைச்சுக்கிட்டு இருங்கோ. அதுவும் நல்லது தான். வீணான அலசல் இன்றி உங்கள் கல்லுறோட்டில்... வண்டி அலுக்காமல் குலுக்காமல் ஓடுமில்ல..! அதற்காக உலகத்தில் கல்லுறோட்டும் வண்டிலும் தான் உள்ளதென்று மட்டும் நினைக்கக் கூடாது.. கிருபண்ணா. சின்னப் பிள்ளை ஒன்றின் காகிதக் கப்பல் கூட.. உங்களின் கல்லுறோட்டு வண்டிலை விட திறமைகளைக் கொண்டிருக்கலாம்.இதனையும் நீங்கள் ஏற்கும் பக்குவப்படனும்..! :lol::D

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட சிலவற்றில்.. மக்கள் நீங்களும் படிச்சு முடிவை நீங்களே செய்து கொள்ளுங்கள்..!

 

  • ஜெயபாலனின் தனித்துவமான மண்சார்ந்த, மக்களின் பண்பாடு சார்ந்த கவிமொழி எங்கிருந்து உருவாகியது?

எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது எனது மூதாதையரின் ஊரான நெடுந்தீவுக்கு வந்தேன். நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயருக்கும் டச்சுக்காரருக்கும் எதிராகக் கிளர்ந்த என் மூதாதையர்களது கதைகளை இங்குதான் அறிந்து கொண்டேன். இந்தத் தீவில் மக்கள் - குறிப்பாக முதியவர்களும் பெண்களும் - பேச்சு மொழியில் கவிதை கலந்து பேசுவதைக் கேட்டேன். எனக்குக் கவிதை சொல்லும் ஆற்றல் இப்படித்தான் வந்திருக்க வேண்டும்.

என்னுடைய அப்பா நெடுந்தீவு. அம்மாவுக்கு ஒரு அடி நெடுந்தீவு, மறு அடி உடுவில். நானும் என்னுடைய  மூத்த சகோதரியும் உடுவிலில்தான் பிறந்தோம். என்னுடைய இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் நெடுந்தீவில் பிறந்தார்கள்.

1824ல் ஆசியாவிலேயே முதலாவது பெண்கள் பாடசாலை உடுவிலில் தான் ஒருசில அமெரிக்க மிஷன் பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. மழைக்கு ஒதுங்கிய இரண்டு சிறுமிகள் தான் முதல் மாணவிகள். அமெரிக்கச் சுதந்திரப் போரின் பின்னர் ஒப்பீட்டுரீதியாகக் கிளர்ச்சிப் போக்குள்ள ஒரு காலம் அமெரிக்க மிஷனுக்கு இருந்தது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் விடுதலையின் பொறி அங்குதான் மூண்டது எனலாம். என்னுடைய அம்மாவும் வீட்டுக்கு எதிராகக் கிளர்ந்த போதெல்லாம் உடுவில் ‘பெண்கள் பாடசாலை விடுதி’ அம்மாவுக்குப் புகலிடமாயிற்று. பின்னர் அம்மா அங்கு ஆங்கில ஆசிரியையாகவும் இருந்தார். அப்பா மத்துகமவில் பிரபல வணிகர். அம்மாவை அடித்து முடக்கிப்போட அவர் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தார். மோசமாக அடிபட்ட போதும் அம்மா எப்போதும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான  சமூகப் பணிகளைக் கைவிடவில்லை. அம்மா தலித் சமூகத்தின் மீது வெறும் இரக்கத்தைத் தாண்டிய நட்புணர்வையும் மரியாதையையும் வைத்திருந்தார். இவையெல்லாம் தான் என் எழுத்துகளின் கருவறையானது. சண்டைகள், கருத்து மோதல்களுடனும் தனிப்பட்ட நட்பைப் பேணும் பண்பையும் அம்மாவிடம் இருந்துதான் வரித்துக் கொண்டேன்.

அம்மா 1920களிலிருந்து 1940களின் ஆரம்பம் வரைக்கும் உடுவில் மகளிர் கல்லூரியில் படித்த ஆங்கில, தமிழ்க் கதை - கவிதைப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். பாரதியாரின் ‘ தேசிய கீதம்’ முதற் பதிப்புப் பிரதியும் அவரிடம் இருந்தது. அம்மா எனது சிறு வயதிலேயே ஆங்கிலக் கதைகளையும் கவிதைகளையும் மொழி பெயர்த்து  எனக்குச் சொல்லுவார். அம்மாவும் அப்பாவும் தாங்கள் வாசிக்கும் நல்ல கவிதைகளை வெட்டிச் சேகரிப்பார்கள். அவற்றை அம்மா நோட்டு புத்தகத்தில் பிரதி பண்ணி வைப்பார். இவற்றையெல்லாம் வாசித்தபடிதான் நான் வளர்ந்து விடலைப் பையனானேன். மோதல் வாழ்வில் அம்மாவும் அப்பாவும் சந்தித்த ஒரே காதல் புள்ளி கவிதைதான் எனத் தோன்றுகிறது. நெடுந்தீவிலும் பின்னர் வன்னியிலும் பல அற்புதமான கதை சொல்லிகளைச் சந்திக்க முடிந்தது. தொடர்ச்சியான கேள்வியும் வாசிப்பும் தான் என்னை இலக்கியத்தில் ஈடுபட வைத்தது என்று தோன்றுகிறது.

  • உங்களுடைய அரசியல் ஈடுபாட்டின் தொடக்கப்புள்ளியாக எது அமைந்தது?

1968ல் வன்னிக்கு வந்தபோது அந்த இயற்கையும் வளமும் பண்டாரவன்னியன் கதைகளும் என்னை ஈர்த்தன. காடுகளைப் பார்த்துவிட்டு இலங்கைத் தீவில் புரட்சி சாத்தியம் என்று கருதினேன். இதனால் விரைவில் வருகிறது என நம்பிய புரட்சிக்கான ‘இராணுவ புவியியல்’ (Military geography) பற்றிய தேடல்களில் சின்ன வயதுகளிலேயே என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அந்த நாட்களில் திரு. SJV செல்வநாயகம் அவர்களது தலைமையில் தமிழரசுக் கட்சி தமிழருக்கு இணைப்பாட்சி கோரிப் போராடியது. எனது தந்தையாரும் ஒரு தீவிர ‘பெடரலிஸ்ட்’. லெனினின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இணைப்பாட்சி பொதுவுடமையே எனது கொள்கையாக இருந்தது. இணைப்பாட்சி அடிப்படையிலான புரட்சியை நான் கனவு கண்டேன். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் பலம்பெறப் பலம்பெற சிங்கள மிதவாதிகளதும் இடதுசாரிகளதும் மத்தியில் சிங்களத் தேசியவாதிகளோடு சமரசம் செய்வது அவசியம் என்கிற கருத்து வலுபெற்று வந்தது. இத்தகைய போக்கு அதிகரிக்க அதிகரிக்க இடதுசாரி அமைப்புகளுக்குள் இணைப்பாட்சிக் கருத்துக்கு எதிர்நிலை உருவானது.

1970ல் இருதய நோயாளியாக இருந்த ஜே.வி.பி தலைவர் ரோகண விஜேவீரவை வைத்தியசாலையில் சந்தித்து, தமிழரது போராட்டத்தையும் புரட்சியையும் இணைப்பது தொடர்பாகப் பேசினேன். அவர் என்னை எஸ்.டி.பண்டாரநாயக்கவை சந்தித்து இது குறித்துப் பேசுமாறு சொன்னார். எஸ்.டி.பண்டாரநாயக்க “சோவியத் யூனியன் போல இணைப்பாட்சி அடிப்படையிலான பொதுவுடமை சமூக அமைப்பு இலங்கைக்கு ஏற்றதல்ல” என்று கூறினார். சீனா மாதிரியில் அமைந்த கிராமிய கொம்யூன்கள் அமைப்பில் இனப் பிரச்சினைக்கு இடமே இருக்காது என்பதே அவரது விவாதமாக இருந்தது. இதனால் அவர்களோடு என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை.

அரசியல் வேறுபாடுகளுக்கு வெளியே புதுவை இரத்தினதுரை, டானியல் அண்ணா, தோழர் எம்.சி சுப்பிரமணியம், தோழர் இக்பால், மகாகவி, காசி ஆனந்தன், சண்முகம் சிவலிங்கம், சுபைர் இளங்கீரன், மு.நித்தியானந்தன், நிர்மலா, புஸ்பராசா, மாவை சேனாதிராசா காரைநகர் அ.தியாகராசா என்று பரந்த அரசியல் புலத்தில் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தமக்கு எதிரானவர்களோடு நான் நட்புப் பாராட்டுவது தொடர்பாக யாரும் என்னைச் சந்தேகப்பட்டதோ புறக்கணித்ததோ இல்லை. இந்தப் பாக்கியம் என் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. “சண்டை பிடித்துக்கொண்டே நண்பர்களாய் இருக்கலாம்” என்பதை ஜெயபாலனிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ‘மூன்றாவது மனிதன்’ பௌசர் சொல்லுவான். அவனும் நானும் போடாத சண்டையா!

இந்தக் காலங்களில் சாதி - வர்க்கச் சிக்கல்களில் நிர்வாகச் சேவைகளிலிருந்த அதிகாரிகளையும் பொலிஸ்காரர்களையும் நான் தாக்கியதாக வழக்குகளில் பலதடவைகள் கைது செய்யப்பட்டு நான் விளக்க மறியலில் இருக்க நேர்ந்தது. பொலிசாரும் நிர்வாக சேவை அதிகாரிகளும்  என்னைக் கொலை வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்க வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். 1972ல் பொலிசார் என்னைச் சுட்டுக் கொல்லவும் திட்டமிட்டிருந்தனர். எல்லாத் தரப்பிலும் என்னை விரும்புகிறவர்கள் இருந்ததால் எப்போதும் எனக்கு எதிரான நகர்வுளைப் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்துக்கொண்டேயிருந்தன. என் சாதுரியத்தாலும் தற்செயல்களாலும் நான் பல தடவைகள் என் உயிரைக் காப்பாற்றியுள்ளேன்.

கொஞ்சம் கிளர்ச்சிக்காரன், கொஞ்சம் சமூகச் சண்டியன், கொஞ்சம் புரட்சிச் சிந்தனை, கொஞ்சம் ரொமான்டிக்கான கவிஞன் என  வாழ்ந்த காலங்களவை.

1970பதுகளின் ஆரம்பத்தில் கலாநிதி கைலாசபதி அவர்களை நான் சந்தித்தபோது அவர் என்னைப்பற்றி உலாவும் கதைகளை வைத்து இ.சிவானந்தன் ‘காலம் சிவக்கிறது’ என்று ஒரு நாடகம் எழுதியிருப்பதாகச் சொன்னார். பின்னர் சிவானந்தனும் இதனை என்னிடம் சொன்னார். ஷோபா, நீங்களும் என் இளவயதுக் கிளர்ச்சிகள்  குறித்து உலாவும் கதைகளைக் கொண்டு  உங்களது  ‘ம்’ நாவலில் கலைச்செல்வன் என  ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருப்பதாகச் சொன்னீர்களல்லவா. ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் விரும்புகிறவர்களைக் கதைகளாகக் கொண்டாடுவார்கள். எனது பதின்ம வயதுகளில் என்னைப் பற்றி உலாவிய கதைகளைக் கேட்டு நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் என்னைபற்றி உருவாக்கிய பிம்பங்கள் தான் என்னை எப்போதும் சமரசம் செய்து கொள்ள முடியாத அரசியல் சூழலுக்குள் வைத்திருந்தன. எனது தன்னிலையை மக்கள் தீர்மானித்துக்கொண்டேயிருந்தார்கள்.

 

என்னுடைய பதின்மப் பருவத்தில் தம்முள் மோதிக் கொண்ட  ருஷ்ய சார்பு - சீனச் சார்பு  இடதுசாரி அமைப்புகளுக்கு வன்னியில் தளம் இருக்காததால் இரு தரப்பினருக்குமே நான் பயன்பட்டேன். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் ஏழை விவாசாயிகளுக்குச் சார்பான வன்முறையாளனாகவே என்னுடைய இளைய வயதுகள் எனக்கு ஞாபகம் வருகிறது. சிறு வயதிலிருந்தே தோழர்களதும் பெண்களதும் அன்பும் நிழலும் எனக்கு எப்போதுமே வாய்த்தது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புகளில் எனக்குத் தோழர், தோழியர்கள் இருந்தார்கள். என் இளம்வயதுத் தோழர்களுள் டானியல் அண்ணாவும் தோழர் எம்.சி.சுப்பிரமணியமும் மிகவும் முக்கியமானவர்கள்

என்னுடைய கல்வி அறுந்து அறுந்து தொடர்ந்தது. 1960ல் இருந்து 1974 வரைக்கும் நான் மிகத் தீவிரமாக இருந்த காலம். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் கல்வி முற்றாகத் தடைப்பட்டது. அம்மா வீட்டில் களவெடுத்து என்னை ஆதரித்தார். எனது தோழர்களின் ஆதரவு எனக்கு எப்போதுமிருந்தது. இவை பற்றியெல்லாம் என்னுடைய ‘சேவல் கூவிய நாட்கள்’ குறுநாவலில் சிறிது பேசியிருக்கிறேன். எனினும் என்னுடைய இளமைக் காலம் குறித்து இன்னும் விரிவாகச் சுய விமர்சனங்களோடு எழுதவேண்டும் என்பது எனது விருப்பம்.

  • மொழிவாரித் தரப்படுத்தல், புதிய இனவாத அரசியல் யாப்பு, தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், சிவகுமாரனின் மரணம் எனக் கொந்தளித்துக்கொண்டிருந்த 70களில் ‘தமிழ் இளைஞர் பேரவை’ போன்ற அமைப்புகளில் நீங்கள் இணையாமலிருந்தது எப்படி?

நான் தமிழரசுக் கட்சியின் இணைப்பாட்சிக்கான போராட்டத்தை ஆதரித்தேன் ஆனால் சாதி - வர்க்கப் பிரச்சினைகளில் இடதுசாரிகளோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியை எதிர்த்தேன். ஆனாலும் சிங்களப் பேரினவாதிகள் பலம்பெறப் பலம்பெற இடதுசாரிகள் மத்தியில் அதிகரித்த இணைப்பாட்சி தொடர்பான தளம்பல்களை விமர்சிக்கவும் நான் தவறியதில்லை. தமிழ் இளைஞர் பேரவையினர் சாதிய   ஒடுக்குமுறைகள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியில் தீர்ந்துவிடும் என்கிற கொள்கையையே வைத்திருந்தனர். தமிழ் இளைஞர் பேரவையின் அத்தகைய வலதுசாரித் தேசியவாதப் பார்வையே என்னை அவர்களோடு இணையவிடாமல் தடுத்தது.

  • அரசியல் உணர்மையுள்ள தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகங்களைத் துறந்து ஆயுதப் போராட்டத்திற்குள் நுழைந்த காலத்தில் நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றீர்கள்..?

ஏறக்குறைய 14 வருட அஞ்ஞாதவாசத்தின் பின்னர், என்மீது எஞ்சியிருந்த வழக்குகளை அவற்றைத் தொடுத்த பொலிஸ் அதிகாரிகளையும்  நிர்வாக சேவை அதிகாரிகளையும் துப்பறிந்து அவர்களை மிரட்டியே வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வைத்தேன். என்னை விடுதலை செய்த நீதிபதி சுந்தரலிங்கம் ‘உன் கொள்கைகள் சரி, வழிகள் பிழை, மேலே படித்து முறைப்படி அரசியல் செய்’ என்று நன்னெறிச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தியே என்னை விடுதலை செய்தார். அதனால் தான் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை எழுதினேன். பல்கலைக்கழகம் போகும் போது நான்கு வருடங்கள் அமைதியாக இருக்கத் தீர்மானித்தேன். ஆனால், பகடிவதைக்கு எதிராக முதல்நாளே கலகமாகி விட்டது. ராக்கிங் நடந்துகொண்டிருந்த போது மாணவர் தேர்தலும் வந்தது. தமிழ் மாணவர்கள் - சிங்கள மாணவர்கள் எனப் பிளவுபட்டுத் தேர்தலில் நின்றார்கள். ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றவர்கள் துப்பாக்கி இளைஞர்களின் மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்கினர். துப்பாக்கி இளைஞர்கள் பலரோடு நான் விவாதங்களில் ஈடுபட்டேன். தமிழர்களின் உரிமை வேறு, இனவாதம் வேறு என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இந்தச் சூழலில் யாழ் - வன்னி - கிழக்கு - மலைய தமிழர்களையும் முஸ்லிம்களையும் பரவலாக பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்றை உருவாக்கித் தேர்தலில் வென்றோம். அப்போது விரிவுரையாளர்களாக இருந்த மு.நித்தியானந்தனும், நிர்மலாவும் எங்களோடு துணை நின்றார்கள். தமிழ்த்துறையிலிருந்த சிவலிங்கராசா  போன்ற பல சக மாணவர்கள் துப்பாக்கி மிரட்டல்களுக்கு அஞ்சாமல் எனது மெய்க்காப்பாளர்கள் போலவே என்னுடன் திரிந்தார்கள். இந்தக் காலங்களில் தான் எனக்கு மலையக மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதுமான ஈடுபாடு ஏற்பட்டது.

vsf381.jpg

  • நீங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் வளாகம் இலக்கியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் நிரம்பியிருந்தது. உங்கள் பல்கலைக்கழக வாழ்வு உங்களது இலக்கியம் - அரசியல் குறித்த நிலைப்பாடுகளில் செழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததா?

ஆம். யுத்தமில்லாமல் இருந்திருப்பின் அவற்றுக்கு ஒரு செழுமையான தொடர்ச்சி அமைந்திருக்கும். யுத்தம், அகதி இடப் பெயர்வுகளால் அறிவு மற்றும் கலை - இலக்கியத் தலைமுறைகளின் தொடர்புக் கண்ணிகள் உடைந்து போய்விட்டதுதான் பெரும் சோகம். நான் பெரிதும் மதிக்கும் கலாநிதிகளும் மற்றும் ஆற்றல் மிக்கவர்களுமான கைலாசபதி, சிவத்தம்பி, சு.வித்தியானந்தன், மௌனகுரு, சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான், மு.நித்தியானந்தன், நிர்மலா, மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் அங்கிருந்தனர். விரிவுரையாளர்கள் மௌனகுரு, மு.நித்தியானந்தன், நிர்மலா போன்றவர்கள் தார்சீசியஸ், சண்முகம் சிவலிங்கம், பாலேந்திரா போன்றவர்களது ஆதரவுடன் நாட்டுப்புற மற்றும் நவீன நாடகங்களுக்குப் பெரிய அளவில் பங்களிப்புச் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் விரிவுரையாளரும் கவிஞருமான எம்.ஏ.நுஃமான் தமிழில் மொழி பெயர்த்த ‘பாலஸ்தீனக் கவிதைகள்’ பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

 

ஆனால், யாழ்ப்பாணச் சமூகம் தொடர்ச்சியாக அவர்களுக்கு நிறையக் கொள்கை சார்ந்த சவால்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.  ஆறுமுக நாவலரை  மறுத்து யாழ்ப்பாண ‘உயர்’ சமூகங்களின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் அக முரண்பாடுகளின் ஆரம்பப் புள்ளிகளுள் ஒன்றாக இருந்தது என்பதையும் இங்கே கசப்புடன் பதிவுசெய்ய விரும்பகிறேன். மார்க்ஸிய கலாநிதிகளான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களே விமர்சனமின்றி ஆறுமுக நாவலரின் புகழ் பாட ஆரம்பித்தபோது என்னுள் பல தங்கக் கோபுரங்கள் சரிந்துபோயின.

ஈழத் தமிழ்க் கவிதையின் உருவம், உள்ளடக்கம் மட்டுமன்றி தளமும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. ஆண்கள் அகப்படுத்தி வைத்திருந்த கவிதை உலகம் மெல்ல மெல்ல பெண்களின் கைகளிற்குப் போக ஆரம்பித்தது அப்போதுதான். ஊர்வசி, செல்வி, அவ்வை, மைதிலி அருளய்யாவிலிருந்து சிவரமணி வரைக்கும் மிகத் தீவிரமானதொரு கவிஞர்களது அணி முளைத்துச் செழித்தது.

போராட்டங்களில் மாணவர்கள் மட்டுமல்ல, கலை இலக்கியத்துறையினரும் பங்கு பற்றினோம். அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பிய மாதிரித்தான் கலைஞர்கள் எழுத வேண்டுமென்கிற எதிர்பார்ப்புகளும் கட்டுப்பாடுகளும் கமிஷார்த்தனமான நாட்டாமைகளும் அப்போது அதிகம் இருக்கவில்லை.

தமிழர் மத்தியில் செழுமையான விவாதங்கள் நடந்த கடைசிக் காலக் கட்டங்களவை. எனினும் ஆரோக்கியமான விவாதங்களைவிட அதிகரித்து வந்த இன ஒடுக்குதலும் போரும் புலபெயர்வுகளும் தான் வந்த நாட்களில் எங்கள் வாழ்வைத் தீர்மானித்தன என்பது எங்களது கெடுநேரம்.

  • ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் தோற்றத்தின் போது இயக்கங்கள் குறித்த உங்கள் மதிப்பீடு எவ்வாறிருந்தது?

சிறு வயதில் இருந்தே ஆயுதப் போராட்டம் தொடர்பான ஆர்வத்தோடும் தேடலோடும் அலைந்த மூத்தவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களுள் பலர் சுபாஸ் சந்திரபோஸ் அபிமானிகள். சிலர் மா சே துங் அபிமானிகள். இரண்டு அணிகளிலும் ஆயுதப் போராட்ட கனவுகளும் சிறு முயற்சிகளும் நிறையவே இருந்ததன. ஏற்கனவே சாதி ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்த மாவோயிஸ்ட்டுகள் நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டும் வேட்டைத் துப்பாக்கிகளைக் கொண்டும் சிறு சிறு தற்காப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தனர். மாவோயிஸ்ட்டுகளும்  தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்கங்களும் - குறிப்பாக பஸ் தொழிலாளர்கள் - ஆயுதங்களைச் சேகரித்தனர். இரண்டு தரப்போடும் எனக்குச் சின்ன வயதுகளில் இருந்தே தொடர்பிருந்தது. இணைப்பாட்சி அடிப்படையிலான பொது உடமைப் புரட்சியே என்போன்ற சிலரின் கனவாக இருந்தது. ஆனால் பெரும்பாலான இடதுசாரிகளிடம் தமிழர் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இனத்துவ நீதி நிலைபாடும் பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளிடம் ஒடுக்கப்பட்ட சாதி வர்க்க மக்களுக்கான சமூக நீதி நிலைப்பாடும் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கிற விருப்பமுள்ளவர்கள் அன்றும் இருந்தார்கள். பின்னர் சிங்களப் பேரினவாதத் தலைமையுடனான சமரசப் போக்கால் இடதுசாரிகள் பலவீனப்பட்டார்கள்.  தமிழ்த் தேசியவாதிகளைக் கொழும்புத் தமிழர் சிங்களப் பேரினினவாதத் தலைமையுடன் சமரசப்படுத்திய போது இடதுசாரிகளைப் போலவே தமிழ்த் தேசியவாதிகளும் இணைப்பாட்சிக் கொள்கையைக் கவிட்டார்கள். இப்படித்தான் நாடாளுமன்ற தேசியவாதத் தலைமையும்  மக்கள் மத்தியில் பலவீனப்பட்டது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் எதிர்ப்பு அரசியலில் முன்னிலைப்பட்டார்கள். 1971 ஜேவிபி கிளர்ச்சியும் எங்கள் தலைமுறை கிளர்ச்சிக்காரர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் என் போன்ற சிலரின் இணைப்பாட்சி அடிப்படையிலான இனசமத்துவமும் புரட்சியும் என்ற கனவு வெற்றி பெறவில்லை.

  • நம்முடைய இயக்கங்களின் இயங்குமுறைக்கும் சனநாயகத்திற்கும் ஏதும் தொடர்பில்லை என அவர்களிடம் பேசியுள்ளீர்களா?

உலக வரலாற்றின் விடுதலை மற்றும் புரட்சிகர ஆயுத இயக்கங்களின் பிரச்சாரங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் ஜனநாயகம் பற்றிய பிரச்சினைகள் பல பொதுவாக இருந்தமை புலப்படும். விடுதலை - புரட்சி வரலாறு நெடுகவே எதிரியோடு மட்டுமன்றி விமர்சிக்கும் ஜனநாயக சக்திகள்மீதும் துரோகி என்றோ எதிர்ப் புரட்சியாளர்கள் என்றோ முத்திரை குத்தப்பட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. போராளிகளின் சர்வாதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக அடித்தளமும் ஜனநாயக நோக்கமும் இருந்ததா என்கிற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்குச் சாதகமான பதில் என்னிடம் இல்லை. நான் முஸ்லிம் மக்களதும் மலையக மக்களதும் உரிமைகள், பெண்களதும் தலித்துகளதும் உரிமைகள், ஆயுதப் போராட்டத்தில் சாத்தியமான ஜனநாயகம் போன்ற விடயங்களில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

சிறுவயதில் வீட்டில் களவெடுத்து அம்மாவும் , பின்னர் வறுமையுடன் போராடி என் மனைவி வாசுகியும் என்னை ஆதரித்ததால் எனக்கு நிமிர்ந்து நிற்பது சாத்தியமாக இருந்தது. இப்போது  எனது பிள்ளைகளது ஆதரவும் எனக்கு உள்ளது.

தோழன் புதுவை இரத்தினதுரை என்னிடம்  ‘உனக்கு என்ன வேண்டுமென்றாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். பிறகு ஏன் காடையன் போல இயக்கத்தில் எல்லோருடனும் சண்டை போடுகிறாய்?” என்று கேட்டார். வேறு பலரிடமும் உதாரணத்துக்கு, லண்டனில் அ.இரவியிடமும் இது பற்றிக் கூறிக் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் கஸ்ரோவுக்கும் கடுமையான கருத்து முரண்பாடும் மோதலும் இருந்ததும், கஸ்ரோ என்னை அழித்துவிட முயன்றதும் ஒன்றும் இரகசியமல்ல. சாவுக்கு நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். முன்னர் ஈரோஸ் தவிர்ந்த ஏனைய இயக்கங்களோடும் ஒரிரு சந்தர்பங்களில் ஆயுதம் தாங்கிய ஓரிரு முஸ்லிம் குழுக்களோடும் இதே சிக்கல் இருந்தது. ஆனாலும் யாருக்கும் நான் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன் என்கிற சந்தேகம் இருக்கவில்லை. அதுதான் வாழ்நாள் முழுவதும் என் கவசமாய் இருந்தது.

  • தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (PLOTE) உங்களுக்குமான உறவுகள் குறித்து?

வெளிவாரியான உறவுகள்தான். எட்டத்தான் வைத்திருந்தார்கள். நான் பெரும்பாலும் டெல்லியில் இருப்பதையே தலைமை அதிகம் விரும்பியது. இராணுவ புவியியல், அரசியல் உத்திகள் தொடர்பாக  என்னிடம் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். சமகாலத்தில் நான் ஏனைய இயக்கங்களோடும் சுதந்திரமாகத் தொடர்பில் இருந்ததை அவர்கள் ரசிக்கவில்லை. உமாமகேஸ்வரனுக்கும் வே.பாலகுமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது நான் பாலகுமாரை ஆதரித்ததை அவர்கள் இரசிக்கவில்லை. பல்வேறு இயக்கத் தலைவர்களிடையே ஒத்த பண்புகள் அதிகமாக இருந்தன. சிலர் வென்றார்கள், சிலர் வெல்லவில்லை அதுதான் வேறுபாடு. பின்னர் உட்கொலைகள் மலிந்தபோது எனக்கு புளொட்டின் உளவுத்துறைப் பொறுப்பாளர் கந்தசாமியுடன் மோதல் ஏற்பட்டது. இயக்கத்தைப் பலவீனப்படுத்தி உள்ளே அகப்பட்டவர்களை தப்பவைக்க ஈஸ்வரன், அசோக் போன்றவர்கள் முனைந்தபோது அவர்களை ஆதரித்தேன். முரண்பட்டு எட்ட இருந்த என்னைத் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்காகப் போக அழைத்தபோது எனக்குப் பதிலாக ஒரு முஸ்லிம் தோழரை அனுப்பும்படி கேட்டு ஒப்புக்கொள்ள வைத்தது இன்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.

  • புதியதோர் உலகம் நாவல் குறித்து?

நாவல் வடிவம் தொடர்பாகப் பேசவில்லை. வரலாறு தொடர்பாக ‘லங்காராணி’க்கும் ‘புதியதோர் உலகத்துக்கும்’ நிரந்தரமான இடம் உள்ளது. ஒன்று இயக்கங்களின் ஆரம்ப சூழலையும் அடுத்தது இயக்கங்கள் அழியத் தொடங்கும் ஆரம்ப சூழலையும் விவரிக்கின்றன.

  • இதுவரை எத்தனை கொலைமுயற்சிகளிலிருந்து உயிர் தப்பியுள்ளீர்கள்? எவ்விதம் தப்பினீர்கள்?

1960பதுகளின் பிற்பகுதியில் சாதி ஒழிப்புப் போராட்ட காலங்களிலேயே நான் இந்த வன்முறைக்கும் கொலை முயற்சிகளுக்கும் பழக்கப்பட்டுவிட்டேன். 1972ல் ஜேவிபி கிளர்ச்சியின் ஆண்டு நிறைவைச் சாக்காக வைத்து என்னைச் சுட்டுக்கொல்ல காவல்துறை முயன்றது. அந்த நாள்பார்த்து என்னைப் பார்க்க அமெரிக்க தத்துவ மாணவர் ஒருவர் வந்திருந்தார். அந்தத் தற்செயல் என் உயிரைக் காப்பாற்றிற்று. வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் தப்பினேன்.

1986 - 1987களில் இந்தியாவில் வைத்தும் யாழ்ப்பாணத்தில் வைத்தும் வன்னியில் வைத்தும் கொழும்பில் வைத்தும் புளொட் கந்தசாமியின் ஆட்கள் என்னைக் கொல்ல முயன்றனர். யாழ்ப்பாணத்தில் புளொட் இராணுவ பொறுப்பாளராக இருந்த மெண்டிஸ்  “உங்களைக் கொலை செய்ய  உத்தரவு. ஆனால் நான் அதைச் செய்யமாட்டேன்” என்று என்னிடம் கூறினார். பின்னர் இத்தகைய ஓர் உத்தரவு தொலைத்தொடர்பில் வேலை செய்த தோழர்களால் அப்படியே அமுக்கப்பட்டு தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைப் போல இலங்கை அரசுத் தரப்பினால் எனக்கு ஆபத்திருந்த போதெல்லாம் நான் அறிந்த, அறியாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சிங்களத் தோழர்களும் எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் என்னை காப்பாற்றியிருக்கிறார்கள். இலங்கை உளவுத்துறையில் இருந்த முஸ்லிம்கள் நான் வாழவேண்டுமென்று விரும்பினார்கள் என்று அறிந்தேன். தெற்கில் பசீர் சேகுதாவுத், ஜனாப் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கிங்ஸ்லி பெரேரா, ஜோதிகுமார் போன்ற சிங்கள மற்றும் மலையக நண்பர்கள் என் பாதுகாப்பில் அக்கறையாக இருந்தார்கள்.

வடகிழக்கு முஸ்லிம்களின் பெரும் தலைவரான ஜனாப் அஸ்ரப் அவர்கள் 1984ல் நான் வெளியிட்ட ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ என்ற  ஆய்வு நூல் தன்னில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கும் சிந்தனைக்கு அது உதவியது என்றும் சொல்லுவார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பசீர் சேகுதாவுதில் இருந்து ‘மூன்றாவது மனிதன்’ பௌசார் வரைக்கும் பலர் இதனை என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள். காலமெல்லாம் இத்தகைய சொற்கள் மந்திரம்போல என்னைப் பாதுகாத்துக் காப்பாற்றின.

1990 ஓகஸ்டில் முஸ்லிம்களை நான் குழப்புவதாகக் குற்றம்சாட்டி மட்டக்களப்பில் வைத்து என்னைப் புலிகள் கடத்தினார்கள். தடுப்புக்காவலில் கருணா வந்து என்னைப்  பார்த்தார். பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டியோடு அழைத்துச் சென்றனர். அவர்களோடு போராடிச் சாகத் தயாராகவே இருந்தேன். கடைசி நேரத்தில் வன்னியில் இருந்து அழைப்பு வந்ததால் வன்னிக்கு அனுப்பப்படடேன். அங்கு மன்னிப்புக்கோரி விடுவித்தார்கள்.

1990 செப்டம்பரில் நோர்வேஜியத் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள அதிகாரி லீனசேனவின் தூண்டுதலால் இலங்கை இராணுவம் என்னைக் கடத்தும் முயற்சி நல்வாய்ப்பாகத் தோல்வியடைந்தது. பின்னர் அவரது தூண்டுதலால் என்னைக் கைது செய்து ஒரு பகல் தடுத்து வைத்தனர். அதைத் தொடர்ந்து நோர்வேஜியத் தூதரகம் என்னை மீண்டும் ஒஸ்லோவுக்கு அனுப்பிவைத்தது.

ஒரு குத்து மதிப்பாக ஏறக்குறைய 16 கொலை முயற்சிகளிலிருந்து தப்பியிருக்கிறேன் என நம்புகிறேன்.
 

  • கருணா கொல்ல முயன்றாரென்றும் வன்னி விடுதலை செய்யச் சொன்னதுமென்றால் உங்களைக் கொல்ல எடுத்த முடிவு கருணாவின் தனி முடிவா? ஏன் கேட்கிறேன் என்றால், கிழக்கில் நடந்த இஸ்லாமியர்கள் அழிப்பு போன்ற புலிகளின் அட்டுழியங்களுக்கு கருணாவே பொறுப்பென்றும் அதற்கும் தலைமைக்கும் எந்தப் பொறுப்புமில்லை என்றொரு கருத்து இப்போது சிலரால் சொல்லப்படுகிறதல்லவா?

கருணாவென்று சொல்லவில்லை. கருணாவின் கீழ் பணிபுரிந்த டேவிட் என்னைக் கைது செய்தார். கருணா வந்து பார்த்தார். பின்னர் கிரான் சுடலைக்கு என்னைக் கொலை செய்ய அழைத்துச் சென்றனர். வன்னியில் இருந்துவந்த கடைசி நிமிட அழைப்பு என்னை விடுவித்தது.

முஸ்லிம் அழிப்புக்கு இயக்க தலைமையல்ல கருணாவே முழுப் பொறுப்பென்றால் இயக்கத்தலைமை 1990களிலேயே கருணாமீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும், வடபகுதி முஸ்லிம் மக்களை இயக்கத் தலைமை காப்பாற்றி இருக்க வேண்டும் அப்படி ஏதும் நடக்கவில்லையே.

  • தொண்ணூறுகளின் இறுதிப் பகுதிகளில் நீங்கள் புலிகளை ஆதரித்துப் பேசினீர்கள். விமர்சனத்துடன்தான் ஆதரித்தீர்கள். எனினும் புலிகளின் அரசியல் வேலைத்திட்டமே முழுமையாகத் தவறானது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவில்லையா?

முஸ்லிம் மக்களுக்குப் புலிகளால் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான எனது விமர்சனங்கள் பலர் அறிந்ததே. பாரிஸில் கொல்லப்பட்ட சபாலிங்கத்திற்கான அஞ்சலிக் கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். அதில் முன்னுதாரணமில்லாத அளவுக்குக் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அது போலவே கொலை செய்யப்பட்ட தோழி ராஜினி திரணகம, மறைந்த தோழன் புஸ்பராசா போன்றவர்கள் மீதான அஞ்சலிக் கவிதைகளும் நேரடி விமர்சனப் பாங்கானவை. இவற்றைவிடக் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வன்னியில் நேரடியாகப் புலிகள் முன் வைத்து வந்திருக்கிறேன்.

1996ல் மட்டக்களப்பு முஸ்லிம் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளது கோரிக்கைகளோடு ஒரு சில தடவைகள் படுவான்கரையில் நான் விடுதலைப் புலிகளைச் சந்தித்தேன். அத்தகைய சந்திப்பு ஒன்றின்போது கிழக்கிற்கு வந்திருந்த யாழ்வேந்தன் என்னைச் சந்தித்துச் சில உதவிகளைக் கேட்டார். இராணுவ புவியியல், இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவது, மேற்கு நாடுகளுடனான உறவுகள் தொடர்பாக தங்களது வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்புகளை வைக்காமல் நேரடியாகத் தங்களிற்கு உதவுமாறு புலிகளின் தலைமை சார்பாகக் கேட்டார். இதுதான் எனக்கும் புலிகளிற்குமான உறவின் அடிப்படை. முஸ்லிம் மக்கள் தொடர்பாகச் சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. ஆனால் புலிகளின் மட்டக்களப்புச் செயலகம் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. என்னுடைய விமர்சனங்களை நான் தொடரவே செய்தேன்.

மக்களது அரசியல் எப்போதும் தெரிவுகளுக்கூடாகவே செயற்படுகிறது. ஒருபோதும் தெரிவுகள் தூய்மையானதாக இருப்பதில்லை. இத்தகைய பருமட்டான தெரிவுகளுக்கூடாகத்தான் என்னுடைய வாழ்வும் அரசியலும் நகர்கிறது. வன்னியில் கவிஞர் கருணாகரனின் நூல் வெளியீட்டு விழாவில் புலிகளின் ‘நந்தவனம்’ செயலகத்தையும் புலிகளின் காவற்துறையையும் கடுமையாகக் கண்டித்துப் பேசினேன். வன்னி வரலாற்றில் அவ்வாறான விமர்சன முன் உதாரணம் இல்லை என்றார்கள். நான் பேசி முடிய நண்பன் மு. திருநாவுக்கரசு ‘உனக்குப் பிரச்சினையில்லை விழாவை ஒழுங்கு செய்தவர்களுக்கல்லவா பிரச்சினை” என்றார். ஆச்சரியப்படத்தக்க வகையில் பாலகுமாரனும் கூட்டத்துக்கு வந்திருந்த சில பெண் போராளிகளும் பார்வையாளர்கள் சிலரும் என் பேச்சைத் துணிந்து பாராட்டினார்கள்.

  • வன்னிக்குச் சென்று புலிகளுக்காக சில வேலைகளைச் செய்தீர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். என்னவகையான வேலைகளை அவர்களுக்காகச் செய்தீர்கள்?

புலிகள் என்னிடம் ‘”எங்களை விமர்சித்தபோதும் நீங்கள் தேச பக்தன் என்பதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். இத்தகைய கருத்து ஆரம்பத்தில் புதுவை இரத்தினதுரையால் சொல்லப்பட்டு வந்ததுதான். ஆனால் 1996ல் யாழ்ப்பாணம் விழுந்த பிற்பாடு அவர்களது அணுகுமுறையில் பாரிய வேறுபாடு தெரிந்தது. “உங்கள் விமர்சனங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்பாக உங்களது அறிவுபூர்வமான விமர்சனங்கள் எங்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் நீங்கள் உணர்வுபூர்வமாகப் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டுவதுதான் பிரச்சினை” என்று என்னிடம் சொன்னார்கள். ஜெயதேவன் பிரச்சினையில் வன்னியில் வைத்தே நான் கஸ்ரோவின் நந்தவனம் செயலகத்தைக் கடுமையாக விமர்சித்தேன். ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனது விமர்சன அறிக்கைகளை அவர்கள் கோரினார்கள். இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன்..

  • உங்களது நெருங்கிய தோழராயிருந்த தராகி சிவராம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

எனக்கு அவன்மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவன் கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரும் அறிவாளன் என்பதில் சந்தேகமில்லை. அவன் யாழ் மையவாதத்தை எதிர்த்தான் என்பதிலும் கிழக்கு மாகாணத்தை நேசித்தான் என்பதிலும் வடகிழக்கு இணைப்புக்காகப் பணியாற்றினான் என்பதிலும் சந்தேகமில்லை. கருணாவின் பிளவின்போது “பிரபாகரனுக்கு மட்டக்களப்புப் போராளிகளைச் சுட மக்கள் ஆணை இல்லை, போராளிகள் வீடுகளுக்கு அனுப்பப்படவேண்டும், கருணா பிரச்சினையை உள்ளேயே பேசித் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்” என்கிற எனது அறிக்கையை ‘சூரியன் F.M’மில் வெளியிட்டார்கள். அப்பொழுது ‘குளோபல் தமிழ் நியூஸ்’ குருபரன் சூரியன் F.Mமில் பணியாற்றினார். அந்த அறிக்கையை வீரகேசரியும் வெளியிட்டது. அதன்பின்னர் நான் வன்னிக்குப் புறப்பட்டபோது எனது நண்பர்களும் உறவினர்களும் கண்ணீருடன் தடுத்தார்கள். சிவராமும் என் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட்டான். பின்னர் நான் வன்னியில் இருந்து திரும்பி வந்ததும் எனக்கு மது விருந்து தந்து கொண்டாடினான். அவனுடைய மரணம் அவனைப்போல பணியாற்றிய புத்திஜீவிகள் அனைவரையும் பாதித்தது.

  • முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னால் ஏதாவது சதி முயற்சிகள் உள்ளதாகக் கருதுகிறீர்களா?

புலம் பெயர்ந்தவர்களில் பலர் திரு. பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் தாயகத்தில் பலர் அவர் இறந்துவிட்டதாகவும் நம்புகிறார்கள். சர்வதேச அரங்கிலும் இறந்துவிட்டார் என்கிற கருத்தே உள்ளது. இதுபற்றிச் சந்தேகம் கிளப்பப்பட்ட புகைப்படங்களைத் தவிர விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் கொல்லப்பட்ட சூழல் குறித்துத் தெரியாமல் பதில் சொல்ல முடியாது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றபோது நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் கொல்லப்பட்டது அப்பட்டமான  போர்க்குற்றச் செயலாகும்.

  • அப்படியானால் பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்றா சொல்ல வருகிறீர்கள்?

இரண்டு கருத்துகள் உள்ளன என்றேன். எனது கவலை எல்லாம் மக்கள் உயிர்த்தெழுந்து மீள் குடியமர வேண்டும், அவர்களது வாழ்வு சுதந்திரமாக மேம்பட வேண்டும் என்பதுதான்.

  • இந்தியாவை ஈழத் தமிழர்களின் நட்பு சக்தி என்றே சொல்லிவருகிறீர்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசு என்ற நிலையிலிருந்தே அரசியலை நடத்தி வருகையில் அவர்கள் எமக்கு எசமானர்களாகப் பார்க்கிறார்கள் என்று சொல்வதை விடுத்து நட்பு சக்தி என அழைப்பது எப்படிப் பொருத்தமாயிருக்கும்?

நான் இதை மேலெழுந்தவாரியாக இலட்சிய நோக்கில் மட்டுமே பார்க்கவில்லை. கொஞ்சமும் நெகிழ்வில்லாத சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள், எமது பிராந்தியத்தில் நெடுங்காலமாக சிங்களப் பேரினவாதிகளின் மூல உபாய அடிப்படையிலான உறுதியான நண்பனாக சீனா இருப்பது, வளர்ந்துவரும் இந்திய - சீன முரண்பாடு, இதன் ஆடுகளமான இந்து சமுத்திர அரசியல், உலகமயமாதல் பின்னணியில் பலமடைந்து வரும் தமிழகத்துடனும் உலகத் தமிழர்களுடனுமான எங்களது கலாச்சார உறவுகள், மற்றும் எங்களது மட்டுப்பட்ட வளமும் வாய்ப்புகளும், எம் இனத்தின் மிக சிறிய மக்கள் தொகை, அதிலும் உழைக்கும் பருவ மக்களில் கணிசமான தொகையினர் அகதிகளாக வெளியேறி விட்டமை இப்படிப் பல காரணங்களை முன்வைத்தே நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கிறேன். குறுங்காலச் செயற்பாடுகளை விட இந்து சமுத்திர அரசியலில் எமக்குள்ள வாய்ப்புகள், உலகத் தமிழர்களது நீண்டகால வரலாறு, பொது நலன்கள் என்பவற்றை முன்னிலைப்படுத்தியே அவ்வாறு சொல்லி வருகிறேன்.

  • யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் இசுலாமியர்களை வெளியேற்றியதற்கான காரணம் எதுவெனக் கருதுகிறீர்கள்? இனச் சுத்திகரிப்பா?

இந்த வன்கொடுமையை உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் எதிர்த்தவர்களுள் நானும் ஒருவன். 1990களிலும் அதன் பின்னும் என்மீது நடந்த கொலைமுயற்சிகள் பலவற்றுக்கு எனது சமரசமில்லாத எதிர்ப்புக் காரணமாக இருந்தது. ஆனால் 1995ன் பின்பு விடுதலைப் புலிகள் என்னையும் என் விமர்சனங்களையும் மென்மையாகக் கையாண்டதற்கு முஸ்லிம் மக்கள் தொடர்பான ஒரு விடயம் முக்கிய காரணமாகும். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஐந்தாவது வருட நினைவு நிகழ்வில் கவிதை வாசிக்கும்படி  வடபகுதி முஸ்லிம் அகதிகள் அமைப்பின் தலைவர் சுபியான் மௌலவி என்னை அழைத்திருந்தார். நான் அங்கு அழுது அழுது  ‘அழுவதே விதியென்றால்’ என்கிற கவிதையை வாசித்தேன். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இப்படி அமைந்திருந்தது.

பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்சு.
தவறு, வருத்தம், திருத்துவோம் என்றபடி
தலைவர்கள் வாக்களித்து
வருடங்கள் இரண்டாச்சு.
என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா?

எல்லாம் அபகரித்து
நட்பில்லாச் சூரியனின் கீழே
உப்புக் களர்வழியே
ஓடென்று விரட்டி விட்ட
குற்றம் ஏதும் அறியா இக்
குணக் குன்று மானிடங்கள்
ஐந்து வருடங்கள்
கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்.

இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா?
இதுதானா தலைவர்களின் வாக்குறுதி  முத்திரையா?
ஆறாம் வருடமும் இவர்கள்
அழுவதே விதியென்றால்

அழியட்டும் இந் நாடு
அழியட்டும் எனது இனம்
அழியட்டும் என் கவிதை
அழியட்டும் எனது தமிழ்.

இதுபற்றி அறிந்த எனது நண்பர் கவிஞர் வில்வரத்தினம் ‘கவிஞர்கள் அறம் பாடக்கூடாது, நீ அறம் பாடியிருக்கிறாய்’ என்று சொன்னார். இக்கருத்தே வன்னியில் பலருக்கும் இருந்தது. 1995ம் வருடம் தமிழர்களிற்கு ஆய்க்கினைகள் மிக்க வருடமாக ஆரம்பித்தது. 1995  ஒக்டோபரில், அய்ந்து வருடங்களற்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே மாதத்தில் - திகதியில் அதே வழியால் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு அகதிகளாக வெளியேற நேர்ந்தது. இந்தத் தற்செயல் நிகழ்வுக்குப் பின்னர் என்னுடனான வன்னியின் அணுகுமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள என்னுடைய கவிதை வரிகளில் உங்களது கேள்விக்கான பதில் உள்ளது.

  • இன்று குமரன் பத்மநாதன் ஊடகங்களில் உதிர்த்துவரும் சொற்களை எவ்வாறு மதிப்பிடுகிறீரர்கள்?

இன்றைக்கு தமிழர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் தோல்வியின் படுகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, பாரம்பரிய நிலங்களைப் பாதுகாத்தல், சுயநிர்ணய உரிமை எனப் பல்வேறு விடயங்களையும் ஒரே அமைப்பால், ஒரே அரசியல் அணுகுமுறையால், ஒரே உத்தியால் கையாள முடியாது. இலங்கை அரசுடனும் இந்திய அரசுடனும் செயற்படக்கூடிய அமைப்புகள் மூலம்தான் நிவாரணப் பணிகளையும் நிர்மாணப் பணிகளையும் செய்ய முடியும். அதுதான் இன்றைய உடனடித் தேவை. ‘நாடு கடந்த அரசு’ போன்ற அமைப்புகள் சர்வதேசத்தை அணி திரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடமுடியும். இன்றைய சூழலில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வுப் பணிகள் முடிகிறவரைக்கும் இலங்கைப் பாராளுமன்றத்துக்குள்ளும் அரசின் சட்ட ஆட்சிக்குள்ளும் பணியாற்றக் கூடிய அமைப்புகளின் பணி தான் மிக முக்கியமாய் இருக்கும். அதே சமயம் போர்க் குற்றச்சாட்டு, மண் பாதுகாப்பு, சுயநிர்ணயம் போன்ற பணிகளில் புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் செயற்படுவதும் அவசியம். இலங்கை அரசு மீது போர்க் குற்றத்தை நிறுவுவது  தொடர்பான முன்னேற்றத்துக்கு ‘ஹிரு’ போன்ற சிங்கள இடதுசாரி அமைப்புகள் உயிரைப் பணயம் வைத்துக் கடத்தி வந்த ஆதாரங்களே வழிவகுத்தன. இதனை எல்லாத் தரப்புகளும் மனதில் வைத்துச் செயற்பட வேண்டும். எல்லா நிலைகளிலும் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடலையும் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்துவது அவசியம். பல்வேறு நிலைகளில் செயற்படுகையில்  ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் சூட்டாமல் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியம்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வுப் பணிகள் முடிந்த பின்னர் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான - விடுதலைக்கான அமைப்புகள் முன்னிலைப்படுவதே சாத்தியம். இந்தியாவுடனான நல்லுறவை வென்றெடுப்பது எதிர்கால வெற்றிக்கான அடிப்படை என்றே கருதுகிறேன்.

  • இலங்கையில் இன சமத்துவங்களை நோக்கிய வளர்ச்சிப் பாதை அல்லது இனமுரணுக்கான தீர்வு எதுவாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

வட கிழக்கு மாகாணம் தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரியத் தாயகம் என்று எப்போதுமே உரத்துச் சொல்லி வருகிறேன். எனவே தமிழரதும் முஸ்லிம்களதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே இத்தீர்வு அமைய வேண்டும். வட கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் தீர்வு உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய தீர்வின் போது கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் முக்கியமானவை.

அதாவது வட கிழக்கு மாகாணம் தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரிய மண்ணாகும் இங்கு பாரம்பரியமாகச் சிறிய அளவில் பழைய சிங்களக் கிராமங்கள் சிலதும் வேடர்களது கிராமங்கள் சிலதும் இருக்கின்றன. இந்த விடயங்களை நாம் மனதில் இருத்தத் தவறக் கூடாது.

இன்று வட கிழக்கு மாகாண மனித வளத்தில் பெண்களது விழுக்காடு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தலித்துகளது விழுக்காடு அதிகரித்துள்ளது ஆனால் தமிழ்க் கட்சிகளது தேர்தற் பிரதிநிதித்துவத்தில் இந்த மாற்றங்கள் ஒரு வகையிலும் பிரதிபலிக்கவில்லை. இந்தகைய சமூக அநீதிகள் களையப்பட வேண்டும்.

அண்மையில் வவுனியா நகரசுத்தித் தொழிலாளர்கள், இறந்து போன தங்களது சக தொழிலாளிக்கு நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் ஒழுங்கு செய்தார்கள். அதைச் சாதிப்  பெயர் சொல்லி இழிவுபடுத்திச் சில அதிகாரிகள் தடுத்துள்ளனர். இது பற்றி மேயரிடம் முறையிடச் சென்றபோது மேயரும் சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்தி அனுப்பியுள்ளார். இத்தனை மிருகத்தனமான அந்த நகர மேயர் இனி அம்மணமாகத் திரியலாம். இதைக் கண்டும் காணாமல் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடதுசாரித் தலைவர்களும் அம்மணமாகத் திரியலாம். இவர்கள் முகத்தில் காறி உமிழ்வதைத் தவிர வேறு என்ன செய்ய? இத்தகைய நிலமையே இன்னும் தொடர்கிறது. சாதிவாரி ஏற்றத்தாழ்வின் அடிப்படைகள் தகர்க்கப்பட வேண்டும். தலித்துகள் தமிழ் மக்களில்லையா? தமிழருக்காகக் குரல் கொடுக்கிற புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இதைக் கண்டு கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. இதுபற்றி வெட்கித் தலை குனிகிறேன்.

வன்னித் தமிழர்களதும் வடபகுதி முஸ்லிம்களதும் மீள் குடியேற்றம் பாரபட்சமில்லாமல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். வெளியேற்றப்பட்ட வடபகுதி முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாச்சார இழப்புகளுக்கு ஈடு செய்யும் வகையிலான மீள்குடியேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். மீள்குடியேற்றம் வரைக்கும் வடபகுதி முஸ்லிம்களின் காணிகளைத் தமிழர்கள் வாங்குவது தடை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே விற்கப்பட்ட காணிகள் சுவீகரிக்கப்பட்டு முஸ்லிம்களின் நலன்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை வெளியேற்றம் பெரும் தடைக்கல்லாக உள்ளது. நிலமை வடக்கில் மோசமாகவே உள்ளது. இதனைச் சரி செய்யும் நோக்குடன் மலையகத் தமிழ் மக்களும் கிழக்கு மாகாணம் மற்றும் தென்பகுதி முஸ்லிம் மக்களும் வடபகுதியில் குடியேற ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அம்பாறை மாவட்டத் தமிழர்களது பிரச்சினையும் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் வடமாகாண முஸ்லிம்களது பிரச்சினையும் ஒரே மாதிரியான வகையில் தீர்க்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்  விவசாயிகளினது நிலப் பிரச்சினை பற்றிய புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவது முக்கியம்.

மகிந்த அரசு புலம் பெயர்ந்த தமிழர்களது ஒற்றுமைப்பட்ட அரசியலுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ் மக்கள்மீது பாய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழ் மக்களை அவர்களது வழியில் விட்டுவிட்டு மெல்ல மெல்லத் தமிழர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வடபகுதியில் பாரிய சிங்கள - பௌத்த குடியேற்றங்களுக்கு வழி திறப்பதுதான் அவர்களது அணுகுமுறையாக உள்ளது. அதே சமயம் புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகையை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இந்த அணுகுமுறை  ‘அரசபடையினர் மக்களுக்கு அன்றாடம் தொல்லை கொடுக்கிறார்கள்’ என்ற அடிப்படையிலான புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரச்சாரங்களைப் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியிலேயே பொய்யாக்கிவிடும் என்பதுதான் அவர்களது சதுரங்கம்.

புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பிளவுபட்டிருப்பதையும் அவை இன்னும் அறிவுத்துறையினரோடு சேர்ந்து சவால்களை எதிர்நோக்கத் தயாராக இல்லை என்பதையும் வைத்தே மகிந்தவின் அரச தரப்பினர் காய்களை நகர்த்துகிறார்கள். நாட்டில் வாழும் மக்களை நேரடியாகத் துன்புறுத்துவதைத் தவிர்த்தால், அறிவுத்துறையில்லாமல் மக்கள் தொகையைத் திரட்டிப் போராடும் புலம் பெயர்ந்த அமைப்புகள் ஸ்தம்பித்து விடும் என்பதே அவர்களது கருத்தாக உள்ளது போலத் தெரிகிறது.

இந்தச் சூழலைத் தாயகத்தில் மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் வடகிழக்கில் பரவலாகத் தேர்தலில் வாக்களிக்கும் சூழல் உருவாகவில்லை. இருந்தபோதும் வாக்களித்தவர்கள் வட - கிழக்கு இணைப்பையும் இணைப்பாட்சியையும் ஆதரிக்காதவர்களை நிராகரித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர்.  மக்கள் வட - கிழக்கு இணைப்பின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையைக் கோருவதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதையே தமிழரதும் முஸ்லிம்களதும் சுயநிர்ணய உரிமை என்கிற திருத்தத்துடன் நானும் வலியுறுத்துகிறேன்.

தமிழர்களது சுயநிர்ணய உரிமை கொழும்பின் கீழ் சாத்தியம் என்று சிலர் நம்புகின்றனர். வேறு சிலர் பிரிவினை மூலமே சாத்தியம் என்கின்றனர். டெல்லியின் கீழ் மட்டும்தான் சாத்தியம், வேறு வகையில் சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்கிற கருத்தும் செல்வாக்குப் பெற்று வருகிறது. முஸ்லிம் மக்கள் இணைந்த ஒரு தீர்வு கொழும்புக்கு வெளியில் சாத்தியமா என்பது தெரியவில்லை. முஸ்லிம் மக்கள் விரும்பினால் பிரிந்து செல்வது எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவற்றை விட இந்தியாவுக்கு எதிராகச் சீனச் சார்பு நிலை எடுப்பதன் மூலம் மட்டும்தான் தமிழர் வெற்றி பெற முடியும் என்கிற புதிய ஒரு குரலும் இப்போது கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இவை பற்றிய தெரிவுகள் சிங்கள ஆளும் வர்க்கத்தினுடைய அணுகுமுறையில் மட்டுமல்லாமல் சிங்கள முற்போக்குச் சமூக சக்திகளதும் எதிர்கால அணுகு முறையிலேயே தங்கியுள்ளது.

  • எதிர்வரும் சனவரியில் கொழும்பில் நடத்தப்படவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளனவே, நீங்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்களா?

இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது கேள்வி களத்தில், மக்கள் மத்தியில் கலை - இலக்கிய, சமூக செயல்பாடுகள் தொடர்பான மாநாடுகள் இடம்பெறக் கூடாது என்று சொல்ல களத்திற்கு வெளியில் வாழும் யாருக்காவது உரிமையுண்டா என்பது. இரண்டாவது, குறிப்பிட்ட மாநாட்டின் அரசியல் தமிழ் பேசும் மக்களது நலன்களுக்கு விரோதமானதா?

இக்கேள்விகளில் முதற் கேள்விக்குக் களத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய நன்மை தீமைகளைத் தாங்களே தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் அவர்களுக்கு வெளியிலிருந்து உத்தரவிட யாருக்கும் அதிகாரம் இல்லை, அவர்கள் மத்தியில் வாழ்வு அதன் முழுமையோடு உயிர் பெற வேண்டும். இதுதான் எனது நிலைபாடு.

குறிப்பிட்ட அந்த மாநாடு களத்தில் வாழும் தமிழ் மக்களினது நலனுக்கு எதிரானது என்பது ஐயம் திரிபற உறுதிப்பட்டால் மட்டுமே நாம் அந்த மாநாட்டை எதிர்க்கலாம்.

  • காலமெல்லாம் கிளர்ச்சிக்காரனாகவும் கவிஞனாகவும் வாழ்ந்த ஜெயபாலன் கோடம்பாக்கத்து வணிகச் சினிமாவில் பங்கெடுப்பது ஒரு வீழ்ச்சியா?

என்னுடைய வாழ்க்கை தொடர்ச்சியான திருப்பங்களைக் கொண்ட சமூகக் கலாச்சார சாகசப் பயணமாகவே அமைந்துவிட்டது. இவை குறித்து எப்போதும் விமர்சனங்கள் இருந்தன, இனியும் இருக்கும். ஷோபா, நாம் இருவருமே சினிமாவில் ஈடுபட்டிருக்கிறோம். நீங்கள் பங்களித்த ‘செங்கடல்’, நான் நடித்த ‘ஆடுகளம்’ படங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆடுகளம் ஒரு ‘மிடில் பிலிம்’ வகை சினிமாவாகவே எடுக்கப்பட்டது. எனினும்  நான் இன்னும் ‘ஆடுகளம்’ படத்தைப் பார்க்கவில்லை. இன்னும் சில வாரங்களின் பின்னர் படங்கள் வெளிவந்த பின்னர் நாமிருவரும் அவை குறித்துப் பேசுவதுதான் பொருத்தமானதாக இருக்கும், இல்லையா!

  • காதல், குடும்பம், சுதந்திரப் பாலியல் தேர்வுகள் இவை குறித்தெல்லாம் உங்கள் கருத்துகள் என்ன?

காதலிக்கிற, காதலிக்கப்படுகிற வரைக்கும் தான் ஒருவர் உயிர்ப்புள்ள கலைஞராகச் செழிக்க முடியும் என்று நம்புகிறவன் நான். காதலும் வீரமும் தான் என் இருப்பின் அடையாளங்களாக இருந்தன. இதுவே என் கல்லறையிலும் எழுதப்பட வேண்டும் என்று விரும்புவேன் நான்.

பாலுறவில் ஜனநாயகம் மட்டும் தான் கற்பு. பாலியல் தேர்வுகள் மனிதர்களின் அடிப்படை உரிமையாகும். இதை விட்டுக் கொடுக்க முடியாது. அது சம்பந்தபட்ட இருவர் பிரச்சினை. பாலியல் தேர்விலும் உறவிலும் அதிகாரமும் வன்முறையும் செயற்படாதவரைக்கும் அது சமூகப் பிரச்சினையல்ல.

பாலியல் தேர்வுகள் அவரவர் சொந்த விசயம். குடும்ப அமைப்பை ஏற்றோ அல்லது நிராகரித்தோ பாலுறவுகளை அமைத்துக்கொள்ளல், ஒருபால் புணர்ச்சி போன்ற தெரிவுகள் இன்று சில மேற்கு நாடுகளில் சட்டரீதியாகிவிட்டன. மானிட வாழ்வில் பன்முகப்பட்ட வாய்ப்புகளும் தெரிவுகளுமுள்ளன. இது அவரவர் பிரச்சினை. ஆனால் துணையின் சுதந்திரத்தையும் அடிப்படைச் சமூக நலனையும் பாதிப்பதாக ஒருவருடைய பாலியல் தேர்வுகளும் உறவும் அமையக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது.

  • இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஏதாவது ஒரு காதல் இல்லாமல் எந்தப் படைப்பாற்றலும் வாழாது. காதல் அதன் எல்லாப் பரிமாணங்களிலும் பெண் மையமானது.

‘ஆண் எழுத்தாளன் அரைக் குருடன்’ என்று நான் அடிக்கடி சொல்வேன். ஆண் குருடால் உலகில் பாதியான ஆண்கள் உலகை மட்டுமே பார்க்க முடியும். வேகமாக மாறி வருகிற பெண் உலகத்தினை பெண்களிடமிருந்துதான் சதா கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களிடமிருந்தும் இளையவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஆண்களின் அதிகாரத் தன்னிலை விடாது. ஆனால் பெண்கள் அதிகாரமில்லாமல் உறவாடி, தந்தை, சகோதரர்கள், தோழர்கள், ஆண் குழந்தைகள் என்று ஆண்களது உலகத்துக்குள்ளே போய் வரக்கூடியவர்கள். நான் என்னால் தரிசிக்க இயலாத உலகத்தைத் தொடர்ச்சியாகப் பெண்களிடமிருந்தும் இளையவர்களிடமிருந்தும் கற்று வருகிறவன். என்னுடைய எழுத்தில் ஏதாவது பலம் இருந்தால் அது இதுதான்.

 

காதலும் வீரமும் மண்ணும் பற்றிய கதைதான் என்னுடைய குறுங்காவியமான ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’. காதல் இல்லாத சமயங்களில் என்னால் போரிடவோ எழுதவோ முடிந்ததில்லை. காலனிவாதிகளான போர்த்துக்கேயருக்கு எதிராக எழுந்த கிளர்ச்சிகளில் ஆரம்பித்து சாதி எதிர்ப்புப் போராட்டம், பின்னர் தேசிய விடுதலைப் போராட்டமென்று தொடர்ந்த எங்களது வாழ்வில் நிகழ்ந்த காதலும் வீரமும் கலந்த உண்மைச் சம்பவங்களைக் காவியங்களாகச் சொல்லும் முயற்சியிலிருக்கிறேன்.

 

நன்றி: மறு ஆய்வு

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்களே உங்களை ஒரு நிறைகுடமுன்னு நினைக்கிறப்போ.. நாங்களும் எங்கள் மட்டில் அப்படி நினைத்துக் கொள்ளலாம் தானே..!! இதனை யார் பரிசோதித்துப் பார்க்கப் போயினம்..???!

 

மேலும்.. நிறை குடம் நீங்களே நாங்கள் கேட்டதற்கு உங்களை நிறைவுத் தன்மையை வெளிக்காட்ட முற்படாத போது.. நாங்கள் ஏன் எங்கள் நிறைவுத் தன்மையை வெளிக்காட்டனும். சுய கெளரவம் அறிவை மிஞ்சிடுமில்ல..!

 

கெட்டித்தனமா எழுதிறதா எல்லாரும் நினைச்சுக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பமில்லையா..!

 

மேலும்.. இன்றைய உலகம் இலத்திரனியல் படைப்புக்களையும்.. அச்சுப்படைப்புக்களையும் கொண்ட ஒரு இடைவெளியில் உள்ளது. இலத்திரனியல் ஆக்கங்களோடு அதிகம் புழக்கமுள்ள எமக்கு அதில் கூடிய நிறைவு கிடைக்கப் பெறும் மார்க்கங்கள் தெரிவதில் தவறில்லை. கூகிளும்.. விக்கிபீடியாவிற்கும் அப்பால்.. நீங்கள்.. என்ன அகழ்வாராய்ச்சியகத்திலா தேடல் செய்து கொண்டிருக்கிறீர்கள்..!!!

 

இப்படியே நீங்களும் நீங்கள் வால்பிடிப்பவர்களுமே திறமுன்னு நினைச்சுக்கிட்டு இருங்கோ. அதுவும் நல்லது தான். வீணான அலசல் இன்றி உங்கள் கல்லுறோட்டில்... வண்டி அலுக்காமல் குலுக்காமல் ஓடுமில்ல..! அதற்காக உலகத்தில் கல்லுறோட்டும் வண்டிலும் தான் உள்ளதென்று மட்டும் நினைக்கக் கூடாது.. கிருபண்ணா. சின்னப் பிள்ளை ஒன்றின் காகிதக் கப்பல் கூட.. உங்களின் கல்லுறோட்டு வண்டிலை விட திறமைகளைக் கொண்டிருக்கலாம்.இதனையும் நீங்கள் ஏற்கும் பக்குவப்படனும்..! :lol::D

நான் எதிர்பார்த்த மாதிரியே பதில் கருத்து வைத்திருப்பதால் எனக்கு பூரண திருப்தியே! :wub:  :icon_mrgreen: 

இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்து மறைந்த கவிஞர் ஒருவரினது கவிதை நெடுக்ஸிற்காக. நெடுக்ஸிற்கு அவரையும் தெரியும் என்பதால் பெயரைத் தவிர்த்துவிடுகின்றேன். <_< 

முகமூடி உடன்படுகின்றது

கவிதை என்றெதையோ

எழுதி என்

கழுத்தை அறுக்கும் நண்பர்

இன்னொரு கரடி விட்டார்:

"சொற்களைத் துறந்தேன்

நான்

நானே யானேன்!"

சுவரில் தொங்கிய

முகமூடி கூறிற்று:

"உடன்பாடு நண்பரே!

என்னைப் பொருத்தி

ஆடிய கூத்து

ஓய்ந்து

ஒப்பனை கலைந்தது.

மீந்தது

முகமில்லாத் தலை!"

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் எதிர்பார்த்த மாதிரியே பதில் கருத்து வைத்திருப்பதால் எனக்கு பூரண திருப்தியே! :wub:  :icon_mrgreen: 

இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்து மறைந்த கவிஞர் ஒருவரினது கவிதை நெடுக்ஸிற்காக. நெடுக்ஸிற்கு அவரையும் தெரியும் என்பதால் பெயரைத் தவிர்த்துவிடுகின்றேன். <_< 

 

முகமூடி உடன்படுகின்றது

கவிதை என்றெதையோ

எழுதி என்

கழுத்தை அறுக்கும் நண்பர்

இன்னொரு கரடி விட்டார்:

"சொற்களைத் துறந்தேன்

நான்

நானே யானேன்!"

சுவரில் தொங்கிய

முகமூடி கூறிற்று:

"உடன்பாடு நண்பரே!

என்னைப் பொருத்தி

ஆடிய கூத்து

ஓய்ந்து

ஒப்பனை கலைந்தது.

மீந்தது

முகமில்லாத் தலை!"

 

 

 

இப்படியே சுயபெருமைப்பட்டுக் கொள்ளவதைத் தவிர வேற வழி..! :D:lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலனின் 'தோற்றுப்போனவர்களின் பாடல்' பற்றி, தீபச்செலவனின் விமரிசனம்!

 

தோற்றுப்போனவர்களின் பாடல்
  - வ.ஐ.ச. ஜெயபாலன்
  வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் - காலத்தின் துயர் எரியும் அம்மாவின் பாடல்கள்

தீபச்செல்வன், 

01.
யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத்தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. தீயில் எரியும் அம்மாவை முத்தமிட வரமுடியாத துயரத்தை ஜெயபாலன் எதிர்கொண்டவர். யுத்தம் நிறையப் போரை நோயாளியாக்கியிருக்கிறது. பிரித்திருக்கிறது. தொடர்புகளை துண்டித்திருக்கிறது. தோற்றுப்போனவர்களின் பாடல் என்ற கவிதையும் அம்மா கவிதைகளின் தொடர்ச்சியாகவும் எல்லா அம்மாக்களின் திரண்ட துயரமாகவும் எழுச்சியாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

ஈழத்து கவிதைகள் இரத்தமும் சதையுமான அனுபவங்களை கொண்டிருக்கின்றன. அவலமும் நெருக்கடியும் அச்சுறுத்தலும் என்று தொடர்ந்து கொண்டிருக்கிற வாழ்வில் மனத்துயர்களை வெளிப்படுத்தும் கவிதைகள் வெளிப்பிட்டன. மஹாகவி, நீலாவணணன் போன்றவர்களிடமிருந்து எழுபதுகளின் இறுதியில் எழுந்த கவிதைகள் இப்படித்தான் வேறுபட்டு நின்றன. அறுபதுகளில் மண்ணின் வாசனையை வாழ்வுத் தேவைகளையும் சித்திரிக்கிற தா.இராமலிங்கம் போன்றவர்களின் கவிதைப் போக்கு ஈழத்து நவீன கவிதைகளின் ஆரம்பமாக இருக்கிறது. பின்னர் வந்த எழுபதுகளின் தலை முறையில் வ.ஐ.ச.ஜெயபாலன், அ.யேசுராசா, மு.புஸ்பராஜன் போன்றவர்கள் ஈழ அரசியல் நெருக்கடிகளையும் வாழ்வுப்போராட்டத்தையும் அச்சத்தையும் எழுதியிருந்தார்கள்.

எண்பதுகளில் ஈழக் கவிதைகள் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இயக்க முரண்பாடுகள் மக்களின் வாழ்வுத் துயரங்கள் மரணத்துள்ளான வாழ்வு என்பன எண்பதுகளின் கவிதைகளில் மிகுந்த எழுச்சியும் தீவிரமும் கொண்டிருந்தன. சேரன், சங்கரி, நிலாந்தன், நுஃமான், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்களி, புதுவை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம், அ.யேசுராசா, ஒளவை, ஊர்வசி, இளவாலை விஜயேந்திரன், கி.பி. அரவிந்தன், சிவசேகரம் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. தொண்ணூறுகளில் மாறி மாறி நடைபெற்ற போரின் துயரங்களையும் போருக்கு எதிரான எழுச்சியையும் கருணாகரன், பா.அகிலன், முல்லை கோணேஷ், நிலாந்தன், சி.ஜெயசங்கர், சிவசேகரம், எஸ்.போஸ், அமரதாஸ், உமாஜிப்ரான், போராளிகளான கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி, அம்புலி, போனறவர்;களுடன் செல்வி., சிவரமணி, அனார், பஹீமஜஹான், றஷ்மி, சித்தாந்தன், தானா.விஷ்ணு, புதுவை இரத்தினதுரை வ.ஐ.ச.ஜெயபாலன், சிவசேகரம், சேரன் மஜித், ஓட்டமாவடி அறபாத், போன்றவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

இரண்டாயிரத்தின் பின்னரான கவிதை நிலவரத்தில் எஸ்.போஸ், சித்தாந்தன், கருணாகரன், அலறி, மலர்ச்செல்வன், பொன்காந்தன், த.அகிலன், அனார், பஹீமஜஹான், றஷ்மி, துவாரகன், தமிழ்நதி, மாதுமை, பிரதீபா, நிவேதா, திருமாவளவன், தீபச்செல்வன், பா.ஐ. ஜெயகரன், றஞ்சனி, போராளிகளான அம்புலி, உலமங்கை, சூரியநிலா, ஈரத்தீ, இளநிலா, தமிழினி, வெற்றிச்செல்வி வீரா, ராணிமைந்தன், செந்தோழன் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. போராளிக் கவிஞர்களின் கவிதைகள் போர் தருகிற இழப்பையும் போருக்கு எதிரான எழுச்சியையும் விபரிக்கின்றன. கருணாகரன், அமரதாஸ், எஸ்.போஸ், சித்தாந்தன், தானா.விஷ்ணு, முல்லைக்கோணேஷ் முதலியவர்கள் போரை யார் தொடுத்தாலும் மனிதர்களுக்கு எதிராக அழிவு தருகிறதாகவே எழுதியிருக்கிறர்கள். நிலாந்தன், புதுவை இரத்தினதுரை மற்றும் போராளிக் கவிஞர்களின் கவிதைகள் முக்கியமாக போருக்கு எதிராக மக்களை அணிவகுக்க தூண்டியிருக்கின்றன.

02.
புதியவர்களின் கவிதை நிலவரங்களை அறிந்து கொள்ளுவதிலும் அவர்களை தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்துபவர்களிலும் ஜெயபாலன் முன் நிற்பவர். கருணாகரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி.ஜெயசங்கர் போன்ற மிகச் சிலரே இப்படி புதியவர்களை தேடி உற்சாகப்படுத்துகிறார்கள் புதியவர்களை செம்மைப்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். களத்தின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என எப்பொழுதும் ஜெயபாலன் என்னை கேட்டுக் கொண்டிருப்பார். எனது வாசிப்பின்படி ஈழத்தின் நான்காம் கட்டப் போரின் பொழுது இன்றைய நிலவரத்திலும் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்திலும் களத்தில் கவிதைகளை எழுதியவர்கள் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன். கருணாகரன் யுத்தம் தீவிரம் அடைந்த தொடக்க நாட்களில் சில கவிதைகளை எழுதியிருந்தார். அவர் இராணுவத்தினரிடம் தனது குடும்பத்துடன் சரணடைகிற பொழுது எந்தக் குறிப்பையும் வைத்திருக்கவில்லை. இது கருணாகரனுடன் தானா.விஷ்ணு, அமரதாஸ், பொன்காந்தன், முல்லைக்கோணேஷ், மற்றும் போராளிக் கவிஞர்களுக்கும் நடந்த துயரம். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த பொழுது தங்கள் கவிதைகளையும் புகைப்படங்களையும் இழந்திருந்தார்கள். 2008 ஆண் ஆண்டில் கருணாகரன் எழுதிய கவிதை ஒன்றில்

“நிழலை விலக்க முடியாதபோது
தோற்றுப் போன போர் வீரன்
பாதுகாப்பில்லாத வெளியில்
தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்

மூடியிருந்த கதவுகள்
அவனை அச்சமடையச் செய்தன
திறந்திருந்த கதவுகளும்
அபாயமாகவே தோன்றின
…”


என்று போர் மீதான வெறுப்பை எழுதியிருக்கிறார். கிளிநொச்சி நகரத்தில் வாழ்ந்து போரை தன் வாழ்வு முழுவதும் அனுபவித்தவர் மற்றொரு கவிஞர் பொன்காந்தன். கருணாகரனும் பொன்காந்தனும் எந்தக் குறிப்பையும் எழுதுகிற அவகாசத்தை போர் தரவில்;லை என்கிறார்கள். எதற்கும் அவகாசமற்று ஓடிக்கொண்டேயிருந்ததாக கூறுகிறார்கள். போராளிகளான வீரா, செந்தோழன், ராணிமைந்தன், வெற்றிச்செல்வி, இளநிலா, ஈரத்தீ போன்றவர்களும் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கவிதைகள் எதுவும் கைவசம் இப்பொழுது இல்லாதிருக்கின்றன. அவை முழுவதும் தொலைந்துபோயிருக்கலாம் என அச்சமடைகிறேன். 2007 ஆம் ஆண்டு பொன்காந்தன் எழுதிய ‘நமது கடன்’ என்ற இந்தக் கவிதை ஒருநாள் நிகழ்ந்த பதற்றமான விமானத் தாக்குதலில் பின்னர் எழுதப்பட்டிருந்தது.

“…
இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக் கணக்குத்தான் தேவையாய் இருந்தது.
…”


பொன்காந்தனின் கவிதைகள் குரூர நினைவுகளை அப்படியே திரட்டித் தருபவை. 2007 ஆம் ஆண்டு வரை வன்னிப் போருக்குள் வாழ்ந்துவிட்டு தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த த.அகிலன் வன்னியின் போர்த்துயரங்களை அழிவுகளை போர்க்காலத்தின் மீதான விமர்சனங்களை எழுதி வந்திருக்கிறார். வன்னி இறுதி யுத்தத்தில் அவரது சகோதரன் பலவந்தமாக போராளிகளால் கொண்டு சென்று மரணம் எய்திய பொழுது ‘மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள்’ என்ற இந்தக் கவிதையை எழுதியிருந்தார்.

“…
அவனுக்கு மூன்றாம் பெயரை
அவர்கள் வழங்கினர்
அந்த மூன்றாம் பெயர்
அவனது புன்னகையைப்
பிடுங்கிவைத்துக்கொண்டு
துவக்குகளைப் பரிசளித்தது.
அவனது விருப்புகளின்
மீதேறிநின்று பல்லிளித்தது.
அவனது தாயைப் பைத்தியமாயத்
தெருவில் அலைத்தது.
…’’


கிளிநொச்சியில் பிறந்த எனக்கு வன்னிப் போருக்குள்ளும் அதற்கு வெளியில் இராணுவ ஆட்சிக்குள்ளும் வாழ நேர்ந்தது. போர் குழந்தைகளின் உலகத்தை அழிப்பவை என்று கருகிற எனக்கு பதுக்குழியொன்றில் பிறந்த குழந்தை குறித்து எழுத நேர்ந்தது.

“…
குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்.
எனது குழந்தையை
நான் இந்த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்
…”


‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற இந்தக் கவிதை 2007ஆம் ஆண்டு கிளிநொச்சியில் வாழும் பொழுது எழுதப்பட்டது. இராணுவ ஆட்சிக்குள்ளான வாழ்வு எவ்வளவு அச்சம் தரும் என்பதை நான் அறிவேன். துப்பாக்கிகள் எல்லாவற்றையும் மூடி எதையும் பேசாது தன் ஆளுகைக்குள் புதைத்துவிடும். உன்னை சுடுவோம் என்ற அப்படியான வாழ்விலிருந்து அதை எழுத வேண்டி நேர்ந்தது. ‘பாழ் நகரத்தின் பொழுது’ என்ற என்னுடைய கவிதையிலிருந்து பின்வரும் வரிகளை தருகிறேன்.

“…
பாழடைந்து போயிருக்கிற நகரத்தில்
மண் தின்கிற கால்களை
ஊடுருவி
ஒற்றை நாய் வந்து கால்களை நக்கிச் செல்லுகிறது.
வரிசையாக புன்னகைகளால்
துவக்கு
சோதனையிட்டு பிடுங்கிக்கொண்டிருக்கிறது
இயல்பான வாழ்வை.

கூர்மையான துவக்கு
எதை வேண்டுமானாலும் செய்யும்.
என்னை உருவி எடுத்துக்கொண்டு
அனுப்புகிற பழுதடைந்த பொழுதில்
தெருவிளக்குகள் அணைந்துபோய்விட்டன
…”


இந்தக் கவிதை 10.02.2009 அன்று எழுதப்பட்டது. ‘பாழடைந்த நகரம்’ என்று யாழ்ப்பாணம் எனக்கு படுவதைப்போல ‘மூடுண்ட நகரம்’ என்று சித்தாந்தன் எழுதியியுள்ளார். இந்த நகரம் அல்லது யாழ்குடா நாடு அச்சம் தருகிற ஆட்சியால் மூடுண்டிருந்ததால் எதிர்கொண்ட துயரங்கள் அச்சங்கள் அச்சுறுத்தல்கள் மரணங்கள் மிகவும் கொடுமையானவை.

இராணுவ அச்சுறுத்தல்கள் பல கவிஞர்களின் கவிதைகள் எழுவதை தடை செய்திருந்தன. அவர்கள் எதையும் எழுதாத நிலையில் அமர்த்தி கைகளை கட்டி வைத்திருந்தன. சித்தாந்தன், துவாரகன் போன்றவர்கள் அந்த அச்சுறுத்தலான வாழ்வைத்தான் கவிதைகளாக எழுதியிருக்கிறார்கள். சித்தாந்தனின் ‘தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்’ என்ற கவிதையில்

“…
முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன
....”


இப்படிக் குறிப்பிடுகிறார். துவாரகனின் ‘தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ என்ற கவிதையில்

“...
வீதிகளும் வெளிகளும்
வெறுமையாகிப் போன
நம் கதைகளையே
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன
வரிசை கட்டிக் கொள்வதும்
நேரம் கடத்தும் காத்திருப்பும்
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும்
காற்றுப் பைகளாக்குகின்றன.
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில்
இருக்கும் ஈர்ப்புக் கூட
இந்த நடைப்பிணங்களில் இல்லை
..”


என்று குறிப்பிடுகிறார். இந்தக் காலப்பகுதியியல் நா.சத்தியபாலன் எழுதிய ‘இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது’ என்ற கவிதையில்

“…
ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று
…”


என்று எழுதுகிறார். த.அஜந்தகுமார் என்ற கவிஞர் தனது ‘ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீh’; என்ற கவிதையில்

“நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.
ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக்கிடந்து
அவனின் இறுதிச் சொற்களைத்
தம்மோடு எடுத்துச் சென்றன
…”


என்று மரணம் நிரம்பிய குடாநட்டு வாழ்வை எழுதுகிறார். யாழ்பபாணத்தைச் சேர்ந்த மருதம்கேதீஸ் என்ற கவிஞர்

“அழுகிய பிணத்தைத் தின்று நிணம் வழிய
ஐந்து மொட்டைகள் வந்தன
அதில் பேச்சிழந்த மொட்டைகளின் கைகளில் உருவகங்கள்
உருவகங்கள் நெளிகின்றன சர்ப்பங்களாக.”


என்று எழுதுகிறார். பள்ளி மாணவியான தேஜஸ்வினி யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் உருவாகி வருகிற பெண் கவிஞர் அவரது ‘கனாக்காலம்’ என்ற கலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் எழுதப்பட்டுள்ள கவிதையில் இப்படி எழுதுகிறார்.

“…
புன்னைச் சருகுகள்
இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன
அன்றொருநாள்
அக்குருதியின் நெடியில்
எங்கள் கனாக்காலத்தின
வசந்தங்கள் கரைந்திருந்தன
…”


என்று எழுதியவர் அதே இதழில் ‘நானும் நீயும’; என்ற கவிதையில் குறிப்பிகிற இரவு எதிர்பார்ப்பகுக்ளை நிரப்பி மிகவும் இருண்டதாயிருக்கிறது.

“…
ஆந்தைகளின் அலறல்களில
புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில
நீ வருவாய
சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து
ஒற்றை முத்தம் தருவாய்
…”


என்று குறிப்படுகிறார். மனமுரண்பாடுகளையும் பாலியல் முரண்பாடுகளையும் குருதி தோய்ந்த வாழ்வையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வேல்நந்தன், கலியுகன், தபின் போன்றவர்களும் தங்கள் வாழ்வு குறித்து ஓரளவு எழுதியிருக்கிறார்கள். ஈழத்தின் கிழக்கில் பஹீமாஜஹான், அனார், அலறி, கலைச்செல்வி, சி.ஜெயசங்கர், அநுராதபுரத்தைச் சேர்ந்த இளையவரான வஸீம்அக்கரம் போன்றவர்கள் எழுதுகிறார்கள். கிழக்கில் நிகழும் ஆக்கிரமிப்பை வஸீம்அக்ரம் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியி;ட ‘ஆக்கிரமிப்பின் கால்த்தடம்’ என்ற தொகுப்பில் உள்ள ‘சுதேச உரிமையை தொலைத்தல்;’ கவிதையில்

“…
வெறியின் கண்சுளைகள் நித்தமும்
பிதுங்கித் தெரியும் வீரமும்
அதிகாரம் தொடுத்த வில்லின் வரைபடமும்
குடைபோல் விரித்த எனது
மரங்களின் நிழற் பரப்பில்
போர்ப் பயிற்சி செய்கிறது
…”


என்று எழுதுகிறார். வவுனியா திருகோணமலை மண்ணின் கவிதைகள் குறித்து அறிய முடியவில்லை. போர்க் காலம் மற்றும் இராணுவ ஆட்சி எல்லாவற்றையும் துண்டித்தும் தணிக்கை செய்துமிருந்தபடியால் குறைநிலையான வாசிப்பையை செய்ய முடிகிறது.

03.
ஈழத்திற்குரிய புலம்பெயர் கவிதைகள் கொண்டிருக்கிற அனுபவ வெளிகள் மிகவும் விரிந்தவை. யுத்தத்திற்கும் அலைச்சலுக்கும் இடையிலான வாழ்வை நிலத்தின் கவிதைகள் சித்திரிக்க யுத்தத்தின் தாக்கத்துடன் நீண்ட அலைச்சல்களையும் பல்லின நெருக்கடிகளையும் புலம்பெயர் கவிதைகள் பேசுகின்றன. அந்நிய நாட்டு வாழ்வையும் சொந்த நாட்டு நினைவையும் இணைக்கின்றன. தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்த கவிதை நிலவரத்தில் ஜெயபாலன் முக்கியமானவர். கி.பி.அரவிந்தன், சேரன், செழியன், திருமாவளவளன், இளவாலை விஜயேந்திரன், மைத்திரேயி, வாசுதேவன், நளாயினி, பாமினி, நிரூபா, செல்வம், ஆழியாள், தான்யா, போன்றவர்கள் முக்கியம் பெறுகிறார்கள். இன்றைய சூழலில் ஜெயபாலனுடன் இளங்கோ, திருமாவளவன், பிரதீபா, நிவேதா, பா.ஐ.ஜெயகரன், தமிழ்நதி, மாதுமை போன்றவர்கள் எழுதி வருகிறார்கள். புலம்பெயர் கவிதைகள் உள்ளடக்கி வைத்திருக்கிற உணர்வுகள் மிகவும் தீவிரமானவை. பாலியல் நெருக்கடி, ஜனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்து என்பன புலம்பெயர் கவிதைகளில் வலிமை கொண்டிருக்கின்றன.

புதிய தேசத்தில் எதிர்கொள்ளுகிற அனுபவங்கள்தான் புலம்பெயர் கவிதைகளுக்கு வலுவளிக்கின்றன. அந்நிய மொழி அந்நிய வாழ்வு கலாசாரம் என்பவற்றின் தாக்கத்தால் ஈழ வாழ்வு குறித்த ஏக்கம் ஈழக்கவிதைகளின் இன்னொரு குரல்களாக வெளிப்படுகின்றன. அவர்கள் அலையும் தெருக்களும் பேருந்துகளும் கடற்கரைகளும் படகுகளும் ஈழக்கவிதையில் இடம்பெறுகின்றன. எப்பொழுதும் தாக்கி;கொண்டிருக்கிற யுத்தம் நிலத்தின் நினைவுகள் என்பன குறித்து அவர்கள் பேச வேண்டியிருந்தது. மரண களங்களுக்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அந்தப் பதற்றம் எப்பொழுதும் அவர்களை பின் தொடர்ந்து உலுப்பிக்கொண்டிருக்கிறது.

புலம்பெயர் கவிதைகள் நீணட அலைச்லையும் தாயகத்தலிருந்து பிரிந்து தொலைவிலிருத்தலையும்தான் அதிகம் சித்திரிக்கின்றன. வாசுதேவனின் ‘தொலைவிருத்தல்’ இதில் முக்கியமான தொகுப்புகளில் ஒன்று. ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ என்ற திருநாவுக்கரசு தொகுத்த கவிதைப் புத்தகத்தில் அநேகமான புலம்பெயர்நத கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் தேசத்தில் கிட்டத்தட்ட 63 இதழ்கள் வெளிவநதிருப்பதையும் அந்தத் தொகுப்பு பதிவு செய்திருக்கிறது. இதழ்களை வெளியிடுகிற வசதி அல்லது தேவை மற்றும் தேவைக்கு ஏற்ற வசதியான இணையத்தளப் பாவனை என்பன புலம்பெயர் கவிதைகள் வெளி வருவதற்கும் பரவலடைவதற்கும் உதவுகின்றன.

04.
வ.ஐ.ச. ஜெயபாலன், ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நிலத்தில் வாழ்ந்து அந்த செழுமையான அனுபவங்களையும் குருதி தோய்ந்த வாழ்வையும் துப்பாக்கிகளின் அச்சுறுத்தல்களையும் பேராட்டத்தையும் எழுதியிருக்கிறார். எழுபதுகளின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த ஜெயபாலன் நான்காவது தலைமுறைக் காலத்திலும் அல்லது நான்காவது தசாப்தத்திலும் எழுதிக்கொண்டிருக்கிறார். 1988ஆம் ஆண்டில் ஈழத்தைவிட்டு புலம்பெயர்ந்த ஜெயபாலன் போர் ஓய்கிற நாட்களில் அதற்கு இடையில் 2006 ஆம் ஆண்டு யுத்தம் தீவிரம் அடையும் வரை தாயகத்திற்கு வந்து போயிருக்கிறார். யுத்தமும் அலைச்சலும் இனக்கொலைகளும் நான்காவது தலைமுறை வரை தொடருகிறது என்ற குரூரமான யதார்த்தம் இதில் வெளிப்பட்டுக் கிடக்கிறது.

ஈழத்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார். ‘பாலியாறு நகருகிறது’ என்ற அவரது கவிதை வன்னியின் ஆன்ம உண்ர்வையும் இன எழுச்சியையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கவிதைகள் பேசுகிற வெளிகள் விடுதலை பற்றியவானவாக இருக்கின்றன. இன்னும் நம்பிக்கையை தந்துகொண்டிருப்பதுதான் ஜெயபாலனின் கவிதைகளின் சாத்தியமாக இருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையில் பங்களித்திருக்கிற ஜெயபாலனால் போராளிகளையும் போராட்டத்தையும் காப்பதற்காய் கூறப்பட்ட ஆலோசனைகள் எவையும் உரிய காலத்தில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இன்று நேர்ந்திருக்கிற ஈழ மக்களின் வீழ்ச்சி குறித்து காலத்திற்கு முன்பாகவே எச்சரிக்கை செய்திருந்ததை நான் அறிந்திருக்கிறேன்.

தீராத சோகத்தை தந்த யுத்தம் உலகம் எங்கிலும் சிதறிப்போயிருக்கிற ஈழத் தமிழ் மக்களை எல்லாம் வதைத்துப் போட்டிருக்கிறது. தாயகத்தை பிரிந்த துக்கமும் தாயக்கத்தில் நிகழும் இனக் கொலைகளும் புலம்பெயர்ந்த தமிழர்களை மிகக்கெடுமையாக பாதித்திருக்கின்றன. ஈழப் போராட்டத்திற்காகவும் ஈழ அபிவிருத்திக்காகவும் அவர்கள் செய்த உழைப்பு சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலைச்சலும் அவலமும் ஏமாற்றமும் நிறைந்த மனிதர்களின் மனச்சொற்களை ஜெயபாலனின் கவிதைகளில் காண முடிகிறது. எமது இனத்திற்கு ஏற்பட்ட இந்த அவலம் அரசியல் இருள் நிலை என்பவற்றை தோற்றுப் போனவர்களின் பாடல்கள் சித்திரிக்கின்றன.

நம்பிக்கைகளையும் பண்பாட்டையும் நிலத்தின் வாசனையையும் முழு அளவில் பிரதிபலிக்கிற இந்தக் கவிதைகள் தாய் மண் குறித்து கனவாகவும் அதன் மீதான சொற்களாகவும் இருக்கின்றன. ஜெயபாலனின் அழைப்பு சிதைந்துபோன தாயகத்தை மீள கட்டி எழுப்புகிற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. தோற்றவர்களை அடுத்த கட்டத்திற்கு உற்சாகப்படுத்துகிறது. ஈழக்கவிதைகளில் தோல்வியை அதன் எல்லை வரை சொல்லும் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. வரலாற்றின் மீதான இந்தப் பெரிய பாடல்கள் ஆச்சரியப்பட வைக்கிற நம்பிக்கை கொண்டிருக்கின்றன. ஆலயங்களையும் மசூதிகளையும் ஆறுகளையும் நிலத்தையும் இந்தச் சொற்கள் சுற்றி;கொண்டிருக்கின்றன. ஈழ மக்களின் புழங்கு பொருட்களையும் வளங்களையும் சித்திரிக்கின்றன. நாம் இழந்தபோயிருக்கிற வாழ்வை இந்தக் கவிதைகள் முழுமையாக கோருகின்றன.

பழைய கதைகளையும் முதிர்ந்த சொற்களையும் கொண்டு ஈழ மக்களுக்கான அரசியலை முன்வைக்கிற தோற்றுப் போனவர்களின் பாடல்கள் இந்திய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கண்டிக்கின்றன. ஈழ மக்களின் வாழ்வுரிமையை பெற்றுக்கொள்ள இந்தியாவிடம் கோருகின்றன. வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம் தொடர்பாக பேசிய மிகச்சிலரில் ஜெயபாலனும் ஒருவர். வடக்கு முஸ்லீம் மக்களின் அகதித் துயரத்தையும் அலைச்சலும் தனது முன்னைய கவிதைகளில் பிரதிபலித்திருக்கிறார். கோயில்களும் மசூதிகளும் நிறைந்த ஊரில் தமிழ் பேசும் மக்கள் சேர்ந்து வாழுகிற வாழ்வையும் தனது தோற்றுப்போனவர்களின் பாடல்களில் பேசுவதன் வாயிலாக தமிழ் முஸ்லீம் சமூகங்களது இணைந்த வாழ்வை அவசியப்படுத்துகிறார்.
எந்த மனிதகர்ளுடன் நட்புடன் பழகுகிற இவர் எல்லோருடனும் தொடர்பு கொள்ள விரும்புகிறவர். தன்னை ஒரு சனங்களின் போராளி எனக் குறிப்பிடுகிற ஜெயபாலன் போராடுகிற மக்களின் சாடசியாக வாழ விரும்புகிறார். இவரது பிரகடனங்களில் சனங்களது குரல்கள் மட்டுமே அடங்கியிருக்கின்றன. போராளிகளை மிகவும் ஆழமாக நேசிக்கிற தாயாகவும், தாயகத்தின் குழந்தையாகவும் தன்னை வெளிப்படுத்துகிறார். அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன் என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப்போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.

கிளிநொச்சி,
22.11.2009
 

http://www.vaarppu.com/review.php?rvw_id=81

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், இதையும் 'முழுமையாக' வாசித்துப் பாருங்கள்!

 

வாசித்த பின்னர், யாரிந்தப் 'புதுவை' என்று என்னிடம் கேட்க வேண்டாம்!

 

 

 

 

அம்மா 

வ.ஐ.ச.ஜெயபாலன் 



போர் நாட்களிலும் கதவடையா நம் 

காட்டுவழி வீட்டின் வனதேவதையே 

வாழிய அம்மா. 

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து 

அன்றுநான் நாட்டிய விதைகள் 

வானளாவத் தோகை விரித்த 

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா 

தும்மினேன் அம்மா. 

அன்றி என்னை வடதுருவத்தில் 

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? 



அம்மா 

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் 

நம் முற்றத்து மரங்களில் 

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? 

தம்பி எழுதினான். 

வலியது அம்மா நம்மண். 

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள் 

வானில் ஒலித்த போதெலாம் 

உயிர் நடுங்கினையாம். 

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம். 



இருளர் சிறுமிகள் 

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர 

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில் 

கன்னிமாங்கனி வாடையில் வந்த 

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற 

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே 

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை 

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா. 



என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை 

உன்னை வந்து பார்க்கலையாமே. 

போகட்டும் விடம்மா. 

அவனும் அவனது 

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல 

உன்னைக் காக்க 

யானையின் மதநீர் உண்டு செளித்த நம் 

காடும் உளதே 

 


*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு

 
 
  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதைக்கும் நம்ம புதுவையாருக்கும் என்ன தொடர்பு புங்கை..! புதுவையை.. ஏன் வைரமுத்துவை.. ஏன் கண்ணதாசனை.. தோழர் என்று அழைப்பதன் மூலம் தமக்கு ஒரு அங்கீகாரத்தை மக்களிடம் தேட விளைபவர்கள் பற்றியும் நாங்கள் அறிவோம்..! அதுகளை விடுங்க. இப்படி எத்தனையோ மனிதர்களை எமக்கு போர்க்காலம் காட்டிவிட்டுள்ளது..! :lol:

 

புதுவையின் உற்ற தோழர் தற்போதும் சிறீலங்கா அரசுடன்.. அதற்கு ஆதரவளிக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளுடன்.. இந்திய அரசு அதிகாரிகளுடன்.. தொடர்பில் உள்ள ஒருவர் ஏன் புதுவையின் எதிர்காலம் குறித்து.. எந்தவித அக்கறையும் இன்றி சாதாரண புலம்பெயர் தமிழன் போல இருக்கிறார்...???! கவிதையில்.. புதுவையை தோழன் என்று பாடினால் மட்டும் போதுமா..??????????????!

 

நான் இந்த ஜெயபாலனின் கவிதைகளோ ஆக்கங்களோ அதிகம் படிப்பதில்லை. ஏனெனில் அவரின் எழுத்தின் போக்கை நான் யாழில் அழகாக இனங்கண்டு கொண்டிருக்கிறேன்..! இப்ப நான்.. சொல்வேன்.. 1944 இல் அவர் குவா குவா என்று அழுதது கூட ஒரு கவிதை தான் என்று..! அதுவும் 2009 மே இல் மக்களுக்கு  பெரும் அவலம் வரப்போவது அறிந்து அன்றே அவர் அப்படி அழுதார் என்றும் நான் எழுதலாம்..! எனக்கும் ஒரு கெளரவிப்பு பின்கதவால் கிடைக்கனுன்னா... அதைச் செய்யலாம்..! :icon_idea::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி இப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டு விளையாட்டு மைதானத்தில அம்மணமா ஓடின ஆள் மாதிரி ஆகிப் போட்டுது! :D

 

நெடுக்கு, சகிக்க முடியவில்லை! நோபல் பரிசும் அதற்கு அடுத்த நிலைப் பரிசுகளும் வாங்காத விஞ்ஞானிகள் ஆய்வாளர்களை நீங்கள் விஞ்ஞானிகள் இல்லையென்று சொன்னால் அவர்களுக்கு எப்படியான ஒரு ஆத்திரம் காயம் வரும் என்று யோசித்துப் பாருங்கள்! அதைப் போலத்தான் பாடப் புத்தகத்தில் வராதவன் எழுத்தாளனோ கவிஞனோ அல்ல என்பதும் ஜெயபாலனை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான கவிஞர்களைக் காயப்படுத்தும் ஒரு செயல். மேலும், இது போன்ற கருத்துக்களால் நீங்கள் உங்கள் முதிர்ச்சியின்மையைக் காட்டிக் கொள்கிற வேலை தான் நடக்குது. எல்லாமே எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏன் உங்களுக்கு? ரிலாக்ஸ்..நெடுக்கர்! :)

ஜெயபாலன் மிக ஆழுமை மிக்க ஒரு மனிதர் .

அது கவிதை ஆகட்டும் கதையாகட்டும் நடிப்பு ஆகட்டும் அரசியல் ஆகட்டும் .அவரது புவியியல் அறிவு கண்டு வியந்துநின்ற நாட்களும் உண்டு .

எல்லாவற்றையும் விட அவரது துணிவு அசத்தலானது .இந்திய எழுத்தாளர்கள் முதல் உதாரணம் காட்டும் ஈழத்து கவிஞர் இவர்தான் (சுஜாதா தொடக்கம் சுந்தர ராமசாமி வரை .நேற்று நாஞ்சில்நாடனும் ஜெயபாலனை குறிப்பிட்டார் )

ஜெயபாலனுக்கு நினைவு இருக்கோ தெரியாது புளொட்டை விட்டு வெளியேறுவதாக புளொட் வெளியிட்ட "தமிழமுது " என்ற இதழில் விடை பெறுகின்றேன் என்று ஒரு கவிதை எழுதினார் .அதை வெளியிட்டவர்களுக்கே அவர் எழுதியது விளங்கவில்லை .

ஆனால் அவர் திறமைக்கு ஏற்ப பலரும் மதிப்பவர் ஆகவில்லை .அதற்கான காரணம் நான் எழுதாமாமல் விடுவதுதான் நல்லது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.