Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னால் பெண் போராளிக்கு திருமணம் செய்ய....

Featured Replies

எனது நண்பர் ஒருவரின் தங்கை புலிகளுடன் இருந்தவர். வயது 31. போரின் போது சிறு காயங்களுக்கு ;உள்ளானார். இவர் புனர்வாழ்வின் பின் இப்பொழுது ;யாழ்ப்பாணத்தில் தனது தாயூடன் வசிக்கின்றார். இவர் தனது எதிர்காலம் தொடர்பாக மிகவூம் கவலையில் உள்ளார்.

இவருக்கு ;திருமணம் ஒன்றை செய்துவைப்பதற்கு நண்பர் மிகவூம் முயற்சி செய்கின்றார். பலர் இவரது: தங்கையை வந்து பார்க்கின்றனர். ஆனால் முன்பு  புலிகள் இயக்த்தில் இருந்தமையினாலும் அரசாங்க உத்தியோகம் இல்லாமையாலும் எந்தவிதமான  திருமணப் பொருத்தங்களும் சரிவரவில்லை.

இவரது அண்ணன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அல்லாத நாடு ஒ;னறில் புலம் பெயர்ந்து இருப்பதால் அவருக்கு அருகிலிருந்த உதவ முடியாத நிலை.  .
இவருக்கு ஒரு திருமணத்தை செய்து வைப்பதற்கு பொருத்தமான ஒருவர் இருந்தால் தொடர்பு கொள்ளவூம்.
நன்றி

மீராபாரதி

Edited by meerabharathy

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் களத்திலேயே பல பேர் கட்டாமல் இருக்கினம் ஆனால் அவை எல்லாம் ஊரில போய் இப்படியான ஆட்களை கட்ட மாட்டினம் கேட்டால் போராட்ட ஆதரவு என்பது வேறு,திருமண வாழ்க்கை என்பது வேறு என்று சொல்வினம்
 
தாங்கள் செய்ய மாட்டினம் ஆனால் மற்றாக்களுக்கு நல்லா அட்வைஸ் பண்ணுவினம்

இது பெண்களுக்கும் பொருந்தும் தானே சகோதரி இருபாலர்களுக்கும் சொல்லி இருப்பீகள் என்றே நம்புகிறேன் .இப்படியான நிலைமையில் ஆண் போராளிகளும் உள்ளனர்.

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

இது பெண்களுக்கும் பொருந்தும் தானே சகோதரி இருபாலர்களுக்கும் சொல்லி இருப்பீகள் என்றே நம்புகிறேன் .இப்படியான நிலைமையில் ஆண் போராளிகளும் உள்ளனர்.

ஆம் உண்மை தான்.இரு பாலருக்கும் சேர்த்து தான் சொன்னேன்.
 
முக்கியமாக நான் எழுதியது நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆட்களுக்கு...போராளிகள் கஸ்டப்படினம்.சிங்களவனின் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகினம் என இங்கு வந்து கதை,கவிதை எழுதி தங்களை புரட்சியாளர்களாக காட்டுபவர்களைத் தான் சொன்னேன்.உண்மையாக கவலைப்படுபவன் தான் முன்னுக்கு நின்று செய்து மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருப்பான்.
 
நான் என்ட முதற்பதிவிலேயே சொல்லி விட்டேன்.//தாங்கள் செய்ய மாட்டினம் ஆனால் இங்கு வந்து மற்றாக்களுக்கு செய்ய சொல்லி அட்வைஸ் பண்ணுவினம்//அப்படியான ஆட்களுக்கு தான் சொன்னேன்.அப்படி எழுதினப் பிறகும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏன் நீ செய்யலாம் தானே என்று வம்புக்கு கேட்பது போல் உள்ளது.
 
நான் இங்கே வந்து அப்படி செய்,இப்படிச் செய்,நான் அங்கே அப்படிச் செய்தனான்,இங்கே இப்படிச் செய்தனான்,அங்கே உதவினான்,இங்கே உதவினான் என எழுதுவதில்லை
 
காசு,பணம் அனுப்புவதிலும் பார்க்க அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பது தான் பெரிய தியாகம்.ஆனால் இங்கு இருந்து வீறாப்பு கதைக்கிற ஒருத்தரும் அங்கு உறவு வைச்சுக்க விரும்புவதில்லை.அது உண்மை.
 
என்னைத் தனிப்பட கேட்டால் நான் கல்யாணம் கட்டுவேனோ தெரியாது அப்படிக் கட்டினாலும் ஊரில் இருப்பவர்களை கட்டுவதில்லை என்று தீர்மானித்து உள்ளேன்.நான் எல்லோரையும் பார்த்து போய் போராளிகளை கட்டுங்கோ அவர்களுக்கு வாழ்க்கை கொடுங்கோ என சொல்லவில்லை அப்படி சொல்லுகின்ற யோக்கியதை எனக்கில்லை.நான் சொல்வது மற்றாக்களை பார்த்து செய்யுங்கோ என்று  அட்வைஸ் பண்ணுகின்ற ஆட்களைத் தான்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எங்க தம்பி தங்கச்சிக்கு...... நாங்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை.. பொம்பிளைகள.. கலியாணம் கட்டியோ கட்டாமலோ.. வந்த கணக்கா.. வெளிநாட்டில தான் பி ஆர் உள்ள பொண்ணு மாப்பிள்ளை எடுப்பம். அதுவும் படிப்பு பட்டம் வசதி வாய்ப்பு எல்லாம் பார்த்து.. கோத்திரம்.. சாத்திரம் எல்லாம் பார்த்து கோயிலில வைச்சுத்தான் எல்லாம் செய்வம்.

ஊருக்கும் உதவி செய்யுறம். போராளிகளுக்கும் செய்யுறம். போராட்டத்திற்கும் செய்யுறம் என்றவை தான்.. போராளிகளுக்கு வாழ்க்கை கொடுக்கனும். நாங்கள் எப்பவும் போல தூர விலகி நின்று பொந்துக்குள்ளால குசுகுசுப்பம்..! சந்தர்ப்பம் கிடைச்சா அசைலம் அடிப்பம்..! அதை விட வேற எங்களட்ட எதிர்பார்க்கக் கூடாது. ஏன்னா எங்களுக்கு அடுத்தவனைப் பார்த்து கூவத்தெரியுமே தவிர நாங்க எதுவும் செய்யமாட்டம்..! நாங்க சேவா இருக்கனும். மற்றவன் எப்படியும் போகட்டும் நமக்கென்ன..!

வேற யாராவது தியாகிகள்.. சா.. போராளிகள் கஸ்டப்படுறவை என்று சொல்லுறவை.. உதவி செய்யுறவை.. எங்க உங்க மனித நேயத்தை இன்னும் கொஞ்சம் பெரிசாக் காட்டி.. இந்தப் போராளிகளுக்கு வாழ்வு கொடுங்க பார்ப்பம்..!! இதுதான் இப்ப எங்கட சவால்..பொழுதுபோக்கு..!

இதை நீலிகண்ணீர் என்று நினைக்காதீங்க.. இது எங்க இரத்தக்கண்ணீர். (பாசம் பொங்கி வழியுது. துடைச்சுங்க)

------------

எப்படி எல்லாம் கஸ்டப்பட்டு.. வெற்றியில..தலைநிமிர்ந்து நடந்த எங்கள் போராளிச் சகோதர சகோதரிகளுக்கு இன்று ஊரில சும்மா கிடந்ததுகள் எல்லாம்.. பட்சாதாபம் பார்க்கிற நிலை..! தலைவர் இவற்றைக் காண நேரிட்டிருந்தால்.. 1972 இலேயே உந்தப் போராட்டம் வேணாம் என்ற முடிவுக்கு வந்திருப்பார்..! உதில கூவிற கனபேர் ஊரில.. கச்சான் வறுத்துக்கிட்டு இருந்திருப்பனம். :icon_idea:

ஆம் உண்மை தான்.இரு பாலருக்கும் சேர்த்து தான் சொன்னேன்.
 
முக்கியமாக நான் எழுதியது நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆட்களுக்கு...போராளிகள் கஸ்டப்படினம்.சிங்களவனின் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகினம் என இங்கு வந்து கதை,கவிதை எழுதி தங்களை புரட்சியாளர்களாக காட்டுபவர்களைத் தான் சொன்னேன்.உண்மையாக கவலைப்படுபவன் தான் முன்னுக்கு நின்று செய்து மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருப்பான்.
 
நான் என்ட முதற்பதிவிலேயே சொல்லி விட்டேன்.//தாங்கள் செய்ய மாட்டினம் ஆனால் இங்கு வந்து மற்றாக்களுக்கு செய்ய சொல்லி அட்வைஸ் பண்ணுவினம்//அப்படியான ஆட்களுக்கு தான் சொன்னேன்.அப்படி எழுதினப் பிறகும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏன் நீ செய்யலாம் தானே என்று வம்புக்கு கேட்பது போல் உள்ளது.
 
நான் இங்கே வந்து அப்படி செய்,இப்படிச் செய்,நான் அங்கே அப்படிச் செய்தனான்,இங்கே இப்படிச் செய்தனான்,அங்கே உதவினான்,இங்கே உதவினான் என எழுதுவதில்லை
 
காசு,பணம் அனுப்புவதிலும் பார்க்க அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பது தான் பெரிய தியாகம்.ஆனால் இங்கு இருந்து வீறாப்பு கதைக்கிற ஒருத்தரும் அங்கு உறவு வைச்சுக்க விரும்புவதில்லை.அது உண்மை.
 
என்னைத் தனிப்பட கேட்டால் நான் கல்யாணம் கட்டுவேனோ தெரியாது அப்படிக் கட்டினாலும் ஊரில் இருப்பவர்களை கட்டுவதில்லை என்று தீர்மானித்து உள்ளேன்.நான் எல்லோரையும் பார்த்து போய் போராளிகளை கட்டுங்கோ அவர்களுக்கு வாழ்க்கை கொடுங்கோ என சொல்லவில்லை அப்படி சொல்லுகின்ற யோக்கியதை எனக்கில்லை.நான் சொல்வது மற்றாக்களை பார்த்து செய்யுங்கோ என்று  அட்வைஸ் பண்ணுகின்ற ஆட்களைத் தான்

நன்றி சகோதரி. மன்னிக்கவும். நீங்கள் அட்வைஸ் பண்ணிய ஆட்களுக்கு விட்ட சவால் (சொன்ன அட்வைஸ்) என்பதை கவனிக்க தவறிவிட்டேன்.

Edited by கா ளா ன்

இந்த திரியில் ஆவது சண்டை பிடிக்காதையுங்கோ...

வெளிநாட்டில் ஒரு Professional வேலையில் (வருட சம்பளம் > US $75000) உள்ள 28 வயதுள்ள
பெண்ணுக்கு (எந்த குறையும் இல்லாத சாதரண தமிழ்பெண்) யாழ்பாணத்தில் திருமணம் பேசிய பொழுது....மாப்பிள்ளையின் பெற்றோர் தங்களுக்கு சீதனமாக கொழும்பில் வீடு கேட்கிறார்கள்...
எங்கள் பெண்கள்/பிள்ளைகள் எல்லாம் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்தால் தான்
இந்த சீதன, மற்றும் முட்டாள் தனங்கள் குறையும்...

உங்களை கிண்டுவதற்காக கேட்கவில்லை ..

காசு,பணம் அனுப்புவதிலும் பார்க்க அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பது தான் பெரிய தியாகம். -   என்னை பொறுத்தவரை வாழ்க்கை கொடுத்தேன்..தியாகம் செய்தேன்  என்பதில் உடன்பாடு இல்லை
வாழ்க்கையை நண்பர்கள் போல் பங்கிடவேண்டும்...இல்லை என்றால் ஒருபக்கம் எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்...

ஆனால் இங்கு இருந்து வீறாப்பு கதைக்கிற ஒருத்தரும் அங்கு உறவு வைச்சுக்க விரும்புவதில்லை.அது உண்மை.

என்னைத் தனிப்பட கேட்டால் நான் கல்யாணம் கட்டுவேனோ தெரியாது அப்படிக் கட்டினாலும் ஊரில் இருப்பவர்களை கட்டுவதில்லை என்று தீர்மானித்து உள்ளேன்.   ..ஊரில் இருப்பவனில் என்ன பிழை? உங்களுக்கு compatible ஆளானில் பிரச்னை இல்லை தானே...
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது.... சம்பந்தப் பட்டவர்களுக்கு புத்தி வந்திருக்க வேண்டும்.
எந்த‌ப் புத்துக்குள்ளை, எந்த‌ப் பாம்பு இருக்குது என்று, தெரியாது.
 
  • 4 months later...
  • தொடங்கியவர்
தேசத்தின் விடுதலைக்கான போராடி மரணித்த போராளிகளை நினைவு கூறவேண்டியது அவசியம்...
அதேபோல் போர்க்காலத்தில்
இசைப்பிரியா போன்ற போராளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதும்
;அதற்கான விசாரணையைக் கோருவதும்
இதனுடாக தேசத்தின் விடுதலைக்கு வழிகளைத் தேடுவதும் அவசியமானவையே....
அதேவேளை இசைப்பிரியாவைப் போல பல இசைப்பிரியாக்கள் இறுதிப் போரில் அதிர்ஸ்டவசமாக தப்பித்து "புனர் வாழ்வு" பெற்றும்... முன்னால் போராளியான தனது துணைவரை இழந்தும் அல்லது காணாதும் தனது குழந்தைகளுடன் அல்லது தனித்து வாழ்கின்றனர்... வாழ்வதற்குப் போராடுகின்றனர்....
தொழில் ஒன்று இல்லாது குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாது திண்டாடுகின்றனர்...
சில முன்னால் பெண் போராளிகளை ஆண் போராளிகள் திருமணம் செய்துள்ளனர்...
ஆனால் பல முன்னால் பெண் போராளிகள் ;திருமணம் செய்யாது இருக்கின்றனர்...
முன்னால் ஆண் போராளிகள் கூட ;இவர்களை திருமணம் செய்யத் தயங்குகின்றனர்...
இது இவர்களது எதிர் காலத்தை கேள்விக்குள்ளாக்கின்றது...
இவ்வாறான சூழ்நிலையில்
புலம் பெயர்ந்தவர்கள் மாவீரர் தினத்தை ஆடம்பரமாக கொண்டாடாமல்....
மிகவும் எளிமையான முறையில் மரணத்தவர்களை நினைவு கூர்ந்து...
இந்த முன்னால் போராளிகளின் வாழ்வு மலர தமக்கு கிடைக்கின்ற அல்லது சேர்த்த பணம் மூலமாக பங்களிப்பதே....
இசைப்பிரியா போன்ற போராளிகளுக்கு செய்கின்ற உண்மையா அஞ்சலியாகும்.
இதுவே இன்று தப்பித்து வாழ்கின்ற இசைப்பிரியாக்களுக்கு செய்கின்ற பங்களிப்பாகும்.
இவர்கள் ஒரு தொழில் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதும்
இவர்களது குழந்தைகள் கல்வி கற்பதற்கு வழிவகுப்பதும் அவசியமானதாகும்.
அன்று இவர்கள் தமது கல்வியைத் துறந்து தேச விடுதலைக்காக விரும்பியோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ போராட சென்றிருக்கா விட்டால் இன்று இவர்கள் இப்படி வாழ வேண்டிய அவசியமில்லை.
புலம் பெயர்ந்தவர்கள் இதை உணர்ந்து பங்களிப்பு செய்ய முன்வருவார்களா...?
  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா????

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா????

ஏனக்கா இந்தக் கேள்வி ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏனக்கா இந்தக் கேள்வி ?

இப்பிடியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கப் படாது, உடனே ரிப்போர்ட்டை அழுத்தி இந்த மாதிரிச் சேட்டையளுக்கு வெட்டு வாங்கிக் கொடுக்க வேணும் சாந்தி!

சொல்லும் செயலும் என்று சொல்லுவார்கள்  ,

மீரா இரண்டாம் வகை .

மீரா கொட்டகலையில் இருக்கும் படத்தை பார்க்க பொறாமையாய் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஏனக்கா இந்தக் கேள்வி ?

அவருக்குத் திருமணம் ஆகாவிடில் அவர் ஒருவருக்கு வாழ்வு கொடுக்கலாமே என்றுதான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்குத் திருமணம் ஆகாவிடில் அவர் ஒருவருக்கு வாழ்வு கொடுக்கலாமே என்றுதான் கேட்டேன்.

மீராபாரதிதான் இதற்கு பதில் சொல்ல வேணும்.

சமத்துவம் பேசி கொண்டே ஒரு பெண் ஆண் இல்லாமல் வாழ முடியாது என்பது கொமெடி.

இத்திரி ஆரம்பித்தபோதோ எனக்குள் விவசாயி விக் கேட்டது போல் எழுத வேணும்போலிருந்தது. அப்படி எழுதி முரண்பட விரும்பாமல் பேசாமலிருந்தேன். திருமணம் இல்லையென்றால் ஒரு பெண்ணுக்கு வாழ்வில்லையென்ற நிலமையை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்கிறவர்களில் ஒருவராகவே மீராபாரதியின் கருத்தும் அமைகிறது.

  • தொடங்கியவர்

வணக்கம் நண்பர்களுக்கு...
முதலில் ஈழத்தில் முன்னால் போராளிகள் பலர் பல வழிகளில் வாழ முற்படுகின்றார்கள்....
அதில் ஒரு வழி தான் திருமணம்.
ஆனால் அந்த வழியில் செல்வதற்கு அவர்களுக்கு வழியில்லை...
திருமணம் செய்வதா இல்லையா என்பது ஒருவரின் முடிவு.

ஒருவர் திருமணம் செய்ய முடிவெடுத்தால் அதற்குள் பெண்ணுரிமையும் உண்டு.

ஆகவே தேவையில்லாத விவாதங்கள் தேவையில்லை....
எங்களால் முடிந்தததை கல்வியை விட்டுவிட்டு போராட சென்று... இன்று கவனிப்பாரற்று இருக்கின்ற முன்னால் போராளிகளுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியும் என்றால் செய்வோம்....

அல்லது அமைதியாக இருப்போம்.. வீண் விவாதங்கள் செய்து நேரத்தை விரயமாக்கத் தேவையில்லை...

இரண்டாவது இன்னுமொரு பெண் போராளி திருணம் செய்வதைப் பற்றி கேட்கவில்லையே....
அவர் தனது குழந்தைகள் இருவரும ;தொடர்ந்து படிப்பதற்கான உதவியைத்தானே  உங்களிடம் கேட்கின்றார்....
அதை முடிந்தால் செய்வதுதானே...
ஏன் திருமணத்திற்குள் மட்டும் இந்த விவாதம் சுற்றித் திரிகின்றது....
பொறுப்புணவுடன் எழுதுவோம் அக்கறையுடன் செயற்படுவோம்...

இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்....
இவர்களுக்கு தனிப்பட புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து பணம் வருகின்றது... ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை....

அண்ணா,

நீங்கள் மீண்டும் மற்றவர்களுக்கு உங்கள் வேலையை கழட்டிவிடுகிறீர்கள். மற்றும் படித்தவுடன் அங்கு வேலை கியூ கட்டி நிற்பது போல் மாயையை ஏற்படுத்தவேண்டாம்.

பல்கலை பட்டம் வைத்திருப்பவர் எல்லாம் அங்கு சங்க கடையில் சரை சுத்துகிறார்.

இரண்டு வருடத்திற்கு முன் எனது மாவீர நண்பனின் குடும்ப கலியாணத்திற்கு அவரின் நண்பர்கள் நாங்கள் 10 இலட்சம் அனுப்பி அவன் இல்லாத இடத்தை நிரப்பினோம்.

இப்போதும் வீடு திருத்த பெற்றோருக்கு இரண்டு இலட்சம் அனுப்பி உள்ளோம்.

காசு வேறு கலியாணம் வாழ்கை வேறு என்றும் நழுவவேண்டாம்.

ஏன் என்றால் இங்கு நீங்கள் தூக்கி பிடிக்கும் போராடாமல் "படிப்பு" படித்த ஒரு யாழ் பல்கலை மாப்பிள்ளையும் சீதனம் இல்லாமல் கட்டமாட்டான்.

உங்களால் நினைத்தால் உதவ முடியும். இந்த பெண்ணை பாவித்து அரசியல், காசு ஆதாயம் தேட முற்படுவது போல் தெரிகிறது.

ஒரு பெண்ணுக்கு உதவ முடியாத உங்கள் குழு 4 ஆம் உலக பில்டப் கொடுப்பது கொமெடி.

அர்ஜுன் அண்ணாக்கு ஒரு போன் போட்டால் மெத்தபடித்த மேல்மட்ட சுழகு நடன நிகழ்ச்சி வைத்து உங்களுக்கு உடனே $20,000 அனுப்பி இருப்பார்.

நீங்கள் நல்லது செய்ய முயல்வதற்கு நன்றி.

ஆனால் புலியில் பழி போடும் யுக்தியை விட்டு வேறு வழிகளை ஆராய்ந்து உதவ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினம் சென்று விட்டு புகையிரதத்தில் வரும் பொழுது எனக்கு தெரிந்த ஒரு வயதானவரை சந்தித்தேன். 

தனது ஓய்வூதியத்தில் மொத்தமும் முன்னாள் போராளிகளின் வாழ்விற்கே தான் அனுப்பிவிடுவதாகவும் பலரிற்கு திருமணம் செய்து வைத்ததாகவும் சொன்னார். தங்களின் அன்றாட செலவுகளிற்கு பிள்ளைகளிடம் பணம் வாங்குவதாகவும் தற்பொழுது பிள்ளைகளையும் இப்படியான வேலைகளிற்கு உதவுவதற்கு ஆலோசனை சொன்னதாகவும் சொன்னார். 

நல்ல விடயங்கள் தான் செய்கிறார்கள் அவர்களை பாராட்ட வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் அவரிடம் இருந்து இன்னொரு தகவலும் வந்தது. 

பெண் போராளிகளிற்கு சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்ததாக.. இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர்கள் செய்யும் ஏனைய நல்ல விடயங்களிற்கு முன் இதனை ஒரு குறையாக சொல்ல வேண்டாம் என விட்டுவிட்டேன். 

சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைப்பது தவறா சரியா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனையின் தூரத்தை வைத்தே அமையும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.