Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்த இலங்கையருக்கு திறந்த பிடிவிராந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Judge_CI.jpg

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கையருக்கு எதிராக கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் கார்டிப் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் இலங்கையர் ஒருவர் புலிக்கொடி ஏந்தி, மைதானத்திற்குள் அத்து மீறி பிரவேசித்திருந்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகை ஒன்றையும், புலிக்கொடி ஒன்றையும் ஏந்தி குறித்த நபர் மைதானத்திற்குள் பிரவேசித்தார்.

லோகேஸ்வரன் மணிமாறன் என்ற புலி ஆதரவாளருக்கு எதிராக இவ்வாறு திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

லோகேஸ்வரன் மணிமாறன் எனப்படும் மொஹமட் ராஜீ என்ற பிரித்தானிய பிரஜை ஏ.ரீ.எம். மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சில தனியார் வங்கிகளில் மோசடியான முறையில் பத்து போலிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பாரியளவு பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் நசனல் வங்கி மற்றும் கொமர்சல் வங்கி ஆகியவற்றிலும் சுமார் மூன்று மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் லோகேஸ்வரன் மணிமாறன் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

  • Replies 80
  • Views 7.8k
  • Created
  • Last Reply

maniwaran.jpg

சந்தேக நபரின் கையில் குத்தியிருந்த ''பச்சை''யை வைத்து குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20297

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி நூறு வீதம் உண்மை ,அண்மையில் தாய்லாந்தில் மட்டையுடன் பிடிபட்ட இருவரின் படம் வந்தது அதில் ஒருவர் இவரே

  • கருத்துக்கள உறவுகள்
மட்டைப் பார்ட்டி தான் கொடியைத் தூக்கிக் கொண்டு ஓடினது.இதை விட கேவலம் வேற ஒன்றும் இல்லை :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

அவர் எங்க கொடிய தூக்கி கொண்டு ஓடுறார்....?

தூக்கல கழுத்தில கட்டியிருக்கார்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டைப் பார்ட்டி தான் கொடியைத் தூக்கிக் கொண்டு ஓடினது.இதை விட கேவலம் வேற ஒன்றும் இல்லை :lol:

ரதி அக்கோய்,
 
அங்க கொலைப் பாட்டியல் எல்லாம் அரசாங்கத்தில இருக்கேக்க, கருணா அம்மானை கள்ளப் பாஸ்போடில, கோத்தபாய லண்டன் அனுப்புறது எல்லாம் கேவலம் இல்லை எண்டால் இதுவும் கேவலம் இல்லை அக்கோய்.
 
மன்னிசுப் போடுங்கோ  
  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் ஒரு தப்பான எழுத்து.
 
ஏதோ லண்டனில் கொடி பிடித்ததால் தான் பிடி விறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பது போல் எழுதுகின்றனர்.
 
கள்ள மட்டை போட்டவருக்கு பிடி விறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ளது.
 
பிடிபட்ட அவரது சகாக்கள் டிவி பார்த்து கொடுத்த தகவல்களின் பெயரில் அவர்தான்  இங்கே லண்டனில் மைதானத்தில் குறுக்கே ஓடினார் எனவும் அவர் லண்டனில் இருப்பதாக  தெரிய வந்துள்ளதால் இந்த பிடி விறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ரதி அக்கோய்,
 
அங்க கொலைப் பாட்டியல் எல்லாம் அரசாங்கத்தில இருக்கேக்க, கருணா அம்மானை கள்ளப் பாஸ்போடில, கோத்தபாய லண்டன் அனுப்புறது எல்லாம் கேவலம் இல்லை எண்டால் இதுவும் கேவலம் இல்லை அக்கோய்.
 
மன்னிசுப் போடுங்கோ  

துக்கெல்லாம் போய்  பெரிய பெரிய வார்த்தைகள் ..............சகோ ...........விட்டுடுங்க . :D 

இந்தச் செய்தி நூறு வீதம் உண்மை ,அண்மையில் தாய்லாந்தில் மட்டையுடன் பிடிபட்ட இருவரின் படம் வந்தது அதில் ஒருவர் இவரே

கவனம் பாஸ் அப்புறம் உங்களையும் சாட்சிக்கு அழைச்சுடுவாங்க ........... :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

குறைடனில் போய் இவரின் படத்தைக் காட்டினால் வரலாறே சொல்லுவார்கள்

மட்டைப் பார்ட்டி தான் கொடியைத் தூக்கிக் கொண்டு ஓடினது.இதை விட கேவலம் வேற ஒன்றும் இல்லை :lol:

பெருமை இல்லாத விடையம்.

சும்மா புலிக்கொடி தூக்காமல், வந்தால் அதிபராக வரவேண்டும். அடிச்சால் அரச குடும்பம் மாதிரி பில்லியன்களில் அடிக்க வேண்டும். சா இது என்ன கடன் அட்டைக் களவு.

Edited by மல்லையூரான்

குறைடனில் போய் இவரின் படத்தைக் காட்டினால் வரலாறே சொல்லுவார்கள்

பாஸ் ஒவ்வொரு தமிழனும் இன்று பார்ப்பது மைதானத்தில் அவர் காட்டிய வரலாறே .................................................குறைடனுக்கு வந்தெல்லாம் அவர் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை ...................மைதானத்தில் அவர் காட்டிய வரலாறே எதிர்காலத்திலும் பதியப்படும் .......................... :D 

சமூகம்  என்றால் கள்ளன் காடையன் துரோகி நல்லவன் கெட்டவன் நாட்டுப்பற்றாளன் இனப்பற்றாளன் ஆன்மீகவாதி அரசியல்வாதி என்று எல்லா பிரிவும் இருக்கும். அதற்க்காக அவன் தன இனம் மீதானா பற்றை காட்டக் கூடாது என்று இல்லை. சொந்த இனத்தை அவன் மறக்காமல் இருக்கிறானே என்று சந்தோசப் படுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் ஒவ்வொரு தமிழனும் இன்று பார்ப்பது மைதானத்தில் அவர் காட்டிய வரலாறே .................................................குறைடனுக்கு வந்தெல்லாம் அவர் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை ...................மைதானத்தில் அவர் காட்டிய வரலாறே எதிர்காலத்திலும் பதியப்படும் .......................... :D

அவர் எதுக்கு புலிக்கொடி தூக்கினார் என்ற அவரின் அரசியல் உங்களுக்கு புரியாதவரைக்கும் அவருக்கு லாபமே

இனத்தை காட்டிக்கொடுத்தாரா பாஸ் .....................குழந்தைகள் ,குமருகள் ,பெரியோர்கள் அழிவுக்கு சிறிலங்கா,இந்திய இராணுவத்திற்கு துணை நின்றாரா பாஸ் ...............அல்லது என் குலப்பெண்களை கயவன் மானபங்கப்படுத்தும்போது மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாராபாஸ் :D ...................... :D 

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கையருக்கு எதிராக கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் கார்டிப் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் இலங்கையர் ஒருவர் புலிக்கொடி ஏந்தி, மைதானத்திற்குள் அத்து மீறி பிரவேசித்திருந்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகை ஒன்றையும், புலிக்கொடி ஒன்றையும் ஏந்தி குறித்த நபர் மைதானத்திற்குள் பிரவேசித்தார்.

லோகேஸ்வரன் மணிமாறன் என்ற புலி ஆதரவாளருக்கு எதிராக இவ்வாறு திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

லோகேஸ்வரன் மணிமாறன் எனப்படும் மொஹமட் ராஜீ என்ற பிரித்தானிய பிரஜை ஏ.ரீ.எம். மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சில தனியார் வங்கிகளில் மோசடியான முறையில் பத்து போலிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பாரியளவு பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் நசனல் வங்கி மற்றும் கொமர்சல் வங்கி ஆகியவற்றிலும் சுமார் மூன்று மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் லோகேஸ்வரன் மணிமாறன் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

இந்த செய்தியை படித்த போது நமது ஊடகங்கள் மீது எனக்கு கோபம்தான் வந்தது. ஏனெனில் பௌத்த சிங்கள பேரின வாதிகள் வெளியேற்றிய மலத்தை எடுத்து இவர்கள் தங்கள் முகத்தில் பூசிக் கொண்டு அ10கா அருமையான வாசனை என்று நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள்
முதலில் இந்த செய்தியின் தலைப்பை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. 
அதாவது புலிக் கொடி காட்டப்பட்ட கிறிக்கட் மைதானம் பிரித்தானிய அரசின் ஆட்புல மற்றும் சட்ட எல்லைக்கு உட்பட்டது.
சிறீலங்கா அரசின் நீதித் துறை கட்டமைப்பு பிரித்தானிய அரசின் இறைமைக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்துக்கு சர்வதேச பிடியாணை அதுவும் பிரித்தானிய பிரசைக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிப்பதானால் ஒன்றில் பிரித்தானியாவின் சட்டப்பாதுகாப்பு எல்லை சிறீலங்காவின் இறைமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது பிரித்தானியாவில் நடைபெறும் சம்பவங்களை விசாரித்து தண்டனை வழங்கும் உரிமை சிறீலங்காவுக்கு உள்ளது என்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏதாவது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
ஓரு பிரித்தானிய பிரசை சிறீலங்காவில் குற்றம் இழைத்தால் அவரை விசாரிக்கும் உரிமை சிறீலங்காவுக்கு உள்ளது. அப்போது கூட பிரித்தானிய அரசு தன்னுடைய குடிமகனின் நலனுக்காக அதில் தலையீடு செய்யும்.
இந்த செய்தியை வாந்தி எடுத்த தமிழ் ஊடகங்களின் தலைப்பு 
'லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கையருக்கு எதிராக கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து உத்தரவு'
 
'புலிக்கொடியுடன் பிரித்தானியா கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு சர்வதேச பிடியாணை'
 
உண்மையில் சிறீலங்காவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட ஒருவருக்கே அங்குள்ள நீதிமன்றத்தால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதை புலிக் கொடி பிடித்த விடயத்துடன் சம்பந்தப்படுத்தி அதற்காவே இந்தத் தண்டனை என்று புலம்பெயர்ந்த நாடுகளில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுவர்களுக்கு உளவியல் ரீதியான அச்சத்தை கொடுக்கும் விதத்தில் இந்த செய்தி எழுதப்பட்டிருக்கிறது.
புலிக்கொடி பிடித்தவரின் கையில் பச்சை குத்தியதை வைத்து அவர்தான் தாங்கள் குறிப்பிடும் குற்றவாளி என்று சிறீலங்கா புலனாய்வுதுறை சொல்கிறதாம்.
ஓரு செய்தியாளன் அல்லது  ஒரு ஊடகத்தின் செய்தி ஆசிரியர் முதலில் ஒரு விடயத்தை செய்தியாக்கும் போது அதனுடைய செய்திப் பெறுமதியை தான் பிரதிநித்துவப்படுத்தும் சமூகத்தளத்தில் வைத்து பார்க்க வேண்டும்.அப்போது தான் அவர் சமூக அக்கறையுள்ள செய்தியாளனாக இருக்க முடியும்.மக்களை அடக்கி ஒடுக்குவதற்கும் பிளவுபடுத்தவதற்கும் சுரண்டுவதற்குமான நேர்கோட்டு- சமாந்தர மற்றும் ஊடறப்புமுறையிலான செய்தி வெளிப்பாட்டு வடிவங்கள் ஆக்கிரமிப்பாளர்களாலும் அவர்களுக்கு துணை போகக் கூடிய உளவு நிறுவனங்களாலும்தான் கையாளப்படுகின்றன.மக்களுக்கான செய்தி -மக்களுடைய செய்தி- என்பது  சமூக பிரதிபலிப்பு முறையை கையாளும் சமூகப்பொறுப்புள்ள ஊடகவியலார்களாலும் ஊடகங்களாலும் தான் வெளிக்கொண்டுவரப்படுகின்றன.
நாங்கள் கல்வி கற்ற காலத்தில்  ஊடகத்துறையில் பிரவேசித்த காலத்தில் இல்லாத அளவுக்கு இன்று இணையப் பெருவெளி எல்லையற்ற விரிந்து கிடக்கிறது.இந்தப் பெரு வெளியில் எங்கள் தேடலுக்கான கதவுகளும் திறந்து தான் இருக்கின்றன.ஆனால் நாங்கள் இன்னும் மலத்தை அள்ளி முகத்தில் அப்பிக்கொள்வோம் அது தான் நறுமணமுள்ளது என்று சொல்வதற்கத்தான் இன்றைக்கு இந்த இணையப் பெருவெளியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டை இழுக்கிறதுமட்டுமே தப்பான விடையம் இல்லை கள்ளக் கடவுச்சீட்டில் உள்நுளைவது, வேறு யாரது பெயர்களிலும் வெலைசெய்வது, கவுன்சில்காசு வாங்கிக்கொண்டு கள்ளவேலை செய்வது, இங்கு நல்ல பிள்ளைகள்போல் பதிவுசெய்துபோட்டு, முகப்புத்தகத்தில் கள்ளப்பெயரில் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்வது, அற்பவிடையத்துக்காகப் பெட்டிசன் தட்டிவிடுவது. கந்துவட்டிக்குக் கொடுக்குமாப்போல் மீற்றர் வட்டிக்குக் கொடுப்பது, சீட்டுகாசை ஆட்டையைப் போடுவது, கோவில் உண்டியல் பணத்தில் இரண்டாம் பொண்டாட்டிக்குத் தங்கச்சரிகைபோட்ட சேலை வாங்கிக்கொடுப்பது, தொழில் நிறுவனத்தை நட்டம்காட்டி கடனை அடைக்காது விடுவது பின்பு அதே தொழில்நிறுவனத்தை பொண்டாட்டி பெயரிலோ வைப்பாட்டி பெயரிலோ தாமே நடாத்துவது, கலியானவீட்டுச் சீசனில் வீட்டில் விசேசம் வைத்து களவுபோனதெனக்கூறி காப்புறுதி அறவிடுவது இவைகளும் கேவலமே, இப்போ சொல்லுங்கோ பாப்பம் ரதி இவைகளில் எவையுமே தங்களுக்குத் தொடர்பில்லாத விடையங்கள் அன்றேல் தங்கள் வாழ்க்கையில் இவ்விடையங்கள் கடந்துபோகவில்லையென, நான் உங்களை லண்டன் மாநகரின் மேயராக்குகிறேன். இவைகள் தப்பில்லையெனில் மேற்சொன்ன தப்பும் தப்பில்லை. இவைகளில் ஒன்றுக்குமேற்பட்ட விடையங்களைச் செய்த செய்துகொண்டிருப்பவர்கள் கம்மென்று இருக்கிறார்கள், இப்படிச் செய்பர்களில் அனைவர்க்கும் உணர்வு இருக்கக்கூடாது எனச் சொல்வதற்கு எமக்கு எதுவித உரிமையும் இல்லை.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு பல விடயங்களைத் தொட்டுள்ளார்.. யாருமிங்கே சுத்தமில்லை என்பதே பதார்த்தமான எதார்த்தம்.. :D

ஊடகவியலின் அடிப்படை அறிவே அற்றவர்களால் வெறும் பரபரப்புக்காக செய்தி எழுதப்பட்டால் இப்படித்தான் அண்ணா ஆகும்..விசமத்துக்கு அரச ஊடகங்கள் எழுதுகின்றன என்றால் அவற்றை அப்படியே பிரதி எடுத்து எழுதும் தமிழ் ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் இணையங்களை நடத்துபவர்களின் அறிவை என்ன சொல்ல.. ஊடக அறிவியலே அற்றவர்கள் ஊடகங்களை நடத்த வெளிக்கிட்டால் இப்படித்தான் ஆகும்...என்ன செய்ய தமிழனின் தலைவிதி ஒரு இணையத்தை பதிந்துவிட்டு செய்தி ஊடகம் என்று கண்டதுகள் எல்லாம் தமிழனுக்கு செய்தி எழுத வெளிக்கிட்டதும் அதை வாசிக்கும் இணைய பகுத்தறிவற்ற மேய்ச்சல் தனம் எம்மவர்களுக்கிடையே அதிகரித்ததும்தான் இதற்கெல்லாம் காரணம்.. எம்மவர்களின் வாசிப்புதன்மை இவ்வளவு மட்டமாக போயிருக்காவிட்டால் எதற்கு இப்படி எல்லாம் முளைக்கப்போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

தான் தமிழினத்துக்காக போராடியதால்தான் தன்னை நாடு கடத்த இலங்கையரசு கோருகிறது என வழக்கறிஞரை வைத்து வழக்காடப் போறார். :lol:

இந்தச் செய்தி நூறு வீதம் உண்மை ,அண்மையில் தாய்லாந்தில் மட்டையுடன் பிடிபட்ட இருவரின் படம் வந்தது அதில் ஒருவர் இவர்

அது  தாயலாந்தில் நடந்ததா அல்லது இலங்கையில் நடந்ததா? சுமமா தாய்லாந்தில் வெளிவிட்ட படத்தை வைத்தா இலங்கை பிடிவிறாந்து அனுப்புகிறது? அவர் அண்மையில் இலங்கை போயிருந்தாரா? 

இலங்கை அரசரின் தண்டவாளங்கள் பிரிடிஸ் பிரசையை கொலை செய்து ரூசிய பெண்ணை  வன்முறை செய்த வழக்கை கொழும்பில் வைத்து சடைய முயன்று இன்று தோல்வி கண்டதாக செய்திகள். மேலும் இந்த நடத்தையால் அமெரிக்க, பிரிதித்தானிய சுற்றுலா அலுவகங்கள் இலங்கை பயணத்தை தவிர்க்க கேட்கின்றன. இலங்கை அரசர் அதை முடி மறைக்கவா இப்படி ஒரு வழக்கு தொடரப் பார்க்கிறார்? 

இவர் பல்துறை விற்பன்னர் அதில் தாய்லாந்தும் ஒன்று
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பிரஜையை இல்லை அங்கு எல்லோரையுமே பாலியல் ரீதியில் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறார்கள். அண்மையில் இலங்கை சென்ற பின்லாந்தைச் சேர்ந்த ஐம்பத்தெட்டு வயதுடைய பெண்ணை சிங்களவர் ஒருத்தர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரிடமிருந்த் லட்சக்கணக்கான பெறுமதியுடைய பணம் உட்பட்ட உடைமைகளைப் பறித்துவிட்டர்கள், அம்மையார் இப்போது கப்புறாளைக் கோயிலுக்கெல்லாம் பொய் நீதிநிடைக்கவேண்டுமெனத் தேங்காய் உடைக்கிறார், விடையம் பின்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் கையாளுகைக்குப் போனாலும் அங்கு நீதி கிடைப்பது இலகுவல்ல என்று முடிவில் கூறுகிறார்கள்

இணப்பு இதுதான் ஒருக்காய்ப் பாருங்கோ, ரஜனிகாந்தின் கார்டூன் படங்களையே பர்க்கிறனாங்கள் இதையும் பாருங்கோவன்

http://www.katsomo.fi/?progId=179872

  • கருத்துக்கள உறவுகள்

மட்டை இழுக்கிறதுமட்டுமே தப்பான விடையம் இல்லை கள்ளக் கடவுச்சீட்டில் உள்நுளைவது, வேறு யாரது பெயர்களிலும் வெலைசெய்வது, கவுன்சில்காசு வாங்கிக்கொண்டு கள்ளவேலை செய்வது, இங்கு நல்ல பிள்ளைகள்போல் பதிவுசெய்துபோட்டு, முகப்புத்தகத்தில் கள்ளப்பெயரில் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்வது, அற்பவிடையத்துக்காகப் பெட்டிசன் தட்டிவிடுவது. கந்துவட்டிக்குக் கொடுக்குமாப்போல் மீற்றர் வட்டிக்குக் கொடுப்பது, சீட்டுகாசை ஆட்டையைப் போடுவது, கோவில் உண்டியல் பணத்தில் இரண்டாம் பொண்டாட்டிக்குத் தங்கச்சரிகைபோட்ட சேலை வாங்கிக்கொடுப்பது, தொழில் நிறுவனத்தை நட்டம்காட்டி கடனை அடைக்காது விடுவது பின்பு அதே தொழில்நிறுவனத்தை பொண்டாட்டி பெயரிலோ வைப்பாட்டி பெயரிலோ தாமே நடாத்துவது, கலியானவீட்டுச் சீசனில் வீட்டில் விசேசம் வைத்து களவுபோனதெனக்கூறி காப்புறுதி அறவிடுவது இவைகளும் கேவலமே, இப்போ சொல்லுங்கோ பாப்பம் ரதி இவைகளில் எவையுமே தங்களுக்குத் தொடர்பில்லாத விடையங்கள் அன்றேல் தங்கள் வாழ்க்கையில் இவ்விடையங்கள் கடந்துபோகவில்லையென, நான் உங்களை லண்டன் மாநகரின் மேயராக்குகிறேன். இவைகள் தப்பில்லையெனில் மேற்சொன்ன தப்பும் தப்பில்லை. இவைகளில் ஒன்றுக்குமேற்பட்ட விடையங்களைச் செய்த செய்துகொண்டிருப்பவர்கள் கம்மென்று இருக்கிறார்கள், இப்படிச் செய்பர்களில் அனைவர்க்கும் உணர்வு இருக்கக்கூடாது எனச் சொல்வதற்கு எமக்கு எதுவித உரிமையும் இல்லை.

நான் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக சொல்வேன்.நீங்கள் மேலே எழுதியது எதுவுமே என்ட வாழ்க்கையில் இது வரை நான் செய்யவில்லை.உங்கட இந்தக் கருத்துக்கு பச்சை குத்தினவரோ அல்லது இசையோ நீங்கள் எழுதின எதாவது ஒன்று செய்திருக்கலாம்
 
இதில் எழுதுபவர்களை வைத்து நான் ஒன்று புரிந்து கொண்டேன் எவ்வளவு தான் குற்றம் புரிந்தாலும் புலிக் கொடியை காட்டினால் அல்லது புலிக்கு ஆதரவு என்டால் நாங்கள் அவர் செய்த குற்றத்தை மன்னிப்போம்,மறப்போம்.இதுவே ஈபிடீபியோ,டக்லசோ,கருணாவோ செய்தால் மானம் போயிட்டுது என்று கிழி,கிழி என கிழிப்போம்.
 
எனக்கு யார் செய்தாலும் குற்றம் குற்றம் தான் அது ஈபிடீபி என்டாலும் சரி,புலி என்டாலும் சரி.
 
இவர் தான் செய்த கள்ள வேலையை மறைக்க எடுத்த ஆயுதம் எங்கட கொடி.அதில் அவர் வெற்றி விட்டார்.அவருக்கு எனது பாராட்டுக்கள்.அவற்ற உணர்வு உண்மையாயிருந்தால் அதை மதிக்கலாம் ஆனால் வேசம் போடத் தான் அதைப் பயன்படுத்தி உள்ளார்

இதில் உள்ள எதையுமே நானும் செய்யவில்லைதான்.. அதற்காக தவறே செய்யாத மனிதர் என்று யாராவது உண்டா? அதைத்தான் குறிப்பிட்டேன்.. மற்றும்படி இவர் உண்மையிலேயே கள்ளமட்டை போட்டவராகின் அதை நான் ஆதரிக்கவில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.