Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளாக தமிழகத்தில் தவிப்பவர்களை ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கலாமே: கருணாநிதி யோசனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12-karuna-press12-300.jpgbth_kangourous-14.gif

அகதிகளாக தமிழகத்தில் தவிப்பவர்களை ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கலாமே: கருணாநிதி யோசனை.

சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக அகதிகளாக தவிக்கும் இலங்கைத் தமிழர்கள், சுதந்திரமாக வாழ ஆஸ்திரேலியா செல்ல விரும்பினால் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆஸ்திரேலியாவுக்குத் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 17 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 23 ஆண்டுகள் இந்தியாவில் அகதிகளாக வாழ்வதாகவும், உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் சுதந்திரமாகவும் வசதியுடனும் வாழ்வதாகவும், இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புவதில்லை என்றும் கைதாகியுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்து அகதிகளாக பல ஆண்டுகளாக வாழும் அவர்களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனிதாபிமான முறையில்

ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வசதியுடனும், சுதந்திரமாகவும் வாழ முடியுமென்றால், அவர்களின் நல்வாழ்க்கையில் நாம் குறுக்கிடாமல், ஆஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தம்மால் இயன்ற உதவியைச் செய்ய முன் வரவேண்டும். இதற்கு மாறாக அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைப்பதால் பயன் ஒன்றுமில்லை. இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும்

மீனவர்கள் பிரச்சினை

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது பல ஆண்டுகளாக தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை அதிபர் ராஜபட்சவைச் சந்தித்துப் பேசினார்.

அதிகாரப் பகிர்வு

இந்நிலையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் விரைவான அரசியல் தீர்வு காண்பதற்கு, 13-வது அரசியல் சட்டத் திருத்தத்துக்கும் அப்பால், இந்திய அரசுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும் அளித்த வாக்குறுதியினை இலங்கை பின்பற்றி அதிகாரப் பகிர்வு வழங்குவது அவசியம். இதை ராஜபட்சவிடம் சிவசங்கர் மேனன் வலியுறுத்தினார்.

சுதந்திரமான தேர்தல்

வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று நம்புகிறோம்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் தொடர்பாக ராஜபட்சவிடம் பேசப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் வன்முறையில் இறங்காமல் மனித நேய அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று இலங்கையால் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தத்தையும், உறுதிமொழியையும் இலங்கை காப்பாற்றவில்லை. சிவசங்கர் மேனனிடம் கொடுத்த வாக்குறுதியை எந்த அளவுக்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் பிரச்னை என்று மு.கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம் என்பது, புகலிடமிழந்து ஏதிலிகளாக வருபவர்களைப், பராமரித்து அவர்களது வாழ்வை, எந்த விதமான இடங்களுமின்றித் தொடர அனுமதிப்பது!

உங்கள் பிறந்த மாநிலத்திலிருந்து, நீங்கள் ஏதிலியாக வந்த போது, உங்களைத் தமிழகம் அணைத்து வளர்த்தது போல! :o

அகதிகளாக வந்தவர்களையே, முள்ளுக்கம்பிகளுக்குள் வைத்திருக்கும் உங்களைப் போன்றவர்கள், உங்கள் பிரச்சனைகளை மற்றவர்கள் தலையில் எப்படிக்கட்டி விடலாம் எனத் தருணம் பார்த்திருக்கும் மனிதாபிமானற்ற 'ஜடங்கள்'!

உங்களுக்குத் தமிழ் அகதிகளைப் பற்றிக் கதைக்கும், தார்மீக உரிமை கூடக் கிடையாது! :icon_idea:

அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா செல்வதற்குரிய விசாவை, கோபாலபுரத்தில் கொடுக்கிறார்களா... :D  :lol:

பதவில இருக்கைக்குள்ள இந்தமாதிரி நல்ல விசயங்களை செய்து இருக்கலாம் அதை விட்டுவிட்டு இப்போது அடுத்த முறை பதவியை பிடிக்க கதை விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாயில  வருகுது

நான் திட்டியா  இந்தாள் போய் சேரப்போகுது........ :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளை திட்டுரதேயே எனக்கு அசிங்கம் என்று நான் நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

வாயில  வருகுது

நான் திட்டியா  இந்தாள் போய் சேரப்போகுது........ :(

அட விடுங்க விசுகர்,

ஜாலியா, வெள்ளிக்கிழமை ஒரு ஜோக்கு விடுறாரு தாத்தா.

சும்மா சிரிச்சிட்டு போவம். :icon_mrgreen:  :icon_mrgreen:

இருந்தாலும் நான் நினைக்கிறேன்:

படகில் ஏறி போறவர்களை பிடித்தால், வழக்கு அது இது என்று இழுக்காமல், போகிறவர்களை கண்டுகொள்ளாமல், பிடிக்காமல் இருங்க என்று விபரமா தான் சொல்லி இருக்கிறார். :icon_idea: 

கருணாநிதியின் கதையை விடுவம்,

ஆனால் இங்கு கருத்து எழுதுபர்கள் அதைவிட ஏதும் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் .

தமிழ் நாட்டில் எந்தவொரு தமிழ் அகதியும் முள்ளுகம்பிக்குள் வைக்கபடவில்லை .

மேற்கத்திய நாடுகள் போல இந்தியா பொருளாதார வசதி படைத்த நாடில்லை ,இந்திய பிரஜைகளே முக்கால்வாசி ஏழைகள் தான் இருந்தும் 83 கலவரத்திற்கு பின் தமிழகம் புலம்பெயர்ந்த ஏறக்குறைய 125,000 அகதிகள் தமிழ் நாடு முழுக்க (சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ) குடியேற்றப்பட்டு அவர்களுக்கு இருப்பிடமும் கூப்பன் முறையில் அரிசியும் பருப்பும் சிறுதொகை பணமும் மாதத்திற்கு இரு தடவைகள் கொடுத்துவந்தார்கள் .

அவர்கள் வெளியில் செல்ல கூடாது என்று சொல்லப்படிருந்தாலும் எதுவித கட்டுப்பாடுகளும் இல்லை. விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம்.மாதம் இருமுறை கூப்பன் கொடுக்கும் நேரம் முகாமில் இருக்கவேண்டும் .

இவர்கள் தாங்கள் வசிக்கும் சூழலுக்கேற்ப வேலைகள் வேறு தேடிக்கொண்டார்கள் .கள் இறக்குவது ,மீன் பிடிப்பது ,சவுக்குமரத்தை எரித்து கரி எடுப்பது ,தொட்ட வேலை ,சிலர் வியாபார நிலையங்களில் கூட வேலை செய்தார்கள் .தமிழ் நாட்டு மக்களை விட குறைந்த கூலியுடன் வேலைக்கு போக இவர்கள் தயாராக இருந்ததால் அங்கிருக்கும் தமிழ் நாட்டு மக்களுடன் பிரச்சனைகள் வேறு ஏற்பட்டது (இதெல்லாம் தீர்க்க போவதும் எனது ஒரு வேலை யாக இருந்தது ) .

பல குறைபாடுகளும் இருந்தது கல்வி ,சுகாதாரம் ,நல்ல வேலை வாய்ப்பு என்று .ஆரம்பத்தில் போராளிகளையும் அகதிகளையும் தமிழ் நாட்டு அரசும் ,மக்களும் அரவணைத்த விதமும் அவர்கள் காட்டிய அன்பும் என்றும் மறக்கமுடியாதவை .

அதற்காக நாங்கள் அவர்களுக்கு திருப்பி கொடுத்தவை பொன் எழுத்துக்காளால் பொறிக்க படவேண்டியவை.அவைகளை எழுத வார்த்தைகள் இல்லாததால் விட்டுவிடுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் எந்தவொரு தமிழ் அகதியும் முள்ளுகம்பிக்குள் வைக்கபடவில்லை .

அப்ப ஊருக்கு ஊர் இருபது என்ன?

தமது சொந்த செலவில் அரச ஆதரவு இல்லாமல் வாழபவர்கள் மட்டும் வெளியில்.

ஏனையோர் எல்லாம் அகதி முகாமில்: அவர்கள் வெளியால போகமுடியாது என்று தெரியாதோ?

இவர்களில், அந்த அவலத்தினை தாங்க முடியாதவர்கள் தான் நாட்டினை விட்டு களவாக வெளியேற முயன்று சிக்குகின்றனர்.

ஒருக்கா அகதி முகாம்களுக்கு போய் வரலாமே ?

நான் எழுதியது பொய் என்றால் டிக்கெட் செலவு என்னுடையது .

நான் புலம் பெயர்ந்த பின்பும் இந்தியா போகும் போது அகதி முகாம்களுக்கு போய் வந்திருக்கின்றேன் .

செங்கல்பட்டு பட்டு சிறப்பு முகாம் பற்றி நான் கதைக்கவில்லை .

Edited by arjun

அவர் எழுதுவது இருபதாம் நூற்றாண்டின்  நிலை :rolleyes:  

(MGR ஆட்சியின் போது)

நீங்கள் எழுதுவது 21ம் நூற்றாண்டின் நிலை

(கருணாநிதியின் ஆட்சியின் முன் மற்றும் பின்)  :(  :(

 (இதெல்லாம் தீர்க்க போவதும் எனது ஒரு வேலை யாக இருந்தது ) .

நீங்கள் எவருமே அந்த பக்கம் போகாதவர்கள் .

ஒன்றுமே இனத்திற்கு செய்யாமல் மற்றவனை திட்டியே வாழ பழகி போச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்க விசுகர்,

ஜாலியா, வெள்ளிக்கிழமை ஒரு ஜோக்கு விடுறாரு தாத்தா.

சும்மா சிரிச்சிட்டு போவம். :icon_mrgreen:  :icon_mrgreen:

இருந்தாலும் நான் நினைக்கிறேன்:

படகில் ஏறி போறவர்களை பிடித்தால், வழக்கு அது இது என்று இழுக்காமல், போகிறவர்களை கண்டுகொள்ளாமல், பிடிக்காமல் இருங்க என்று விபரமா தான் சொல்லி இருக்கிறார். :icon_idea: 

நான் வியாபாரமா என்று வாசித்தேன்

சொல்லமுடியாது

மகிந்தவின் மகன் அனுப்ப

கருணாநிதியின் மக்கள் அல்லது பேரப்பிள்ளைகள் அதை தொடர வழி செய்கிறார்களோ  என்னமோ??

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா அகதி முகாம்களுக்கு போய் வரலாமே ?

நான் எழுதியது பொய் என்றால் டிக்கெட் செலவு என்னுடையது .

நான் புலம் பெயர்ந்த பின்பும் இந்தியா போகும் போது அகதி முகாம்களுக்கு போய் வந்திருக்கின்றேன் .

செங்கல்பட்டு பட்டு சிறப்பு முகாம் பற்றி நான் கதைக்கவில்லை .

நீங்கள் திடீரென நித்திரையால எழும்பி வந்து இருகிறியல் போல.

எனக்கு விமான செலவு தர காசு இருந்தால், அதை பாவம் அந்த அகதிகளுக்கு கொடுங்கள்.

அகதி முகாம் மையமாக வைத்து படங்களே வந்து இருக்கின்றன. அங்கிருந்து தப்பி வந்தவர்களை பார்த்து பேசி இருகின்றேன்.

மண்டபம், ராமநாதபுரம், சேலம் என்று பல. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா, நடிகர் சூரியாவின் உதவி பெறுவது குறித்து பதிவு போட்டிருந்தேன்.

முள்வேலி என்பது உவமானம். அதன் கருத்து அவர்கள் அனுமதி இல்லாது வெளியே சென்று வாழ முடியாது. ஏனெனில் அவர்களது இந்திய வரவு சட்ட படியானது அல்ல.

சட்டப்படி விசாவுடன் வந்து அனுமதி பெற்று வெளியே வாழ்பவர்களை தான் சொல்கிறீர்கள் போல தெரிகிறது.

Edited by Nathamuni

தப்பி வந்தவர்களுடன் பேசினீர்களா ?  நீங்கள் வவுனியாவில் இருந்த முள்ளிவாய்காலில் இடம்பெயர்ந்தவர் பற்றி கதைக்கின்றிர்கள் போல கிடக்கு .

நான் எழுதியதை வாசிக்கவில்லை போலிருக்கு ,

முகாமை விட்டு போக கூடாது என்று சொல்லப்பட்டாலும் எவரும் தாரளமாக எங்கும் சென்றுவரலாம் .

முகாம் விட்டு முகாம் போய் காதல் செய்து கல்யாணமே கட்டியிருக்கின்றார்கள்.

ஜெர்மனிலும் தான் ஆரம்பத்தில் சிட்டி விட்டி சிட்டி மாறக்கூடாது என்று கட்டளை .அனைத்து சிட்டிகளிலும் பதிந்து பணம் எடுத்த விற்பன்னர்கள் இருக்கின்றார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-------

ஜெர்மனிலும் தான் ஆரம்பத்தில் சிட்டி விட்டி சிட்டி மாறக்கூடாது என்று கட்டளை .அனைத்து சிட்டிகளிலும் பதிந்து பணம் எடுத்த விற்பன்னர்கள் இருக்கின்றார்கள் .

ஜேர்மனியில்... முன்பு பல்வேறு நகரங்களில்,

பணத்தை குறுகிய காலத்தில்... எடுத்து விட்டு, அந்தக் காசுடன்... கனடாவுக்கு தான் ஓடியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில்... முன்பு பல்வேறு நகரங்களில்,

பணத்தை குறுகிய காலத்தில்... எடுத்து விட்டு, அந்தக் காசுடன்... கனடாவுக்கு தான் ஓடியவர்கள்.

அதுமட்டுமில்லை பாங்கிலை லோன் எடுத்துக்கொண்டு அப்பிடியே கனடாவுக்கு மாறினவையும் எக்கச்சக்கம்.........அதோடை நடிகை நளினியை கூட்டிக்கொண்டுவந்து கலைநிகழ்ச்சி காட்டுறம் எண்டு ரிக்கற் வித்த காசிலை கனடாவுக்கு நடையைகட்டினவையும் கொஞ்சம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமில்லை பாங்கிலை லோன் எடுத்துக்கொண்டு அப்பிடியே கனடாவுக்கு மாறினவையும் எக்கச்சக்கம்.........அதோடை நடிகை நளினியை கூட்டிக்கொண்டுவந்து கலைநிகழ்ச்சி காட்டுறம் எண்டு ரிக்கற் வித்த காசிலை கனடாவுக்கு நடையைகட்டினவையும் கொஞ்சம்........

இன்னும்... கனக்க, கேடு கெட்ட வேலை எல்லாம்... செய்து விட்டு, ஓடி... விட்டார்கள்.

கொஞ்ச நாள், இவர்களின் செயல்களால்... இங்குள்ள, எமக்கு தலை குனிவே... ஏற்பட்டது.

மிஞ்சிய ஜேர்மன் உறவுகளின், அடுத்த சந்ததி... தான் உண்மையான‌ தமிழன், என நிரூபிக்கும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,உலக அறிவென்பது உங்களது தனிச்சொத்து மாதிரிக் கதைப்பது அழகன்று!

திபெத்திய அகதிகளும், தமிழ் அகதிகளும் கையாளப் படும் முறையில், நிறைய வேறுபாடுகள் உள்ளதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல! இந்தியா என்ற தேசம் உருவாக, முக்கிய பங்களிப்பு வழங்கியவர்கள் தமிழர்களே!

மகாத்மா காந்தியின் பத்திரிகைகளை வாங்கியவர்களும் தமிழர்களே!சிங்களவனுக்குச் சுதந்திரம் பெற்றுக்கொடுத்ததும், அதே முட்டாள் தமிழர்களே!

ஏன் இரண்டாம் உலகமகா யுத்தத்தில், சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் பிரித்தானியாவுக்காகப் போராடி மடிந்தவனும் தமிழனே! ஏன், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்துக்கு, போர் விமானம் வாங்கி அன்பழித்தவனும், அதே இளிச்ச வாய், யாழ்ப்பாணத் தமிழனே!

நாதமுனி சொன்னது போல 'முள்ளுக்கம்பி வெளி' என்பது ஒரு உவமானமே! இந்தியாவின் 'கியூ' பிரிவு போலிஸ் படுத்திற பாடு,உங்களுக்குத் தெரியாமல் இருக்காது!

நீங்கள், எதற்காக, இந்த வெட்கம் கெட்ட போர்க்குற்றவாளியான தேசம் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கிறீங்களோ என்று எனக்குப் புரிவதேயில்லை! 

உங்களுக்குச் 'செஞ்சோற்றுக்கடன்' இருக்கலாம்! எங்களுக்கு அது இல்லை!

பல சமயங்களில் பின்னோட்டம் எழுதிவிட்டு காரம் சற்று அதிகமோ என்று நினைப்பேன் ,சில சமயம் அது தேவைதான் என்பது போலவும் இருக்கும் .

இந்த இந்தியா பற்றிய நிலைப்பாட்டில் இன்றும் பலருடன் நான் முரண்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன்  எனது தந்தையார் உட்பட .

இந்தியா எமக்கு செய்தது துரோகம் இன்று செய்வது அதைவிட துரோகம் என்பது உலகம் அறிந்த உண்மை. ஈழதமிழர்கள் அதைதான் சொல்லிக்கொண்டு வருகின்றோம்   ஆனால் அவர்களை அந்த நிலைப்பாட்டிற்கு வரச்செய்த எமது தவறுகளை  மறைத்து ,மறந்து விடுகின்றோம் .இந்த எமது இயல்புதான் எம்மை உலகதிடம்  இருந்து விலத்திவைக்க காரணம் ஆனது .

"என்ன செய்தாலும் நாங்கள் தான் சரி, அப்படிதான் செய்வோம் என்ன பண்ணுவீர்கள் .நீ யார் எனக்கு சொல்ல  " இதுவே எங்கள் பலரின் தாரக மந்திரம் .அதற்கான பதிலை தான் பலவிதமாக உலகம் எமக்கு படிப்பிக்கின்றது .கியூ பிரிவு உட்பட .

எமது புவியல் அமைப்பும் அதில் இந்தியாவின் பங்கும் உலக அரசியலும் விளங்காமல் மகாபாரதத்தை உதாரணம் எடுத்து தர்மயுத்தம் செய்யமுடியாது .

 எமது இனமே அழிந்து தொலைந்தாலும் பரவாயில்லை இழந்திடா மானம் மண்டியிடா வீரம் என்று வசனம் பேச நான் தயாரில்லை .இப்படியான வசனங்களில் தான் நாம் பெருமைபட்டு கொள்கின்றோமே தவிர யதார்த்த அரசியலை புரிந்துகொள்ள மறுக்கின்றோம் .நாட்டில் எமது இனத்தின் ,மக்களின் விடிவு மட்டுமே முக்கியம் என நினைக்க வேண்டுமே ஒழிய அதைவிட எமது தன்மானம் தான் முக்கியம் என்று நினைத்தால் இந்த உலகில் எதுவும் சாத்தியமாகாது .

இன்று கூட்டமைப்பு மிக தெளிவாக அதை புரிந்துள்ளது என்றே நினைக்கின்றேன் .

அர்ஜுன் 
 
இந்தியா தொடர்பில் எனது மதிப்பீடும் உங்களினதுடன் ஒத்துப் போகின்றது.
 
எனினும் நீங்கள் உங்கள் கருத்தினை சொல்லும்/வெளிப்படுத்தும் விதத்தில் தான் தவறு இருக்கின்றதோ என்று தோன்றுகின்றது.
 
உங்கள் கருத்துகளை, தனி நபர்/நபர்கள் மீதான தாக்கம் இன்றி ஆணித்தரமாக அதே வேளை, மறுதலிக்க முடியாத உதாரணங்களுடன் கொடுங்கள். 
 
இந்தியாவில், முகாம்களில் இருப்பவர்கள், எங்கும் போகலாம், வரலாம் - முகாம் பொறுப்பாளரின் அனுமதியுடன் தான்.
 
எதற்காக வெளியே விடுகின்றனர்? அவ்வாறு போகின்றவர்கள் யாருடன் தொடர்பு கொள்கின்றனர், என்ன நோக்கம்? உள்ளூர்காரரா? அல்லது இலங்கையரா (தடை செய்யப்பட அமைப்புடன் சம்பந்தம் உள்ள)  என்பதனை அறிந்து அவர் பிரச்னை குரியவரா இல்லையா  என தனியே புலனாய்வு செய்து அறிய ஒரு நிழல் போலீஸ் படையே உள்ளது.
 
பிரச்சனைக்கு உரியவர்கள், வெளியே இருந்து அவர்களை தொடர்பு கொண்டவர்கள் எல்லோரையும், செங்கல்பட்டு முகாமுக்கு அனுப்பி விடுவார்கள்.
 
இலங்கை தொழிலதிபர் ஒருவர் 1983 ன் பின் சென்னையில் குடி புகுந்தார். TELO பணத்திற்காக அவரை கடத்த, பொலிசார் ஏற்பாட்டில், ஒரு கோவிலில் பணயப் பணம் கைமாற ஏற்பாடாகியது. 
 
உண்மையில் பணம் வழங்கப் பட்டது. ஆனால் அந்த கோவிலில் முன் ஒரு பிச்சைக்காரர், கரும்புசாறு வியாபாரி, ஒரு பூ வியாபார பெண் என மூன்று போலீஸ் அதிகாரிகள், கடத்தல் காரரை அடையாளம் கண்டு, போகவிட்டு, தொடர்ந்து பூண்டோடு பிடித்தார்கள்.
 
தமிழ் நாடு போலீஸ் ஒரு பிரிவினர், அங்காங்கே, பூவியாபாரிகளாக, கரும்புசாறு வியாபாரிகளாக, ஆட்டோ காரர்களாக சமூகத்தில் கலந்து இருகின்றார்கள் என்று சொல்வார்கள்.
 
எமது அகதிகள், ஒரு கயித்தில் கட்டப் பட்ட மாடு, ஆடுகள் மாதிரி  தான். ஏனெனில், அவர்கள் எங்கும் போகலாம், வரலாம் ஆனால் எங்கேயும் குறைந்தது ஒரு சோடி கண்களின் கண்காணிப்பு வட்டத்தினுள் தான் இருப்பார்கள். 
 
அது அவர்களுக்கு தெரியும். நான் 2009 ல் சென்னை சென்று ஒரு உறவினர் வீடு சென்று இருந்தேன். ஒரு விமான பதிவு தொடர்பில் இணையம் பாவிக்க வேண்டும் என்றவுடன், ஒரு வேண்டுகோளுடன் தந்தார்கள்.
 
தயவு செய்து எமது விடயங்களை பேசும் தளங்களுக்கு செல்லாதீர்கள்.
 
அவ்வளவு பயம்!  
 
இந்த கண்காணிப்பு ராஜீவ் கொலைக்கு முன்பும் இருந்தது.
 
அதே வேளை இலங்கை முள்வேலியில் இருந்தது லஞ்சம் கொடுத்து தப்பி வெளியேறியோர் பலர். 
  • கருத்துக்கள உறவுகள்

தப்பி வந்தவர்களுடன் பேசினீர்களா ?  நீங்கள் வவுனியாவில் இருந்த முள்ளிவாய்காலில் இடம்பெயர்ந்தவர் பற்றி கதைக்கின்றிர்கள் போல கிடக்கு .

நான் எழுதியதை வாசிக்கவில்லை போலிருக்கு ,

முகாமை விட்டு போக கூடாது என்று சொல்லப்பட்டாலும் எவரும் தாரளமாக எங்கும் சென்றுவரலாம் .

முகாம் விட்டு முகாம் போய் காதல் செய்து கல்யாணமே கட்டியிருக்கின்றார்கள்.

ஜெர்மனிலும் தான் ஆரம்பத்தில் சிட்டி விட்டி சிட்டி மாறக்கூடாது என்று கட்டளை .அனைத்து சிட்டிகளிலும் பதிந்து பணம் எடுத்த விற்பன்னர்கள் இருக்கின்றார்கள் .

டேவிட் ஐயா சொல்கிறார் இவ்வாறு:

ஒரு முறை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஈழ அகதிகளுக்கான கிளியரிங் சான்றிதழுக்காகச் சென்றேன். பல மணி நேரம் என்னைக் காக்க வைத்த பின்னர், என் கையில் இருந்த பேப்பரை கிழித்து வீசினார் அந்த இன்ஸ்பெக்டர்.

இதுதான் தமிழகம். அரசியல்வாதிகள் சும்மா மேடையில் பேசுவார்கள். ஆனால் எங்களின் நிலை இதுதான். இங்கே ஆறு விதமான அகதிகள் உள்ளனர். அவர்களின் திபெத் அகதிகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால் ஒரு ஒழுங்கான கட்டிடம் கூட ஈழ சனங்களுக்கு இல்லை. சாக்குப் பைகளால் மூடப்பட்ட கொட்டகைகளுக்குள் முகாம் என்று வாழ்கிறார்கள்.

என்னைப் போல வெளியில் இருப்போர் நிலமையும் கொடுமைதான். ஒவ்வொரு ஆறு மாதமும் பொலிசாரிடம் சான்றிதழ் பெற்று, வாடகைக்கு இருக்கும் வீட்டு ஓனரிடம் கடிதம் பெற்று குடிவரவு அதிகாரியிடம் சென்று கொடுத்தால் தங்கியிருப்பதற்கான அனுமதியை அடுத்த ஆறு மாதத்திற்கு நீட்டிப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு ஆறு மாதமும் செய்ய வேண்டும். இதற்கு நாய் படாத பாடு படவேண்டும். 90 வயதில் ஓவ்வொரு முறையும் நான் இதற்காக அலைக்கிறேன்.

அந்தக் காலத்தில் தமிழக மக்கள் போராளிகளை மிகவும் மதித்தார்கள். எங்கு சென்று ஈழப் போராளி என்றாலும் ராஜ உபசாரம்தான். இந்திய அரசும், மாநில அரசும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதால் இங்கு நல்ல சௌகரியத்துடன் வாழ்ந்தோம். ஆனால் எந்நேரமும் எங்களுக்குள் விடுதலை வேட்கை மட்டுமே இருந்தது. அது ஒன்றுதான் எண்ணம். அது பற்றியே சிந்தித்தோம். நான் புளொட்டுடன் சில மாதங்கள்தான் வேலை செய்தேன்.

இதையும் அவர்தான் சொல்லியிருக்கின்றார் .

மன்னிக்க வேண்டும், தலிவா!
 
அவர் சொல்றது இன்றைய நிலை!!!!
  • கருத்துக்கள உறவுகள்
அகதிகளாக தமிழகத்தில் தவிப்பவர்களை ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கலாமே: கருணாநிதி யோசனை.

 நம்மகிட்டதான் கவிழாத கட்டுமரம் ஒண்ணு எப்பவுமே இருக்கே... :D

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.