Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாபெரும் மன்னனாக திகழ்ந்த ராவணன்... மண்டோதரியின் துரோகத்தால் ராமரிடம் வீழ்ந்தான்! -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

மாபெரும் மன்னன்

அதில், ராவணன் இலங்கையின் பெரும்பகுதியை ஆண்ட மாபெரும் மன்னனாக திகழ்ந்துள்ளான். மிகச் சிறந்த எழுத்தாளனாக திழ்ந்துள்ளான். நிறையநூல்களை எழுதியுள்ளான். தனது நாட்டில் பல சுரங்கப் பாதைகளை அமைத்து போர்க் கலையிலும் மன்னனாக திகழ்ந்தவன் ராவணன்.

பிறன் மனைவியைக் கவர்ந்ததால் வீழ்ந்தான்

ஆனால் ராமரின் மனைவி சீதையைக் கவர்ந்து வந்து சிறை வைத்ததால் வீழ்ந்தான் ராவணன்.

மண்டோதரி செய்த துரோகம்

ராமருக்கு எதிரான போரிலும் கூட ராவணனே வென்றிருப்பான். காரணம், போரில் அவனைத் தோற்கடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் மனைவி மண்டோதரியும், தம்பி விபீஷணனும் சேர்ந்து செய்த துரோகத்தால்தான் ராவணன் தோற்க நேரிட்டது.

போர்த் தந்திரங்களை போட்டுக் கொடுத்தனர்

மண்டோதரியும், விபீஷணனும் ராமர் பக்கம் சாய்ந்து, ராவணனின் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததால்தான் ராவணன் தோற்க நேரிட்டது.

-

விபீஷணனை மணந்த மண்டோதரி

மண்டோதரி, விபீஷணனின் சதியால், ராவணன் வீழ்த்தப்பட்டான். அதன் பின்னர் ராமரின் அறிவுரைப்படி மண்டோதரியை, விபீஷணன் மணந்தான் என்று ராமாயனம் கூறுகிறது.

மிகப் பெரிய சாம்ராஜ்யம்

ராவணன் வைத்திருந்த சாம்ராஜ்யம் மிகப் பெரியது. இன்றைய நுவரேலியா, பதுல்லா, பொலனருவா, அனுராதபுரா, கண்டி, மொனரகுலா, மாத்தளை, சிலாவ் ஆகிய பிரதேசங்களையும் ராவணன் கட்டியாண்டான்.

-

ராவணன் மிகுந்த நாகரீகம் மிகுந்தவனாகவும் இருந்தான். சிறந்த கலாச்சாரத்தை உடையதாக தனது நாட்டை வைத்திருந்தான். ஆனால் ராமரின் படையெடுப்பால் அந்த நாகரீகமும், கலாச்சாரமும் அழிந்து போனதாக தனது நூலில் கூறுகிறார் உபயசேகரா. -

சிகிரியாவில் வாசம் செய்த ராவணன்

கொழும்பிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிகிரியாவில்தான் ராவணன் வசித்து வந்துள்ளான். மிகவும் புத்திசாலித்தனமும், அறிவும் மிக்க யக்ஷா பழங்குடியைச் சேர்ந்தவன் ராவணன்.

ராவணன் பெயரில் ஊர்கள்

ராவணன் மீதுள்ள அன்பின் காரணமாக இலங்கையின் பல ஊர்களுக்கு அவனது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ராவண எல்லா, ராவணா கோட்டை, ராவணா கண்டா, ராவணா தேஷ் என அவை பல இடங்களில் இருந்தன.

ராவணன் பெயரில் ஊர்கள்

ராவணன் மீதுள்ள அன்பின் காரணமாக இலங்கையின் பல ஊர்களுக்கு அவனது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ராவண எல்லா, ராவணா கோட்டை, ராவணா கண்டா, ராவணா தேஷ் என அவை பல இடங்களில் இருந்தன.

-

அனுராதபுரத்தில் தனது பெற்றோர் நினைவாக கோவில் கட்டி வழிபட்டவன் ராவணன். இந்தக் கோவிலை போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பின்போது இடித்துத் தள்ளி விட்டனர். -

இதே நூலில் ராமரையும் புகழ்ந்துள்ளார் உபயசேகரா. அதில், ராமர் மரியாதைத்குரியவராக, கண்ணியம் மிக்கவராக இருந்துள்ளார். ராவணன் மாதிரி படை பலத்தைக் கொண்டவராக அப்போது ராமர் இல்லை. மேலும் பெரும் பணக்காரராகவும் அவர் அப்போது இல்லை. உண்மையே வெல்லும் என்ற மிகப் பெரிய நம்பிக்கை மட்டுமே அவரிடம் இருந்தது. இதுவே அவரது வெற்றிக்குக் காரணம். -

ஆனால் சகலகலாவல்லவன் ராவணன்

ஆனால் மறுபக்கம் மாபெரும் வீரனாக, மிகப் பெரிய படைகளுடன் கூடியவனாக, செல்வம், செல்வாக்கு மிக்கவனாக ராவணன் திகழ்ந்துள்ளான். சகல திறமைகளையும் பெற்ற வல்லவனாக திகழ்ந்தான் ராவணன்.

-

மாவீரன்

வீரர்களில் இவன் மாவீரனாக திகழ்ந்தான். ஜோதிடத்தில் நிபுணனாக இருந்தான். அறிவாளிகளில் மேம்பட்ட அறிவாளியாக திகழ்ந்தான். மருத்துவம் தெரிந்த வித்தகனும் கூட. மாபெரும் இசைக் கலைஞனாகவும் திகழ்ந்தவன் ராவணன்.

-

ராவணனின் கொடியே இலங்கையின் முதல் கொடி

ராவணன் வைத்திருந்த கொடிதான் இலங்கையின் முதல் கொடி என்பது உபயசேகராவின் கூற்று.

சிறந்த கட்டடக் கலை

ராவணன் காலத்தில் கட்டடக் கலை சிறந்து விளங்கியது. மரத்தால் ஆன பல கட்டடங்களை அக்காலத்தில் எழுப்பினார்களாம். எங்கு பார்த்தாலும் அப்போது மர வீடுகள்தானாம். இதனால்தான் ஹனுமனால் எளிதாக இலங்கையை தீவைத்து எரிக்க முடிந்ததாம்.

போரில் சாகவில்லை ராவணன்

ராமருடன் நடந்த போரின்போது ராவணன் போரில் உயிர் துறக்கவில்லை. மாறாக, விஷம் தடவிய அம்பு அவன் மீது பாய்ந்தால் அவன் மயக்கமடைந்தான்.

ராவணனின் படையில் இருந்த வீரர்கள்தான் உலகிலேயே தலைக் கவசம் பொருத்தி போரில் ஈடுபட்ட முதல் வீரர்கள் ஆவர்.

ராவணன் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு கொடூரமான தண்டனை தரப்பட்டது. அதாவது உயிரோடு வைத்துப் புதைத்து விடுவார்களாம்.

அதேபோல ராவணன் படையினர் பயன்படுத்திய வெடிகுண்டுகளில் நல்ல பாம்பின் விஷம் கலந்திருக்குமாம். -

Thatstamil

எனது அறிவுக்கு எட்டியவகையில் மண்டோதரி ஓர் சிறந்தபதிவிரதை . இராவணன் செய்த தவறுகளை கண்டித்திருக்கின்றாள் . விபீசணன் சிறந்த நீதிமான் . நீதிசாஸ்திரங்களை கற்று கைதேர்ந்தவன் .அவனும் இரவணனது செய்கையை கண்டித்திருக்கின்றான் . ஏன் கும்பகர்ணனும் இதில் அடக்கமே . ஆயினும் கும்பகர்ணன் அண்ணன் மீதுள்ள பாசத்தினால் போரிட்டு வீரமரணம் அடைகின்றான் . தற்ஸ்ரமில் சொல்வதைவிட்டு இதற்கு வரலாற்றுரீதியான ஆவணங்களைத் தந்தால் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

எந்த  இராமாயணத்தில் இப்படிக் கூறி இருக்கு சுண்டல்

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்தின் உண்மைத்தன்மைக்கு நிறுவக்கூடிய அறிவியல் சான்று எதுவும் இல்லை.. அதனால் கோம்சின் கேள்விக்கு விடை கிடையாது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் சைவன். சிவனை வழிபட்டவன். நாம் தமிழர்கள்.. சைவர்கள். சிந்துவெளி சிவ வழிபாட்டின் முதலிடம் என்று சொல்லப்படுகிறது. அங்கு ஆதித் தமிழ் புழக்கத்தில் இருந்ததாக அண்மைய அகழ்வாராய்ச்சிகள் கூட கூறி நிற்கின்றன. அது தமிழகம் வரை நீண்டிருந்தது. தமிழகமும்.. இன்றைய இலங்கைத் தீவும் பூமித்தகடுகளின் நகர்வினால் பிரிந்து தனித்தீவுகளானாலும்.. தமிழர்கள் இங்கும் அங்கும் வாழ்ந்திருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

 

இராவணன்.. தமிழ் மன்னனாக இருந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி அவன் இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டாலும் திருமலையை அண்மித்தே தனது தலைநகரை வைத்திருந்திருக்கிறான்.

 

இராமன்.. வைஸ்ணவ வழியில் சூரிய குலத்தில் வந்தவன் என்று சொல்லப்பட்டாலும் அவன் இன்றைய பாகுபாட்டின் கீழ் ஓர் ஆரியன். அவன் நில விஸ்தரிப்புக்காக தமிழ் மன்னனான இராவணனை அதுவும் சிவ பக்தனை தேடி அழிக்க முற்பட்டிருக்கிறான். இதன் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு புனை கதையே சீதையின் கடத்தல்..!

 

சீதையின் தீக்குளிப்பு என்பது அவளின் கற்புக்கருதியல்ல. அவள் ஒரு சிவ பக்தனிடம் வசப்பட்டிருந்தவள் என்ற வகையில் அவள் மீது தீர்க்கப்பட்ட மதவெறி.

 

இராவணன்.. சைவ நீதி வழி நின்ற ஒருவன். அவன் சிறந்த தமிழ் மன்னன். அவனின் சிறப்பை சீரழிக்க.. வான்மீகி என்ற ஆரியனும்.. அதன் பின்னர் கம்பனும்.. நம்மேல் திணித்தவையே இராமாயணத்தின் மிச்ச இட்டுக்கட்டுகைகள். இப்போ சிங்களவர்கள் இலங்கைத் தீவின் பூர்வ குடிகள் தாம் என்று சொல்ல இராவணனுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர்.

 

ஆனாலும் இராமாயணம்... அது கொண்டுள்ள.. புவியியல் சமூகவியல் உண்மைகளை வடிக்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு இதிகாசப்படைப்பு என்பதில் ஐயமில்லை. இதற்குள் நிறைய தமிழர் வரலாறு உருமாற்றி எழுதப்பட்டுள்ளது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாளை எங்கள் தேசிய தலைவரையும் இந்திய ஹிந்திய பயங்கரவாதிகளின் கால்வருட.. பயங்கரவாதின்னு சொல்லி எம்மவர்கள் புறக்கணிப்பார்கள். மன்மோகன் சிங்கை வழிபடுவார்கள்.

 

ஆனாலும்.. தேசிய தலைவரை வேறு எங்காவது நல்ல வீரனுன்னு புகழ்ந்து போற்றுவார்கள்.

 

தாய்லாந்தில் இராவணனுக்கு கோவில் கட்டி மக்கள் வழிபடுவது போல.!

 

Phu_Yak.jpg

 

In the age of the Ramayana epic written by Valmiki, Ravana was the most powerful Tamil King of Lankapuri.

 

http://en.wikipedia.org/wiki/Ravana

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

COLLECTIE_TROPENMUSEUM_Reli%C3%ABf_op_de

 

Queen Mandodari and the women of Lanka mourning the death of Ravana. Bas-relief of 9th century Prambanan temple, Java, Indonesia

 

Ravana was married to Mandodari, the daughter of the celestial architect Maya, Dhanyamalini, and a third wife. He had seven sons from his three wives:

 

இராவாணனின் 3வது மனைவியான மண்டோதரி.. ஆட்சி அதிகாரம் மீது ஆசை கொண்டு.. ஆரிய இராமனுடனான போரில்.. தமிழ் மன்னனான இராவணனை காட்டிக் கொடுத்திருக்கலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதான் சிங்கள எழுத்தாளர் எழுதிய கிங் ஒப் லங்கா நூலை வாங்கி படிச்சா தெரிஞ்சுக்கலாம் கோம்ஸ் அண்ணா ...

மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசாவில் இருந்து இலங்கைக்கு வந்த வந்தேறு குடிகளுக்கு, ஆரியத்தின் தேவை, முள்ளி வாய்க்காலோடு முடிவுக்கு வந்து விட்டது!

 

அதன் அடுத்த தேவை, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு அடையாளத் தேடலாகும்!

 

இங்கே தான் சிவபக்தனான ராவணன் தேவைப் படுகின்றான் !

 

இராவணனில் தொங்குவதன் மூலம், தாங்கள் இலங்கையின் மூத்த குடிகள் என்று நிறுவ முடிவதுடன், ஒரிசாவில் இருந்து துரத்தப்பட்டு வந்தவர்கள் என்ற அடையாளமும் மறக்கப்படலாம்!

 

மண்டோதரியின் மீது சேறு பூசுவதற்கான காரணம், மண்டோதரியின் ஆரிய மூலமாக இருக்கலாம்!

 

அது தவிரவும், நாங்களும் தமிழரும் ஒன்றுக்குள் ஒன்றே என உலகத்துக்குக் காட்டுவதற்காகவும், இராவணனை முன்னிலைப்படுத்தலாம்!

 

காலப்போக்கில், சிங்களத்தின் 'இராவண முன்னிலைப்படுத்தலின்' நோக்கம் தெரியவரும்! :o   

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்சத்தையே மாற்றி எழுதி சரித்திரம் படைக்கும் சிங்களம், இந்துக்களின் சரித்திரத்தையும் மாற்றி எழுத முனைகிறதா? இன்னும் சில காலம் இவர்கள் ஆட்சி நிலைக்குமானானால், அனாகரீக தர்மபால சொல்ல புத்தர்பிரான் இராமாயணம் எழுதினார் என்பதாக பிள்ளைகள் பாடம் படிக்கும்.

 

கம்பராமாயணம்/யுத்த காண்டம்/மண்டோதரி புலம்புறு படலம்

 

உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி! ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள்!

 

ஏங்கி எழுந்து, அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவி, தனி நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத் தான மங்கையரும், தவப் பாலவர், ஆன மங்கையரும், அருங் கற்புடை மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30

 

இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி, உரிய கடன்களை வீடணன் செய்தல்

பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை, வன்னி கூவி, வரன்முறையால், மறை சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து, இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31

கடன்கள் செய்து முடித்து, கணவனோடு உடைந்து போன மயன் மகளோடு உடன் அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32

மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை வந்தடைதல்

 

http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
போர்த் தந்திரங்களை போட்டுக் கொடுத்தனர் மண்டோதரியும், விபீஷணனும் ராமர் பக்கம் சாய்ந்து, ராவணனின் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததால்தான் ராவணன் தோற்க நேரிட்டது
மற்றவன் காட்டிக்கொடுத்துதான் சிறந்த வீரன்மார் எல்லாம் தோல்வியை தழுவினார்கள் என சொல்வார்கள்...காட்டிகோடுப்பவனையையும் வெற்றி கொள்பவன் தான் உண்மையான் போராளி...:D

Edited by putthan

இராவணனின் காலத்திலேயே...சகோதர யுத்தம்....தமிழன் காலை தமிழன் வாரிவிடல்  :)
எங்களுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கென்று இதுவே சாட்சி...

அதான் சிங்கள எழுத்தாளர் எழுதிய கிங் ஒப் லங்கா நூலை வாங்கி படிச்சா தெரிஞ்சுக்கலாம் கோம்ஸ் அண்ணா ...

மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

 

 

புத்தகத்தை வாங்கி கோவுக்கு அநுப்பிவிடு பிள்ளை

மகாவம்சத்தையே மாற்றி எழுதி சரித்திரம் படைக்கும் சிங்களம், இந்துக்களின் சரித்திரத்தையும் மாற்றி எழுத முனைகிறதா? இன்னும் சில காலம் இவர்கள் ஆட்சி நிலைக்குமானானால், அனாகரீக தர்மபால சொல்ல புத்தர்பிரான் இராமாயணம் எழுதினார் என்பதாக பிள்ளைகள் பாடம் படிக்கும்.

 

கம்பராமாயணம்/யுத்த காண்டம்/மண்டோதரி புலம்புறு படலம்

 

உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி! ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள்!

 

ஏங்கி எழுந்து, அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவி, தனி நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத் தான மங்கையரும், தவப் பாலவர், ஆன மங்கையரும், அருங் கற்புடை மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30

 

இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி, உரிய கடன்களை வீடணன் செய்தல்

பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை, வன்னி கூவி, வரன்முறையால், மறை சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து, இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31

கடன்கள் செய்து முடித்து, கணவனோடு உடைந்து போன மயன் மகளோடு உடன் அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32

மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை வந்தடைதல்

 

http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 

இது வடநாட்டில் இருந்த ஒரு கர்ண பரம்பரை கதை. வால்மீகி காவியமாக படைத்த பின்ன்ர் அருமையான கர்ணபரம்பரை கதை வலுவிழந்து அழிந்து போய்விட்டது. வால்மீகிக்கு இன்றைய தேவையை உணர முடியாது. அவர் மீது குற்றம் இல்லை. ஆனால் அத்தகைய ஆழுமையான காவியம் ஒன்று முழுவதாக உண்மைகள் கலந்திருந்த்திருக்க கூடிய கர்ண பரம்பரை கதையை அழித்துவிட்டது.  மிச்சம் எதிலும்(கம்ப ராமாயணம், துளசிதாசர் இராமாயணம்) பிரயோசனம் கிடையாது.

 

இராமன் காலத்தில் குதிரைகள் கூட இருக்கவில்லை. (கதையில் வரும் அஸ்வமேத யாகம் இட்டுக்கட்டு)இலங்கையில் இருந்து அயோத்தி போய் பெண்ணை ஒருவன் திருடினால், அவன் முளைப் பிசகில்லாத அரசனாக இருந்திருக்க முடியாது. அயோத்தி போய் போர் தொடுத்து சீதையை கொண்டு வந்திருந்தான் என்றால் அதில் கொஞ்சம் உண்மை இருக்கலாம். சூர்ப்பனகை அலையக்க காடிலை என்று அயோத்தி போனவள் என்பது வால்மீகியின் நல்ல கற்பனை மட்டுமே. சீதை ஒருக்காலும் இலனகையில் இருக்கவில்லையாயின்(சிறை அல்ல -அந்த நேரம் ராவணன் தான் ஆண்டான்) சீதா எலிய என்ற பெயர் பொருள் இல்லாதது. சீதை போரின் முன்னால் இருந்தவளாகத்தான் இருக்கலாம். சீதையால் இலங்கை அழிந்தாயின் அந்த பெயரை போரின் பின்னர் யாரும் வைக்கமாட்டர்கள்.  போர் வென்றவுடன் வைக்கப்பட்ட பெயராயின் அங்கு இராமரின் பெயரில் அதையும் விட பெரிய நகரம் இருந்திருக்க வேண்டும்.

 

கிந்திய கூட்டம் எதையாவது தெளியத்தொடங்கினால் புதை பொருள் ஆராச்சிகளை ஒழுங்காக செய்யத் தொடங்கும். அதன் பின்னர் ஏதாவது ஆதாரம் வெளிவரும்.  குறைந்த பட்சம் ராமன் ஏன் வந்தான் என்பது கண்டு பிடிக்க முடியும்.

 

அதான் சிங்கள எழுத்தாளர் எழுதிய கிங் ஒப் லங்கா நூலை வாங்கி படிச்சா தெரிஞ்சுக்கலாம் கோம்ஸ் அண்ணா ... மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

 

எனது கேள்வியானது இதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது உள்ளனவா என்பதுவே. வெறும் ஊகங்களிலும் , புனைவுகளிலும் புனையப்பட்ட  ஓர்  இதிகாசத்தில் இப்படி இப்படியெல்லாம் நடந்தது என்று எழுதவேண்டிய தேவை ஏன் மிராண்டா உபயசேகராவுக்கு இப்பொழுது ஏற்பட்டது ????? சரி ..... அவர்தான் எழுதினார் . இதை வெளியிட்ட இணயத்தின் பொறுப்பின்மையை என்னவென்று சொல்ல ? நிகழ்கால அரசியலையும் , இதிகாசம் என்ற போர்வையில் ஒரு வலாற்றுப் பிறள்வையுமே இந்த இணைப்பிலே என்னால் காணக்கூடியதாக இருக்கின்றது . இது ஒருவித முதுகுசொறிதலே .   இப்படியான ஓர் வரலாற்றுத் தவறையா நாம் வருங்காலத்தவருக்கு விடப்போகின்றோம் ??

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் என வரும்போது தனது எழுத்துக்கள் எப்படியும் சாதாரண  மக்களுடைய

மனதில் இடம்பிடிக்க வேண்டும் இது தான் அவர்களுடைய நிலைப்பாடு.

 

இதற்காக அவர்கள் மக்களுக்கு அவ்வப்போது எது பிடிக்கும் என உளவறிந்து தான் 

தங்கள் படைப்புக்களைத் தருகின்றார்கள்.

உண்மை பொய் என்பதற்கப்பால் வாசகர்களைக் கவர்வதிலும்

அவர்களை உள்வாங்கி படைப்புக்களுடன் பயணிக்கச் செய்வதும்  எழுத்தாளர்களின் திறமை.

 

அந்தக்காலத்தில் வால்மீகி இந்தக்காலத்தில் உபயசேகர :D    

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.