Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல கவிஞர் வாலி காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ்க் கவிஞர் காவியக் கவிஞர் என் உயிரிலும் மேலான கவிஞர் வாலி அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள். அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்கள்

Manushya Puthiran

வாலி மறைந்தார். தமிழ் திரையிசையின் மகத்தான நாயகனின் மறைவு.மூன்று தலைமுறை பாடலாசிரியர்களோடு சளைக்காமல் போட்டியிட்டுநின்றார். காமத்தின் பிரவாகத்தை தனது வரிகளில் மனத்தடையின்றி கரையுடைத்து பெருக செய்தவர். எம்.ஜி.ஆரை ஒரு மக்கள் நாயகனாக நிலைநிறுத்தியதில் வாலியின் வரிகளுக்கே பெரும் பங்குண்டு. ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பிரகடனமாக மாறியது. ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ என்ற பாடல் தமிழக மீனவர்களின் துயரக் கதையை இன்றும்புதிய பரிமாணங்களில் பேசிக்கொண்டிருக்கிறது. அவர் வாழ்வின் மிகப்பெரிய துரதிஷ்டம் அவர் எழுதிய சிறந்த பாடல்கள் பல கண்ணதாசனின் வரிகளாகவே அறியப்பட்டன. ஒரு மிகப்பெரிய காலம் நமமைவிட்டு செல்வதன் சாட்சியமே இந்த மரணம். எனினும் கவிகள் அவ்வளவு எளிதல் சாவதில்லை.

  • Replies 61
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி வாழ்ந்து காட்டிய வாலி இன்று இல்லை

சென்னை: எம்.ஜி.ஆர்., காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக்குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82 . வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால் போல் நினைத்த உடன் கவிதைகளை கொட்டி போடும் திறம் படைத்தவர் வாலி.

தரைமேல் பிறக்க வைத்தான்: இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள் ஏராளம்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பிரபல ஓவியர் மாலியைப் போல தானும் ஓவியராக வேண்டும் என நினைத்த கவிஞர் வாலிக்கு அப்பெயரை அவரது நண்பர் பாபு சூட்டினார். கவிஞர் வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். அவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது; நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. வார இதழ் ஒன்றில், ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த, ஓவியர் மாலியை போல, தானும் ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதனை தெரிந்து கொண்ட பள்ளி தோழன் பாபு, "மாலியை போல நீயும் சிறந்த ஓவியராக வரவேண்டும்' என்று கூறி, ரங்கராஜனுக்கு, "வாலி' என, பெயர் வைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தையும், அம்மக்களையும்... நேசித்த

அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதிக்கு நீதிவேண்டி

ஒவ்வொரு இடத்திலும் குரல் கொடுக்க மறக்காத ஒரு, மிகப் பெரிய மனிதநேயன்

தெய்வக் கவிஞன்.

அவரின் இழப்பு, எமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் துயரும்.. உற்றார், உறவினர், அவரின் ரசிகர்கள் ....... அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

From Facebook:
 

பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!
 

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

* * * * *

 

மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

* * * * *

தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!

* * * * *

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!

* * * * *

இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

* * * * *

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

* * * * *

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!

Edited by பூச்சாண்டி

கவிதையின் திசை எங்கும் ஒரு பறவை போல பறந்த இறகு இன்று இளைப்பாருகின்றது.

இசையின் வனப்பை பாடும் குயில்களுக்கு மொழி கொடுத்த தூரிகை ஒன்று ஓய்வெடுக்கின்றது.

 

கனவுகளுக்குள் கதவு வைத்து கவிதைக்குள் உயிரை புதைத்த ஒரு உயிர் இன்று உறங்குகின்றது.

சந்தோசமாக போய் இளைப்பாருங்கள் வாலி. இப்படியான ஒரு வாழ்வு இலகுவில் எவருக்கும் கிடைக்க மாட்டாது.

 

ஆணிப் பொன் கட்டில் உண்டு

கட்டில் மேல் மெத்தை உண்டு

மெத்தை மேல் வித்தை உண்டு

வித்தைக் ஓர் தத்தை உண்டு

தத்தை ஓர் முத்தம் உண்டு

முத்தங்கள் நித்தம் உண்டு

 

என்று எழுதி மோகத்தீக்குள் எம்மை விதைப்பதாகட்டும்

 

முக்காலா

முக்காபுலா

லைலா ஓ லைலா

 

என்று அர்த்தம் தெரியாத வார்த்தைகளை கொண்டே பிரபலம் அடையக் கூடிய பாடல்கள் எழுதுவதாகட்டும் வாலியால் முடியாதது ஒன்றும் இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பாடல் எழுதுவதில் மன்னன். வைரமுத்துவை விட எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர்.

 

சென்று இளைப்பாருங்கள் ஐயா.

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வாலியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.   அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர் உறவினர்களுக்கும் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

  • தொடங்கியவர்

சினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.  அவருக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

vaali_death_photo_1.JPG

vaali_death_photo_2.JPG

vaali_death_photo_3.JPG

vaali_death_photo_4.JPG

vaali_death_photo_5.JPG

vaali_death_photo_6.JPGhttp://dinaithal.com/cinema/17347-tamil-film-tribute-to-the-poet-vali.html

 

  • கருத்துக்கள உறவுகள்

எக்காலத்திலும்  மக்கள் மனதைவிட்டு  நீங்காத வரம்பெற்ற  கவிஞர்

 

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்  

 

சோனியாவை .அரசியல்வாதியை கிழிக்கும் – வாலியின் கவிதை – தமிழா பாரு video

1013084_327292187402922_1781941442_n.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேசத்தாய்க்கு இழைக்கப்பட்ட துரோகத்தை பற்றி "கவிஞர் வாலி"

=============

அம்மா! இந்த 

அவல நிலையில் - நீ.. 

சேயைப் பிரிந்த 

தாயானாய்; அதனால் - 

பாயைப் பிரியாத 

நோயானாய்! 

வியாதிக்கு மருந்து தேடி 

விமானம் ஏறி 

வந்தால் சென்னை அது - 

வரவேற்கவில்லை உன்னை! 

வந்த 

வழிபார்த்தே - 

விமானம் திரும்பியது; விமானத்தின் 

விழிகளிலும் நீர் அரும்பியது! 

* * * * * 

இனி 

அழுது என்ன? தொழுது என்ன? 

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள் 

கன்ன வயல்களை உழுது என்ன? 

பார்வதித் தாயே! - இன்றுனைப் 

புசித்துவிட்டது தீயே! 

நீ - 

நிரந்தரமாய் 

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத் 

தங்க இடம் தராத - எங்கள் 

தமிழ்மண் 

நிரந்தரமாய்த் 

தேடிக் கொண்டது பழி!

 

  • கருத்துக்கள உறவுகள்

கவி மகனே !

நீ கீறிவிட்ட வரிகள்,

காலம் உள்ளளவும்,

கல்லில் பொழிந்த ,

காவியங்களாய் வாழ்ந்திருக்கும்!

 

ஆழ்ந்த அஞ்சலிகள்!

வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி

Published by News on April 24, 2013 | Comments Off

1-300x168.jpgகன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால்,

ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ;

தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி -

இங்கிருக்கும் சோழத்தமிழன்தான்

அங்கிருக்கும் ஈழத்தமிழன் ;

அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான்

இங்கிருக்கும் சோழத்தமிழன்!

*******

சோழத் தமிழன்

சோர்வு தவிர்க்க- ஓர்

‘அண்ணா’ வாய்த்தது போல்-

ஈழத் தமிழன்

ஈனம் தவிர்க்க – ஒரு ‘தம்பி’

வாய்த்தான்!

*******

முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -

தமிழின் உயிரும் மெய்யும்;

ஆனால்-

ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-

தமிழரின் உயிரும் மெய்யும் !

பிரபாகரன்!

அவ்

ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ

உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-

நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -

அவ்

ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ?

*******

பிரபாகரனின் பிதா -

வேலுப்பிள்ளை ; அந்த

வேலுப்பிள்ளை பெற்ற பிள்ளையை…..

கதிர்காமத்துக் கந்தனைப் போல்-

வேல் பெற்ற பிள்ளை எனலாம்;

பார்வதியின்-

சூல்பெற்ற பிள்ளை எனலாம்;

ஈழத்தமிழர் – விழி

ஈரமெல்லாம் -

வற்றாத புனலாம்; அவனதை

வற்றவைக்க வந்த அனலாம்!

*******

மாதரசி

மதிவதனியைத் -

திருமணம் முடித்தான்

திருப்போரூரில்;

ஆனால்

அவன் -

அகத்தைப் படிக்காமல்

புறத்தைப் படித்தான்….

தாழ்ந்தும்

தவித்தும்- தன்

இனத்தோரெல்லாம்

இருப்போரூரில் !

*******

தகவார்ந்த

தந்தை செல்வா சென்ற…

காந்தி வழியில்

காரியம் ஆகாதென்று -

நேதாஜி வழியை

நேர்ந்தான் ;

தூர்த்தரைத்

தூர்க்கத் -

துடைப்பம் உதவாதென்று

துப்பாக்கியைத் தேர்ந்தான் !

*******

நிலப்படை;

நீர்ப்படை;

நீள் விசும்புப்படை;

என்றவன் முப்படை கண்டான்;

எம்நிலத்தை -

எம்மிடம் ஒப்படை என்றான்!

சேர-

சோழ-

பாண்டியர்க்குப்

பிற்பாடு -

படை திரட்டிய

பச்சைத் தமிழன் இவனானான்;

முக்கண்ணாகக் கொண்ட

சிவனானான்!

*******

ஆலயங்களில் நாம்

ஆராதிக்கும்-

ஆண்டவனாரெல்லாம்

அன்புமழை;

அவர்கள் கரங்களிலேயே

ஆயுதங்கள் இருக்கையில்-

அறத்தைக்காக்க மனிதனும்

ஆயுதம் ஏந்தினால் என்ன பிழை?

*******

தீர்த்தம் விழையாது-

தீனி விழையாது-

தீர்ந்து போனான்

திலீபன் எனும் தீர்த்தன்

கண்ணிழப்பினும்

மண்ணிழக்க மாட்டேன் என்று-

குட்டிமணி என்பான்

கொட்டடியில் ஆர்த்தன் !

*******

எங்கே இருக்குமோ வீரம்;

அங்கே இருக்கும் சோரம்;

உடனிருந்தே உளவு சொன்னது -

ஒரு நா ; அது கரு நா ; அந்தக்

கரு நா பெயர் கருணா!

*******

பிரபாகரன் எனும் சொல் -

ஒளிப்பிழம்பெனப் பிரகாசிக்கும்-

சூரியனைக் குறிக்கும் ;

சூரியனோ

சூழும் இருளைத் தின்று செரிக்கும்!

அது

அத்தமிக்கும் ஓரிடத்தில்;

அதே நேரம்

அவிர்ந்திருக்கும் வேறிடத்தில்;

இருப்பதுமாய்;

இல்லாததுமாய்;

இருப்பதுதான் அது;

அணையா

நெருப்பதுதான் அது!

*******

கண்டேன் சேனல் நான்கை;

அது காட்டியது சிங்களர் தீங்கை;

எரிந்தது என் ஈரக்குலை;

என் சொல்ல அந்த கோரக் கொலை?!

*******

பிரபாகரனின் பிள்ளையே!

வர இருக்கும் வில்லங்கம் புரியாது -

எதையோ வாயில் சுவைக்கும் வெள்ளையே!

ஆறிரண்டு வயதான அம்புலியே!

காடையர் கண்ணுக்கு-

அம்புலியும் ஆனதென்ன வெம்புலியே!

புலியின் புதல்வன்

புலியானான் என்றால் பொருத்தம்;

புல்லரின் புல்லட்டுக்குப்

பலியானான் என்பதுதான் வருத்தம்!

*******

வண்டு துளைத்தாலே

வலி தாங்காப் பூவே! அஞ்சு-

குண்டு துளைத்துன்னைக்

கொண்டதென்ன சாவே?

சலனம் ஏதுமின்றி

சாவை எதிர்கொண்டாயாமே?

அடடா!

அதுதான் விந்தை!

கவுரவப் படுத்தினாய்

கண்ணா! நீயுன்-

தந்தை

விந்தை !

*******

முடிகூட முளைக்காத-

வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு

வயிறு மடிப்பும் கண்டால்…

எவனாவது

ஏவுவானா தோட்டா?

ஏவினான் என்றால்-

புத்தனே

புலால் தின்னக் கூட்டா?

*******

என் சொல்லி என்ன?

தன் தலையாய்

இலங்கை ஏற்றிருக்கிறது -

ஒரு விலங்கை!

*******

நன்றி – குமுதம்

 

Maestro felicitates Kavignar Vaali

  • கருத்துக்கள உறவுகள்

http://www.mediafire.com/play/v32jlk4iuxhh5ed/Thooral+Nindralum.mp3

 

 

 
அருமைக் கவிஞருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
 

 

 

 

392068_10150440757897473_1342955696_n.jp
 
வாலி :- தாய்த்தமிழை இகழ்வோர் முகத்தில் உமிழ் !!!!

தமிழா! தமிழா!!!!

உனக்கும் எனக்கும்-

தாயால் வந்தது யாக்கை;

தமிழால் வந்தது வாழ்க்கை;

எனவே

எஞ்ஞான்றும்...

தாயைத்

தமிழை -

வாழ்த்தப் பழக்கிடு

வாக்கை வழங்கும் நாக்கை;

அகரத் தமிழை ஆயுள் மூச்சாய் -

நுகரச் சொல்லிடு மூக்கை;

அன்னணம்

ஆயின் -

அறவே தவிர்க்கலாம்

அறியாமை என்னும் சீக்கை;

நுண்மான்

நுழைபுலத்தால்-

அடையலாம் நீ

அரிமா நிகர்த்த நோக்கை!

தமிழனே! என்

தோழனே!

அமிழ்தம் அனையது

தமிழ்; அதில் நீ

அமிழ்; அமிழ்ந்து

இமிழ்; இமிழ்ந்து

குமிழ்;

ஆங்கிலம்

அளவு-

சோறு போடாது தமிழ் -எனச்

சொல்வோர் முகத்தில் உமிழ்!!!!

---------- வாலி !!!

 
கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார் .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

வாலி எழுதிய சில பாடல்கள்

பாடல்- படம் -வருடம்

" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968

" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974

" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967

நான் ஆணையிட்டால் எங்க வீட்டு பிள்ளை (1965)

காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)

இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)

அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)

புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி- சுபதினம் (1969)

மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969)

பெற்ற விருதுகள்

பத்மஸ்ரீ விருது-2007

1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.

வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்[3].

1970 – எங்கள் தங்கம்

1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்

1989 – வருஷம் பதினாறு , அபூர்வ சகோதரர்கள்

1990 – கேளடி கண்மணி

2008 – தசாவதாரம்

அந்த இமயம் நம்மை விட்டுச்சென்றுவிட்டது. 

அவரது ஆத்மா சாந்தியடைவதாக!

 

நன்றி முகனூல் 

 

Edited by யாழ்அன்பு

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரிகளை

வாரிக் கொடுத்த

வாலியெனும் வானுயர்ந்த

விருட்சமொன்று சாய்ந்துவிட்டது - நீ

வாழும் காலத்தில்

வாழ்விழந்த தமிழரின்

வலிகளையெல்லாம் - உன்

வரிகளில் சொன்ன

வைராக்கியக் கவிஞனொருவன்...

 

வாழ்க்கையில் கலந்த

வரிகள் தந்த - எங்கள் 

வாலிக் கவிஞன் 

ஆத்மா சாந்தியடைய

இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர், வாலி, 82, மாரடைப்பால் நேற்று இறந்தார். அவரது உடலுக்கு, திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வாலி, இரண்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நுரையீரல் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை, மூச்சுத் திணறல் அதிகமானதால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு வாலி இறந்தார். அவரது உடல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள கற்பகம் அவின்யூ வீட்டிற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. திரையுலகத்தினர், பாடகர்கள், பாடகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வாலியின் மனைவி ரமணத் திலகம், இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.

கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். துவக்கத்தில் எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, "நேதாஜி' என்ற கையெழுத்து பத்திரிகையை துவங்கினார். திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார். திரைப் படங்களுக்கு பாடல் எழுத ஆசைப்பட்டு சென்னை வந்தார்; அவர் நினைத்தது நடந்தது. 1958ல், "அழகர் மலை கள்வன்' படத்தில், "நிலவும் தரையும் நீயம்மா...' என்ற பாடலை வாலி எழுத, டி.கோபாலன் இசையில், பி.சுசிலா பாடினார். இதன் பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் துவங்கி, இன்றைய இளைய முன்னணி கதாநாயகர் வரை அனைவரின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இதுவரை, 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என, பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். சிறுகதை, கவிதை, உரைநடை என, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வெற்றிலை பாக்கு பிரியரான இவர், இப்பழக்கத்தை 15 வயதிலிருந்து தொடர்ந்து, 76 வயதில் நிறுத்தினார். "அவதார புருஷன்', "அழகிய சிங்கர்' என கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

நூல்கள், படங்கள்:

கவிஞர் வாலியின், "அம்மா, அவதாரபுருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், கலைஞர் காவியம், கிருஷ்ண பக்தன், நானும் இந்திய நூற்றாண்டும், வாலிப வாலி' ஆகிய நூல்கள் பிரபலமாக பேசப்பட்டன. இவர், "சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்கால் குதிரை' படங்களில் நடித்துள்ளார்.

17 படங்களுக்கு திரைக்கதை:

"கலியுகக் கண்ணன், காரோட்டி கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக்குருவி, ஒரே ஒரு கிராமத்திலே' உட்பட, 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் மாருதி ராவுடன் இணைந்து, "வடை மாலை' படத்தை இயக்கவும் செய்தார்.

விருதுகள்:

வாலியின் கலைச் சேவையை பாராட்டி, 2007ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். "எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாசமானவர்கள், வருஷம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம்' படங்களுக்கு பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசினால், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை, ஐந்து முறை பெற்றுள்ளார். பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருதுகளும் பெற்றுள்ளார். 1973ல், பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற "இந்திய நாடு என் வீடு... இந்தியன் என்பது என் பேரு' என்ற பாடல் வரிகளுக்காக, தேசிய விருது கிடைத்தது. ஆனால், வாலி விருதை ஏற்க மறுத்து விட்டார்.

மனதை "திருடிய' திரைப்பாடல்கள்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன் என, மூன்று தலைமுறைகள் கடந்து, திரைப்பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட, இவரது பாடல்களில் சில:

* மன்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா....

* தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்...

* நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்......

* காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்...

* சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ...

* ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...

* அந்த நாள் ஞாபகம் - நெஞ்சிலே வந்தே நண்பனே, நண்பனே...

* மாதவிப் பொன் மயிலாள் தோகைவிரித்தாள்...

* ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...

* மல்லிகை... என் மன்னன் மயங்கும், பொன்னான மலரல்லவோ...

* வெற்றி வேண்டுமா... போட்டுப்பாரடா எதிர்நீச்சல்...

* புன்னகை மன்னன், பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக...

* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...

* "புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது

* நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ...

* ஏமாற்றாதே ஏமாறாதே...

* கண் போன போக்கிலே கால் போகலாமா...

* நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும்...

* ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதல் இரவு...

* இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...

* ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை...

* அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி...

* ரோஜா ரோஜா...

பழைய பாடல்கள் என்று இல்லை, காலத்திற்கேற்ப புதிய படங்களையும் இவரது "வாலிபமான' பாடல்கள் ஆக்கிரமித்தன.

* கொஞ்ச நாள் பொறு தலைவா... அந்த வஞ்சிக்கொடி இங்கு வருவா...

* அடி ஒன் இஞ்ச், டூ இஞ்ச், த்ரி இஞ்ச் கேப் ஏண்டியம்மா...

* மாசி மாசி... காதல் வாசி...

* மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாய்..

இதைத் தவிர, தற்போது திரைக்கு வந்த "தில்லுமுல்லு', "மரியான்', "உதயம் "என்.எச்., 4', "எதிர்நீச்சல்', "அலெக்ஸ் பாண்டியன்' போன்ற பாடங்களிலும், இவரது படைப்புகள் இடம்பெற்றன.

"காதோடு தான் நான் பாடுவேன்...

மனதோடு தான் நான் பேசுவேன்...''

- இந்த வரிகள், ஒவ்வொரு தமிழ் திரைப்பட பாடல் ரசிகனுக்கும், தன்னைப் பற்றி கவிஞர் வாலி, சொல்லிவிட்டு சென்றதாகவே கருத வேண்டி உள்ளது. அவரது, ""வார்த்தைக்கு வயதில்லை கருத்துக்கு காலம் இல்லை சிந்தனைக்கு சிதைவு இல்லை'' -நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, "வயசாயிப்போச்சு...' என புலம்புவோர் மத்தியில், 82வது வயது வரை, "வாலி'பராகவே வலம் வந்தவர் வாலி. இதுவரை, அவர் இயற்றியது 1000 படங்களுக்கு, 15 ஆயிரம்

புத்தகங்கள்:

கவிஞர் வாலி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

* பாண்டவர் பூமி

* ஆறுமுக அந்தாதி

* பகவத்கீதை கவிதை நடை

* சரவண சதகம்

* இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்

* கம்பன் என்பது

* நானும், இந்த நூற்றாண்டும்

* நினைவு நாடாக்கள் உள்ளிட்ட ஏராளமான பாடல்கள், அழியாத காவியமாகவே விளங்குகின்றன. இது தவிர, "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' உட்பட பல தனி பாடல்களும் வாலியை, பாராட்டு மழையில் நனைய வைத்தன.

பெயர் மாற்றம்:

ரங்கராஜனுக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது; நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. வார இதழ் ஒன்றில், ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த, ஓவியர் மாலியை போல, தானும் ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதை தெரிந்து கொண்ட பள்ளி தோழன் பாபு, "மாலியை போல நீயும் சிறந்த ஓவியராக வரவேண்டும்' என்று கூறி, ரங்கராஜனுக்கு, "வாலி' என, பெயர் வைத்தார்.

"சின்னத் தாயவள் தந்த ராசாவே': பின்னணி பாடகி மஹதி

"ஒஸ்தி' பட இசை வெளியீட்டு விழாவிற்கு, வாலி வந்திருந்தார். அந்தப் படத்தில், "நெடுவாலி...' என்ற பாடலை பாடியிருந்தேன். விழாவில், "உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று, நான் கேட்க, அவரோ, "உங்களின் கர்நாடக இசை மிகவும் பிடிக்கும்; உங்களோடு நான் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்டார். நான் பாடிய, "தீயில்லை... புகையில்லை... ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே...' பாட்டு, அவர் கைப்பட எழுதிய காகிதத்தை, என்னிடம் பாடக் கொடுத்தனர். எனக்கு வாலியின் நினைவாக வைத்துக்கொள்ளத் தோன்றியது. இசையமைப்பாளரிடம் கேட்டு, அந்த கையெழுத்து பிரதியை, என்னிடம் வைத்துக் கொண்டேன். அவர் எழுதியதில் என்னைக் கவர்ந்தது, "சுந்தரி... கண்ணால் ஒரு சேதி மற்றும் சின்னத் தாயவள் தந்த ராசாவே...' பாடல்கள் தான்.

தலைமுறை கவிஞர்:

திண்டுக்கல் லியோனி, பட்டிமன்ற நடுவர்: அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்களை எழுதி, மலைக்க வைத்தவர் கவிஞர் வாலி. இலக்கிய கற்பனைகளில் புதுமையை புகுத்தியவர். ""மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே. போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை, உன் புருவத்தில் கண்டேனே. தஞ்சையில் பறந்த புலிக்கொடியை, உன் பெண்மையில் கண்டேனே. இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே'' என பெண்ணை, தமிழகத்தோடு ஒப்பிட்டு எழுதியவர். "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே,' என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எண்ணங்களை தெளிவுபடுத்தியவர்.

தீர்க்கதரிசன கவிஞர்:

கவிஞர் முத்துலிங்கம்: எனது 45 ஆண்டுகால நண்பர். சினிமா பாடல்களைத்தவிர, பத்திரிகைகள், கவியரங்கங்களுக்கு வாலி கவிதை எழுதுவார். அக்கவிதைகளை என்னிடம் வாசித்து காண்பித்தபின், பத்திரிகைகளுக்கு அனுப்புவார்; நான், அவரை விட வயதில் இளையவன். அப்படி இருந்தும், என்னை வழிகாட்டியாக கொண்டிருந்தார். இந்த நட்புக்கு, தமிழ்தான் காரணம். இந்திய சினிமா வரலாற்றில், 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர்; பாபநாசம் சிவனுக்கு பின், இசையறிவுடன் திகழ்ந்த கவிஞர். "நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், இந்த ஏழைகள் வேதனைப்படமாட்டார்...,' என தீர்க்கதரிசனமாக, எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பாடல் எழுதியவர்.

தமிழே உன் தலையெழுத்து:

மதுரை ரேடியோ நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம்: ""பூ முகத்து புன்னகையே இனி யார் முகத்தில் பார்ப்போம்! புது நடையில் சொற்பொழிவை யாரிடத்தில் கேட்போம்! நடை துள்ளும் தமிழுக்கு பகை வந்தால், அங்கே உடைவாளை எடுக்கின்ற பெரும் வீரர் எங்கே? இமை மூடிக் கொண்டாய்! புதை குழியில் மெல்ல தமிழே உன் தலையெழுத்தை நான் என்ன சொல்ல?'' -இது அண்ணாதுரை இறந்த போது, கவிஞர் வாலி எழுதியது. வாலிக்கும், இது பொருந்தும்.

மனம் மாறிய வாலி:

கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி, இளமையில் வறுமையின் காரணமாக, ஒருமுறை தற்கொலை முடிவை' எடுத்தார். அப்போது கண்ணதாசன் "சுமைதாங்கி' என்ற படத்துக்காக எழுதிய, "மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா...' என்ற பாடலில் வரும், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு...' என்ற பாடல் வரியைக் கேட்ட வாலி, மனம் மாறி தற்கொலை முடிவை கைவிட்டார்.

இதுக்கு மேல் எழுத முடியாது:

"அபூர்வ சகோதரர்கள்' படத்துக்காக, காதல் தோல்வி தொடர்பாக வாலி பாடல் எழுதினார். அதில் திருப்தி அடையாத நடிகர் கமல், மீண்டும் கேட்டார். இதுமாதிரி ஐந்து முறை பாடலை மாற்றிய வாலி, 5 தடவைக்குப் பின், இதற்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என கூறி, கோபத்துடன் ஒரு பாடலை கமலிடம் கொடுத்தார். அந்த பாடல்தான், "உன்ன நெனச்சேன்... பாட்டு படிச்சேன்... தங்கமே, ஞானத்தங்கமே...' என்ற பாடல்.

வாலியின் வரி:

""அன்று 24 மணி நேரம் இருந்தது. ஆனால் சாப்பிட எதுவும் இல்லை. இன்று சாப்பிட அனைத்தும் இருக்குகிறது; ஆனால் நேரம் இல்லை'' என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.

வாலி "1000':

கவிஞர் வாலியின் 80வது பிறந்த தின நிகழ்ச்சியில், ஆயிரம் படங்களுக்கு அவர் பாடல் எழுதியதை பாராட்டி, "பிரம்ம கான சபை' சார்பில், 2010 நவ., 13ல், "வாலி - 1000' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

பிரதிபலித்த வாலி:

எம்.ஜி.ஆர்., படங்களுக்கு அதிகளவில் வாலி பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆர்., கருத்துக்களை பாடல்களில் வாலி பிரதிபலித்தார். எம்.ஜி.ஆர்., புகழுக்கு, வாலியின் பாடல் வரிகளும் ஒரு காரணமாக அமைந்தன. அந்தளவு இருவரது உறவு, நட்பு வட்டத்தை தாண்டி இருந்தது.

எளிதில் புரியும்:

வாலியின் பாடல் வரிகள், சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கும். அதே வகையில் சில பாடல்களில் பிற மொழி வார்த்தைகளை கலந்தும் பாடல்களை எழுதியுள்ளார். வாலி தத்துவ பாடல்களை மட்டும் எழுதவில்லை.

எம்.ஜி.ஆர்., தந்த கடிகாரம்:

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்: நல்ல ஓவியர். இவர் வரைந்த பாரதியாரின் ஓவியத்தை பார்த்து, "என் அப்பாவைப் பார்த்தது போலிருக்கிறது' என, பாரதியாரின் மகள் வியந்ததுண்டு. நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார். இலக்கியவாதியும் கூட. இந்த தலைமுறைக்கேற்ப மகாபாரதத்தை "பாண்டவர் பூமி' யாக, ராமாயணத்தை "அவதாரபுருஷனாக', புதுக்கவிதையாக மாற்றித் தந்தவர். "அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே...' பாட்டெழுதியவர், வாலி. ஆனால் இசையமைப்பாளர் விஸ்வநாதன், "எனக்காக கண்ணதாசன் எழுதியது' என்று தன்னை மறந்து சொன்னாராம். "கற்பகம்' படத்தின் "மன்னவனே... அழலாமா... அத்தை மடி மெத்தையடி... பக்கத்து வீட்டு பருவமச்சான்....' பாடல்கள், வெற்றியைத் தந்தது. டி.எம்.எஸ்.,க்காக ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிய பாடல் தான், "கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும்... கந்தனே உனை மறவேன்'. கலங்கரை விளக்கம் படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டு அமைத்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர்., வாலியிடம், "15 நிமிடத்திற்குள் இந்த மெட்டுக்கு பாட்டு எழுதினால், என் கைக்கடிகாரத்தை தருகிறேன்' என்றார். சொன்ன நேரத்திற்குள், "காற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்...' என்றெழுதியதும், எம்.ஜி.ஆர்., கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். மூன்று முறை அவரை சந்தித்துள்ளேன். சமீபத்தில் கூட சென்னைக்கு சென்று, குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கினேன்.

வலிமை கவிஞர் வாலி:

கவிஞர் நெல்லை ஜெயந்தா: 1958ம் ஆண்டு முதல் இன்று வரையிலும், திரைத்துறையில் தேடப்படும் ஒரே நபர் வாலி. பாடல்களில் பழமையும், புதுமையையும் தரும் வலிமை, வாலிக்குத் தான் இருந்தது. "டிமாண்ட்' செய்யும் ஒரே பாடலாசிரியர். யாராக இருந்தாலும் இவரிடம் பாடல் கேட்டால் 4 பல்லவி, 4 சரணம் கொடுத்துவிடுவார். சிலர் புதியவர்களுக்கு, சிலவரிகளை கொடுப்பார்கள்; ஆனால், வாலிக்கு அந்த பழக்கமே இல்லை. தெரியாத விஷயங்களை தெரிந்தவர்களிடம், தன்னை ஒரு முட்டாள் போல் நினைத்து கேட்பார். ஆயிரக்கணக்கான அவரது பாடல்களில் பலதை ரசித்தாலும், எனக்கு அவரது பழைய பாடல்களில் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' புதிய பாடல்களில் "என்ன விலை அழகே...' மிகவும் ரசித்துக் கேட்பேன். வாலி, பெரும்பாலும் தனிமையைத் தான் விரும்புவார். நன்கு பழகியவர்களை எந்த இடத்தில் கண்டாலும் அழைத்து பேசுவார். அது போல், ஒருவரை சந்திக்க "அப்பாயின்மென்ட்' கொடுத்த பின், அதைவிட புகழ்பெற்ற அல்லது மிக முக்கியமான நபராக இருந்தாலும், அந்த நேரத்தை மாற்ற மாட்டார்.

வந்ததும் காலி; காரணம் "வாலி':

கவிஞர் வாலியின் வரிகளுக்கு அன்றும், இன்றும் இருக்கும் "மவுசுக்கு', அதை தாங்கி வந்த "கேசட்', "சிடி'களின் விற்பனையே சாட்சி. குறிப்பாக, வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ்கள், லட்சக்கணக்கில் விற்றுள்ளன. இன்றும், தொடர்ந்து விற்பனைக்கு வருகின்றன. "நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்', "ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை', "காற்று வாங்க போனேன்... கவிதை வாங்கி வந்தேன்', "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' போன்ற எம்.ஜி.ஆர்., ன் காலத்தால் அழியாத பாடல்களின் அமோக விற்பனையில், வாலியின் வரிகளும் பின்னணியில் அணிவகுத்தன. டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய, "கற்பனை என்றாலும்', "ஓராறு முகமும்... ஈராறு கரமும்...' போன்ற பக்தி பாமாலைகளுக்கும், வரிகளால் பூமாலை கோர்த்தவர், வாலி. எம்.ஜி.ஆர்., டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு அடுத்தபடியாக, அதிக ஆல்பங்கள் விற்பனைக்கு வருவது, வாலியின் பாடல்கள் தான். மதுரை, கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராமிடம் கேட்ட போது, ""எனது 25 ஆண்டு கால ஆடியோ விற்பனையில், துவக்க காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு "டெமோ' காட்ட, வாலியின் வரிகளில், டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய பாடல்களை தான், ஒலிக்கச் செய்து காட்டுவோம். அதை கேட்டதுமே, கேசட் விற்றுவிடும். ஒவ்வொரு சீசனிலும், 30க்கும் மேற்பட்ட ஆல்பங்கள், வாலி பெயரில் விற்பனைக்கு வரும். அடுத்த சீசன் வருவதற்குள், முன்பு வந்தவை விற்றுவிடும். வாலியின் வரிகளை தேடி வரும் ரசிகர்கள், 70வயதிலும் இருக்கிறார்கள், 20லும் இருக்கிறார்கள். வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ் விற்பனையை, வேறு எந்த ஆல்பமும் முறியடிக்க முடியாது,'' என்றார்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

காதலானாலும் சரி

கண்ணீரானாலும் சரி

மனம் தேடும் உன் வழி....

வரி வரியாய்

மொழி மொழியாய்

விழி விழியாய்

துளித்துளியாய்

அனுபவித்த உம்பாடலை

எங்கு சென்று தேடுவேன் இனி...

பகிர வந்த பயங்கரமும்

பதுமையாய் மாறும்

உம்துகிலுரைக் கேட்டு....

பாவம் எமனுக்கு தெரியாது போலும்

உம்வார்த்தையின் வலிமை...

அறிந்திருந்தால்,

நெருங்க (கூனி)குருகியிருப்பான்...

அவன் அறியாமையை அறிவிக்கச் சென்றீரோ?

அறிவியுங்கள் அறிவியுங்கள்....

இனியாவது திருந்தட்டும்,

அந்த புத்திக்கெட்ட எமன்....

படைக்க வந்தீர்

பரிசளித்தீர்

எங்களின் பரிசானீர் - இன்றோ,

காவியம் படைத்து மறைந்தீரே ஐய்யா

Fb

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்
கவிஞர் வாலியின் வரிகள் 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.