Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாற்று அணையைத் திறந்தனர் புலிகள்.

Featured Replies

இலங்கை நேரப்படி பின்னேரம் 5மணிக்கு அணை திறக்கப்பட்டது எண்டு சூரியன் எப். எம் ல் கேட்டு தெரிஞ்சு கொண்டன் அப்பாடி இண்டைக்காவது இரவு நிம்மதியாக தூங்கலாம் எண்டு ஆனா.....இப்பவும் (இரவு 11மணி ) நேவிதளத்திலிருந்து எறிகணை தாக்குதல் நடக்குதே???????? ஏன்ப்பா ரம்புக்கவின் கதையை கேட்டு புலிகள் திரும்பவும் அணையை மூடி விட்டார்களா? அல்லது அணை திறந்த விசயம் நேவிக்காரங்களுக்கு தெரியேலையோ????

  • Replies 51
  • Views 6.3k
  • Created
  • Last Reply

அமாவாசை, பறுவக் காலம் போலக் கிடக்கு. அமர் பத்தித் திரியுது. :P :P எதுக்கும் தள்ளி நிப்பம்.. :wink: :arrow:

உண்மைதான். :shock:

  • தொடங்கியவர்

முகத்தார் உவங்கள் தணிக்கே இப்படி அடிபடுறாங்கள்.அது தானே கண்காணிப்புக் குழுத் தலைவர் சொன்னவர் உது தண்ணிக்கான சண்டை இல்லை எண்டு, கவனமா இருங்கோ , இது இதோட முடியப் போறேல்ல இன்னும் கனக்கக்கிடக்கு....

இலங்கை நேரப்படி பின்னேரம் 5மணிக்கு அணை திறக்கப்பட்டது எண்டு சூரியன் எப். எம் ல் கேட்டு தெரிஞ்சு கொண்டன் அப்பாடி இண்டைக்காவது இரவு நிம்மதியாக தூங்கலாம் எண்டு ஆனா.....இப்பவும் (இரவு 11மணி ) நேவிதளத்திலிருந்து எறிகணை தாக்குதல் நடக்குதே???????? ஏன்ப்பா ரம்புக்கவின் கதையை கேட்டு புலிகள் திரும்பவும் அணையை மூடி விட்டார்களா? அல்லது அணை திறந்த விசயம் நேவிக்காரங்களுக்கு தெரியேலையோ????

விபரம் நாளைக்குத்தான் தெரிய வரும். :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நேரப்படி பின்னேரம் 5மணிக்கு அணை திறக்கப்பட்டது எண்டு சூரியன் எப். எம் ல் கேட்டு தெரிஞ்சு கொண்டன் அப்பாடி இண்டைக்காவது இரவு நிம்மதியாக தூங்கலாம் எண்டு ஆனா.....இப்பவும் (இரவு 11மணி ) நேவிதளத்திலிருந்து எறிகணை தாக்குதல் நடக்குதே???????? ஏன்ப்பா ரம்புக்கவின் கதையை கேட்டு புலிகள் திரும்பவும் அணையை மூடி விட்டார்களா? அல்லது அணை திறந்த விசயம் நேவிக்காரங்களுக்கு தெரியேலையோ????

தண்ணீர் இன்னமும் சேருவிலவுக்குப் போய்ச் சேரவில்லைப் போல.. ஆடி அசைஞ்சு போகுதாக்கும்.. நேவிக்கு ஒரு நாளைக்கு எத்தினை ஷெல் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பாங்கள்.. முடியுமட்டும் அடிக்கின்றாங்களாக்கும்.. பத்திரமாக இருக்கவும்..

  • தொடங்கியவர்

ஐரோப்பிய ஒன்றிய தடையின் விளைவையே அனைவரும் அனுபவிக்கிறனர் - ஹென்றிக்சன்.

போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்கள் குறித்து சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் ஒப்பீடுகள், அடிப்படையில் தவறானவை என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமளித்திருக்கும் கண்காணிப்புக் குழு தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், சிறுவர்களை படையணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இணைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளையும், சிறீலங்கா அரசாங்கத்தால் நிகழ்த்தப்படும் வான்வழித் தாக்குதல்களையும் ஒப்பிட முடியாது எனக் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்கள், எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற போதும், அவை மிகவும் பாரதூரமானவை என்றும் கண்காணிப்புக் குழு தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு முன்னர், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை எடுத்து விளக்கிய போதும், இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அலட்சியப் போக்கை கைக்கொண்டதாகவும், உல்வ் ஹென்றிக்ஸன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையின் எதிர்வினையை, தற்போது அனைவரும் அனுபவித்து வருவதாகவும், கண்காணிப்புக் குழு தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...=1&section=home

இலங்கை நேரப்படி பின்னேரம் 5மணிக்கு அணை திறக்கப்பட்டது எண்டு சூரியன் எப். எம் ல் கேட்டு தெரிஞ்சு கொண்டன் அப்பாடி இண்டைக்காவது இரவு நிம்மதியாக தூங்கலாம் எண்டு ஆனா.....இப்பவும் (இரவு 11மணி ) நேவிதளத்திலிருந்து எறிகணை தாக்குதல் நடக்குதே???????? ஏன்ப்பா ரம்புக்கவின் கதையை கேட்டு புலிகள் திரும்பவும் அணையை மூடி விட்டார்களா? அல்லது அணை திறந்த விசயம் நேவிக்காரங்களுக்கு தெரியேலையோ????

முகம்ஸ் தாத்தா அவர்கள் தண்ணிவேண்டும் என்று இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியருந்தால் இப்போதைக்க நிறுத்தியிருப்பார்களே. அவர்கள் தான் தண்ணிக்காகவன்றி ஏதோவோர் உள்நோக்கோடு தான் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அறிவித்தாகியும் விட்டது.

அவ்விடத்தைவிட்டு சிங்கள இராணுவத்தினை துரத்தினால் மட்டுமே எறிகணைத் தாக்குதல் நிற்கும்.

  • தொடங்கியவர்

மாவிலாற்று அணைக்கட்டை கைப்பற்றுமாறு படையினருக்கு அரசாங்கம் உத்தரவு.

திருமலை மாவிலாறு அணைக்கட்டை கைப்பற்றுவதற்கான மற்றுமொரு பாரிய படைநகர்வை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்களில், சிறீலங்கா படையினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு வார காலப் பகுதியில், பல தடவைகள் சிறீலங்கா படைகள் மேற்கொண்ட வலிந்த படையெடுப்புக்களை, தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றிரகமாக முறியடித்துள்ள நிலையில், முன்னரை விட கூடுதலான படைக்கல சக்தியை பிரயோகித்து, மற்றுமொரு வலிந்த படைநகர்வை மேற்கொள்ளுமாறு, சிறீலங்கா படைகளிடம் அரசாங்கம் கடுமையாக உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...=1&section=home

உண்மைதான். :shock:

எனக்கு அறிவுரை சொன்ன மாதிரி கிடந்துது..... :wink: :P

மாவிலாறு அணையை தமது பொறியிலாளர்களே திறந்தாகப் பொய்யுரைக்கும் ரம்புக்வெல்ல

மாவிலாறு அணையை இராணுவ நடவடிக்கையை மூலமே அரசபடைகள் திறந்ததாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான துல்லியமான விமானத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குலை அடுத்து மாறிலாறு அணைக்கட்டை கைப்பற்றி அரசாங்க பொறியியலாளர்கள் மாவிலாற்று துருசை திறந்தாக ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் திறந்தாக புலிகள் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளுவதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மாவிலாறு அணையைத் தடுத்நிறுத்தாவிட்டிருந்தால

ரம்புக்வெல்ல நேசறிப்பிள்ளையள் மாதிரி திரும்ப திரும்ப பொய் சொல்லுறான்.

ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமாய் இருக்கு

எனக்கு அறிவுரை சொன்ன மாதிரி கிடந்துது..... :wink: :P

சும்மா பொழுது போகேல்லை அதான். :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரம்புக்வெல்ல நேசறிப்பிள்ளையள் மாதிரி திரும்ப திரும்ப பொய் சொல்லுறான்.

நேசறிப் பிள்ளையள் பொய் சொல்லுவார்களா? சூது, வாது தெரியாமல் அல்லவா இருக்கும் என்று நினைத்தேன்.. :lol:

நேசறிப் பிள்ளையள் பொய் சொல்லுவார்களா? சூது, வாது தெரியாமல் அல்லவா இருக்கும் என்று நினைத்தேன்.. :lol:

சின்னப்பிள்ளைகள் சில வேளைகளில் சின்ன சின்ன பொய் சொல்லுவார்கள்

ஆனால் அந்த ரம்புக்கெல்ல வாய் கூசாது பொய்யா சொல்லிக்கொண்டு இருக்கான். முழுப்பூசணிக்காயையே சோற்றிலை புதைக்கிறான். இராணுவமும் பொறியியலாளரும் போய் திறந்து விட்டதாகச் சொல்லுறான்.

புலிகள் திறக்கேக்க போட்டோ வீடியோ எடுக்கிறதில்லையோ எடுத்திருந்தால் அந்த பொய்யன்ர மூஞ்சையில கரியைப்பபூசியிருக்கலாம். :cry:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் திறக்கேக்க போட்டோ வீடியோ எடுக்கிறதில்லையோ எடுத்திருந்தால் அந்த பொய்யன்ர மூஞ்சையில கரியைப்பபூசியிருக்கலாம். :cry:

வரும். வந்தாப்பிறகு பூசலாம்.. (அது ஏற்கனவே கரியாய் இருந்தால் :roll: )

ஏன் இராணுவமும் பொறியியலாளர்களும் அணைக்கதவை திறக்கும்போது ஒளிப்படம் பிடிக்க மறந்திட்டினமா? அதுக்கும் ஒரு பொய் வைச்சிருப்பார். :lol: :lol:

மனிதாபிமான அடிப்படையில் தண்ணீரை

திறந்துவிட்டனர் புலிகள்

தண்ணீர்ப் பிரச்னையில் இலங்கை அரசு கடந்த இரண்டு வாரங்களாக தாக்குதல் நடத்தியது. 24 மணி நேரத்திற்குள் தண்ணீரை நாங்களே திறந்து கொள்வோம் என்றும் இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்றும் கூறிய இலங்கை அரசு முடிந்த மட்டும் போராடி தோற்றது.

தண்ணீரைத் தடுத்து வைத்திருப்பதால் பாதிப்புக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலையை மனதில் வைத்து மனிதாபிமான அடிப்படையில் மாவிலாறு அணையைத் திறக்கிறோம் என்று புலிகள் தரப்புப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு விடுதலைப் புலிகளினால் மனிதாபிமான அடிப்படையில் தண்ணிர் திறந்து விடப்பட்டுள்ளது.

TAMILMURASU-SINGAPORE

  • கருத்துக்கள உறவுகள்

""ரம்புக்வெல்ல நேசறிப்பிள்ளையள் மாதிரி திரும்ப திரும்ப பொய் சொல்லுறான்.

ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமாய் இருக்கு"""

ஆமிகாரன் அப்பவும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தவன் நாங்கள் தண்ணிக்காக சண்டைபிடிக்கிறம் எண்டு. இப்ப விழங்குதோ ரம்புக்வெல்ல ஆமிக்காரங்களின்ர தண்ணியையும் பறிச்சு அடிச்சிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு அணைக்கட்டு திறப்பு ஒரு மிகப்பெரும் வெற்றி என்கிறது ஜே.வி.பி.

சிறிலங்காவில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்த மாவிலாறு அணைக்கட்டை, சிறிலங்கா படையினர் மிகச்சிறந்த திட்டமிடல் மற்றும் தாக்குதல் மூலம், விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுத்தமை, தமது அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவரான விமல் வீரவன்ச இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

விடுதலைப் புலிகளுக்கு அடிபணியாது, நாட்டினதும் படையினரின் திறமை மீதும் நம்பிக்கை வைத்து, தொடர்ச்சியாகப் போராடி துணிவுடன் வெற்றியைப் பெற்றுத்தந்த தங்களது மகிந்த அரசை, தாம் பாராட்டுவதாகத் தெரிவித்த அவர், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் நடமாடாது தொடர்ந்து பாதுகாப்பதும் அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்த அரச குழுவினர்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தலைமையில் மாவிலாறு தண்ணீர் பெற்ற மக்களைச் சந்தித்த அரச குழுவினர், தமது தாக்குதலால் தான் தண்ணீர் பெற்றுத் தரப்பட்டதாக அப்பகுதி மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள், மனிதாபிமான அடிப்படையில் அணைக்கட்டைத் திறந்ததை அறியாத அப்பகுதி படிப்பறிவற்ற அப்பாவி மக்கள், மகிந்தவின் நேரடித் தலையீட்டினால் தமக்கு தண்ணீர் கிடைக்க வைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

அவர்களது நன்றியில் குளிர்காய்ந்த அரச தரப்பினர், சிங்கள மக்கள் வாழும் பகுதிக்குள் பிறிதொரு அணைக்கட்டை அமைக்கும் புதிய திட்டமொன்று குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகக் கூறினர்.

மாவிலாறு அணைக்கட்டை சிறிலங்காப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், பிறிதொரு அணைக்கட்டு எதற்காகக் கட்ட வேண்டும் என மக்கள் கேட்டபோது அதிர்ச்சியடைந்த பசில் ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அணைக்கட்டு சேதமடைந்ததால், புதிய அணைக்கட்டு திட்டம் ஒன்று உருவாக்கப்படுவதாக சமாளித்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இதற்கிடையில், மருத்துவப் பீட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை கண்டியிலுள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த மகிந்த, தண்ணீர் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் அரசு தயாராக இருக்கவில்லை. இப்போதும், தண்ணீர் விடயத்தில் சிங்கள மக்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வரை தனது அரசு ஓயாமல் பணியாற்றி வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

தனது அரசின் சிறந்த திட்டமிடலில், மாவிலாறு அணைக்கட்டு பிரச்சனை வெற்றியுடன் தீர்க்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

-புதினம்

ஏன் இராணுவமும் பொறியியலாளர்களும் அணைக்கதவை திறக்கும்போது ஒளிப்படம் பிடிக்க மறந்திட்டினமா? அதுக்கும் ஒரு பொய் வைச்சிருப்பார். :(:)

அப்படி பிடித்ததைத்தான் தொலைக்காட்சி செய்தியில காட்டினவையோ!!!

இரண்டும் நம்பக்கூடியதாக இருக்கேக்க எந்த ஊடகத்தை நம்புறது என்டு தெரியல.

  • கருத்துக்கள உறவுகள்

எனன் உங்களுக்கு காட்டினவை! குறுக்கு வாய்காலுக்கு, போட்டிருக்கின்ற அணைக்கும், ஒரு அணைக்கட்டில் போட்டிருக்கின்ற அணைக்கும் வித்தியாசம் தெரியாதோ?

எனன் உங்களுக்கு காட்டினவை! குறுக்கு வாய்காலுக்கு, போட்டிருக்கின்ற அணைக்கும், ஒரு அணைக்கட்டில் போட்டிருக்கின்ற அணைக்கும் வித்தியாசம் தெரியாதோ?

ஓஓ அதை திறக்கவே இவ்வளவு பெரிய பரிவாரங்களோட போய் படம் பிடித்தவை. நான் அந்த மதகுருமார் எல்லாரையும் பார்த்து ஏமாந்துட்டனோ? :roll: :roll: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாறு மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்த அரச குழுவினர்

ஜவியாழக்கிழமைஇ 10 ஓகஸ்ட் 2006இ 07:03 ஈழம்ஸ ஜகாவலூர் கவிதன்ஸ

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தலைமையில் மாவிலாறு தண்ணீர் பெற்ற மக்களைச் சந்தித்த அரச குழுவினர்இ தமது தாக்குதலால் தான் தண்ணீர் பெற்றுத் தரப்பட்டதாக அப்பகுதி மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள்இ மனிதாபிமான அடிப்படையில் அணைக்கட்டைத் திறந்ததை அறியாத அப்பகுதி படிப்பறிவற்ற அப்பாவி மக்கள்இ மகிந்தவின் நேரடித் தலையீட்டினால் தமக்கு தண்ணீர் கிடைக்க வைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

அவர்களது நன்றியில் குளிர்காய்ந்த அரச தரப்பினர்இ சிங்கள மக்கள் வாழும் பகுதிக்குள் பிறிதொரு அணைக்கட்டை அமைக்கும் புதிய திட்டமொன்று குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகக் கூறினர்.

மாவிலாறு அணைக்கட்டை சிறிலங்காப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால்இ பிறிதொரு அணைக்கட்டு எதற்காகக் கட்ட வேண்டும் என மக்கள் கேட்டபோது அதிர்ச்சியடைந்த பசில் ராஜபக்சஇ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அணைக்கட்டு சேதமடைந்ததால்இ புதிய அணைக்கட்டு திட்டம் ஒன்று உருவாக்கப்படுவதாக சமாளித்துவிட்டுஇ அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இதற்கிடையில்இ மருத்துவப் பீட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை கண்டியிலுள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த மகிந்தஇ தண்ணீர் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் அரசு தயாராக இருக்கவில்லை. இப்போதும்இ தண்ணீர் விடயத்தில் சிங்கள மக்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வரை தனது அரசு ஓயாமல் பணியாற்றி வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

தனது அரசின் சிறந்த திட்டமிடலில்இ மாவிலாறு அணைக்கட்டு பிரச்சனை வெற்றியுடன் தீர்க்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாவிலாறு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது : எழிலன்

திருமலை நிருபர்

Thursday, 10 August 2006

மாவிலாறு அணைக்கட்டுப் பகுதியை நோக்கி நேற்று புதன்கிழமை காலை முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினரின் முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை அடுத்து படையினர் தமது நிலைகளுக்குப் பின்வாங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினால் மாவிலாறு அணையினை நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் திறந்து விடப்பட்டன. இந்த அணைக்கட்டு தொடர்பாக விடுதலைப்புலிகள் நோர்வேக்கு நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அறிவித்தனர்.

அதேநேரம் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று இரவு 8.30 மணியளவில் மாவிலாறு அணைக்கட்டை திறந்து விட்டுள்ளதாக இராணுவத்தின் ஊடகப்பிரிவு நேற்று காலை அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்தக் கூற்று விநோதமாக இருப்பதாகவும் மாவிலாறு தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டிலேயே உள்ளது என்றும் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.