Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

Featured Replies

இன்று இணையத்தில் கடலை போட்டுக் கொண்டும் சோழம் கொறிச்சுக் கொண்டும் இருக்கும் போது கண்ணில் அகப்பட்ட கட்டுரை இது. சரி, எதுக்கும் இருக்கட்டும் என்று இங்கு கொண்டு வந்து போட்டுள்ளேன்.

கட்டுரையாளர்  வருண் நுனிப்புல் மேய்கின்றாரா அல்லது உண்மையிலேயே நாங்கள் அப்படியா என்று ஒரு சின்ன டவுட்

----------------------------------

ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது.

வியாசன்..

* தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார்.

* பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடாது என்கிறார்..

* ராஜ ராஜ சோழன் செய்த சாதனைகளை எல்லாம் சிங்களவர்கள் அழிக்கிறார்கள்! தமிழர்களின் சாதனைகளை எல்லாம் வரலாற்றில் இருந்து அகற்றப்படுகிறது என்கிறார்.

இந்தியாவில், பாபர் மசூதியை அகற்றவில்லையா? அதுபோல்தான் என்று இதை விளக்க முயன்றால்.. "நம் தமிழர்கள் அப்படி செய்யவில்லை!" "நினைக்கவில்லை" என்கிறார். இவருக்கு தமிழர் சம்மந்தமில்லாத ஒரு பிரச்சினை, பிரச்சினையே இல்லை! நம்ம ஊர் காந்தியெல்லாம் ஒரு மனுஷனே இல்லை! பெரியாரை எல்லாம் இவர் புரிந்துகொண்டதாகவும் தெரியவில்லை! புத்தனை அறவே வெறுப்பவர்னு நினைக்கிறேன். பொதுவாக நம்ம ஊர் பார்ப்பனர்கள் நிலைப்பாடும் மேற்கூறிய எல்லா விசயங்களிலும் வியாசன் நிலைப்பாடு போல்தான்!

இவர் வியாசர்னு பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ பதிவுலகில் தமிழ் பிராமணர்களிடம் அன்பாவும் பரிவாகவும் நடந்துகொள்கிறார். யாரோ ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க இருக்கிறேன், என்கிறார் இந்த அன்பர். இவரை ஏதாவது விவாதங்களில் சாடினால் நான் உங்க "மாப்பிள்ளை"தான்னு அன்புடனும் கோபத்துடனும் சொந்தம் கொண்டாடுகிறார். :)

எனக்கு இவர் சிந்தனைகள் சரியாகப் பிடிபட மாட்டேன் என்கிறது. இவர் மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களிடம் இதேபோல் உணர்ந்து இருக்கிறேன்.

தமிழன் என்கிற அடையாளம் தவிர நாம் இவ்வுலகில் வாழும் ஒரு "நல்ல மனுஷன்" "கெட்டவன்" என்கிற ஒரு பொது அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழன் என்கிற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு, உலக நடப்பை, நல்லது கெட்டதை பார்க்கவும் செய்யலாம். ஒரு மனிதனாக. உலக விசயங்களை நாம் விவாதிக்கலாம். இதுபோல் விவாதங்கள செய்வது, நல்லவற்றை மற்றவர்களிடம் கண்டறிந்து வியப்பது, போன்றவை வியாசன் மட்டுமல்லாமல் பல ஈழத்தமிழர்களால் முடியவே முடியாதா?! அவர்களால் சுத்திச் சுத்தி தமிழன், தமிழ் என்கிற ஒரு அடையாளத்திலிருந்து வெளிவர முடியாது என்றே எனக்குத் தோனுகிறது!

அப்படினா? என்ன சொல்ல வர்ர?

"தமிழ்" "தமிழன்" என்கிற ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் இவர்களிடம் ஏதோ ஒன்று இல்லாதமாரி எனக்கு தோனுது. இவர்கள் பட்ட கஷ்டங்கள், பட்டுக்கொண்டிருக்க கஷ்டங்களால் இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களா? இல்லைனா இயற்கையிலேயே இவர்கள் இப்படித்தானா? என்கிற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.

புத்தர், காந்தி, பெரியார் போன்றவர்களுடைய எண்ணங்களை, சிந்தனைகளை இவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் ஏதாவது சொல்லியிருந்தால் மட்டுமே அந்தக் கருத்தை கவனிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். மற்றவர்கள், யாராயிருந்தாலும், என்ன சொல்லியிருந்தாலும் அவர்களை, அவர்கள் சொன்னவர்களைப் புறக்கணிக்கிறார்கள்.

உலகம் என்கிற கடலில் தமிழர்கள் ஒரு சின்னத்துளிதான் என்பது இவர்களுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை! தமிழனல்லாதவன் எவனாக இருந்தாலும், அவனுடைய நற் சிந்தனைகளை, வரவேற்பது, பாராட்டுவது போன்ற பெரிய மனது இவர்களிடம் இல்லை என்றும் பல சமயங்களில் எனக்குத் தோன்றுகிறது.

ஒரு வகையில் இது நம் நாட்டில் உள்ள பார்ப்பன்ர்கள் சிந்தனை போலவே இவர்கள் சிந்தனையும் இருப்பதாக எனக்குத் தோனுகிறது. பார்ப்பனர்களுக்கு திராவிடர்கள் வாழ்க்கை முறை பண்பாடுகூட சரியாத் தெரியாதுனு சொல்லலாம். நம்மோடைய இருந்து, நம்முடனே வாழ்ந்து தண்ணீரும் எண்ணையும்போல்தான் பார்ப்பனர்கள் என்றுமே வாழ்கிறார்கள். ஈழத்தமிழர்களும் நம் பார்ப்பணர்களைப் போலவே "தமிழன்" "தமிழ் அடையாளம்" என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் இந்த மிகப் பெரிய உலகில் வாழ்வதாக எனக்குத் தோன்றுகிறது.

இது உண்மையா? என்னைப்போல் வேறு யாரும் உணர்ந்து இருக்கீங்களா? இல்லை நான் சும்மா பிதற்றுகிறேனா? நாகரீகமான எதிர்வாதம் வரவேற்கப்படுகிறது! நன்றி
 
இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லாரும் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள் எண்று சொல்ல வருகிறாரோ எழுத்தாளர்...??   

கிட்டடியிலை தான் காதலிச்சு திருமணம் செய்த குற்றத்துக்காக இளவரசன் எண்ற உயிரை குடிச்சது தமிழகம்...   எழுத்தாளரை போல  பார்த்தால் உலகத்திலை நாகரீகமே தெரியாத கூட்டம் எண்று தான் தமிழர்களை சொல்ல வேணும்...   ஆனால் உண்மை அப்படியா...??   பிரித்தானியாவில் உயர்கல்வி படிக்க வந்த  நான் சந்தித்த உயர் சாதி (பிள்ளை ) தமிழர் நடந்தவைகளை நியாயப்படுத்தினார்...  BC வகுப்பை சேர்ந்தவர்கள் உயர்கல்விக்கு அனுப்பும் போதே சொல்லி அனுப்புறாங்கள் உயர்சாதி பிள்ளைகளை காதலிச்சு கல்யாணம் செய்ய சொல்லி  எண்றார்...   அவர் சொல்லும் போது பக்கத்தில் நிண்ற காரைக்காலை சேர்ந்த இன்னும் ஒரு தமிழரும் நானும் ஆளை ஆள் பார்த்து சிரித்துக்கொண்டோம்...  

இதுகளை வைத்துக்கொண்டு தமிழ நாட்டு காறன் சாதி வெறி பிடிச்ச காட்டு மிராண்டிகள் எனும் கருத்துக்கு நான் வரலாம் எண்று யாராவது நம்புகிறீர்களா.... ???    ஆம் எண்றால் மேலை இருக்கு கட்டுரையையும் ஏற்றுக்கொள்ளலாம்...

பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால் தமிழரை போல் பலமடங்கு மொழிப்பற்றும் பாரம்பரியம் மீது கவனமும்  கொண்டவர்கள் வெள்ளைகள்....   இது ஐரோப்பாவும் இதற்க்கு நிகர் இல்லை....     ஆனாலும்  வெள்ளையர்களில்  கறுப்பர்களையும் இந்தியர்களையும் திருமணம் செய்து அவர்களையும் தங்களின் மொழி பேச வைப்பவர்களும் இருக்கிறார்கள்...  

2013 ல்  பிறந்த அரச குடும்ப இளவரச வாரீசின் அறிவிப்பு...    பிற்போக்குதனமாக இதை பிரித்தானியர்கள் கருதுவது கிடையாது...

Royal-baby-2078832.jpg

  • கருத்துக்கள உறவுகள்
இந்த கட்டுரை எழுதியவர் ஈழத்தமிழர்கள் ஒருசிலருடந்தான் பழகி இருக்கின்றார் எல்லாருடன் பழகினால் இவர் இந்த கட்டுரை எழுதியிருக்கமாட்டார் பதிலாக தலையை பித்து கொண்டு நடுவீதியில் நின்றிருப்பார். :D  
 
காந்தி, பெரியார், புத்தர் என்கிறார். காந்தி இந்தியன் என்றார், பெரியார் திராவிடன் என்றார், புத்தர் இவர் சொல்லும் பக்கமே போகாத துறவு பூண்டவர். அவர் எப்போது இப்படியெல்லாம் பழகினாராம்? இவர் என்னதான் விளங்கி வைத்திருக்கிறாரோ. இராமநாதனை சிங்களவர் இணைந்து நாட்டின் ஒரே பிரதிநிதியாக்கினார்கள். மனைவி இறந்து போக அவர் வெள்ளைக்காரியை திருமணம் செய்தார்.அவர்தான் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி. அப்புறம் சாதரண குடிகள் வெறும் சாமானிய மனிதர்கள். 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, ஈழத்தமிழர் போகும் பாதையில் ஊன்றிப்போவார்கள். இதனால் மட்டும்தான் வெள்ளைகளின் அரசாங்கத்தில் எல்லாத்துறைகளிலும் தமிழரை முகாமைத்துவத்தில் வைத்திருந்தார்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் வித்தியாசமானவன்! காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்!

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துப் பெருமை பேசவில்லை! (அர்ஜுன் கவனிக்கவும்! :icon_idea:

கடந்த இருபதாண்டு காலத்துப் பெருமையை மட்டும் பேசுகின்றேன்!

1. ஒரு புத்தம் புதிய நாடு!

2. மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது!

3. சொந்தம் என்று சொல்லவோ, உறவென்று சொல்லவோ விரல் விட்டு எண்ணக்கூட ஆட்களில்லை!

4. நரம்புகளை மரத்துப் போகவைக்கும் பனி அல்லது பகலில் கண்களைக் கூடத் திறக்க முடியாத பாலை!

5. வீட்டில் கடனுடன் தோளில் குடும்பச் சுமை!

இன்று அந்தந்தத் தேசங்களின் பிரைஜைகள்! அந்த நாட்டுக் காரர்களே வியந்து போகுமளவுக்கு, அவர்களின் அபரிதமான வளர்ச்சி!

அவர்களைத் தூக்கியெறிந்த தேசமே, அவர்களது வருமானத்தை வைத்து, வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் நிலை!

தமிழ் நாட்டுத் தமிழனுக்கே வெளி நாடு காட்டியவன்/ காட்டுபவன் ஈழத் தமிழனே என்று கூடச் சொல்லலாம்!

தமிழ்நாட்டுச் சினிமாவுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், சர்வ தேசச் சந்தையமைத்துத் தந்தவன் ஈழத்தமிழனே!

ஒரு சில விதி விலக்குகளுடன், இன்னொரு சமுதாயத்தில் இலகுவாகக் கலந்து இணைபவனும், ஈழத்துத் தமிழனே!

இந்தியனும், பாகிஸ்தானியும், தங்களது அநாகரீக நடத்தைகளால்,வாங்க வேண்டிய அடியைத் தனது தோளில் வாங்கிக் கொள்பவனும், ஈழத்துத் தமிழன் தான்! :icon_idea:

(இந்திய உறவுகள் மன்னிக்கவும், மேலுள்ளவை. ஒரு விவாதத்துக்காக மட்டுமே! :D )

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சோபா சக்தியிண்ட  பிரண்டா  இருப்பாரோ :D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சோபா சக்தியிண்ட  பிரண்டா  இருப்பாரோ :D

சோபாசக்திக்கு ஒரே ஒரு நண்பன் கனடாவில் இருக்கிறார்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

இது ......" அ" வற்றை ஆள்தான்.....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களைக் கீழ்நிலையில் வைத்துப்பார்க்கும் பண்பாட்டைப் பார்ப்பனர்கள் பின்பற்றி வருவதால், தமிழ்நாட்டு மக்கள் அனேகமாக அவர்களை வெறுக்கவும், விமர்ச்சிக்கவும் செய்கின்றனர். அன்று புறநாநூறு கண்ட தமிழ் வீரத்தின் தோற்றம் இன்று தமிழ்நாட்டில் தோற்றாது தமிழீழத்திலேயே தோற்றம் கொண்டதால், அதன் செருக்கு ஈழத்தமிழர்களிடம் வெளிப்படுவதையும் காணலாம். இது யதார்த்தமானது. ஆனாலும் இதனை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இணையாக ஒப்பிட்டு தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கும்படியான ஒரு சிண்டுமுடிந்துவிடும் வேலையை தமிழின விடுதலைக்கெதிரான எதிரிகள் இலைமறை காயகவிருந்து செய்து வருவது போலத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ்" "தமிழன்" என்கிற ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் இவர்களிடம் ஏதோ ஒன்று இல்லாதமாரி எனக்கு தோனுது
அடிமைத்தனம் இல்லாத மாதிரி இருக்கும்...நன்றாக அவர் யோசித்துபார்த்தார் என்றால் அது விளங்கும்....இவ்வளவு அழிவிக்கு பின்பும் தேமிழ்தேசியம் என்று நிற்கின்றானே அதுதான் அவன்......(முற்போக்குவாதிகளுக்கு சில நேரம் தமிழ்தேசியம் கசக்கும்)

ஆழ்ந்த அனுதாபங்கள் புங்கை  .

முற்றிலும் உண்மைக்கு புறம்பான எதுவித ஆதரமும் அற்ற வெற்று பிதற்றல்கள் .புள்ளி விபரம் ஏதாவது இருந்தால் இணைக்கவும் .உங்களை மாதிரி இரண்டு மடங்கு பொய் எழுதி நாலு மடங்கு பச்சை வாங்குவதில் எனக்கு இஸ்டமில்லை.

கனடா வந்த நாட்கள் தொடக்கம் தமிழ் ஊடகங்களை இயலுமானவரை பார்த்து ,கேட்டு வாசித்து வருபவன் .பத்து பத்திரிகை ,நாலு வானொலி ,இரண்டி தொலைக்காட்சி இருக்கு .எல்லாமே மிக மிக தரம் குறைந்தவை.( நிழலியிடம் கேட்டு பார்க்கவும் ) உங்கள் பலரை போல ஒரே குண்டு சட்டிக்குள் குதிரை தான் ஓடுகின்றார்கள் .அத்தோடு தங்களை அடுத்த யூதர்கள் என்று வேறு பீத்திக்கொள்வார்கள்.உண்மையை சொல்ல போனால் நாட்டில் இருந்ததை விட பிற்போக்குதனங்கள் கூடி விட்டது .

மற்ற பல நாம் இன்னமும் ஏன் இவ்வளவு பின் தங்கியிருக்கின்றோம் என்ற மனவருத்தமே எனக்கு அடிக்கடி ஏற்படும் .

புலம் பெயர்ந்த அனைத்து இனங்களுமே தமது இருப்பிற்காக தமது கடின உழைப்பால் முன்னேறித்தான் இருக்கின்றார்கள் அது சீனர்கள் ,இந்தியர்கள் ,யூதர்கள் ,இத்தாலியர்கள் என்று எவருக்கும் பொருந்தும் .

வெறும் காகபார்வை பார்த்தால் புங்கையின் கருத்துகள் உண்மை போல இருக்கும் ஆழ ஆராய்ந்து பார்த்தால் அதில் எதுவித உண்மையுமில்லை .

அடுத்த தலை முறை பல மாற்றங்களை கொண்டுவருகின்றார்கள் கொண்டுவாருவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை ஏனெனில் அவர்கள் எங்களை போல இல்லை .

அவரது கட்டுரைக்கான பதில் இதுதான் .

"தமிழ்" "தமிழன்" என்கிற ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் இவர்களிடம் ஏதோ ஒன்று இல்லாதமாரி எனக்கு தோனுது. இவர்கள் பட்ட கஷ்டங்கள், பட்டுக்கொண்டிருக்க கஷ்டங்களால் இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களா?   ஆகிவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் புங்கை  .

முற்றிலும் உண்மைக்கு புறம்பான எதுவித ஆதரமும் அற்ற வெற்று பிதற்றல்கள் .புள்ளி விபரம் ஏதாவது இருந்தால் இணைக்கவும் .உங்களை மாதிரி இரண்டு மடங்கு பொய் எழுதி நாலு மடங்கு பச்சை வாங்குவதில் எனக்கு இஸ்டமில்லை.

கனடா வந்த நாட்கள் தொடக்கம் தமிழ் ஊடகங்களை இயலுமானவரை பார்த்து ,கேட்டு வாசித்து வருபவன் .பத்து பத்திரிகை ,நாலு வானொலி ,இரண்டி தொலைக்காட்சி இருக்கு .எல்லாமே மிக மிக தரம் குறைந்தவை.( நிழலியிடம் கேட்டு பார்க்கவும் ) உங்கள் பலரை போல ஒரே குண்டு சட்டிக்குள் குதிரை தான் ஓடுகின்றார்கள் .அத்தோடு தங்களை அடுத்த யூதர்கள் என்று வேறு பீத்திக்கொள்வார்கள்.உண்மையை சொல்ல போனால் நாட்டில் இருந்ததை விட பிற்போக்குதனங்கள் கூடி விட்டது .

மற்ற பல நாம் இன்னமும் ஏன் இவ்வளவு பின் தங்கியிருக்கின்றோம் என்ற மனவருத்தமே எனக்கு அடிக்கடி ஏற்படும் .

புலம் பெயர்ந்த அனைத்து இனங்களுமே தமது இருப்பிற்காக தமது கடின உழைப்பால் முன்னேறித்தான் இருக்கின்றார்கள் அது சீனர்கள் ,இந்தியர்கள் ,யூதர்கள் ,இத்தாலியர்கள் என்று எவருக்கும் பொருந்தும் .

வெறும் காகபார்வை பார்த்தால் புங்கையின் கருத்துகள் உண்மை போல இருக்கும் ஆழ ஆராய்ந்து பார்த்தால் அதில் எதுவித உண்மையுமில்லை .

அடுத்த தலை முறை பல மாற்றங்களை கொண்டுவருகின்றார்கள் கொண்டுவாருவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை ஏனெனில் அவர்கள் எங்களை போல இல்லை .

நன்றிகள், அர்ஜுன்!

உங்கள் ஆற்றாமையின், ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே, இதனை நான் எடுத்துக் கொள்கின்றேன்! அநீதிகளுக்கு எதிராகப் போராடப்புறப்பட்ட ஒருவனின் மனநிலையை, உங்களிடம் என்றுமே நான்  அவதானித்ததில்லை! பழிவாங்கும் ஒரு மனநிலை மட்டுமே என்றுமே தலைதூக்கி நிற்கின்றது! புலிகள் மற்றக் குழுக்களைப் பழிவாங்கினார்கள் என்று அடிக்கடி ஆதங்கப்படும் உங்கள் எழுத்துக்களிலும், அதே பழிவாங்கல் தானே மேலோங்கி நிற்கின்றது! மற்றவர்களை மதிக்காத, ஒரு 'மேட்டுக்குடி' மனப்பான்மையே உங்கள் கருத்துக்களில் எப்போதுமே பிரதி பலிக்கின்றது! உங்களை நீங்களே ஒரு 'மேதாவி' என்றும் கருதும் வரைக்கும், உங்கள் 'தேடல்' ஒரு நாளும் முற்றுப்பெறப் போவதில்லை!

சிலருக்கு தங்களை பற்றி குறை யாரும் சொன்னால் பிடிக்காது அப்படிதான் புலிகளுக்கு தங்களில் யாரும் பிழை சொன்னால் பிடிக்காது .சேர்ந்து போராட போன புளொட் விட்ட பிழைகளையே எழுதுபவர்கள் நாங்கள்  . புலிகள் விட்ட பிழைகளை சொன்னால் புலிகளை  பழி வாங்குவதாக உங்களுக்கு தெரிகின்றது .ஏனெனில் தாமும் தமது இயக்கமும் தலைவனும் அப்பழுக்கற்றவர்கள் என்று நிறுவ நிற்கின்றார்கள் .

புலி ஆதரவாளர்களினது கிழே உள்ள  இந்த உதாரணம் ஒன்றே போதும் ."ஆயுதங்களை மௌனித்தோம்". இதை விட கேவலம் உலகில் எதுவுமில்லை .இதே மனப்பாங்கில் வாழ பழகியவர்களுக்கு  உண்மைகள் கசக்கத்தான் செய்யும் .இப்படி பேச எழுத எனக்கு தெரியாது அதில் தான் வருகின்றது பிரச்சனை .

அநீதி என்பது எந்த உருவத்தில் வந்தாலும் போராட வேண்டும் .

சிங்கள அரசிற்கு எதிராக போராட என்று புறப்பட்ட இயக்கங்கள் அநியாயங்கள் செய்தால் அதற்கு எதிராகவும் போராடவேண்டியது அவசியம் . இந்த விடயத்தில் தான் எனக்கு புளோட்டிலும் முரண்பாடு வந்தது புலிகளிலும் முரண்பாடு தொடருது .

நான் முட்டையில் மயிர் பிடுங்கி நியாயம் நீதி பார்க்கவில்லை .மிக பாரதூரமான அனாவசிய தவிர்க்க கூடிய பிழைகளை முடிந்தவரை எதிர்த்தே வந்தேன் .

நீங்கள் என்னை எந்த சொல் கொண்டும் அழைக்கலாம் . என்னை, என்னை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை .லண்டனிலோ ,கனடாவிலோ ,ஆஸியிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இருக்கும் எமது பழைய தோழர்களை தாரளமாக விசாரித்து பார்க்கலாம்.

நேற்று கூட ஐங்கரநேசனின் ஏழாம் ஊழி புத்தக வெளியிட்டு விழாவிற்கு போயிருந்தேன் .அங்கு முதலில் பேசிய இருவரும்  (பொன்னையா விவேகானந்தன் ,மேலின் இமானுவேல் )  வெறுமன மேலோட்டமாக பொய்யாக வெறும் கைதட்டலுக்கு  பேசுபவர்கள்  .ஆழமாக எதுவித புலமையும் அவர்களிடம் இல்லை .அதுவும் மேலின் கார்த்திகை பூ பற்றி ஒரு பெரும்கதை விட்டார் .இது தான் அசல் தமிழனின் குணம் .

அடுத்து பேசிய சேரன் பலருக்கு உறைத்தாலும் மிக நிதர்சனமான பல உண்மைகளை சொன்னார் .எமது அரசியலும் தொட்டார் உலக அரசியலும் தொட்டார் .

மேற்குலகுகள் தமது பொருளாதார தேவைக்காக கனிமங்கள் சுரண்டுவதற்காக எப்படி மூன்றாம் உலக நாடுகளில் இனப்படுகொலைகளை கூட ஊக்கிவிற்கின்றன

கனேடிய கொன்சவேட்டிவ் அரசின் மிக பார தூரமான சுற்று சூழலுக்கு எதிரான கொள்கைகள் ,தமிழன் என்பதற்காக கொன்சவேட்டிவில் தேர்தலில் நிற்பவரை ஆதரிக்க சொல்பவர்களை பார்த்து நாசிகளில் சேர்ந்து தமிழன் தேர்தலில் நின்றாலும் வாக்கு போட சொல்வீர்களோ ?

தமிழர் பிரதேசங்களில் உள்ள ஊர்களின் பெயர்கள் எப்படி  பாரம்பரியமாக இயற்கையுடன் தொடர்புபட்டவை என்பதை விளக்கி பின்னர் இப்போ தமிழ் நாட்டில் இருப்பது போல எமது பிரதேசங்களிலும் ஜெயந்தி நகர் ,திலீபன் நகர் என்று வந்துவிட்டது என்று ஒரு குட்டு வைத்தார் .

  • கருத்துக்கள உறவுகள்
என்னை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை .லண்டனிலோ ,கனடாவிலோ ,ஆஸியிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இருக்கும் எமது பழைய தோழர்களை தாரளமாக விசாரித்து பார்க்கலாம்.

பிரச்சனையே இங்கே தான் இருக்கிறது அர்ஜுன்! :D

. என்னை, என்னை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

புங்கை இதுதான் நான் எழுதிய வசனம் .முதல் ஒரு சொல்லை விட்டு அதன் அர்த்ததையே மாற்றி விட்டீர்கள் .

இது உண்மையானவர்களுக்கும் போலிகளுக்கும் நடக்கும் ஒரு போராட்டம் .

யாழ் நிர்வாகத்திடம் கேட்கவும் நான் ஒரு நாளும்  வேறு பெயரில் வரவில்லை .சுத்து மாத்து செய்யவில்லை .

புலி புலி என்று கத்துபர்களுக்கு நூறு முகம் ஆயிரம் அடையாளங்கள் . இங்குதான் நீங்கள் தோற்றுபோகின்றீர்கள்  புங்கை . இவர்கள் உண்மையானவர்கள் அல்ல .

பொயட்டும் மீரா பாரதியும் தொடர்ந்து சொன்ன விடயமது .அடையாளம் இல்லாமல் மொட்டை கடிதம் எழுதுபர்கள் தான் யாழில்  அதிகம் .

யாழில அதிகம் அலட்டும் ஒருவர் எதையும் ஒரு சொட்டும் இழக்காமல்  தேசிய வேடம் போடுகின்றார்  இதை புரியும் அறிவும் பக்குவமும் பலரிடமில்லை .பலர் பார்ப்பது தேசிய வேடம் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டில் செய்வது அதுதான் அதை விளங்க்காவதற்கு நான் பொறுப்பில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகுகள் தமது பொருளாதார தேவைக்காக கனிமங்கள் சுரண்டுவதற்காக எப்படி மூன்றாம் உலக நாடுகளில் இனப்படுகொலைகளை கூட ஊக்கிவிற்கின்றன

?

.

இது எல்லாம் தெரிந்த பின்பும் நாங்கள் மேற்குலகை விட்டு தாய்நாட்டுக்கு செல்லவில்லையே....இங்கிருந்து மேர்குலக குடிவகைகளை ருசி பார்கின்றோம்.....எங்களுக்கு மேற்குலக வாழ்க்கை வேணும் அதேநேரம் சோசலிசமும் கதைக்க வேணும்....இதில் நானும் அடக்கம்....

  • கருத்துக்கள உறவுகள்

. என்னை, என்னை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

புங்கை இதுதான் நான் எழுதிய வசனம் .முதல் ஒரு சொல்லை விட்டு அதன் அர்த்ததையே மாற்றி விட்டீர்கள் .

இது உண்மையானவர்களுக்கும் போலிகளுக்கும் நடக்கும் ஒரு போராட்டம் .

யாழ் நிர்வாகத்திடம் கேட்கவும் நான் ஒரு நாளும்  வேறு பெயரில் வரவில்லை .சுத்து மாத்து செய்யவில்லை .

புலி புலி என்று கத்துபர்களுக்கு நூறு முகம் ஆயிரம் அடையாளங்கள் . இங்குதான் நீங்கள் தோற்றுபோகின்றீர்கள்  புங்கை . இவர்கள் உண்மையானவர்கள் அல்ல .

பொயட்டும் மீரா பாரதியும் தொடர்ந்து சொன்ன விடயமது .அடையாளம் இல்லாமல் மொட்டை கடிதம் எழுதுபர்கள் தான் யாழில்  அதிகம் .

யாழில அதிகம் அலட்டும் ஒருவர் எதையும் ஒரு சொட்டும் இழக்காமல்  தேசிய வேடம் போடுகின்றார்  இதை புரியும் அறிவும் பக்குவமும் பலரிடமில்லை .பலர் பார்ப்பது தேசிய வேடம் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டில் செய்வது அதுதான் அதை விளங்க்காவதற்கு நான் பொறுப்பில்லை .

அர்ஜுன் உண்மையில் உங்கள் வசனத்தை வெட்டிக்குறைத்து அர்த்தத்தை மாற்றும் எண்ணத்தில் நான் அதைச் செய்யவில்லை! தவறுக்கு வருந்துகின்றேன்! :o

உங்கள் கருத்துக்களையும் கவனதிலெடுக்கின்றேன்! நன்றிகள்!

. என்னை, என்னை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

புங்கை இதுதான் நான் எழுதிய வசனம் .முதல் ஒரு சொல்லை விட்டு அதன் அர்த்ததையே மாற்றி விட்டீர்கள் .

இது உண்மையானவர்களுக்கும் போலிகளுக்கும் நடக்கும் ஒரு போராட்டம் .

யாழ் நிர்வாகத்திடம் கேட்கவும் நான் ஒரு நாளும்  வேறு பெயரில் வரவில்லை .சுத்து மாத்து செய்யவில்லை .

புலி புலி என்று கத்துபர்களுக்கு நூறு முகம் ஆயிரம் அடையாளங்கள் . இங்குதான் நீங்கள் தோற்றுபோகின்றீர்கள்  புங்கை . இவர்கள் உண்மையானவர்கள் அல்ல .

பொயட்டும் மீரா பாரதியும் தொடர்ந்து சொன்ன விடயமது .அடையாளம் இல்லாமல் மொட்டை கடிதம் எழுதுபர்கள் தான் யாழில்  அதிகம் .

யாழில அதிகம் அலட்டும் ஒருவர் எதையும் ஒரு சொட்டும் இழக்காமல்  தேசிய வேடம் போடுகின்றார்  இதை புரியும் அறிவும் பக்குவமும் பலரிடமில்லை .பலர் பார்ப்பது தேசிய வேடம் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டில் செய்வது அதுதான் அதை விளங்க்காவதற்கு நான் பொறுப்பில்லை .

பொய்யட்டும் மீராபாரதியும் வெளியே தெரிவதால் உண்மையானவர்கள் என அருச்சுன் நிரூபித்து தனது PhDயை இன்னொரு படி முன்னால் கொண்டு சென்றிருக்கிறார். இப்படியான அறிஞ்ஞர் கூட்டம் அரசியல் கட்டுரைகள் எழுதி மக்களை முட்டாள்கள் ஆக்குவதால் அல்லவா மகிந்தா  உலகப் பிரசித்தி பெற்ற மனிதனாக ஒரு தடவை தெரியப்பட்டார். 

மீராபாரதிக்கும் அருச்சுனுக்கும் உள்ள ஒற்றுமை புலிகளால் தாக்கப்பட்ட மனநிலையில் இருந்து மீண்டுவந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய முடியாமை. அது நடந்த தாக்குதல் என்ற குண்டுச்சட்டிக்குள் இறங்கி நின்று  குதிரை ஓடிக்கொண்டு தத்துவம் பேசுவது. பொய்யட்டுக்கும் அருசுன்னுக்கும் உள்ள ஒற்றுமை விலாசம் தேடுவது.  அருச்சுனின் இந்த விலாசம் தேடும் குணத்தால் மறைந்திருந்து எழுதுபவர்கள் மீது அவருக்கு பலத்த சந்தேகம். மறைந்திருந்து புகழை தவிர்ப்பவர்கள், மனிதர்களா, இரவில் ஒழிந்து வாழும் திருடர்களா, அல்லது ரோபேட்டுக்களா என அவர் வியப்பதுண்டு.

அருச்சுன் சம்பந்தர், விக்கினேஸ்வரன் போன்றோர் சிங்கள அரசின் தாக்கத்தால் அழிக்கப்படவில்லை என்பதால் அரசியல் செய்ய தகுதி இல்லாதவர்கள் என விவாதிக்கிறார். இது, பரந்த சிந்தனை இல்லாத, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடும் அவரின் அரசியல் PhD  சிந்தனைகள் மட்டுமே. உலக தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த மார்க்ஸ் எப்போதும் நல்ல நிலையில் இருந்தார், அவர், தான் ஜேர்மன் முதலாளிகளால் தாக்கப்பட்டதால் வந்த மன உலைச்சலால் "பொருளாதார பெறுமது உடல் உழைப்பால் வருவது" என்ற தத்துவத்தை முன வைக்கவில்லை. அருசுனின் மனம் புலிகளால் தாக்கப்பட்டதால் நேர் பாதையில் இருந்து விலத்தியது.

நான் வாழ்க்கையில் பட்ட கஸ்டங்களை வைத்து சிந்தித்து உலக வாழ்கையின் பொருளைக் கண்டறிய முயன்றதுண்டு. ஆனால் கஸ்டங்கள் எனது பாதையை மாற்றி, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற வாழ்கை வாழும் மனிதனாக மாற்ற முடியவில்லை. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.