Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!!

Featured Replies

வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!!

kite+in+jaffna.jpg

யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். .சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதற்கு இறங்கி விடுவார்கள்.

IMG0537A.jpg

இங்கு விடப்படும் பட்டங்களின வகைகளின் பெயரைக் கேட்டால் உங்களுக்குச் சில வேளை சிரிப்பு வரலாம். உதாரணத்திற்கு பிராந்து/ பிராந்தன் (பருந்து), கொக்கு, வௌவால், பாராத்தை, படலம்/ படலன், வட்டாக்கொடி, தாட்டான், பாம்புப் பட்டம்/ பாம்பன் பட்டம், மீன் பட்டம், மணிக் கூட்டுப் பட்டம், பெட்டிப் பட்டம், சாணை, எட்டு மூலைப் பட்டம், ஆள் பட்டம்,  என பட்டங்களின் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அது மட்டமல்ல பட்டத்திற்கு பயன்படும் நூல் வகைகளும் பலவாறு வித்தியாசப்படும். உதாரணத்திற்கு தையல் நூலில் இருந்து தங்கூசி நூல்,நைலோன் நூல்,கொர்லோன் நூல்/ ஈர்க்குப் பிரி இழை, என பல்வேறு பட்ட நூல்களைப்பயன்படுத்துவார்கள். தென்னோலை ஈர்க்கில் இருந்தும் மூங்கில், கமுகு (பாக்கு மரம்) மற்றும் பனை மட்டை போன்றவற்றிலிருந்தும் எடுக்கப்படும் பொருட்களே பட்டம் கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது.

அத்துடன் பயன்படுத்தும் அத்தனை துண்டங்களிலும் அளவுப் பிரமாணம் இருக்க வேண்டும். பட்டங்கள் கட்டுவதும் கிட்டத்தட்ட விமானப் பொறியியல் போல மிக நுணுக்கமாக கட்ட வேண்டியிருக்கும். இவையெல்லாம் பட்டம் பற்றிய செய் முறைகள் மட்டுமே. அதற்கான பொருட்களைப் பெறுவதானால் அது பெரும் பாடாகும். ஈர்க்குத் தேவையானால் களவாகத் தான் தென்னை மரங்களில் ஏறி ஓலை வெட்ட வேண்டும். எத்தனை நாளைக்குத் தான் வீட்டு விளக்குமாறில் இருந்து களவாக முறித்துத் தப்புவது.

Imraan0469.jpg

மூங்கில் வெட்டுவதானால் பொலிஸ் அனுமதி வேண்டும். அதை களவாக வெட்டுவதற்காக வீட்டுக்காரனை ஏமாற்றி போதாத குறைக்கு பொலிசையும் ஏமாற்றி கொண்டு வந்து பிளந்து காய வைத்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதை விட மிகவும் சிரமமானது கமுகம் தடி பெறுவது. அதற்காக ஒரு பாக்கு மரத்தை வெட்ட வேண்டியிருக்கும். ஆனால் வெட்டப் பட்ட மரத்தை காய வைத்து எடுப்பதென்றால் அடுத்த தைப்பொங்கல் வந்துவிடும். அதனால் ஒரு பெரும் திட்டத்தை கையாளுவோம். திருவெம்பாவைக் காலங்களில் யாருடைய வேலிகளில் கமுகம் தடி இருக்கிறதோ அவரது வீட்டின் முன்னால் காலை 3 மணிக்கே எமது சங்கூதல், சேமக்கலம் அடித்தல் ஆரம்பமாகும்.

ஆனால் அவர்கள் எழும்பி விட்டுப் படுத்துவிடுவார்கள். மீண்டும் ஒரு 4 மணி போல வந்து அடிப்போம்.ஆனால் இம் முறை ஆட்களை திசை திருப்புவதற்காக வேறு சங்கும் வேறு சேமக்கலமும் அடிப்போம். இது 3 நாள் தொடரும் 4 ம் நாள் 3 மணிக்கு ஊத மாட்டோம் அந்த அன்று அவர்கள் வேலி வெறிச்சோடிவிடும். எம்மைக் கேட்டால் நாங்கள் இன்று உங்கள் வீட்டுப் பக்கம் வரவில்லை என்போம். அதன் பின் 4 மணிக்கு ஊதுபவர்கள் யாரேன தேடுதல் ஆரம்பமாகும். அந்த நாளன்று பிற்பகல் அவர்களது வேலி வானத்தில் நிற்கும். ஹே...ஹே..

இப்போது அநேக வீடுகள் மதில்களாகி விட்டதால் அதிகளவானோர் பனை மட்டைகளையே நாடுகின்றோம். இந்த இரவு நேரத்தில் கூட விசைத் தடிகளை (விண் கூவுதல்) ஏந்திக் கொண்டு காது கிழிக்கும் ஓசையுடன் மட்டுமல்லாது மின் குமிழ்களையும் தாங்கிக் கொண்டு பட்டங்கள் வானை அலங்கரித்திருக்கிறது.

http://www.eelavayal.com/2011/12/blog-post_27.html

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளை மீட்டிச் சென்றது.. இணைப்பிற்கு நன்றிகள் கோம்ஸ்.. :D

அங்கே உள்ள பட்டங்களின் (கொடி என்றும் சொல்லுவார்கள்) வடிவமைப்பை நான் வேறு இடங்களில் கண்டதில்லை. குறிப்பாக அந்தப் பெட்டிக்கொடி..

  • தொடங்கியவர்

உண்மைதான் மாமு நான் அங்கு முனையில் நின்றபொழுது இந்தக் கொடிகளின் அணிவகுப்பைப் பார்த்துச் சொக்கிபோனேன் . நாங்கள் பட்டம் என்றுதான் சொல்லுவோம் . எண்கள் ஊரில் பிராந்து , பாம்பன் , எட்டுமூலை , பெட்டி பட்டங்களே பிரபல்யம் . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

கொக்குப் பட்டம்

2288242884_ca81c233e0_m.jpg

 கொக்குப் பட்டம் செய்யத் தெரிந்தவர்கள் யாராவது செய்முறையை இணைத்துவிடுங்கோ :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குப்பட்டம், மீன், பிராந்து போன்றவை கட்டுவதும் கடினம்.. அவற்றை ஏற்றுவதும் கடினம்.. ஒரே ஒருமுறை ஒரு சின்ன கொக்குப்பட்டம் ஏற்றிய ஞாபகம் உள்ளது.. கட்டுமானம் பெரிய திறமாக இருக்கவில்லை.. ஓரிரு முயற்சிகளுடன் அதன் கதை முடிந்தது.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுமானம் பெரிய திறமாக இருக்கவில்லை..// இப்போதுமா ??? :D

நான் கட்டுவதில்லை.. :D டாடியின் கட்டுமானம் சரியில்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Author: வந்தியத்தேவன்
•7:43 PM
"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள். 

kite_fight.jpg

பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள். 

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பட்டக்கலை இருக்கோ இல்லையோ ஆனால் இதுவும் ஒரு கலைதான். செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப் பனையில் பட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லியிருப்பார். கொக்கர் மாரிமுத்தர் அம்மான் தான் கதாநாயகன் ஆள் கொக்குப்பட்டம் கட்டுவதில் விண்ணன்(கெட்டிக்காரன்). இவருக்கும் பொன்னு ஆச்சிக்கும் நடக்கும் பட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அம்மானுடன் சூலாயுதம் என்ற வேலாயுதம் என்கிற பொடியன் சேர்ந்து செய்யும் ரகளைகள் அலம்பல் காசியின் வில்லத்தனம் என ஒரு மண்ணின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். செங்கை ஆழியான்.

பட்டத்தில் பல வகைகள் உண்டு. 

கடதாசிப் பட்டம் :
சாதாரண கடதாசிப் பட்டம் சில இடங்களில் இதனை வாலாக்கொடி என்பார்கள். இதனை உருவாக்க ஈர்க்கும் சாதாரண கடதாசி அல்லது ரிசூப் பேப்பர் போதும்.ஆரம்ப கால சிறுவர்கள் பெரும்பாலும் ஏற்றுவது இதுதான். சாதாரண தையல் நூல் இதற்க்குப் போதும் பட்டத்தில் வாலாக பழைய பருத்திச் சீலைகள் சறம் அல்லது சாரம்(கைலி) போன்றவற்றின் துண்டுகள் வாலாகப் பயன்படுத்தப்படும். இதற்க்கு விண் பூட்டமுடியாது. 

நான்குமூலைப் பட்டம் :
சில இடங்களில் படலம் அல்லது பெட்டிப்பட்டம் என அழைப்பார்கள். ஒரு செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். இதனை பனைமட்டையை இணக்கி இல்லையென்டால் மூங்கில் தடிகளை இணக்கி செய்வார்கள். ரிசூப்பேப்பரில் விதம்விதமான டிசைன் போட்டு ஒட்டுவார்கள். இதன் மேற்பக்கத்தில் விண் பூட்டுலாம். வாலாக கயிறுபயன்படுத்தப்படும். சிறிய ஒரு அடிக்கு ஒரு அடி சைஸிலிருந்து ஆளுயர சைஸ்வரை செய்யமுடியும். சைஸைப் பொறுத்து நூலின் தடிப்பும் மாறும். கூடுதலாக நைலோன் நூலே பயன்படுத்தப்படும். பட்ட ஏற்றலில் விண்ணர்களான சில சிறுவர்களும் பல பெரிய ஆட்களும் ஏற்றுவார்கள். பட்டத்தின் சைசுக்கு ஏற்ப ஏற்றுபவர்களின் மவுசு கூடும். அதிலும் ஒருவன் நல்ல சத்தமுள்ள‌ விண் பூட்டி தன்னைவிட உயரப்பட்டம் ஏற்றினால் அவந்தான் அந்த வட்டாரத்தில் ஹீரோ.

கொக்குப் பட்டம் :
கொக்கைப்போல் வடிவம் உடையது. பெரும்பாலும் மூங்கில் கொண்டு செய்யப்படும். இதற்க்கும் விண் பூட்டமுடியும். கொக்குப்பட்டத்திற்க்கு வால் பெரும்பாலும் தேவைப்படாது. அழகான குஞ்சங்கள் எல்லாம் வைத்து செய்தால் வானில் பறக்கும் போது மிகவும் அழகாகவும் இருக்கும். எல்லாரும் இலகுவில் செய்யமுடியாது. கொக்கர் மாரிமுத்தர் போல் கொக்குப் பட்டம் கட்ட தனித் திறமை வேண்டும். சில இடங்களில் ரெடிமேட்டாக செய்து விற்பார்கள். அதனை வாங்கி ஏற்றும் சிறுவர்கள் உண்டு.

பிராந்துப் பட்டம் :
பருந்தையே நம்ம ஊரில் பிராந்து என்பார்கள். பிராந்து வடிவத்தில் செய்யப்படும் பட்டம் இதுவும் எல்லோராலும் செய்யமுடியாது. மூங்கில் கொண்டே வடிவமைக்கப்படும். விண் பூட்டலாம். கொக்குப்பட்டம் போல் அழகானது. 

எட்டுமூலை :
நட்சத்திரப்பட்டம் எனவும் சொல்வார்கள். எட்டுமூலைகள் இருப்பதால் இந்தப்பெயர். 

இதனை விட வேறு வகைகள் இருந்தால் தெரிவிக்கவும். படங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. முற்றத்து ஒற்றைப் பனையிலிருந்து ஸ்கான் பண்ணித்தான் போடவேண்டும்.

பட்டக் கலையில் பாவிக்கப்படும் சில் அருஞ்சொற்கள்.

விண் : 
விண் என்பது "கொய்ங்ங்ங்" என்ற சத்தத்தை கொடுக்கும் பனை ஓலை நாரில் செய்யப்பட்ட ஒரு ஒலிஎழுப்பி. சிலர் பார்சல்கள் கட்டிவரும் பிளாஸ்டிக் நாரிலும் செய்வார்கள். சிம்பிளான விண் என்றால் யூரியா பாக்கிலிருக்கும் (உரம் வரும் பை)அந்த மெல்லிய நைலோன் நாரையும் பாவிப்பார்கள். விண்ணை மட்டையில் கட்டி பார்ப்பதற்க்கு வில்லுப்போல இருக்கும் இரண்டு தொங்கல் பக்கத்திலும் இரண்டு கட்டைகள் போட்டு பின்னர் அதனை கொக்குப் பட்டத்துடனோ இல்லை நான்குமூலையுடனோ எட்டுமூலையுடனோ இணைத்து ஏற்றுவார்கள். சிலகாலம் விண் பூட்டி ஏத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது காரணம் குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் கேட்காது அல்லது விமானச் சத்தத்தை விண் பூட்டிய பட்டம் என சனம் சும்மா இருப்பார்கள் என்றபடியால். 

முச்சை கட்டுதல் :
பட்டத்திற்க்கு முக்கியமான ஒரு செயல்பாடு. பட்டத்தை நூலுடன் சாதாரணமாக தொடுத்துவிட முடியாது. இதற்காக ஒரு ஸ்பெசல் செயல்தான் முச்சைகட்டுதல். பட்டத்தின் ஒரு தொங்கலையும்(அந்தம்) இன்னொரு தொங்கலையும் நூலினால் இணைத்தல். கொக்குப்பட்டம் நான்குமூலை எட்டுமூலை போன்றவற்றிற்கு இன்னொருவகையான முச்சை கட்டப்படும். சாதாரண முச்சை மூன்று முச்சை நான்கு முச்சை என பல வகை உண்டு. 

பட்டம் தொடுத்தல் :
ஒரு பட்டத்தின் பின்னால் இன்னொரு பட்டம் தொடுத்தல். இப்படி பல பட்டங்களை தொடுக்கமுடியும். எங்கட ஊரிலை என் நண்பன் ஒருவன் ஆகக்கூட 10 பட்டம் தொடுத்து ஒரு பொங்கலுக்கு ஏற்றினான். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

லைட்பூட்டி ஏற்றுதல். 
இரவு வேளைகளில் பட்டத்தில் நூலில் சிலர் பட்டத்திலையே பற்றரி அல்லது மின்சாரம் துணைகொண்டு விதம்விதமான கலர் லைட்ஸ் போடுவார்கள். அழகாக இருக்கும். பற்றரி என்றால் பட்டத்துடன் இணைத்திவிடலாம். மின்சாரம் என்றால் வயரும் நூலுடன் சேர்த்துக் கட்டப்படும். மின்சாரத்தில் ஏற்றுதல் கொஞ்சம் ஆபத்தானது காரணம் தற்செயலாக பட்டம் இரவில் அறுத்துக்கொண்டு போனாலோ அல்லது படுத்துவிட்டாலோ அது விழுகின்றபகுதி மக்களுக்கு மின்சாரம் தாக்கும் ஆபத்து உண்டு. 

அறுத்துக்கொண்டுபோதல் :
பட்டம் பாரம் தாங்கமுடியாமல் அல்லது காற்று அதிகமாகி சில நேரத்தில் அறுத்துக்கொண்டுபோய்விடும். சிறந்த உதாரணம் சர்வம் படத்தில் நம்ம திரிஷா இப்படி அறுத்துக்கொண்டுபோன பட்டத்தின் நூல்பட்டுத்தான் இறந்துபோவார். சிலவேளைகளில் அடுத்த ஊரில் கூட பட்டம் அறுத்துக்கொண்டுபோய் விழும். சில பனை தென்னை மரங்களில் தொங்கிப்போய்விடும். திரும்ப எடுப்பது கஸ்டம். 

பட்டம் படுத்தல் :
இரவு வேளைகளில் பட்டத்தை ஏற்றிவைத்திருக்கும்போது காற்று குறைந்துவிட்டால் பட்டம் அப்படியே தரைக்கு வந்துவிடும். இதுவே பட்டம் படுத்தல் எனப்படும். 

பருத்தித்துறையில் பொங்கல் நேரம் பட்டம் விடும் போட்டி நடத்தப்படும். முனைக் கடற்கரையில் பாக்கு நீரிணையின் அருகில் இந்தப்போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டகாலம் தொடங்கினால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் பலதரப்பட்ட பட்டங்களும் நூலும் வீதியோரக் கடைகளில் விற்கப்படும். 

பட்டம் பற்றி நம்ம கானா அண்ணை எழுதிய பதிவு ஒன்றும் இருக்கின்றது. 
பட்டம் விட்ட அந்தக் காலம்

பட்டத்தைப் பற்றி இவ்வளவு விபரமாக எழுதியபடியால் என்னைப் பட்டதாரி என நினைக்கவேண்டாம். இதுவரை சாதாரண கடதாசிப் பட்டம் மட்டுமே ஏற்றியிருக்கின்றேன். என் மாமாக்களும் சித்தப்பாக்களும் இதில் விண்ணர்கள். எத்தனையோ விழுப்புண்கள் கூட பட்டத்தினால் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த அனுபவமே இது.
 
  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு ,பிராந்தனுக்கு வால்  கட்டுவதில்லை . வின் சரியாகக் கட்டி விட்டால் விடிய,விடியக் கூவும். நாங்கள்  யாழ் இந்து  மைதானத்தில்தான் பட்டம் விடுவது வழக்கம். :D  

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருமுறை இராக்கொடி விட்டு அது அடுத்த ஊரில் படுத்திட்டுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த ஒருவர் விட்ட பட்டம் அறுத்துக் கொண்டு சென்றுவிட்டது

ஒரு மாதிரி மோப்பம் பிடித்துப் பட்டம் விழுந்த காணியைக் கண்டுபிடித்து

வேலியால் உள்ள இறங்கிவிட்டார்.

காணிக்குள் கிணத்தில் குளித்துக் கொண்டிருந்த

பெண் போட்ட சத்தத்தில் கூட்டம் கூடிவிட்டது.

பிறகென்ன பட்டமும் கிழிஞ்சு அவற்றை முதுகும் கிழிஞ்சுது :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு, பிராந்து போன்றவற்றை நல்ல காற்று வீசாத நேரங்களில் ஏற்றுவது கடினம்.. இதற்கு செந்திரிக்கம்(??) எனும் முறை மிகவும் பயன்படும்.. அதாவது ஏற்கனவே ஏற்றிக்கட்டிய ஒரு கொடியின் நூலில் ஒரு வளையத்தைக் கட்டிவிட வேண்டும்.. (நூலின் முடிவுக்குக் கிட்டவாக)

அந்த வளையத்துக்குள்ளால் மற்றப் பட்டத்தின் நூலை விட்டு எடுக்க வேண்டும்.. இப்போது ஏற்கனவே ஏற்றிய பட்டத்தின் நூலை இளக்கினால் வளையமும் மேலே ஏறும்.. அது புதிய பட்டத்தையும் தூக்கிக்கொண்டு போகும்.

மேல் காற்று பிடிக்கத்தொடங்க புதிய பட்டம் பறக்க ஆரம்பித்துவிடும்.. அப்போது பழைய பட்டத்தின் நூலை வலித்து வளையத்தைக் கழட்டிவிட வேண்டும்..

இப்படி விஞ்ஞான ரீதியில் பட்டம் விட தெரிந்த ஆட்கள்தான் நம்மாக்கள்.. :D

ஒத்துகொள்ளுறன் நீங்கள் பட்டம் விடுகிறதிலை பேய் காய் எண்டு :lol::D:icon_idea: .

நானறிந்த மட்டில் பிராந்தன் தான் மிக கஸ்டமானது. கொக்கன் கீழ்பக்கம் நீட்டாக இருப்பதால் அதுவும் காற்றில் நிறுதிட்டமாக எழுந்து பறக்கும். ஆனால் பிராந்தன் கொடிக்கு வாலும் இருக்கது. கீழ்பக்கமும் பெரிதாக இருப்பதில்லை. எனவே கொடியை கீழே திரும்பி வந்து குத்தாமல் இருக்க மிக அனுபவமான கைகளால் மட்டும்தான் சமன் செய்ய முடியும். இறக்கைகளை பின்னால் வளைப்பதும் அடுத்த சிக்கலானா விடையம். அதில் விண்ணும் கட்டுவதாயின் சமநிலை கணிப்புகள் ராக்கெட் சயன்ஸ் ஆகிவிடும். 

கீழ்பக்கம் கனதி குறைவாக அமைக்கப்படுவது, கொடியை மெல்லிய காற்றிலும் பறக்க வைக்கும். மேலும் காற்று திசை திரும்பும் போது அதன் இறக்கைகள் கொடி நின்றாடும் திசையை மாற்றி கொடிக்கு வேண்டிய மேல் நோக்கிய உந்து சக்தியை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கும். இதானால் சிறிய பிராந்தன் கொடிகளும் பாரிய வீண்களை தூக்கிக்கொண்டு லாவகமாக விண்ணில் எழுவதை பார்த்திருக்கிறேன்.

 தட்டையாக அமையும் கொடிகளால் நேராக மட்டும் ஏற முடியும்.  அதிலும் வால்க் கொடிகள் பக்ககத்துக்கு அசைய சிரமப்படும். ஆனால் பின் வளைந்த இறக்கைகளை உடைய பிராந்தன் மட்டும் காற்றின் சின்ன திசை திரும்பலுக்கும் இருமருங்கும் ஆட தொடங்கும்.

இவ்வளவு கஸ்டப்பட்டு அமைத்தால் அது வானத்தில் ஏறிநின்று அழகு மயில் ஆட்டம் போடும் போது பட்ட கஸ்டம் பறந்து போய்விடும். அழகாக சோடித்திருந்தால்  இது பார்பதற்கு  ஒய்யார நங்கை ஒருத்தி தேரில் ஏறி வேண்டுமென்றே கேளிக்கை காட்டுவது போன்று இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு ,பிராந்தனுக்கு வால்  கட்டுவதில்லை . வின் சரியாகக் கட்டி விட்டால் விடிய,விடியக் கூவும். நாங்கள்  யாழ் இந்து  மைதானத்தில்தான் பட்டம் விடுவது வழக்கம். :D  

ஒருமுறை, ஒரு எட்டு மூலைப்பட்டம், இந்துக்கல்லூரி மைதானத்தில் விழுந்ததால், ஒரு உலக மகா யுத்தமே ஏற்பட இருந்தது! :o

புங்கையினதும், அவரது நண்பர்களினதும், சாமர்த்தியமான சமாதானப் பேச்சுவார்த்தையால், அது தவிர்க்கப்பட்டது! :huh:

கோணாந்தோட்டத்தார் விட்ட பட்டம், (போயிங் 747 அளவு) மைதானத்தில் விழுந்தபோது, அதே நேரத்தில், நாவாந்துறையார் விட்ட பட்டமும் காணாமல் போய் விட்டது! இரண்டு பகுதியினரும் விழுந்த பட்டத்தைத்   தேடிச் சைக்கிள்களில் வந்து ஒரே நேரத்தில் சேர்ந்தனர்! இரண்டு பட்டமும் ஒரு மாதிரித் தான் என்று அவர்கள் உரிமை கோர, எந்தச் சீமேந்துப்பேப்பர் பாவிக்கப்பட்டது என்று நாங்கள் கேட்க, நாவாந்துறையார் 'காங்கேசன் சீமந்து' என்று சொல்லவும், பட்டம் 'தமான்னா' சீமந்துப்பேப்பரால் செய்யப்பட்டதால், கோணாந்தோட்டத்தாரிடம், பட்டம் ஒப்படைக்கப்பட, வெறும் மூண்டு சோடாப்போத்தல் சேதத்துடன், சண்டை முடிவுக்கு வந்தது! :icon_idea:

  • தொடங்கியவர்

Author: வந்தியத்தேவன்
•7:43 PM
"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள். 

kite_fight.jpg

பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள். 

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பட்டக்கலை இருக்கோ இல்லையோ ஆனால் இதுவும் ஒரு கலைதான். செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப் பனையில் பட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லியிருப்பார். கொக்கர் மாரிமுத்தர் அம்மான் தான் கதாநாயகன் ஆள் கொக்குப்பட்டம் கட்டுவதில் விண்ணன்(கெட்டிக்காரன்). இவருக்கும் பொன்னு ஆச்சிக்கும் நடக்கும் பட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அம்மானுடன் சூலாயுதம் என்ற வேலாயுதம் என்கிற பொடியன் சேர்ந்து செய்யும் ரகளைகள் அலம்பல் காசியின் வில்லத்தனம் என ஒரு மண்ணின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். செங்கை ஆழியான்.

பட்டத்தில் பல வகைகள் உண்டு. 

கடதாசிப் பட்டம் :

சாதாரண கடதாசிப் பட்டம் சில இடங்களில் இதனை வாலாக்கொடி என்பார்கள். இதனை உருவாக்க ஈர்க்கும் சாதாரண கடதாசி அல்லது ரிசூப் பேப்பர் போதும்.ஆரம்ப கால சிறுவர்கள் பெரும்பாலும் ஏற்றுவது இதுதான். சாதாரண தையல் நூல் இதற்க்குப் போதும் பட்டத்தில் வாலாக பழைய பருத்திச் சீலைகள் சறம் அல்லது சாரம்(கைலி) போன்றவற்றின் துண்டுகள் வாலாகப் பயன்படுத்தப்படும். இதற்க்கு விண் பூட்டமுடியாது. 

நான்குமூலைப் பட்டம் :

சில இடங்களில் படலம் அல்லது பெட்டிப்பட்டம் என அழைப்பார்கள். ஒரு செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். இதனை பனைமட்டையை இணக்கி இல்லையென்டால் மூங்கில் தடிகளை இணக்கி செய்வார்கள். ரிசூப்பேப்பரில் விதம்விதமான டிசைன் போட்டு ஒட்டுவார்கள். இதன் மேற்பக்கத்தில் விண் பூட்டுலாம். வாலாக கயிறுபயன்படுத்தப்படும். சிறிய ஒரு அடிக்கு ஒரு அடி சைஸிலிருந்து ஆளுயர சைஸ்வரை செய்யமுடியும். சைஸைப் பொறுத்து நூலின் தடிப்பும் மாறும். கூடுதலாக நைலோன் நூலே பயன்படுத்தப்படும். பட்ட ஏற்றலில் விண்ணர்களான சில சிறுவர்களும் பல பெரிய ஆட்களும் ஏற்றுவார்கள். பட்டத்தின் சைசுக்கு ஏற்ப ஏற்றுபவர்களின் மவுசு கூடும். அதிலும் ஒருவன் நல்ல சத்தமுள்ள‌ விண் பூட்டி தன்னைவிட உயரப்பட்டம் ஏற்றினால் அவந்தான் அந்த வட்டாரத்தில் ஹீரோ.

கொக்குப் பட்டம் :

கொக்கைப்போல் வடிவம் உடையது. பெரும்பாலும் மூங்கில் கொண்டு செய்யப்படும். இதற்க்கும் விண் பூட்டமுடியும். கொக்குப்பட்டத்திற்க்கு வால் பெரும்பாலும் தேவைப்படாது. அழகான குஞ்சங்கள் எல்லாம் வைத்து செய்தால் வானில் பறக்கும் போது மிகவும் அழகாகவும் இருக்கும். எல்லாரும் இலகுவில் செய்யமுடியாது. கொக்கர் மாரிமுத்தர் போல் கொக்குப் பட்டம் கட்ட தனித் திறமை வேண்டும். சில இடங்களில் ரெடிமேட்டாக செய்து விற்பார்கள். அதனை வாங்கி ஏற்றும் சிறுவர்கள் உண்டு.

பிராந்துப் பட்டம் :

பருந்தையே நம்ம ஊரில் பிராந்து என்பார்கள். பிராந்து வடிவத்தில் செய்யப்படும் பட்டம் இதுவும் எல்லோராலும் செய்யமுடியாது. மூங்கில் கொண்டே வடிவமைக்கப்படும். விண் பூட்டலாம். கொக்குப்பட்டம் போல் அழகானது. 

எட்டுமூலை :

நட்சத்திரப்பட்டம் எனவும் சொல்வார்கள். எட்டுமூலைகள் இருப்பதால் இந்தப்பெயர். 

இதனை விட வேறு வகைகள் இருந்தால் தெரிவிக்கவும். படங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. முற்றத்து ஒற்றைப் பனையிலிருந்து ஸ்கான் பண்ணித்தான் போடவேண்டும்.

பட்டக் கலையில் பாவிக்கப்படும் சில் அருஞ்சொற்கள்.

விண் : 

விண் என்பது "கொய்ங்ங்ங்" என்ற சத்தத்தை கொடுக்கும் பனை ஓலை நாரில் செய்யப்பட்ட ஒரு ஒலிஎழுப்பி. சிலர் பார்சல்கள் கட்டிவரும் பிளாஸ்டிக் நாரிலும் செய்வார்கள். சிம்பிளான விண் என்றால் யூரியா பாக்கிலிருக்கும் (உரம் வரும் பை)அந்த மெல்லிய நைலோன் நாரையும் பாவிப்பார்கள். விண்ணை மட்டையில் கட்டி பார்ப்பதற்க்கு வில்லுப்போல இருக்கும் இரண்டு தொங்கல் பக்கத்திலும் இரண்டு கட்டைகள் போட்டு பின்னர் அதனை கொக்குப் பட்டத்துடனோ இல்லை நான்குமூலையுடனோ எட்டுமூலையுடனோ இணைத்து ஏற்றுவார்கள். சிலகாலம் விண் பூட்டி ஏத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது காரணம் குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் கேட்காது அல்லது விமானச் சத்தத்தை விண் பூட்டிய பட்டம் என சனம் சும்மா இருப்பார்கள் என்றபடியால். 

முச்சை கட்டுதல் :

பட்டத்திற்க்கு முக்கியமான ஒரு செயல்பாடு. பட்டத்தை நூலுடன் சாதாரணமாக தொடுத்துவிட முடியாது. இதற்காக ஒரு ஸ்பெசல் செயல்தான் முச்சைகட்டுதல். பட்டத்தின் ஒரு தொங்கலையும்(அந்தம்) இன்னொரு தொங்கலையும் நூலினால் இணைத்தல். கொக்குப்பட்டம் நான்குமூலை எட்டுமூலை போன்றவற்றிற்கு இன்னொருவகையான முச்சை கட்டப்படும். சாதாரண முச்சை மூன்று முச்சை நான்கு முச்சை என பல வகை உண்டு. 

பட்டம் தொடுத்தல் :

ஒரு பட்டத்தின் பின்னால் இன்னொரு பட்டம் தொடுத்தல். இப்படி பல பட்டங்களை தொடுக்கமுடியும். எங்கட ஊரிலை என் நண்பன் ஒருவன் ஆகக்கூட 10 பட்டம் தொடுத்து ஒரு பொங்கலுக்கு ஏற்றினான். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

லைட்பூட்டி ஏற்றுதல். 

இரவு வேளைகளில் பட்டத்தில் நூலில் சிலர் பட்டத்திலையே பற்றரி அல்லது மின்சாரம் துணைகொண்டு விதம்விதமான கலர் லைட்ஸ் போடுவார்கள். அழகாக இருக்கும். பற்றரி என்றால் பட்டத்துடன் இணைத்திவிடலாம். மின்சாரம் என்றால் வயரும் நூலுடன் சேர்த்துக் கட்டப்படும். மின்சாரத்தில் ஏற்றுதல் கொஞ்சம் ஆபத்தானது காரணம் தற்செயலாக பட்டம் இரவில் அறுத்துக்கொண்டு போனாலோ அல்லது படுத்துவிட்டாலோ அது விழுகின்றபகுதி மக்களுக்கு மின்சாரம் தாக்கும் ஆபத்து உண்டு. 

அறுத்துக்கொண்டுபோதல் :

பட்டம் பாரம் தாங்கமுடியாமல் அல்லது காற்று அதிகமாகி சில நேரத்தில் அறுத்துக்கொண்டுபோய்விடும். சிறந்த உதாரணம் சர்வம் படத்தில் நம்ம திரிஷா இப்படி அறுத்துக்கொண்டுபோன பட்டத்தின் நூல்பட்டுத்தான் இறந்துபோவார். சிலவேளைகளில் அடுத்த ஊரில் கூட பட்டம் அறுத்துக்கொண்டுபோய் விழும். சில பனை தென்னை மரங்களில் தொங்கிப்போய்விடும். திரும்ப எடுப்பது கஸ்டம். 

பட்டம் படுத்தல் :

இரவு வேளைகளில் பட்டத்தை ஏற்றிவைத்திருக்கும்போது காற்று குறைந்துவிட்டால் பட்டம் அப்படியே தரைக்கு வந்துவிடும். இதுவே பட்டம் படுத்தல் எனப்படும். 

பருத்தித்துறையில் பொங்கல் நேரம் பட்டம் விடும் போட்டி நடத்தப்படும். முனைக் கடற்கரையில் பாக்கு நீரிணையின் அருகில் இந்தப்போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டகாலம் தொடங்கினால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் பலதரப்பட்ட பட்டங்களும் நூலும் வீதியோரக் கடைகளில் விற்கப்படும். 

பட்டம் பற்றி நம்ம கானா அண்ணை எழுதிய பதிவு ஒன்றும் இருக்கின்றது. 

பட்டம் விட்ட அந்தக் காலம்

பட்டத்தைப் பற்றி இவ்வளவு விபரமாக எழுதியபடியால் என்னைப் பட்டதாரி என நினைக்கவேண்டாம். இதுவரை சாதாரண கடதாசிப் பட்டம் மட்டுமே ஏற்றியிருக்கின்றேன். என் மாமாக்களும் சித்தப்பாக்களும் இதில் விண்ணர்கள். எத்தனையோ விழுப்புண்கள் கூட பட்டத்தினால் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த அனுபவமே இது.

இணைப்புக்கு மிக்க நன்றி நுணா .

பட்டம்விட்டுத் திரிந்த அந்த பசுமையான காலங்களை மறக்கமுடியுமா கோ...!???

அந்தக் காலம் மீண்டும் வருமா என்பது சந்தேகமே....!?

இணைப்புக்கு மிக்க நன்றி கோ :)

  • தொடங்கியவர்

நானறிந்த மட்டில் பிராந்தன் தான் மிக கஸ்டமானது. கொக்கன் கீழ்பக்கம் நீட்டாக இருப்பதால் அதுவும் காற்றில் நிறுதிட்டமாக எழுந்து பறக்கும். ஆனால் பிராந்தன் கொடிக்கு வாலும் இருக்கது. கீழ்பக்கமும் பெரிதாக இருப்பதில்லை. எனவே கொடியை கீழே திரும்பி வந்து குத்தாமல் இருக்க மிக அனுபவமான கைகளால் மட்டும்தான் சமன் செய்ய முடியும். இறக்கைகளை பின்னால் வளைப்பதும் அடுத்த சிக்கலானா விடையம். அதில் விண்ணும் கட்டுவதாயின் சமநிலை கணிப்புகள் ராக்கெட் சயன்ஸ் ஆகிவிடும். 

கீழ்பக்கம் கனதி குறைவாக அமைக்கப்படுவது, கொடியை மெல்லிய காற்றிலும் பறக்க வைக்கும். மேலும் காற்று திசை திரும்பும் போது அதன் இறக்கைகள் கொடி நின்றாடும் திசையை மாற்றி கொடிக்கு வேண்டிய மேல் நோக்கிய உந்து சக்தியை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கும். இதானால் சிறிய பிராந்தன் கொடிகளும் பாரிய வீண்களை தூக்கிக்கொண்டு லாவகமாக விண்ணில் எழுவதை பார்த்திருக்கிறேன்.

 தட்டையாக அமையும் கொடிகளால் நேராக மட்டும் ஏற முடியும்.  அதிலும் வால்க் கொடிகள் பக்ககத்துக்கு அசைய சிரமப்படும். ஆனால் பின் வளைந்த இறக்கைகளை உடைய பிராந்தன் மட்டும் காற்றின் சின்ன திசை திரும்பலுக்கும் இருமருங்கும் ஆட தொடங்கும்.

இவ்வளவு கஸ்டப்பட்டு அமைத்தால் அது வானத்தில் ஏறிநின்று அழகு மயில் ஆட்டம் போடும் போது பட்ட கஸ்டம் பறந்து போய்விடும். அழகாக சோடித்திருந்தால்  இது பார்பதற்கு  ஒய்யார நங்கை ஒருத்தி தேரில் ஏறி வேண்டுமென்றே கேளிக்கை காட்டுவது போன்று இருக்கும்.  

உங்கள் அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி மல்லை :) .

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குக் கட்டுவது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை.  கொக்கின் கீழ்ப்பக்கம் (நாங்கள் கு*டி" என்று சொல்லுவோம் :icon_mrgreen: ) கனக்க "சிம்பு" வைக்கவேண்டும். அதைச் சமப்படுத்த விண் போதாட்டி "பெல்லி" வைத்துக் கட்டவேண்டும்.

எங்கள் ஊரில் 4 முழக் கொக்கு ஏத்தி அதை "ஜாடி" ஆடத் தக்க மாதிரி மொச்சை கட்டிவிடுவினம். பனம் நார் விண் அந்தமாதிரிக் கூவும்.

என்னுடைய பட்டம் விடுதல் பற்றி கன காலத்திற்கு எழுத வெளிக்கிட்டது பாதியில கிடக்கு. முடிந்தால் 10 வருடத்திற்குள்ள எழுதி முடிக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

மொ (மு) ச்சைகளில் கனக்க வகை இருக்குது.
 
அரக்கல் மொச்சை - பட்டம் மேலே எழும்பாது கீழ்க்காற்றில் நிக்கும். காத்துக் காணாவிட்டால் விழுந்துவிடும்.

ஆட்ட மொச்சை :  45 - 60 பாகைக்குள் நூல் நிற்கும். பட்டம் இடமும் வலமுமாக ஆடிக்க்கொண்டு மேல்க் காத்தில  நிற்கும். சில நேரம் காத்துக் கூடினால் குத்தத் தொடங்கும். 

அம்மல் மொச்சை - பட்டம் அடிக்கடி அம்மிக் கொண்டு உச்சிக்கு வரும். தலைக்கு மேலே (90 பாகையில்) வந்தால் தொளதொளத்து விழலாம்!
 
அடுத்த ஊர்ப் பட்டம் அறுத்துக் கொண்டு வரவேண்டும் என்று "சூல வைரவா, சுழற்றிக் குத்து" என்று சூலம் கீறி சூலத்தின் நடுவில துப்பிப் போட்டுக் காத்திருந்து, அறுத்துக் கொண்டு வந்த பட்டங்களை ஓடிப் பிடிச்சு எடுத்து புகைக் குடிலுக்குள்ள ஒளிப்பதும் ஒரு சுகம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரைப் பொறுத்த வரை நாங்கள் பட்டம் விட்டது வீதியில் தான்.

50058065rr1.jpg

பாம்பன் பட்டம்.. "சானா" பட்டம் போன்றவை கடைகளில் விற்பினம். ஈர்க்கு மற்றும் ருசு பேப்பர் கொண்டு நாங்களும் கட்டுவதுண்டு. இதனை விட எட்டுமூலைப் பட்டம்.. அது தான் வலுக் கொண்டு பறப்பதாக எண்ணப்படும்..!

பெரிய பட்டங்களில்.. சைக்கிள் ரியுப் விண்.. மற்றும்.. AAA பற்றரியில் மின்குமிழ் ஒளிர விட்டு ஏற்றுவார்கள்... பெரிய அண்ணாமார். அவர்களுக்கு வால் (பட்டத்தின் வால்) பிடிப்பது எங்கட வேலை..! :):lol:

வீதிகளின் குறுக்காக ஓடும் மின்சார வயர்களுக்கு மேலால் நூலை எறிந்து பட்டம் விடத் தயார் செய்வதும்.. சிறுவர்களும் இளைஞர்களும் கூடிவிட்டனர் என்று தகவல் கொடுக்கிறவர்கள் கொடுக்க இந்தியப் படைகள் வந்து சுற்றி வளைக்க.. நாங்கள் மதில் பாய்ஞ்சு வீடுகளுக்கு ஓட.. இப்படிப் பட்டம் விட்ட நினைவுகள் இன்றும்..!

விடுதலைப்புலிகளின் காலத்தில் சுதந்திரமாகப் பட்டம் விட முடிந்தது. ஆனாலும்.. நூல்கள் சரியான விலை..! கொழும்பில் இருந்து அவற்றிற்கும் தடை போட்டு வைச்சிருந்தார்கள் சிங்களவர்கள்..! :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஒருமுறை, ஒரு எட்டு மூலைப்பட்டம், இந்துக்கல்லூரி மைதானத்தில் விழுந்ததால், ஒரு உலக மகா யுத்தமே ஏற்பட இருந்தது! :o

புங்கையினதும், அவரது நண்பர்களினதும், சாமர்த்தியமான சமாதானப் பேச்சுவார்த்தையால், அது தவிர்க்கப்பட்டது! :huh:

கோணாந்தோட்டத்தார் விட்ட பட்டம், (போயிங் 747 அளவு) மைதானத்தில் விழுந்தபோது, அதே நேரத்தில், நாவாந்துறையார் விட்ட பட்டமும் காணாமல் போய் விட்டது! இரண்டு பகுதியினரும் விழுந்த பட்டத்தைத்   தேடிச் சைக்கிள்களில் வந்து ஒரே நேரத்தில் சேர்ந்தனர்! இரண்டு பட்டமும் ஒரு மாதிரித் தான் என்று அவர்கள் உரிமை கோர, எந்தச் சீமேந்துப்பேப்பர் பாவிக்கப்பட்டது என்று நாங்கள் கேட்க, நாவாந்துறையார் 'காங்கேசன் சீமந்து' என்று சொல்லவும், பட்டம் 'தமான்னா' சீமந்துப்பேப்பரால் செய்யப்பட்டதால், கோணாந்தோட்டத்தாரிடம், பட்டம் ஒப்படைக்கப்பட, வெறும் மூண்டு சோடாப்போத்தல் சேதத்துடன், சண்டை முடிவுக்கு வந்தது! :icon_idea:

அதென்ன தாமன்னா சீமேந்துப் பேப்பர் ??

அவ அந்த நேரம் மரதாள் பேப்பரை தானாக்கும் சுத்தி ஒட்டுறவ. இப்பத்தான் திணிசு திணிசாகா எல்லாம் போட்டு படமெடுக்கிறாங்க.   

புங்கை அதை கிழித்து கொடிவிடுவார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன தாமன்னா சீமேந்துப் பேப்பர் ??

இதிலொரு 'சோகக்கதை' புதைந்திருக்கின்றது, கோமகன்!

புத்தளத்தில் எப்படியாவது, ஒரு சீமந்துத் தொழிற்சாலை திறந்து விடவேண்டும், என்று அப்போதையை 'ஐக்கிய தேசியக்கட்சி' (?) உறுப்பினரான நயினா மரைக்கார், பிடிவாதமாக நின்றார்.

அதற்காகப் போதுமான சுண்ணாம்புக் கற்கள் அந்தப்பகுதியில் இல்லாத போதும், காங்கேசன்துறையில் இருந்து சுண்ணாம்புக் கற்கள், புத்தளத்துக்குப் புகையிரதமூலம் கொண்டு செல்லப்பட்டு 'தமன்னா சீமந்து' என்ற பெயரில், விலைப்படுத்த்ப் பட்டன! அந்தச் சீமந்துப் பைக்கட்டுகளில் 'தம்மன்னா சீமந்து' என எழுதப்பட்டிருக்கும். புத்தளத்தில், அந்த இடத்தின் பெயர் 'தம்மன்னா' என்று நினைக்கிறேன்.

மல்லைக்குத் தெரிந்திருக்கும், கொஞ்சம் வித்தியாசமான 'செந்நிறமான சீமந்து' அது!

சிமேந்தின் உள்விபரம் தெரியாது. காங்கேசந்துறையிருந்து மூலபொருள்களை அங்கே வேண்டுமென்று மாற்றினார்கள் என்பது தெரியும். அந்த சீமெந்து தரம் குறைவாக இருந்ததாம். அதனால் அதை யாழ்ப்பாணத்தில் மட்டும் விநியோகித்தார்கள். காங்கேசந்துறை சீமெந்தை  தெற்கே அனுப்பிவிடுவார்கள். நிறத்திற்கு காரணம் முருங்கன் கழி போன்ற நல்ல மண் அங்கே இல்லாததால் சிவப்பு க்ழியை உபயோகித்தார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.