Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்

Featured Replies

130721215406_nauru_riot_304x171_getty_no

நவுறுவில் அண்மையில் நடந்த கலவரத்தில் தஞ்சக் கோரிக்கையாளர் தங்குமிடம் தீக்கிரையாகியது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.

ஏற்கனவே நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன் தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பபு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிபிசி தமிழோசைக்கு கூறினார்.

தனது சகோதரர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இரு சகோதரர்களினதும் புகலிட கோரிக்கை மனு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்ட நிலையில் அது தொடர்பான முடிவை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தங்களை நவுறு தீவிலுள்ள வேறு முகாமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அங்கு தொலைபேசி வசதிகள் இருந்தால்தான தொடர்பு கொள்ள முடியும் என்றும் சகோதரர்கள் தெரிவித்திருந்ததாக அப்பெண் குறிப்பிட்டார்.

ஆனால் இதுவரை தொடர்பு இல்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.

53 வயதான தாயொருவர் , தனது மகன் நவுறுதீவில் சென்ற ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தினமும் இரு தடவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்றும் ஆனால் இப்போது தொடர்புகள் இல்லாத இல்லை என்றும் கூறுகிறார். இதனால் உளரீதியாக தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130806_battinauru.shtml

நல்ல விடயம்!
சும்மா தாய்நாட்டை விட்டு ஓடினால் இதுதான் நிலை!!!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ப துண்டிக்காமல் என்ன செய்வான்... 60 மில்லியன் அரச சொத்துக்கள சேதமாக்கின அவைக்கு வாழை இலையில வைச்சா விருந்து பண்ண முடியும்....

  • கருத்துக்கள உறவுகள்

AAP IMAGE: DEPARTMENT OF IMMIGRATION

Nauru police have interviewed the ringleaders of a detention centre riot that caused $60 million in damage and left four people in hospital.

Order has been restored at the detention centre after a peaceful protest quickly escalated into a riot on Friday.

A security guard who does not want to be named says asylum seekers took over the centre, gained access to a kitchen and armed themselves with knives and steel bars.

http://mobile.abc.net.au/news/2013-07-20/asylum-seekers-in-police-custody-after-riot-at-nauru/4832876

நல்ல விடயம்!

சும்மா தாய்நாட்டை விட்டு ஓடினால் இதுதான் நிலை!!!

அவர்கள் தாய்நாட்டை விட்டு சும்மா ஓடினார்கள்? நீங்கள் தாய்நாட்டை சுமந்துகொண்டு ஓடி வந்தீர்கள்? அவரகளின் கவலை உங்களுக்கு நல்ல விடயம்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தாய்நாட்டை விட்டு சும்மா ஓடினார்கள்? நீங்கள் தாய்நாட்டை சுமந்துகொண்டு ஓடி வந்தீர்கள்? அவரகளின் கவலை உங்களுக்கு நல்ல விடயம்?

அவர்கள் அங்கேயிருந்து அடங்கிப்,போராடிச் சாகோணும் நாங்கள் இங்கே சொகுசாய் வாழோணும்

  • கருத்துக்கள உறவுகள்

போற இடத்தில ஒழுங்கா இருக்கா தெரியாட்டி ஏன் ஓடிவருவான்....

 அவர்கள் தாய்நாட்டை விட்டு சும்மா ஓடினார்கள்? நீங்கள் தாய்நாட்டை சுமந்துகொண்டு ஓடி வந்தீர்கள்? அவரகளின் கவலை உங்களுக்கு நல்ல விடயம்?

தப்பி ஓடுகிற விசயத்திலை எல்லாரும் உங்களைப் போலவே ஓடிப்போயிருப்பீனம் என்று நினைப்பதிலேயே சுயரூபம் தெரிகிறது!

இதுக்கு வக்காலத்து வாங்க சில மாற்றுக் கருத்து மாணிக்கங்களும் இருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனுக்கு அகதியா ஓடினவனும், கனடாவுக்கு அகதியா ஓடினவனும், வடமாகாணத்துத் தேர்தலில நிக்கலாமெண்டால், அவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுத்த நாடுகளுக்கும், அதற்காகக் குரல் கொடுக்கும் புலம் பெயர் தமிழருக்கும், செருப்பால அடித்த செயல் போல, ஒருவருக்கும் தெரியவில்லையா?  :o

இப்போது நடப்பது ஒரு 'ஆட்கடத்தல்' வியாபாரம்! இதனுள், சில உண்மையான அகதிகளும் இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை!

விடிகாலை ஆறுமணிக்கு, 'பெண்டல் ஹில்' புகையிரத நிலையத்தின் வாங்குகளில் 'நிறை வெறியில்' படுத்துக் கிடந்து கொண்டு, போற வாற வெள்ளையளுக்கும், ஊரவருக்கும் 'கமெண்ட்ஸ்' அடித்துக் கொண்டிருந்தால், இவர்கள் மீது எவருக்கு 'அனுதாபம்' வரும்? :icon_mrgreen:

மன்னிக்கணும் புங்கை இதே நிலை இங்கேயும்  உண்டு .ஆனால் தப்பி ஓடிவந்த நீங்களும் நானும் அங்கே எல்லாம் இழந்து நிற்பவர்களைப் பார்த்து 

இங்கே வராதே என்று சொல்ல முடியாது .(உங்களை பெரிதும் மதிப்பவன் நான் எதிர்  கருத்து வைத்தமைக்கு மன்னிக்கவும் )

Edited by நந்தன்

உண்மை தான், நந்தன்!

எல்லா இடமும் இந்த நிலை உண்டு தான்! ஆனால் முந்தி பத்திலை ஒன்றாக இருந்தது, இப்ப பத்தில அஞ்சாப் போட்டுது! :o  

லண்டனைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் சிட்னி வர வர மோசம்! அதனால் தான் கடுமையாக விமரிசிக்க வேண்டி வந்தது! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாறதுகள் எல்லாம் ஒழுங்கான உயர் ஜாதிதமிழனா இருந்தாலும் பருவால்ல.... காடை கூட்டங்கள் தானே வருது...

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் அரசாங்கத்திற்காக கதைத்ததிற்காக நன்றி புங்கை  அண்ணா மற்றும் சுண்டல். அரச சொத்துக்களுக்கு நெருப்பு வைத்தவர்களுக்கு மனுஸ்  தீவுதான் சரி. PNG வெயிலில காய்ந்தாதான் மூளை மண்டையோட ஓட்டும். இப்படித் தொடர்பு கொள்பவர்கள் தான் இங்க எல்லாம் அந்த மாதிரி, காசு தாரான், சாப்பாடு தாரான் எண்டு ஊரில இருக்கிற சனத்துக்கு புளுகிறது. அதுகளும் இவங்களின்ட கதைய நம்பி கானியப் பூமிய அடைவு வச்சு ஆக்கள ஓட்ட வள்ளத்தில அனுப்புறது. ஆனால் இந்த திமிர் பிடிச்ச வேலை செய்தவர்களில் அநேகர் இரானியர்கள் மற்றும் ஆப்கானியர்கள்.

போன மார்கழி சிட்னி விமான நிலையத்தில் எனது உறவினர்கள் சிலரை ஏத்தப் போனபோது இப்பிடியான ஒரு காடைக் கோஷ்டி (தோடுகள், இத்துப்போன டெனிம், கலர் கலரா தலைமயிர், நாய்ச்சங்கிலி) போறவாற சனத்தோட தனகிக்கொண்டு இருந்திச்சு. AFP இட்ட public nuisace எண்டு சொல்லி கலைச்சிருக்க வேணும். என்ன செய்ய, தமிழருக்கும் எனக்கும் தொடர்பே இல்லாதமாதிரி கடந்து போய்விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியானதுகள பாவம் பாத்து விட கூடாது மச்சி AFP கிட்ட சொல்லி இருக்கணும்....

சிங்களவனிடம் தான் நியாயம் கேட்க வேண்டும் வெள்ளையனிடம் அடங்கி இருக்க வேண்டும் என்கின்றீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எங்கள் நிலத்தில் எங்களை அடக்கிறான். அவனிடம் நியாயம் கேட்கும் தார்மீக உரிமை எமக்குண்டு. வெள்ளைக்காரன் மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் வழங்குகிறான். அதனை துஷ்பிரயோகம் செய்து கொண்டு அவனிடம் எந்த வகையில் நியாயம் கேட்கும் உரிமையை தக்க வைக்க முடியும்..?????????????!

ஒரு அடிப்படையே இல்லாமல் சிலர் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது வேடிக்கையாக உள்ளது. :)

வாறதுகள் எல்லாம் ஒழுங்கான உயர் ஜாதிதமிழனா இருந்தாலும் பருவால்ல.... காடை கூட்டங்கள் தானே வருது...

சுண்டலின் ஒரு கருத்தோடு உடன்பாடில்லை.

தாயகத்தில்  உயர் சாதி தமிழன்.. கீழ் சாதி தமிழன் என்று எல்லாம் பார்த்து சிங்களவன் அடிக்கல்ல. தமிழன் என்று தான் அடித்தான். மேலும் மேற்கு நாடுகளின் மனிதாபிமான அக்கறை என்பது.. உயர் சாதி தமிழனுக்கே எலிஜிபிள் என்று பார்க்கும் குரோதத்தனம் இந்தக் கருத்தில் தொனிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மனிதாபிமானத்தின் முன் பாதிக்கப்பட்ட அனைத்து மனிதர்களும் சமன்..! அரசுகளின் மனிதாபிமான சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்கள் அக்கறையோடு பாவிக்க முற்பட வேண்டும். அந்நிய இடத்தில்.. அவர்கள் காட்டும் சலுகைகளில்.. அளவுக்கு அதிகமாகப் பெற ஆசைப்படக் கூடாது. கிடைப்பதைப் பெற்று தங்களை தற்காத்துக் கொள்வதை விட்டு சண்டித்தனம் செய்வதை நாங்களும் கண்டிக்கிறோம். அது எந்த வகை மக்களாக இருந்தாலும் சரி. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் முந்தியொருக்கால் என்னோடை சண்டைபிடிக்கேக்கை  "தோட்டக்காரங்களெல்லாம் வெளிநாடு வரவெளிக்கிட்டால்"........எண்டு கனக்க பேசி சண்டை பிடிச்சவர்.தம்பிக்கு அப்ப இருந்த தமாசு இப்பவும் இருக்கு :lol:  :D

மண்ணாங்கட்டி மனிதாபிமானம் .இப்பவும் குயினுக்கு ---------- கழுவிக்கொண்டு இருங்கோ .

அகதிகளாக வருபவர்களும் மனிதர்கள் தான் ,அவர்களை எப்படி கையாளவேண்டும் என்று சட்ட திட்டமெல்லாம் இருக்கு .அவரவர் ஆட்சிகள் மாற  மாற சட்ட திட்டங்களை மாற்றி அரசியல் செய்ய நிற்கின்றார்கள் .

ஆஸிக்கு போன வெள்ளைகளே அங்கு அத்து மீறி குடியேறியவர்கள் தான் .

என்ன சிலவருடங்களுக்கு முதல் சென்று குடியேறியவர்களுக்கு இப்போ வருபவர்களை பார்க்க வெறுப்பாகத்தான் இருக்கும் .லண்டனில் நான் கண் கூடாக பார்த்தவை இவை .

ஏனோ தெரியாது தமிழாக்கள் எல்லோரும் நினைப்பது தாங்கள் வெள்ளைகாரங்கக்கு அடிமை என்ட மாதிரி அவங்கள் எங்கட நாட்டை சுரண்டினது பத்தாமல் அவங்காளால் தான் நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சனையும்

  • கருத்துக்கள உறவுகள்

வாறதுகள் எல்லாம் ஒழுங்கான உயர் ஜாதிதமிழனா இருந்தாலும் பருவால்ல.... காடை கூட்டங்கள் தானே வருது...

கோபத்தில்   வரும்  வார்த்தைகளையும் 

கவனமாக  பாவிக்கணும்  சுண்டல்

இச்சொல்  எமது   இலக்குக்கு உலை  வைத்துவிடும்.

முதலில்  நாம் 

எம்மை  நோக்கி  நீளும் விரல்களுக்காக

எம்மை   நாமே சுயவிமர்சனம் செய்யணும்

நாகரீகம்

மனிதப்பண்புகள்

படித்தறிவு

பகுத்தறிவு

இவற்றை  எல்லாத்தமிழரும் பெறணும்

அதன்  மூலமே இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படும்  என்று  நினைக்கின்றேன்

மற்றும்படி

அகதி  முகாமில்  என்ன நடந்தது  என்று தெரியாமல்   எவர் மீதும் குற்றம் சொல்லவிரும்பவில்லை.

அர்யூன்  குறிப்பிட்டது போல்

வெள்ளைகள் பிழை  விட்டிருந்தாலும்  தட்டிக்கேட்கணும்

ஏனெனில்   அகதி  மற்றும்   நிவாரணங்களை  ஒருவரும்  தங்கள்   பணத்தில்  தருவதில்லை.

அது  அவர்கள்  கைச்சாத்திட்ட உலகவிதிகளுக்கு அமைவானது.

அதை அவர்களும்  மதிக்கணும்

மதிக்கிறார்களா???????

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணாங்கட்டி மனிதாபிமானம் .இப்பவும் குயினுக்கு ---------- கழுவிக்கொண்டு இருங்கோ .

அகதிகளாக வருபவர்களும் மனிதர்கள் தான் ,அவர்களை எப்படி கையாளவேண்டும் என்று சட்ட திட்டமெல்லாம் இருக்கு .அவரவர் ஆட்சிகள் மாற  மாற சட்ட திட்டங்களை மாற்றி அரசியல் செய்ய நிற்கின்றார்கள் .

ஆஸிக்கு போன வெள்ளைகளே அங்கு அத்து மீறி குடியேறியவர்கள் தான் .

என்ன சிலவருடங்களுக்கு முதல் சென்று குடியேறியவர்களுக்கு இப்போ வருபவர்களை பார்க்க வெறுப்பாகத்தான் இருக்கும் .லண்டனில் நான் கண் கூடாக பார்த்தவை இவை .

அதுக்காக இல்லை, அர்ஜுன்! தமிழ் அகதிகளை, இருகரம் நீட்டி வரவேற்கும் மனப்பக்குவம் நிரம்ப என்னிடம் உண்டு! பல வருடங்களாக, அகதிகள் முகாமுக்கு சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்து, அவர்களுடன் இருந்து அளவளாவி விட்டு வருபவர்களில் நானும் ஒருவனாக இருந்துள்ளேன்! 

திடீரென பின்வரும் தலையங்கங்கள்!

கண் தெரியாத பெண் மீது, புகையிரதத்தில் பாலியல் துன்புறத்தல்....

பலகலைக்கழக மாணவிகள் மீது பாலியல் வன்முறை..

வீடியோ படங்களில், எங்கடை ஆக்கள் தான் நிக்கினம்! இவை சில உதாரணங்கள் மட்டுமே!

இப்போது வருகின்ற கூட்டத்தைப் பற்றிதான் சொல்லுகிறேனே தவிர, மற்றத் தமிழர்கள் வருவதனால் எனக்கொன்றும் பிரச்சனையில்லை! நான் அகதியாக இடம் பெயர்ந்து இங்கு வந்தவனுமில்லை!

இதுக்குமேலயும் ஏதும் எழுத வேண்டுமெண்டால், சந்திக்கிற நேரத்தில இரண்டு தட்டுத் தட்டுங்கோ!! நீங்களும் இன்னுமொரு தமிழன் தானே, பரவாயில்லை! :D

ஆனால் இந்தக் குத்தல் கதைகள் வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருமத்த செய்ததெல்லாம் இலங்கையில் இருந்து வந்து அகதிகள் என்று சொல்லி கொபவர்கள் தான் அதுவும் குறிப்பா அந்த கண்ணு தெரியாத பொண்ணுமேல தன்னோட வக்கிரத்த காட்டினது......

இங்க அகதி என்று சொல்லி படகுல எறிவார கூட்டம் எல்லாம் நீர் கொழும்பு.... பதுளை போன்ற இடங்களில் இருந்து சோ சிங்களவனோட வாழ்ந்து வாழ்ந்து அந்த குணத்த இங்கயும் வந்து காட்டினம்.....

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணாங்கட்டி மனிதாபிமானம் .இப்பவும் குயினுக்கு ---------- கழுவிக்கொண்டு இருங்கோ .

அகதிகளாக வருபவர்களும் மனிதர்கள் தான் ,அவர்களை எப்படி கையாளவேண்டும் என்று சட்ட திட்டமெல்லாம் இருக்கு .அவரவர் ஆட்சிகள் மாற  மாற சட்ட திட்டங்களை மாற்றி அரசியல் செய்ய நிற்கின்றார்கள் .

ஆஸிக்கு போன வெள்ளைகளே அங்கு அத்து மீறி குடியேறியவர்கள் தான் .

என்ன சிலவருடங்களுக்கு முதல் சென்று குடியேறியவர்களுக்கு இப்போ வருபவர்களை பார்க்க வெறுப்பாகத்தான் இருக்கும் .லண்டனில் நான் கண் கூடாக பார்த்தவை இவை .

நான் அகதியாக வரவுமில்லை அகதியாக வருபவர்களில் வெறுப்பும் இல்லை. ஆனால் இவ்வாறு வருபவர்கள் மற்றைய அவுஸ் பிரஜைகளுக்கு, அவர்களின் நாளாந்த வாழ்க்கை, நடை முறைக்கு இடைஞ்சல் தருவது எந்த வகையில் நியாயம்? அவுஸின் ஆதிக் குடியேற்ற வாசிகள் தங்களின் நடவடிக்கைகளுக்கு உத்தியோக பூர்வமாக மன்னிப்பும் கேட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பல வழிகளிலும் முன்னேற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களின் 100 வருடங்களுக்கு முன்னர் நடந்த விடயங்களை தற்போதைய கால கட்டத்துடன் ஒப்பிட முடியாது. நான் யாருக்கும் எதுவும் கழுவவில்லை, ஆனால் நாங்கள் அவர்களை நடத்தும் முறைகளில் இருந்தே அவர்களின் எம்மீதான அபிப்பிராயம் ஏற்றபடுகிறது.  

ஏனோ தெரியாது தமிழாக்கள் எல்லோரும் நினைப்பது தாங்கள் வெள்ளைகாரங்கக்கு அடிமை என்ட மாதிரி அவங்கள் எங்கட நாட்டை சுரண்டினது பத்தாமல் அவங்காளால் தான் நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சனையும்

எல்லாவற்றிற்கும் யார் மீதும் பழிபோட்டு பழகிவிட்டது. இதற்கும் அவர்களையே மாட்டி விடுங்கள். நான் யாருக்கும் அடிமையில்லை, ஆனால் என்னை, எனது கல்வியை, பதவியை மதிப்பவர்களை நானும் மதிக்கிறேன். அவ்வாறு மதிக்க தெரியாதவர்கள்/முடியாதவர்கள் தான் தாழ்வுமனப்பான்மையால் அடிமையாக உணர்கிறார்கள். இப்படியான உணர்வுடன் பலரும் வருவதால் தான் அவுஸ் அரசாங்கத்திற்கும் போதும் போதும் என்று ஆகிவிட்டது. வருபவர்கள், அவுஸ் பொருளாதாரத்தை மேம்படுத்த உழைத்தால், வரி கட்டினால் பறவாயில்லை. Cash in hand வேலை செய்து கொண்டு வரிகட்டாமல் வேலை இல்லாதவர்கள் பெறும் கொடுப்பனவுகளை பெற்றால், அதனால் அவுசிட்கு என்ன லாபம்? ஆக்களை இருத்தி வச்சு சோறு போட இது சத்திரம் அல்ல. அப்பிடித் திண்டவர்கள் திண்டது சேமிக்கச் செய்த வேலை தான் எமக்கு ஏற்றப்பட்ட 60 மில்லியன் இழப்புக்கு காரணம். இப்படி மன நிலை கொண்டவர்களால் தான் மற்றவர்களுக்கும் இழப்பு. 

கோபத்தில்   வரும்  வார்த்தைகளையும் 

கவனமாக  பாவிக்கணும்  சுண்டல்

இச்சொல்  எமது   இலக்குக்கு உலை  வைத்துவிடும்.

முதலில்  நாம் 

எம்மை  நோக்கி  நீளும் விரல்களுக்காக

எம்மை   நாமே சுயவிமர்சனம் செய்யணும்

நாகரீகம்

மனிதப்பண்புகள்

படித்தறிவு

பகுத்தறிவு

இவற்றை  எல்லாத்தமிழரும் பெறணும்

அதன்  மூலமே இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படும்  என்று  நினைக்கின்றேன்

மற்றும்படி

அகதி  முகாமில்  என்ன நடந்தது  என்று தெரியாமல்   எவர் மீதும் குற்றம் சொல்லவிரும்பவில்லை.

அர்யூன்  குறிப்பிட்டது போல்

வெள்ளைகள் பிழை  விட்டிருந்தாலும்  தட்டிக்கேட்கணும்

ஏனெனில்   அகதி  மற்றும்   நிவாரணங்களை  ஒருவரும்  தங்கள்   பணத்தில்  தருவதில்லை.

அது  அவர்கள்  கைச்சாத்திட்ட உலகவிதிகளுக்கு அமைவானது.

அதை அவர்களும்  மதிக்கணும்

மதிக்கிறார்களா???????

மன்னிக்க வேண்டும் அண்ணா. உலக விதிகள் எல்லாம் பேப்பர்ல பார்க்க வடிவாக இருக்கும். தமக்கு தேவை என்று வரும்போது, உந்த விதிகளை சுழித்து  ஓடுவது கடினமானது அல்ல. தற்போதைய புது சட்டத்திற்கு எதிராக முடிந்தால் ஏதாவது மனித உரிமை, அகதிகள் நல அமைப்பு வழக்கு தொடுத்து பார்க்கட்டும். ஐந்து வருசமாக ஐம்பது பேர் உள்ளுக்க இருக்கிறார்கள், யாராவது ஏதாவது செய்ய முடிந்ததா? மற்றயது இவர்களுக்கு செலவழிக்கும் பணம், வரி கட்டும் மக்களினது. எனவே அவர்களின் பணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். அபிவிருத்தி அடைந்த அரசு ஒன்றின் உள்ளக செயற்பாடுகள் தெரிந்தால், இப்படிக் கூற மாடீர்கள் 

புங்கை ,உங்களது ஆதங்கம் எனக்கு புரிகின்றது .இதே ஆதங்கம் எனக்கு இன்றுவரை இருக்கு .

அத்தான் கடை வைத்திருக்கும் இடத்தில் இப்படி ஒரு கோஷ்டியே இருக்கு .தாங்கள் அடிபடும் போது பிடிக்க வந்த போலீஸ்காரனின் விரலை கடித்து துண்டாக்கியவர் ஒருவர் இருக்கின்றார் .நிரந்தர விசா இல்லை ,குடும்பம் இலங்கையில் இங்கு அகதி பணத்தை எடுத்து குடியும் சிகரெட்டும் அடிபிடியும் தான் அவர்கள் வாழ்க்கை ,அவர்களை பார்க்க அனுதாபம் தான் வரும் .வெளிநாட்டு வாழ்க்கையுடன் ஒட்டமுடியாததன்மை தான் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியிருக்கு .

பிரான்சில் யாழ் மத்திய கல்லூரி பிரபல கிரிக்கேட் வீரர் மித்திரன் இதே நிலையில் இருந்து இறந்ததாக அறிந்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.