Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா முக்கிய பங்காற்றியிருந்தது - கோத்தபாய!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதோடு :-தலைவர் தான் சொன்னவர் "எதிரி தான் ஆயுதத்தை தீர்மானிக்கிறான்" எனும் தங்களின் கூற்றில் சொல்லப்பட்டதின் உண்மை யாதெனில் சொன்னவர் மாவோசேதுங்...  தலைவர் கிடையாது... 

போகிற  போக்கில

செப்படம்பர் 11 -  யை  தலைவர் தான் தீர்மானித்தவர் :(  :(   என்றும்  வரலாறு பதியப்படலாம் தல......

போகிற  போக்கில

செப்படம்பர் 11 -  யை  தலைவர் தான் தீர்மானித்தவர் :(  :(   என்றும்  வரலாறு பதியப்படலாம் தல......

அதை ஏற்கனவே சிலர் சொல்லியாச்சேண்ணா... 

புலிகள் கட்டுநாயக்காவை தாக்கியதின் மூலம் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தலாம் எண்டு ஒர் ஐடியாவை குடுதார்கள் எண்டு,...   அதை கொஞ்சம் அழுத்தி தேய்ச்சால் வந்திட்டு போகுது... :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்:

புலிகளது இலட்சியம் என்ன?

அது எப்போ வெற்றியடையும்? 1..10...100...1000000000000000 வருடங்கள்??? :)

இல்லை Mars இல்? :unsure::icon_idea:

இலட்சியம் என்ன என தெரியாமல் ஈரோசில் இருந்தனீங்களோ?? http://youtu.be/-g6yvxIW5E8

இந்த அறிக்கையை விட ஏன் நான்கு ஆண்டுகள் ஆனது இதில் எதோ முக்கியமான உள்நோக்கம் ஒன்று உள்ளது என்பதியே கோத்தபாயவின் அறிக்கை காட்டுகிறது  

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வளர்ச்சியே அமெரிக்காவுக்கு அவர்கள் மேல் காழ்ப்பு உணர்வுவர காரணம் 

அமெரிக்க அரசின் தென்னாசிய நலன்களுக்கு பாதகமான வகையில் செயல்பட்ட காரணத்தாலேயே அமரிக்கா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை. 

முக்கியமாகவும் இறுதியாகவும் இடம்பெற்ற செயற்பாடாக, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை ரணிலை ஆதரிக்குமாறு கேட்காமல் தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு ஆதரவளித்ததன் மூலம் ராஜபக்சவை ஜனாதிபதியாக வர வழி ஏற்படுத்தியது அமெரிக்க நலன்களை தென்னாசியாவில் கடுமையாக பாதித்துள்ளது. இன்று இலங்கையில் இடம்பெற்றுள்ள சீன ஆதிக்கம், ரணில் ஜனாதிபதி ஆகி இருந்தால் நடைபெற்று இருக்காது. இந்த ஆதிக்கம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான இழப்பாகும். விடுதலைப்புலிகளே இதற்கு காரணம் என அமெரிக்கா கருதுவதனாலேயே அமெரிக்கா விடுதலைபுலிகளை இன்றும் அமெரிக்க ஆதரவு அமைப்பாக கருதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
இன்று இலங்கையில் இடம்பெற்றுள்ள சீன ஆதிக்கம், ரணில் ஜனாதிபதி ஆகி இருந்தால் நடைபெற்று இருக்காது.

இதனை எந்த அடிப்படையில் நிச்சயமாக சொல்கின்றீர்கள்?? அல்லது ஒரு அனுமானமா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையை விட ஏன் நான்கு ஆண்டுகள் ஆனது இதில் எதோ முக்கியமான உள்நோக்கம் ஒன்று உள்ளது என்பதியே கோத்தபாயவின் அறிக்கை காட்டுகிறது  

இப்படி சிண்டு முடிவதில் சிங்களவர்களும் வடக்கு இந்தியர்களும் சமாந்தரமாக தான் பயணிக்கிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இதனை எந்த அடிப்படையில் நிச்சயமாக சொல்கின்றீர்கள்?? அல்லது ஒரு அனுமானமா??

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகள் என்றும் அமெரிக்க சார்பாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகள் சீன சார்பு கொள்கைகளாகவும் இருந்ததே வரலாறு. பண்டாரநாயகா நினைவு மண்டபம் சீன சார்பு கொள்கைகளுக்கு நன்றியாக சீனாவால் சிரிமாவோ பண்டாரநாயகவுக்கு கட்டி கொடுக்கப்பட்டது. பண்டாரநாயகா ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை உருவாக்கியவர். ராஜபக்ச ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர். 

GB-bmich.jpg

ஐக்கிய தேசிய கட்சி முதலீட்டு பொருளாதார கொள்கைகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கம்யுனிச சோஷலிச பொருளாதார கொள்கைகளையும் கொண்ட கட்சிகள். அமெரிக்கா முதலீட்டு பொருளாதார கொள்கைகளால் நலன் பெறும் நாடு. சீனா, கம்யுனிச சோஷலிச பொருளாதார கொள்கைகளை பரப்பும் நாடு.

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் தோற்கடிக்க பட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ராஜபக்சே வெற்றி பெற்றது அமெரிக்காவுக்கு பேரிழப்பாகும்.

அமெரிக்க அரசின் தென்னாசிய நலன்களுக்கு பாதகமான வகையில் செயல்பட்ட காரணத்தாலேயே அமரிக்கா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை. 

முக்கியமாகவும் இறுதியாகவும் இடம்பெற்ற செயற்பாடாக, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை ரணிலை ஆதரிக்குமாறு கேட்காமல் தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு ஆதரவளித்ததன் மூலம் ராஜபக்சவை ஜனாதிபதியாக வர வழி ஏற்படுத்தியது அமெரிக்க நலன்களை தென்னாசியாவில் கடுமையாக பாதித்துள்ளது. இன்று இலங்கையில் இடம்பெற்றுள்ள சீன ஆதிக்கம், ரணில் ஜனாதிபதி ஆகி இருந்தால் நடைபெற்று இருக்காது. இந்த ஆதிக்கம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான இழப்பாகும். விடுதலைப்புலிகளே இதற்கு காரணம் என அமெரிக்கா கருதுவதனாலேயே அமெரிக்கா விடுதலைபுலிகளை இன்றும் அமெரிக்க ஆதரவு அமைப்பாக கருதவில்லை.

புலிகளின் கப்பல்களை அமெரிக்கா தாழ்க்கத்தொடங்கியது சந்திரிக்கா காலத்தில். அந்த நேரம் ரணில் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது கப்பல்களின் மையங்களை பிரதமருக்கு தெரியாமல் பிளேக் சந்திரிக்காவிடம் கொடுத்தார். கப்பல்கள் தாழ்ந்த செய்திகளை ரணில் பத்திரிகைகளில் படித்துவிட்டு அதை பாராளுமன்றத்திலும் தெரிவித்து அமெரிக்க தூதுவராலயத்திலும் முறைப்பாடு செய்தார். ரணில் புஸ்சை சந்திக்க முயன்ற தடவைகள் பலமான தோல்விகளை சந்தித்தார். புலிகள் வெளிநாட்டு பயங்கரவாதிகளாக கிளிடன் காலத்தில் அறிவிக்கப்பட்டு,  2001 பின்னர் சரவதேச பயங்கரவாதிகளாக தரம் உயர்த்தப்பட்டார்கள். புலிகள் உடனடியாக கொடுத்த 9/11 அனுதாபச் செய்தியை கவனிக்காமல் தட்டிக்கழித்து, மூன்று நாட்களின் பின்னர் கொடுத்த சந்திரிக்காவின் செய்தியை ஏற்று அமெரிக்க ராஜாங்க அமைச்சு பதில் அளித்தார்கள். லன்ஸ்ரெட் காலத்திலேயே சம்பந்தர் வரைக்கும் வீசா மறுக்கப்பட்ட பயங்கரவாதியாக கணிக்கப்பட்டுவிட்டார். அதாவது அமெரிக்கா தமிழர் முழுப்பேரையும் பயங்கரவாதிகளாக்கண்டது. கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் அனுமதித்தும்அமெரிக்கா தமிழருக்கு அடைக்கலம் மறுக்கும் நாடாக மட்டுமே தொடர்ந்தும் இருந்தது. 

அமெரிக்காவின் தலையீடு காரணமாக புலிகளை தோற்கடிக்க முடியும் நம்பிக்கை SLFP யிடம் இருந்தது. அந்த நேரம் அது UNP யிடம் இருக்கவில்லை. SLFP கூட்டமைப்புடன் வேலை செய்ய விரும்பி, நீலன் போன்றோர் SLFP யுடன் இணைந்து ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்புகள் வரைந்தார்கள். ஆனால் UNP புலிகளுடன் இருப்பதாக காட்டிக்கொண்டு கருணா போன்றவர்களை அணைத்து வைத்திருந்தது. இது அமெரிக்காவுக்கு பிடியாத விடையமாக இருந்தால் தான் போருக்காக செய்துவந்த உதவிகளை ரணிலிடம் மறைத்து வந்தார்கள்.

அமெரிக்கா 2004 ஆண்டு சுனாமியில் JVPயுடன் இணைந்து புலிகள் பக்கம் எந்த பணம் போகாமல் பார்த்தது. தனது பணம் முழுவதையும் அமெரிக்கா தெற்கில் மட்டும்தான் செலவழித்தது. இதை கிளிண்டன் கூட எதிர்த்தார். 

தேர்தல் நேரம் ராஜபக்ஷா பற்றிய உண்மைகளை சந்திரிக்கா அமெரிக்காவுக்கும் வெளிவிட்டா. அமெரிக்காவும் அவவுமாக சேர்ந்து மகிந்தா SLFP இல் அதிபராக வராமல் தடுக்க முயன்றார்கள். ஆனால் அது முடியவில்லை. அவர் SLFP யின் அதிபர் வேட்பாளர் ஆனார். நரியர் நண்பனாக நடித்து புலிகளின் முதுகில் குத்தி கருணாவை பிரித்த கோபத்தால் அவர்கள் ரணிலை ஆதரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தேர்தலை பகிஸ்கரித்தார்கள். மகிந்தா பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதே கதைதான் நடந்திருக்கும். (அது மட்டுமல்ல தேர்தல் நேரம் எந்த மேற்கு நாடும் தனது வெளிப்படையான ஆதரவை ரணிலுக்கு காட்டவும் இல்லை. மகிந்தாவை எதிர்க்கவும் இல்லை. இது வெளிப்படையாக நடந்தது பொன்சேகாவின் தேர்தலில் மட்டுமே - ஜனநாயக நாட்டில் அது நிகழக்கூடாது, தூதுவராலயங்கள் தேர்தலில் தலையிடக்கூடாது.) மகிந்தா பணம் கொடுத்த கதை மங்கள வெளியே வந்த பின்னர் தெரிய வந்த கதை. அதாவது மகிந்தாவுக்கு எதிரான ஒருவரால் வெளிவிடப்பட்ட இரகசியம். இதை மகிந்தாவோ புலிகளோ வெளிவிடவில்லை. ஏற்கனவே மகிந்தாவை நிறுத்த முடியாமல் போனபின்னர் ரணில் என்ற நரியில் குதிரை பந்தயத்திற்கு பணம் கட்டிய பிளேக், இந்த இரகசியம் வெளிவந்த பின்னர், பிரபாகரன் காசு வாங்கிக்கொண்டு தன்னை விழுத்தியதாக முடிவு பண்ணிக்கொண்டு,  200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டியில் எகிலப்பொல எடுத்த முடிவை எடுத்தார்.  அதாவது தனது உறவான எதிரியை நிர்மூலமாக்க தனது முழு எதிரியுடன் கை கோர்ப்பது. இதுதான் பஞ்ச தந்திரத்தில் வரும் குதிரையும் கலைமானும் கதை. பிளேக் வலிய மகிந்தாவின் காலில் போய் விழுந்தார். ரூசிய லும்பும்பா தயாரிப்புக்களான JVPயினரின் வீடுகளுக்கு தனது கௌரவத்தை விட்டு பயணம் போனார். ப்யங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில்லை என்ற கோரிக்கையை கைவிட்டு பிளேக் விமலைப் போய் சந்தித்தார். SLMMமை வெளியேற வைத்தார். சேர்மனி முழு எதிர்ப்பு காட்டியும் EU வை புலிகளை தடுப்பித்தார். எந்த ஒரு பிடியையும் கைக்குள் வைக்காமல் "தன் உடல் ஆவி, பொருள் எல்லாவற்றையும் கொடுத்து" மகிந்தாவின் காலில் சரண் அடைந்தார். 

ஆனால் போர் முடிந்தவுடன் SLFPயும் JVPயும் இணைந்து பிளேக்கின் முதுகில் குத்தினார்கள். அவரை வெளியே போட்டார்கள். சீனா முழுவத்தாக உள்ளே வந்தது. அமெரிக்கா வெளியேற்றப்பட்டது. அவரை மட்டக்களப்பு போன கெலியில் வைத்து முடிக்க முயன்றார்கள். இதானல் மனம் உடைந்த பிளேக் போக இடமில்லாமல் திகைத்தார். பொன்சேக்காவை அமெரிக்காவுக்கு அழைத்து மிரட்டி பணிய வைத்து ரணிலுக்கு எதிராக திருப்பி அவரை UNP யின் வேட்பாளர் ஆக்கினார். பொன்சேக்கா சிறையில் போய் முடிய அவரை வெளியே எடுக்க முடியாமல் போனது. கனடா இலங்கையிடம் ஐ.நா வில் படு கேவலமான தோல்வி கண்டது. தில்லு முல்லுக்கு மேலாக தில்லுமுல்லு ஆடி பிளேக் இறுதியில் தனது ஆட்டங்கள் இலங்கையில் அவியாது என்று கண்டு இன்று கிழக்காசிய பதவிலிருந்து விடுபடுகிறார்.

ஒபாமாவில் அரசில் இருந்த பெண்கள் இலகுவில் இலங்கையால் வாங்கப்பட முடியாமல் போன பின்னர் மெல்ல மெல்ல மனித உரிமைகள் சபையில் மாற்றங்கள் வந்து பொன்சேக்கா வெளியே வந்தார். அவர் உடனே பிரிடெரிக்கா யாண்சினதும், அமெரிக்காவினதும் முதுகில் குத்தின்னார். அமெரிக்கா மட்டுமல்ல, பொன்சேக்கா வெளியே வரும் போது திருந்தி வருவார் என்று நினைத்தவர்களில் நமது யாழ்க்கள உறவு அக்குத கூட ஒருவர். அவர் இறுதி வரைக்கும் பொன்சேக்காவை தமிழர் பக்கம் திருப்ப எதாவது வழிகள் தென்படும் என்று நினைத்தவர்.  ஆனால் சிங்கள இராஜதந்திரத்தில் ஊறிய பொன்சேக்கா, மனித உரிமைகளை பற்றி விசாரிக்க இலங்கை வந்த  நவனீதம் பிள்ளையை கூடத் தாக்கி பேசித்தான் அனுப்பி வைத்தவர்.  

மொத்ததில் புலிகள் தங்கள் பாதையை மாற்றி அமெரிக்காவுக்காக ரணிலை எதிர்க்கவில்லை. புலிகள் தேர்தலை ஆதரிக்கவில்லை. அது அந்த நேரத்து நிலைமையில் தேவை இல்லாதது. அமெரிக்கா வாய்விட்டுக் கேட்காதது. மனதுக்குள் அமெரிக்கா ராஜபக்ஷாவை விரும்பியது. மகிந்தா வந்தால்த்தான் புலிகளை அவரை கொண்டு அடிப்பிக்க முடியும் என்று நம்பினார்கள். இதனால் அமெரிக்க தெரிந்து கொண்டே ரணிலை ஒதுக்கியது. இதில் புலிகளை சாட்ட ஒன்றும் இல்லை. இலங்கையின் முழு பட்ஜட்டையும் விட பெரிய பட்ஜட்டை உலகை உளவு பார்க்க போடும் அமெரிக்கா, இலங்கை மாதிரி சின்ன நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பாதது பிளேக் கால அரசாங்க அமைச்சின் அவமான கரமான நடத்தை. தான் எதிரிகளாக நினைத்து கப்பல்களை  தாழ்த்துக்கொண்டிருந்த புலிகள் தங்களின் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதில் உண்மை இல்லை.

******************************

இப்படியான நக்கல்களை நிர்வாகம் தொடந்தும் கண்டும் காணது போல்விட்டு வைக்கிறது. இதில் என்ன அரசியல் விவாதம் இருக்கிறது? இதை ஏன் நிர்வாகம் நீக்க முடியாது?

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: அது தான் சரியான பாதை... அரசியல் என்றால் ஒரு நெளிவு சுளிவு இருக்கோனும் :)

அதை விட்டு விட்டு வெட்டு ஒன்று..துண்டு இரண்டு என்றால் எப்போதும் சரிவராது... இதை முதலில் இருந்தே செய்திருந்தால் எங்களுக்கு நிறைய (உள்/வெளி) எதிரிகள் உருவாகியிருந்திருக்க மாட்‌டார்கள்...

அப்படின்னு உள்ளுக்குள்ளே நீங்கள்தான் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.
 
சாதியை சொல்லி பார்ப்பான் ஏழை எளியவர்களை என் பூட்டன் காலத்தில் இருந்து இன்று வரை அடித்து கொண்டு தான் இருக்கிறான். 
 
அக்கம் பக்கம் இருப்பவனை அடித்தால்  என்ன லாபம் என்றுதான் பார்கிறான்............
நீங்கள் நெளிகிரீர்களா வளைகிரீர்களா ?
என்று வேஷம் போட்டு நாடக மேடை ஏறினால் நாடக ரசிகர் மட்டுமே பார்ப்பார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசின் தென்னாசிய நலன்களுக்கு பாதகமான வகையில் செயல்பட்ட காரணத்தாலேயே அமரிக்கா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை. 

முக்கியமாகவும் இறுதியாகவும் இடம்பெற்ற செயற்பாடாக, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை ரணிலை ஆதரிக்குமாறு கேட்காமல் தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு ஆதரவளித்ததன் மூலம் ராஜபக்சவை ஜனாதிபதியாக வர வழி ஏற்படுத்தியது அமெரிக்க நலன்களை தென்னாசியாவில் கடுமையாக பாதித்துள்ளது. இன்று இலங்கையில் இடம்பெற்றுள்ள சீன ஆதிக்கம், ரணில் ஜனாதிபதி ஆகி இருந்தால் நடைபெற்று இருக்காது. இந்த ஆதிக்கம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான இழப்பாகும். விடுதலைப்புலிகளே இதற்கு காரணம் என அமெரிக்கா கருதுவதனாலேயே அமெரிக்கா விடுதலைபுலிகளை இன்றும் அமெரிக்க ஆதரவு அமைப்பாக கருதவில்லை.

அப்படி எண்ணு ஐயாதான் நினைக்கிறீங்கோ .............
அதுக்கு முன்பே கப்பல் அடிபட தொடங்கி விட்டது.
ரணிலை வைத்தே இராணுவ படை எடுப்பை திட்டம் தீட்டி கொண்டிருந்தார்கள்.
இதற்குள் மகிந்தவை சொருகினால் திட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றே புலிகள் நினைத்தார்கள். 
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன........?
அது மகிந்தவுடன் பொய் படுத்துக்கொண்டு விட்டது.

அப்போ கேபி காட்டிக் கொடுக்கவில்லையா?

அப்போ கேபி காட்டிக் கொடுக்கவில்லையா?

இது என்ன கூத்துக்கை கோமாளித்தனமான கதையாக இருக்கிறது?

மாறும் அரசியல் சூழ்நிலைகளை பார்த்து  காட்டிகொடுத்தோர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து K.P. யின் தலையில் போட்டுத்தப்பிக்க முயல்கிறார்களா அல்லது, K.P. காட்டிக்கொடுக்கவில்லை என்று வாக்காலத்து வாங்கிக்கொண்டு, அதே போல நாமும் காட்டிக்கொடுக்கவில்லை என்று எண்ணட்டும் என்று விட்டுவைத்துவிட்டு, மாறும் அரசியல் சூழ் நிலைகளுக்கேற்ப தம்மை சுதாகரிக்கிறார்களா?

இலங்கை அரசியல், இன்றைய நிலையில், திட்டவட்டமான, தீர்மான முடிவு ஒன்றை எடுத்து தலைவன் ஒருவனால் நடத்தபட வேண்டிய தள்ளாட்டத்தை காண்கிறது. சரித்திரா சரித்திரத்தில் சிங்கள் மக்களிடம் அப்படியான தலைவன் ஒருவன் பிறந்ததாக மகா வம்சத்தில் இல்லை. 

சிங்கள் அரசு மாற்றுக்கருத்துக்களை வைத்து தொடர்தும், அரசியல் என்ற போர்வையில் வண்டில் சவாரி நடத்துகிறது.

இலங்கை அரசியல் மாற்றுக் கருத்துகளின் இந்த வண்டில் சவாரி நக்கல்களால் காப்பாற்ற தக்க நிலையை கடந்து விட்டது. தமிழ் நாட்டு தேர்தலை வளைத்தெடுக்க,  சுதர்சன நாச்சியப்பன், கருணாநிதியை காலின் கீழ் போட்டுவிட்டு, இலங்கையை இந்தியா கைப்பற்ற வெண்டும் என்று பேசுகிறார்.

மாற்றுக்கருத்துக்கள் வண்டியை போகவிட்டுவிட்டு ஒல்லாந்தர், போதுக்கீசர் காலத்து வண்டில் சவாரி நக்கல்களில் லயித்திருப்பதை பலரும் அவதானிக்கிறார்கள். 

விளங்காத பகுதிகளை நேரே சொல்லி கேட்டால் பலர் விளக்கம் தருவார்கள். அப்போது யாழின் மற்றய ராகெட்கால கருத்தாளர்களை வந்து எட்டிப்பிடிக்க முடியும். அதை விடுத்து இப்படி யாரும் புரியாத இப்படி நக்கல்களை லயித்துக்கொண்டு தொடந்தும் பின்னால் நிற்கத்தான் வேண்டுமா? 
  • கருத்துக்கள உறவுகள்

கே.பி.தான் காட்டிக் கொடுத்தது என்று முன்னர் யாழ். களத்தில் வீரமறவர்கள் களமாக கருத்து எழுதினார்கள். இப்போது கோத்தா அமெரிக்கா என்றவுடன் பலர் கே.பி.யை மறந்துவிட்டனர். நல்ல காலம் சபேசன் நினைவுபடுத்தி உள்ளார்.

எந்தவொரு மடையனாவது சர்வதேச கடற்பரப்பில் 10-12 ஆயுதக்கப்பல்களை நிறுத்திவிட்டு எப்போது முல்லைத்தீவில் கொண்டு போய் தரை இறக்கலாம் என்று காத்திருப்பானா? இவ்வாறு விடுதலைப் புலிகள் காத்திருந்த நிலையில்தான் அமெரிக்கா, இந்தியா உட்பட இந்தோனேசிய கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் காத்திருக்கின்றன எனும் தகவலை போட்டுக் கொடுத்தது.

அடுத்தது, விடுதலைப் புலிகளை அழிக்க இந்திய உள்ளிட்ட மேற்குலகம் தீர்மானிக்க இருந்த பிரதான காரணியாக விளங்கியது விடுதலைப் புலிகளின் வான்படை.

இத்தாக்குதல்களை நிறுத்துமாறு விடுதலைப் புலிகளை அனைத்துலக சமூகம் கேட்டுக்கொண்ட போது விடுதலைப் புலிகள் அது தமது வீரச் செயல் என்று கருதி நிறுத்தாது தம்மாலேயே அழிந்தனர்.

2003-க்குப் பின்னர் கே.பி.யை நீக்கிவிட்டு காஸ்ட்ரோ கும்பல் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு இருந்தது. ஆனால், செப். 11 க்குப் பின்னர் அமெரிக்கா, ரஸ்யா உள்ளிட்டவர்கள் தமது உளவாளிகளை ஆயுத வியாபாரிகள் மத்தியில் இறக்கியது. பாவங்கள் காஸ்ட்ரோ கும்பலுக்கு யார் ஆயுத வியாபாரி யார் உளவாளி என்று தெரியாமலேயே ஆயுதங்கங்களை வாங்கி மாட்டிக்கொண்டனர். அவர்களை கடைசி வெளியிலும் எடுத்துவிட்ட பாடில்லை. சிறைகளுக்குள் உள்ளார்கள்.

நீண்ட காலம் அனுபவம் உள்ளவர்களை தொடர்ந்து பாவிப்பவனே கெட்டிக்காரன். ஆனால், பிரபாகரன் கேட்பார் சொல்லை கேட்டு தாண்டவமாடியதன் விளைவு முள்ளிவாய்க்கால் பரிசாக கிடைத்தது.

மீண்டும், மீண்டும் இவற்றை எழுதத் தூண்டுவதே யாழ். கள வீரமறவர்களின் ஞாபக மறதிதான். அதனை நானும் இடைக்கிடை வந்து நினைவூட்டித்தான் செல்கின்றேன்.

நிர்மலன் மாதிரி இப்ப எல்லாம் நிறைய பேர் ஆளாளுக்கு கொழுத்தி போடுகினம்...

புலிகள் 10- 12 கப்பலை சர்வதேச கடலிலை மாசக்கணக்காய் காத்திருக்க வைச்சு இருந்தவையோ அதுவும் ஆயுதங்களோடை...?? 10 , 12 கப்பலிலை ஆயுதம் வாங்கிற அளவுக்கு முடிந்தது அதை உள்ளை கொண்டு போக புலிக்கு தெரியேல்லை... நீங்கள் DBSJ இல்லை...???

போங்கையா... போய் வேலையை பாருங்கோ... உங்களை மாதிரி எத்தினை பேரை பாத்தாச்சு...

Edited by தயா

பார்த்துக்கொண்டே இருங்கள். திருந்தி கிருந்திப் போடாதீர்கள். பின்னர், உங்கள் ஆன்ம பலத்துக்கு!??? அவமானமாகப் போய்விடும்.

என்ன செய்ய உங்களைப் போன்ற ஆட்களை வைத்துக்கொண்டுதானே விடுதலைப் புலிகள் ஈழம் காண வெளிக்கிட்டவர்கள்.

நல்லா செய்யிறீங்கள்... இதிலை பொய்களை குறைச்சீங்கள் எண்டால் நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கு...

நான் நல்லா விசாரிச்சிட்டன் சின்னவயசிலேயே காது குத்துறதுக்கு நான் விடேல்லையாம்... இப்ப நீங்க குத்தவா விடப்போறன்...??

ஓ... நீங்கள் திருந்திறதை பற்றியா எழுதினீங்கள்... எனக்கு காது குத்துறது எண்டு விளங்கிச்சுது..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்மலன் மாதிரி இப்ப எல்லாம் நிறைய பேர் ஆளாளுக்கு கொழுத்தி போடுகினம்...

புலிகள் 10- 12 கப்பலை சர்வதேச கடலிலை மாசக்கணக்காய் காத்திருக்க வைச்சு இருந்தவையோ அதுவும் ஆயுதங்களோடை...?? 10 , 12 கப்பலிலை ஆயுதம் வாங்கிற அளவுக்கு முடிந்தது அதை உள்ளை கொண்டு போக புலிக்கு தெரியேல்லை... நீங்கள் DBSJ இல்லை...???

போங்கையா... போய் வேலையை பாருங்கோ... உங்களை மாதிரி எத்தினை பேரை பாத்தாச்சு...

புல்லுருவிகளின் அட்டகாசம் தாங்க முடியலை. ஒட்டுக்குழு நிர்மலனே.. 10 கப்பலை சர்வதேச கடலில் ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்தால் ஒவ்வொன்றாக அழிந்து இருக்குமே.. புலிகள் என்ன எட்டாம்பு படிச்ச ஆக்கள் என்றா நினைக்கிறீர்கள்? அரசாங்கம் அழித்தததாக சொல்லும் கப்பல்கள் ஊரார் கப்பல்கள். தயாவுக்கு காது குத்த நினைக்காதீர் எட்டப்பனே.. தமிழர்கள் என்றால் ஏதோ முட்டாள்கள் என்று நினைப்பதை முதலில் விடும்.

புலிகளிடம் 10 கப்பல்கள் இருக்கவில்லை. இருந்தாலும் அவை தாழவில்லை. தாண்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் நிற்கவும் இல்லை.. அதில் ஆயுதங்கள் இருக்கவும் இல்லை. சரித்திரம் தெரியாமல் உளறாதீர். காது எங்களுடையது. குத்த அனுமதி இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன கூத்துக்கை கோமாளித்தனமான கதையாக இருக்கிறது?

மாறும் அரசியல் சூழ்நிலைகளை பார்த்து  காட்டிகொடுத்தோர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து K.P. யின் தலையில் போட்டுத்தப்பிக்க முயல்கிறார்களா அல்லது, K.P. காட்டிக்கொடுக்கவில்லை என்று வாக்காலத்து வாங்கிக்கொண்டு, அதே போல நாமும் காட்டிக்கொடுக்கவில்லை என்று எண்ணட்டும் என்று விட்டுவைத்துவிட்டு, மாறும் அரசியல் சூழ் நிலைகளுக்கேற்ப தம்மை சுதாகரிக்கிறார்களா?

இலங்கை அரசியல், இன்றைய நிலையில், திட்டவட்டமான, தீர்மான முடிவு ஒன்றை எடுத்து தலைவன் ஒருவனால் நடத்தபட வேண்டிய தள்ளாட்டத்தை காண்கிறது. சரித்திரா சரித்திரத்தில் சிங்கள் மக்களிடம் அப்படியான தலைவன் ஒருவன் பிறந்ததாக மகா வம்சத்தில் இல்லை. 

சிங்கள் அரசு மாற்றுக்கருத்துக்களை வைத்து தொடர்தும், அரசியல் என்ற போர்வையில் வண்டில் சவாரி நடத்துகிறது.

இலங்கை அரசியல் மாற்றுக் கருத்துகளின் இந்த வண்டில் சவாரி நக்கல்களால் காப்பாற்ற தக்க நிலையை கடந்து விட்டது. தமிழ் நாட்டு தேர்தலை வளைத்தெடுக்க,  சுதர்சன நாச்சியப்பன், கருணாநிதியை காலின் கீழ் போட்டுவிட்டு, இலங்கையை இந்தியா கைப்பற்ற வெண்டும் என்று பேசுகிறார்.

மாற்றுக்கருத்துக்கள் வண்டியை போகவிட்டுவிட்டு ஒல்லாந்தர், போதுக்கீசர் காலத்து வண்டில் சவாரி நக்கல்களில் லயித்திருப்பதை பலரும் அவதானிக்கிறார்கள். 

விளங்காத பகுதிகளை நேரே சொல்லி கேட்டால் பலர் விளக்கம் தருவார்கள். அப்போது யாழின் மற்றய ராகெட்கால கருத்தாளர்களை வந்து எட்டிப்பிடிக்க முடியும். அதை விடுத்து இப்படி யாரும் புரியாத இப்படி நக்கல்களை லயித்துக்கொண்டு தொடந்தும் பின்னால் நிற்கத்தான் வேண்டுமா? 
 
அண்ணை போத்துக்கீசர், ஒல்லாந்தர், அரிக்கன் லாம்பு... எல்லாத்தையும் விடுங்கோ.. கே.பி. காட்டிக்குடுத்தாரா? இல்லையா? என்றில்லோ அந்த மனுஷன் கேட்டது? ஓம் அல்லது இல்லை சொன்னா எங்களுக்கும் விளங்குமே!

Edited by sabesan36

அண்ணை போத்துக்கீசர், ஒல்லாந்தர், அரிக்கன் லாம்பு... எல்லாத்தையும் விடுங்கோ.. கே.பி. காட்டிக்குடுத்தாரா? இல்லையா? என்றில்லோ அந்த மனுஷன் கேட்டது? ஓம் அல்லது இல்லை சொன்ன எங்களுக்கும் விளங்குமே!

கோத்தா அதை பற்றி இன்னமும் ஒன்றும் சொல்லவில்லையா? அப்போ அவர் என்ன சொல்லவருகிறார். K.P. காடிக்கொடுக்கவில்லை; அத்னால் அமெரிக்காவுக்கு சிரியாவிடம் இரசாயன ஆயுதம் இல்லையா இருக்க என்று தடுமாறுகிறதென்றா சொல்கிறார். 

நீங்கள் வெறும் சோறு மட்டும்தான் சாப்பிட்டுப் பழக்கமா அல்லது அதனுடன் கறிகளும் சேர்த்து சாப்பிடுவீர்களா? சாப்பிட சபைக்கு  போனால், யாரவது கறிகள் வைத்தால் ஒதுக்கிவைத்துவிட்டு நான் வேறும் சோறுமட்டும்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பீர்களா?

இப்போ K.P காட்டிகொடுத்தார் என்று சொன்னால் அமெரிக்கா கப்பலைகளை தாக்க உதவியது என்று கோத்தா சொன்னது பொய்யாகிவிடுமா? அந்த தர்கத்தை எப்படி வருகிறது என்று சபேசன் சொல்லவருகிறார் என்றதை எழுதி விளங்கவைக்க முடியுமா?

அண்ணை.. உங்களோட போனில கதைச்சால்தான் எங்களுக்கு விளங்கும் போல இருக்கு. “அண்ணையும் கருத்து சொல்லியிருக்கிறார்” என்று எடுத்துக் கொள்வோம்.

Edited by sabesan36

அண்ணை.. உங்களோட போனில கதைச்சால்தான் எங்களுக்கு விளங்கும் போல இருக்கு.

அதிலை பிரச்சணை இல்லை. வளரக்கு முதல் எழுதவாசிக்கப் பழகிவிடுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் கோத்தா என்ன சொல்கிறார் என்றதையும் வாசித்து  புரிந்து கொள்வீர்கள்.

கோத்தாமதிரி ஐன்ஸ்டின்கள் எழுதுவதை படித்துவிட்டு பல மாண்வர்கள் தங்களுக்கும் விளங்குவதாக நினைக்கிறார்கள். ஆனல் வகுப்பு வாத்தியார் கரும்பலகையில் ஒரு சின்னக் கணக்கு போட்டால் நன்றாகத்தான் தடுமாறிப்போகிறார்கள். இதைதான் கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதா குருக்கள் வானம் ஏறி வைகுண்டம் போகும் பாதை காட்டும் மஜிக்.

சபேசனின் துளாவராத்தை அவருடன் விட்டிருக்கலாம்.  தெருவிலை கிடக்கிறதெல்லாவற்றையும் தொட்டு மணந்து தன் மூக்கை பழுதாகத்தான் வேண்டுமா?  

உங்களுக்கு தொலை பேச இலக்கம் தேவையாயின் அதை நிர்வாகத்துடன் பேசி முடித்துக்கொள்ளவும். என்ன்னுடைய கருதுக்கு பதில் எழுதக்கூட்டது. அதை வடிவாக நினைவில் வைத்துகோண்டு அடுத்த நப்பாசை கருத்தை வைக்கவும்

“அண்ணையும் கருத்து சொல்லியிருக்கிறார்” என்று எடுத்துக் கொள்வோம்.

சம்பளத்திலை துண்டுவிழும். அப்படி எல்லாம் எழுதுவது நல்லத்தல்ல.

150,000 மக்கள் இறந்த போதும் உங்களுக்கு ஒரு தலைவிதி இருந்ததுதானே. எனவே இப்போது அதிகம் கவலைப்படாதீர்கள். 

அமெரிக்கா கோத்தாவுக்கு இரகசியமாக காட்டிக்கொடுத்தது. இப்போது கோத்தா அதை பரகசியமாகி அமெரிக்காவை நெளிக்கும் போது வலியை பொறுத்துக்கொண்டு அடியை வாங்குகிறது.

வண்டில் சில்லுத்துதான் வாழ்க்கை. நீங்கள் உலகத்தை புரிந்துகொள்ள நிறைய இருக்கிறது என்பதை எழுதுக்கள் காட்டுகிறது.

Jude உம் மல்லையும் கொஞ்சம் (நிறைய :) ) விடயம் தெரிந்த ஆட்கள் (Scholars & Gentlemen)போலுள்ளது...உங்களது வரலாறை (படிப்பு/வேலை/எப்படி இந்த விடயங்களில் அறிவு வந்தது என்று) கொஞ்சம் சொல்ல முடியுமா (without personal info)

 மிச்ச ஆட்கள் எல்லாம் ஒரு உணர்ச்சி வேகத்தில் கதைக்கிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.