Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதே மயங்காதே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொலீசுக்கு எல்லாம் போய் நித்தியாவால் அலைய முடியுமா?...என்னைப் பொறுத்த வரை ஒருவர் குற்றவாளி என்று தெரிஞ்சும் பேசாமல் இருக்கின்ற நித்தியா போன்றவர்களும் குற்றத்திற்கு உடந்தை தான்
 
மனசு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் அல்லது மனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இப்படியான நிலைமை தான் ஏற்படும் :(
  • கருத்துக்கள உறவுகள்

பொலீசுக்கு எல்லாம் போய் நித்தியாவால் அலைய முடியுமா?...என்னைப் பொறுத்த வரை ஒருவர் குற்றவாளி என்று தெரிஞ்சும் பேசாமல் இருக்கின்ற நித்தியா போன்றவர்களும் குற்றத்திற்கு உடந்தை தான்

மனசு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் அல்லது மனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இப்படியான நிலைமை தான் ஏற்படும் :(

உளவியல் ரீதியான அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்கிற கோணத்தில் காவல்துறை ஆராயும் சாத்தியம் உண்டல்லவா.. தருண் இப்போது வேறு பெண்களை வலையில் வீழ்த்திக்கொண்டிருப்பார்..

தற்கொலை செய்யுமளவுக்குப் போக வெறும் தொலைபேசி அழைப்புகள் காரணமாக இருக்குமா?? நம்ப முடியவில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

இணையங்கள்,முக நூல் போன்றவற்றில் புதிய நட்புக்களை ஏற்படுத்திக்கொள்பவர்கள் மிகவும் அவதனாமாக கையாள்வது நன்று....பொதுவான கருத்து....

 

என்னைப் பொறுத்த மட்டில் இருவரிலும் பிழைகள் இருக்கிறது..அதுவும் சியாமளா ரொம்ப அவசரப்பட்டுட்டா என்றே சொல்லத் தோன்றுகிறது..காரணம் அவருக்கு ஏற்கனவே கணவன்,இரண்டு குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள் என்னும் போது ஒன்றும் அறியாத அவர்களையும் தண்டித்தது போல் ஆகிவிட்டது..மிகவும் தவறும் கூட...திருமணம் செய்தவர்கள் என்னும் போது ஆணினதோ, பெண்ணினது மனசை பூ,புஸ்பம் போன்றது பிரச்சனைகளை தாங்காது என்று எல்லாம் சொல்ல முடியாது..யார் செய்தாலும் தப்பு என்றால் தப்புத் தான்...

 

வீட்டில் நல்ல சுதந்திரமான வாழ்வு இருந்தும் மனதை அங்கை,இங்கை என்று அலய விட்டு பின் தவறான முடிவுகளை எடுப்பவர்களை எந்தவரையறைக்குள் எடுப்பது என்று எனக்கு தெரிய இல்லை....இரண்டு பேருமே ஒரு நட்பு ரீதியாக பழகி இருந்தால் பிரச்சனை வந்திருக்காது....அந்த நட்பை என்றைக்கும் காப்பாற்றி இருக்கலாம் .

அதையும் தாண்டி பேச்சுவாக்கில் ஈடுபட்டதும்,எதிர்பார்ப்புக்களை வளர்த்துக்கொண்டதுமே இத்தனை பிரச்சனைகளை கொண்டு வந்திருக்கிறது என்று நினைக்கிறன்..நட்பும் விருப்பம் இல்லயா வருத்தப்பட்டு இருக்க வேண்டியதில்லை காரணம் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் இரண்டு பகுதிக்கும் குடுப்பம் இருக்கு என்னும் போது தினம்,தினம் பிரச்சனைகளைத் தான் எதிர்நோக்கி கொண்டு இருப்பார்கள்..

 

இன்றும் இப்படியான பிரச்சனைகள் நடந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம்..அதுவும் பிள்ளைகளோடு வாழ்பவர்கள் தாங்கள் தவறான வழிகளுக்கு செல்வது மட்டுமல்லாது பிள்ளைகளின் வாழ்வையும் சீரளிப்பதை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன்..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கருத்துக்களைப் பகிர்ந்த இசை, ரதி, யாயினி, மற்றும் முன்னைய பகுதியில் கருத்தை எழுதிய அனைத்து உறவுகளுக்கும், வருகைதந்த உறவுகளுக்கும் நன்றி.

இதில் சியாமளாவின் தவறே அதிகம். திருமணத்தின் பின் இன்னொரு ஆணை மனதில் இருத்தியது முதல் தொடர்ந்தும் அதை வளர்த்து இறுதியில் சுயநலம் கொண்டவளாய் தற்கொலை செய்ததுவரை மன ரீதியான அவளது இயலாமையைக் காட்டி நிற்கிறது. ஒவ்வொருத்தரின் மனோநிலை ஒவ்வொரு மாதிரி. நாம் எம் மனதில் பட்டத்தை வைத்துத்தான் கணிக்க முடியுமே அன்றி அவர்கள் நிலையில் இருந்து தீர்ப்புச் சொல்ல இயலாது.

எப்பப்பா அடுத்த கதை?

தற்கொலை செய்துகொள்பவர்கள் முட்டாள்கள் என்பதைவிட சுயநலவாதிகள்..! மற்றவர்களைப்பற்றி ஒரு துளியேனும் சிந்திக்காதவர்கள்!

இங்கு அந்தப் பெண் ஆரம்பத்திலிருந்தே சுயநலமாகத்தான் சிந்தித்திருக்கிறாள். தனக்கு ஒரு குடும்பம்... சின்னஞ்சிறு பிள்ளைகள் இருக்கு என்பது பற்றி ஒரு கணம் கூட அவள் நினைத்துப்பார்க்கவில்லையே...!?  அப்படி நினைத்திருந்தாளென்றால்... அவள் அந்தப் பிழையை விட்டிருக்கவே மாட்டாள்.... ஆரம்பத்திலேயே தவிர்த்திருந்திருப்பாள். <_<

அவள் செய்த தவறினை எதைக் காரணங்காட்டியும் நியாயப்படுத்த முடியாது. இப்படியானவர்களின் முடிவுகள்.... மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்!

 

இதை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி அக்கா!

இந்தக் கதை உங்களின் கற்பனையோ உண்மைக்கதையோ.... யானறியேன்! :rolleyes:

ஆனால்... இப்படியான சம்பவங்கள் நிறையவே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு இக்கதை ஒரு நல்ல பாடமாக, அறிவுரையாக அமையட்டும்!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை.. லவ்ஸ் வந்தால் அறிவுரை எல்லாம் கேட்கமாட்டினம்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்குப்பின்னால் உள்ள உளவியலை சொல்ல வேணும் என்றால் அது பச்சையாகப் போய்விடும்.

அதைப் பொதுத்தளத்தில் பகிர விரும்பவில்லை, அதே சமயம் இப்படியானவர்கள் பரஸ்பரம் மனவொருமித்த விவாகரத்து எடுத்துக்கொண்ட பின்னர் தமக்குரிய பாதையைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் குடும்பம் என்ற ஒரு அமைப்பில் இப்படி தனிநபர்கள் தம் சுயநலம் சார்ந்து முடிவெடுப்பது பச்சைத் துரோகம் ஆகும். :o


கவிதை.. லவ்ஸ் வந்தால் அறிவுரை எல்லாம் கேட்கமாட்டினம்.. :D

 

இதெல்லாமா லவ்ஸ்  மாம்ஸ்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாமா லவ்ஸ் மாம்ஸ்? :unsure:

இல்லையா பின்னை??! :D இதுவும் லவ்ஸ்தான்.. ஆனால் கொஞ்சம் அழுக்கானது.. :unsure: (Dirty love)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பல கதைகள் புலம்பெயர் தேசத்தில் எம்மவரிடையே உண்டு. 

மூளை சொல்வதை மனது கேட்காமல் விடுவதால் வரும் பிரச்சனை
 

பகிர்விற்கு நன்றி சுமேரியர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காவல்துறைக்கு தெரியப்படுத்தவில்லை நித்யா?? அதைவிடடிட்டு பெண்மை, மென்மை, வன்மை என்றிட்டு.. :unsure:

 

காவல்த்துறைககுத் தெரியப்படுத்தி கணவனைத் தலை குனிய வைப்பதா என எண்ணிப் பேசாமல் இருந்திருக்கலாம்.

 

 

மனசு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் அல்லது மனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இப்படியான நிலைமை தான் ஏற்படும் :(

 

 

உண்மைதான் ரதி.

 

இணையங்கள்,முக நூல் போன்றவற்றில் புதிய நட்புக்களை ஏற்படுத்திக்கொள்பவர்கள் மிகவும் அவதனாமாக கையாள்வது நன்று....பொதுவான கருத்து....

 

இன்றும் இப்படியான பிரச்சனைகள் நடந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம்..அதுவும் பிள்ளைகளோடு வாழ்பவர்கள் தாங்கள் தவறான வழிகளுக்கு செல்வது மட்டுமல்லாது பிள்ளைகளின் வாழ்வையும் சீரளிப்பதை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன்..

 

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை யாயினி. பெண்கள் நிலை தெரிந்துதான் எம்மினம் பண்பாடு என்னும் இறுக்கமான கட்டுக்கோப்பை உண்டாக்கிப் போதனைகளையும் செய்தனர். இக்காலத்தில் பெண்கள் சிலர் இப்படிப் போவதற்குக் காரணம் சுய கட்டுப்பாடு இன்மையும், facebook போன்ற  பொழுதுபோக்குச் சாதனங்களுமாக இப்படியான தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன.

 

எப்பப்பா அடுத்த கதை?

 

வருமப்பா வரும் :D

 

இதை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி அக்கா!

இந்தக் கதை உங்களின் கற்பனையோ உண்மைக்கதையோ.... யானறியேன்! :rolleyes:

ஆனால்... இப்படியான சம்பவங்கள் நிறையவே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு இக்கதை ஒரு நல்ல பாடமாக, அறிவுரையாக அமையட்டும்!

 

சிலர் ஒன்றில் மட்டும் தம் புலனைச் செலுத்தி மற்றவற்றைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பார். இங்கு மட்டுமல்ல ஈழத்தில் கூட கணவனையும் ஒரு குழந்தையையும் விட்டுவிட்டு இன்னொருவருடன் போனதை பக்கத்து  ஊரிலேயே கண்டிருக்கிறேன். ஆனாலும் சியாமளாவின் நிலை அதி தீவிர மன அழுத்தத்தின் தெளிவில்லாமையின் நிலைப்பாடே.

 

கவிதை.. லவ்ஸ் வந்தால் அறிவுரை எல்லாம் கேட்கமாட்டினம்.. :D

 

சிலபேர் வராட்டிலும் கேட்க மாட்டினம். :D

 

இதற்குப்பின்னால் உள்ள உளவியலை சொல்ல வேணும் என்றால் அது பச்சையாகப் போய்விடும்.

அதைப் பொதுத்தளத்தில் பகிர விரும்பவில்லை, அதே சமயம் இப்படியானவர்கள் பரஸ்பரம் மனவொருமித்த விவாகரத்து எடுத்துக்கொண்ட பின்னர் தமக்குரிய பாதையைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் குடும்பம் என்ற ஒரு அமைப்பில் இப்படி தனிநபர்கள் தம் சுயநலம் சார்ந்து முடிவெடுப்பது பச்சைத் துரோகம் ஆகும். :o

 

இதெல்லாமா லவ்ஸ்  மாம்ஸ்? :unsure:

 

ஜீவா கதையைக் கதையாகப் பாருங்கள். :D

 

இப்படிப்பல கதைகள் புலம்பெயர் தேசத்தில் எம்மவரிடையே உண்டு. 

மூளை சொல்வதை மனது கேட்காமல் விடுவதால் வரும் பிரச்சனை

 

பகிர்விற்கு நன்றி சுமேரியர்.

 

வாத்தியார் என்பதால் இலகுவாக விளங்கிச் சுருக்கமாகப் பதில் கூறியுள்ளீர்கள். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்ய துணிந்தவள் வாழ துணியவில்லை.....மொக்குபெட்டை......:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி புத்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை சொல்லும் அழகுக்கு வாழ்த்துக்கள் 

சுமோ!உங்களின் கதைகளைப் படிக்கின்ற போதுதான், நான் சொந்தப் பெயரில் சொந்த முகத்தோடு இங்கே இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது உண்டு. என்னிடம் இப்படியான ஆயிரம் கதைகள் உண்டு. ஆனால் நான் எழுதினால் அது யார் என்று கண்டு பிடித்து விடுவார்களே!

கதை பற்றி சொல்வது என்றால், இந்தப் பெண் பரிதாபத்திற்கு உரியவள். ஒரு ஆணாக இருந்திருந்தால், இப்படி இரண்டு காதல்களை சிக்கல் இல்லாமல் கையாண்டிருப்பாள். தற்கொலை வரை போயிருக்கத் தேவையில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லும் அழகுக்கு வாழ்த்துக்கள் 

 

நன்றி லியோ வரவுக்கும் கருத்துக்கும். ஆனால் நீங்கள் கூறுவதுபோல் கதையை அழகாக இன்னும் சொல்ல முடியவில்லை என்னும் குறை எப்போதும் உண்டு.

 

சுமோ!உங்களின் கதைகளைப் படிக்கின்ற போதுதான், நான் சொந்தப் பெயரில் சொந்த முகத்தோடு இங்கே இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது உண்டு. என்னிடம் இப்படியான ஆயிரம் கதைகள் உண்டு. ஆனால் நான் எழுதினால் அது யார் என்று கண்டு பிடித்து விடுவார்களே!

 

 

ஆண் கையாள முடியாததாலேதான் அவள் இறக்கவேண்டி ஏற்பட்டது. அப்படியிருக்க நீங்கள் இப்படிக் கூறுகிறீர்களே???

 

இனி முகமூடியில் இன்னொரு பெயரில் வந்து எழுதலாம் தானே சபேசன். யாழில் கதைக்குத் தட்டுபாடு இருக்கே. :rolleyes:  

 

ஓ! கையாண்டிருப்பான் என்று வரவேண்டியது கையாண்டிருப்பாள் என்று வந்து விட்டது.

சுமோ! நான் என்ன சொல்கிறேன் என்றால் ஒரு திருமணமான ஆண் தன் மனைவியையும் வெளியில் ஒரு காதலியையும் சிக்கல் இல்லாமல் கையாள்வதை கவனித்திருக்கிறேன். பிடிபட்டாலும் சேதம் பெரியளவில் வருவது இல்லை. அதைத்தான் சொன்னேன்.

முகமூடியோடு கதை சொல்வது எனக்குப் பிடிக்காது. நான் எழுதுவதன் புகழும் இகழும் ஏன் ஒரு முகமூடிக்கு போக வேண்டும்

வேண்டுமென்றால் ஒரு குட்டிக் கதை சொல்லவா?

இன்று ஒரு நண்பன் தன்னுடைய முகநூல் பட்டியலில் இருந்து என்னை தூக்கி விட்டான். காரணம் என்னவென்றால் அவன் முகநூலில் எழுதுகின்ற காதல் கடிதங்கள் என்னுடைய இன்னொரு நண்பனின் மனைவிக்கானவை என்று நான் கண்டுபிடித்ததுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் பப்பிளிக்காகவே காதல் கடிதம் எழுதுகிறார் என்றால் துணிவுள்ள ஆள்தான். அதுசரி உங்களுக்கு வேலை வெட்டி இல்லையா???? மற்றவர் விடையத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு..... :D 
 இதுதான் குட்டிக் கதையா??? அல்லது இனித்தான் எழுதப் போகிறீர்களா சபேசன்?????

வேலை வெட்டியெல்லாம் இருக்கிறது. இது ஒரு உதவிக்காக செய்தது. இதுதான் குட்டிக் கதை. இதற்கு மேல் எழுதவும் முடியாது. எழுதினால் யார் என்று தெரிந்து விடும். முகமூடியில் எழுதவும் விருப்பமில்லை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் எழுதுகின்ற கதையைப் படித்து விட்டு எனக்குத் தெரிந்தவர்களின் கதையோ என்று நான் சந்தேகப்படுவது உண்டு. எல்லா நாடுகளிலும், வீடுகளிலும் ஒரே கதைதான். நீங்களே தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா..எதை வைத்து கதையை இன்னும் அழகாக சொல்லப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள்...அதையும் சற்று விரிவுபட எழுதினால் நன்றாக இருக்கும்...கருத்துக்களை பகிரவெளிக்கிட்டால் பக்கம்,பக்கமாக எழுதலாம்...உங்கள் பதில்கருத்துக்களே நிறைய கேள்விகளை தொடுக்க வைக்கிறது..அதற்காக என்னையும் உமக்கு வேறை வேலை இல்லயா என்று கேக்க கூடாது.சரி போகட்டும்...
 

1.காவல்துறைவரைக்கும் போய் கணவரை தலைகுனிய வைப்பதா என்று எண்ணி மேலும் தவறான முடிவை எடுத்து இருக்கலாம்ம்ம்.....என்று எழுதுகிறீர்கள்..அப்படி நினைத்து செயல்பட்டு இருந்தால் முதலிலயே தான் உண்டு தன்ட பாடு உண்டு என்று இருந்திருக்கலாம் தானே..வீட்டில் கணவர் இருக்க கூடியதாக,இரு பிள்ளைகள் இருக்க கூடியதாக மறுபடியும் வேறை ஒருவரை விருப்பப்பட வேண்டிய அவசியம் இல்லயே..சரி அதற்கு மனம் ஒரு குரங்கு ஏதோ ஒரு தவறு இழைத்து விட்டார் என்று வைத்துக்கொள்வோம்..

 

இரண்டாம் தெரிவு படு முட்டாள் தனமான முடிவு தன்னுடைய பிரச்சனைகள் தெரியாமல் வாழ்ந்த கணவருக்கும்,பிள்ளைகளுக்குமே வாழ்க்கை முழுக்க பணிஸ்மன்ற்.சரி ஆண்கள் துணையை இழந்தால் இன்னும் ஒன்றைச் செய்துட்டு போவார்கள்..அப்படி அடுத்த தெரிவை செய்யாமலும் எல்லாராலும் வாழ முடியாது..ஆனால் அந்த இரண்டு குழந்தைகளும் என்ன செய்வார்கள்..வாழ்க்கை முழுக்க கஸ்ரப்படப்போவது குழந்தைகள். அந்தக் குழந்தைகளை நினைத்தாவது  ஒரு தாய் தவறான வழிக்கு போகாமல் வாழ்ந்திருக்கலாம் அல்லவா....?அங்கே அவரது சுயநலம் தான் பார்க்கபட்டு இருக்கிறது..

எப்போதுமே பிழைவிடும் ஆண்கள் சரி,பெண்கள் சரி மற்றவர்களது கஸ்ர,நஸ்ரங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள்.....அதுக்கும் திருமணம் செய்தவர்கள் என்றால் சொல்லவே வேணாமே....
எங்களால் அதனை ஜீரணிக்க முடியாது விட்டாலும் மற்றவர்கள் எடுத்து எறிந்து  நடக்கும் போதே ஒதுங்கி கொள்வதே சிறந்த வழி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நான் கதை எழுதும்பொதெல்லாம் வாசிக்கும் சிலர் ரமணிச் சந்திரனின் கதைபோல் என் கதைகளும் ஒரேபாணியில் இருப்பதாகக் கூறுவர். நானும் கொஞ்சம் என் பாணியை மாற்றி எழுதவேண்டும் என எண்ணுவதுண்டு. ஆனால் என்னால் இன்றுவரை என் பாணியிலிருந்து மாற முடியவில்லை. எழுதும் எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் வாசிப்பவர்களுக்கு ஒரேமாதிரி இருந்தால் தொடர்ந்து  வாசிப்பதற்கு மனம் வராது. அதனால்த்தான் லியோ எழுதியதற்கு அப்படி எழுதினேனே தவிர வேறொன்றுமில்லை. உண்மையான விமர்சனங்கள்தான் என்னைத் திருத்திக்கொள்ள உதவும். நன்றி யாயினி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.