Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

 யாழ்மாவட்ட விருப்பு வாக்குகள் வெளியாகி உள்ளன. அதி கூடிய விருப்பு வாக்குகளை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ விக்னேஸ்வரன் பெற்றுள்ளார் . இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை அனந்தி எழிலனும், 3 ஆவது விருப்பு வாக்குகளை தர்மலிங்கம் சித்தார்தன் பெற்றுள்ளார். 4ஆவதாக ஆனல்ட், 5ஆவதாக சீ.வீகே சிவஞானம், 6ஆவதாக கஜதீபன், 7ஆவதாக சிவாஜிலிங்கம், 8ஆவதாக ஐங்கரநேசன், 9ஆவதாக சுகிர்தன், 10ஆவதாக சயந்தன், 11ஆவதாக  விந்தன் 12 ஆவதாக பரஞ்சோதி, 13ஆவதாக சர்வேஸ்வரன், 14ஆவதாக.... ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஈழமக்கள் ஐனநாயக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமல் மற்றும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அங்கயன் ராமநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply

வேட்பாளர் இல பெயர் விருப்பு வாக்கு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

1 பசுபதி அரியரத்தினம் 27264

5 தம்பிராஜா குருகுலராஜா 26427

7 சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132

3 கந்தசாமி திருலோகமூர்த்தி 4199

4 கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953

2 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896

6 பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்   1188

   

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

7 வை. தவநாதன் 3753

1 அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் 3531

3 கந்தசாமி பிரகலாதன் 3435

4 வேணுகோபால் கீதாஞ்சலி 1866

5 பொன்தம்பி தர்மசிறீ 1533

2 அருணாசலம் விஜயகிருஷ்ணன் 977

6 மாரிமுத்து மகாதேவன் 404

 

 

 

 

 

முல்லைதீவில் நாலு பேருக்குத்தான் கூட்டமைப்பில் கிடைக்கும் என்றால்..............

அப்போ ஆனந்த சங்கரிக்கு?

வினுபானந்தகுமாரி பலதடவைகள் காடைகளால் துன்புறுத்த பட்டிருந்தார். அவருக்குக் கிடைத்த வாக்குகள் காணாது.

 

மிசி அம்மாவின் குடும்பம் போட்டிருந்தாலும் அவவுக்கு கொஞ்சம் கூட வந்திருக்கலாம்.

n130313121.jpg

 

இந்த மனிசியை தெருவில் எங்கவாவது சந்திக்க நேர்ந்தால் உடனே திருப்பிப்பார்த்து "சும்மா வாயை பொத்திக்கொண்டு உன்பாட்டுக்கு போ" என்று சொல்லிவிட்டு போங்கள் :lol: 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தன் போன்றவர்கள் ஒன்றை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு விழுந்துள்ள விருப்பு வாக்கு என்பது 3ம் இடத்தில் இவர்களை நிறுத்தி வைத்துள்ளது. எனவே அதிகம் மக்கள் ஆணைக்கு கட்டுப்படாமல் ஆடினால்.. இவர்களின் கதியும் அதோ கதிதான். இவர்களை மக்கள் மன்னித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இவர்களிடம் நல்ல மனமாற்றத்திற்கு ஒரு இடமளித்திருக்கிறார்கள். அதனை உணராமல்.. அதிகம் ஆடவெளிக்கிட்டால்.. 3 ம் இடம் காலியாக அதிக நேரம் எடுக்காது.  எந்த ஒரு அரசியல் பின்னணியும் அற்ற.. காணாமல் போகடிக்கப்பட்ட எழிலன் அண்ணாவின் மனைவி என்ற தகுதியோடும் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட பின்னும் மக்களின் எண்ண ஓட்டத்தையே பிரதிபலித்து நின்றவர் என்ற தகுதியோடும் இருந்த அனந்தி அக்காவிற்கு விழுந்துள்ள விருப்பு வாக்கு சித்தார்தனை விட கிட்டத்தட்ட 50 ஆயிரம்.. ஆதிகம். சித்தார்த்தன் 35 வருசமா செய்த ஒட்டுக்குழு அரசிலுக்கு விழுந்துள்ள விருப்பு வாக்கல்ல இது. இன்று அவர் தஞ்சமைந்துள்ள தமிழ் தேசிய நிழலுக்கு கிடைத்துள்ள வாக்கு என்பதை புரிந்து கொள்வது மிக மிக மிக அவசியம். 

Edited by nedukkalapoovan

1240509_362652510533925_6105977_n.jpg
தேர்தல் முடிவு கூறித்து மகிந்தவின் மனதில் இருந்து.

மடப்பயல் டக்ளஸ் கள்ள வாக்குகளைப் போடாமல் நேற்றைய தினம் தண்ணீ அடித்துவிட்டுத் தூங்கிவிட்டானா? அந்த குடிகார நாயை நம்பி மோசம் போய்விட்டேனே.

 

வாங்கும் வரைக்கும் வாங்க்கிவிட்டு  டக்கி கூட தவராசாவுக்கு வாக்கு போடவில்லை என்பதைத்தான் நடந்த முடிந்த தேர்தல் காட்டுகிறது. டக்கியும் தமிழ் ஈழம் கேட்டு கூட்டமைப்புக்குதான் போட்டார் என்பதை மகிந்த உணரவேண்டும்.  தவராசா தன்னும் தனக்குத்தான் போட்டாரா என்பது அவரைத்தான் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும். முல்லைதீவு, கிளினொச்சி.. (வடமாகாண முழுவதுக்குமான) சுதந்திரக்கட்சிஅமைப்பாளர் ஆகிய கீதாஞ்சலியின் விடையத்தில், வாக்குப் போட அனுப்பி விட்ட ஆமிக்காறன் கூடத்தான் தனி நாடு கேட்டு கூட்டமைபுக்கு வாக்களித்துவிட்டுப்போயிருக்கிறான்.

 

இனித்தன்னும் மகிந்தா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வடக்கில் பூவோடு சேர்ந்து தண்டும் மணகிறதென்பதை விள்ங்கிக்கொள்ள வேண்டும்

63926_10202355872964727_2121387665_n.jpg

விக்கினேஸ்வரன், அனந்தி இருவருக்கும் கிடைத்த வாக்குகள் புதிய அரசியல் யுக வாக்குகள். தர்மலிங்கம் சித்தார்தன் தமிழரசுக் கட்சியில் நிற்கும் போது பழைய அதே வாக்குகள் விழுந்திருக்கவும் சந்தர்ப்பம் இருக்கு. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி

1.சி.வி. விக்கினேஸ்வரன் - 132,255 வாக்குகள் 
2.அனந்தி சசிதரன் - 87,870 வாக்குகள் 
3.தர்மலிங்கம் சித்தார்த்தன் - 39,715 
4.பாலச்சந்திரன் கஜதீபன் - 29,669 வாக்குகள் 
5.இ.ஆர்னோல்ட் - 26,888 வாக்குகள் 
6.கந்தையா சிவஞானம் - 26,747 வாக்குகள் 
7.எம்.கே.சிவாஜிலிங்கம் - 22,660 வாக்குகள் 
8.பொன்னுத்துரை ஐங்கரநேசன் - 22,268 வாக்குகள் 
9.எஸ்.சுகிர்தன் -20,541 வாக்குகள் 
10.கே.சயந்தன் -20,179 வாக்குகள் 
11.விந்தன் கனகரத்தினம் -16,463 வாக்குகள் 
12.ஏ.பரம்சோதி -16,359 வாக்குகள் 
13.கந்தையா சர்வேஸ்வரன் -14,761 வாக்குகள் 
14.வி.சிவயோகம் - 13,479 வாக்குகள் 

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 

1. கந்தசாமி கமலலேந்திரன் - 13,632 வாக்குகள் 
2. அங்கஜன் இராமநாதன் - 10,034 வாக்குகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

1240509_362652510533925_6105977_n.jpg
தேர்தல் முடிவு கூறித்து மகிந்தவின் மனதில் இருந்து.

மடப்பயல் டக்ளஸ் கள்ள வாக்குகளைப் போடாமல் நேற்றைய தினம் தண்ணீ அடித்துவிட்டுத் தூங்கிவிட்டானா? அந்த குடிகார நாயை நம்பி மோசம் போய்விட்டேனே.

 

அன்பு அண்ணா..அந்த மாதிரி இருக்கு..இது தான் நிஜம்....

இந்த தேர்தல் வெற்றி தமிழ்மக்களுக்கு நிரந்தரமான சுதந்திரத்தையும் நிம்மதியான வாழ்வினையும் பெற்றுக்கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கும்பொழுது, இதை ஒரு மாபெரும் வெற்றியாக நினைத்து சித்தரிப்பதற்கு என்ன இருக்கு...???

ஆனாலும்... 'தமிழர்களின் விருப்பு' என்ன என்பது தெட்டத் தெளிவாக சிங்களத்துக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லப்பட்டிருக்கின்றது என்பதில் ஒரு ஆறுதல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தேர்தலால் தமிழ்மக்களுக்கு என்ன கிடைக்கிறது, இல்லை என்பதற்கு அப்பால்  தமிழ்மக்களை ஒற்றுமையாக்கியுள்ளது என்பது மட்டுமே உண்மை. இது வரைக்கும் புலிகள் மக்களை வாக்களிக்காமல் தடுத்தார்கள், புலிகள் கள்ளவாக்குப் போட்டார்கள் என்றே ஒரு விம்பம் கட்டியமைக்கப்படிருந்தது. இன்று புலிகள் இல்லாத நான்கு வருட்ங்களின் பின்னர் அதுவும் புலம்பெயர் சமூகம் கூட பெரிதளவில் அக்கறை கொள்ளாத இந்தத் தேர்தலில், முற்று முழுதாகத் தாயகத்து மக்கள் தமது சுயமான தெரிவையும், நிலைப்பாட்டையும் சொல்லி இருபது சிங்கள அரசுக்கும், சர்வதேசத்துக்கும் மட்டுமல்ல தமிழ்த்தலைமைகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

 

இந்தத்தேர்தலின் மூலம் மக்கள் பல விடையங்களைச் சொலியுள்ளனர். மிகப்பெரிய நுண்ணரசியல் ஒளிந்து கிடக்கு.

சித்தார்த்தனின் வெற்றி மாற்றுக்குழுக்களையும் தமிழ்த்தேசியத்திற்காய், தமிழ் மக்களூக்காய் உண்மையாய் உழைத்தால் அவர்களை  தமிழ்மக்கள் அரவணைக்கிறார்கள், இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள்  என்ற செய்தியையும் , ஆனந்தியின் வெற்றி  எம்மினத்தின் வழிகாட்டிகள் புலிகள் தான் என்பதையும், அவர்களின் தியாகத்திற்கு விலைமதிப்பு இல்லையென்றாலும் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக, அவர்களின் பிரதிநிதியாகவே அவர்களைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். அதே போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த வெற்றியும் தமிழ்த்தேசியத்திற்கான வெற்றியாகப் பதியப்பட்டுள்ளது.

அதே வேளை  ஆனந்தசங்கரியின் தோல்வி தேசியம் பேசி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தாலும் கூட கோடரிக்காம்புகளை தமிழினம் ஏற்றுக்கொள்ளத் தயாரிலை என்ற செய்தியையும் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. அந்த வகையில் இந்தத் தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே ஒரு பாடமாக அமைந்துள்ளது.

 

தமிழ்க் கூட்டமைப்பின் வெற்றி எம்மக்களின் வலியின் வாக்குகள் அவர்கள் இழந்தவை ஏராளம் அதை மறக்காது பயணிக்க வேண்டும். அதே போல இந்த வெற்றியானது தமிழினத்தின் அரசியல் வெற்றியாக்கப்பட வேண்டும். அதே வேளை தாயகத்துக்குச் சமாந்தரமாக புலம்பெயர் தேசங்களிலும் ஒரு பலமான கட்டமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டும். கட்சி பேதங்களை மறந்து அனைவரையும் உள்வாங்குவதோடு அடுத்த தலைமுறையிடம் அதிகாரத்தைக் கையளிப்பதாகவும் இருக்க வேண்டும். மாற்று அரசியல் என்ற பெயரில் அரச அடிவருடித்தனம் செய்தவர்களும், புலிகள், தமிழ்த்தேசியம் என்பதை தம் இருப்புக்காகப் பயன்படுத்திக்கொண்டவர்களும் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பதோடு அந்த மக்களுக்காக ஒன்றிணைவது தான் அந்த மக்களுக்குச் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கும்.

 

எது எப்பட்டியோ ஈபிடிபியோ, எந்த ஒட்டுக்குழுவாக இருந்தாலும் கூட இனி தமிழ்த்தேசிய அரசியல் செய்தால் தான் அந்த மக்களிடம் எடுபடும் என்பது நிதர்சனமாகியுள்ளது, அந்த வகையில் இந்தத் தேர்தல்  தமிழ்மக்களுக்கு பெருவெற்றியே.!

இதற்காக எம் ஒட்டுமொத்த மக்களுக்கும் எம் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற வகையில் எம்மினத்தின் விடுதலை வெல்லப்படும் வரை சகல பேதங்களையும் மறந்து எல்லாரும் ஒன்றாகவே பயணிப்போம். :)

 

நன்றி..!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மெளனப்புரட்சி செய்த மக்களுக்கு தலைவணங்குகிறோம்.ஆனந்தசங்கரி பின்கதவால்(தேசியப்பட்டியல் ஊடாக)உள்நுளைய முயற்சிப்பதாக முகநூலிற்கூடாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அடிபடுது.மக்கள் ஆணைக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது.தேசியப் பட்டியலுக்கு வெளியில் இருந்து நல்ல அரசியல் அறிவும் ,தமிழ்த்தேசியத்தில் பற்றுறிதியும்,ஆங்கிலப் புலமை உள்ளவர்களையும் உள்வாங்குவது நல்லது.

மெளனப்புரட்சி செய்த மக்களுக்கு தலைவணங்குகிறோம்.ஆனந்தசங்கரி பின்கதவால்(தேசியப்பட்டியல் ஊடாக)உள்நுளைய முயற்சிப்பதாக முகநூலிற்கூடாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அடிபடுது.மக்கள் ஆணைக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது.தேசியப் பட்டியலுக்கு வெளியில் இருந்து நல்ல அரசியல் அறிவும் ,தமிழ்த்தேசியத்தில் பற்றுறிதியும்,ஆங்கிலப் புலமை உள்ளவர்களையும் உள்வாங்குவது நல்லது.

மெளனப்புரட்சி செய்த மக்களுக்கு தலைவணங்குகிறோம்.ஆனந்தசங்கரி பின்கதவால்(தேசியப்பட்டியல் ஊடாக)உள்நுளைய முயற்சிப்பதாக முகநூலிற்கூடாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அடிபடுது.மக்கள் ஆணைக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது.தேசியப் பட்டியலுக்கு வெளியில் இருந்து நல்ல அரசியல் அறிவும் ,தமிழ்த்தேசியத்தில் பற்றுறிதியும்,ஆங்கிலப் புலமை உள்ளவர்களையும் உள்வாங்குவது நல்லது.

மெளனப்புரட்சி செய்த மக்களுக்கு தலைவணங்குகிறோம்.ஆனந்தசங்கரி பின்கதவால்(தேசியப்பட்டியல் ஊடாக)உள்நுளைய முயற்சிப்பதாக முகநூலிற்கூடாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அடிபடுது.மக்கள் ஆணைக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது.தேசியப் பட்டியலுக்கு வெளியில் இருந்து நல்ல அரசியல் அறிவும் ,தமிழ்த்தேசியத்தில் பற்றுறிதியும்,ஆங்கிலப் புலமை உள்ளவர்களையும் உள்வாங்குவது நல்லது.

மெளனப்புரட்சி செய்த மக்களுக்கு தலைவணங்குகிறோம்

இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் குடுத்த ஆணையை கூட்டமைப்பு உதாசீனம் செய்யாது பணியாற்ற முன் வர வேண்டும்... 

 

அதிகமாக நான் ஏதும் கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.....!   வடக்கில் (முடிந்தால் கிழக்கிலும்.. )  மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையானதை செய்ய முன் வர வேண்டும்...  மிக முக்கியமாக  குவிக்கப்பட்டு இருக்கும் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைப்பதுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து  எமது மக்களை சுதந்திரமாக சுவாசிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்...  

 

இண்றைய வெற்றியின் காரணமாக கூட்டமைப்பினால் மட்டும் செய்ய கூடிய விடயமாக அது இருக்கிறது... 

 

அதற்குமேல் கூட்டமைப்பு பெரியாதாக மக்களுக்கு ஏதும் செய்ய கூட வேண்டியதில்லை...  தமிழ் மக்கள் தங்களின் தேவைகளை , மிக முக்கியமாக பொருளாதார தேவைகளை புலம் பெயர்ந்த மக்களோடு இணைந்து தாங்களாகவே பூர்த்தி செய்யும் நிலை தானாக உருவாகும்... 

 

 

வெற்றியீட்டிய தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எனது வாழ்த்துகள். :) :) :) கூட்டமைப்பினருக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.

 

திரியை ஆரம்பித்த மணிவாசகன் அண்ணாவுக்கும் செய்திகளை பகிர்ந்து கொண்ட கள உறவுகளுக்கும் நன்றி. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அக்காவை வடக்கின் மகளிர் விவகார அமைச்சராக நியமிக்க வேண்டும்

  • தொடங்கியவர்

வெட்டியீட்டிய தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 

 

என்னத்தை வெட்டி  :D  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இறங்கின முதல் தடவையே பெரு வெற்றி :)

என்னத்தை வெட்டி  :D  :D  :D  :D

மன்னிக்கவும். வெற்றி என வர வேண்டும். :D சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறை திருத்தியுள்ளேன். :)

  • தொடங்கியவர்

ஆனந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இறங்கின முதல் தடவையே பெரு வெற்றி :)

 

அப்படியே ஆன்நதசங்கரிக்கும் ஒரு வாழ்த்தை இறக்கி விட்டிருக்கலாமே.! அந்தாளும் பாவமெல்லே! :lol:  :lol:  :lol:

மன்னிக்கவும். வெற்றி என வர வேண்டும். :D சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறை திருத்தியுள்ளேன். :)

 

இதெல்லாம் ஒரு தவறா! சும்மா பகிடிக்காக  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியீட்டிய தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எனது வாழ்த்துகள். :) :) :) கூட்டமைப்பினருக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.

 

திரியை ஆரம்பித்த மணிவாசகன் அண்ணாவுக்கும் செய்திகளை பகிர்ந்து கொண்ட கள உறவுகளுக்கும் நன்றி. :)

துளசி கண்டத்தில் மகிச்சி  :)

வெற்றியீட்டிய தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எனது வாழ்த்துகள். :) :) :) கூட்டமைப்பினருக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.

 

திரியை ஆரம்பித்த மணிவாசகன் அண்ணாவுக்கும் செய்திகளை பகிர்ந்து கொண்ட கள உறவுகளுக்கும் நன்றி. :)

மீள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி . :)

ஆனந்தி அக்காவை வடக்கின் மகளிர் விவகார அமைச்சராக நியமிக்க வேண்டும்

ஏன் அப்பு ஆனந்தி அக்காவை துணை முதலமைச்சர் ஆக்கினா விட மாட்டீங்களோ? :icon_idea:

உங்க ஆசைப் படி மகளிர் விவகாரதுறையும் நம்ம ஆசைப் படி துணை முதலமைச்சர் பதவியும் குடுத்திட்டா போச்சு  என்ன சொல்கிறீங்க? :D

கூட்டமைப்பின் வெற்றிக்கு கர்நாடகா தமிழர்கள் வாழ்த்து!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு கர்நாடகா தமிழர்கள் வாழ்த்துகின்றோம்!!

இலங்கையில் வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு கர்நாடக தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
உலகத்தில் ஒற்றுமையுள்ள தமிழர்களாக ஈழத்தமிழினம் வாழவேண்டும் தங்கள் உரிமைகளை தாங்களே வென்றெடுத்து சுயநிர்ணய உரிமையுடன் வாழும் தகுதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
இலங்கை படையினரின் பல அடக்குமுறைக்கு மத்தியில் உலகத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினை வடக்கில் தமிழர்கள் தெரிவுசெய்துள்ளார்கள். வடமாகாண ஆளுனரக முன்னிறுத்தப்பட்ட நீதியாளர் விக்னேஸ்வரன் அவர்களின் வெற்றியினை வாழ்த்துகின்றொம்.
 
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வளிகாட்டலில் தமிழினம் ஒன்றிணைந்து உரிமையினை வென்றெடுக்க வேண்டும் என்று கர்நாடகா தமிழர்கள் சார்பாக வேண்டிநிக்கின்றோம்.
 
ஈழத்தமிழர்கள் தான் தங்கள் உரிமையினை பெற்றுக்கொள்முடியும் என்பதை இந்த வடமாகாண தேர்தல் மூலம் மக்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள் ஈழத்தமிழர்களின் விடியலுக்காகவும்.சுதந்திர வாழ்விற்காகவும் கர்நாடகா தமிழர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருவார்கள் என்பதையும் தெரிவத்துக்கொள்கின்றோம். இதனை தாங்கள் ஊடகங்கள் ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு தெரிவித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
 
நன்றி

இப்படிக்கு

இயக்குனர் கணேசன்

(பொங்குதமிழ் கணேசன்)

http://www.sankathi24.com/news/33493/64//d,fullart.aspx

விக்னேஸ்வரனுக்குஇந்து மகாசபை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது

 

தமிழ் மக்கள் முக்கியமான தருணத்திலுள்ள இந்த வேளையில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டியுள்ள இந்த வெற்றியின் மூலம் தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் மாற்றியமைக்கப்படும் என்று இந்து அமைப்புகளின் இணையமான இந்து மகா சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் வடக்கின் முதலாவது முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் விக்னேஸ்வரன் ஐயாவிற்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இந்து மகா சபை தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து மகா சபை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

எமது வரலாற்றில் மகத்தான வெற்றியைப் பெற்று வடபுலத்தின் முதலாவது முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள விக்னேஸ்வரன் ஐயாவிற்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றோம்.

முக்கியமான தருணத்தில் எட்டப்பட்டிருக்கின்ற இந்த வெற்றியின் மூலம் தமிழ் மக்களுடைய துன்ப துயரங்களை மாற்றியமைக்கும் வகையில் செயலாற்றவும் எமது மண்ணின் ஆன்மீக, சமூக, கலாசார, மானிட நல்வாழ்வினை புதிய பரிமாணத்தில் கொண்டுசெல்வதற்கு மாகாண சபையின் செயற்பாட்டாளர்களுக்கு பூரண இறையருள் கிடைக்க அன்பே சிவமாயிருக்கின்ற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

http://www.sankathi24.com/news/33499/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.