Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அதிபர் முன்பாக பதவியேற்கமாட்டார் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CVW.jpg

வடக்கு மாகாண முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபருக்கு முன்பாக பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

சிறிலங்காவில் இதுவரை பெரும்பாலான மாகாண முதல்வர்கள் சிறிலங்கா அதிபர் முன்னிலையிலேயே பதவியேற்று வந்துள்ளனர்.

எனினும், மாகாண முதலமைச்சர்கள், சிறிலங்கா அதிபரின் முன்னிலையிலேயே பதவியேற்க வேண்டும் என்ற சட்டரீதியான கட்டாயம் இல்லாத நிலையில், மகிந்த ராஜபக்ச முன்னிலையில், பதவியேற்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தெரியவருகிறது. 

ஏற்கனவே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், கிழக்கு மாகாண ஆளுனர் முன்பாக பதவியேற்கவில்லை. இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர்கள் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130928109149

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் ஜனாதிபதியென்ற வகையில் அப்பதவிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்துப் பதவிப் பிரமாணம் செய்வதால் தீமையொன்றுமில்லை.  கட்சித் தலைவரின் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்வதால் பெரிய நன்மையும் கிடைக்கப் போவதில்லை. முதலமைச்ர் நன்கு சிந்தித்து முடிவெடுப்பாரென எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி முரண்டு பிடிப்பதால் யாருக்கும் எந்த பயனுமில்லை. சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் உள்ள ஜனாதிபதியிடம் பேசித்தான் எந்த தீர்வையும் கூட்டமைப்பு பெற முடியும். முதல் கோணல் போல அவரை வேண்டுமென கடுப்படிக்காமல் அவரிடம் பதவி ஏற்பதேநல்லது. இவ்வாறனவற்றில் மென்போக்கை எடுத்தால் காணி பொலிஸ் அதிகாரம் போன்றவற்றில் கடுட்ந்தொனி எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சட்டத்திற்குட்பட்ட‌ பாராளுமன்றத்தில்... பிரதம நீதியரசர் முன்பு தானே... சத்தியப் பிரமாணம் எடுக்கின்றார்கள்.
முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்.... சம்பந்தனுக்கு முன்னாலை... சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்... என்று, இந்தியா நிர்ப்பந்திக்குது போலை.. கிடக்குது.
 

எதுக்கும்..... "மா புளிக்கிறது, அப்பத்துக்கு நல்லது."

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைச் சட்டத்தின்படி கட்டாயம் ஜனாபதிக்கு முன்னால் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியமில்லையாம். சாதாரண சட்டத்தரணி மன்னால் எடுத்தால் போதுமாம்.பிள்ளையமன் மகிந்தவின் வால் மகிந்தவின் காலை நக்கினால்தானே மவுசு.அதுதான் மகிந்தவின் முனட்னால் சத்தியப்பிரமாணம் செய்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைக்கு சட்டம், என்று... ஸ்ரீலங்காவில் உள்ளதா... புலவர்.
சர்வதேச‌ பொதுநல அமைப்பு மாநாடு வரையும் தான்.... தமிழர் மேலுள்ள சிங்களவனின் பாசம்.
அதுக்குப் பிறகு... தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பிப்பான்.
இதனை... தமிழரே... அறியாதிருப்பது தான்... மடமை.

நாட்டின் ஜனாதிபதியென்ற வகையில் அப்பதவிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்துப் பதவிப் பிரமாணம் செய்வதால் தீமையொன்றுமில்லை.  கட்சித் தலைவரின் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்வதால் பெரிய நன்மையும் கிடைக்கப் போவதில்லை. முதலமைச்ர் நன்கு சிந்தித்து முடிவெடுப்பாரென எதிர்பார்ப்போம்.

அது கிழக்கில் ஏற்கனவே நடந்த ஒன்று. அதில் ஒரு புதுமையும் இல்லை.ஊடகங்கள் திறிலாக இருக்க கொஞ்சம் அதிகமாகவே ஊதுகின்றன. மகிந்தா இனிமேல் நல்ல மாதிரி நடந்து தமிழ் பிரதிநிதிகளை அவரிடம் பதவி பிரமாணம் செய்ய வைக்கட்டும்.

 

மகிந்தா முதலில் தானாக விக்கினேஸ்வரனை அழைத்து "இந்தா,  நீ இந்த மாகாணசபை  சட்டத்தில் இருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்களை எடுத்துக்கொள்"  என்று கூறட்டும். அப்போது விக்கினேஸ்வரன் மகிந்தாவிக்கு மேலாக ஒரு படி சென்று, "இதோ  சட்டத்தில் இல்லையாயினும் உங்கள் முன் நான் என் பதவிப்பிரமாணத்தை எடுக்கிறேன்" என்று சொல்லலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

யார் களத்தில் நிறைய உறவுகளுக்கு வயோதிகம் வந்துவிட்டது. ஆகையால் எப்படியாவது ஒரு தீர்வுக்குள் நுழைந்து இந்தப்பிரச்சனையிலிருந்து விடுபடுவம் என அனேகர் எதிர்பார்ர்கத்தொடங்கிவிட்டார்கள். தங்களைத்தவிர தமிழர் உரிமைப்போராட்டத்தை நேரிய வழியில் கொண்டுசெல்ல யாரும் இல்லை என கூத்தமைப்போ அதற்க்கு ஊதுகுழல் வாசிக்கும் சில யாழ்கள உறவினர்களோ நினைப்பார்களாக இருந்தால் தோற்றுப்போய்விடுவீர்கள். திண்ணைப்பேச்சு மன்னர்களை நம்பி (நான் உட்பட) தமிழர் விடுதலைப்போராட்டம் இதுவரை இருந்ததில்லை.

 

தவிர இப்போது நான் கவனித்த விதத்தில் யாழ்களத்திக்குப் பல புதிய உறவுகள் வருகை தருகிறார்கள் வரவேற்கிறேன்.

 

 

மாகாணசபையில் எதுவுமில்லை என்பதை உணரும்காலம் வெகுவிரைவில் வரும். விக்னேஸ்வரனை கூத்தமைப்பு அணுகி, மாகாணசபை முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டபோது, தனித்தமிழீழம் என்பதிலிருந்து பின்வாங்கி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களது பிரச்சனைக்குத் தீர்வு என்றால் மட்டுமே எனும் விக்னேஸ்வரன் வைத்த நிபந்தனைக்கு எப்போது கூத்தமைப்பு அடிபணிந்ததோ அன்றே கூத்தமைப்பு அரசியலில் வங்குரோத்து நிலையைப் பெற்றுவிட்டது. சிங்களச் சீமான்சம்பந்திகளை என்றும் விக்னேஸ்வரன் எதிர்த்து அரசியல் செய்ய மாட்டார். இவரை விட வரதராஜப்பெருமாள் மேல் எனும் விடையத்தைத் தமிழர்கள் விரைவில் உணர்வார்கள்.

 

இவர் சிங்கள நீதிமன்றங்களில் நீதியாளராகக் சேவகம் செய்தவேளைகளில் எந்த ஒரு விடுதலை இயக்க உறுப்பினருக்கு எதிராக சிங்களத்தால் கொண்டுவரப்பட்ட நீதிமன்ற விசாரணையை எப்போதாவது எதிர்கண்டாரா? அப்போது அவர் அவ்வழக்குகளுக்காக சொன்ன தீர்ப்புகள் என்ன என்பதுபற்றி யாருக்காவது தெரியுமா? இதுவரை நான் இவ்விடயத்தைப்பற்றி எதுவுமறியேன் காலம் இருக்கு இதுபற்றி விளக்கமாக அறிய முயற்சிக்கிறேன். அன்றேல் சந்தர்ப்பம் கிடைத்தால் நேரடியாகக் கேட்கவுள்ளேன்.

 

இப்போதும் சிங்களச் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை வெளிக்கொண்டுவருவதற்கான தனது தொழில்சார் அனுபவங்களையும் திறமைகளையும் எப்போதாவது பாவித்ததுண்டா?

 

தமிழர்கட்கு யார் இவர்?

 

அப்புக்காத்து அரசியல்தான் எமது மக்களை வழிநடாத்துமென்றால் எபோதே நாம் உரிமையைப்பெற்றிருக்கவேண்டுமே?

 

இதுவரை இவர்களது அரசியல் நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்ததே?

 

இன்றையதினச் செய்தியில் மகிந்தவை யாழ்ப்பாணம் வரவழைத்து பதிவியேற்பு நடாத்துவதாக உள்ளதே இதுதான் சரணாகதி அரசியல் சாணக்கியமா?

 

சட்டத்தில் நாட்டின் அதிபர் தேவையில்லையெனில் தவிக்கவேண்டியதுதானே, அப்போ இவர் நீதியாளராக இருந்தவேளைகளில் எத்தனை அப்பாவித்தமிழர்களது வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்டிருப்பார் இவரது சம்பந்திகளுடன் இணக்கமாகப்போவதற்காக.

 

 

Edited by Elugnajiru

சட்டத்தை மீறிச் செயற்பட்டால் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் – சம்பிக்க

Written by Tamil   // September 29, 2013   //

 

sampika-ranawaka.jpg

சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பான வகையில் சர்வதேச தலையீட்டை நாடினால் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் முரண்பாடுகளை தூண்டு;ம் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஏனைய உலக நாடுகளை இலங்கைக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.

 

http://news.tamilstar.com/archives/49803#more

  • கருத்துக்கள உறவுகள்

அதனாலென்ன?  நேரு, காந்தி, அன்னை இந்திரா, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி, நெல்சன் மண்டேலா போன்ற உலகத் தலைவர்களெல்லாம் சிறைக்குப்போய் வந்தவர்கள்தான். அவர்களின் வரிசையில் திரு சி வி விக்னேஸ்வரனையும் சம்பிக்க சேர்த்துவிடப் பார்க்கிறார். அப்படி நடந்தால் நல்லதே.

ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு;சந்திரசிறியிடம் நேரில் தெரிவித்தார் விக்னேஸ்வரன்

tna.jpeg

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ முன்னிலையிலோ அல்லது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறி முன்னிலையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்கள் பதவியேற்கமாட்டார்கள் எனத் தெரியவருகின்றது.

 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக் கிடையிலான கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அல்லது ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கு பங்காளிக் கட்சித் தலை வர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.
 
இதனையடுத்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வை ஜனாதிபதி முன்னிலையிலோ அல்லது ஆளுநர் முன்னிலையிலோ நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
 
இதேவேளை, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அழைப்பின் பேரில் நேற்று அவரை, வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.யாழிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற  இந்தச் சந்திப்பிலும் பதவிப்பிரமாணம் குறித்து பேசப்பட்டுள்ளது.
 
முதலமைச்சரொருவர் அந்த மாகாணத்துக்குரிய ஆளுநர் முன்னிலையில் பதவியேற்க வேண்டும் என்பது தான் இதுவரைகாலமும் இருந்து வந்த சம்பிரதாயம் என்றும், அந்த நடைமுறையைப் பின்பற்று மாறும் ஆளுநர் சந்திரசிறி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதற்குப் பதிலளித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும் வடமாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அவ்வாறு செய்ய வேண்டும் என்று எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுநரும் அந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.
 
வடமாகாண சபையின் முதல்வர் மற்றும் அமைச்சுகளின் அலுவலகங்கள் எங்கெங்கு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், மாகாணசபையின் முதல் அமர்வுக்கான திகதி சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடமாகாண சபைக் கட்டடத்தின் கீழ்ப் பகுதி எதிர்வரும் 12 ஆம் திகதி வடமாகாணசபை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் என்று ஆளுநர் இச்சந்திப்பின்போது கூட்டமைப்பினரிடம்  கூறியுள்ளார்.கட்டடத்தின் மூன்றாவது மாடியின் புனரமைப்புப் பணிகள் இன்னும் பூர்த்தியாகாததால், முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கான அலுவலகங்களுக்கு வேறு கட்டடமொன்றை ஏற்பாடு செய்யுமாறும் அதற்கான வாடகைப் பணத்தை அரசு செலுத்தும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
 
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று ஆளுநர் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டப் பின்னர்தான் முதலமைச்சர் பதவி ஏற்க முடியும். எனவே, அதற்கான கடிதத்தையும் சந்திப்பின்போது கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். குறித்த கடிதத்தை ஆளுநர் இன்று கையளிப்பார் என்று தெரியவருகிறது.
 
 
 
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=323542332502407143#sthash.7pceVPT8.dpuf

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுனரையே மாற்றும் படி கேட்பதால் அவரிடம் பதவி ஏற்க்காதது சரியே.

ஆனால் ஜனாதிபதியிடம் பதவி ஏற்றால் ஒரு நல்லெண்ண சமிக்னையாயிருந்த்ஹிருக்கும்.

மக்கள் தேர்ந்த்ஹெடுத்த தலிவர்கள் கூடி எடுத்த முடிவு. புலத்தில் இருந்து நாம் விமர்சிக்க முடியாது.

ஏதோ.. படம் காட்டிப்போட்டு ஆப்படிக்காமல் இருந்தால் சரிதான். :D

முதலமைச்சரொருவர் அந்த மாகாணத்துக்குரிய ஆளுநர் முன்னிலையில் பதவியேற்க வேண்டும் என்பது தான் இதுவரைகாலமும் இருந்து வந்த சம்பிரதாயம் என்றும், அந்த நடைமுறையைப் பின்பற்று மாறும் ஆளுநர் சந்திரசிறி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதற்குப் பதிலளித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும் வடமாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அவ்வாறு செய்ய வேண்டும் என்று எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுநரும் அந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.
 

 

 

பத்திரிகையின் வசனத்தின் படி எதுவும் நிச்சயமில்லை.

 

Edited by மல்லையூரான்

ஆர் குத்தினால் என்ன அறியானால் சரிதான்.

 

அப்பிடி இப்பிடி எண்டு இழுக்காம சடுபுட்டுண்டு காரியத்தை முடிங்கப்பா.

 

 

இதுக்கும் ஒருதலைப்பு அதுக்கு ஒரு நாலுபேரு கொமெண்டு...? ஐயோ ஐயோ.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சாசனத்தில்.. இல்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டு.. ஒரு போர்க்குற்றவாளியை.. இனப்படுகொலையாளனை மதித்து நிற்பதிலும்.. அவனைப் புறக்கணித்து நிற்பது தமிழ் மக்கள் சர்வதேசத்தை நோக்கி அனுப்பும் செய்திகளுக்குப் பலம் சேர்க்கும். சிங்களவனின் காலில் விழுந்தோர் கதி தெரிந்தும்.. இங்கு சிலர்.. மகிந்த முன் மண்டியிடுங்கள்.. வரங்கொடுப்பார் என்று கதையளப்பது தான்.. வேடிக்கை விநோதமாக உள்ளது. அவர்களுக்கு அது பழகிட்டு.. பரிந்துரைக்கிறார்கள் போலும்..! :icon_idea::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.