Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமானும் மாயமானும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி!

என்னுடைய பதில் "துரோகம் செய்து விட்டார், துரோகம் செய்கிறார், நாளையும் செய்வார்".

உள்ளுரில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் அமைப்புக்களும் ஈழப் பிரச்சனையில் ஒற்றுமையாக நின்றன. அதை சீமான் சேதப்படுத்தி விட்டார். பொது எதிரியை விட்டு விட்டு தமக்குள் முரண்படுகின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார். எமது ஆதரவுத் தளத்தை பலவீனப்படுத்துவதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும்?

அவருடைய உணர்ச்சிகரப் பேச்சுக்களை வைத்து அவரைப் பார்ப்பது தவறு. அவருடைய செயற்பாடுகள் ஏற்படுத்து விளைவுகளை வைத்தே ஒருவரை கணிப்பிட முடியும். நாம் விளைவுகளை உணர்ந்ததனால் சீமான் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

மிகவும் தெளிவான பதில்!
வாசித்து உண்மையில் சந்தோஷ பட்டேன். காரணம் சீமானை பற்றி பல நூறு பேர்கள் சேறை வாரி இறைக்கிறார்கள். நான் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்ட போதெல்லாம் எந்த பதிலும் வருவதில்லை.
 
முதல் முதலில் நீங்கள் தெளிவாக பதில் தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்போது எனக்கு சீமானின் செயல்களில் சந்தேகம் வந்துவிட்டது. உங்களை கொஞ்சம் நம்ப தொடங்கி இருக்கிறேன் நண்பரே!
உங்களை முழுமையாக நம்ப விரும்புகிறேன். கொஞ்சம் அதிக பட்ச ஆதாரமும் எவகையில் சீமானின் செயல்கள் பாதிப்பு  செய்கின்றன. என்ற தெளிவான பதிலும்.
சீமான் தமிழகத்தில் இல்லாது போயிருப்பின் ஈழ ஆதரவு இன்னமும் அதிகமாக இருந்திருக்கும் என்ற உங்களுடைய கூற்றை................ சீமான் வருவதற்கு முனைய நாட்களில் ஏன் வரவில்லை? போன்ற சில கேள்விகளும் எனக்கு வருகிறது. இதற்கான சில பதிலகளையும் உங்களிடம் இருந்து எதிர் பார்கிறேன்.
 
புலிகள் இருந்த நாட்களில் ..............
புலிகளுக்கு எதிராக சில சக்திகள் இருந்ததையும்........... அவர்கள் எதை எதையோ எழுதி வந்திருப்பதையும்  நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் எனவும் நம்புகிறேன். உங்களுடைய எழுத்துக்கள் எனக்கு புதுமையாக இல்லை. புதிரை விடுக்க நீங்கள் முழுமையாக எழுத வேண்டும்  என்பதே என்னுடைய அவ!
 
மேலே உள்ள கட்டுரைபோல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு............ வைக்கோ அவருடன் கூட்டணி வைத்தார்  இவருடன் கூட்டணி வைத்தார் என்று எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கட்சி வைத்திருந்தால் கூட்டணி வைத்துதான் ஆக வேண்டும். கூட்டணி இல்லாத போது கட்சியை கலைத்துவிட்டு வீட்டுக்குத்தான் போக முடியும். தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாதையால் போகிறோம் என்பதிலும் விட எங்கே போகிறோம் என்பதில்தான்  அரசியல் பயணம் இருக்கிறது.
அதிமுக   வா?  திமுக வா?  இதை தாண்டி தெரிவு செய்ய தமிழக மக்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஒரு மூன்றாவது சக்தியை இரண்டில் ஒன்று தடம் புரளும்போது  நிலை நிறுத்த வேண்டு. 
எதுக்கும் நாம் உழைக்க வேண்டும்! 
இன்று ஞாயிறு 
நாளை திங்கள் 
நேற்று சனி 
என்று கட்டுரை எழுதுவதால் யாருக்கு என்ன பயன்???  அதை ஓவருனாலும் செய்தியில் பார்கிறோம்தானே .............
  • Replies 128
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றையும் நீங்கள்தான் எழுதுகிறீர்கள் 
அந்த நோக்கமும் இல்லை....
இந்த நோக்கமும் இல்லை ....
 
ஆனால் சீமானை மட்டும் நோக்கிகொண்டிருக்கிரீர்கள்?
 
அதைதான் இங்கு பலரும் எழுதுகிறார்கள் நீங்கள் செய்வதை தெரிந்ததை காட்டிலும் பல நூறு விடயங்கள் இருக்கிறது. 
 
உங்களுக்கு உண்மையான அக்கறை ஏதும் இல்லை என்று நான் எழுதினேன்.
அது உண்மை என்று நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.
இருவரும் ஒரே விடயத்தை தான் எழுதுகிறோம்.
 
உண்மையான அக்கறை உடையவர் என்றால் நான் மேல் கூறிய விட யங்களை நீங்கள் செய்ய தொடங்கி இருப்பீர்கள். 
நீங்கள் இன்னமும் அதில் ஒன்றை கூட செய்யவில்லை. இப்போது என்னிடம் படம் இருக்கிறது நிழல் இருக்கிறது என்று ஒரு புதிய படம் காட்டுகிறீர்கள்.அவ்வளவே!
இதற்கு எந்த ஆதாரமும் இல்லை..........
அப்படி இருந்தால் அது எமக்கு தேவையும்  இல்லை..... உங்களுக்குத்தான் அவை தேவை அதோடு கூடிய விழிப்புணர்வும் உங்களுக்கு தேவையாக இருக்கிறது.
 
நாம் தமிழர் கட்சிக்கு! உங்களை என்னை போன்றவர்களின் உதவியும் ஆதரவும் என்றென்றும் தேவை. அதன் கட்சி தலைவர் சீமானே எதிர்காலத்தில் ஒரு துரோகி ஆகா மாறலாம். அதையும் தாண்டி ஈழ  ஆதரவு தளம் ஒன்றை நாம் தமிழகத்தில் நிலை நாட்ட வேண்டும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் என்னையும் உங்களையும் தாண்டி அதற்காக  சுடும் வெயிலிலும்  அலைந்து திரிகிறார்கள். அவர்களுக்கு எம்மால் உதவ முடியாது போனாலும் பரவயில்லை. உபத்திரமாவது செய்யாது இருக்க நானும் நீங்களும் பழகி கொள்ள வேண்டும். 

ஆதாரம் கேட்கும் போது செய்தவற்றை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறோம்.

அப்படி இல்லை என்று சொன்னால் அவதூறு பரப்பினேன் என்று வழக்கு போடலாமே?

ஏதும் விபரம் வேண்டுமானால் கேழுங்கள் தருகிறேன். என் மீது வழக்கு பதியுங்கள்.

வகுப்பெடுக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இல்லை. இது கருத்துக்களம் உங்களுக்குக் கருத்துச் சொல்ல இருக்கும் அதேயளவு உரிமை எனக்கும் இருக்கிறது. இதைச் செய், அதைச் செய் என்று சொல்லும் உரிமை தங்களுக்கு இல்லை. செய்வதும் விடுவதும் என்விருப்பம். அந்த வரையறைக்குள் இருந்து கருத்தாடுவது தான் அனைவருக்கும் நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொன்னீர்கள்? சீமான் காசடிக்கிறார் என்று சும்மா அடிச்சுவிட வலிக்கல்ல என்று.

அதுதான் சொன்னேன். சும்மா அடிச்சு விடல செய்து போட்டுத் தான் அடிச்சு விடுறேன் என்று. இதிலை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதுமாதிரி அடிச்சு விட்டது தாங்கள் தான். அதே போல பலர் வகுப்பெடுத்து பார்த்தும் விட்டேன். இதில் புதிதாக நீங்கள் வகுப்பெடுக்க ஏதும் இல்லை. :wub::icon_idea:

நீங்கள் காசு குடுத்தீர்கள் என்று எனக்கு என்ன சாத்திரமா தெரியும்?? :D சும்மா அடிச்சுவிட வேண்டாம் என்று எழுதியபின் நான் காசு குடுத்தேன் என்கிறீர்கள். ஆக சரியான கருத்தாடல் செய்ய உங்களுக்கு தெரியவில்லை.. :D

நிற்க.. நீங்கள் காசு கொடுத்த விவரத்திற்கு வருவோம்.

1) நேரடியாக சீமானிடம் கொடுத்தீர்களா? அல்லது இடைத்தரகர்களிடம் கொடுத்தீர்களா?

2) பற்றுச்சீட்டு வாங்கினீர்களா?

3) கொடுத்தது நன்கொடையா, கடனா அல்லது வெகுமதியா? பதில் தர முடியுமா? :rolleyes:

தகவல்கள் கிடைத்ததும்

இவரின் தகவல்கள் சீமானுக்கு அனுப்பப்பட்டு

சரி  பார்க்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

இதற்கு பதில் சொல்வதன் மூலம் எனக்கு கிடைக்கும் நன்மை என்ன?

அதனால் வரும் பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

நான்   காசு குடுத்தனான். அந்தக்காசுகள் எங்கை போகுது என்றும் தெரியும்.

என்னிடம் காசு வாங்கியவரின் படம், தொலைபேசி இலக்கம் முதல் யாழில் பதிவிட முடியும். நீங்கள் என்ன நியாயம் வேண்டித்தருவீர்கள்????

தகவல்கள் கிடைத்ததும்

இவரின் தகவல்கள் சீமானுக்கு அனுப்பப்பட்டு

சரி  பார்க்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

இதற்கு பதில் சொல்வதன் மூலம் எனக்கு கிடைக்கும் நன்மை என்ன?

அதனால் வரும் பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா???

:(  :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் சொல்வதன் மூலம் எனக்கு கிடைக்கும் நன்மை என்ன?

அதனால் வரும் பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா???

நான் கேட்டவை பொதுவான கேள்விகள். தனிநபர் விவரங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. இதை வழங்குவதால் உங்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்படுமாயின் உங்கள் நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் உள்ளன. :unsure:

இதன்மூலம் இந்த விவாதத்தை மேலும் நகர்த்திச் செல்ல முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. நீங்கள் கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கருதி இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.. :lol:

உங்களுடைய ராஜதந்திரம் பிடித்திருக்கிறது. :lol:

சீமான் எங்களுக்கு தமிழீழம் பெற்று தருவதாக எங்காவது சொல்லி இருக்கிறாரா எண்று தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை...

சீமானால் தமிழீழம் பெற்று தரமுடியாது என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்... ஆனால் தமிழீழத்துக்கான தேவையை பிரச்சாரப்படுத்த அவரால் முடியும்... மந்தியில் ஆழும் காங்கிரஸ் அரசை கலவரப்படுத்தும் அளவுக்கு அவரால் செயற்பட முடியும்... இறுதிப்போருக்கு முன் வரைக்கும் வெளிப்படையாக ஈழ எதிர்ப்பு வாதம் பேசிய காங்கிரஸ் இப்போது பேசாமல் இருக்க காரணம் வைகோவோ இல்லை நெடுமாறன் அண்ணாவோ இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்... வெளிப்படையான ஈழ ஆதரவு கோரிக்கைகள் தமிழகத்தில் வைகோ நெடுமாறன் அண்ணாவை தவிர யாரும் பேசவில்லை தேசிய பாதுகாப்பு சட்டம் இருவரையும் உள்ளை போடும் போது அந்த வழக்கு முடியும் வரை அமைதி காக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது... ஆனால் சிறையில் இருந்த போதும் வெளியில் வந்த போதும் தொடர்ந்து ஈழ ஆதரவு குரல் கொடுத்து அடக்கு முறையை தீவிரமாக எதிர்த்த வகையில் சீமான் மீது மரியாதை எனக்கு உண்டு...

அதை நண்றி கெட்ட தனமாக மறந்து விமர்சிக்கும ஈழத்தவனை யாரும் கை குடுத்து தூக்க முன்வரமாட்டார்கள்...

தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவான அடித்தளம் இல்லாமல் போனதே ஈழத்தின் அழிவுக்கு காரணம்... இந்தியாவின் பிரச்சாரமே இலங்கை அரசுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது... MGR ஆதரவு குடுக்கும் வரை வளர்ச்சி உற்று நடுவெண் அரசால் அன்போடு பார்க பட்ட ஈழத்தமிழர் இண்று கைவிடப்பட்டு சிங்களவரின் கை கோலோச்சியதற்கும் கூட இறுதிப்போர் வரை தமிழகம் ஈழத்தவனுக்காக இருக்கவில்லை என்பதுதான் காரணம்... இண்று அப்படி ஒரு நிலை வரும் போது கொழுப்பெடுத்து போய் வேண்டாம் எனும் ஈழத்தவனின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது வெளிச்சமானது...

சீமான் பணத்துக்காக தான் செயற்படுகிறார் என்பவர்கள் ஒண்டை புரிந்து கொண்டால் போதும் எதையுமே இழக்காமல் நீங்கள் எதையும் பெறப்போவதில்லை... அப்படி இலவசமாக உங்களுக்கு ஏதும் கிடைக்குமா எண்டால் எனக்கும் அறிய தாருங்கள்...

அருமையான கருத்து. பின்னர் பச்சை போடுகிறேன்.

வாழ்க சீமான் ஈழத்தின் திறவு கோல் இனத்தை காக்க வந்த விடிவெள்ளி எம் தன்மான உலக தமிழ் தலைவன் மேதகு சீமான் அவர்களை வாழ்த்தி வணக்கி அவரின் கடைசியில் சேர விரும்புகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் .

ஈழதமிழன் லூசன் தேவையில்லாமல் தியாகம் அர்ப்பணிப்பு எண்டு செய்து செத்து போனதுதான் மிச்சம் ஒருத்தனுக்கும் அரசியல் அறிவு இல்லை சும்மா துவக்கு துக்கிட்டு அடிப்பான் கிழிப்பன் என்டுகிட்டு சும்மா அரைமணித்தியாலம் ஐநாவில பேசி பெற்று இருக்கலாம் அதை விட்டுட்டு ஒருத்தன் போய் ஐநாவில் தீக்குளிக்கிறான் ஆராவது தீக்குளித்தா அதில் நாங்க குளிர் கயவேனும் சும்மா தியாகம் கையை மடக்கி நீட்டி முழங்கி பேசினா எல்லாம் நடக்கும் 35 வருட போராட்டத்தை மூன்று வருடத்தில் இல்லமல் ஆக்கி என் பக்கம் எப்படி கொண்டு வந்தான் அதுதான் ராஜத்திரம் நாலு காசு பார்த்தமா கலியாணம் கட்டினமா பிள்ளையை பெறமா அண்ணன் சொன்னார் எண்டு அறிக்கை விட்டமா ஈழத்தில் பிறந்து வளர்த்த எங்களுக்கு தெரியாததை சீமான் பி பி சி க்கு சொல்லிட்டாராம் கேளுங்க இதுவரை எவனும் போராட்டம் பற்றி சொன்னதே இல்லை சீமான் மட்டும் முதல் முதல் உலக வானொலிக்கு சொல்லி இருக்குறார் அதுவே முதல் வெற்றி அடுத்து ஐநா வந்தது ஈழம் வென்றார் சீமான் .

தேசியத்தலைவனுக்கு விசுவாசமா உண்மையா இருக்குற எவனும் சீமானுக்கு செம்பு தூக்கான் என்பது உண்மை

சொல்லுக்கு முன் செயல் என வாழ்த்தவர் எங்கள் தலைவர் ...........வஞ்சனை செய்வாரடி வாய் சொல்லில் வீர்ரரேடி . .

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் கேட்கும் போது செய்தவற்றை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறோம்.

அப்படி இல்லை என்று சொன்னால் அவதூறு பரப்பினேன் என்று வழக்கு போடலாமே?

ஏதும் விபரம் வேண்டுமானால் கேழுங்கள் தருகிறேன். என் மீது வழக்கு பதியுங்கள்.

வகுப்பெடுக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இல்லை. இது கருத்துக்களம் உங்களுக்குக் கருத்துச் சொல்ல இருக்கும் அதேயளவு உரிமை எனக்கும் இருக்கிறது. இதைச் செய், அதைச் செய் என்று சொல்லும் உரிமை தங்களுக்கு இல்லை. செய்வதும் விடுவதும் என்விருப்பம். அந்த வரையறைக்குள் இருந்து கருத்தாடுவது தான் அனைவருக்கும் நல்லம்.

உங்களுடைய நிலைப்பாடு எதுவாகவும் இருக்கலாம்...........
எங்களுடைய நிலைப்பாடு  எல்லோரும்  தமிழ் விடிவை நோக்கி நகர்வதே.
சோம்பேறிகளுக்கு இதில் பல இடையூறுகள் இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.
அதற்காக நல்லெண்ணங்களை புறம்தள்ள முடியாது.
 
வரையறை என்பதற்கும் நீங்கள் நின்றிருந்தால் ... உங்களுடைய விவாதம் வேறு மாதிரி இருக்கும். 
இதுவரையில் நீங்கள் எந்த ஆதாரமும் அற்றுத்தான் சீமான் மீது சேறு பூசிநீர்கள்.
இப்போ காசு கொடுத்தேன் என்கிறீர்கள். காசு கொடுத்தால் ஈழம் பெறலாம் என்ற வெறும் மாயைக்குள் இசைகலைஞன் எழுதியதுபோல் இருந்திருக்கிறீர்கள். மாயைக்குள் இருந்துகொண்டு வரையறைகளை தாண்டியவர் தாங்கள்.....
எங்களுக்கு வகுப்பெடுக்கிரீர்கள். யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று வேறு எழுதி வைத்திருக்கிறீர்கள்.
 
நாங்கள் கைகளை கோர்த்து சீமானை பல படுத்துவோம் வாருங்கள் !
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எங்களுக்கு தமிழீழம் பெற்று தருவதாக எங்காவது சொல்லி இருக்கிறாரா எண்று தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை...

சீமானால் தமிழீழம் பெற்று தரமுடியாது என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்... ஆனால் தமிழீழத்துக்கான தேவையை பிரச்சாரப்படுத்த அவரால் முடியும்... மந்தியில் ஆழும் காங்கிரஸ் அரசை கலவரப்படுத்தும் அளவுக்கு அவரால் செயற்பட முடியும்... இறுதிப்போருக்கு முன் வரைக்கும் வெளிப்படையாக ஈழ எதிர்ப்பு வாதம் பேசிய காங்கிரஸ் இப்போது பேசாமல் இருக்க காரணம் வைகோவோ இல்லை நெடுமாறன் அண்ணாவோ இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்... வெளிப்படையான ஈழ ஆதரவு கோரிக்கைகள் தமிழகத்தில் வைகோ நெடுமாறன் அண்ணாவை தவிர யாரும் பேசவில்லை தேசிய பாதுகாப்பு சட்டம் இருவரையும் உள்ளை போடும் போது அந்த வழக்கு முடியும் வரை அமைதி காக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது... ஆனால் சிறையில் இருந்த போதும் வெளியில் வந்த போதும் தொடர்ந்து ஈழ ஆதரவு குரல் கொடுத்து அடக்கு முறையை தீவிரமாக எதிர்த்த வகையில் சீமான் மீது மரியாதை எனக்கு உண்டு...

அதை நண்றி கெட்ட தனமாக மறந்து விமர்சிக்கும ஈழத்தவனை யாரும் கை குடுத்து தூக்க முன்வரமாட்டார்கள்...

தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவான அடித்தளம் இல்லாமல் போனதே ஈழத்தின் அழிவுக்கு காரணம்... இந்தியாவின் பிரச்சாரமே இலங்கை அரசுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது... MGR ஆதரவு குடுக்கும் வரை வளர்ச்சி உற்று நடுவெண் அரசால் அன்போடு பார்க பட்ட ஈழத்தமிழர் இண்று கைவிடப்பட்டு சிங்களவரின் கை கோலோச்சியதற்கும் கூட இறுதிப்போர் வரை தமிழகம் ஈழத்தவனுக்காக இருக்கவில்லை என்பதுதான் காரணம்... இண்று அப்படி ஒரு நிலை வரும் போது கொழுப்பெடுத்து போய் வேண்டாம் எனும் ஈழத்தவனின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது வெளிச்சமானது...

சீமான் பணத்துக்காக தான் செயற்படுகிறார் என்பவர்கள் ஒண்டை புரிந்து கொண்டால் போதும் எதையுமே இழக்காமல் நீங்கள் எதையும் பெறப்போவதில்லை... அப்படி இலவசமாக உங்களுக்கு ஏதும் கிடைக்குமா எண்டால் எனக்கும் அறிய தாருங்கள்...

ஆமாம் தயா அண்ணா உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் காங்கிரஸ் தற்போதும் ஈழ எதிர்ப்பு வாதம் பேசுவதற்கு ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் எதாவது பலமான செயற்பாட்டில் ஈடுபடுகின்றனரா?
 
புலிகளை அழித்தோ அல்லது ஆயுதங்களை மெளனிக்கவோ வைத்தாயிட்டுது இனி மேல் காங்கிரசிற்கு ஈழ எதிர்ப்பு வாதம் கதைப்பதற்கு என்ன தேவை இருக்குது என விளங்கப்படுத்தினால் நல்லது
  • கருத்துக்கள உறவுகள்

சுதர்சன நாச்சியப்பனின் சூதாட்ட அரசியல்..

September 11, 2013

suder.jpg

ஈழத் தமிழனின் ஆவியிலும் அரசியல் பண்ணும் இந்திய அரசியல்வாதிகள்..

காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டு வாக்காளரை கவர்வதற்கு நயவஞ்சகமான வியூகம் ஒன்றை வகுத்துள்ளது.

இதற்கான முதலாவது துரும்புச் சீட்டை சுதர்சன நாச்சியப்பன் மூலமாக போட்டுள்ளது, அவர் பேசியிருக்கும் பொன் குஞ்சு வாசகங்கள் இவைதான்.

” இலங்கை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பூமி.. அந்தப் புண்ணிய பூமியை விட்டுவிட்டு அதற்கு எதிர்ப்பாக நீங்கள் எதைச் செய்தாலும் நாளைக்கு தமிழ் ஈழம் என்பது கனவாகவே போய்விடும் ”

” நாம் அந்தக் கனவை நனவாக்குவோம், பூமியை முதலில் கைப்பற்றுவோம், இஸ்ரேல் கைப்பற்றப்பட்டது, பாலஸ்தீனம் கைப்பற்றப்பட்டது அதுபோல இலங்கையில் உள்ள தமிழ் பூமியும் கைப்பற்றப்பட வேண்டும் என்ற இலட்சியத்துடன் பாடுபட்டுக் கொண்டிருங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்”

“இலங்கை நமக்கு சொந்தம் தமிழீழம் நமக்கு சொந்தம்..! ” என்று கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்து தற்செயலான கருத்தல்ல நன்கு திட்டமிட்டு வகுக்கப்பட்ட ஓர் ஏமாற்று வியூகத்தின் வடிவமே.

எப்படி..?

01. இலங்கை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பூமி என்று கூறி, ஒன்றுபட்ட தாயகம் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்று மகிந்த ராஜபக்ஷவுக்கு முன் நாடகமாடக்கூடியவாறு ஒரு கருத்து இருக்கிறது.

02. தமிழ் நாட்டு தேர்தல் களத்தில் தமிழீழம் நமக்கு சொந்தம் என்று சீமான், வை.கோ கூறுவதைப்போலவே காங்கிரசும் கூறியிருக்கிறதே.. பிறகு எதற்கு காங்கிரசை எதிர்க்கிறீர்கள்..? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் களத்தில் இதையே உதாரணம் காட்டி பாமர மக்களை ஏமாற்ற முடியும்.

03. முதலில் நிலத்தை கைப்பற்றுங்கள் என்று சொல்லியிருப்பது மகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுங்கள் அதன் மூலம் ஒரு மாநில ஆட்சியை உருவாக்குங்கள் என்பதே எமது விருப்பம் என்று பொத்தாம் பொதுவில் வட இந்தியாவில் கருத்துரைக்க முடியும்.

04. இலங்கை என்பது தமிழீழம் அல்ல.. ‘

“இலங்கை என்ற புண்ணிய பூமிக்கு எதிராக கருத்துரைத்தால் தமிழீழம் என்பது கனவாகும் ”

அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிராக கருத்துரைத்தால் தமிழர்களுக்கான தாயகம் என்ற அற்ப சொற்ப சலுகையையும் கனவாக்கி, ராஜபக்ஷவின் சிங்கள குடியேற்றங்கள் மூலமாக அனைத்தையும் அழிப்போம் என்ற சோனியா – மன்மோகன் சிங் எச்சரிக்கையையே நாம் சொன்னோம் என்று காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கற்பிதம் பண்ணவும் முடியும்.

” ஐயா.. இது சுதர்சன நாச்சியப்பன் சொன்னதல்ல சுதந்திரம் கிடைத்தவுடன் ஜவகர்லால் நேரு பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது இலங்கை என்பது இந்தியாவின் ஒரு மாநிலம் என்று கூறினாரே அதைத்தான் சொல்லியிருக்கிறார் நமது நாச்சியப்பன் ” என்று காங்கிரஸ் தனக்குள் மறைவாகக் கருத்துக் கொடுக்கும்.

கச்சதீவுதான் நமக்கு சொந்தம் என்கிறது அதிமுகவும், திமுகவும், ஆனால் நாமோ ஒருபடி மேலே போய் இலங்கைத் தீவே நம் தமிழருக்கே சொந்தம் என்கிறோமே.. இது எப்படியிருக்கு..?

அவர்களும் கச்சதீவை மீட்க முடியாது, நாங்களும் இலங்கையை மீட்க முடியாது.. நானும் நீயும் சோடி.. ஓடிப்பார்ப்போம் வாடி என்பதுதான் நாச்சியப்பன் கருத்து.

இந்தக் கோமாளித்தனங்களை நாம் ஏன் கவனிக்க வேண்டும்…?

இந்திய சர்க்கஸ் கோமாளிகளின் கையில் இலங்கைத் தமிழர்கள் பம்பரமாக சுற்றப்படுவது இன்னமும் நின்றபாடில்லை.. ஆகவேதான் கவனிக்க வேண்டும்.

இனி என்ன நடக்கும்..?

” பிரிவினைவாதத்தைத் தூண்டவில்லை ” என்ற மறுப்பறிக்கையை அமைச்சர் விடுவார், இந்தியன் எக்ஸ்பிரசில் வந்துவிட்டது.

அமைச்சரை கண்டிப்பாக காங்கிரஸ் பதவியில் இருந்து வெளியேற்றாது..

மகிந்த ராஜபக்ஷ இதற்கு எதிராக இதுவரை கருத்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அவருக்கு இந்த வசனக் கோர்வை அனுப்பப்பட்டு, அவரின் அனுமதி பெற்றே பேசப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு..

காரணம் இந்த வசனக்கோர்வை இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் போல நன்கு திட்டமிட்ட உருவாக்கமாகவே இருக்கிறது.

இதற்கிடையில்..

நாச்சியப்பனையும், நாராயணசாமியையும் வைத்து காங்கிரஸ் தமது டெசோ பித்தலாட்டத்தைவிட பெரிய பித்தலாட்டம் பண்ணுகிறதேயென்று பொருளற்ற வசன மன்னரான மு.கருணாநிதி சலித்துப் போய் நாளைக்கு இன்னொரு வசன விளையாட்டை விளையாட வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் தமிழருக்கு எதிராக செயற்படுகிறது என்று மு.கருணாநிதி சென்ற வாரம் வெளியிட்ட அறிக்கையும்..

தமிழக மீனவர்களையும் காங்கிரஸ் தமிழ் மக்களாக புறக்கணிக்காமல் இந்திய மக்களாக கருத வேண்டுமென்று அ.தி.மு.க பாராளுமன்றத்தில் சொன்னதையும் கருத்தில் கொண்டு..

எல்லாவற்றுக்கும் பொதுவாக காங்கிரஸ் வடிவமைத்த வசனக்கோர்வைதான் சுதர்சன நாச்சியப்பனின் பேட்டி..

இதில் கவலை தரும் விடயம் என்னவென்றால்..

ஈழத் தமிழன் இன்னமும் புண்ணாக்கு உருட்டிக் கொண்டிருப்பதாகவே இவர்கள் எடைபோட்டு வசனங்களை உருவாக்குவதுதான், சோகங்களில் எல்லாம் பெரும் சோகம்.

http://www.alaikal.com/news/?p=135017

சீமான் தான் எமது புதிய  தலைவர். அப்பாடா ஒரு தலைவர் ஒரு மாதிரிக் கிடச்சுது.

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

1231308_558525694214306_1431521137_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தான் எமது புதிய  தலைவர். அப்பாடா ஒரு தலைவர் ஒரு மாதிரிக் கிடச்சுது.

அப்படியெல்லாம் உங்களுக்குள்ளேயே கொடுமையை செய்துகொண்டுவிடாதீர்கள் அம்மணி.

தமிழ் நாட்டின் ஈழ ஆதரவை தக்க வைக்க அவர் ஒரு கருவி. அந்தளவே அவரின் எல்லை.

தமிழ் நாட்டின் ஈழ ஆதரவு தளத்தை சமயோசிதமாக பயன்படுத்துவம், பயன்படுத்தாமல் விடுவதும் எப்பொழுதும் உங்களின் அரசியல் நகர்வுகளில் தான் தங்கியுள்ளது. இனியும் அப்படியே தொடரும். அது தேவையா? இல்லையா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

"இல்லை, இந்த ஆதரவு தளங்களால் என்னத்தை இதுவரை நாங்கள் சாதித்துக் கிழித்தோம்?" என நீங்கள் எண்ணினால் ஒன்றும் சொல்ல இயலாது.

நாங்களும் மெளனிக்க வேண்டியதுதான்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குடுமிப் பிடி சச்சரவுகள் விட்டொழித்துவிட்டு, ஒற்றுமையாக ஒருமித்து உங்களுக்குள்ளேயே ஒரு சிறந்த தலைவரை ஏன் தேட மாட்டேங்கிறீர்கள்? அதற்கு முதலில் வழி தேடுங்கள்.

காலம் நகர்கிறது, அப்புறம் இந்த அடிமை வாழ்வே பழகிவிடும். :(

ஆமாம் தயா அண்ணா உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் காங்கிரஸ் தற்போதும் ஈழ எதிர்ப்பு வாதம் பேசுவதற்கு ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் எதாவது பலமான செயற்பாட்டில் ஈடுபடுகின்றனரா?
 
புலிகளை அழித்தோ அல்லது ஆயுதங்களை மெளனிக்கவோ வைத்தாயிட்டுது இனி மேல் காங்கிரசிற்கு ஈழ எதிர்ப்பு வாதம் கதைப்பதற்கு என்ன தேவை இருக்குது என விளங்கப்படுத்தினால் நல்லது

சும்மா தண்ட தேவைக்கு வந்து எதையாவது எழுதாதீர்...!  

காங்கிரஸ் தாங்கள் ஈழத்தில் செய்தவைகளை நியாய படுத்த வேண்டிய தேவையிலேயே இப்பவும் இருக்கிறது...  இலங்கை இராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்ச்சி கொடுப்பதில் இருந்து இலங்கைக்கு கப்பல்களை வளங்குவது வரை  ஒரு ஒளிவு மறைவு செயற்பாடு தான் இண்றைய காங்கிரஸ்... 

இது அடிப்படையில் இலங்கையில் இந்திய செயற்பாடு தெரிந்த எல்லாருக்கும் தெரிந்த விடயம்...  சும்மா தேவையே இல்லாமல்  எனது நேரத்தை வீணாக்காதீர்... 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் எதற்கு சீமான் பெயர் போடப்பட்டது என்று புரியவில்லை. அனைத்து தமிழக அரசியல்வாதிகளையும் குற்றம் சாட்டிவிட்டு சீமான் என்ற ஒருவரின் பெயரை மட்டும் தலையங்கத்தில் போட்டதில் என்ன நியாயம் இருக்கின்றது? அதற்கு ஏற்றாற்போல் இங்கே 90வீதமான கருத்துக்களும் அவரை குறி வைத்தே வருகின்றன. 

யாரோ ஒரு கள உறவு சீமான் ஜெயாவை எதிர்த்து பேசவில்லையே என்று கேட்டிருந்தார். அவர் ஒரு மேடையில் எதிர்த்துப்பேசியுள்ளார். அதன் வீடியோ இணையத்தளங்களில் உள்ளன. 

யாழிலை மட்டும் நான் பார்த்து வந்த ஒரு மாயை என்னவென்றால் "சீமான் தமிழீழத்தை பெற்று தருவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என்ற நோக்கில் அமைந்த வசன அமைப்புகள்.

மக்கள் யாரும் சீமான் தமிழீழத்தை பெற்றுதருவார் என்று ஒற்றைக்காலில் நிற்கவில்லை. அப்படி நினைப்பவர்கள் ஒரு சிறிய விகிதமே. தயவுசெய்து "மக்கள் அப்படி நினைக்கிறார்கள்" என்ற உங்கள் நினைப்பை மாற்றுங்கள். சீமானும் எந்த மேடையிலும் தான் தமிழீழத்தை பெற்றுத்தருவேன் என்று சொல்லவில்லை. அடுத்த தமிழினத்தலைவன் தானே என்றும் பேசியதில்லை. இதெல்லாம் அவர் பேசியது போல் ஒரு மாயையான கருத்துக்கள் இஙகே யாழ் களத்தில் தான் உருவெடுக்கின்றது. 

சீமான் இந்தியப்பிரதமர் ஆனால் மாத்திரமே எமக்கு ஏதாவது செய்யமுடியும் என்பது பொய்க்கருத்த! ஒரு தமிழர் இந்தியப்பிரதமர் ஆவது நடைமுறைச்சாத்தியமாகுமா என்பதே கேள்விக்குறி.

ஆனால் முதலமைச்சர் பதவியை வைத்து எமக்கு ஆதரவான விடயங்களை செய்யமுடியும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். முதலமைச்சர் என்பவரால்ஆதரவு மட்டுமே எமக்கு பெற்றுத்தர முடியும். அந்த ஆதரவும் தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வுள்ள மக்கள் இருக்கும்வரை தான் பெற்றுத்தர முடியும். எதிர்கால சந்ததி தமிழ்உணர்வுள்ளதாக வளரவே பல தமிழ் உணர்வாளர்கள் தற்பொழுது வேலைசெய்கிறார்கள். மரத்தில் இலைகளை சீர்படுத்துவதை விட அந்த மரத்தின் வேர்களை சீர்படுத்தினால் தூர நோக்கில் அந்த மரத்தை செழிப்பாக வைத்திருக்கமுடியும். அதை தான் இன்று பலர் செய்கின்றார்கள். இதை சிலர் "ஓட்டுப்பொறுக்கி" அரசியல் என்றும் வர்ணிக்கிறார்கள். பார்ப்பவர்களின் கண்களை பொறுத்தது. 

எம்.ஜி.ஆர். அவர்கள் இல்லாவிடின் தாம் அனாதகைள் ஆக்கப்பட்டிருப்போம் என்று தலைவர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கின்றார். ஆனால் அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களையே "மலையாளி" என்று பட்டம் கட்டி விமர்சிக்கின்றோம். நாம் ஒரு நன்றியுள்ள இனம்! நம்புங்கய்யா நாங்க நன்றியுள்ளவங்க தான் :)

இந்திய அரசியல் வாதிகள் செய்வது சந்தர்ப்பவாத அரசியலா இல்லையா என்பது அவரவர் பார்வையில் உள்ளது. அது சர்தர்ப்பவாதமோ இல்லையோ அதை நாம் எமக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். நாம் அப்படி செய்யப்போவதில்லை. மாறாக அவர்களிடமே சென்று "நீ என்னை வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நினைத்தாய் அதை நான் கண்டு பிடித்துவிட்டேன் பார்த்தாயா" எமது புத்திசாலித்தனத்தை அவர்களிற்கு நிருபித்துவிட்டோம் என்று மகிழ்ச்சியில் துள்ளுவோம். இறுதியில் அந்த சந்தர்ப்பவாத அரசியலால் எமக்கு கிடைக்கவிருந்த கொஞ்ச நன்மையையும் இல்லாதொழிப்போம். 

வேடிக்கை என்னவென்றால் இன்று உலகமே எம்மை வைத்து சந்தர்பவாத அரசியல் தான் செய்கின்றது. நன்றாக குறித்துவைத்துக்கொள்ளுங்கள் ஒரு காலத்தில் எமக்கான ஒரு நாடு அமைந்தால் நாமும் விடுதலைக்காக போராடும் நாடுகளுடன் எமது நலனை முன் நிறுத்தியே அரசியல் செய்வோம். அந்த சுயநல அரசியலில் உள்ளவற்றை தமக்கு சாதகமாக யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெளிவருவார்கள். 

Edited by செங்கொடி

அவரவர்கள் தங்களால் முடிந்ததை செய்யவிடுங்கள்.அது சீமானாய் இருக்கட்டும் விக்னேஸ்வரனாய் இருக்கட்டும் .நாங்கள் அவர்களைவிட அதிகம் செய்துகொண்டு இருக்கிறோமா?அப்படி இருந்தால் நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா தண்ட தேவைக்கு வந்து எதையாவது எழுதாதீர்...!  

காங்கிரஸ் தாங்கள் ஈழத்தில் செய்தவைகளை நியாய படுத்த வேண்டிய தேவையிலேயே இப்பவும் இருக்கிறது...  இலங்கை இராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்ச்சி கொடுப்பதில் இருந்து இலங்கைக்கு கப்பல்களை வளங்குவது வரை  ஒரு ஒளிவு மறைவு செயற்பாடு தான் இண்றைய காங்கிரஸ்... 

இது அடிப்படையில் இலங்கையில் இந்திய செயற்பாடு தெரிந்த எல்லாருக்கும் தெரிந்த விடயம்...  சும்மா தேவையே இல்லாமல்  எனது நேரத்தை வீணாக்காதீர்... 

நீங்கள் எழுதியது உங்களுக்கே முரண்ணாக தெரியவில்லையா?.......முதலாவது கருத்தில் சீமானுக்கு பயத்தில் காங்கிரஸ் தற்போது ஈழ எதிர்ப்பு வாதம் பேசுவததில்லை என்று எழுதி இருக்கிறீர்கள்.நான் அது எப்படி என்று விளக்க முடியுமா என்று கேட்டதும் உங்கள் இந்தக் கருத்தில் காங்கிரஸ் இப்பவும் ஒளிவு,மறைவாக செயற்படுகிறார்கள் என்று எழுதி இருக்கிறீர்கள்.
 
காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்து எங்களை அழிக்க  நேரடியாகவோ,மறைமுகமாகவோ செயற்பட்டு கொண்டு தான் இருக்குது.அது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்.ஆனால் நீங்கள் தான் உணர்ச்சி வேகத்தில் சீமானுக்கு பயத்தில் காங்கிரஸ் அடக்கி வாசிக்கிறார்கள் என்று எழுதினீர்கள்.
 
எழுதும் போது வாசிப்பவரை முட்டாளாக்காமல் எழுதுங்கள்.இனி மேல் கொஞ்சப் பேர் ஓடி வருவார்கள் தயா அண்ணா அப்படி எழுதவில்லை,இப்படி எழுதவில்லை என்று சொல்லிக் கொண்டு :)
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல் வாதிகள் செய்வது சந்தர்ப்பவாத அரசியலா இல்லையா என்பது அவரவர் பார்வையில் உள்ளது. அது சர்தர்ப்பவாதமோ இல்லையோ அதை நாம் எமக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். நாம் அப்படி செய்யப்போவதில்லை. மாறாக அவர்களிடமே சென்று "நீ என்னை வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நினைத்தாய் அதை நான் கண்டு பிடித்துவிட்டேன் பார்த்தாயா" எமது புத்திசாலித்தனத்தை அவர்களிற்கு நிருபித்துவிட்டோம் என்று மகிழ்ச்சியில் துள்ளுவோம். இறுதியில் அந்த சந்தர்ப்பவாத அரசியலால் எமக்கு கிடைக்கவிருந்த கொஞ்ச நன்மையையும் இல்லாதொழிப்போம். 

நன்றி உறவே....நீங்கள் நல்ல தெளிவாய் தான் இருக்கிறீங்கள்....அருமையான ஒரு கருத்து...............

நீங்கள் எழுதியது உங்களுக்கே முரண்ணாக தெரியவில்லையா?.......முதலாவது கருத்தில் சீமானுக்கு பயத்தில் காங்கிரஸ் தற்போது ஈழ எதிர்ப்பு வாதம் பேசுவததில்லை என்று எழுதி இருக்கிறீர்கள்.நான் அது எப்படி என்று விளக்க முடியுமா என்று கேட்டதும் உங்கள் இந்தக் கருத்தில் காங்கிரஸ் இப்பவும் ஒளிவு,மறைவாக செயற்படுகிறார்கள் என்று எழுதி இருக்கிறீர்கள்.
 
காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்து எங்களை அழிக்க  நேரடியாகவோ,மறைமுகமாகவோ செயற்பட்டு கொண்டு தான் இருக்குது.அது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்.ஆனால் நீங்கள் தான் உணர்ச்சி வேகத்தில் சீமானுக்கு பயத்தில் காங்கிரஸ் அடக்கி வாசிக்கிறார்கள் என்று எழுதினீர்கள்.
 
எழுதும் போது வாசிப்பவரை முட்டாளாக்காமல் எழுதுங்கள்.இனி மேல் கொஞ்சப் பேர் ஓடி வருவார்கள் தயா அண்ணா அப்படி எழுதவில்லை,இப்படி எழுதவில்லை என்று சொல்லிக் கொண்டு :)

ஹா ஹா ஹா முடில ரதி :D ஒரு இந்தியாவின் தேசிய கட்சி சீமானுக்கு பயமாம் ஏலே .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் எதற்கு சீமான் பெயர் போடப்பட்டது என்று புரியவில்லை. அனைத்து தமிழக அரசியல்வாதிகளையும் குற்றம் சாட்டிவிட்டு சீமான் என்ற ஒருவரின் பெயரை மட்டும் தலையங்கத்தில் போட்டதில் என்ன நியாயம் இருக்கின்றது? அதற்கு ஏற்றாற்போல் இங்கே 90வீதமான கருத்துக்களும் அவரை குறி வைத்தே வருகின்றன. 

யாரோ ஒரு கள உறவு சீமான் ஜெயாவை எதிர்த்து பேசவில்லையே என்று கேட்டிருந்தார். அவர் ஒரு மேடையில் எதிர்த்துப்பேசியுள்ளார். அதன் வீடியோ இணையத்தளங்களில் உள்ளன. 

யாழிலை மட்டும் நான் பார்த்து வந்த ஒரு மாயை என்னவென்றால் "சீமான் தமிழீழத்தை பெற்று தருவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என்ற நோக்கில் அமைந்த வசன அமைப்புகள்.

மக்கள் யாரும் சீமான் தமிழீழத்தை பெற்றுதருவார் என்று ஒற்றைக்காலில் நிற்கவில்லை. அப்படி நினைப்பவர்கள் ஒரு சிறிய விகிதமே. தயவுசெய்து "மக்கள் அப்படி நினைக்கிறார்கள்" என்ற உங்கள் நினைப்பை மாற்றுங்கள். சீமானும் எந்த மேடையிலும் தான் தமிழீழத்தை பெற்றுத்தருவேன் என்று சொல்லவில்லை. அடுத்த தமிழினத்தலைவன் தானே என்றும் பேசியதில்லை. இதெல்லாம் அவர் பேசியது போல் ஒரு மாயையான கருத்துக்கள் இஙகே யாழ் களத்தில் தான் உருவெடுக்கின்றது. 

சீமான் இந்தியப்பிரதமர் ஆனால் மாத்திரமே எமக்கு ஏதாவது செய்யமுடியும் என்பது பொய்க்கருத்த! ஒரு தமிழர் இந்தியப்பிரதமர் ஆவது நடைமுறைச்சாத்தியமாகுமா என்பதே கேள்விக்குறி.

ஆனால் முதலமைச்சர் பதவியை வைத்து எமக்கு ஆதரவான விடயங்களை செய்யமுடியும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். முதலமைச்சர் என்பவரால்ஆதரவு மட்டுமே எமக்கு பெற்றுத்தர முடியும். அந்த ஆதரவும் தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வுள்ள மக்கள் இருக்கும்வரை தான் பெற்றுத்தர முடியும். எதிர்கால சந்ததி தமிழ்உணர்வுள்ளதாக வளரவே பல தமிழ் உணர்வாளர்கள் தற்பொழுது வேலைசெய்கிறார்கள். மரத்தில் இலைகளை சீர்படுத்துவதை விட அந்த மரத்தின் வேர்களை சீர்படுத்தினால் தூர நோக்கில் அந்த மரத்தை செழிப்பாக வைத்திருக்கமுடியும். அதை தான் இன்று பலர் செய்கின்றார்கள். இதை சிலர் "ஓட்டுப்பொறுக்கி" அரசியல் என்றும் வர்ணிக்கிறார்கள். பார்ப்பவர்களின் கண்களை பொறுத்தது. 

எம்.ஜி.ஆர். அவர்கள் இல்லாவிடின் தாம் அனாதகைள் ஆக்கப்பட்டிருப்போம் என்று தலைவர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கின்றார். ஆனால் அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களையே "மலையாளி" என்று பட்டம் கட்டி விமர்சிக்கின்றோம். நாம் ஒரு நன்றியுள்ள இனம்! நம்புங்கய்யா நாங்க நன்றியுள்ளவங்க தான் :)

இந்திய அரசியல் வாதிகள் செய்வது சந்தர்ப்பவாத அரசியலா இல்லையா என்பது அவரவர் பார்வையில் உள்ளது. அது சர்தர்ப்பவாதமோ இல்லையோ அதை நாம் எமக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். நாம் அப்படி செய்யப்போவதில்லை. மாறாக அவர்களிடமே சென்று "நீ என்னை வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நினைத்தாய் அதை நான் கண்டு பிடித்துவிட்டேன் பார்த்தாயா" எமது புத்திசாலித்தனத்தை அவர்களிற்கு நிருபித்துவிட்டோம் என்று மகிழ்ச்சியில் துள்ளுவோம். இறுதியில் அந்த சந்தர்ப்பவாத அரசியலால் எமக்கு கிடைக்கவிருந்த கொஞ்ச நன்மையையும் இல்லாதொழிப்போம். 

வேடிக்கை என்னவென்றால் இன்று உலகமே எம்மை வைத்து சந்தர்பவாத அரசியல் தான் செய்கின்றது. நன்றாக குறித்துவைத்துக்கொள்ளுங்கள் ஒரு காலத்தில் எமக்கான ஒரு நாடு அமைந்தால் நாமும் விடுதலைக்காக போராடும் நாடுகளுடன் எமது நலனை முன் நிறுத்தியே அரசியல் செய்வோம். அந்த சுயநல அரசியலில் உள்ளவற்றை தமக்கு சாதகமாக யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெளிவருவார்கள். 

இதெல்லாம் யாருக்கு புரியுது ...............?
வந்து பச்சை வேற குத்துறார்கள்.
என்ன எழுதி இருக்கு என்று வசிக்கவே அறிவு மட்டு. இந்த லட்சனத்தில் எழுதி வகுபெடுக்கிரார்கள்.
இந்த கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை!
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா முடில ரதி :D ஒரு இந்தியாவின் தேசிய கட்சி சீமானுக்கு பயமாம் ஏலே .

உங்கட கிண்டலுக்கும் வெட்டிக் கதைக்கும் காலம் தான் பதில் சொல்லும்....அதை பார்த்து உங்கள மாதிரியான ஆட்கள் பெருமை பட மாட்டினம். புறாமை தான் படுவினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.