Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸார் மீது வாள்வெட்டு: சந்தேகத்தில் 8 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

D0464111100.jpg

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சந்தியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் இருவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஆனைக்கோட்டைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில ஈடபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிசார் மறிக்க முற்பட்ட வேளையில் பொலிசாருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் இடையே இடம்பெற்ற இழுபறியைத் தொடர்ந்து குறித்த நபர்கள் பொலிசாரை வாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்தளையைச் சேர்ந்த வசந்த அபேயரத்தின (வயது37) என்பவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த மானிப்பாய் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/local.php?vid=7499

இனி எத்தினை அப்பாவி உயிர் போகபோகுது ஆண்டவா :(

  • கருத்துக்கள உறவுகள்

இதில்  ஏதோ சதி  இருக்கிறது

மக்களும்

தேர்தலில் வென்ற ஐனநாயகவாதிகளும் கவனமாகவும்  விளிப்பாகவும் இருக்கணும்

சர்வதேச நாடுகளுக்கு அறிவித்து  இதனை  முளையிலேயே  கிள்ளவும்

 மக்களுக்கு பாதுகாப்பு  உத்தரவாதமளிக்கவும்  உழைக்கணும்  

  • தொடங்கியவர்

எல்லாம் மீண்டும் மக்களை ஒடுக்கு முறைக்குள் வைத்து வதைக்க சிங்கள அரசால் தீட்டப்பட்ட சதி 

இனி எத்தினை அப்பாவி உயிர் போகபோகுது ஆண்டவா :(

ஈழம் ஒன்றுதான் எமது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் 

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கியோட நிக்கிர போலிசுகரன்கல்ளை கிட்டை போய் வாளாலை வெட்ரென்டா சும்மாவா? ஜமகாதகஙப்பா.....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா உசுப்பேத்தி விடுங்கோ ஆற்ற்யோ பிள்ளையள்தானே, பொலிசுக்காரன் போட்டு மிதிப்பான். நமக்கென்ன வலிக்கவாபோது? ஆனைக்கோட்டை சம்பவத்தை வச்சு கள்ள பிரக்கிராசியளை கொண்டு ஒரு புனைகதை எழுதி, கொழும்பில் வாழும் தம்பியையோ அண்ணனையோ அசைலம் அடிப்பிச்சு புலத்தில செட்டில் ஆக்கலாம். உண்மையில் மாட்டுப்பட்ட அப்பாவிகள் கதை அதோ கதிதான். எமகாதகர்களப்பா புலத்து புண்ணிய வான்கள்.

இங்கு யார் அப்படி எழுதியுள்ளார்கள்

நீங்கள் வேண்டுமென்றே புனை கதைகளைப்பரப்புகின்றீர்கள்

எமது நேரத்தை தயவு செய்து வீணடிக்கவேண்டாம்.

மக்கள்  மீது அன்பிருந்தால்

உண்மையை தரிசியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மேலே வணங்கா முடியின் பதிவைப் பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மேலே வணங்கா முடியின் பதிவைப் பார்க்கவும்.

அவரின் கருத்தை  நீங்கள் புரிந்து கொள்ளவில்லை

அவர் இது  சோடிக்கப்பட்ட  நாடகம் என்கிறார்........ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒட்டுக்குழு விற்கும் காவற்துறைக்குக்கும் இடையில்

ஏற்பட்ட உள் நாட்டுப் பிரச்சனையாம்
 
புலம் பெயர்ந்த நாம் கவலைப்பட ஏதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் காலத்திற்கு முன்னர் ராசாக்களின்

காலத்தில்  இருந்தே தமிழரிடம் இருந்த கெட்ட பழக்கங்களில்
 
ஒன்று மற்றவர்களை அண்டிப்பிழைப்பது
இரண்டு மற்றவர்களுக்கு அள்ளி  வைப்பது
மூன்று காட்டிக் கொடுத்துப் பிழைப்பது
நாலு பினாமி வைத்திருப்பது.
 
நாங்கள் யார்??? மாறவே மாட்டோம் .

ஆனைக்கோட்டையில் அடி வாங்கிய போலீசார்

அடித்தவர்களுடன் ஒன்றானாலும் தமிழன்
தன்பாணியிலிருந்து விலகவே மாட்டான்
 
நாங்கள் யார்??? மாறவே மாட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

கெரிக்டா சொன்னீங்க வாத்தி. என்னென்டாலும் படிச்சமனுசரெல்லே.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சிங்கள ட்றபிக் பொலீஸார் சந்திக்குச்சந்தி நின்று பணம் பறிக்கிறார்கள்.  சிலவேளை வாள்வெட்டுக்கு அதுவும் ஓர் காரணமாயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பறிப்பது என்று சொல்லி சிங்கள காவல் துறையின் மனதை நோகடிக்ககூடாது.

"சப்போர்ட்" என்று சொல்ல வேண்டும். :)

சீ

இதுவும் இல்லை

இப்படி ஏதாவது கொடுத்து வந்தால்தான் அவன் எம்மீது சந்தேகமோ   கோபமோ கொள்ளமாட்டான்.

இல்லையென்றால்.............??? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் ஒன்றுதான் எமது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் 

விடுதலை புலிகளின் ஆட்சியில் ஈழத்தில் இருந்த மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்காததனால் இன்று ஒரு லட்ச்சத்துக்கும் மேலான மக்கள் எங்கே என்றும் தெரியவில்லை. ஏனையவர்களும் பிச்சைஎடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

 ஈழம் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை.

அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலையை கற்று கொள்வதே எமது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும். 

sri_lanka.gif

  • கருத்துக்கள உறவுகள்

கெரிக்டா சொன்னீங்க வாத்தி. என்னென்டாலும் படிச்சமனுசரெல்லே.

அகதியாக நெடும்தூரம் ஓடினவனுக்கும்...........
குறுந்தூரம் ஓடினவனுக்கும் .
இடையில் நிரந்தரமாக ஒரு மதிலை கட்டி பிரிச்சுவிட வேண்டும் என்று நினைக்கிற (அதுகும் அம்மாவையும் என்னையும்) உங்களுக்கு மட்டும் வாத்தியார் சொன்னது கரெக்டா புரியுது.
 
எங்களுக்கு ஒண்ணுமே புரியல.
உலகம் சுத்துது அப்படீன்னு யாரோ சொல்வது மட்டும் கேட்குது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் ஆட்சியில் ஈழத்தில் இருந்த மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்காததனால் இன்று ஒரு லட்ச்சத்துக்கும் மேலான மக்கள் எங்கே என்றும் தெரியவில்லை. ஏனையவர்களும் பிச்சைஎடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

 ஈழம் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை.

அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலையை கற்று கொள்வதே எமது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும். 

sri_lanka.gif

ஜூட் ,
உங்களின் கருத்துப்படி கொத்தடிமையாக கூனி குறுகி சுயமானம் இல்லாது எந்த கொள்கையும் இல்லாது எல்லாத்துக்கும் தலையை அசைத்து நிரந்தர அடிமையாக வாழவேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் ,

உங்களின் கருத்துப்படி கொத்தடிமையாக கூனி குறுகி சுயமானம் இல்லாது எந்த கொள்கையும் இல்லாது எல்லாத்துக்கும் தலையை அசைத்து நிரந்தர அடிமையாக வாழவேண்டும்.

இது உங்களின் கருத்து - எனது கருத்தல்ல. எனது கருத்து கீழே உள்ளது.

"அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலை", உங்களுக்கு தெரிந்த அளவில், "கொத்தடிமையாக கூனி குறுகி சுயமானம் இல்லாது எந்த கொள்கையும் இல்லாது எல்லாத்துக்கும் தலையை அசைத்து நிரந்தர அடிமையாக" வாழ்வதாக இருந்தால், உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன:

1.  நீங்கள் உங்களுக்கு தெரிந்தபடி வாழலாம். 

 2. வாழ்வை முடித்து கொள்ளலாம்.

விடுதலை புலிகளின்ஆட்சியில் இருந்தவர்களுக்கு இறுதி நாட்களில்  இந்த இரண்டு தெரிவுகளே அவர்களை வழி நடத்தியவர்களால் வழங்கப்பட்டது.

இனிமேலாவது அந்த மக்களுக்கு "அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலையை" கற்று தரக்கூடிய அறிவாளிகள் வழிகாட்டிகளாக அமைய வேண்டும்.

எனது கருத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். புரியாவிட்டால், மீண்டும் படியுங்கள். அது பற்றி சிந்தனை செய்து பாருங்கள். மக்கள் பயன்பெறும் எண்ணங்கள் தோன்றலாம். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலையை கற்று கொள்வதே எமது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும். 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலையை கற்று கொள்வதே எமது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும். 

உங்களுடைய  கருத்தைப்பார்த்தால்

தமிழன்தான் தேவையற்று சண்டைக்குப்போறான்

சிங்களவன் எம்முடன்  சம உரிமை கொடுத்து வாழ முயற்சிக்கின்றான் என்பது போலுள்ளது.

கிட்டத்தட்ட

100 வருட வரலாற்றை 

அனுபவத்தை மறந்து வாழ தமிழர் தயார் என்றாலும் சிங்களம் தயாரா??? :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களின் கருத்து - எனது கருத்தல்ல. எனது கருத்து கீழே உள்ளது.

"அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலை", உங்களுக்கு தெரிந்த அளவில், "கொத்தடிமையாக கூனி குறுகி சுயமானம் இல்லாது எந்த கொள்கையும் இல்லாது எல்லாத்துக்கும் தலையை அசைத்து நிரந்தர அடிமையாக" வாழ்வதாக இருந்தால், உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன:

1.  நீங்கள் உங்களுக்கு தெரிந்தபடி வாழலாம். 

 2. வாழ்வை முடித்து கொள்ளலாம்.

விடுதலை புலிகளின்ஆட்சியில் இருந்தவர்களுக்கு இறுதி நாட்களில்  இந்த இரண்டு தெரிவுகளே அவர்களை வழி நடத்தியவர்களால் வழங்கப்பட்டது.

இனிமேலாவது அந்த மக்களுக்கு "அயலவருடன் நட்புடனும், சமாதானமாகவும் அதேவேளை சம உரிமையுடனும், வாழும் கலையை" கற்று தரக்கூடிய அறிவாளிகள் வழிகாட்டிகளாக அமைய வேண்டும்.

எனது கருத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். புரியாவிட்டால், மீண்டும் படியுங்கள். அது பற்றி சிந்தனை செய்து பாருங்கள். மக்கள் பயன்பெறும் எண்ணங்கள் தோன்றலாம். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

நாங்கள் பலமுறை எமது நேசக்கரத்தை நீட்டியபோதும் அதை அவர்கள் பற்றிக் கொள்ளாமல் எட்டி உதைத்தார்கள் இதற்க்கு மேலுமா ...... ?  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் ,
உங்களின் கருத்துப்படி கொத்தடிமையாக கூனி குறுகி சுயமானம் இல்லாது எந்த கொள்கையும் இல்லாது எல்லாத்துக்கும் தலையை அசைத்து நிரந்தர அடிமையாக வாழவேண்டும். 

எனக்குத் தான் மான,ரோசம் இல்லை. புலிகளோடு சேர்ந்து போராடாமல் பயத்தில் ஓடி வந்து விட்டேன்.மான,ரோசம் உள்ள நீங்களாவது அங்கிருந்து கடைசி வரை போராடி இருக்கலாம் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தான் மான,ரோசம் இல்லை. புலிகளோடு சேர்ந்து போராடாமல் பயத்தில் ஓடி வந்து விட்டேன்.மான,ரோசம் உள்ள நீங்களாவது அங்கிருந்து கடைசி வரை போராடி இருக்கலாம் :(

ரதி எப்போது ஜூட் ஆனார் ?  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய  கருத்தைப்பார்த்தால்

தமிழன்தான் தேவையற்று சண்டைக்குப்போறான்

சிங்களவன் எம்முடன்  சம உரிமை கொடுத்து வாழ முயற்சிக்கின்றான் என்பது போலுள்ளது.

அயலவர் இருவர். இந்தியர் அவர்களில் ஒருவர். 

இந்த இருவருடனும் நட்புடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டிய தேவை இருக்கிறதல்லவா?

இலங்கை தமிழனால் இந்த இருவருடனும் சமாதானத்துடனும் நட்புடனும் வாழ முடியவில்லேயே?

ஆனால் சிங்களவரால் இந்தியருடனும், சீனருடனும், அமெரிக்கருடனும் கூட நட்புடன் சேர்ந்து தமிழருக்கு எதிராக பணமும் பலமும் சேர்த்து வெற்றி பெற முடிந்திருக்கிறதே? 

கிட்டத்தட்ட

100 வருட வரலாற்றை 

அனுபவத்தை மறந்து வாழ தமிழர் தயார் என்றாலும் சிங்களம் தயாரா??? :(  :(

விக்னேஸ்வரனை கேளுங்கள். சிங்களவரான சம்பந்தி பற்றி சொல்லுவார். குடும்பமாக உறவாட முடிகிறது.

ராஜபக்சவின் சகோதரி கணவனும் தமிழர். அவர்கள் தயார்.

வரலாற்றை மறந்து வாழ்ந்தால் அதே வரலாறு திரும்ப இடம்பெறும். வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வீண்டும்.

ஸ்ரீ லங்கா இராணுவம் தமிழரை மட்டும் கொல்லவில்லை. அரசுக்கு எதிராக புரட்சி செய்த சிங்களவரையும் ஒரு முறை அல்ல, இரு முறை பெரும் தொகையில் கொன்று குவித்திருக்கிறது. பெருமளவிலான மக்கள் அப்பாவிகள். 

நாம் 100 வருட வரலாறு பற்றி பேசுகிறோம். அவர்கள் 2,௦௦௦ வருட வரலாற்றில் இருந்தது பாடம் கற்றவர்கள்.

 அயலவர் இருவர். இந்தியர் அவர்களில் ஒருவர். மற்றவர் சிங்களவர்.

இந்த இருவருடனும், நட்புடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டிய தேவை இலங்கை தமிழனுக்கு இருக்கிறது.

நாங்கள் பலமுறை எமது நேசக்கரத்தை நீட்டியபோதும் அதை அவர்கள் பற்றிக் கொள்ளாமல் எட்டி உதைத்தார்கள் இதற்க்கு மேலுமா ...... ?  :rolleyes:

எந்த அயலவரை பற்றி கூறுகிறீர்கள்? இந்தியரையா? அல்லது சிங்களவரையா? அல்லது இருவரையுமா?

மற்றவர்கள் தான் மாற வேண்டும். அதுவரை நாம் அழிந்து கொண்டே இருப்போம் என்று பிடிவாதம் பிடித்தால் அழிவு தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? நாம் என்ன தவறு செய்தோம்? நாம் எப்படி திருந்தி கொள்வதன் மூலம் மேலும் அழிந்து போகாமல் இருக்க முயற்சிக்கலாம் என்றும் பார்க்க வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.