Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா முக்கிய பங்காற்றியது – விக்னேஸ்வரன்

Featured Replies

C.V_CI.jpg

 

வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதனைப் போன்று, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார்.

இந்தியா தம்மை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாக குறிப்பிடவில்லை என்ற போதிலும், வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு இந்தியாவின் நடவடிக்கைகளே வழியமைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து இரண்டு நாடுகளும் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணசபை இரண்டு விதமான நோக்கங்களின் அடிப்படையில் செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுங்கால மற்றும் நீண்ட கால அடிப்படை நோக்கங்களைக் கொண்டதாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் வடக்கை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், கூடுதலான நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97457/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி இவ்வளவு சீக்கிரமாகவே வெளியில் வந்துவிட்டது. விக்கு வினாயகம் தான் தமிழர் விரோததேசமாம் இந்தியாவின் கைக்கூலி என்பதை தானாகவே போட்டுடைத்துவிட்டார். வல்வெட்டித்துறையில் பிரபாகரன் மாவீரன், தேர்தலுக்கு முன்பு இராணுவத்தை வெளியேற்றியேதீருவோம், இப்போது சிங்கள மக்களுடன் நல்லிணக்க அரசியல், விக்கு வினாயகம் உங்களை நான் நாணையம் கருதி ஏக வசனத்தில் விழிக்கவில்லை ஆனால் அப்படியே எடுத்துக்கொள்ளவும். நீங்கள் எல்லாம் நல்லா வருவியள். பல்லாயிரக்கணக்கான மாவீரர்ச்செல்வங்கள், அதை அதிகமான தமிழ்ச் சொந்தங்கள், தொப்புள்கொடி உறவாம் தமிழகத்துச் சொந்தங்களது ஈகைக்கொடைகள் இவை அனைத்துக்கும் பதில் சொல்லவேண்டிய காலம் வெகுவிரைவில் வந்தேதீரும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சொன்னார்.. தான் இந்தியாவின் கைக்கூலி இல்லைன்னு. கம்பன் கழகத்தை இயக்கம் றோவுடன் உறவிருக்கான்னு சந்தேகப்பட்டு 1990 களிலேயே விசாரணைக்கு உட்படுத்தியது எவ்வளவு நியாயமுன்னு.. இப்ப தெரியுது..! புலிகளின் புலனாய்வுத்துறைக்கு உண்மையில் பாராட்டுக்கள் குவியனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு கம்பன் கழகம் நல்லூரடியில் ஒருகட்டுடம் கட்டியது நினைவிருக்கலாம், அது முன்னர் நல்லூர் திருவிழாக்காலத்தில் கக்கூசாகப் பயன்படுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். இறுதியாக பாலசிங்கம் யாழ் மாநகரசபை ஆணையாளராக இருந்தபோது சொக்கட்டன் பந்தலிலவைத்து அவருக்குக் குழையடித்து யெயராசா அதனைத் தனதாக்கிகொண்டார். அந்த இடமமிப்போதும் மாநகர விழாக்காலக் கக்கூசாக இருந்திருந்தால் அவசரத்துக்கு ஒதுங்கியிருக்க வசதியாக இருக்கும். நல்லைக் கந்தன் அடியார்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தம்மை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாக குறிப்பிடவில்லை என்ற போதிலும், வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு இந்தியாவின் நடவடிக்கைகளே வழியமைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உண்மைதான் பல புலத்து பினாமிகளுக்கு தமது வியாபாரம் பற்றிய பயத்தை கொடுத்துள்லது.

தேர்தலை இந்தியா நடத்தியது.  13ம் திருத்தத்தை நீக்குவதற்காக அமைக்கப்பட்ட சிறிபால டி சில்வாவின் தெரிவுக்குழுவை முடக்கியது இந்தியா.  சம்பந்தரும், சுமந்திரனும், மாவையும், சுரேசும் இந்தியா தேர்தலின் பின்ன்ர் வடமாகாணத்துக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் உதவ இருப்பதாக கூறி சம்பந்தர் மக்களை வீடுகளுக்கு வெளியே வந்து வாக்களிக்கும் படி கேட்டிருந்தார்கள். இவற்றில் எதுவும் புதியது இல்லை. வாக்கு கொடுத்தபடி இந்தியாவால் இலங்கை அரசை மீறிவந்து உதவ முடியுமா என்பதுதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லையேல் மகிந்த டிக்சித், நிரூபம்மா, சிவசங்கர், நாராயண் போன்றவர்களை போல புதிய அணியையும் வாங்குவாரா என்பதும் பொறுத்திருந்துதான் காண முடியும். 

 

இந்தப் பாதை கூட்டமைப்பு தான் வகுத்துப் போவது. ஐ.நா பதைதான் புலம் பெயர் அமைப்புகள் இலக்கு வைப்பது. கூட்டமைப்பை கலைத்து கலைத்து அதன் வாலை முறுக்கிக்கொண்டு திரியாமல் புலம் பெயர் நாட்டவர் ஐ.நா.பதையில் தங்கள் கவனத்தை வைத்துகொள்ள வேண்டும்.

இதில் என்ன சந்தேகம், விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரியு செய்யப்படவேண்டும் என்று இந்தியாவும் வெறும் பல வெளிச்சக்திகள் கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்தது. 

 

அதன்படியே கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள் தமக்குள்ள கூடி விக்கினேஸ்வரனை தெரிவு செய்தார்கள். 

 

இதை அந்த கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளால் மறுக்க முடியுமா? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் தான் முதல்வரானேன் – விக்னேஸ்வரன் செவ்வி
[ புதன்கிழமை, 09 ஒக்ரோபர் 2013, 01:31 GMT ]

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டதில் முக்கிய பங்காற்றிய இந்தியா, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கை மீளக்கட்டியமைப்பதற்கும் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.

நேற்று, யாழ்ப்பாணத்தில் இந்தியச் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

"இந்தியா கொடுத்த அழுத்தங்களினால் தான், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலை நடத்தமாட்டோம், 13வது திருத்தச் சட்டத்திருத்தத்தை நீக்குவோம் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவினால் தான் என்னால் முதல்வராகப் பதவிக்கு வர முடிந்துள்ளது.

இந்தியா என்னை நேரடியாகப் பதவிக்குக் கொண்டு வரவில்லை.

ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பின்னர், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்துவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது.

அதனால்தான் தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்று, என்னால் முதல்வராக முடிந்தது.

இத்துடன் நின்று விடாமல், போரினால் பாதிக்கப்பட்டுள்ள, இந்தப் பகுதியின் அபிவிருத்திக்கும் இந்தியா உதவ வேண்டும்.

இந்தியா எந்தளவுக்கு உதவிகளை அளிக்க முடியும் என்பது நுட்பமான விவகாரம்.

எனினும் போரினால், பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்கு இந்தியாவின் உதவி மிகவும் அவசியமானது. அதை எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு எனது தலைமையிலான மாகாணசபை நீண்டகால, குறுகியகால திட்டங்களைக் கொண்டுள்ளது.

நீண்டகாலத் திட்டங்கள் அனைத்தும் அரசியல் அபிலாசைகளாகும். அவற்றை உடனடியாக நிறைவேற்றுவது கடினம்.

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவது, அவர்களின் புனர்வாழ்வுப் பணிகள் மற்றும் சேதமுற்ற வீடுகளைச் சீரமைப்பது ஆகியன குறுகிய காலப் பணிகளாகும்.

அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், இது எம்மை அதிருப்தி கொள்ள வைக்கிறது. ஏனென்றால், எமது மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டது.

எனவே, ஏனைய மாகாணங்களை விட, வடக்கு மாகாணசபைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏனைய மாகாணங்களுக்கு இல்லை.

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உள்ளிட்ட கொடையாளி நாடுகளின் உதவியைப் பெறுவது குறித்து, நாம் சிறிலங்கா அரசாங்கத்துடன் விவாதிக்க வேண்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20131009109222

  • கருத்துக்கள உறவுகள்

அவலத்துள் வாழும் மக்களை மந்தைகளாக்கிய விக்கியும் இந்திய அரசும்
 

cvwiki.jpg

தேர்தலுக்கு முன்பதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தலுக்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்ப்பும் இல்லை என ஊடகங்களில் அறிக்கைக்கு மேல் அறிக்கை வெளியிட்டார். அதே வேளை இந்தியத் துணைத்தூதர் ‘வடக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதில் இந்தியாவிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது’ என்று தேர்தலின் முன்பதகக் கூறியிருந்தார்.

இவை அனைத்தும் முடிந்த பின்னர்  விக்னேஸ்வரன் ‘வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக கூறியுள்ளார்’. விக்னேஸ்வரன் அப்பட்டமான பொய்யை மக்களுக்குக் கூறி வாக்குப் பொறுக்கியுள்ளார். அதே வேளை இந்திய மேலாதிக்க அரசு, தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிராக இலங்கையில் தலையிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அறிவித்திருக்கின்றது.

அவலத்துள் வாழும் மக்கள் கூட்டத்தை மந்தைகளாக்கிய விக்னேஸ்வரனும் இந்திய அரசும் தமது சொந்த நலன்களுக்காக தாம் விரும்பியதையெல்லாம் செய்யத் தயார் நிலையில் உள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது
 
http://inioru.com/?p=37518

இதில் தமிழக உறவுகள் ஈழத்தமிழகளுக்காக குரல் கொடுக்க தேவை இல்லை எனும் சாரப்பட பேட்டியும் குடுத்தார்... இவ்வளவு விரைவாய் முகத்திரையை நீக்குவார் எண்டு நினைக்கவில்லை...

இதில் என்ன சந்தேகம், விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரியு செய்யப்படவேண்டும் என்று இந்தியாவும் வெறும் பல வெளிச்சக்திகள் கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்தது.

வெளிச்சக்திகள் எண்டால் எது மகிந்தவா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை அமைக்கப்பட்டு 25 வருடமாகிறது.இவ்வளவுகாலமும் அமைதியாக இரந்து விட்டு அமெரிக்காவின் அழுத்தத்தால் வேறு வழியின்றி இந்தியாவும் தேர்தலைநடத்துமாறு சிறிலங்கா அரசை செல்லகமாகக் கேட்டிருந்தது என்பது உண்மையேமற்றும்படி தமிழ்மக்கள் மேல் உள்ள பாசத்தால் அல்ல.அத்துடன் இந்த மாகாண சபை ஒரு பெரிய அரசியல் உரிமையைப் பெற்றுத்தந்துவிட்டது போலவும் அதற்கு இந்தியாதான் காரணம் என்பது போலவும் பில்டப் கொடுக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை.அந்த மாகாணநபையால் ஒரு பயனும் இல்லை என்று இந்தியா சொல்லி முன்னய முதல்வர்????வரதராஜப் பெருமாள் தமிழீழப்பிரகடனம் செய்த விட்டு இந்தியா இராணுவத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதும் மறுக்கப்படாத உண்மைகள்!!!!!!!!

13ம் திருத்தத்தை 1987ல்  இந்தியா மட்டும்தான் கொண்டுவந்தது. அதை ஏற்கவில்லை என்று புலிகளை 2009ல் அழித்தது. அதன் பின்னர் கையறு நிலைக்கு போனது. இலங்கையின் பொதுநலவாய ஆசை, ஐ.நா.வில் தொடந்தும் டிமிக்கி விட உதவிக்கு தேவை போன்றவற்றால் திரும்ப இந்தியாவின் கை உயர்ந்தது. இதைக் கண்டு அவசரமவசரமாக 13ம் திருதத்தை நீக்க இலங்கை முயன்றது. இந்தியா தடுத்து தேர்தலை கொண்டுவந்தது. இவ்வளவும் யாழில் பதியப்பட்ட செய்திகளாக இருக்க இவற்றை தேர்தலின் பின்னர்தான் விள்ங்கிக் கொண்டுவிட்டத்தாக இது என்ன புதிய கூச்சல்?


அவலத்துள் வாழும் மக்களை மந்தைகளாக்கிய விக்கியும் இந்திய அரசும்
 

cvwiki.jpg

தேர்தலுக்கு முன்பதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தலுக்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்ப்பும் இல்லை என ஊடகங்களில் அறிக்கைக்கு மேல் அறிக்கை வெளியிட்டார். அதே வேளை இந்தியத் துணைத்தூதர் ‘வடக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதில் இந்தியாவிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது’ என்று தேர்தலின் முன்பதகக் கூறியிருந்தார்.

இவை அனைத்தும் முடிந்த பின்னர்  விக்னேஸ்வரன் ‘வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக கூறியுள்ளார்’. விக்னேஸ்வரன் அப்பட்டமான பொய்யை மக்களுக்குக் கூறி வாக்குப் பொறுக்கியுள்ளார். அதே வேளை இந்திய மேலாதிக்க அரசு, தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிராக இலங்கையில் தலையிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அறிவித்திருக்கின்றது.

அவலத்துள் வாழும் மக்கள் கூட்டத்தை மந்தைகளாக்கிய விக்னேஸ்வரனும் இந்திய அரசும் தமது சொந்த நலன்களுக்காக தாம் விரும்பியதையெல்லாம் செய்யத் தயார் நிலையில் உள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது
 
http://inioru.com/?p=37518

தமிழ் மக்கள் தங்களை யாரும் மந்தைகளாக்க முடியாது என்பதை தேர்தலில் காட்டியிருந்தார்கள் என்பதை சர்வதேசம் வரைக்கும் ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்த ஊடகம் தானாகவே தான் மாட்டும் ஒரு மந்தை என்று காட்டத் துடிக்கிறது. விக்கினேஸ்வரரின் பேச்சில் தான் விரும்பிய பகுதிய மட்டும் தனது ஊடகத்தில் போட்டு தங்கள் வாசகர்களை மட்டும் இருட்டில் வைத்திருக்கும் துரோகத்தை தனது வாசகர்களுக்கு செய்கிறது. அதாவது இந்த ஊடகத்தை நம்பி வாசிப்பவர்களையும் மந்தைகளாக்கிவிடுகிறது.

Edited by மல்லையூரான்

இதில் தமிழக உறவுகள் ஈழத்தமிழகளுக்காக குரல் கொடுக்க தேவை இல்லை எனும் சாரப்பட பேட்டியும் குடுத்தார்... இவ்வளவு விரைவாய் முகத்திரையை நீக்குவார் எண்டு நினைக்கவில்லை...

வெளிச்சக்திகள் எண்டால் எது மகிந்தவா...??

 

 

மகிந்தவை மாத்திரம் குறைகூறி மற்றவர்கள் தப்பிக்கொள்ள முடியாது.

 

மகிந்த வெளியவே இருக்கிறார்? 

 

Edited by Sooravali

நாட்டில் உயிருடன் இருக்கும் தமிழனுக்கு தான் தீர்வு வேண்டும் என்பதை விக்கி மிக நன்றாக புரிந்துள்ளார் .

இறந்தவர்களுக்கும் நாட்டை விட்டு ஓடியவர்களுக்கும் தீர்வு தேடியலைய முடியாது .

நாட்டில் உயிருடன் இருக்கும் தமிழனுக்கு தான் தீர்வு வேண்டும் என்பதை விக்கி மிக நன்றாக புரிந்துள்ளார் .

இறந்தவர்களுக்கும் நாட்டை விட்டு ஓடியவர்களுக்கும் தீர்வு தேடியலைய முடியாது .

நாலு வருடங்களுக்கு பிறகு கூட்டமைப்பில் இருக்கும் தலைமைக்கு சுடலை ஞானம் வந்ததாக சொல்லப்படுவதில் மகிழ்ச்சிதான்...

ஆனால் இதை சனம் முகாம்களில் அடைபட்டு அடுத்தது என்ன எண்டு அந்தரித்து நிக்கும் போது செய்து இருந்தால் நண்றாக இருந்து இருக்கும்...

இண்று வரைக்கும் கூட்டமைப்பு மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை எண்டது தான் உண்மை... !

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் உயிருடன் இருக்கும் தமிழனுக்கு தான் தீர்வு வேண்டும் என்பதை விக்கி மிக நன்றாக புரிந்துள்ளார் .

இறந்தவர்களுக்கும் நாட்டை விட்டு ஓடியவர்களுக்கும் தீர்வு தேடியலைய முடியாது .

 

அதுசரியண்ணை!!!!! அங்கை இருக்கிறவங்களுக்கு ஏன் என்ன பிரச்சனை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.