Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Featured Replies

கையாலா கரண்டியாலா???

விருந்தோம்பல் என்று வந்து விட்டால் எதனால் ஊட்டிவிட்டால் என்ன.

  • Replies 219
  • Views 16.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருந்தோம்பல் என்று வந்து விட்டால் எதனால் ஊட்டிவிட்டால் என்ன.

கையால் ஊட்டிவிடுதல்தான் சிறந்த விருந்தோம்பல் அதுதான் கேட்டேன் :D

கையால் ஊட்டிவிடுதல்தான் சிறந்த விருந்தோம்பல் அதுதான் கேட்டேன் :D

அதுசரி , பின்ன இடுப்பில தூக்கி வைத்து நிலாச் சோறா ஊட்டுவது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய அகராதியில் அப்படியான அர்த்தம் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்.

இயற்கையின் நியதிப்படி பெண் உற்பத்திக்கு உரியவள்தான். அதற்காக அவளுக்கான தவிர்க்கமுடியாத கட்டுப்பாடுகள் சுயநலம் என்றால், பிறகு ஏன் ஆண் இணை? குழந்தை? பொட்டு? தாலி? எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்... எறியமாட்டார்கள்.. தங்கள் வீட்டில் அடக்குமுறை இல்லை என்பார்கள்.. இதுதான் பல தமிழ் பெண்ணியவாதிகளின் கூற்று.  :D

இங்கு பெண்ணியவாதிகள் யாரும் இல்லை. பெண்கள் பற்றிய பக்கா ஆணாதிக்கவாத எண்ணத்தின் மீதும் கருத்து மீதும் கேள்வி கேட்கும் சாதாரண பெண்கள் தான் இருக்கிறம் அண்ணோய்.

சுமேயக்கா சொன்னமாதிரி தாலி பொட்டு இன்ன பிற யாவும் அலங்காரம் தான். இதில் தத்துவம் சமத்துவம் எதுவும் இல்லை.

உங்கள் கூற்றுப்படி உற்பத்தியக்குரிய இயந்திரத்துக்கு ஏன் வேலியும் காவலும் போடுறியள். இயந்திரத்துக்கு தன்னை தற்காக்கத் தெரியும். இல்ல நான் தான் காப்பாற்றும் வாளென்று உங்கள் சுயநலத்தை திணிக்கிறீங்கள்.

பி.கு :- என்னிடம் தங்கத்தாலியில்லை. பொட்டு வைக்கிறேன் எல்லா நிறங்களிலும் எனக்குப் பிடித்தபடி. அது எனது மூஞ்சிக்கு கொஞ்சம் வெளிச்சம் தர. சின்ன வயது முதல் பொட்டு எனக்குப் பிடித்த அழகுப்பொருள். நினைவு தெரிந்து பொட்டு வைக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை வர்ணப்பொட்டுத்தான். இதில் எந்த சம்பிரதாயமும் இல்லை.

அதுசரி , பின்ன இடுப்பில தூக்கி வைத்து நிலாச் சோறா ஊட்டுவது.

உங்களுக்கு சந்திரமண்டலத்துக்கு ஒரு ரிக்கெட் தர வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி , பின்ன இடுப்பில தூக்கி வைத்து நிலாச் சோறா ஊட்டுவது.

சிலபேரைப் பாத்து தப்பிலியும் வரவரக் கெட்டுப்போச்சு.

எண்டாலும் ஆசையைப் பாரன். நிலாச்சோறு ஊட்டிட்டாலும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில் புதிய தலைமுறை தாலி எல்லாம் போடுகிறார்களா என்ன ??? எங்கே இருக்கிறீர்கள் ??? பெண்கள் பொட்டு அணிவது தம்மை அழகுபடுத்தவேயன்றி வேறு எதற்கும் இல்லை. பெண் உற்பத்திக்கு உரியவள்தான். ஆனால் இணை இன்றியே உற்பத்தி செய்யக்கூடியவள். அனால் நீங்கள் எதுவென்றாலும் பெண்ணிடம்தான் வரவேண்டும் சோழி. :lol:

1) தாலி தேவையில்லை தூக்கியெறியுங்கள்,

2) ஓக்கே பொட்டு அலங்காரம் நல்லது.

இந்த வரிசையில் ஏன் பேருக்குப் பின்னாலை அப்பாவின் அல்லது கணவனின் பேரைப் போடவேண்டும். இது கூட ஆணாதிக்கம் தானே? மேலைத் தேயப் பெண்களில் சிலர் செய்கின்றது போன்று தாயின் பெயரைப் பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால் போடலாம் தானே? ஏன் ஒரு பெண் ஓர் ஆணின் மகள் அல்லது மனைவி என அடையாளப்படுத்தப்பட வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அவதானங்களை (observations) சொல்லியிருந்தீர்களாயின், அது ஏற்புடையதே. ஆனால் நீங்கள் விமானத்துறையில் இல்லாதபட்சத்தில் ஒருஆலோசனையாக (advise) அதைச் சொல்லியிருந்தீர்களாயின் அது ஏற்புடையதல்ல என்பது என் கருத்து. :unsure:

மகன் நாளை தான் ஒரு விமானியாக வந்திருக்கலாமே என்று வருந்தினால் அதற்கு பொறுப்புக்கூறும் கடமை உங்களை வந்து சேர்ந்துவிடும்.

பி.கு.: இன்று மகன் சரி என்று சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், குடும்ப உணர்வு, பொருளாதாரம் என.. ஆனால் Gen-x வகையைச்சேர்ந்த எமது சிந்தனைகளுக்கும், millennials என்கிற அவர்களது சிந்தனைகளுக்கும் இடையில் பலத்த வேறுபாடுகள் உண்டு.

ராசா

அப்பன் என்கின்ற நிலை மிகவும்  பாரமானது ராசா

அப்புறம் நாடு நாடாக திரிந்துவிட்டு

அப்பன் இப்படி கவனிக்காமல் அலைய விட்டுட்டானே என்றும் சொல்வார்கள்.

இங்கு பலரது கருத்தும்

படிப்பு

பணம்

என்ற அளவில்தான் இருக்கிறது

இதைவிட முக்கியம்

பழக்கவழக்கங்கள்

நட்புகள்

தொடர்புகள்

மற்றும் குடும்ப வாழ்க்கை.

எல்லாவற்றையும்  கவனித்து

சரி பிழையை  சொல்லவேண்டும்

ஏற்பதும் விடுவதும் அவர்களது விருப்பம்.

அப்புறம் அப்பன் ஏற்கனவே எச்சரித்தவன் என்ற உணர்வாவது மிஞ்சும்.....

அதைத்தான் எனது கருத்தில், "அவதானிப்புகளை (Observation) சொல்லலாம்" என்று குறிப்பிட்டிருந்தேன் சார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ராசா

அப்பன் என்கின்ற நிலை மிகவும்  பாரமானது ராசா

அப்புறம் நாடு நாடாக திரிந்துவிட்டு

அப்பன் இப்படி கவனிக்காமல் அலைய விட்டுட்டானே என்றும் சொல்வார்கள்.

இங்கு பலரது கருத்தும்

படிப்பு

பணம்

என்ற அளவில்தான் இருக்கிறது

இதைவிட முக்கியம்

பழக்கவழக்கங்கள்

நட்புகள்

தொடர்புகள்

மற்றும் குடும்ப வாழ்க்கை.

எல்லாவற்றையும்  கவனித்து

சரி பிழையை  சொல்லவேண்டும்

ஏற்பதும் விடுவதும் அவர்களது விருப்பம்.

அப்புறம் அப்பன் ஏற்கனவே எச்சரித்தவன் என்ற உணர்வாவது மிஞ்சும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1) தாலி தேவையில்லை தூக்கியெறியுங்கள்,

2) ஓக்கே பொட்டு அலங்காரம் நல்லது.

இந்த வரிசையில் ஏன் பேருக்குப் பின்னாலை அப்பாவின் அல்லது கணவனின் பேரைப் போடவேண்டும். இது கூட ஆணாதிக்கம் தானே? மேலைத் தேயப் பெண்களில் சிலர் செய்கின்றது போன்று தாயின் பெயரைப் பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால் போடலாம் தானே? ஏன் ஒரு பெண் ஓர் ஆணின் மகள் அல்லது மனைவி என அடையாளப்படுத்தப்பட வேண்டும்?

அதையும் எனக்குத் தெரிந்த துணிவான பெண் செய்துள்ளாள். அந்தத் துணிவு எனக்கு இல்லை என்று ஒத்துக்கொள்கின்றேன். அவளின் கணவர் கூட அன்பான புரிந்துணர்வுள்ள ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் எனக்குத் தெரிந்த துணிவான பெண் செய்துள்ளாள். அந்தத் துணிவு எனக்கு இல்லை என்று ஒத்துக்கொள்கின்றேன். அவளின் கணவர் கூட அன்பான புரிந்துணர்வுள்ள ஒருவர்.

இந்தமாதிரி புரட்சிகரமான குழறுபடிகளால் துரத்து அண்ணன் தங்கை கல்யாணம் கட்டக்கூடிய சிக்கல்கள் எழலாம்.. கடைசிப் பெயர்/ குடும்பப்பெயர் என்று மேற்குலகில் வைத்திருப்பது இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கவல்லது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி , பின்ன இடுப்பில தூக்கி வைத்து நிலாச் சோறா ஊட்டுவது.

நீங்கள் செய்தாலும் செய்வியளப்பா !!!!!!! ஏனெண்டால்  காலம் இப்ப அப்பிடித்தான் போகுது.....புருசனுக்கும் பொண்சாதிக்கும் சோசல் மூவிங் இருக்குமெண்டால் பிறகென்ன புகுந்து விளையாட வேண்டியதுதானே. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் காலத்தில் புதிய தலைமுறை தாலி எல்லாம் போடுகிறார்களா என்ன ??? எங்கே இருக்கிறீர்கள் ??? பெண்கள் பொட்டு அணிவது தம்மை அழகுபடுத்தவேயன்றி வேறு எதற்கும் இல்லை. பெண் உற்பத்திக்கு உரியவள்தான். ஆனால் இணை இன்றியே உற்பத்தி செய்யக்கூடியவள். அனால் நீங்கள் எதுவென்றாலும் பெண்ணிடம்தான் வரவேண்டும் சோழி. :lol:

புதிய தலைமுறையெண்டு எந்த நாட்டிலை வாழுறவையை சொல்ல வாறியள்?
 
பொட்டு அழகுப்பொருள்?
அடக்கடவுளே.அதை பச்சையாயே குத்தலாமே??? ஓ...சாறிக்கேத்தமாதிரி கலர்ப்பொட்டு பிறகு வைக்கேலாதெல்லே....அது வேறை றபுள்...  confused0006.gif
வெள்ளைக்காரியளேல்லாம் இப்பிடிtattoo.jpg பச்சைகுத்துறாளவை அதையும் ஒருக்கால் செய்து பாக்கலாமே?.பெரீய யன்னல்வெட்டு பிளவ்ஸ் போட அந்தமாதிரி தூக்கலாயிருக்கும். :D
 
ஆம்பிளையளும் பொட்டச்சியள் இல்லாமல் எதையும் உற்பத்தி செய்வாங்கள் எண்டதை லேடீஸ் அப்பப்ப மறந்து போயினம்.....பொண்டுகளுக்கு மாதத்திலை வாற அந்த மூண்டு நாளும் நீ பெண் என்பதை மறக்காமலிருக்க கடவுள் இயற்கையாகவே அர்ப்பணித்த அற்புத செயல். :icon_idea:  :lol:  :D
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பெண்ணியவாதிகள் யாரும் இல்லை. பெண்கள் பற்றிய பக்கா ஆணாதிக்கவாத எண்ணத்தின் மீதும் கருத்து மீதும் கேள்வி கேட்கும் சாதாரண பெண்கள் தான் இருக்கிறம் அண்ணோய்.

சுமேயக்கா சொன்னமாதிரி தாலி பொட்டு இன்ன பிற யாவும் அலங்காரம் தான். இதில் தத்துவம் சமத்துவம் எதுவும் இல்லை.

உங்கள் கூற்றுப்படி உற்பத்தியக்குரிய இயந்திரத்துக்கு ஏன் வேலியும் காவலும் போடுறியள். இயந்திரத்துக்கு தன்னை தற்காக்கத் தெரியும். இல்ல நான் தான் காப்பாற்றும் வாளென்று உங்கள் சுயநலத்தை திணிக்கிறீங்கள்.

பி.கு :- என்னிடம் தங்கத்தாலியில்லை. பொட்டு வைக்கிறேன் எல்லா நிறங்களிலும் எனக்குப் பிடித்தபடி. அது எனது மூஞ்சிக்கு கொஞ்சம் வெளிச்சம் தர. சின்ன வயது முதல் பொட்டு எனக்குப் பிடித்த அழகுப்பொருள். நினைவு தெரிந்து பொட்டு வைக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை வர்ணப்பொட்டுத்தான். இதில் எந்த சம்பிரதாயமும் இல்லை.

 உந்த வெள்ளைக்காரங்கள் கலியாணமோதிரம் எண்டு ஏதோ பெரிசாய் பினாத்திக்கிறாங்கள் அதிலை ஏதாவது சமத்துவம் தத்துவம் ஒண்டை எடுத்து விட்டியளெண்டால் போறவழிக்கு புண்ணியமாய்ப்போகும்....வெள்ளைக்காரங்கள் எதுசெய்தாலும் ஒரு காரணம் இருக்கும்... :o

அது கட்டாயம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் :rolleyes: . இஞ்சை  எங்கடையள் இப்பவும் புட்டுக்கு மா அவிச்சு அரிச்சுக்கொண்டிருக்குதுகள்.....எங்கை திருந்துங்கோடி எண்டுசொன்னால் கேட்டால்த்தானே??? :(

ஒரு ஈரோவுக்கு கம்பேக்கர் அந்த மாதிரி குப்பைமலிவிலை விக்கிறாங்கள் அதை சாப்பிடலாம்தானே எண்டு சொன்னால் கேக்கிறாளேயில்லை.......கம்பேக்கரெண்டால் கரன்ட்செலவில்லை....தண்ணிசெலவில்லை...நேரச்செலவில்லை :icon_idea:  எண்டும் சொல்லிப்பாத்தன் அசையிறாளேயில்லை....இஞ்சை இப்பவும் அரிசியை நனையப்போட்டு ஏதோ  கிரண்டரிலை அரைப்பு நடக்குதுmad02171.gif......சந்திரமண்டலத்துக்கெல்லாம் பொண்டுகள் போயினம்.....எங்கடையள் இப்பவும் புட்டுக்கு தேங்காய் திருவிக்கொண்டிருக்குதுகள் :D

சாந்தியக்கோய்!!!!! முகத்துக்கு வெளிச்சம்வர பொட்டு கட்டாயம் வேணுமோ? அப்ப உந்த கறுப்பர் ,வெள்ளையள் முகத்திலை வெளிச்சம் பிரகாசிக்க என்னத்தை தேடுறாங்கள்?
 
ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். :lol:

வீட்டிற்கு வீடு, மற்றும் வெவ்வேறு தனிநபர்களிடையே இந்தவிடயம் மாறுபட்டது. தலைப்பின் கேள்வியை மனைவிக்கு எனும் பதத்தினை மாற்றி பிள்ளைக்கு, கணவருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என்றும் கேட்கலாம்.

அடிப்படையில் இந்த உலகம் அப்பட்டமான சுயநலத்தில் அக்கறை கொண்டது. தன்தன் சுயநலங்களின் செளகரியத்திலேயே ஒட்டுமொத்த சமூகம் இயங்குகின்றது. இங்கு எழுதப்படும் கருத்துக்களும் சுயநலத்தையே பிரதிபலிக்கின்றன.

சுயநலன்களில் அதீத கவனம் செலுத்துவது தவறான விடயம் என்றும் கூறுவதற்கில்லை. காரணம், விஞ்ஞான கோட்பாடுகளின் அடிப்படையில் பார்த்தாலும் போட்டிமயமான இந்தவுலகில் "தப்பிப்பிழைப்பதற்கு" சுயநலம் அத்தியாவசியமானது.

எனவே, சுதந்திரம் பற்றியதான இந்தவிடயத்தை மேலோட்டமாகப் பார்க்காது ஆழமாக அடித்தளத்திலிருந்து நோக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
நான் எனது மனைவிக்கு சுதந்திரம் குடுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்டா அவளிடம் ஏற்றகனவே அது இருக்கு. உடுக்கும் உடையில இருந்து தனக்கு வாங்கிய கார் மட்டும் அவளது தெரிவுதான். நண்பர்கள், பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் எமக்கு எமக்கு விரும்பினதை நாமே செய்வோம். இருவரும் எல்லை மீற  மாட்டோம் என்ற நம்பிக்கை. அவள் அவுஸ் வரமுதலேயே நான் வீட்டை வாங்கிவிட்டதால் அது எனது பெயரில் மாத்திரமே இருக்கு ஆனா சம்பளம் வந்த உடனேயே கொஞ்சத்த தூக்கி போட்டு விடுவாள். ஆடை விடயத்தில் தான் நான் அவளிடம் சிலவேளை ஏதாவது கூறுவது. வெளியால எங்கயும் வெளிக்கிடும் போது போர்த்துக் கட்டிக்கொண்டு வெளிக்கிடுவா. நான் தான் கொஞ்சம் சதையைக் காட்டு எண்டு கேக்கிறது.
 
எனது போன பிறந்தநாளுக்கு மனிசி தந்த காட் இதுதான்.
 
Card_1.jpg
 
Card_2.jpg

இப்ப சொல்லுங்கோ எங்கட வீட்ட ஆர் பொஸ் எண்டு...  :D  :D  :D 
  • கருத்துக்கள உறவுகள்

 உந்த வெள்ளைக்காரங்கள் கலியாணமோதிரம் எண்டு ஏதோ பெரிசாய் பினாத்திக்கிறாங்கள் அதிலை ஏதாவது சமத்துவம் தத்துவம் ஒண்டை எடுத்து விட்டியளெண்டால் போறவழிக்கு புண்ணியமாய்ப்போகும்....வெள்ளைக்காரங்கள் எதுசெய்தாலும் ஒரு காரணம் இருக்கும்... :o

அது கட்டாயம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் :rolleyes: . இஞ்சை  எங்கடையள் இப்பவும் புட்டுக்கு மா அவிச்சு அரிச்சுக்கொண்டிருக்குதுகள்.....எங்கை திருந்துங்கோடி எண்டுசொன்னால் கேட்டால்த்தானே??? :(

ஒரு ஈரோவுக்கு கம்பேக்கர் அந்த மாதிரி குப்பைமலிவிலை விக்கிறாங்கள் அதை சாப்பிடலாம்தானே எண்டு சொன்னால் கேக்கிறாளேயில்லை.......கம்பேக்கரெண்டால் கரன்ட்செலவில்லை....தண்ணிசெலவில்லை...நேரச்செலவில்லை :icon_idea:  எண்டும் சொல்லிப்பாத்தன் அசையிறாளேயில்லை....இஞ்சை இப்பவும் அரிசியை நனையப்போட்டு ஏதோ  கிரண்டரிலை அரைப்பு நடக்குதுmad02171.gif......சந்திரமண்டலத்துக்கெல்லாம் பொண்டுகள் போயினம்.....எங்கடையள் இப்பவும் புட்டுக்கு தேங்காய் திருவிக்கொண்டிருக்குதுகள் :D

சாந்தியக்கோய்!!!!! முகத்துக்கு வெளிச்சம்வர பொட்டு கட்டாயம் வேணுமோ? அப்ப உந்த கறுப்பர் ,வெள்ளையள் முகத்திலை வெளிச்சம் பிரகாசிக்க என்னத்தை தேடுறாங்கள்?
 
ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். :lol:

மேலை நீங்கள் சொல்லியிருக்கிற கம்பேக்கர் எல்லாம் அதை இலகுவாய் செய்யிறவையிட்டத்தான் விளக்கம் கேட்க வேணும். மற்றும் மோதிரம் பற்றியும் வெள்ளையளிட்டைத்தான் நீங்கள் கேட்டறிய வேணும். தமிழர் திருமணமுறையிலும் மோதிரம் என்று ஒன்று இருக்கு. அதைப்பற்றி நீங்கள் ஒரு விளக்கம் தந்ததால் நாங்களும் அறிஞ்சு கொளளுவம் தானே.

பொட்டு எனது மூஞ்சிக்கு எனக்குத் தேவைப்படுது. அது ஒரு அழகுப்பொரளாக. இதை  கடவுளின் அருளாகவோ அல்லத கணவனின் கொடையாகவோ யாரும் தத்துவங்கள் வைச்சிருந்தால் எனக்கு அது தேவையில்லாதது. இங்கு எனது உரிமை பொட்டிலும் இருக்கிறது.

கறுப்பின பெண்களைத் தான் கேட்க வேணும் ஏன் பொட்டில்லாட்டி உங்கடை முகத்துக்கு பொட்டில்லாமல் எப்பிடி ஒளிவருதெண்டு. இங்கு நான் ஏன் பொட்டு வைக்கிறேன் என்பதனையே எழுதியிருந்தேன். மற்றாக்கள் ஏன் அதை வைக்கேல்லயெண்டதுக்கான விளக்குவுரை தர வேண்டியது நானில்லை அண்ணோய்.

அரங்கேற்றம் நடாத்தினாத்தானே தெரியும் ஆடும் மேடையின் பலமா அல்லது நாட்டியம் ஆடுபவரின் திறனா என்பது.

இங்கு எனது நேரத்தை தொடர்ந்தும் இழக்க விரும்பவில்லை. இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொண்டு விடைபெறுவது எனது நேரத்தை மீதப்படுத்தும்.

சுமேயக்கா மனைவிகளின் சுதந்திரம் பற்றி கேட்டிருந்தா ஆனால் நாங்கள் மகள் மனைவி தாய் தங்கை அக்கா அம்மம்மா பாட்டி வரையும் அலசியுள்ளோம். இந்தப் பெண்ணுரிமை அதுவும் எங்கள் சமூகத்தைப் பொறுத்தவரை இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

சமத்துவம் என்பதனை இங்கு எழுதும் கணிசமான ஆண்களின் மனநிலையை வைத்து உணர முடிகிறது. நாங்கள் அண்ணன் பிரபாகரனால் மட்டுமல்ல அந்த ஆண்டவன் வந்தாலும்  சுயநலமே பெரும்பான்மையாக இருக்கிறது. வாதத்துக்கு வாதம் என்னாலும் வைக்க முடியும். அதற்கு நேராக சக ஆண் கள உறவாலும் வைக்க முடியும். ஆனால் சக மனிசியின் உரிமையை தனது சுயமுடிவிலிருந்து பார்க்கிற மனநிலமை மாறாத வரை இந்த நிலமை மாறாது.

அப்ப நான் இந்தத் திரியிலிருந்து நன்றி வணக்கம் சொல்லி விடைபெறுகிறனாம்.

நன்றி வணக்கம்.

நான் எனது மனைவிக்கு சுதந்திரம் குடுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்டா அவளிடம் ஏற்றகனவே அது இருக்கு. உடுக்கும் உடையில இருந்து தனக்கு வாங்கிய கார் மட்டும் அவளது தெரிவுதான். நண்பர்கள், பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் எமக்கு எமக்கு விரும்பினதை நாமே செய்வோம். இருவரும் எல்லை மீற  மாட்டோம் என்ற நம்பிக்கை. அவள் அவுஸ் வரமுதலேயே நான் வீட்டை வாங்கிவிட்டதால் அது எனது பெயரில் மாத்திரமே இருக்கு ஆனா சம்பளம் வந்த உடனேயே கொஞ்சத்த தூக்கி போட்டு விடுவாள். ஆடை விடயத்தில் தான் நான் அவளிடம் சிலவேளை ஏதாவது கூறுவது. வெளியால எங்கயும் வெளிக்கிடும் போது போர்த்துக் கட்டிக்கொண்டு வெளிக்கிடுவா. நான் தான் கொஞ்சம் சதையைக் காட்டு எண்டு கேக்கிறது.
 
எனது போன பிறந்தநாளுக்கு மனிசி தந்த காட் இதுதான்.
 
Card_1.jpg
 
Card_2.jpg

இப்ப சொல்லுங்கோ எங்கட வீட்ட ஆர் பொஸ் எண்டு...  :D  :D  :D 

தும்பளையான் சம பொருளதார உயர்வு இருக்கும் இடங்களில் அதுவும் தமது எல்லைகளை உணர்ந்து வாழும் உங்கள் போன்ற இளம் குடும்பங்களில் கடந்தகால போதனைகள் இல்லாது போகிறது. மகிழ்ச்சி தருகிறது.

இங்கை யாரும் அடிக்க வராதையுங்கோ. ஆனால் சம பொருளாதார உயர்வு நிச்சயம் ஆண் பெண் சமத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒவ்வொருவரிடமும் பல்வேறு கருத்து இருக்கும். அதனை மதிக்கிறேன். ஆனால் இத்தோடு அம்மா நன்றி வணக்கம் சொல்லீட்டன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து அன்புறவுகளுக்கும் நன்றி.

இந்தமாதிரி புரட்சிகரமான குழறுபடிகளால் துரத்து அண்ணன் தங்கை கல்யாணம் கட்டக்கூடிய சிக்கல்கள் எழலாம்.. கடைசிப் பெயர்/ குடும்பப்பெயர் என்று மேற்குலகில் வைத்திருப்பது இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கவல்லது..

நான்கு தலைமுறையினர் கட்டாயம் தொடர்புகளைப் பேணுபவர்களாக இருப்பார்கள்தானே. பிறகெப்படி??
 
  • கருத்துக்கள உறவுகள்

நீயா நானா: பெண்ணியம் என்றால் என்ன?

http://www.youtube.com/watch?v=jS9Bkb5z5qo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறையெண்டு எந்த நாட்டிலை வாழுறவையை சொல்ல வாறியள்?
 
பொட்டு அழகுப்பொருள்?
அடக்கடவுளே.அதை பச்சையாயே குத்தலாமே??? ஓ...சாறிக்கேத்தமாதிரி கலர்ப்பொட்டு பிறகு வைக்கேலாதெல்லே....அது வேறை றபுள்...  confused0006.gif
வெள்ளைக்காரியளேல்லாம் இப்பிடி பச்சைகுத்துறாளவை அதையும் ஒருக்கால் செய்து பாக்கலாமே?.பெரீய யன்னல்வெட்டு பிளவ்ஸ் போட அந்தமாதிரி தூக்கலாயிருக்கும். :D
 
ஆம்பிளையளும் பொட்டச்சியள் இல்லாமல் எதையும் உற்பத்தி செய்வாங்கள் எண்டதை லேடீஸ் அப்பப்ப மறந்து போயினம்.....பொண்டுகளுக்கு மாதத்திலை வாற அந்த மூண்டு நாளும் நீ பெண் என்பதை மறக்காமலிருக்க கடவுள் இயற்கையாகவே அர்ப்பணித்த அற்புத செயல். :icon_idea:  :lol:  :D
 
அண்ணா எந்த நாட்டில் எண்டாலும் கிணற்றுக்குள் வாழ்பவர்களைப் பற்றி நான் கதைக்கவில்லை. வெளியே வந்து உலகத்துடன் போட்டிபோட்டு சவால்களைச் சந்தித்து சுதந்திரமாய் வாழும் பெண்களைப் பற்றித்தான் கதைக்கிறேன். என் பிள்ளைகள் பொட்டு வைப்பதில்லை. அதற்காக அவர்கள் கலாச்சாரம்  பண்பாட்டைப் பேணுபவர்கள் அல்ல என்பதும் இல்லை. பொட்டு வைத்துக்கொண்டு திரியும் பலரிடம் இல்லாத நல்ல பண்புகள் அவர்களிடம் உண்டு.

பச்சை குத்துவது கூடத் தவறென்று எப்படிச் சொல்ல முடியும்??? காலத்துக்கேற்ப நாம் மாற்றமடைந்துதான் தீரவேண்டும். அதைவிட்டு இப்பவும் நான் உரலில் மாவிடித்து வறுத்துத்தான் புட்டவிப்பேன் என்று கூறினால் அவர்களுக்காக இரக்கப்படலாமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆண்களுக்கு அந்த வல்லமை இல்லை என்றுதான் பெண்களுக்கு அந்தப் படைப்பைக் கொடுத்தது இயற்கை.  உருவத்திலும்  செயல்களிலும் வேறுபாடு இருந்தாலும்  பெண்கள் ஆண்களுக்கு குறைந்தவர் இல்லை. :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது மனைவிக்கு சுதந்திரம் குடுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்டா அவளிடம் ஏற்றகனவே அது இருக்கு. உடுக்கும் உடையில இருந்து தனக்கு வாங்கிய கார் மட்டும் அவளது தெரிவுதான். நண்பர்கள், பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் எமக்கு எமக்கு விரும்பினதை நாமே செய்வோம். இருவரும் எல்லை மீற  மாட்டோம் என்ற நம்பிக்கை. அவள் அவுஸ் வரமுதலேயே நான் வீட்டை வாங்கிவிட்டதால் அது எனது பெயரில் மாத்திரமே இருக்கு ஆனா சம்பளம் வந்த உடனேயே கொஞ்சத்த தூக்கி போட்டு விடுவாள். ஆடை விடயத்தில் தான் நான் அவளிடம் சிலவேளை ஏதாவது கூறுவது. வெளியால எங்கயும் வெளிக்கிடும் போது போர்த்துக் கட்டிக்கொண்டு வெளிக்கிடுவா. நான் தான் கொஞ்சம் சதையைக் காட்டு எண்டு கேக்கிறது.
 
எனது போன பிறந்தநாளுக்கு மனிசி தந்த காட் இதுதான்.
 
இப்ப சொல்லுங்கோ எங்கட வீட்ட ஆர் பொஸ் எண்டு...  :D  :D  :D 

பிறகும் பாருங்கோ பொஸ் எண்டுகொண்டு. குடும்பத்தில் யாரும் யாருக்கும் பொஸ்சாக இருக்கக் கூடாது. ஆடையை வைத்தே எம்மைப் பற்றி மதிப்பிட்டுவிடலாம். போர்த்து மூடவும் தேவை இல்லை. ஆபாசமாகவும் அணியத் தேவை இல்லை. தேவையின்றிச் சதையையும் காட்டத் தேவை இல்லை. :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதனால் தான் இன்றும் பெண்ணியம் பேச வேண்டியுள்ளது என்ற பொய்யான கருத்து ஐரோப்பிய நாடுகளில் எடுபடாது. இங்கே சட்டத்தில் பெண்களிற்கு முன்னுரிமை. 

ஆண் ஆதிக்கம் என்பது எனக்கு தெரிந்து ஊரில் இருந்திருக்கலாம். இங்கே அது சில வீடுகளில் இருந்தாலும் அதனை உடைத்து வெளியில் வருகின்ற வழிகள் ஆயிரம் உள்ளன. அந்த வழிகளை பெண்கள் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை! 

இந்த பெண்ணியம் பேசும் பெண்கள் முதலில் ஏனைய பெண்களிற்கு இந்த பெண்ணிய சிந்தனை பற்றி வகுப்பெடுக்க வேண்டும். ஒரு ஆண் பெண்ணியத்திற்காக குரல் கொடுத்தாலும் அதனை முதலில் எதிர்ப்பது ஒரு பெண் தான். 

தாலி இல்லாமல் திருமணம் செய்துகொள்வதற்கு எத்தனை பெண்கள் தயார்? 

சீதனம் கேட்டாலும் தர மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் பெண்கள் எத்தனை? 

அழகு சாதனங்களை எதற்கு பயன்படுத்த வேண்டும்? அழகு தான் பெண்ணின் அடையாளம் என விளம்பரப்படுத்தும் (தமிழ்) நிறுவனங்களின் மேல் ஏன் பெணணியம் பாயவில்லை? நகைக்கடைகளின் முற்றுகை எங்கே?

ஆணும் தன்னை அழகுபடுத்திக்கொள்கின்றான் அவன் இயற்கையில் அழகில்லை என்பதனால். ஆனால் ஆணியம் பேசுவதில்லை.

பெண்ணியம் பேசுபவர்களின் பெண்பிள்ளைகளை எப்படி வளர்கின்றார்கள்? ஒவ்வொரு செயலிலும் ஆணுக்குப்பெண் சமமானவள் அல்ல என்கிற செய்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் கற்பித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 

அழகிப்போட்டிகளில் எதிர்ப்புக்குரல் எங்கே போனது? அதனை முன்னின்று செய்தவர்கள் ஆண்களா? பெண்ணை ஒரு அழகு பொருளாக காட்ட முயற்சிப்பதை ஏன் தமிழ் பெண்கள் எதிர்க்கவில்லை?

பெண்களை கடவுளாக வணங்கும் நமக்கு ஒரு பெண் அர்ச்சகராக முடியாத நிலை தானே உள்ளது. அதனை ஏற்றுக்கொண்டதால் தானே  இன்று கோயில்கள் பெண்களால் நிரம்பி வழிகின்றது.  

ஆண்களுக்கு இணையாகவோ மேலானவர்களாகவோ மாறினால் மட்டும் பெண்ணியம் வென்றுவிடாது. அதற்கு முன் ஆதிக்கவெறி பிடித்த ஆண்களை எதிர்த்து நிற்க அனைத்து பெண்களும் ஓரே நேர்கோட்டில் பயணிக்கவேண்டும். ஆனால் பெண்ணியம் என்பதே ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடுகின்றது. 

இதோட நிறுத்திக்கொள்ளுறன் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான் செங்கொடி. ஆண்களைக் குறை கூறுவதிலும் பெண்களைத்தான் கூறவேண்டி உள்ளது. என்னைப் பொறுத்த\வரை எழுதுவது ஒன்று செய்வது ஒன்று அல்ல. என் பிள்ளைகள் விடயத்தில் நான் அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளேன். இங்கு பிறந்து வளரும் பஈல்லைகளில் பெரும்பாலானோர் தெளிவான சிந்தனையுடன் எதிர்கால வாழ்வின் தீர்க்க தரிசனத்துடந்தான் இருக்கின்றனர். சிலர்தான் சுய சிந்தனையின்றி வாழ்பவர். அதிலும் என் தலைமுறைப் பெண்கள்தான் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த காணொளி நீண்டதுதான். நேரம் கிடைக்காதவர்கள் 55 ஆவது நிமிடத்தில் இருந்து சில நிமிடங்கள் பாருங்கள். இதுதான் பெண்கள் விரும்பும் சுதந்திரம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு தலைமுறையினர் கட்டாயம் தொடர்புகளைப் பேணுபவர்களாக இருப்பார்கள்தானே. பிறகெப்படி??

அப்ப ஐந்தாம் தலைமுறையில் இருந்து தங்கச்சியைக் கட்டலாமா? :o

பி.கு.: அதைவிடக் கிட்டின உறவுக்குள் தாறுமாறாக நடந்ததையும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் ஆரோக்கியமான வாழ்வுக்கு இவை தெரியாத அளவு தூரத்தில் இருக்கவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.