Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழைச் சேர்ந்த நபர் தமிழகத்தில் தற்கொலை - இரு மனைவிகளினதும் பிரிவே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
HUNGING%20MAN-SEITHY-20131029.jpg

மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர். கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 33 வயதான நாகேஸ்வரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 26 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் விஜயப்பிரியா (வயது-7), கவிப்பிரியா (வயது-6), சிநேகப்பிரியன் (வயது-5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலைச்செல்வி என்பவரை நாகேஸ்வரன் 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு பவீஸ்னா என்ற 11 மாத குழந்தை உள்ளது. இவரும் கடந்த 25ம் திகதி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் சாரத்தில் சேலையால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=96007&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனைவிகளும் பிரிந்தபின்பு இவருக்கு சேலை எப்படிக்கிடைத்தது...? எங்கோ இடிக்கிறது..! இது மூன்றாவது ஒருதியின் வேலையாக இருக்கவேண்டும். தற்கொலையாக இருக்கமுடியாது. கொலைதான்.

அனுதாபம் தெரிவிக்கவேண்டிய நேரத்தில் இப்படியா! என்று நீங்கள் ஆதங்கப்படுவது தெரிகிறது. இரண்டு மனைவிகளையும், அதுவும் குழந்தைகளுடன் ஓடவைத்தவர் உத்தமராக இருக்கமுடியாது. <_<

 நெடுக்கு...

நெடுக்கு...

நெடுக்கு.......... :rolleyes:  :rolleyes:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு... பெண்களை, டிருமணம் செய்து... பிள்ளை பெத்தும்....
வாழ்க்கையில... நிம்மதி, இல்லேன்ன்னா...
யாரூ... காரணம்? நிச்சயமாக... அந்த, பொண்ணுங்க தான்.. காரணமுங்க...
பாவம்... அந்தப் பொடியன். :D  :lol:

-நெடுக்ஸ்-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எப்படி அப்படி சொல்லுவீங்க? மூணாவதா ஒருத்தி கிடைக்காமல் போனதுதான் காரணம்னு நினைக்கிறேன்!. '4 பிள்ளைகளுக்கு அப்பனான பிறகும்!!!!!!!!!!!!.திருத்தவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி அப்படி சொல்லுவீங்க? மூணாவதா ஒருத்தி கிடைக்காமல் போனதுதான் காரணம்னு நினைக்கிறேன்!. '4 பிள்ளைகளுக்கு அப்பனான பிறகும்!!!!!!!!!!!!.திருத்தவே முடியாது.

ஒகோ.... எதிர்த்தாக்குதல், அதிகமாயிருக்கோ.....

நெடுக்க‌ண்ணை... வ‌ந்து, ப‌தில் சொல்லும‌ட்டும், "வெயிற்" ப‌ண்ணுங்க‌. :lol:  :D

இரண்டு மனைவிகளும் பிரிந்தபின்பு இவருக்கு சேலை எப்படிக்கிடைத்தது...? எங்கோ இடிக்கிறது..! இது மூன்றாவது ஒருதியின் வேலையாக இருக்கவேண்டும். தற்கொலையாக இருக்கமுடியாது. கொலைதான்.

அனுதாபம் தெரிவிக்கவேண்டிய நேரத்தில் இப்படியா! என்று நீங்கள் ஆதங்கப்படுவது தெரிகிறது. இரண்டு மனைவிகளையும், அதுவும் குழந்தைகளுடன் ஓடவைத்தவர் உத்தமராக இருக்கமுடியாது. <_<

கடந்த 25 ஆம் திகதி தான் இரண்டாவது மனைவி பிரிந்தார் என்று உள்ளது. அவர் செல்லும் போது முழு சேலையையும் அள்ளிக்கட்டிக்கொண்டு சென்றிருப்பார் என்றில்லை தானே?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 25 ஆம் திகதி தான் இரண்டாவது மனைவி பிரிந்தார் என்று உள்ளது. அவர் செல்லும் போது முழு சேலையையும் அள்ளிக்கட்டிக்கொண்டு சென்றிருப்பார் என்றில்லை தானே?

இங்கு எல்லோருமே நெடுக்ஸ் அண்ணனின் வரவை எதிர்பார்க்கிறார்கள். அவர் வந்தபின்தான் தங்கையைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருமே நெடுக்ஸ் அண்ணனின் வரவை எதிர்பார்க்கிறார்கள். அவர் வந்தபின்தான் தங்கையைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். :(

எந்தத் தங்கை பற்றி ????? :D

  • கருத்துக்கள உறவுகள்

 நெடுக்கு...

நெடுக்கு...

நெடுக்கு.......... :rolleyes:  :rolleyes:  :rolleyes:

ஏனப்பா அந்தப் பச்சைக்குழந்தையை இங்கை கூப்பிடுறியள். பாவம் பிள்ளையை கொஞ்சம் படிக்க விடுங்கோவன். :lol:

இங்கு எல்லோருமே நெடுக்ஸ் அண்ணனின் வரவை எதிர்பார்க்கிறார்கள். அவர் வந்தபின்தான் தங்கையைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். :(

சேலை எப்படி கிடைத்தது என்ற உங்கள் சந்தேகத்தை தீர்த்து வைக்க முயன்றேன். :) அதற்காக அந்த ஆண் நல்லவரென்று கூறவில்லை. பிரிவதற்கு யாராவது ஒருவர் காரணமாக இருக்கலாம். யார் மேல் பிழை உள்ளது என தெரியாததால் நான் அது தொடர்பாக உறுதியாக கருத்து கூற விரும்பவில்லை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு தான் இரண்டும் கெட்டான் என்று சொல்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழைச் சேர்ந்த என்றவுடன்.. எங்கட யாழ் களத்தை என்றெல்லோ நினைச்சுப் போட்டம்.

இரண்டு பெண்களும் கில்லாடிகள். பெற வேண்டியதை எல்லாம் பெற்றுவிட்டு கழட்டி விட்டிட்டார்கள். அதற்கு இவர் பரிமளம் போனால் மஞ்சுளா.. மஞ்சுளா போனால்.. ஒரு திரிஷா.. ஒரு திரிஷா போனால்.. ஒரு அனுஷ்கா.. ஒரு அனுஷ்கா போனால்.. ஒரு ஹன்சிகா என்றிருந்திக்கனும். அதைவிட்டிட்டு பொண்டுகளே விட்டிட்டு ஓடிறப்போ.. இவர் மட்டும் உயிரை விடுறது படு முட்டாள் தனம். கோழைத்தனம். எனி என்ன உவர் உயிரை விட்டிட்டார் புத்திமதி சொல்லியும் பயனில்லை. எதிர்காலத்தில மற்றவையாவது கழட்டி விடப் போறன் என்று நிற்கிறதுகளை உச்ச அளவு யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டிடுங்க..!

ரீ கடையில போய் ரீ வாங்கிச் சாப்பிட்டால்.. அதே கப்பில தான் சாப்பிடனும் என்று அடம்பிடிச்சு எவனாவது தற்கொலை செய்தால்.. அது எவ்வளவு முட்டாள் தனமோ அதைவிடக் கேவலம் இது..!

ஆண் சிந்திக்கனும். நேர்மையா வாழ நினைக்கிற பெண்களை ஏமாற்றக் கூடாது. அதே நேரம்.. நேர்மை அற்று சுத்துமாத்துப் பண்ணுறதுகளை.. ஏமாற்றிறது குற்றமில்லை..! ஏமாற்றிற பெண்களுக்காக வருந்திறதும் குற்றம்.. வருந்தி வாழா திருப்பதும் குற்றம். அதைவிடக் குற்றம் தற்கொலை பண்ணிக்கிறது. நீங்க தற்கொலை பண்ணிக்கிறதால.. அந்தப் பெண்களுக்கு ஒரு நைசா பைசா கூட நட்டமில்லை. மாறாக.. அந்த பெண்களால் ஏமாறப் போற ஆண்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும்..! அந்த வகையில் அவர்கள் பற்றி எச்சரிக்கை செய்து சமூகத்தைக் காப்பாற்றவாவது நீங்க உயிர் வாழனும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தற்கொலை என்பது மடமைத்தனம் அந்தவகையில் இரங்கல்கள் இல்லை. சைவசமயத்திலும் தற்கொலைகளுக்கு இறுதிக்கிரியைகள் எதுவுமேயில்லை.
 
இருந்தும் இரண்டாவது மனைவியும் ஓடிப்போகுமளவர்க்கு இவரில் ஏதாவது குறைபாடுகள் இருக்கலாம்.ஒருதாய் பிள்ளையையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டாள் என்ற செய்தியை விட இது பரவாயில்லை. கையாலாகாதவன் போக வழிவிடுங்கள். :)  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியிலும், உட்டியில் நீர்வீழ்ச்சியில் உயிரிழந்த்ஹ திரியிலும், ஏன் இப்படி நடந்தவற்றை பக்கத்தில் நிண்டு பார்த்தவை மாதிரி கருத்து எழுதுகிறீர்கள்?

இவர்களின் வாழ்வில் என்ன நடந்தது என்று நம்மில் யாருக்கும் தெரியாது. நமது தீர்மானிக்க பட்ட கருத்துக்கள் (pre conceived opinion) மற்றும் நம்மனதில் இருக்கும் வெறுப்பு ( prejudice) எல்லா பெண்களும் எதோ ஒருவகையில் ஆண்களை சுத்தி விடும் கூட்டம் எனும் ஒரு பொதுப்படையான எழுந்தமானம் ( stereotype ) இவற்றின் அடிப்படையில் நமக்கு எதுவுமே தெரியாத இரு தனி நபர்களின் வாழ்வை பர்ரி நாம் சொல்லுவது எவ்வளவு அபத்தமான கருத்து?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இரண்டு மனைவிகளுமே கொடியவர்களாக இருந்து இந்த மனிதர் இழகிய மனம் படைத்தரவாக இருந்திருக்கலாம். அந்தச் சோகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் தற்கொலை முழு முட்டாள் தனமானதே... எந்தச் சோகமும் மனதால் வெல்லப்படக் கூடியதே. அந்தத் தருணத்தை தாண்டுவது தான் முக்கியம் மனிதனுக்கு.

உலகிற்கு அணு அறிவியலைத் தந்த.. அயன்ஸ்ரைனின் கூட விவாகரத்துப் பெற்றவர் தான். அதேபோல்.. தத்துவஞானி சாக்கிரட்டிஸ் கூட தனது கெட்ட மனைவியை வெறுத்தவர் தான். அவர்கள் எல்லாம்.. கெட்டவர்களோ...இயலாதவர்களோ...??!

ஏனோ தெரியல்ல சில ஆண்களுக்கு பெண்களை எப்பவுமே நல்லவங்களாவே காட்டிப் பழகிட்டு. அதனால் அவங்க குனிந்து வளைந்து நெழிந்து..... பல நன்மைகளைப் பெறுறாங்க போல. ஆனால் சமூகத்தில்.. யதார்த்தம் என்பது வேறாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தசோகமும் மனதால் வெல்லக்கூடியதெண்டால் என்னகோதாரிக்கு அயன் விவாகரத்து எடுத்தவர்?    einstein-zunge.gif

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி என்ற பெயரில் வந்த பெண்ணின் றோதனையில் இருந்து விடுபட.இங்கும் அந்த கணவன் கெட்டவர் என்றால் அப்பெண்கள் விவாகரததுப் பெற்றிருக்கலாம் சட்டப்படி.அவர் தப்புப் பண்ணி இருந்தால்.ஆனால் களவா விட்டிட்டு ஓடினது என்பது அப்பெண்களை சந்தேகிக்கச் செய்கிறது.

ஒரு செய்தியில் போட்டிருப்பதை மட்டும் நம்பி கருத்து வெளியிட முடியாது. ஒன்றை இன்னொரு மாதிரி எழுதுவது பத்திரிகையாளர்கள் பலரின் குணம்.

நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் முதல் மனைவி கூட விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார் என செய்தியில் இல்லை. அதற்காக முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இவர் இரண்டாவது திருமணம் செய்தாரா? அவ்வாறு சட்டம் உள்ளதா? ஆம் எனின் ஒரே நேரத்தில் இவருக்கு இரு மனைவி தேவையா, இவராவது விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்திருக்கலாம் தானே எனவும் நோக்கலாம்.

பொதுவில் தமிழர்கள் நிரூபிக்கக்கூடிய அளவுக்கு சாட்சியத்தை விட்டுக்கொண்டு தவறு செய்வதில்லை. பின்னர் எப்படி அதை கொண்டு சட்டப்படி விவாகரத்து பெறுவது. ஒருவர் விவாகரத்துக்கு சம்மதிக்காவிட்டால் கூட அது இழுபட்டுக்கொண்டு செல்லும். அதைவிட ஏதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றிருந்தால் கொஞ்ச நாட்கள் போக மீண்டும் சேரலாம் என நினைத்திருக்கவும் கூடும்.

அதைவிட அவர்கள் அகதி முகாமில் இருந்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அகதி முகாமில் இருப்பவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ யாருக்கு தெரியும்.

முதல் மனைவி தானாக பிரிந்து சென்றாரா அல்லது இவர் துரத்தி விட்டாரா என்பதும் எமக்கு தெரியாது. தானாக பிரிந்து சென்றிருந்தால் அதற்கு என்ன காரணம் என்றும் எமக்கு தெரியாது. அதுபற்றி செய்தியில் விரிவாக குறிப்பிடப்படவுமில்லை.

இந்த திரியிலும், உட்டியில் நீர்வீழ்ச்சியில் உயிரிழந்த்ஹ திரியிலும், ஏன் இப்படி நடந்தவற்றை பக்கத்தில் நிண்டு பார்த்தவை மாதிரி கருத்து எழுதுகிறீர்கள்?

இவர்களின் வாழ்வில் என்ன நடந்தது என்று நம்மில் யாருக்கும் தெரியாது. நமது தீர்மானிக்க பட்ட கருத்துக்கள் (pre conceived opinion) மற்றும் நம்மனதில் இருக்கும் வெறுப்பு ( prejudice) எல்லா பெண்களும் எதோ ஒருவகையில் ஆண்களை சுத்தி விடும் கூட்டம் எனும் ஒரு பொதுப்படையான எழுந்தமானம் ( stereotype ) இவற்றின் அடிப்படையில் நமக்கு எதுவுமே தெரியாத இரு தனி நபர்களின் வாழ்வை பர்ரி நாம் சொல்லுவது எவ்வளவு அபத்தமான கருத்து?

நான் வாசித்த உங்கள் கருத்துகளில் முதல்முதலாக எனக்கு பிடிச்ச கருத்தை இப்ப தான் பார்க்கிறேன். :lol:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்தியில் போட்டிருப்பதை மட்டும் நம்பி கருத்து வெளியிட முடியாது. ஒன்றை இன்னொரு மாதிரி எழுதுவது பத்திரிகையாளர்கள் பலரின் குணம்.

நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் முதல் மனைவி கூட விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார் என செய்தியில் இல்லை. அதற்காக முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இவர் இரண்டாவது திருமணம் செய்தாரா? அவ்வாறு சட்டம் உள்ளதா? ஆம் எனின் ஒரே நேரத்தில் இவருக்கு இரு மனைவி தேவையா, இவராவது விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்திருக்கலாம் தானே எனவும் நோக்கலாம்.

பொதுவில் தமிழர்கள் நிரூபிக்கக்கூடிய அளவுக்கு சாட்சியத்தை விட்டுக்கொண்டு தவறு செய்வதில்லை. பின்னர் எப்படி அதை கொண்டு சட்டப்படி விவாகரத்து பெறுவது. ஒருவர் விவாகரத்துக்கு சம்மதிக்காவிட்டால் கூட அது இழுபட்டுக்கொண்டு செல்லும். அதைவிட ஏதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றிருந்தால் கொஞ்ச நாட்கள் போக மீண்டும் சேரலாம் என நினைத்திருக்கவும் கூடும்.

அதைவிட அவர்கள் அகதி முகாமில் இருந்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அகதி முகாமில் இருப்பவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ யாருக்கு தெரியும்.

முதல் மனைவி தானாக பிரிந்து சென்றாரா அல்லது இவர் துரத்தி விட்டாரா என்பதும் எமக்கு தெரியாது. தானாக பிரிந்து சென்றிருந்தால் அதற்கு என்ன காரணம் என்றும் எமக்கு தெரியாது. அதுபற்றி செய்தியில் விரிவாக குறிப்பிடப்படவுமில்லை.

மேலோட்டமாப் பார்த்தா உங்களின் இந்தக் கருத்து நடுநிலை போலத் தோன்றும். ஆனால் வகைக்கும் அந்த ஆணின் மீது குற்றம் காண்பதாகவே உள்ளது.

அந்தப் பெண்கள் ஏமாற்றிட்டு போனதாய் ஏன் எண்ணப்படாது...???! முதல் மனைவி ஏதோதோ காரணங்களுக்காக.. விட்டிட்டுப் போக.. இரண்டாவது பெண் இவரை காதலிக்கிறனுன்னு சொல்லி.. ஏன் கட்டாயப்படுத்தி கலியாணம் செய்திருக்க முடியாது..???! அவாவும் முதல் மனைவி இருக்கிறப்போ தானே கலியாணம் செய்திருக்கிறா..??! இப்போ இவரிடம் ஒன்றுமே இல்லை என்று (அது தான் காசு பணம்.. உதுகள்) கண்டிட்டப்போ (அப்படியாக இருக்கலாம்..).. அந்தப் பொம்பிளையும்.. ஏமாற்றிட்டு.. யார் யார் கூட ஓடினாவோ...???! ஏன் உதுகளுக்கான சாத்தியங்கள் பற்றியும் தானே செய்தியில போடேல்ல..!

எங்க கேள்வி அதென்ன கொலை செஞ்சு செத்தாலும் ஆண் மேல தான் தப்பு.. தானா தற்கொலை செய்தாலும் ஆண் மேல தான் தப்பு.. பொண்ணுங்க எல்லாம் பெரிய ஜோக்கியதை என்று காட்டிறதை தான் தப்பென்கிறம். ஆண்களுக்கு ஈடாக பெண்களிலும் கெட்டவங்க.. நாசகாரிங்க உள்ளதுங்க..! இதனை முதலில நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வரணும். அப்ப தான் தவறுகளை சரியா எந்தப் பக்கமுன்னு கண்டுபிடிக்கக் கூடிய விசாரணை நிலைப்பாடு தோனும். மாறாக ஒரு தரப்பு தப்புச் செய்திருக்கும் மற்றது அப்படி இருக்காது அதுங்க அப்பாவிங்க.. என்று சிந்திக்கிறது தான் தப்பு..! தப்புக்கள் பெருகவும் அதுதான் காரணம்.

இது ஊடகச் செய்தி. மேலும் விலாவாரியான ஊடகச் செய்தி. அதுவும் ஒரு பெண் விட்டிட்டு ஓடிறாள் என்றால் அதற்கும் ஆணின் மீது தன்னிச்சையாக குற்றம் சுமத்தக் கூடிய சமூகத்தின் ஊடகச் செய்தி. அதை வைச்சுக்கிட்டு.. நீதி நியாயம் கண்டுபிடிப்பதே கடினம். அதில.. ஆண் மீது அதுவும் செத்துப் போவன் மீது பழிபோடுறாங்க. சாவுக்கு தூண்டினவங்கள ஓட விட்டிட்டிருக்காங்க..! பிடிச்சு அந்தப் பெண்கள் இருவரையும் விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில கருத்தெழுதி இருக்கிறவங்க அநேகர் போல.. நாங்களும்.. அட அவன் ஒரு ஏமாற்றுக்காரன்.. அந்தப் பொண்ணுங்க அவன் தொல்லை தாங்காமல்.. ஓடிப் போயிட்டுதுகள்.. இவன் எனியும் உலகை ஏமாத்தேலாது என்று செத்துப் போயிட்டான் என்று எழுதி கண்ணீர் அஞ்சலியும் என்று போட்டிருந்தா... இந்தத் தலைப்பு இந்தளவுக்கு நீண்டிராது. பல வகை கருத்துக்களும் வெளிய வந்திருக்காது. இப்போ.. கருத்தின் தளம் இரண்டு பக்கமும் தப்பு.. தவறுக்கான வாய்ப்பைப் பார்க்குது. அது தான் முக்கியம்.. நீதி நேர்மையோடு.. குற்றவாளிகளை குற்றங்களை இனங்காணவும் திருத்தவும்.

இங்கு எவருமே தீர்ப்பெழுதல்ல. சாத்தியங்களையே எழுதுகிறார்கள். இதில் சிலர் (கோசான் போன்றவர்கள்) தங்கள் சொல் வித்தைகளை மற்றவர்கள் மீது.. புகுத்திக் கொள்வது அல்லது திணித்துக் கொள்வது தேவையற்றது. அதிலும் இது விடயத்தில்..  தங்கள் கருத்தை பார்வையை மட்டும் சொல்லலாம். அதுக்குத் தான் கருத்துக்களம். . மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கும்.. மற்றவர்களின் கரக்டர் இது தான் என்று.. சான்றிதழ் எழுதவும் அல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

மேலோட்டமாப் பார்த்தா உங்களின் இந்தக் கருத்து நடுநிலை போலத் தோன்றும். ஆனால் வகைக்கும் அந்த ஆணின் மீது குற்றம் காண்பதாகவே உள்ளது.

அந்தப் பெண்கள் ஏமாற்றிட்டு போனதாய் ஏன் எண்ணப்படாது...???! முதல் மனைவி ஏதோதோ காரணங்களுக்காக.. விட்டிட்டுப் போக.. இரண்டாவது பெண் இவரை காதலிக்கிறனுன்னு சொல்லி.. ஏன் கட்டாயப்படுத்தி கலியாணம் செய்திருக்க முடியாது..???! அவாவும் முதல் மனைவி இருக்கிறப்போ தானே கலியாணம் செய்திருக்கிறா..??! இப்போ இவரிடம் ஒன்றுமே இல்லை என்று (அது தான் காசு பணம்.. உதுகள்) கண்டிட்டப்போ (அப்படியாக இருக்கலாம்..).. அந்தப் பொம்பிளையும்.. ஏமாற்றிட்டு.. யார் யார் கூட ஓடினாவோ...???! ஏன் உதுகளுக்கான சாத்தியங்கள் பற்றியும் தானே செய்தியில போடேல்ல..!

எங்க கேள்வி அதென்ன கொலை செஞ்சு செத்தாலும் ஆண் மேல தான் தப்பு.. தானா தற்கொலை செய்தாலும் ஆண் மேல தான் தப்பு.. பொண்ணுங்க எல்லாம் பெரிய ஜோக்கியதை என்று காட்டிறதை தான் தப்பென்கிறம். ஆண்களுக்கு ஈடாக பெண்களிலும் கெட்டவங்க.. நாசகாரிங்க உள்ளதுங்க..! இதனை முதலில நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வரணும். அப்ப தான் தவறுகளை சரியா எந்தப் பக்கமுன்னு கண்டுபிடிக்கக் கூடிய விசாரணை நிலைப்பாடு தோனும். மாறாக ஒரு தரப்பு தப்புச் செய்திருக்கும் மற்றது அப்படி இருக்காது அதுங்க அப்பாவிங்க.. என்று சிந்திக்கிறது தான் தப்பு..! தப்புக்கள் பெருகவும் அதுதான் காரணம்.

இது ஊடகச் செய்தி. மேலும் விலாவாரியான ஊடகச் செய்தி. அதுவும் ஒரு பெண் விட்டிட்டு ஓடிறாள் என்றால் அதற்கும் ஆணின் மீது தன்னிச்சையாக குற்றம் சுமத்தக் கூடிய சமூகத்தின் ஊடகச் செய்தி. அதை வைச்சுக்கிட்டு.. நீதி நியாயம் கண்டுபிடிப்பதே கடினம். அதில.. ஆண் மீது அதுவும் செத்துப் போவன் மீது பழிபோடுறாங்க. சாவுக்கு தூண்டினவங்கள ஓட விட்டிட்டிருக்காங்க..! பிடிச்சு அந்தப் பெண்கள் இருவரையும் விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிக்கும்..! :icon_idea:

நீங்கள் அந்த பெண்களை குற்றவாளியாக நினைத்ததால் அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். அதற்காக அந்த ஆணில் தான் பிழை என்று நான் கூறவில்லை. அத்துடன் இரண்டாவது மனைவி பற்றி அதில் நான் எழுதியும் இருக்கவில்லை. விவாகரத்து தொடர்பான உங்கள் கருத்துக்கு முதல் மனைவியை வைத்தே பதில் எழுதக்கூடியதாக இருந்தது.

அந்த பெண்கள் ஏமாற்றியதாக ஏன் எண்ன வேணும்? அந்த ஆணில் தான் பிழை என ஏன் எண்ன கூடாது? எனவும் கேட்கலாம். அவ்வாறு நாங்கள் மாறிமாறி கேட்பதற்காக எதுவும் உண்மை ஆகிவிடாது.

நான் பெண்கள் அனைவரும் நல்லவர்கள் என வாதிடவில்லை. ஆனால் ஒரு பிரச்சினை என்றவுடன் பெண்ணை குற்றம் சாட்டுவதையே நான் எதிர்க்கிறேன். ஆண்களிலும் பெண்களிலும் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளார்கள்.

முதல் மனைவியை இவர் துரத்தி விட்டும் இருக்கலாம். அல்லது இவரது செய்கைகள் பிடிக்காமல் அவர் பிரிந்து இருக்கலாம். போன்ற சந்தர்ப்பங்களும் உள்ளது. அதுதொடர்பான விபரமறிய இச் செய்தி போதாது. ஆனால் இரண்டாவது மனைவி விடயத்தில் இவர் பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால் தற்கொலை செய்திருக்கலாம். அல்லது இவர் விட்ட தவறு ஏதும் தெரியவந்து மனைவி பிரிந்த பின்னர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை பண்ணியும் இருக்கலாம். அருகில் இருப்பவர்களுக்கு தான் உண்மை தெரியும். எமக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி?

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.