Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சம்பந்தர் – சுமந்திரன் – விக்கினேஸ்வரன் கூட்டணி” ஒரு இனத்தின் அரசியற் தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வரலாற்றில் எத்தனையோ சோதனையான காலகட்டங்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் போராடிக்கொண்டிருக்கிறது இந்த இனம். “தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறோம்” என்று கூறியபடியே தமது பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் சோரம்போன அரசியல் தலைவர்களையும் போராளித் தலைவர்களையும் கண்டவர்கள்தான் நாம்.

இந்த இனம் தமது விடுதலை குறித்து கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாமல் கவலைப்படாமல் வாழ்ந்த பொற்காலம்தான் புலிகளின் ஆட்சிக்காலம். இதை எதிரிகளே ஏற்றுக்கொள்வார்கள். எந்த மிரட்டலும் விலைபேசலும் புலிகளை அடிபணிய செய்யவில்லை. மக்களினதும் புலிகளினதும் உளவியல் அலைவரிசை சீராக பயணித்த ஒரு அற்புதமான காலகட்டம் அது.

புலிகளின் ஆட்சிக்கு முன்பும் சரி மே 18 இற்கு பின்பும் சரி இனி வரப்போகும் காலங்களிலும் சரி அத்தகைய போக்கு இனி இருக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

மக்களும் தற்போது இந்த யதார்த்தத்தை உணர்ந்து எந்த பேராசையும் கொள்ளவில்லை. ஆனால் ஒரு 10 விழுக்காடாவது, தமது உளவியல் போக்கை உணர்ந்து அரசியல் செய்வார்கள் என்று நம்பியே கூட்டமைப்பை பின்தொடருகிறார்கள். ஆனால் கூட்டமைப்பு மக்களின் போக்கில் இயங்காவிட்டாலும் பரவாயில்லை வரலாற்றை பின்னோக்கி இழுக்கவும் எதிரிகளினதும் அந்நிய சக்திகளினது நிகழ்ச்சி நிரலிற்கு ஏதுவாகவும் இயங்குவது மட்டுமல்ல மக்களின் உளவியலை ஊனப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.

“தமக்கு தீர்வு எடுத்து தருவார்கள் என்று நம்பிய ஒரு தலைமை தம்மை அழிப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகிறதோ” என்று தற்போது மக்கள் அஞ்சத் தொடங்கியிருக்கிறார்கள். வடக்கு மகாண சபைத் தேர்தலுக்கு பின்பு இதை உணர நேர்ந்தது குறித்து பலர் மவுனமாக அழுது கொண்டிருக்கிறார்கள். மே 18 இற்கு பிறகு எந்த உணர்வையும் வெளிப்படையாக காட்ட முடியாத அவலத்திற்குள் தமிழன் அமிழ்ந்து கிடக்கும் அவலம் இது.

தமிழ் மக்களை குருரமாக பழிவாங்கும் ஒரு தலைமையாக சம்பந்தர் – சுமந்திரன் -விக்கினேஸ்வரன் கூட்டணி திமிறிக்கொண்டு நிற்பதை காணமுடிகிறது.

பின்னோக்கி நீண்ட தூரம் போக விரும்பவில்லை. இந்த மூவரணியின் தமிழின எதிர்ப்பு சிந்தனையை இந்த வார சம்பவங்களை வைத்தே பார்ப்போம்

முதலில் சுமந்திரன்.
Sumanthirans.jpg
இவர் தமிழீழ விடுதலைக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வெளிப்படையாகவே எதிரானவர். இதில் எந்த ஒழிவு மறைவும் இல்லை. அனேகமாக இதை அவரே மறுக்க மாட்டார். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சம்பந்தருக்கு அடுத்த நிலையில் இருக்கிறார். இதற்கு பிறகு எப்படி தமிழருக்கு தீர்வு கிடைக்கும்? இதை கேட்டால் எமக்கு முட்டாள் பட்டம் கிடைக்கும். அவல முரண்பாடு என்பது இதுதான். இந்திய – சிறீலங்கா நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தமிழீழ கோட்பாட்டை சிதைக்க சம்பந்தரால் உட்செருகப்பட்ட நபர்தான் இவர்.

இவர் நான்கு நாட்களுக்கு முன்பு கனடாவில் தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் “தமிழ் மக்களின் இன அழிப்புக்கு தீர்வு என்னவென்பதை பேசுவார்” என்று மக்கள் குழுமியிருக்க, அவர் புலிகளை நுட்பமாக வசைபாடியதுடன் “நடந்தது இன அழிப்பு இல்லை” என்றும் “அப்படி ஐநா உட்பட எந்த ஆவணங்களிலும் இல்லை” என்றும் ஆனால் “முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இன அழிப்பு” என்றும் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் “முஸ்லிம்களுக்கு தீர்வை நாம் வழங்க வேண்டும்” என்றும் நிறையவே உளறியிருக்கிறார்.

நடந்த இன அழிப்பிற்கான நீதியை பெறவும் – தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுக்கவும் தமிழ் மக்கள் நம்பியிருக்கும் ஒரு கட்சியை சேர்ந்தவர், தனது புலியெதிர்ப்பு வக்கிரங்களை நுட்பமாக கொட்டிவிட்டு போயிருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மட்டுமல்ல அந்த காணொளியை பார்த்த – அது குறித்து கேள்விப்பட்ட அனைவருமே “மேற்குலக – இந்திய – சிங்கள கூட்டணியால் அழிக்கப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ளவர்களை குருரமாக பழிவாங்க இந்த கும்பல் முற்படுகிறதோ” என்று மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கிறார்கள். எந்த சந்தேகமும் தேவையில்லை அதுதான் உண்மை.

சரி சுமந்திரனின் மொழியிலேயே நாம் அணுகுவோம். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது என்பது அன்றைய களயதார்த்தம். ஆனால் அதற்காக அதை நியாயப்படுத்த முடியாது. இதற்கு புலிகளே மன்னிப்பும் கேட்டு அவர்கள் மீள குடியேறுவதற்கான ஒப்பந்தங்களும் 2001 சமாதான காலத்தில் எழுதப்பட்டுவிட்டது. இப்போதைய இன அழிப்பு அரசின் நிதி அமைச்சர் ரவூப் கக்கீம்தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்.

அது சரி புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது 1990. புலிகள் தமது பின்னடைவின் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது 1995 இல். அதற்கு பிறகு முஸ்லிம்கள் மீள குடியேறாததற்கு யார் காரணம்? சரி அதையும் விடுவோம். மே 18 இற்கு பிறகும் புலிகளை குற்றச்சாட்டும் அயோக்கியத்தனம்தான் என்ன?

மே 18 பிறகு முஸ்லிம்கள் பலர் மீள திரும்பியது மட்டுமல்ல, வன்னியின் பல பகுதிகளில் தமிழர்களின் நிலத்தில் வகைதொகையில்லாமல் குடியேற்றப்பட்டும் வருகிறார்கள். இன அழிப்பு அரசின் சூழ்ச்சி இது.

அது சரி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க எத்தனையே முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் இருக்கின்றன. ஏன் இன அழிப்பு அரசின் பங்காளிக்கட்சிகளாகத்தானே அவர்கள் இருக்கிறார்கள். தமிழர்களின் பூர்வீக நிலமான கிழக்கு மகாணசபை அவர்கள் கையிலேயே இருக்கிறது. அவ்வளவு ஏன் சிறீலங்காவின் பிரதான அமைச்சு பொறுப்புக்களான நீதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சை முஸ்லிம்களே வைத்திருக்கிறார்கள்.

எந்த அதிகாரமும் இல்லாமல் ஒவ்வொரு துண்டு நிலமாக இழந்து அம்மணமாக நிற்கும் இனத்தை பார்த்து ” நீ எக்கேடாவது கெட்டுப்போ இப்ப முஸ்லிம்களின் பிரச்சினையை பார்ப்போம். அல்லது அதற்காக கண்ணீர் விடு” என்று கிளம்பியிருக்கிறார் சுமந்திரன். என்ன அயோக்கியத்தனம் இது?

முஸ்லிம்களால் கிழக்கில் எத்தனை மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டது. எத்தனை பெண்கள் மானபங்க படுத்தப்பட்டார்கள். அவ்வளவு ஏன் எத்தனை தமிழரின் பூர்விக கிராமங்கள் இன்று சுத்திகரிக்கப்பட்டு முழுமையான முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதை பேச யாருமே இல்லை.

போதாததற்கு இன்றும் கிழக்கிலும் வன்னியிலும் சட்டவிரோத முஸ்லிம் குடியேற்றங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. ஆனால் ஒரு தமிழன் கூட இன்னும் பறிபோன சொந்த நிலத்தில் மீள குடியேற முடியவில்லை.

இசைப்பிரியாவின் காணொளி வெளியாகி கவலையில் இருந்த மக்கள் மீது சுமந்திரன் தமிழர் விரோத வன்மத்தை கொட்டியிருக்கிறார். அது குறித்து எந்த கவலையும் இல்லை. சமகாலத்தில் வலி வடக்கில் மக்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாகி கொண்டிருக்கின்றன.

இவர்தான் முன்பு மக்கள் போராட முற்பட்டபோது “இது சட்ட பிரச்சினை’ என்று மக்களை போராட விடாமல் தடுத்தவர். இப்போது வீடுகள் இடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் அது குறித்து எந்த கவலையுமில்லை. அறிக்கையுமில்லை. மனதளவில் தமிழின விரோத போக்கு கொண்ட இவர் வீடுகள் இடிக்கப்படுவது குறித்து சந்தோசம்தான் பட்டிருப்பார்.

இவர் அனைத்துலக மட்டத்தில் சந்திக்கும் இராஜதந்திரிகளிடம், புலிகளையும் போர்க்குற்றவாளிகள் என்று குறிப்பிடுவதுடன் இன அழிப்பு விசாரணையை தாம் கோரவில்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் தாம் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் அழுத்தமாக கூறிவருகிறார். பிறகு எப்படி புலத்தில் இருந்து நாம் அனைத்துலக விசாரணையை கோர முடியும்?

இந்த சுமந்திரனிடம் இப்போது ஒரே ஒரு கேள்விதான் நாம் கேட்கிறோம். தேர்தல் மேடைகளில் புலிகளி;ன் இனச்சுத்திகரிப்பு குறித்து பேசியிருக்கலாமே.? ஏன் பேசவில்லை.? மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரியும். இப்போது சுமந்திரன் மக்களின் உளவியலை ஊனப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பது, இன்னும் புலிகளை போற்றிப்பாடித்தான் தாம் வாக்கு கேட்க வேண்டியிருக்கிறதே என்ற இயலாமையிலும் வன்மத்திலும்தான்..

தமிழின விரோதப்போக்கு கொண்ட ஒரு மனநோயாளியாக வக்கிரமடைந்து வரும் சுமந்திரனின் போக்கு இது.

அடுத்து விக்கினேஸ்வரன்.
vikki.jpg
இவர் வடக்கு தேர்தலினூடாக உள்நுழையும் போதே தமிழினத்தின் இறுதி அழிவுகாலம் உணரப்பட்டுவிட்டது. இவரது தகிடுதத்தங்களை தனியாக எழுதத் தேவையில்லை. தினமும் அதை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். உதாரணத்திற்கு ஒன்று. பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடப்பதும் அதற்கு மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவதும் இனஅழிப்பிற்கு நீதி கேட்டு நிற்கும் ஒரு இனமாக எமக்கு எத்தகைய பின்னடைவு என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆனால் இது தொடர்பாக இவர் பண்ணும் அலப்பறைகளை காணச் சகிக்கவில்லை. இறுதியாக மன்மோகன்சிங்கை வடக்கிற்கு வருமாறு கடிதம் எழுதியிருக்கிறார். ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் இது குறித்து கேள்வி கேட்டவுடன், “அது மரியாதை நிமித்தம் எழுதப்பட்டது, தேர்தல் நடத்தியதற்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்டது, மநாட்டுக்கு கூப்பிடவில்லை, யாழ்ப்பாணத்திற்கு மட்டும்ததான் கூப்பிட்டோம்” என்று உளறுகிறார்.

13 வது திருத்தம் என்பதே தமிழ் மக்கள் நிராகரித்த ஒன்று. அதை முன்மொழியும் இந்தியாவிற்கு ஏன் நன்றி? எமது இன அழிப்பில் பங்கெடுத்த இந்தியாவிற்கு நன்றி சொல்லும் அயோக்கியத்தனம்தான் என்ன? மநாட்டை புறக்கணிக்க கோரும் இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு?

ஒன்றும் தெரியாமல் செய்யவில்லை. நுட்பமாக தமிழின அழிப்புக்கு துணைபோகும் அயோக்கியத்தனம் இது. இதையே காரணம் காட்டி இந்திய ஊடகங்களும் சரி அனைத்துலக ஊடகங்களும் சரி “மன்மோகன் சிங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி மநாட்டிற்கு கூப்பிடுகிறார்” எனவே போக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

கூட்டமைப்பு புறக்கணிப்பதாக சொல்ல, விக்கினேஸ்வரன் மறைமுகமாக அழைக்க, இந்தியா கலந்து கொள்ள இப்போது பொதுநலவாய மநாடு சிறப்பாக நடக்க போகிறது. மக்களை எப்படி எல்லாம் சம்பந்தர் கும்பல் ஏமாற்றுகிறது என்பதற்கு இது ஒரு சான்று.

அடுத்து சம்பந்தன்.

மேற்படி இருவரையும் இயக்குவதே இவர்தான். இவரின் ஒவ்வொரு செயலும் பேச்சும் நுட்பமாக தமிழரின் கடைசி கோவணத்தையும் உருவும் முயற்சிதான். வலிவடக்கு பிரச்சினையில் விக்கினேஸ்வரனை கொண்டு அமெரிக்க தலையீட்டை நுட்பமாக தடுத்த இவர் ” ஜனாதிபதியுடன் பேசி விட்டேன். இனி இடிக்கப்படாது” என்றார். ஆனால் இதை எழுதிக்கொண்டிருக்குமபோது எஞ்சியிருந்த கடைசி கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

எந்த சலனமும் இல்லை ஐயாவிடம். போதாததற்கு இசைப்பிரியா காணொளி வந்து முழு உலகமுமே மிரண்டு போயிருக்க நாலு நாட்களாக எந்த சலனமுமில்லை. “கண்டியுங்கள், அறிக்கை விடுங்கள்” என்று பல பக்கத்திலிருந்து வற்புறுத்தியும் எந்த சலனமுமில்லை. ஒரு கட்டத்தில் “இலங்கை அரசு குற்வாளிகளை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

அடப்பாவிகளா, கொன்றதே அவர்கள்தானே.. கொன்றவனிடம் எப்படி நீதியை கேட்க முடியும்? பச்சை அயோக்கியத்தனம் என்பது இதுதான். நேரடியாகக் குற்றம் சுமத்த வேண்டாம், ஒரு பேச்சுக்காகவாவது, இந்த ஆதாரங்களை கொண்டாவது ஒரு அனைத்துலக விசாரணையை கோரியிருக்க வேண்டாமா? ஆனால் திரும்பவும் இனஅழி;ப்பு அரசை காப்பாற்றும் வண்ணம் கதை பேசுகிறார் இந்த சம்பந்தர்.

இது இந்த மூவரணியின் ஒருவார கால பதிவு.

ஆனால் இவர்களை நம்பித்தான் தாயகத்திலுள்ள தமிழர்களின் தலைவிதி இருக்கிறது என்பதை நினைத்தால் தலை தாறுமாறாக சுற்றுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் தமிழனின் கடைசி கோவணத்தையும் உருவ உருவாகியிருக்கும் ஒரு வெற்றிக்கூட்டணிதான் இந்த மூவரணி.

தற்போது தமிழர்களின் உடனடி எதிரிகள் இந்த மூவரணிதான.; அதில் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. ஒன்று இந்த கூட்டணியை உடைக்க வேண்டும். அல்லது கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வேறு யாராவது கைப்பற்ற வேண்டும்.

அல்லது, இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த கூட்டணியின் அயோக்கியத்தனத்திற்குள் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட தமிழ் மக்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக கூட்டு தற்கொலை செய்தும் கொள்ளலாம்.

ஏனென்றால் இவர்களின் தலைமையை ஏற்பதனூடாக தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு இனத்தின் அரசியல் தற்கொலைதான்..

ஈழம்ஈநியூஸ்.

மன்மோகன்சிங்கை அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

 

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று  அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும் chogm_0.jpgஎன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து  வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
 
வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக இந்தியஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் வரவேண்டும் என்றும் கடிதம்மூலம் கோரியுள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இக்கடிதம்பற்றிய செய்திக்கு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும்  பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில்  பொதுநலவாயமாநாடு பற்றி விக்னேஸ்வரன் கடிதத்தில் எதுவும் எழுதவில்லையென்றும் கொழும்பு வரும்போது யாழ்ப்பாணத்திற்கும் வாருங்கள் என்று மட்டுமே எழுதியதாகவும் முதலமைச்சரது அந்தரங்க செயலாளர் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார். 
 
ஆனாலும்  இதற்கு முன்னர் கடந்த செப்ரெம்பர் முற்பகுதியில் இந்தியன் எக்ஸ்பிறஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாயமாநாட்டிற்கு வரவேண்டுமென்று  கூறியிருந்தார்.
 
இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலிவடக்கு வீடுடைப்பு விவகாரமானது அரசியல் விடயம். ஆகவே அரசாங்கத்தோடுபேசியே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
 
இவற்றை வெளிநாடடிலிருந்து வருகின்றவர்களோடு பேசி என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியவர் மறுபுறத்தில் இந்தியப் பிரதமர்  யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளைப் பார்வையிட வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியுள்ளார். இவ்விரு சம்பவங்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்வதேயன்றி வேறில்லை என்பதனை தெட்டத்தெளிவாக காட்டுகின்றது.
 
விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்று கடிதம் எழுதியமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினுடைய ஒப்புதலில்லாமலோ, அல்லது கூட்டமைப்பினருக்கு தெரியாமலோ நடைபெற்றதல்ல. எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது இந்தியப்பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்வதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்றும், பொதுநலவாய மாநாட்டை தாம் பகிஸ்கரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. கூட்டமைப்பின் இவ் இரட்டை அணுகுமுறையானது தமிழ்மக்களின் எதிர்ப்புக்களை சமாளித்து தமது மறைமுக நிகழ்ச்சிநிரலை முன்கொண்டு செல்லும் செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம்.
 
பொதுநலவாயநாடுகள் இம்மாநாட்டை புறக்கணிப்பதானது இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் நெருக்கடிநிலை உருவாக்கியுள்து. குறிப்பாக பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியா கலந்துகொள்ளாதிருக்குமாயின் இலங்கைக்கு பாரிய இராஜதந்திர பின்னடைவை உண்டாக்கும். இந்த  ஆபத்திலிருந்து இலங்கை அரசை காப்பாற்றவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முற்படுகின்றது. 
தமிழ்நாட்டுமக்கள் தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு வலிமையான பின்பல சக்திகளாவர். 
 
விக்னேஸ்வரனின் இக்கடிதமும் இதற்கு முன்னர் கணவன்-மனைவி பிணக்கில் தமிழ்நாடு தலையிடத் தேவையில்லை என்ற கருத்தும் ஈழத்தமிழர் விவகாரத்திலிருந்து தமிழகமக்களை அகற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளேயாகும். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவதற்காக மக்கள் வாக்களித்து அவர்களின் விரல்களிலுள்ள மை காய்வதற்கு முன்னரே தமிழ்மக்களின் இதுவரைகால தியாகம் நிறைந்த
 
போராட்டத்தையும், தமிழகமக்களின் தொடர்ச்சியான ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டத்தையும் பலவீனப்படுத்த முற்படுகின்றனர்.  
 
முதலமைச்சர் விக்னேஸ்வரனதும், தமிழத்தேசியக்கூட்டமைப்பினரதும் திட்டமிட்ட இச் செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 
 
அத்துடன் இம்மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமெனவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாதென்றும் கோருவதுடன், இதனை வலியுறுத்தி தமிழக மக்கள் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கின்றது.
virakesari

 

வாருங்கள் சைக்கிள் ஓடுவோம் ஈழம்ஈநியூஸ் காரறே!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், விகனேஸ்வரன்.. இந்த இரண்டுபேரும் முன்பு அரசியல் தளத்தில் பிரபலம் இல்லாமல் இருந்தவர்கள்.. திடீரென்று அவர்கள் மற்றவர்களை மீறி முன்னுக்கு வருகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்..

1) புலிச்சாய / ஆயுதப் போராட்ட சம்பந்தமின்மையை சம்பந்தர் விரும்பியிருக்கலாம்.

2) இந்த இருவரும் புறச்சக்திகளால் திணிக்கப் பட்டவர்களாக இருக்கலாம்..

முதலாவது காரணம் ஏற்கும்படி இல்லை.. ததே கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காக தலைவரின் தோளோடு தோள் நின்று உழைத்தவர்தான் சம்பந்தன் அவர்கள்.. புலிச்சாயம் அவரில்தான் அதிகம் பதிந்துள்ளது.

இந்தியாவின் ஏற்பாட்டில் முதலில் உட்செருகப்பட்டவர்தான் சுமந்திரன் என நினைக்கிறேன். போர் முடிந்த கையோடு தங்கள் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்க நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டிருப்பார்.

வட மாகாணத்திற்கு விக்னேஸ்வரனைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.. பாவம்.. அவரும் மாவீரர் தலைவர் என்று உரையாற்றியே வெற்றிபெற வேண்டியதாகிவிட்டது.. இது இந்தியாவுக்கு சற்று கசப்பு மருந்து குடித்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ததே கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காக தலைவரின் தோளோடு தோள் நின்று உழைத்தவர்தான் சம்பந்தன் அவர்கள்.. புலிச்சாயம் அவரில்தான் அதிகம் பதிந்துள்ளது.

.

 

இதை இன்று தான் நான் அறிகின்றேன். :( 

தகவலுக்கு நன்றி இசைக்கலைஞன் :D

சுமந்திரன் இந்தியாவால் கூட்டமைப்புக்குள் போடப்பட்டவர் என்று எழுதும் இதே ஆய்வாளர்கள் கூட்டம்தான் இந்திய பாதுகாப்பு கொள்கை எழுதி தமிழ் மக்களை ஏய்த்த கூட்டம்.(தனிப்பட்ட எழுத்தாளர்கள் வேறு வேறாக இருக்கலாம், போக்கு, நோக்கம், ஆராயும் தனமை, ஆழமான சர்வதேச அரசியல் அறிவு, அரசியலை விளங்கிக்கொள்ளும் மதி நுடபம் எல்லாம் ஒரே மாதிரியானது). இதை நம்ப வேண்டுமாயின் இவர்களால் இந்த guessing கை விட்டுவிட்டு, இது சம்பந்தமாக, இந்தியாவுக்கும், கூட்டமைப்புக்கும்  இடையில் இடம்பெற்ற ஒரு சின்ன ஆவணம் எழுத்தில், காணொயில் இவர்களால் சமர்ப்பிக்க முடியுமா? 

 

மேற்குலக – இந்திய – சிங்கள கூட்டணியால் அழிக்கப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ளவர்களை குருரமாக பழிவாங்க இந்த கும்பல் முற்படுகிறதோ”

 

 

முதலில் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் இந்தியாவும், மேற்கு நாடுகளும்  இணங்கி செயல்படவில்லை என்றதை இவர் உணரவில்லை. (பொன்சேக்காவின் தேர்தலும், ஐ.நா. மனித உரிமை முயற்சிகளும் இதில் உள்ள்ங்கை நெல்லிக்கனி. இதை வைத்து இவரால் அரசுகளின் போக்குகளை உணரமுடியாவிட்டால் ஆராய்வு எழுத கூடாது),

 

அடுத்தது 100% ம் மேற்கு சார்பானர் சுமந்திரன். இந்தியாவின் முதல் எதிரியாகிய பொன்சேக்காவை சுமந்திரன் காலத்தில்தான் கூட்டமைப்பு ஆதரித்தது என்பதை உணராமல் அதையும் கூட இதற்குள் கலந்து போட்டுத்தான் குழம்புகிறார். இந்தியா இற்றை வரை கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை. இந்தியாவிடம் போருக்கு பின்னாலான பதுகாப்பு வரையும் கேட்டும் இந்தியா எதுவும் வழங்கவில்லை. அதை விட இந்தியாவின் பிரதிநிதிகளாக வந்து போன கிருஸ்ணா, சிவ்சங்கர், நிருபம்மா போன்ற பலர் எவ்வளவோ அழுத்தம் போட்டும் இந்தியா கேட்ட தெரிவு குழுவுக்கு கூட்டமைப்பு போகவில்லை. பிரேரணைக்கு முன்னர் மாட்டுப்பொங்களுக்கு வந்த கிருஸ்ணா எவ்வளவோ முயன்றும் இது நடக்கவில்லை. யாழில், கடைசியாக கூட்டமைப்பை இந்தியா அழைத்த போது யத்தீந்திரா கூட்டமைப்பு தெரிவுக்கு குழுவுக்கு போகப் போகிறது என்று எழுதிய ஆய்வு பதியப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு முதல் மகிந்தா மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டு வந்து இந்தியா கூட்டமைப்பை தெரிவுக்குழுவில் பங்கேற்க சொல்கிறது என்று கூறியும் கூட்டமைப்பு மசிந்து கொடுக்கவில்லை.  இந்தியாவின் எடுபிடிகள் கூட்டமைப்பை ஜெனீவாவில் இருந்து தடுக்க முயன்றும் கூட்டமைப்பு மேற்குநாடுகளின் உதவியுடன் அங்கு போய்வந்துவிட்டது.

 

போருக்கு பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையை பின் வாங்க செய்ய இந்தியா வடக்கு மாகாணத்தேர்தலை வருவித்தது. இதில் கூட்டமைப்பு பங்கு பற்றியது நியாயமே. தேர்தலை நடத்திய இந்தியாவால் காணி, பொலிஸ் அதிகாரங்களை வாங்கித்தர முடியுமா என்று கூட்டமைப்பு நப்பாசை வைப்பதும், இந்தியாவை நாடுவதும் ஒளிக்கத்தக்க விடையம் அல்ல. ஆனால் அதில் அவர்கள் தமிழர்களுக்கு துரோகத்தை செய்ய முயல்கிறார்கள் என்ற வாதம் உண்மையல்ல. (மேலும் பதவி, பதவி என்று இவர்கள் உளறும் போது கூட்டமைப்பு அரசில் எந்த பதவியும் வகிக்கவில்லை. பா.உ என்பது அரசு கொடுக்கும் பதவியும் அல்ல.) ஆனால் அது போர்க்குற்ற விசாரணை, தீர்வு போன்றவையை இழுத்தடிக்குமா? என்ற கேள்வியை உருவாகும் என்பது மட்டும்தான் உண்மை. இவற்றுக்கு புலம் பெயர்மக்கள் ஒரு கால நிர்ணயம் கூற முடியாவிட்டால், போர் முடிய  வயிற்றை கட்டி, வாயைக்கட்டிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களின் தேவையை கவனிக்கவும் அமைப்பு வேண்டும். புலம் பெயர்மக்கள் அந்த நோகத்தை தீர்த்துவைக்க அங்கு போக போவதில்லை. அரசு அதை வைத்து சிங்கள, இராணுவ குடியேற்றம் மட்டும்தான் செய்யும். எனவே கூட்டமைப்பு அதில் தலையிடுவதில் தவறு இல்லை.

 

கட்டுரையில் அரசியல் நிகழ்வுகள் விவாதிக்கப்படவில்லை. தனிமனித தூற்றல்களை மையமாக எழுதப்பட்ட கட்டுரை இது. அரசியல் பதில்களை தேடுவோருக்கு ஏமாற்றம் அளிப்பது. அரசியலை தூற்றலும், போற்றல் மட்டும் என்று தடுமாறுவோருக்கு நல்ல தீனி.

 

சுமந்திரனின் "ஒரு இலங்கை தீர்வும், முஸ்லீகளின் வெளியேற்றம் பற்றிய கருத்தும்" புதியவை அல்ல. அவர் அதை கனடாவில் மட்டும்தான் பேசினாரும் அல்ல.  ஆனால் இந்த மாதிரித்தான் பேசினாரா என்பதை அங்கு சமூகமளித்தவர்கள் கூறலாம்.

 

 

 

இவர் நான்கு நாட்களுக்கு முன்பு கனடாவில் தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் “தமிழ் மக்களின் இன அழிப்புக்கு தீர்வு என்னவென்பதை பேசுவார்” என்று மக்கள் குழுமியிருக்க, அவர் புலிகளை நுட்பமாக வசைபாடியதுடன் “நடந்தது இன அழிப்பு இல்லை” என்றும் “அப்படி ஐநா உட்பட எந்த ஆவணங்களிலும் இல்லை” என்றும் ஆனால் “முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இன அழிப்பு” என்றும் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் “முஸ்லிம்களுக்கு தீர்வை நாம் வழங்க வேண்டும்” என்றும் நிறையவே உளறியிருக்கிறார்.

 

 

Edited by மல்லையூரான்

வெறும் காழ்ப்பு கட்டுரை .

சுமந்திரன் ,விக்கி இருவரும் சம்பந்தரின் தனிப்பட்ட வரவுகள் .கொஞ்சம் படித்த விபரம் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சம்பந்தரின் நிலை தொடரவேண்டும் .இருபது வருட வறட்சி அறவே நீங்கவேண்டும் .

வெறும் காழ்ப்பு கட்டுரை .

சுமந்திரன் ,விக்கி இருவரும் சம்பந்தரின் தனிப்பட்ட வரவுகள் .கொஞ்சம் படித்த விபரம் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சம்பந்தரின் நிலை தொடரவேண்டும் .இருபது வருட வறட்சி அறவே நீங்கவேண்டும் .

 

உமாமகேஸ்வரன் படித்தவர் தான்...   அவரோடை இருந்தவர்களும் படித்தவர்கள் தான்...   என்ன செய்தார்கள்....  ??

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் காழ்ப்பு கட்டுரை .

சுமந்திரன் ,விக்கி இருவரும் சம்பந்தரின் தனிப்பட்ட வரவுகள் .கொஞ்சம் படித்த விபரம் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சம்பந்தரின் நிலை தொடரவேண்டும் .இருபது வருட வறட்சி அறவே நீங்கவேண்டும் .

 

 

படித்த என்பது சரி பம்மாத்து இல்லாத என்றதை மறந்து விட்டீர்கள். அடித்தட்டு வர்க்க மக்கள் தான் போர் குணம் மிக்க மக்கள் என படி படி என படித்து விட்டு பூஸ்வா குணத்தை காட்டி விட்டீர்கள்.

படித்த என்பது சரி பம்மாத்து இல்லாத என்றதை மறந்து விட்டீர்கள். அடித்தட்டு வர்க்க மக்கள் தான் போர் குணம் மிக்க மக்கள் என படி படி என படித்து விட்டு பூஸ்வா குணத்தை காட்டி விட்டீர்கள்.

உது வந்து சாதி வெறி கொண்ட யாழ்ப்பாணத்து மேலாதிக்க குணம் நுணா... படித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்... ஆனால் விபரம் தெரிந்தவர்கள் எண்டது மூலம் அதையே குறிக்கிறார்... !

படித்தவர்களிலும் விபரம் தெரிந்தவர்கள் தான் வெள்ளைக்காறனிட்டை இருந்து சுதந்திரத்தை சிங்களவன் கைகளில் குடுத்தவை காரணமும் மேலை நான் சொன்னது தான்...

படித்த மக்கள் இவர்களை ஓரம் கட்டி போட்டு தாங்கள் பொறுப்பை எடுத்து விடுவார்கள் எனும் பயம்...

கரி ஆனந்தசங்கரிக்கு போட்டியாக களமிறக்க கனேடிய மக்கள் அவையை சார்ந்தவர்கள் தகுதியானவரை தேடித்திரிவதாக அறிந்தேன். ஏற்கனவே ராதிகாவுக்கு எதிராக லோகன் கணபதியை களமிறக்கி உள்ளார்கள் .லோகனுக்கு சில மருத்துவர்கள் ஒரு தமிழருக்கு எதிராக போட்டியாக நிற்க்காமல் வேறு தொகுதியில் நிற்கும்படி ஆலோசனை சொன்னதாக கேள்வி .

 

இதே கூட்டம் தான் Dr .இலகுப்பிள்ளை யின் வெற்றியையும் தடுத்தவர்கள் .

சம்பந்தரை விமர்சிக்கும் கூட்டம் மேற்குறித்த செய்கைகளை செய்யும்கனடாதமிழினத்தின் துரோகிகளை ஏன் விமர்சிப்பதில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் தமிழரை எப்படியும் சிறுபான்மை ஆக்கிறது தான் என்று விக்கேஷ்வரனும், சுமனும் முடிவெடுத்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாயவுக்கு இவர்கள் இருவரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்று ஒரு கதை சிங்கள சாட்டில் இப்
போது போய்கொண்டிருக்கின்றது........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் தமிழரை எப்படியும் சிறுபான்மை ஆக்கிறது தான் என்று விக்கேஷ்வரனும், சுமனும் முடிவெடுத்துள்ளார்கள்

நடிகர் சுமன் எப்ப வடக்கில் அரசியல் செய்ய வெளிக்கிட்டவர் .இந்தகேள்விக்கு பதிலை தாருங்கள் pulan

Quote

கரி ஆனந்தசங்கரிக்கு போட்டியாக களமிறக்க கனேடிய மக்கள் அவையை சார்ந்தவர்கள் தகுதியானவரை தேடித்திரிவதாக அறிந்தேன். ஏற்கனவே ராதிகாவுக்கு எதிராக லோகன் கணபதியை களமிறக்கி உள்ளார்கள் .லோகனுக்கு சில மருத்துவர்கள் ஒரு தமிழருக்கு எதிராக போட்டியாக நிற்க்காமல் வேறு தொகுதியில் நிற்கும்படி ஆலோசனை சொன்னதாக கேள்வி .

இதே கூட்டம் தான் Dr .இலகுப்பிள்ளை யின் வெற்றியையும் தடுத்தவர்கள் .

சம்பந்தரை விமர்சிக்கும் கூட்டம் மேற்குறித்த செய்கைகளை செய்யும்கனடாதமிழினத்தின் துரோகிகளை ஏன் விமர்சிப்பதில்லை..

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சுமன் எப்ப வடக்கில் அரசியல் செய்ய வெளிக்கிட்டவர் .இந்தகேள்விக்கு பதிலை தாருங்கள் pulan

Quote

கரி ஆனந்தசங்கரிக்கு போட்டியாக களமிறக்க கனேடிய மக்கள் அவையை சார்ந்தவர்கள் தகுதியானவரை தேடித்திரிவதாக அறிந்தேன். ஏற்கனவே ராதிகாவுக்கு எதிராக லோகன் கணபதியை களமிறக்கி உள்ளார்கள் .லோகனுக்கு சில மருத்துவர்கள் ஒரு தமிழருக்கு எதிராக போட்டியாக நிற்க்காமல் வேறு தொகுதியில் நிற்கும்படி ஆலோசனை சொன்னதாக கேள்வி .

இதே கூட்டம் தான் Dr .இலகுப்பிள்ளை யின் வெற்றியையும் தடுத்தவர்கள் .

சம்பந்தரை விமர்சிக்கும் கூட்டம் மேற்குறித்த செய்கைகளை செய்யும்கனடாதமிழினத்தின் துரோகிகளை ஏன் விமர்சிப்பதில்லை..

 

நீங்கள் bot ஓ எண்டு சந்தேகமாக் கிடக்கு, இப்ப மூண்டு நாலு இடத்தில இதே பதிலைத் தான் பிரதி பண்ணி ஒட்டிக் கொண்டிருக்கிறீங்கள், auto mode ஐ மாத்துங்கோ! :lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் சுமன் எப்ப வடக்கில் அரசியல் செய்ய வெளிக்கிட்டவர் .இந்தகேள்விக்கு பதிலை தாருங்கள் pulan

Quote

கரி ஆனந்தசங்கரிக்கு போட்டியாக களமிறக்க கனேடிய மக்கள் அவையை சார்ந்தவர்கள் தகுதியானவரை தேடித்திரிவதாக அறிந்தேன். ஏற்கனவே ராதிகாவுக்கு எதிராக லோகன் கணபதியை களமிறக்கி உள்ளார்கள் .லோகனுக்கு சில மருத்துவர்கள் ஒரு தமிழருக்கு எதிராக போட்டியாக நிற்க்காமல் வேறு தொகுதியில் நிற்கும்படி ஆலோசனை சொன்னதாக கேள்வி .

இதே கூட்டம் தான் Dr .இலகுப்பிள்ளை யின் வெற்றியையும் தடுத்தவர்கள் .

சம்பந்தரை விமர்சிக்கும் கூட்டம் மேற்குறித்த செய்கைகளை செய்யும்கனடாதமிழினத்தின் துரோகிகளை ஏன் விமர்சிப்பதில்லை..

 

வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு  இதனை மறுக்க முடியாது என கனடாவில் சுமந்திரன்  தெரிவித்துள்ளார்

நீங்கள் bot ஓ எண்டு சந்தேகமாக் கிடக்கு, இப்ப மூண்டு நாலு இடத்தில இதே பதிலைத் தான் பிரதி பண்ணி ஒட்டிக் கொண்டிருக்கிறீங்கள், auto mode ஐ மாத்துங்கோ! :lol:

 

:icon_mrgreen:  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் காழ்ப்பு கட்டுரை .

சுமந்திரன் ,விக்கி இருவரும் சம்பந்தரின் தனிப்பட்ட வரவுகள் .கொஞ்சம் படித்த விபரம் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சம்பந்தரின் நிலை தொடரவேண்டும் .இருபது வருட வறட்சி அறவே நீங்கவேண்டும் .

அணுகுண்டு, ஆயுதங்கள் தயாரிக்க மூலகாரணமா இருக்கும் அனைவரும்  இவையளை விட ரொம்ப படித்தவங்க... புரிந்தால் ....... விக்க்னேஷ்வரன் , சுமன் ஏட்டப்பர் கூட்டம் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி

 

 

வட மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த வாக்காளப் பெருமக்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன். அவர்களில் பலர் தெரிவித்த பொதுவான கருத்துகளை, அப்படியே இங்கே தருகிறேன்:
"இந்தத் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும், தேர்தல் காலங்களில் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் யாருமே இந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. நாமாக தேடிச் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியாது. ஆனாலும், வாக்களிக்க வேண்டிய கடமை எமக்குண்டு. நாங்கள் ஓட்டுப் போடா விட்டால், எமது வாக்குகளை வேறு யாராவது போட்டு விடுவார்கள். அதற்காகத் தான் நாம் வாக்களிக்கச் செல்கிறோம்."
வீட்டுக்கு வீடு வாசல் படி. எல்லா நாடுகளிலும், தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை ஒன்றாகத் தான் இருக்கின்றது.

 
இந்த தடவை நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும், தமிழ் மக்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். வழமை போல சிங்கள முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ராஜபக்சவும், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே முதலாளித்துவ வர்க்கத்தின், இரண்டு வேறு மொழிகளைப் பேசும் இரு பிரிவினர், தமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு தேர்தல் எனும் நாடகம் உதவுகின்றது. அதிலே சிங்கள வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு சிங்கள தேசியமும், தமிழ் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு தமிழ் தேசியமும் பயன்படும்.
 
தேர்தல் பிரச்சார மேடைகளில் இரண்டு தரப்பினரும் எதிரிகளாக காட்டிக் கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இலங்கை பிரிட்டிஷ் காலனியாகவிருந்து, சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இந்த நாடகம் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப் படுகின்றது. இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் ஜனங்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இனப்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள். இறுதியில் அதனால் இலாபமடையும் முதலாளித்துவத்திற்கு, தேசியவாத முகமூடி தேவைப் படுகின்றது. ஈழப்போரில் தோற்கடிக்கப் பட்ட தமிழ் மக்கள், மீண்டும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். எப்போதும் இறுதி வெற்றி சிங்கள-தமிழ் தரகு முதலாளிகளுக்கானது, என்ற விதியை மட்டும் யாராலும் மாற்ற முடியவில்லை.
 
இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உண்மையில் தோற்றவர்கள் அல்ல, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உண்மையில் வென்றவர்களும் அல்ல. அவரவருக்கு ஏற்ற இடங்களில் இருக்கின்றனர். தேர்தல் தோல்வியால் டக்ளஸ், அங்கஜனின் வர்த்தகத் துறைக்கு, அரசியல் அதிகாரத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எல்லாமே வழமை போல நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்கனவே நிறைய வருமானம் தரும் வேலை பார்த்தவர்கள். அதற்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போது மேலதிகமாக அரசாங்க ஊதியம், சலுகைகள் வேறு கிடைத்து வருகின்றது. தமிழ் மக்கள் தான் பாவம், அவர்களுக்குத் தான் ஒன்றுமேயில்லை.
 
விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச முன்னியிலையில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுத்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. கடைசியில் விக்னேஸ்வரனும் தனது "வர்க்கப் புத்தியை" காட்டி விட்டார், என்று வேண்டுமானால் திட்டலாம். விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கொழும்பு மேட்டுக்குடி சமூகத்தின் அங்கத்தவர். கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யும் பொழுதே, அவரது வர்க்கப் பின்னணியும் பகிரங்கமாகியது. அதற்குப் பிறகு, "அவரை நோவானேன், கவலைப் படுவானேன்?" இனம் இனத்தோடு தானே சேரும்?
 
கொழும்பில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்கள், எல்லாக் காலங்களிலும் தமிழ் இன உணர்வு அற்று வாழ்ந்தவர்கள். (தனிப்பட முறையில் எனக்கு சிலரைத் தெரியும். அவர்கள் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள்.) அவர்களுக்கு, தமது வர்க்க அடையாளம் மட்டுமே முக்கியமாகப் படுவதுண்டு. அதனால் தான், தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் வெறுக்கப்படும், "சிங்களவரும், இடதுசாரியும், அமைச்சருமான" வாசுதேவ நாணயக்கார குடும்பத்துடன் விக்னேஸ்வரன் சொந்தம் கொண்டாட முடிந்தது. ஏனெனில், இருவரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அது தான் முக்கியம்.
 
இதெல்லாம் சாதாரண தமிழ் மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயங்கள். அதற்குக் காரணம் இன முரண்பாடல்ல, வர்க்க முரண்பாடு. "சிங்களவர்களோடு சொந்தம் கொண்டாடுவதில், விக்னேஸ்வரன் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல. சந்திரிகா குமாரதுங்கவின் மகளும் ஒரு தமிழரை மணந்து கொண்டார். பண்டாரநாயக்க குடும்பத்தில் பல தமிழர்கள் சம்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் எல்லாம் சாதாரண தமிழர்கள் அல்ல. வசதி படைத்த, உயர்சாதியில் பிறந்த, மேட்டுக்குடித் தமிழர்கள். அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
 
தென்னிலங்கையில் உள்ள சிங்கள சுதந்திரக் கட்சியின் மறு வார்ப்புத் தான், வட இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அது சிங்கள இனவாதம் பேசி வாக்கு சேகரித்தால், இது தமிழ் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கின்றது. அதனை சிங்கள முதலாளிகள் ஆதரித்தால், இதனை தமிழ் முதலாளிகள் ஆதரிக்கின்றனர். இரண்டுமே அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தான். அதனால் தான் எப்போதும் மக்கள் ஏமாற்றப் படுகின்றனர். அதனால் தான் எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் தோற்றுப் போகின்றனர்.
 
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறப் போவதில்லை. "எத்தனை தவறுகள் விட்டாலும், கூட்டமைப்புக்கு மாற்று கிடையாது" என்ற கருத்து, அடுத்த தேர்தலிலும் முன் வைக்கப் படும். உண்மையில் அது மக்களின் கருத்தல்ல. தமிழ் முதலாளிய வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப் படும் பிரச்சாரம். ஏனென்றால், பாமர மக்களால் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அவர்களிடம் அந்தளவு பணபலம் கிடையாது.
 
கடந்த முப்பதாண்டு காலம் நடந்த ஈழப்போரில் மட்டுமே, அந்த நிலைமை தலைகீழாக மாறியது. அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில், அதுவோர் புரட்சிகர மாற்றம். அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, அரசியலில் தலைமைப் பதவிகளுக்கு வந்தார்கள். உதாரணத்திற்கு, தமிழ்ச் செல்வனை குறிப்பிடலாம். ஆனால், புலிகளின் அழிவுடன், தமிழ் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் பறிக்கப் பட்டு விட்டன. இன்று மாகாண சபையில் மெத்தப் படித்தவர்களையே அமைச்சர்களாக்குவேன் என்று விக்னேஸ்வரன் அடம்பிடிக்கிறார். இது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வி.

 

"பிரபாகரன் ஒரு மாவீரன். மகிந்தவுக்கும் அது தெரியும்." என்று வல்வெட்டித்துறையில் நடந்த கூட்டம் ஒன்றில் விக்னேஸ்வரன் பேசினார். அந்த உரையை துண்டுப்பிரசுரமாக அடித்து விநியோகித்த கூட்டமைப்பு தொண்டர்களை கைது செய்த இராணுவம், விக்னேஸ்வரனுக்கு கிட்டவும் நெருங்கவில்லை. அந்த உரையை, முதன் முதலாக வெளியிட்ட உதயன் பத்திரிகை நிறுவன முதலாளி கைது செய்யப் படவில்லை. இதனை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருந்தேன். அந்தளவுக்கு, இலங்கையில் இன்றைக்கும், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினருக்கு இடையிலான வர்க்க ஒற்றுமை, இறுக்கமாக உள்ளது.

 
விக்னேஸ்வரனின் "புலி ஆதரவு உரை", அடித்தட்டு மக்களையும், குறிப்பாக வல்வெட்டித்துறை வாசிகளையும் கவர்வதற்காக நிகழ்த்தப் பட்டது. உண்மையில், உயிரோடு இருக்கும் புலிகளை விட, இறந்த புலிகள் தனக்குப் பயனுள்ளதாக இருப்பார்கள் என்பது விக்னேஸ்வரனுக்கும் தெரியும். ஆனால், இனி வருங்காலத்தில் புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கம் தோன்றுவதை, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மேட்டுக்குடிக் கும்பல் அனுமதிக்கப் போவதில்லை.
 
தமது வர்க்க நலன்களுக்கு ஆபத்து வருமென்றால், ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, "தீவிரவாதிகளை" ஒடுக்கவும் தயங்க மாட்டார்கள். இதெல்லாம் ஈழ வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளன. ஈழத் தமிழர்களின் அரசியல் மீண்டும் எழுபதுகளை நோக்கிப் பயணிக்கின்றது.
 
நன்றி கலையகம்

புலன் கலையகம் என்று பிரசுரித்த கதைக்கு மூலத்தை தரவில்லை. மூலம்கிடைக்காவிட்டல் அதை நிர்வாகம் நீக்க வேண்டும். யார் ஆசிரியர் என்பதும் அதில் இல்லை. அந்த் ஆசிரியர்  விக்கினேஸ்வரன் புலிகளை காட்டி தேர்தல் வெல்கிறார் என்று பொறாமைப்படுகிறார். தான் பிராபாரனைவைத்து ஊடக விபசாரம் செய்கிறார்.  இதுதான் அவர் விளங்க வைக்கும் வர்க்க போட்டியின் அடிப்படையே. கம்யூனிசத்தை சரியாக விளங்காவிட்டாலும் குறைந்தது தன்னையாவது விளங்கி வைத்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலன் கலையகம் என்று பிரசுரித்த கதைக்கு மூலத்தை தரவில்லை. மூலம்கிடைக்காவிட்டல் அதை நிர்வாகம் நீக்க வேண்டும். யார் ஆசிரியர் என்பதும் அதில் இல்லை. அந்த் ஆசிரியர்  விக்கினேஸ்வரன் புலிகளை காட்டி தேர்தல் வெல்கிறார் என்று பொறாமைப்படுகிறார். தான் பிராபாரனைவைத்து ஊடக விபசாரம் செய்கிறார்.  இதுதான் அவர் விளங்க வைக்கும் வர்க்க போட்டியின் அடிப்படையே. கம்யூனிசத்தை சரியாக விளங்காவிட்டாலும் குறைந்தது தன்னையாவது விளங்கி வைத்திருக்கிறார். 

இந்த ஆக்கம் சாதாரண குடிமக்களுக்கு விளங்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.. முக்கியமாக இளைய சமுதாயம் விளங்கும் விதத்தில். ........Face Book -il  இதை படித்து விரும்பியவர்கள்(like)  58,000 பேருக்கு மேல்......

இந்த ஆக்கம் சாதாரண குடிமக்களுக்கு விளங்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.. முக்கியமாக இளைய சமுதாயம் விளங்கும் விதத்தில். ........Face Book -il  இதை படித்து விரும்பியவர்கள்(like)  58,000 பேருக்கு மேல்......

மூலம் யார் என்று போட என்ன கஸ்டம்?

 

58,000 பேர் படிக்கிறதிலை என்ன கஸ்டம். மகிந்தவின் கணனிக்காறதானே மகிந்த Timesன் மிக சிறந்த உலகத்தலைவராக வர வைப்பவர்கள். இவற்றை தெரியாவிட்டால் நீங்கள் யாழுக்குத்தான் புதிசா? அல்லது  பூமிக்குமே புதிசா? 

 

படிப்பவர்களுக்கு அவர் யார் என்றதை இலகுவாக விளங்கத்தக்கத்தானே எழுதுதியிருக்கிறார். அதை யார் மறுக்கிறார்கள்.? அவர் எழுதியிருக்கும் எழுத்தில் ஆசிரியருக்கே தான் யார் என்று விளங்குகிறது என்றுதானே சொல்கிறேன். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூலம் யார் என்று போட என்ன கஸ்டம்?

 

58,000 பேர் படிக்கிறதிலை என்ன கஸ்டம். மகிந்தவின் கணனிக்காறதானே மகிந்த Timesன் மிக சிறந்த உலகத்தலைவராக வர வைப்பவர்கள். இவற்றை தெரியாவிட்டால் நீங்கள் யாழுக்குத்தான் புதிசா? அல்லது  பூமிக்குமே புதிசா? 

 

படிப்பவர்களுக்கு அவர் யார் என்றதை இலகுவாக விளங்கத்தக்கத்தானே எழுதுதியிருக்கிறார். அதை யார் மறுக்கிறார்கள்.? அவர் எழுதியிருக்கும் எழுத்தில் ஆசிரியருக்கே தான் யார் என்று விளங்குகிறது என்றுதானே சொல்கிறேன். 

மூலம் யாரா  இருந்தால் என்ன?  அதை எழுதியவர் விக்னேஸ்வரன் போன்ற எட்டப்பர்களை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்

புலன் கலையகம் என்று பிரசுரித்த கதைக்கு மூலத்தை தரவில்லை. மூலம்கிடைக்காவிட்டல் அதை நிர்வாகம் நீக்க வேண்டும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?  உண்மைகள் வெளிவரும் போது சிலரால்  தாங்க முடியலை..... இப்போ செய்திகளை பரப்புவதில் Face Book   தான் முதலிடம்.   அதை எந்த அடிவருடிகளாலும் ஒன்றும் பண்ண முடியாது

மூலம் யாரா  இருந்தால் என்ன?  அதை எழுதியவர் விக்னேஸ்வரன் போன்ற எட்டப்பர்களை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்

இதிலிருந்து என்ன தெரிகிறது?  உண்மைகள் வெளிவரும் போது சிலரால்  தாங்க முடியலை..... இப்போ செய்திகளை பரப்புவதில் Face Book   தான் முதலிடம்.   அதை எந்த அடிவருடிகளாலும் ஒன்றும் பண்ண முடியாது

எழுதியதொன்றுக்கும் ஆதாரம் இல்லாவிட்டால் இல்லை என்று சொல்லிவிடுவதுதானே.

 

Facebook ல்தனே செய்திபரவுகிறது.  உங்களை மாதிரியே Face இல்லாமல் கதை பரப்ப நம்புகிற்வன் நீங்கள் மட்டுமா அந்த பேஸே இல்லா bookல்.

 

அந்த பேசே இல்லாதபுக்கை வைச்சு சென்ற மாதம் விக்கினேஸ்வரனுக்கு தான்  135,000 வாங்கி கொடுத்தாச்சு என்றுதானே உங்கள் பேரே இல்லாத குரு கவலை பட்டிருக்கிறார். அதைதன்னும் புரிய மாட்டேங்கிறதே. இந்த இலட்சணத்தில் பேஸே இல்லாத புக்கிம் என்னதான் படிசு கிழித்தியலோ? அடுத்த தடவை  ஒட்டக்கூதன் மாத்ரி 270,000 வாங்கி கொடுக்கத்தான் திட்டமோ?

 

facebook வேலை செய்ததாலா சரவணபவனின் உதயன் மாதிரி திரும்ப உங்கள் க்ருவாவங்கள்ளன் இன்னொரு பத்திரிகை அடித்து தேர்தல் அன்று கொடுக்க வேண்டி வந்தது?

 

செய்தி மூலம் கேட்டால் சுத்து சுத்து என்று சுத்தும் நீங்களா மக்களை நமபவைக்க போகிறீர்கள்?

 

நீங்கல் செய்வது நக்கீரனுக்கு நல்ல adveertisement. தொடந்து செய்யுங்கள்.  இனிமேல்தான் அவரின் பெயரும் அடிபட இருக்கிறது போலிருக்கு. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.