Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிளகு??

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply

வெண்டிக்காய்

ஆனை நெருஞ்சி எனறாலும் புலி நகம் என்றாலும் ஒன்றா? அல்லது அவை இரண்டா? :unsure:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனை நெருஞ்சி எனறாலும் புலி நகம் என்றாலும் ஒன்றா? அல்லது அவை இரண்டா? :unsure:  :rolleyes:

pulinagam1.jpg

 

புலிநகம் இப்படித்தான் இருக்கும்! :D

அப்போ அது ஆனை நெருஞ்சி முள்ளு செடியாகத்தான் இருக்கலாம். அதன் காயில் வளைந்த முள்ளூகள் வர இடம் இல்லை. நன்றி புங்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருடன் பொண்டிலுக்கு அடிச்சமாதிரி நானும் அப்பப்ப வந்து சொல்லி சந்தோசப்பட வேண்டியதுதான்...... ஆமணக்கு மரம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனை நெருஞ்சி என்பது ஐந்து முகம் கொண்ட நெருஞ்சி முள் என நினைக்கின்றேன்!

 

படம் , பருத்திச் செடி .

  • கருத்துக்கள உறவுகள்

நெருஞ்சி  நிலத்தில் அல்லவா படரும்? .

நெருஞ்சி  நிலத்தில் அல்லவா படரும்? .

நீங்கள் சொல்வது

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

  • தொடங்கியவர்

அப்போ அது ஆனை நெருஞ்சி முள்ளு செடியாகத்தான் இருக்கலாம். அதன் காயில் வளைந்த முள்ளூகள் வர இடம் இல்லை. நன்றி புங்கை.

 

வணக்கம் பிள்ளையள் !!!  எல்லாருக்கும் புது வருச வாழ்த்துக்கள் .  போட்டு எடுக்கிறதிலை இவரை விட  வேறை ஆக்கள் இல்லை  :wub::lol: .  அப்பாவி புங்கை இந்தமுறை மாட்டுப்பட்டுட்டார் :icon_idea: . அவற்றை விதி அப்பிடி , சரி சொல்லிப்போட்டியள் ,  இந்த வருசத்து என்ரை முதல் பரிசை உங்களுக்கு விரும்பி தாறன் மல்லையர் :) :) .

 

  • தொடங்கியவர்

22 இலந்தை (  jujube or Ziziphus jujuba)

 

yfh4.jpg

 

இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா / தமிழ் நாடு மற்றும் சீனா ஆகும்  . வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி

 

74% மாவுப் பொருள்

17 %, புரதம்

0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88

 

 

http://en.wikipedia.org/wiki/Ziziphus_zizyphus

Edited by கோமகன்

இலந்தை

 

  • கருத்துக்கள உறவுகள்

இலந்தை

ங்கொய்யால இலந்தையில் இவ்வளவு பெரிய இலையா

ங்கொய்யால இலந்தையில் இவ்வளவு பெரிய இலையா

அது போடுற உரத்திலை இருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு இலந்தை . :)

  • கருத்துக்கள உறவுகள்

இலந்தை மரம்தான்,  அதுக்குள் வைத்து எத்தனை குருவிகள், அனில்கள்  கெட்டப் போலால்  அடி வாங்கியிருக்கும் ...!

  • தொடங்கியவர்

இலந்தை

 

வணக்கம் பிள்ளையள் !!! எல்லாரும் சரியாதான் சொன்னியள் . நவீனனுக்கு நண்டர் குழப்பம் வைச்சாலும் :unsure: அலட்டாத நவீனனுக்கு ஒரு கூடை இலந்தைப் பழம்  பரிசை தாறன் :D  :lol:   .

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

23 இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் ( The Great Kapok Tree or Ceiba pentandra )

 

62v4.jpg

 

இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும் பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும் . இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

 

இலவ மரத்தின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். இது ஆப்பிரிக்காவில் இயற்கையாகவே வளர்கிறது. உலகின் மற்ற பகுதிகளில் இது தோட்டப் பயிராக பயிரிடப்படுகிறது. காயிலிருந்து பஞ்சு எடுக்கப்படுகிறது. இலவம் பஞ்சு உறுதியற்றது. எனவே, இவை நூல்நூற்க பயன்படுவதில்லை. மெத்தை, தலையணை, உயிர்காக்கும் உறைகள் தயாரிக்க மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய விதையிலிருந்து எண்ணை எடுக்கப்பட்டு சோப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. காயின் மேலோடு எரிபொருளாக பயன்படுகிறது. இதனுடைய மிருதுவான பகுதியிலிருந்து தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

 

இலவ மரத்தில் நாட்டு ரகம், சிங்கப்பூர் ரகம் என பல வகைகள் உள்ளன. இம்மரத்தினைச் சாலையின் இருபுறங்களிலும் வளர்ப்பதால் ஒரு கம்பீரமான அழகினைக் கொடுக்கிறது. இம்மரம் எல்லா நிலங்களிலும் குறிப்பாக தரிசு நிலங்கள், சாலை ஓரங்களில் நன்கு வளரும். இது வறட்சியைத் தாங்கவல்லது.

 

நவம்பர் டிசம்பரில் மரங்களில் பூக்க ஆரம்பிக்கும். அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதன் மலர்கள் காயாகி பழுக்காமல் நார் போன்று மாறி பஞ்சாகி பின் வெடிக்கிறது. 15 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களிலிருந்து விதைகள் எடுப்பது நல்லது. விதைகளை மேடை பாத்திகளில் நேரடியாகவோ அல்லது பாலித்தின் பைகளிலோ விதைக்கலாம். நாற்றுக்கள் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் நடவுக்கு தயாராகி விடும். நன்கு வளர்ந்த மரங்கள் 2 முதல் 3 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்து விடும். இருப்பினும் 6 ஆண்டுகள் ஆன பின் தான் மிகுதியாகவும், ஒரே சீராகவும் காய்க்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை காய்களை அறுவடை செய்யலாம்.

 

நற்றிணை 105, முடத்திருமாறன் , பாலை திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.


அகநானூறு 11, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில்
இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!

http://treesinsangam...lk-cotton-tree/

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81

 

http://en.wikipedia.org/wiki/Ceiba_pentandra

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அசோக மரம் !  கூம்பாக வளரும் , இலைகள் கரும்பச்சையில் கூராக இருக்கும் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.