Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கு மரம்.

புங்கை மரம்! :icon_idea:

அதுதான் போலை "பாஞ்சால் வேங்கை மாதிரி" என்றது மாறி "பாஞ்சால் புங்கை மாதிரி" என்று வந்ததோ :D

  • கருத்துக்கள உறவுகள்

வேம்பு , அவிச்சுக் குடிக்க பட்டை எடுத்திருக்கின்றார்கள். :D

வேங்கை மரம்

  • கருத்துக்கள உறவுகள்

மலை வேம்பு மாதிரியும் கிடக்குது! :D

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கை மரம்  (pterocarpus marsupium)

  • தொடங்கியவர்

வேங்கை மரம்

 

வணக்கம் பிள்ளையள் !! எப்பிடி சுகநயங்கள் ?? எங்கடை சனம் கண்டு பிடிச்ச இன்னுமொரு பரியாரி மரம்தான் இந்த வேங்கை மரம்  :D  . இதுக்கு ஐங்குறு நூறு எண்ட  இலக்கியதிலையும்  சிறப்புகள் இருக்கு . இந்த மல்லையர் சும்மா வாயை குடுத்து புண்ணாக்கினது தான் மிச்சம் :lol: :lol: :icon_idea: .  இவர் பந்தை போட நவீனன் சிக்சர் அடிச்சு போட்டார் :D . அதாலை அவருக்கே பரிசு போகுது  :)  .

 

  • தொடங்கியவர்

31 உழிஞை , முடக்கொத்தான் , முடக்கறுத்தான் ,அல்லது முடர்குற்றான் ( the balloon plant , love in a puff  winter cherry , or Cardiospermum halicacabum ) 

 

14nd.jpg

 

முடக்கொத்தான் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய மருத்துவப் பயன்பாடுடையவை.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

 

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

 

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் -: ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

 

முடக்கு+அறுத்தான்=முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான்எனப் பெயர் பெற்றது.

 

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

 

சுகப்பிரசவம் ஆக :

 

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

 

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

 

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை :

 

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில்போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

 

பாரிச வாய்வு குணமாக :

 

கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

 

சுக பேதிக்கு :

 

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

 

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாதுஇவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

 

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

 

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

 

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

நன்றி: இயற்கை வைத்தியம்

 

http://en.wikipedia.org/wiki/Cardiospermum_halicacabum

Edited by கோமகன்

முடக்கொத்தான் அல்லது முடக்கற்றான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லி ...!

கொத்தமல்லி கன்று

  • கருத்துக்கள உறவுகள்

அட இவ்வளவுபேர் சரியா எழுதியிருக்கிரியளே

அட இவ்வளவுபேர் சரியா எழுதியிருக்கிரியளே

 

சரி நீங்களும் களத்திள இறங்குங்கோ, :D

 

இதன் சரியான பெயர் நெத்தியடிப் பூண்டு. எங்களுடன் இருந்தவர்கள் யாரும் முடகொத்தான் என்ற பெய்ரை பாவித்தது தெரியாது. மாரி முடிய "நெத்தியடி கண்டனியோ" என்று தேடிக் கண்டுபிடித்து அதன் காய்களை நெத்தியில் அடித்து உடைப்போம். வெளிப்புற பலூன் போன்ற தோலும் உள்ளே இருக்கும் காயும் ஒன்றாக வெடிக்கத்தக்கதாக அடிக்க வேண்டும். அப்போதுதான் வெடிச் சத்தம் தேடும் திகைப்பை தரும். பலூன் தோலை சாடையாக சரித்து அடித்தால் பலூன் வெடிக்காமல் காத்து போய்விடும். காய் மெல்லிய சத்தம் மட்டும்தான் போட்டு வெடிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கொத்தான்/நெத்தியடிப் பூண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் சரியான பெயர் நெத்தியடிப் பூண்டு. எங்களுடன் இருந்தவர்கள் யாரும் முடகொத்தான் என்ற பெய்ரை பாவித்தது தெரியாது. மாரி முடிய "நெத்தியடி கண்டனியோ" என்று தேடிக் கண்டுபிடித்து அதன் காய்களை நெத்தியில் அடித்து உடைப்போம். வெளிப்புற பலூன் போன்ற தோலும் உள்ளே இருக்கும் காயும் ஒன்றாக வெடிக்கத்தக்கதாக அடிக்க வேண்டும். அப்போதுதான் வெடிச் சத்தம் தேடும் திகைப்பை தரும். பலூன் தோலை சாடையாக சரித்து அடித்தால் பலூன் வெடிக்காமல் காத்து போய்விடும். காய் மெல்லிய சத்தம் மட்டும்தான் போட்டு வெடிக்கும். 

 

உங்கட ஊரில பாவிச்சதுக்காக பெயர் இல்லை என்றாகிவிடுமோ????? எங்கள் ஊரில் முடக்கத்தான் என்று தான் சொல்லுறவை. :D

 

சரி நீங்களும் களத்திள இறங்குங்கோ, :D

 

 

கோமகன் போடமுதல் ஓடிவந்து விடை எழுதிறது. பிறகு எந்தக் களத்தில இறங்கிறது நான்.

 

  • தொடங்கியவர்

உங்கட ஊரில பாவிச்சதுக்காக பெயர் இல்லை என்றாகிவிடுமோ????? எங்கள் ஊரில் முடக்கத்தான் என்று தான் சொல்லுறவை. :D

 

 

கோமகன் போடமுதல் ஓடிவந்து விடை எழுதிறது. பிறகு எந்தக் களத்தில இறங்கிறது நான்.

 

 

பல்லு கிடக்கு கடலை வடை சாப்பிடுறாங்கள் :lol::D :D .

 

  • தொடங்கியவர்

வணக்கம் பிள்ளையள்!!  அரைவாசிப்பேர் சரியாத்தான் சொல்லி இருக்கிறியள் :D  இடையிலை ஒருத்தர் நெத்தியடி பூண்டு எண்டு பாம்பு விட்டு பாத்தார் :lol: . சனம் அரக்கினால்தானே ........ :D நவீனன் முதல் தரம் சொன்னதாலை அவருக்குதான் பச்சை போகுது :) .

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

32 இராசவள்ளி அல்லது சர்க்கரை வள்ளி கிழங்கு ( Purple yam or Dioscoreaceae )

 

b4cj.jpg

 

இது ஓர் கொடி வகையச் சேர்ந்த எமது வாழ்வில் அன்றாடம் கலந்த ஓர் பயிர் வகையாகும் . இந்தக் கிழங்கின் கழிக்கு மயங்காதோர் இல்லை . ஏழை மக்களின் தோழனாகவும் , வட மாகாண விவசாயிகளின் சிறு பயிர் செய்கை பயிர்களில் ஒன்றாகவும் இருந்தது . இந்த இராச வள்ளி நரை மண்ணுக்கு ஒரு சுவையையும் செம்பாட்டு மண்ணுக்கு ஒருவிதமானா சுவையையும் தரவல்லது .

 

Edited by கோமகன்

இராசவள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.