Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனை லண்டன் வருமாறு கமரொன் அழைப்பு – முதலில் மன்மோகன்சிங்கை சந்திக்க முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனையும் சந்திக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட்  கமரொன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த போது, வடக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க  பிரித்தானியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, பிரித்தானியப் பிரதமருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பரிமாறிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

எனினும், இந்த இரண்டு பயணங்களும் எப்போது என்று இன்னமும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.” என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை பிரித்தானியாவுக்கு வருமாறு, பிரதமர் டேவிட் கமரொன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.பொது நூலகத்தில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போதே, லண்டனில் இலக்கம் 10, டௌணிங் வீதியில் உள்ள தனது இல்லத்துக்கு வருகை தருமாறு, வடக்கு மாகாண முதல்வருக்கு, டேவிட்  கமரொன் அழைப்பு விடுத்துள்ளார்.

http://tamil24news.com/news/archives/117492

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமரூனுக்கு இந்திய கொன்கிரசிடம் நம்பிக்கை குறைந்துவிட்டது போலுள்ளது.

 

500 மேற்பட்ட இந்தியாவின் குடிமக்கள் கடலில் கொல்லப்படும் போது கையறு நிலையில் உள்ள ஒரு அரசினால் எங்களுக்கு ஒருதீர்வு வேண்டி தரும் என நாம் நம்புவது விவேகமற்றசெயல்.இலங்கையில் இந்தியாவின் இராஜதந்திரம் மூக்குடைபட்டு தோல்வி நிலையிலேயே உள்ளது உதாரணம் இந்தியாவினால் கொண்டுவரபட்ட வீட்டுதிட்டம் நான்ங்கு வருஷமாய் கட்டுகிறார்கள் இந்த 4 வருடம் என்பது ஆட்ச்சி காலத்தின் முக்கால் பகுதிக்குமேல்.ஆனாலும் நம்மடை மேட்டுக்குடி கூட்டம் சம்மந்தன்,சுமத்திரன்,விக்கியர் இந்தியாவின் காலை கட்டிபிடிச்சுகொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி.

 

தமிழரது குரல்

ஐனநாயகவழியில்

ஒற்றுமையின் அடிப்படையில்

சிறிலங்கா அரசின் கோரத்தடைகளைத்தாண்டி (அதன் அனுமதியோடு :) )

தமிழரது குரல் என்ற  சர்வதேசஅங்கீகாரத்தோடு

வெளியில் வரவிருக்கிறது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி போய் சந்தித்தால் இருக்கிறதையும் கெடுத்திட்டு வருவார் மனுஷன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்கி போய் சந்தித்தால் இருக்கிறதையும் கெடுத்திட்டு வருவார் மனுஷன்

உங்களுக்கு விளங்குது சுண்டல் பலபேருக்கு விளங்கியும் விளங்காதமாதிரி திரியினம் சனம் உண்மையை விளங்கி கொள்ளும்மட்டும்தான் . இந்த பச்சோந்தி ஆட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியல்ல எப்பிடி ஐயா ஒரு சிங்கள பகுதியிலே வாழ்ந்த மனுஷன் அந்த பகுதியிலையே பெரும்பாலான வாழ்க்கைய வாழ்ந்த மனுஷன் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் சிங்கள குடும்பத்திலையே மணம் செய்து கொடுத்து வைத்த ஒருவர் தமிழர்களுக்காக முற்று முழுதாக சுகந்திரமாக குரல் கொடுப்பார் என்று தமிழர்களின் தாகத்தை புரிந்து கொண்ட ஒருவராக இருப்பார் என்று இன்னுமாய்யா நம்புறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியல்ல எப்பிடி ஐயா ஒரு சிங்கள பகுதியிலே வாழ்ந்த மனுஷன் அந்த பகுதியிலையே பெரும்பாலான வாழ்க்கைய வாழ்ந்த மனுஷன் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் சிங்கள குடும்பத்திலையே மணம் செய்து கொடுத்து வைத்த ஒருவர் தமிழர்களுக்காக முற்று முழுதாக சுகந்திரமாக குரல் கொடுப்பார் என்று தமிழர்களின் தாகத்தை புரிந்து கொண்ட ஒருவராக இருப்பார் என்று இன்னுமாய்யா நம்புறீங்க?

 

அப்படிப்பார்த்தால்................???

எனக்கு என்ன  தகுதி  இருக்கு சுண்டல்  தமிழரின்  தாகம் பற்றி  பேச.............. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப்பார்த்தால்................???

எனக்கு என்ன  தகுதி  இருக்கு சுண்டல்  தமிழரின்  தாகம் பற்றி  பேச.............. :(

ஒரு தமிழன் வேறிணத்தவர்களால் தாக்கபடும் போதும் அவமாணபடுத்தபடும் போதும் பதறி துடிக்கிறீர்களே நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த தகுதி உங்களுக்கேயாணது விசுகு. களத்தில் உள்ள மாற்றுகருத்தாளர்கள் சொல்வதை பெரிதுபடுத்தவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விளங்குது சுண்டல் பலபேருக்கு விளங்கியும் விளங்காதமாதிரி திரியினம் சனம் உண்மையை விளங்கி கொள்ளும்மட்டும்தான் . இந்த பச்சோந்தி ஆட்டம்.

 

 

தமிழரின் தாகம் என்பது  ஒருவரின் தனிப்பட்ட விடயமல்ல

அந்த தாகத்தை

அதன் தார்ப்பரியத்தை அறிந்த எவராலும்

அதற்காக உழைக்க முடியும்.

எனது மக்கள்  எவரையும் திருமணம் செய்யலாம்

அது எனது தாயகக்கொள்கையை

எனது தாகத்தை பாதிக்கமுடியாது

 

அதேபோல்

எவரையும் திருமணம் செய்த  எனது பிள்ளை

அரசியல் ஆலோசகராக

காவல்துறை  பொறுப்பாளராக வரலாம்

வரலாறு அதைத்தான் சொல்கிறது.

இனி  அவர்கள் என்ன  செய்கிறார்கள்  என்பதைப்பொறுத்தே எல்லாம்.........

கொஞ்சம் பார்க்கலாமே..............

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் காணமல் போனோர் தொடர்பாக நடாத்தப்பட்ட ஆர்பாட்டத்தை அடக்குவதற்கும் இவர் கண்ணை காட்டியதாக ஒரு கதை அடிபடுது...... பொய்யாக கூட இருக்கலாம் ஆனாலும் நம்பாமலும் இருக்க முடியவில்லை இவருடைய சரித்திரத்தை பார்த்தால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நாம் பக்கத்தில் இருக்கும் இந்தியாவை அமுக்கி வைத்திருப்பதும் முக்கியம். அதை கட்சிதமாக செய்கிறார்கள்.

மற்றும் சுமந்திரன் பல உலக ஆங்கில ஊடகங்களில் ராஜபக்சே குடும்ப அரசாங்கத்தையும் தாக்கி பேட்டி கொடுத்தார்.

புலம்பெயர் ஈழ தமிழ் அமைப்புகள் தத்தமது நாட்டு அரசாங்கங்களை கவனிக்கிறார்கள்.

கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தமிழ் நாடு, அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம்பெயர் ஈழ தமிழர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

அரசியலில் சிறி லங்காகாரர் கடந்த 4 வருடங்களாக படுதோல்வி.

நாம் இந்த உத்வேகத்தில் தொடர்ந்தும் அரசியல் செய்தால் ராஜபக்சே குடும்பத்தை தனிமைபடுத்தலாம்.

வருங்கால கடாபி ஆக்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை தண்ணுடைய மாநில அதிகாரஅலகுகளைவிட ஒரு இம்மியும் கூடிய அதிகாரங்களை தர மாட்டாது தரவும் விரும்பாது இது எப்ப என்றால் தமிழர் பேரம்பேசும் வலுவுடன் இருந்த காலத்திலேயே இந்த நிலைபாட்டில் இந்தியாவிற்க்கு மாற்றமில்லை இது இவ்வாறு இருக்க மேற்குலகு புதிசா நீதி நேர்மை பார்பது போருக்கு பிண் இலங்கை சடுதியாக சைனாவின் பக்கம் சாய்ந்தது அதுவும் இந்தியா கையறுநிலையில் பார்த்துகொண்டிருக்க எனவே நேரடியாக மேற்குலகு எமது பிரச்சிணை மூலமாக இலங்கைக்கு கடிவாளம் இறுக்குகிண்றணர் இதை விட அருமையாண சந்தர்ப்பத்தில்  எங்கள் தலைமைகள் எனப்படுவோர் என்ன செய்கிறார்கள் நீங்களே சுயவிளக்கம் காண்பது நல்லது இல்லாதுவிடின் இரவு வீடு வந்ததும் தொடர்கிறன் .......

முற்போக்கு முன்னணியில் இருந்து முள்ளிவாய்க்காலில் இரசாயனகுண்டு அடித்துக்கொண்டு கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். இப்படி நகைசுவைகளை பிரதமர் கம்ரூனுக்கு நடிப்பதை கூட்டமைப்பு தவிர்க்க முயன்றது என்றுதான் நினைக்கிறேன்.

 

வலிவடக்கு உண்ணாவிரதத்தை கமருன் பார்க்க இருந்த்தாகவும் இறுதியில் பார்வையிடவில்லை என்றும் சொல்லப்படுகிற்து.

 

பிரதமரின் பயணம் எந்த ஆர்ப்பாட்டதையும் பார்வையிடத்தக்க பாரிய பாதுகாப்புடன் சென்றதொன்று மாதிரி படவில்லை. பிருத்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டம் இல்லாத இடங்களுக்குதான் திட்டமிட்டிருந்தது போலிருக்கு.

 

வாசிகசாலை ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் மேலிடத்தால் திட்டமிடப்பட்டதல்ல என்ற்தை என்னால் நம்ப முடியும். கூட்டமைப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு பிரதமரை வாசிக சாலைக்கு அழைத்துவிட்டு எப்படி அது வாசிக சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்த முடியும்? இது கருணாநிதியின் பாணி அல்லவா? பிருத்தானிய தூதரகம் சுமந்திரனை மொழிபெயர்ப்பாளராக எற்றுக்கொண்டபின்னர் கூட்டமைப்பார் வெளியில் ஆர்ப்பாட்டம் போட்டு கோசம் போட்டால் அதையா சுமந்திரன் மொழி பெயர்ப்பது. கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆபிசலாக பங்கு பற்றாதது சரியே. அதே நேரம் அனந்தி மாதிரி ஓரிருவர் பங்கு பற்றியது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். மேற்கு நாடுகளில் ஒரு சட்டம் பாராளு மன்றத்துக்கு வரும் போது ஆழும்கட்சியினர் சிலர் அதை எதிர்த்து வாக்களிப்பது வழமை. அதே போல் ஏன் கூட்டமைப்பு பங்குபற்றாத ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றினார் என்பதும் ஒரு கேள்வியல்ல. 

 

“Tamil National Alliance (TNA) Provincial Councillor, Mrs. Ananthi Sasitharan (whose husband had also disappeared after surrendering to the Army) was amongst those beaten. Amidst all the men who had been elected, Parliament and the Provincial Council, it seems only this one elected woman Councillor had the commitment and courage to stand with the people.” wrote Ruki from the scene of action, in his account to “GroundViews”.  -  https://www.colombotelegraph.com/index.php/post-chogm-has-tna-chosen-a-wrong-set-menu/

 

இந்த ஆசியர் மக்களின் மனங்களை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தவறவிட்டத்தாக குற்றம் சாட்டுகிறார். 

 

தேர்தல் நேரம் அனந்தியின் வீட்டுக்குள் ஆமி புகுந்தது. அனந்தி அதை எதிர்கொள்ளத்தயாரான மனநிலையில் இருக்கலாம். ஆனால் அதே நேரம் ஆட்சியில் இருக்கும் கூட்டமைப்பு, பிள்ளைகளை இழந்த குடும்பமெல்லாவற்றுக்கும் அதே நிலை வராமல் பாதுக்காக வேண்டிய கடமையை உடையது. கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் தாங்கள் பிரதமருக்கு நிலைமையை எடுத்து சொல்லப்போனால் அவர்கள் தங்களுக்கு பின்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை பக்க பலமாக பாவிக்க வேண்டியத்தில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிகசாலை ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் மேலிடத்தால் திட்டமிடப்பட்டதல்ல என்ற்தை என்னால் நம்ப முடியும். கூட்டமைப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு பிரதமரை வாசிக சாலைக்கு அழைத்துவிட்டு எப்படி அது வாசிக சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்த முடியும்? இது கருணாநிதியின் பாணி அல்லவா? பிருத்தானிய தூதரகம் சுமந்திரனை மொழிபெயர்ப்பாளராக எற்றுக்கொண்டபின்னர் கூட்டமைப்பார் வெளியில் ஆர்ப்பாட்டம் போட்டு கோசம் போட்டால் அதையா சுமந்திரன் மொழி பெயர்ப்பது. கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆபிசலாக பங்கு பற்றாதது சரியே. 

அந்த ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பால் (தலைமையால்) திட்டமிடப்பட்டதல்ல என்பதே எனக்கு கிடைத்த தகவலும். கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றாதது சரியே என்பதுதான் எனது கருத்தும். அப்படிச் செய்திருந்தால், ராஜதந்திர சந்திப்பு என்ற விஷயம் அடிவாங்கியிருக்கும்.

சுண்டலுக்கு விக்கியில் அப்படி என்ன கோபம் :icon_mrgreen: .

போன வாரம் ஒரு தமிழ்கடையில் வயது முதிந்த பெண்மணி ஒருவர் அங்கிருந்த இலவச தமிழ் பத்திரிகையின் முதல்பக்கத்தில் இருக்கும் விக்கியின் படத்தை காட்டி "முதலமைச்சர் ஏன் இப்படி போட்டும் தாடியுடனும் சாமியார் மாதிரி நிற்கின்றார் ?" என்று கேட்டார் .

எல்லோரும் ஆளை ஆள் பார்க்க நான் சொன்னேன் ,அவர் ஒரு  கடவுள் பத்தர் அதில் என்ன தவறு என்று கேட்டேன் ,உப்படி இருந்து எமக்கு என்ன செய்ய போகின்றார் என்று தொடர்ந்தார் ,

இதுவரை சரிவரத்தான் போகின்றார் பொறுத்திருந்து பார்ப்போம் என்றேன் .

சிரித்துக்கொண்டே அவர் தன்ரை மருமகன் என்றார் .(தனது கணவனின் தங்கையின் மகன் என்றார் )

சிறு வயதில் இருந்தே அம்மா பிள்ளை அதனால்கல்யாணம் கட்டிய பின்னரும்  மனைவியை கவனிக்கவே இல்லை ,படிப்பு வேலை என்று மட்டும் இருந்தார் பாவம் மனைவி இறந்துவிட்டார் என்று விட்டு போய்விட்டார் .

 

(தனி நபர் விடயம் என்றால் தூக்கிவிடவும் )

  • கருத்துக்கள உறவுகள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பரிமாறிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

 

 

நோர்வே பரிமாறி முடிய வன்னியில் கொத்து குண்டுகளை கொட்டியவர்களிடம் மீண்டுமா?
 
அந்த வட்டத்தை விட்டு வெளியேறும் நோக்கமே இல்லையா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவிற்குத்தான் முதற்கும்பம் வைத்து வருகின்றார்கள். பின்னர் பயங்கரவாதிகளாக மாறிய விடுதலை இயங்கங்களும் அதையே பின்பற்றின. இதனால் இது வரைக்கும் ஈழத்தமிழன் சம்பாதித்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு விக்கியில் அப்படி என்ன கோபம் :icon_mrgreen: .

போன வாரம் ஒரு தமிழ்கடையில் வயது முதிந்த பெண்மணி ஒருவர் அங்கிருந்த இலவச தமிழ் பத்திரிகையின் முதல்பக்கத்தில் இருக்கும் விக்கியின் படத்தை காட்டி "முதலமைச்சர் ஏன் இப்படி போட்டும் தாடியுடனும் சாமியார் மாதிரி நிற்கின்றார் ?" என்று கேட்டார் .

எல்லோரும் ஆளை ஆள் பார்க்க நான் சொன்னேன் ,அவர் ஒரு  கடவுள் பத்தர் அதில் என்ன தவறு என்று கேட்டேன் ,உப்படி இருந்து எமக்கு என்ன செய்ய போகின்றார் என்று தொடர்ந்தார் ,

இதுவரை சரிவரத்தான் போகின்றார் பொறுத்திருந்து பார்ப்போம் என்றேன் .

சிரித்துக்கொண்டே அவர் தன்ரை மருமகன் என்றார் .(தனது கணவனின் தங்கையின் மகன் என்றார் )

சிறு வயதில் இருந்தே அம்மா பிள்ளை அதனால்கல்யாணம் கட்டிய பின்னரும்  மனைவியை கவனிக்கவே இல்லை ,படிப்பு வேலை என்று மட்டும் இருந்தார் பாவம் மனைவி இறந்துவிட்டார் என்று விட்டு போய்விட்டார் .

 

(தனி நபர் விடயம் என்றால் தூக்கிவிடவும் )

 

நம்பும்படியாக இல்லையே. விக்னேஸ்வரனுக்கே 74 வயது ஆகின்றது. அதில் அவரது கணவரின் தமக்கை என்றாலும் பரவாயில்லை. கணவரின் தங்கையின் மகன் என்றால்... குழப்பமாக இருந்தது. தவறான கணிப்பு எனில் தூக்கிவிடவும்...

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவிற்குத்தான் முதற்கும்பம் வைத்து வருகின்றார்கள். பின்னர் பயங்கரவாதிகளாக மாறிய விடுதலை இயங்கங்களும் அதையே பின்பற்றின. இதனால் இது வரைக்கும் ஈழத்தமிழன் சம்பாதித்தது என்ன?

 

உண்மையில்... என‌க்கும் இவ‌ர்க‌ளின் செயல் புரிய‌வில்லை குமார‌சாமி அண்ணை.

பிரிட்ட‌ன் பிர‌த‌ம‌ர் வ‌லிய‌ வ‌ந்து அழைப்பு விடுக்கின்றார். அதை டக்கென்று... ஏற்றுக் கொண்டு, போவது தானே... முறை.

ஏற்கெனவே.... ஜெயலலிதாவை சந்திக்க விக்னேஸ்வரன் அனுமதி கேட்டும், நிராகரிக்கப் பட்ட நிலையில்...

இந்தியாவை ஏன் முன்னிறுத்துகின்றார்கள். இவ‌ர்க‌ள் திருந்த‌வே... மாட்டார்க‌ளா?

ஆனால் ஒன்று... விக்னேஸ்வ‌ர‌ன், இங்கிலாந்துக்குப் போவ‌தாயிருந்தால்....

த‌ய‌வு செய்து... ச‌ம்ப‌ந்த‌னையும், சும‌ந்திர‌னையும் ஊரிலை விட்டுட்டு....

அன‌ந்தியையும், மாவையையும் த‌ன‌து குழுவில் இணைத்துக் கொண்டு சென்றால் தான்... ஏதாவ‌து பிர‌யோச‌ன‌ம் கிடைக்கும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்னேஸ்வ‌ர‌ன், இங்கிலாந்துக்குப் போவ‌தாயிருந்தால்....

த‌ய‌வு செய்து... ச‌ம்ப‌ந்த‌னையும், சும‌ந்திர‌னையும் ஊரிலை விட்டுட்டு....

அன‌ந்தியையும், மாவையையும் த‌ன‌து குழுவில் இணைத்துக் கொண்டு சென்றால் தான்... ஏதாவ‌து பிர‌யோச‌ன‌ம் கிடைக்கும்.

 

அன‌ந்தியையும், மாவையையும்? 

அதுக்கு, விக்கி இங்கிலாந்துக்கு வராமலேயே இருந்துவிடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன‌ந்தியையும், மாவையையும்? 

அதுக்கு, விக்கி இங்கிலாந்துக்கு வராமலேயே இருந்துவிடுவார்.

அப்ப பிரேமாணந்தா சாமியின் சிஸ்யை கூட்டிக்கொண்டுவரலாம்  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சாட்சாத் சிவபெருமானே உள்ளுக்குள்ள வாங்கோ எண்டு சொன்னபிறகும், நந்தியிட்டைச் சொல்லிப்போட்டுத் தான் வருவன் எண்டு பிடிவாதம் பிடிக்கிற 'ராச தந்திரத்தை' ஆரிட்டைச் சொல்லி அழுகிறது?

 

ஒருவேளை நந்தியையும் 'சந்தோசப்படுத்தவாக்கும்!' :o

 

பழக்க தோஷம்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப பிரேமாணந்தா சாமியின் சிஸ்யை கூட்டிக்கொண்டுவரலாம்  :icon_mrgreen:  :icon_mrgreen:

அவர் ஐரோப்பாவில்தான் இருக்கிறார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்; தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல், அந்த அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகள் செய்தல், திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் (டக்ளஸ் தேவானந்தா) ஒருவருடன் இணைந்து முன்னெடுப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப்பதவி 2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருக்கும்".

 

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஐரோப்பாவில்தான் இருக்கிறார்.

நாங்கள் கூட்டிக்கொண்டு போக கூடிய வயதில் இருக்கிறாவா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் கூட்டிக்கொண்டு போக கூடிய வயதில் இருக்கிறாவா??

80களின் நடுப்பகுதியில் 18 வயது. 

வயசு என்னங்க.. இப்ப கோடீஸ்வரி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.