Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

Posted

உறவுகளே விட்டுவிடுங்கள் ..............இந்த ஐயாவை .உண்மையில் புலவரின் இந்த நிலையில் அவருக்கு அவகாசம் கொடுப்பதே காலத்தின் கட்டாயம் ,சிறைக்கு சென்றவர்களும் ,அச்சுறத்த பட்டவர்களும் ,அவர்கள் உணர்வும் நான் நன்கு அறிவேன் .........களத்தில் எமது  விடிவிற்காய் போராட புறப்பட்ட எம் உயிரான உண்மையான  போராளி கூட இங்கே வந்தபின் அவரது குடும்ப உறவுகள் [ எம் உறவுகள் ] பாதுகாப்பை முன்னிட்டு அமைதியாய் இங்கு இருப்பதை நாம் பார்க்கவில்லையா ,அதை புரிந்து கொள்ளவில்லையா .........அன்று வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையினால் அங்கீகரிக்கப்பட்ட கவிகளுள் இவரும் ஒருவர் ....சிறிலங்கா சிறையின் கொடுமை அறிந்தவன் என்ற ரீதியில் ஒரு புரிந்துணர்வுடன் தற்போது விட்டு எதிர்காலத்தில் இவரது செயல்பாடுகளை கணிப்பிடுவதே சாலச்சிறந்தது .............புலவருக்காக வக்காலத்து வாங்கவில்லை .................தமிழீழ விடுதலை புலிகள் எமக்கு கற்றுத்தந்த பாடத்தின் அடிப்படையில் நான் இப்பிடி பதிவிடுகிறேன் .............நன்றி....

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி. எல்லோரும் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்...

Posted
நான் உயிரோடிருப்பது முஸ்லிம் மக்களதும் எரிக் சோல்கைமினதும் ஆதரவால் நிகழ்ந்தது. அது என் தவறல்ல என்பதையாவது நம்புங்கள் நிழலி.

 

ஜெயபாலன் அண்ணா,  நீங்கள் இதனை தொடர்ந்து எழுதுவதில் இருந்து தெரிகின்றது. நீங்கள் உயிரோடு இருப்பது தொடர்பாக நிழலிக்கு விருப்பம் இல்லை என்று தொடர்ந்து காட்ட முனைகின்றீர்கள் என்று. அனுதாபம் தேட முயலும் உங்களுடன் இதற்கு மேலும் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை என்று நம்புகின்றேன்.

 

அத்துடன், கைதாகிய பின் எரிக்சொல்க்ஹெய்ம் சொல்ல முன்பே முஸ்லிம்கள் சொல்ல முன்பே உங்களுக்கு கைபேசியில் வெளிநாட்டவர்களுடன் உரையாட விட்ட சிங்களம் உங்கள் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்காது என்பதும் எங்களுக்குத் தெரிந்தே தானிருந்தது.

 

அதே போன்று, உங்களுக்கு உதவியவர்களின் பாதுகாப்பை இரண்டு வார இடைவெளிக்குள் இரண்டாம் அறிக்கை எழுதுவதற்குள் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய இலகுவான நெகிழ்வான இராணுவச் சூழ்நிலை அங்கு இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.

 

நன்றி வணக்கம்

Posted

துளசி யாருக்கு உளவியல் பிரச்சினை என்கிற ஆய்வுக்குமுன்னம்  நீங்கள் எனக்கெதிராக  எழுதிய எல்லாவற்றையும் திரும்ப ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தப்பிவந்த களை ஆறுமுன்னம்  

என்மீது நீங்கள் சுமத்திய பழிகளுக்கு

குற்றச்சாட்டுக்களுக்கு என் எழுத்தில்  ஆதாரம் இருக்கா என்பதையும் ஆராய்ந்துபாருங்கள்.

நீங்கள் எழுதியவை ஆதரமுள்ள உண்மையென்றால் விசர் எனக்கு வரட்டுக்கும்.

 

நான் எழுதியதில் ஒரு தவறையும் காணவில்லை.அதற்கு ஆதாரம் உங்கள் அறிக்கை மற்றும் கருத்துக்கள்.

 

தப்பிவந்த களை ஆற முன்னம் முதலறிக்கை விட மட்டும் தெரிகிறது. களையாறிய பின்னர் அதையும் எழுதியிருக்கலாமே. உங்களுக்கு களைப்பாக இருக்கிறது என்றால் நீங்கள் களையாறி விட்டு வந்து பதிலளிக்கலாம். அவசரமில்லை. அதற்காக மற்றவர்கள் முதல் அறிக்கையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுவதில் பிழையில்லை.

 

மற்றபடி நீங்கள் நாரதர் அண்ணாவுக்கு எழுதிய அந்த கூற்று உண்மையெனின் நீங்கள் எனக்கு எழுதியதை ஒப்பிட்டு பார்க்கும் போது உங்களுக்கு உளவியல் பிரச்சினை இருப்பதாக நீங்களே சொல்வது போல் உள்ளது. நானாக உங்களுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது என கூறவில்லை என்பதை கவனிக்கவும். :)

 

நீங்கள் நாரதர் அண்ணாவை மட்டம் தட்ட வெளிக்கிட்டு அது உங்களுக்கு வினையாகி விட்டதற்கு நான் என்ன செய்ய? :(:rolleyes:

Posted

நிழலி  

 

களநிலமை தெரியாமல் பேசுகிறீங்க. குடிவரவு குற்றச்சாட்டில் கைதாகும் வெளிநாட்டவர்களிடம் கைபேசியை பறிப்பதில்லை. கைபேசியை அனுமதித்து ஒட்டுக்கேட்பதன்மூலம்தான் அவர்கள் தகவல் சேகரிக்கிறார்கள். ஆனால் நாம் பேசும்போது அவர்கள் விரும்பினால் தொடர்பு இருக்கும். விரும்பாவிட்டால் துண்டிக்கப் படும். அப்படி ஒருமுறை தொடர்பு துண்டிக்கப் பட்டதால் என்னுடன் பேசிக்கொண்டிருந்த அருள் எழிலன் துடித்துப்போனதை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 

நிழலி, உங்கள் அனுதாபத்தை கோருகிற அளவுக்கு நான் ஒன்றும் அத்தனை அற்பமில்லை.முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எனக்கு அனுதாபம் இருப்பதாக அரசு நினைப்பதுதான் எனக்கு பிரச்சினையாயிற்று. உங்கள் அனுதாபத்தை பத்திரப் படுத்துங்கள். அது உங்களுக்குத் தேவைப்படலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துளசி

தமிழரின் பெரும் சொத்து ஒன்று  இவர்

அந்த மரியாதையை  நாம் தரணும்  பிள்ளை.

புரிந்து கொள்வீர்கள்  என நினைக்கின்றேன்

Posted

தமிழ் சூரியன் உங்களுக்கு என் நன்றி.

என்னை அறிந்த ஓரிருவராவது இருங்கு இருக்கிறீர்கள் என்பது நிம்மதி.

புலிகளுக்கு எழுதிய கையால் இங்கு காகிதப் புலிகளுக்கு  எழுத நேர்ந்ததுதான் என் தலைவிதி.


துளசி நீங்களும் நாரதரும் விடப்பிடியாக திரும்ப திரும்ப வலியுறுத்துவதால் நம்முள் யாருக்கோ உளவியல் பிரச்சினை இருக்கலாம். என தெரிகிறது.  நம்முள் யார் தவறோ அவர்களை தர்மம் தண்டிக்கட்டும்.

Posted

கவிஞர் ஜெயபாலன்,

 

நீங்கள் மீண்டும் நலமாக திரும்பி வந்தது மகிழ்ச்சிக்குரியது. நானும் சகோதரரை முள்ளிவாய்க்காலில் இறுதி நாளில் இழந்துவிட்டேன். கடந்த ஆண்டு இலங்கைக்கு போய் மீதம் இருக்கும் குடும்பத்தினரை பார்த்து விட்டு வர முடிந்தது.

நீங்கள் எழுதிய உங்கள்  (தடுப்பு காவல் மற்றும் நாடுகடத்தல் தவிர்ந்த )அனுபவங்களுடன் எனது அனுபவங்களும் ஒத்து இருக்கின்றன. ஸ்ரீ லங்கா காவல் துறையினர் பண்பாக நடந்து கொள்வது பற்றி இரண்டு விரிவுரையாளரிடம் கேட்ட போது அவர்கள் இவ்வாறான மாற்றங்கள் 2005  இடப்பெயர்வின் பின் மக்கள் திரும்பி வந்ததில் இருந்தே ஆரம்பித்து இருந்ததாக தெரிவித்தார்கள். புலனாய்வு துறையினரின் செயற்பாடு அதிக அளவில் முக்கியத்துவம் பெற்று குறிப்பிட்ட அளவில் தமது கவனத்திற்குட்பட்டவர்களில் அரசு அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது. பொது மக்களுக்கு எதிரான  குற்ற செயல்கள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் காவல்துறை இருப்பாதாக தெரியவில்லை. 

 

தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் முஸ்லிம்களும் கூட போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். இலங்கையில் தமிழருக்கு மட்டும் விடிவு தேடி அது கிடைக்கும் சாத்தியம் மிகவும் குறைவானது. இன்று  11.21% (2011 சனத்தொகை ) ஆகவுள்ள தமிழர்கள்  88%மான ஏனையவர்களின் ஆதரவும் இன்றி தமக்கு ஒரு விடிவை காணும் சாத்தியம் கேள்விக்குரியது

 

எல்லோருடைய கவனமும் இன்றைய அரசில் இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சினையை இன்றைய அரசு ஆரம்பிக்கவில்லை. இதற்கு முதல் இருந்த எல்லா அரசுகளுமே இந்த பிரச்சினைக்கு காரணமாக இருந்திருக்கின்றன. எடுத்தவுடன் இந்தியாவுக்கு ஓடும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த பெரும் அழிவின் மூலவேரில் இருக்கிறார்கள். இந்தியா தம்மை பாதித்திருப்பது பற்றி தமிழரிலும் பார்க்க சிங்களவர்கள் மிகவும் அறிந்து இருக்கிறார்கள். இவ்வாறான பொதுவான காரணிகளை அடையாளம் கண்டாவது மக்கள் ஒன்றுபட்டு ஒரு விடிவை காண தங்களை போன்ற செல்வாக்கான வழிகாட்டிகள் உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எரிக் சொல்ஹெய்ம் முதல் நீதி அமைச்சர் ரவுல் ஹக்கீம் வரை எல்லாரும்  உங்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். நீங்கள் நினைத்தால் இந்த சிக்கலில் இருந்து எல்லா மக்களும் விடுபட உதவ முடியும். திஸ்ஸ விதாரண போன்ற அமைச்சர்கள் தங்களை போன்ற புலம்பெயர்ந்தவர்கள் இந்த சிக்கலை தீர்க்க பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஏற்கனேவே கேட்டிருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவோ செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

Posted

துளசி

தமிழரின் பெரும் சொத்து ஒன்று  இவர்

அந்த மரியாதையை  நாம் தரணும்  பிள்ளை.

புரிந்து கொள்வீர்கள்  என நினைக்கின்றேன்

 

விசுகு அண்ணா, அவரை மட்டம் தட்டும் நோக்கம் எனக்கு அறவே இல்லை. ஆனால் அவர் கூறிய வரிகளே அவரை நோக்கி திரும்பியுள்ளது. 

இதற்குள் தமிழரின் சொத்து அது இது என கொண்டுவந்து புகுத்தாதீர்கள்.  :unsure: ஒருவர் தமிழரின் சொத்து என்பதற்காக அந்நபர் கூறும் அனைத்தையும் சரி என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. அதற்காக அவரை குழிபறிக்க நினைக்கவில்லை. தனியே சுட்டிக்காட்டுதல் தான் இங்கு இடம்பெறுகிறது. :rolleyes:

மற்றபடி ஜெயபாலன் ஐயாவுக்கு என்னை பற்றி தெரியும். ஏற்கனவே பலதடவை இவருடன் களத்திலும், திண்ணையிலும் முரண்பட்டுள்ளேன். ஆனாலும் பின்னரும் உரையாடியுள்ளேன். :)

Posted

அன்புள்ள நிர்வாகிகளே ,

 

நான் நினைக்கிறேன் இந்த திரி இத்துடன் போதும் என்று.

கவிஞர் ஜெயபாலன் யார் என்பதும் எதற்காக கைது செய்யபட்டார் என்பதும், எதற்காக விடுதலை செய்யபட்டார் என்பதும், கவிஞரின் கைதின் பின்னான அவரின் அரசியல் என்ன என்பதும் தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து விட்டது. எனவே இந்த இந்த திரியை தயவு செய்து பூட்டி விடவும். அத்துடன் Pinned  இணையும் நீக்கிவிடவும். இது கள உறவுகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக அமையும்.

 

கவிஞர் குறிப்பிட்டது போல 2014 இல் மீன்பிடி படகில் இலங்கை சென்று (இப்பவே சொல்லிவிட்டு தான் செய்கிறார்) ஒரு வேளை கைதானால் மீண்டும் இந்த திரியை திறந்து விடவும்.

 

நன்றி

 

அன்புடன், பகலவன். 

Posted

முதலில் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் தானே? அவர்கள் தாய் மொழி தமிழ் தானே? இதில் ஏன் மயக்கம்?

 

ஒருவரின் தாய் மொழியை வைத்து மட்டுமே அவரின் இனத்தை தீர்மானிப்போம் என்றால் அமெரிக்கர்களும் கனேடியர்களும் கரிபியன் தீவினரும் ஆங்கிலேயர்கள் ஆகிவிடுவார்கள். பல ஆபிரிக்க இனத்தவர்களை இசுபானியார்களாக கருதப்பட வேண்டியிருக்கும். இலங்கை தமிழரும் இந்திய தமிழரும் ஓரினம் ஆகி அவர்களின் தாய்மண் தமிழ்நாடாக இருக்கும். ஒல்லாந்தர்கள் யாழ்ப்பாண தமிழரை மலபார் இனத்தவர் என குறிப்பிட்டு உள்ளதால் யாழ்ப்பாண தமிழரை பின்னர் வந்த தமிழருடன் கலந்த மலையாளிகள் என கருதுவோர் இருக்கிறார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் தாம் அரபு வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுகிறார்கள்.

 

 

அவர்கள் தாம் "தமிழர்கள்" தான் என்று எண்ணாதவரை இப்படி தேவையற்ற "நல்லுறவு(?), வல்லுறவு" என உறவுப்பாலம் போட்டே தமிழர்களின் சக்தி வீணாகிவிடும். :huh:

தனித்து நின்று எந்த சிக்கலையும் தீர்க்க முடியாது என்பது முள்ளிவாய்க்கால் தந்த பாடம். இலங்கை தமிழர் இலங்கையில் பலமற்ற 11.21%. முஸ்லிம்கள் 9.23%. இலங்கையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான தேவைகளும் சிக்கல்களும் பல இருக்கின்றன. தமிழர் ஆயுதம் ஏந்தியும் சத்தியாக்கிரகம் செய்தும் கடந்த 50 வருடங்களாக வீணாக்கிய சக்தியுடன் ஒப்பிடும் போது இந்த உறவுப்பாலத்துக்கு தேவையானது மிகவும் குறைவான சக்தியே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!

 

நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!

 

உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுபட்டதை நான் அறிவேன்!

 

மஞ்சுளா வெடிவர்தனாவின் உங்கள் விடுதலைக்கான வேண்டுகோள் முகநூலில் வெளி வந்தபோது, அதனை அவரது முகநூலில் இணைத்தேன்!  அவரது முகநூலில் பல ஊடக நண்பர்களும், முஸ்லிம் நண்பர்களும், சிங்கள நண்பர்களும் இருந்ததால், இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையே காரணமாகும்! அது அவரது தனிப்பட்ட பக்கமென்பதைக்கூடச் சிந்திக்க எனக்கு நேரமிருக்கவில்லை! உங்களுக்கு என்ன நடக்குமோ என்ற பயம் மட்டுமே என்னிடம் இருந்தது! அவரது பக்கத்தில், அவரது அனுமதியில்லாமல், வேறொருவர் இணைப்புக்கொடுக்க முடியாது என்பதைப்பின்னர் அவதானித்தபோதும், உடனடிடியாக அந்தப் பதிவை அனுமதித்தது மட்டுமன்றி, உங்கள் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டத்தையும் அவர் அங்கு இணைத்திருந்தார்! 

 

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை,

செய் நன்றி கொன்ற மகற்கு!

 

அதை விடுவோம்! எனது முன்னைய கருத்து, சிங்களப் புலிகளுடன், கத்திப்போரிட்ட உங்கள் வீரம் பற்றியது!

 

புலிகளின் ஊடகத் தொடர்பாளர்  நடேசனின் மனைவி ஒரு சிங்கள இனத்தவர்! அவர் செய்த ஒரே குற்றம், நடேசன் அண்ணையின் மனைவியாக இருந்தது மட்டுமே! அவர் தமிழில் புலம்பவில்லை! சிங்களத்திலேயே புலம்பினார்! அத்துடன் அவர் ஒரு பெண்! அவரை விட்டுவைக்காத சிங்களத்திடம், உங்கள் வீரம் வெற்றி பெற்றதைக் கூறிய போது, என்னால் ஜீரணிக்க முடியவில்லை!

 

இனியாவது, இப்படியான முட்டாள் தனமான, தர்ம யுத்தங்களில் இருந்து விலகியிருங்கள்!

 

தர்மம் என்பது எனது பார்வையில் வித்தியாசமானது!

 

'கண்ணகி'மதுரையை எரித்தது பலருக்குத் தர்ம யுத்தம்!

 

பாண்டியனால், சிலம்புக்குள் என்ன வகையான 'பரல்' இருக்கிறது  என்று பூந்து பார்க்க முடியவில்லை! அதற்கான தேவையும் அவனுக்கில்லை!

 

ஆனால், மதரை என்ன பாவம் செய்தது?  :o

 

கோவலனுக்கு வெள்ளையடிப்பதற்காக 'மதுரை' எரிந்து தானாக வேண்டும்! இது தான் 'தர்ம யுத்தம்" 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி ஜெயபாலன் ஐயா;

எமது கவலை எல்லாம் நீன்கள் சுகமாக திரும்புவதில் இருந்தது.

சிலர் நீன்கள் கூறுபது போல   நீன்கள் செத்து இருந்தால், விச்கி அடித்து போட்டு மாமனிதர் பட்டமும் கொடுத்தும் இருப்பார்கள். அவர்களை விடுன்கள், அவர்கள் அல்ல வருத்த படுவது, அதைத் தவிர, வேறும் சிலரும் முயர்சி செய்தார்கள்.  அவர்களை நீன்கள் மறக்க வேண்டாம்.

இப்போது Face Book இல் செய்தி பகிர்வது இலகுவான காரியம் அல்ல. பலருக்கு அதுவே உனகளை போன்றவர்கள் சிறை சென்று மீண்டு வருவதை போன்றது.

அவர்களும் சேர்ந்ததே எனகள் இனம், சனம் என்று உணர்ந்து கொள்ளுன்கள். எனக்கு facebook 400- 500 பேர் "தெரிந்தவர்களாக" இருக்கிறார்கள், அதில் 4-5 பேர் உன்களை பற்றிய செய்தியை பகிர்ந்து இருந்தார்கள். ஆனால் முரளிக்கு கவிதை கட்டுரை எழுதியவர்கள் மிக அதிகம். மாவிரர் தினத்திற்க்கு 1-2 பேரே எரியும் சுட்டிதன்னும் போட்டார்கள். அதில் இருந்து உணர்ந்து கொள்ளுன்கள் இப்படி செய்தி பகிர்வது எவ்வளவு கடினம் என்று.

எனவே உனகளுக்காக செய்தி பரிர்ந்தவர்களை எதோ வேலை அற்றவர்கள் என்று நினைக்காமல், அவர்களுக்காகவும் நிமிடம் ஒதுக்கி பதில் சொல்லுன்கள்.

முஸ்லீம் அமைச்சர்கள் நேரடியாக உதவி இருக்கலாம். ஆனால்  அவர்களுடன் சேர்ந்து இணைய உறவுகளும் தன்கள் பன்கை செய்தார்கள். அவர்களை எட்டி உதைய வேண்டாம். அப்படி செய்வது உனகள் விருப்பம். 

நீன்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு வந்த BBC செய்தியில் இருந்தது, உனகளுக்கு விசா விதி முறை தெரியாதால்தான்  கைது செய்யபட்டதாகவும், இலன்கை அரசான்கம் ஒரு சுத்தமான சுசைபிள்ளை என்பது போலவும் இருந்தது.

நென்சுக்கு நீதியாக நடப்பது அவர் அவர் விருப்பம், அது காலம் கடந்தும் வரலாம்- எமது வைத்திய நண்பருக்கு எற்பட்டது போல.  ஆனால் நீன்கள் சொல்லும் உண்மையான வாக்கு மூலம் சில வேளைகளில் 2014 படகு இல்லாமல் கொவுரவ பிரசையாகவும் செல்ல உதவும்.

 

பல காலம் பல காரணன்களால் புதைந்திருந்த தேர் உருள தொடன்கும் போது அரோகர என்கிற வாய்ச் சொல்லே இன்னும் ஒரு முழம் இழுக்க உந்தும்.

 

-எழுத்து பிழைகளை பொறுத்து கொள்ளுன்கள் -

 

 

 

Posted

எல்லாரும் ஒருதரம் மனநல வைத்தியரை பார்ப்பது நல்லது.

ஆடுகளம் திரைப்படம் பார்த்து பெருமைப்பட்டவன் நான்,

இன்று இப்படியும் ஈனத் தமிழன் இருக்கின்றான் என்று வெட்கி தலை குனிகின்றேன்.

உங்களை கைது செய்வார்கள், உங்கள் நண்பர்கள் காப்பாற்றுவார்கள், நீங்கள் விடுதலையாவீர்கள் :) என நினைத்தால் தயவு செய்து இனிமேலும் இலங்கைக்கு செல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் கைது செய்யப்பட்டால் ஒரு தமிழர் கைது செய்யப்பட்டார் எனவே உலகம் பார்க்கும். நீங்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டாலும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தோற்றத்தையே உருவாக்கும். (விடுதலையின் பின்னர் தகுந்த காரணங்களை உலகின் முன் நீங்கள் வைக்காத நிலையில்)

நீங்களும் உங்கள் நண்பர்களும் நல்ல பாதுகாப்பாக இருப்பீர்கள். ஆனால் உங்களின் இவ்வாறான செயற்பாடுகளால் அங்கு உண்மையில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படாதவர்களும் அனுபவித்த, அனுபவிக்கும், அனுபவிக்கப்போகும் சித்திரவதைகள் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படும். :rolleyes:

ஒரு சிலரை காப்பாற்றுகிறேன் என கூறி நீங்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களை மறந்து விடுகிறீர்கள். அவர்களுக்கு தீமை விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கிறீர்கள்.

இப்பொழுதும் கூட திரும்ப இலங்கைக்கு செல்வீர்கள் என கூறுகிறீர்கள். நீங்கள் போனாலென்ன வந்தாலென்ன மீடியாக்களுக்கு தெரிவிக்காமலேயே உங்களை காப்பாற்றக்கூடிய நண்பர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அறிவித்து விட்டு போய் வாருங்கள். ஏனென்றால் உங்கள் ஒருவரை தான் தமிழர் என உலகம் கணக்கு போட்டுவிடக்கூடாது. :)

தேவையான நேரத்தில் குரல் கொடுக்காத நீங்கள் எல்லாம் இணக்க அரசியல் செய்து எந்த காலத்திலும் பிரயோசனம் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்காக ஹக்கீம் குரல் கொடுப்பது தான் உங்களை பொறுத்தவரை இணக்க அரசியலோ தெரியவில்லை. :)

மனசாட்சி உள்ள அனைவரும் துளசியின் இந்த கருத்துக்கு வரவேற்புதான் கொடுப்பார்கள்.

Posted

அன்புக்குரிய ஜூட், புங்கைஊரான், வல்கனோ,

 

என்மீதான உண்மையான குற்றச்சாட்டு தமிழ் முஸ்லிம்களை இணைத்து போராடும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டிருக்கிறேன் என்கிற அவர்களின் ஊகம் சார்ந்தது. இன்னொருபுறம் எங்கள் பண்ணையை அபகரிக்கும் முயற்சியில் சில பெரும் அரசாங்க புள்ளிகள் ஈடுபட்டிருப்பது கிழைக் கதை.

அரசு கண்ணுக்குத் தெரியும் ஒடுக்குதலைக் கைவிட்டு கண்ணுக்கு புலனாகாத ஒடுக்குதலை அதிகரித்திருப்பது தொடர்பான என் ஆய்வுக் கருத்துக்கள். என்னை அவர்கள் உடல்ரீதியாகத் தாக்கவில்லை. ஆனால் சிறைக்குள் முடக்கி வைக்கப் பார்த்தார்கள்.

 

அதிஸ்ட்டவசமாமெரிக் சோல்கைம் அரசை எச்சரித்ததும் ரவ்கக்கீம் அரசைன் நடவடிக்கையை எதிர்த்ததும் பசீர் சேகுதாவுத் அரசிடம் என்விடுதலைக்காக பேசியதும் நோர்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகளும்  உலக தமிழர்களது எதிர்ப்பும் சிங்கள தோழர்களது எதிர்ப்பும் நான் சிறைப் படாமல் தப்பிக்க உதவியது. நல்லவேளையாக சிங்கள பத்திரீகைகள் விசம் கக்க ஆரம்பிக்கும்போது நான் வெளியேறியிருந்தேன். . தமதமாகி இருந்தால் சிறை நிரந்தரமாகி இருக்கும்.

 

எனக்காக குரல்கொடுத்த எல்லோருக்கும் எனது நன்றிகள்.

 

நான் மாறப்போவதில்லை.நான் எனக்குத் தோன்றுவதை செய்ய ஒருபோதும் அஞ்சியதில்லை. எனக்கு என்னுடைய 19 நாள் இலங்கை வாசத்தில் எனக்குத் தேவையான ஆய்வுத் தகவல்களில் சிலவற்றை கிரகிக்கக்கூடியதாக இருந்தது. மீண்டும் போய் என் ஆய்வுகளை பூர்த்தியாக்க வேண்டும் என்கிற மனநிலை தொடரும். 

 

யாழ்க்களத்தில் அதிக நேரத்தை செலவுசெய்துவிட்டேன். அன்புடன் விடை பெறுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.