Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் கமரூனின் யாழ் பயணமும் சில யதார்த்தங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டேவிட் கமரூனின் யாழ் பயணமும் சில யதார்த்தங்களும் 
 
உலகின் மிக சக்திமிக்க தலைவர் ஒருவர் வருகின்றார், தான் வரப் போவதை முன்னதாகவே அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பு பல பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்குவதுடன், அவரது சர்வதேச நிலைப்பாடுகள் காரணமாக, அவரது பாதுகாப்பானது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகிறது. 
 
அவரது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முடிவின் படி லண்டனில் இருந்து குண்டு துளைக்காத நான்கு லேன்ட் ரோவர் வாகனங்கள் கொண்டு வரப் பட்டன.
 
மேலும் அவரது பயண  நிகழ்ச்சி நிரல் அவரை வரவேற்க்கும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவின் கையில் தான் இருக்கும். அவர்கள் தான் அவரது பாதை, பாதையில் வரும் தடை நீக்குதல் போன்ற விடயங்களை முடிவு செய்வார்கள்.
 
இந்த வகையில், இலங்கை அரச, பிரித்தானிய அரச கூட்டு நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே கூட்டமைப்பு  எதுவுமே செய்ய முடிந்திருக்கும் என்பது சாத்தியம் இல்லை என்பது எனது கருத்து.
 
டெல்லியில் தாடிச்சிங்கர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் தான், இறுக்கமான நிலைப்பாட்டுடன், கொழும்பு வந்த பிரித்தானிய பிரதமரின் யாழ் பயணம் எமக்கு பல நன்மைகளை தந்திருக்கிறது. மறுபுறத்தே சில காரணங்கள் காரணமாவே இந்த விடயம் நிகழ்ந்து இருக்கும்.
 
1. சீனாவின், உள்நுளைவினால் உண்டான இந்தியாவின் கையறு நிலை. இது இந்தியாவின் அனுசரணை உடன் பிரித்தானியாவை உள்நுழைய வைத்து உள்ளது. டச்சு காலனியாக இருந்த இந்தோனெசியாவின் பிடியில் இருந்து  போர்த்துகல், காலனியாக இருந்த  கிழக்கு திமோர் சுதந்திரம் பெறும்   விடயத்தில், போர்த்துகல் தான் சர்வதேச ஆதரவினைத் திரட்டியது. 
 
2. கமரோனின் வருகையினை தொடர்ந்து உடனடியாக சீனாவும் மனித உரிமை தொடர்பில் அறிக்கை விட்டது: காரணம் அது பெருமளவில் இலங்கையில் முதலிட்டு உள்ளது. மேற்கு பொருளாதார தடைகளை கொண்டு வரின் பாதிப்பு பெரு வட்டியில் கடன் கொடுத்துள்ள சீனாவுக்கு தான்.
 
3. பிரித்தானிய அரசியல் நிலை. பிரித்தானியாவில் கூட்டரசாங்கமே பதவியில் உள்ளது. 2015 தேர்தலில் தனித்து ஆட்சியினை பிடிக்க வேண்டும் என்பது கமரோனின், பழமைவாதக் கட்சியின் திட்டம். இதற்கு உள்ள பல வழிகளில் முயலும் பழமை வாதக் கட்சியின் கணக்குக் படி, லண்டனில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தமிழர் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியை கொண்டுள்ளன. (Marginal Votes)
 
4. புலிகள் ஒழிப்பு, விக்னேஸ்வரன் தெரிவு, கமரோன் வருகை, சந்திரிகாவின் மீள் அரசியல் வருகை எல்லாமே ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல். விக்னேஸ்வரன் எந்த ஆயுத போராட்ட பின் புலமும் இல்லாததால், கமரோன், அவர் பக்கத்தில் இருந்து பேசுகிறார், லண்டனுக்கு அழைக்கின்றார். அவரது பல் இன குடும்ப அமைப்பு காரணமாக சிங்களவர்களுக்கும் அவர் 'நம்மாள்', நமக்கும் அவர் 'நம்மாள்'. இது இந்திய கணக்கு. அதே போல் போர்க் குற்ற விசாரணை என்ற மந்திரக் கோல் மூலமே சீன ஆதரவு, சிங்கள மக்கள் ஆதரவு உள்ள சகோதரர்களை பதவி இறக்க முடியும் என கருதும் இந்தியா, பிரித்தானியாவை உள்ளிளுத்துவிடுகின்றது. சந்திரிகாவை தயார் செய்கின்றது. 
 
5. கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் சாதரணமாக, கனடா விசாவே பெற முடியாத பின் புலம் கொண்டவர்கள். இதன் காரணமாகவே விக்னேஸ்வரன் இந்த பதவிக்கு முன்னிறுத்தப் பட்டார். அதே வேலை தயா மாஸ்டர், டாக்லஸ் தேவானந்தா  போன்றார் அரச தரப்பில்  முன்னிறுத்தப் படுவதை கூட இந்தியா விரும்பி இருக்கவில்லை  எனவும் கூறப்படுகின்றது.
 
எனவே எமது உணர்வு சார்ந்த நிலைபாடுகளுக்கு அப்பால், யதார்த்தம் என்று ஒன்று உள்ளது என்பதை நினைவில் கொள்வோம். விக்னேஸ்வரனிடம் அதிகம் எதிர்பாரா அதேவேளை, இனி மேல் வரக் கூடிய சர்வதேச நடவடிக்கைகள் எமக்கு சார்பாக இருக்கும் என்பது யதார்த்தமாகப் படுகின்றது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்வதும் எழுவதும் இயற்கையின் நியதிகள். தமிழன் இயற்கையோடு வாழ்ந்தவன். இன்றும் இயற்கையோடு வாழ முயற்சிப்பவன். இன்று வீழ்ந்துள்ளவன் நாளை நிச்சயம் எழுவான்.

இத்திரியில், ''இனி மேல் வரக் கூடிய சர்வதேச நடவடிக்கைகள் எமக்கு சார்பாக இருக்கும் என்பது யதார்த்தமாகப் படுகின்றது''. என்ற வார்த்தைகள் நிச்சயமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு  நன்றி  நாதமுனி!!!

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் கமரூனின் யாழ் பயணமும் சில யதார்த்தங்களும் 
 
உலகின் மிக சக்திமிக்க தலைவர் ஒருவர் வருகின்றார், தான் வரப் போவதை முன்னதாகவே அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பு பல பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்குவதுடன், அவரது சர்வதேச நிலைப்பாடுகள் காரணமாக, அவரது பாதுகாப்பானது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகிறது. 
 
அவரது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முடிவின் படி லண்டனில் இருந்து குண்டு துளைக்காத நான்கு லேன்ட் ரோவர் வாகனங்கள் கொண்டு வரப் பட்டன.
 
மேலும் அவரது பயண  நிகழ்ச்சி நிரல் அவரை வரவேற்க்கும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவின் கையில் தான் இருக்கும். அவர்கள் தான் அவரது பாதை, பாதையில் வரும் தடை நீக்குதல் போன்ற விடயங்களை முடிவு செய்வார்கள்.
 
இந்த வகையில், இலங்கை அரச, பிரித்தானிய அரச கூட்டு நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே கூட்டமைப்பு  எதுவுமே செய்ய முடிந்திருக்கும் என்பது சாத்தியம் இல்லை என்பது எனது கருத்து.
 
டெல்லியில் தாடிச்சிங்கர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் தான், இறுக்கமான நிலைப்பாட்டுடன், கொழும்பு வந்த பிரித்தானிய பிரதமரின் யாழ் பயணம் எமக்கு பல நன்மைகளை தந்திருக்கிறது. மறுபுறத்தே சில காரணங்கள் காரணமாவே இந்த விடயம் நிகழ்ந்து இருக்கும்.
 
1. சீனாவின், உள்நுளைவினால் உண்டான இந்தியாவின் கையறு நிலை. இது இந்தியாவின் அனுசரணை உடன் பிரித்தானியாவை உள்நுழைய வைத்து உள்ளது. டச்சு காலனியாக இருந்த இந்தோனெசியாவின் பிடியில் இருந்து  போர்த்துகல், காலனியாக இருந்த  கிழக்கு திமோர் சுதந்திரம் பெறும்   விடயத்தில், போர்த்துகல் தான் சர்வதேச ஆதரவினைத் திரட்டியது. 
 
2. கமரோனின் வருகையினை தொடர்ந்து உடனடியாக சீனாவும் மனித உரிமை தொடர்பில் அறிக்கை விட்டது: காரணம் அது பெருமளவில் இலங்கையில் முதலிட்டு உள்ளது. மேற்கு பொருளாதார தடைகளை கொண்டு வரின் பாதிப்பு பெரு வட்டியில் கடன் கொடுத்துள்ள சீனாவுக்கு தான்.
 
3. பிரித்தானிய அரசியல் நிலை. பிரித்தானியாவில் கூட்டரசாங்கமே பதவியில் உள்ளது. 2015 தேர்தலில் தனித்து ஆட்சியினை பிடிக்க வேண்டும் என்பது கமரோனின், பழமைவாதக் கட்சியின் திட்டம். இதற்கு உள்ள பல வழிகளில் முயலும் பழமை வாதக் கட்சியின் கணக்குக் படி, லண்டனில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தமிழர் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியை கொண்டுள்ளன. (Marginal Votes)
 
4. புலிகள் ஒழிப்பு, விக்னேஸ்வரன் தெரிவு, கமரோன் வருகை, சந்திரிகாவின் மீள் அரசியல் வருகை எல்லாமே ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல். விக்னேஸ்வரன் எந்த ஆயுத போராட்ட பின் புலமும் இல்லாததால், கமரோன், அவர் பக்கத்தில் இருந்து பேசுகிறார், லண்டனுக்கு அழைக்கின்றார். அவரது பல் இன குடும்ப அமைப்பு காரணமாக சிங்களவர்களுக்கும் அவர் 'நம்மாள்', நமக்கும் அவர் 'நம்மாள்'. இது இந்திய கணக்கு. அதே போல் போர்க் குற்ற விசாரணை என்ற மந்திரக் கோல் மூலமே சீன ஆதரவு, சிங்கள மக்கள் ஆதரவு உள்ள சகோதரர்களை பதவி இறக்க முடியும் என கருதும் இந்தியா, பிரித்தானியாவை உள்ளிளுத்துவிடுகின்றது. சந்திரிகாவை தயார் செய்கின்றது. 
 
5. கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் சாதரணமாக, கனடா விசாவே பெற முடியாத பின் புலம் கொண்டவர்கள். இதன் காரணமாகவே விக்னேஸ்வரன் இந்த பதவிக்கு முன்னிறுத்தப் பட்டார். அதே வேலை தயா மாஸ்டர், டாக்லஸ் தேவானந்தா  போன்றார் அரச தரப்பில்  முன்னிறுத்தப் படுவதை கூட இந்தியா விரும்பி இருக்கவில்லை  எனவும் கூறப்படுகின்றது.
 
எனவே எமது உணர்வு சார்ந்த நிலைபாடுகளுக்கு அப்பால், யதார்த்தம் என்று ஒன்று உள்ளது என்பதை நினைவில் கொள்வோம். விக்னேஸ்வரனிடம் அதிகம் எதிர்பாரா அதேவேளை, இனி மேல் வரக் கூடிய சர்வதேச நடவடிக்கைகள் எமக்கு சார்பாக இருக்கும் என்பது யதார்த்தமாகப் படுகின்றது.

அண்ணொய் சொல்றனின்டு குறை நினைக்கவேண்டாம் இன்னுமா நம்புகிறீர்கள் கூத்தமைப்பு தலைமையை? அவர்களை காப்பாற்ற பூசி மெழுகி எழுதபட்ட உரை 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்குள்ள மாட்டை கொண்டுவந்து விடுவதை போல் கிழக்குதிமோரைஒப்பீடு வேண்டாம் கி-திமோரின் எண்ணைவளம் கனிமவளத்தையும் இலகுவாக குறைந்த விலையில் கொள்ளை அடிப்பதற்க்கு ஏதுவாக அவசர அவசரமாய் பிரசவிக்கப்பட்ட ஒன்று மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசும் அவுஸ்ரேலியா சுகர்தோவின் காலத்தில் கி-திமோர் 85வீதத்திற்க்கு மேற்பட்ட கடலில் எண்ணைய் எடுப்பதுக்கான ஒப்பந்தம் இன்னும் வைச்சுகொண்டு அந்த கடல்படுகையில் இன்றும் எண்ணெய் எடுத்தவண்ணம் உள்ளது இவ்வளவுக்கும் அந்நாட்டின் ஆசியாவின் மிகக்குறைந்த வருமானம் இப்ப சொல்லுங்கள் அவர்கள் உண்மையிலேயே சுதந்திரம் பெற்றவர்களா?

நாலாவது லைனில் சர்வதேசநிகழ்ச்சி நிரல் என்ற குழையடிப்பு மூலமாய் பிரித்தானியாவில் உள்ள செயற்பாட்டாளர்களை அவமாணபடுத்தியாச்சு இந்தியா இலங்கை விடயத்தில் முழு கையறு நிலையிலேயே உள்ளது நாலு வருசமா வீடுகட்டுற கேவலம் உலகத்தில் எங்கும் இல்லை.

விசா காட்டி யாரை முன்னுக்கு கொண்டு வருகிறியல் மேட்டுகுடியைதாணே ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அனுசரணையுடன் கமரன் அவ்வாறு நடந்துகொண்டார் என்பதை ஏற்பதற்கில்லை.. ஆனால் நடந்தவை தம் ஏற்பாட்டில்தான் நடந்தன என்பதுபோல் காட்ட விளைவது இயற்கைதான்..

உதாரணத்துக்கு மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருவதை இந்தியா விரும்புவதில்லை.. ஆனால் நேரடியாக அதை எதிர்க்கும் திராணியற்ற நிலையில் உள்ளது. இதன்காரணமாக தீர்மானத்தை முதலில் நீர்த்துப்போகச் செய்வது; பின்னர் அதை ஆதரித்து தனது தீர்மானம்போல் காட்டிக்கொள்வது என நடக்கிறது.

இந்தியாவின் திட்டத்தில்தான் கமரன் அவ்வாறு நடந்துகொண்டார் எனில் இந்தியாவின் பிந்திய அறிக்கை அந்த வாதத்துக்கு வலு சேர்க்கவில்லை. அதாவது பிரித்தானியாபோல் இலங்கை விவகாரத்தில் செய்படமுடியாது என சொல்லியிருந்த விடயம்..

முடிவாக, இந்தியாவின் பிடி இளகியுள்ளது என்பதுதான் கூடுதல் வலுக்கொண்ட வாதமாக இருக்கமுடியும். கிட்டத்தட்ட ஐந்து வருட கால அவகாசம் அதற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையை அதனால் சரியாக கையாள முடியவில்லை.

இன்னும் இந்தியாவை நம்பினால், ஈழத் தமிழனின் நெஞ்ஞாங் கட்டையும் மிஞ்ஞாது. அதையும் எடுத்து தங்களின் வீட்டுக்கு விறகாக பாவிப்பார்கள்.

சந்தர்ப்பங்களைப் பாவிக்கும் இராசதந்திரம் தமிழ்த் தலைமைகளிடம் இல்லை என்பது ஜீஜீ இடம் இருந்து தொடர்கிறது.

ஈழத் தமிழனின் பிரச்சனையை துணைக் கண்டத்தின் அதிகாரத்தில்  இருந்து சர்வதேசப் படுத்தும் சந்தர்ப்பங்களையும் விட்டு விடுவோம் போலத்தான் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்குள்ள மாட்டை கொண்டுவந்து விடுவதை போல் கிழக்குதிமோரைஒப்பீடு வேண்டாம் கி-திமோரின் எண்ணைவளம் கனிமவளத்தையும் இலகுவாக குறைந்த விலையில் கொள்ளை அடிப்பதற்க்கு ஏதுவாக அவசர அவசரமாய் பிரசவிக்கப்பட்ட ஒன்று மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசும் அவுஸ்ரேலியா சுகர்தோவின் காலத்தில் கி-திமோர் 85வீதத்திற்க்கு மேற்பட்ட கடலில் எண்ணைய் எடுப்பதுக்கான ஒப்பந்தம் இன்னும் வைச்சுகொண்டு அந்த கடல்படுகையில் இன்றும் எண்ணெய் எடுத்தவண்ணம் உள்ளது இவ்வளவுக்கும் அந்நாட்டின் ஆசியாவின் மிகக்குறைந்த வருமானம் இப்ப சொல்லுங்கள் அவர்கள் உண்மையிலேயே சுதந்திரம் பெற்றவர்களா?

நாலாவது லைனில் சர்வதேசநிகழ்ச்சி நிரல் என்ற குழையடிப்பு மூலமாய் பிரித்தானியாவில் உள்ள செயற்பாட்டாளர்களை அவமாணபடுத்தியாச்சு இந்தியா இலங்கை விடயத்தில் முழு கையறு நிலையிலேயே உள்ளது நாலு வருசமா வீடுகட்டுற கேவலம் உலகத்தில் எங்கும் இல்லை.

விசா காட்டி யாரை முன்னுக்கு கொண்டு வருகிறியல் மேட்டுகுடியைதாணே ?

பெருமாள்,
 
கூட்டமைப்பினை நம்புவதற்கு, அவர்களிடம் என்ன எதிர்பார்கீறீர்கள் என்று சொல்லுங்கள். அதிகம் எதிர் பார்க்காதீர்கள். கோபப்படமாட்டீர்கள்.
 
அவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் தெரியும், அவர்களால் ஆகக் கூடியது எதுவும் இல்லை. சின்ன விடயமான ஆளுநர் மாத்தமே, செவுட்டுக் காதில் விழுந்து இருக்கிறது. நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் என்பவர்களுடன் என்ன செய்ய முடியும்?
 
இந்திய, சர்வதேச அணுகுமுறைகளினால் தான் எதுவும் கிடைக்கலாம் என்பதால் அதற்குரிய ஒருவர் முன்னிருத்தப் பட்டிருக்கின்றார்.
 
இன்னும் தெளிவாக சொல்வதானால், டக்லஸ் போன்ற, கொலை சந்தேக நபர் முதலமைச்சராக வந்திருப்பின், கமரோன், அவருடன் இருந்து பேசி இருக்க மாட்டார்.
 
அது போலவே சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை, சிவாஜி போன்றார் நிலைமையும். 
 
இந்த வகையில், நீங்கள் மேட்டுக் குடி என்று குறிப்பிடுவதன் அர்த்தம் புரிந்தாலும், விக்னேஸ்வரன் தான் இன்றைய நிலையில் தேவை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஓரளவு பொருத்தமாக இருப்பினும், அவர் தேர்தலில் நிற்கவில்லை.
 
சில கூட்டமைப்பு அரசியல் வாதிகளின் கூச்சல்கள் எம்மில் சிலரை சந்தோசப் படுத்தலாம். ஆனால் அது ஏற வேண்டிய சபையோ, காதுகளோ ஏறாது.
 
பிரித்தானியாவில் உள்ள செயற்பாட்டாளர்களை அவமாணபடுத்தியாச்சு என்று சொல்கிறீர்கள்:
 
அவர்களது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஒத்து இயங்கும் போது மட்டுமே எம்மவர் செயற்பாடுகள், பயன் அளிக்கும். 2009 ல் நாம் செய்யாத போராட்டமா? என்ன நடந்தது?
 
நான் சொல்வது எனக்குப் புரியும் யாதர்த்தம். அதற்காக நான் இந்திய, கூட்டமைப்பு ஆதரவாளர் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினை நம்புவதற்கு, அவர்களிடம் என்ன எதிர்பார்கீறீர்கள் என்று சொல்லுங்கள். அதிகம் எதிர் பார்க்காதீர்கள். கோபப்படமாட்டீர்கள்.
 
அவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் தெரியும், அவர்களால் ஆகக் கூடியது எதுவும் இல்லை. 

நன்றி  ஐயா

நேரத்திற்கும் கருத்துக்கும்.

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அனுசரணையுடன் கமரன் அவ்வாறு நடந்துகொண்டார் என்பதை ஏற்பதற்கில்லை.. ஆனால் நடந்தவை தம் ஏற்பாட்டில்தான் நடந்தன என்பதுபோல் காட்ட விளைவது இயற்கைதான்..

உதாரணத்துக்கு மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருவதை இந்தியா விரும்புவதில்லை.. ஆனால் நேரடியாக அதை எதிர்க்கும் திராணியற்ற நிலையில் உள்ளது. இதன்காரணமாக தீர்மானத்தை முதலில் நீர்த்துப்போகச் செய்வது; பின்னர் அதை ஆதரித்து தனது தீர்மானம்போல் காட்டிக்கொள்வது என நடக்கிறது.

இந்தியாவின் திட்டத்தில்தான் கமரன் அவ்வாறு நடந்துகொண்டார் எனில் இந்தியாவின் பிந்திய அறிக்கை அந்த வாதத்துக்கு வலு சேர்க்கவில்லை. அதாவது பிரித்தானியாபோல் இலங்கை விவகாரத்தில் செய்படமுடியாது என சொல்லியிருந்த விடயம்..

முடிவாக, இந்தியாவின் பிடி இளகியுள்ளது என்பதுதான் கூடுதல் வலுக்கொண்ட வாதமாக இருக்கமுடியும். கிட்டத்தட்ட ஐந்து வருட கால அவகாசம் அதற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையை அதனால் சரியாக கையாள முடியவில்லை.

இசை,
 
இந்தியா போன்ற பிராந்திய வல்லரசை மீறி, பிரித்தானியா இயங்கும் என்று நம்புகிறீர்களா?
 
இந்தியாவின், இலங்கை மீதான ஆளுமை இழக்கப் பட்டுவிட்டதால், மேற்கின் முயற்சி இந்தியாவினால் அனுசரிக்கப் படுகிறது.
 
அமெரிகாவின் உள்வருகைக்கு ஆப்பு வைக்கத் தான் 1987 ல் இந்திய ராணுவம் வந்தது.
 
அன்று சீனா இல்லை. இன்று புலி ஒழிப்பு முன்னின்றதால் கோட்டை விட, சீனத்து ட்ரகோன் உள்ளே நிற்கின்றது.
 
அதுதான் இந்தியாவின் சிக்கல்.
 
இந்த வல்லரசுகள் சிக்கல் சமன் பாட்டுக்குள் சிக்கியுள்ள எமது பிரச்சினையையும் தீர்க்கும் ஆளுமை, புத்திசாலித்தனம் தான் இன்றைய தேவை.
 
அவுஸ்திரேலியாவின் எண்ணை தேவைக்குள், இந்தோனேசியாவின் மனித உரிமைப் மீறல்களை மையப் படுத்தி, போர்த்துகல் நாட்டினை உள்வாங்கி தனது சுதந்திரத்தினை வென்றது கிழக்கு தீமோர்.
 
(சுதந்திரம் வென்ற பின் அரசியல் வாதிகளின் எண்ணை ஊழல் வெல்கிறது பெருமாள்)
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தலைப்பு, அனைத்துக் கருத்துக்களும்... நன்றாக உள்ளன. :)

அண்மையில் இந்திய துணை ஜனாதிபதி ஃபிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இது யாருக்கு எரிச்சலைக் கொடுக்கக்கூடியது? :rolleyes:

கியூபாவை மகிழ்விக்க இந்தியாவுக்கு ஒரு தேவையும் இல்லை. அது ஒரு பெரிய சந்தையும் கிடையாது. ஆகவே, மேற்குலகுக்கு எரிச்சல் மூட்ட செய்யப்பட்ட ஒரு சந்திப்பே அது.

இதற்கு பல ஆண்டுகளின் முன் ஷங்காய் கூட்டமைப்பில் இந்தியா பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுக்கொண்டது நினைவிருக்கலாம். மேற்குக்கு எதிரான ஒரு நடவடிக்கையே அதுவும்.

கடந்த பத்தாண்டுகளாக, இந்தியா மேற்கின் சொற்படி ஆட தயாராக இல்லை. அதனால் மேற்கும் இந்தியாவை அருட்டி வெருட்ட பின்னிற்கப் போவதில்லை. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட வைத்ததில் இந்தக் கறள் ஆரம்பமாகியிருக்கலாம்.

நிற்க.. இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரம் இலங்கையைப் பாதிக்கும் அளவுக்கு இந்தியாவையும் பாதிக்கிறது. மேற்கு இந்தியாவுடன் நட்புறவாகப் போகக்கூடிய தன்மை இருக்குமானால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இப்போது கிளறப்பட மாட்டா.

ஆகவே, பிரித்தானியாவின் அண்மைய செயல், ஒரு படியை அதிகரிக்கும் செயலே. இது இந்தியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. கமரன் சிங்கை சந்தித்ததால் இந்தியாவின் பேச்சைக் கேட்டு ஆடுகிறார் என்றில்லை. அண்டை நாடு; வல்லரசு என்கிற வகையில் மரியாதை கொடுக்கும் ஒரு நிகழ்வே அது. எதிரி நாடு அல்ல இந்தியா.

 பலர் ஒரு வாறு அரை கிணறு தாண்டியாச்சு ,அடுத்த  அரை தாண்டுவது பெருங்கஸ்டம்  :icon_mrgreen: .

நீங்கள்

பக்கத்தில் நின்றால்

மிகமிக கஸ்டம் 

தள்ளி  நின்றால்

முடியலாம்  :icon_mrgreen:  :icon_mrgreen: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இந்திய துணை ஜனாதிபதி ஃபிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இது யாருக்கு எரிச்சலைக் கொடுக்கக்கூடியது? :rolleyes:

கியூபாவை மகிழ்விக்க இந்தியாவுக்கு ஒரு தேவையும் இல்லை. அது ஒரு பெரிய சந்தையும் கிடையாது. ஆகவே, மேற்குலகுக்கு எரிச்சல் மூட்ட செய்யப்பட்ட ஒரு சந்திப்பே அது.

இதற்கு பல ஆண்டுகளின் முன் ஷங்காய் கூட்டமைப்பில் இந்தியா பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுக்கொண்டது நினைவிருக்கலாம். மேற்குக்கு எதிரான ஒரு நடவடிக்கையே அதுவும்.

கடந்த பத்தாண்டுகளாக, இந்தியா மேற்கின் சொற்படி ஆட தயாராக இல்லை. அதனால் மேற்கும் இந்தியாவை அருட்டி வெருட்ட பின்னிற்கப் போவதில்லை. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட வைத்ததில் இந்தக் கறள் ஆரம்பமாகியிருக்கலாம்.

நிற்க.. இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரம் இலங்கையைப் பாதிக்கும் அளவுக்கு இந்தியாவையும் பாதிக்கிறது. மேற்கு இந்தியாவுடன் நட்புறவாகப் போகக்கூடிய தன்மை இருக்குமானால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இப்போது கிளறப்பட மாட்டா.

ஆகவே, பிரித்தானியாவின் அண்மைய செயல், ஒரு படியை அதிகரிக்கும் செயலே. இது இந்தியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. கமரன் சிங்கை சந்தித்ததால் இந்தியாவின் பேச்சைக் கேட்டு ஆடுகிறார் என்றில்லை. அண்டை நாடு; வல்லரசு என்கிற வகையில் மரியாதை கொடுக்கும் ஒரு நிகழ்வே அது. எதிரி நாடு அல்ல இந்தியா.

இசை,
 
இணைத்தலைமை நாடுகள் அனுசரணையில் நடந்த புலிகள், அரசு பேச்சுவார்தையினை  இந்தியா தான் குழப்பியது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?
 
இந்தியாவினுள் 1000 மனித உரிமை மீறல்கள் பிரச்சனை இருபினும், மேற்கு அதனை கண்டு கொள்ளப் போவதில்லை. 
 
அதே போல் இலங்கை மீதான தனது ஆளுமையை மீட்க  இந்தியா எதுவும் செய்யும். அதில் ஒரு முயற்சி தான் கமரோன் வரவு.
 
இலங்கையில் மாகாநாடு நடாத்த ஊக்குவித்தது இந்தியா தான்.
 
இலங்கை விடயத்தில் இந்தியா செய்வது:   good cop, bad cop game.
 
கியூபா: IT business ventures
  • கருத்துக்கள உறவுகள்
வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுவதும். விக்கிரமாதித்தன் மீண்டும் அதனை வீழ்த்திச் சுமந்துசெல்லும் அம்புலிமாமா கதைபோன்று சுவையான இருவரின் பின்னூட்டங்களை பல திரிகளில் கண்டு சுவைத்துள்ளேன். இத்திரியின் பின்னூட்டத்திலும் அது வெளிவந்து சுவை தருகிறது. அறிந்து சுவைப்பது ஏனைய உறவுகளைப் பொறுத்தது. :D  :lol:  :D  
 
  • கருத்துக்கள உறவுகள்

இசை,
 
இணைத்தலைமை நாடுகள் அனுசரணையில் நடந்த புலிகள், அரசு பேச்சுவார்தையினை  இந்தியா தான் குழப்பியது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?
 
இந்தியாவினுள் 1000 மனித உரிமை மீறல்கள் பிரச்சனை இருபினும், மேற்கு அதனை கண்டு கொள்ளப் போவதில்லை. 
 
அதே போல் இலங்கை மீதான தனது ஆளுமையை மீட்க  இந்தியா எதுவும் செய்யும். அதில் ஒரு முயற்சி தான் கமரோன் வரவு.
 
இலங்கையில் மாகாநாடு நடாத்த ஊக்குவித்தது இந்தியா தான்.
 
இலங்கை விடயத்தில் இந்தியா செய்வது:   good cop, bad cop game.
 
கியூபா: IT business ventures

முதற்கண்.. கியூபாவில் தகவல் தொழில்நுட்ப வியாபாரத்தை பெருக்க ஃபிடலை பாராட்டிப் பேசினால் ஆகிவிடுமா? அது அமெரிக்காவுக்குப் பிடிக்காமல் போய் அமெரிக்காவில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சந்தைஅயை பாதிக்காதா? இந்தியாவுக்கு முக்கியமானது கியூபாவின் சந்தையா அல்லது அமெரிக்க சந்தையா?

அடுத்தது சமாதான காலத்துக்குப் போனால், இந்தியாவின் தாளத்தை மேற்கு நாடுகள் ஏற்றுக்கொண்டன என்றே கருதுகிறேன். இதற்குப் பிரதியுபகாரமாக மேற்குலகம் இந்தியாவிடம் என்ன எதிர்பார்த்தது என்பதில் தெளிவில்லை எனக்கு.

ஆனால் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, இந்தியா வகுத்துக் கொடுத்த பாதையில் போர் செல்லாததை மேற்குலகம் கண்டுகொண்டது. உடனே, அமெரிக்கா அதில் தலையிடும் எண்ணத்தைக் கொண்டதும், மேனன் அவசரமாக ஓடிப்போய் சமாதானம் செய்தார். அதன்பின்னர், நிருபமா ராவை அங்கு நியமித்தார்கள்.

மேற்குலகம் படிப்படியாக இந்தியாவில் பொறுமை இழந்து வருவதைத்தான் இது காட்டுகிறது. இப்போது இந்தியா ஏதாவது ஜிம்னாஸ்டிக்ஸ் செய்துதான் மேற்கின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.......அது அமெரிக்காவுக்குப் பிடிக்காமல் போய் அமெரிக்காவில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சந்தைஅயை பாதிக்காதா? இந்தியாவுக்கு முக்கியமானது கியூபாவின் சந்தையா அல்லது அமெரிக்க சந்தையா?

இசை,
 
கொப்பு இழக்காதீர்கள்!! 
 
அமெரிக்காவுக்கு முக்கியமானது மிகப் பெரிய இந்திய சந்தை. Holywood சினிமாவுக்கும், KFC, McD, Pizzahut, Coke, Pepsi மற்றும் iphone, microsoft போன்ற பல அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை.
 
இந்தியர்கள், அமெர்க்காவில் வேலை வாய்புகள் பெறுகின்றனர் என்பது தவறான நோக்கு.
 
மறுபுறமாக, இந்தியா அமெரிக்காவின் தொழில் நுட்ப தேவைக்கு மனித வலு தரும் பெரும் suppller.
 
இந்திய அரசியல் வாதிகளின் முதுகு எலும்பு இல்லா தன்மையினால் தான், அமெரிக்கா, தான் இந்தியர்களுக்கு உதவுவதாக காட்டிக் கொள்கிறது.
 
உண்மையில் இந்தியர்களின் செலவு குறைவான வலுவை அமெரிக்கா சுரண்டுகிறது. 
 
இந்தியர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறினால் அமெரிக்கா படுத்து விடும்.
 
சீனாவே, தொழில் நுட்ப தேவைகளுக்கு இந்தியாவை நாடுகிறது.

இந்தியர்கள் வெளியேறினால் அல்லது வெளியேற்றப்பட்டால் முதலாளிகள் தள்ளாடுவார்கள். அதற்காக அந்த நாடே படுத்துவிடும் என்பது மிகைப்படுத்தல்.

கனடாவில் கனிமவளத்துறையில் அண்ணளவாக 80,000 வேலை வாய்ப்புகள் நிரப்பப்பட முடியாமல் உள்ளன. அதற்காக அந்தத் துறையே படுத்துவிட்டது எனக்கூற முடியுமா? மாறாக, தானியங்கி முறையில் குறைந்த மனித வளத்தைக் கொண்டு கனிமத்தை அகழும் முறையில் முன்னணியில் உள்ளோம்.

அதுபோல இந்தியர்கள் போனால் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாடும். ஆனால் காலப்போக்கில் அந்த வெற்றிடத்தை வேறு திசைகளில் இருந்து வரும் காற்று நிரப்பும்.

முதலாளித்துவத்தில் தொழிலாளிகள் முதலாளியைக் கட்டுப்படுத்துவது ஒரே ஒரு வழியில்தான்.. அது தொழிற்சங்கங்கள் மூலமாக மட்டுமே. அவற்றையும் முடிந்த அளவு உடைத்து வருகிறார்கள் முதலாளிகள்.

ஆகவே இந்தியர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவால் அமெரிக்கா அவர்களுக்குப் பயப்படுகிறது என்பது ஏற்புடையதல்ல. அந்த தகவல் தொழில்நுட்ப அறிவையே உண்டாக்கியது அமெரிக்காதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிக்கல் என்னவென்றால் அவர்களது மக்கள் தொகையில் இருந்த உருவாகும் குறித்த ஊழியர்தொகை போதுமற்றதாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை,

தலைப்பில் இருந்து விலகி தொலைவு வந்துவிட்டோம். திருப்புவோம்.

முன்னர் ஒரு திரியில் இந்த யதார்த்தம் குறித்து பதிந்து இருந்தேன்.

அது சரியாகும் போல் படுகின்றது இப்போதைய நிலையில்!!

''ஆசியாவே அடுத்த பொருளாதார பெரு வளர்ச்சிக்கு உரிய பிரதேசம் என்பதை மேற்குலகு புரிந்து வைத்துள்ளது. அதே வேளை தனக்கு சரியான, பொருத்தமான தளம் அங்கே இல்லை என்பதனையும் அது உணருகின்றது.

ஆசியாவில் இருந்த பெரும் பொருளாதார தளமான ஹாங்கொங்க், பிரிட்டனின் கையில் இருந்து சீனர் கைக்கு போய் விட்டது. அடுத்த பொருளாதார மையம் சிங்கப்பூர், சீனர் தான் பெரும்பான்மை. தாய்வானும் அதே நிலை.

இன்னுமோர் தளம் வேண்டுமாயின், சிறியதாக, நம்பிக்கை உள்ளதாக, ஆசியாவில், வேண்டுமானால், இலங்கை வடக்கு கிழக்கு தான். காரணம், அங்கே பிறந்த பலர், இப்போது மேற்கு நாடுகளின் குடிமக்கள். (மத்தியகிழக்கில் இஸ்ரேல் போல்)

இங்கே தான் எமது ராசதந்திரத்தின் அடித்தளம் உள்ளது.''

சீனத்து வரவால் - இந்தியாவின் கையறு நிலையில், ஆசியாவில் தனது தளங்களை இழந்து தளம் தேடும் மேற்கு, அடுத்த வாய்ப்பான தளத்தினையும் சீனாவிடம் இழக்குமா என்பதே எம் முன்னுள்ள கேள்வி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவில் இருந்த பெரும் பொருளாதார தளமான ஹாங்கொங்க், பிரிட்டனின் கையில் இருந்து சீனர் கைக்கு போய் விட்டது. அடுத்த பொருளாதார மையம் சிங்கப்பூர், சீனர் தான் பெரும்பான்மை. தாய்வானும் அதே நிலை.

இன்னுமோர் தளம் வேண்டுமாயின், சிறியதாக, நம்பிக்கை உள்ளதாக, ஆசியாவில், வேண்டுமானால், இலங்கை வடக்கு கிழக்கு தான். காரணம், அங்கே பிறந்த பலர், இப்போது மேற்கு நாடுகளின் குடிமக்கள். (மத்தியகிழக்கில் இஸ்ரேல் போல்)

இங்கே தான் எமது ராசதந்திரத்தின் அடித்தளம் உள்ளது.''

கிலாரி கிளின்ரன் இந்தியாவுக்கு வருகைதந்தபோது இந்திய மாநிலங்களில் முக்கியமாக தமிழ்நாட்டில் கவனம் செலுத்தியதன் காரணம்....?. தாயையும் சேயையும் சேர்த்துத் தத்தெடுக்கும் முயற்சியின் முன்னோடியா.?? ராசதந்திரத்தின் நாயகனோ, நாயகியோ தமிழரை நேசிப்பவர்களாக இருக்க வேண்டுமே??? :rolleyes: .
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிலாரி கிளின்ரன் இந்தியாவுக்கு வருகைதந்தபோது இந்திய மாநிலங்களில் முக்கியமாக தமிழ்நாட்டில் கவனம் செலுத்தியதன் காரணம்....?. தாயையும் சேயையும் சேர்த்துத் தத்தெடுக்கும் முயற்சியின் முன்னோடியா.?? ராசதந்திரத்தின் நாயகனோ, நாயகியோ தமிழரை நேசிப்பவர்களாக இருக்க வேண்டுமே??? :rolleyes: .

ஐயா,

விளக்குமாறு இருக்கட்டும் ஒரு புறமே!!

இப்போது மூஞ்சூறு மட்டும் ஓடுற வழியைப் பார்ப்பது நலம்!!  :o  :icon_idea:  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா,

விளக்குமாறு இருக்கட்டும் ஒரு புறமே!!

இப்போது மூஞ்சூறு மட்டும் ஓடுற வழியைப் பார்ப்பது நலம்!!  :o  :icon_idea:  :icon_mrgreen:

நான் ராசதந்திரத்தின் நாயக, நாயகி எனக் குறிப்பிட்டது விளக்குமாறுகளைத்தான். மூஞ்சூறு மட்டும் தனியே ஓடுவதற்கு விளக்குமாறுகள் விடாது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தையே கூட்டிப் பெருக்கியது.... இருக்கட்டும் ஒருபுறம் என்றால் அது தமிழர் இருப்பையே அழித்துவிடும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-of-the-Day-27_11_2013-6000-1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.