Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி மோதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமல்ல : சனத் ஜயசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sanath_Jeyasuriya.jpg

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியற்றது என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய தபால் சேவைகள் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை உள்ளாக விசாரணைகளை முறையாக முன்னெடுக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணையொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது சரியான முறையல்ல என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை இறைமையும், சட்ட திட்டங்களும் உள்ள நாடு என்கிற வகையில் சர்வதேச விசாரணைகள் ஏதும் அவசியமற்றது என்று கேளராவின் திருவனந்தபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா இலங்கையின் நீண்டகால நட்பு நாடென்றும். அந்த நட்பில் எந்தவித விரிசலும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்பது உறவில் விரிசல்களை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

http://www.4tamilmedia.com/newses/srilanka/18987-no-need-for-int-l-probe-in-sl-sanath-jayasuriya

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா சொல்லனும் என்னுதான், Waitingu!

இனி யாராவது சர்வதேச விசாரணை கேட்டால், பச்சை, ச, கிரிக்கட் மட்டையால சாத்திப்புடுவாரு.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது இந்தக் கருத்து எனக்கு முக்கியமல்ல.. இவர் அடித்த சிக்சர்களே இன்றும் என் மனக்கண்முன் ஆடுகின்றன.. கிரிக்கட்டின் பொற்காலம் அது.. அடுத்ததா களு ஏதாவது சொல்வார் என எதிர்பார்க்கிறேன். அவரும் நல்லா சிக்சர் விளாசுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி நாலாவது ரெடியா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எதிராக தமிழ் மக்கள் கொடி பிடித்த போது கிறிக்கட்டை கிறிக்கட்டாக பார்க்க வேண்டும் என்று சொன்ன ஆரசியல் ஆய்வாளர்கள் எங்கே? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனவாத அரசியலும் கிரிக்கெட்டும் ஒன்றை ஒன்று பின்னி பிணைந்தவை. சில இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திறமை சாலிகள். ஜெயவர்தன, அட்டபட்டு, சங்கா இவர்கள் ஸ்டைல் பல இளம் சந்ததியில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் புழுத்து போன அரசியல் வாதிகள் இவர்களின் எதிர் காலத்தை தீர்மானிக்கிறார்கள். தமது கிரிக்கெட் ஓய்விற்கு பின் இவர்களும் அந்த சாக் கடையில் விழுவது துரதிஷ்ட மானது. இவர்கள் அறிந்த கிரிக்கெட் கலையும் கீர்த்தியும் மழுங்கடிக்கபடுகிரது

ஜெயசூரிய அவர்களே யாரும் சர்வதேச விசாரணையை விரும்பி அழைப்பதில்லை. அது எவர் உருவத்தில் வரும் என்று நீங்கள் கணக்கு பண்ண ஏலாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது முன்னரே எதிர்பார்த்ததுதானே?? முரளியான முரளியே தமிழர்க்கு இங்கு பிரச்சினையில்லை, இருந்ததெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினை மட்டும்தான் என்று சொல்லும்போது, ஒரு தென்பகுதிச் சிங்களவன், அதுவும் அமைச்சராக இருப்பவன் இப்படிச் சொல்வதில் ஆச்சரியமில்லை. விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சப்பைக் கட்டு கட்டுவது இனிமேலும் இங்கு எடுபடப் போவதில்லை. 

 

இவ்வளவு நடந்ததற்குப் பின்னரும் நான் சிங்களக் கிரிக்கெட்டை ஆதரிப்பேன் என்று சொல்வது, அரசியலில் தமிழர்க்கு என்ன அழிவு நடந்தாலும் பரவாயில்லை, சிங்களத்திற்கு நான் கொடுக்கும் ஆதரவு மாறப்போவதில்லை என்பதையே சொல்லி நிற்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் சங்கக்காரா, ஜெயவர்த்தனா போன்றவர்களும் கருத்துக்களை வைத்தாலும் வைப்பினம்.

சிறி லங்கா ஜெநோசைடை மறைக்க எப்போதும் கிரிகெட்டையே பாவித்தது.

கிரிகெட்டை வைத்து தமிழர் போராட்டங்கள் செய்து இன்னும் அழுத்ததை கூட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா கிரிக்கெட் அணி எவ்வளவு மோசமான மனிதாபிமானமற்ற சிங்களப் பேரின இனவாத சித்தாந்தத்தில் கட்டியமைக்கப்பட்ட அமைப்பு என்பதை சொல்ல இதனை விட  வேறு உதாரணம் அமையாது. சிறீலங்காவின் கிரிக்கெட்.. சிங்களப் பேரினவாதத்தின் ஒரு ஊக்கி.

என்னதான் கிரிகட் விளையாடினாலும் சிங்களவன் சிங்களவன் தான்.

 

போக இலங்கையரசுக்கு ஏதோ டேவிட் கமரனும் ஏனைய அமைப்புகளும் சர்வ தேச விசாரணையை கடன் குடுப்பதாக இவர்கள் நினைகின்ரர்கள் போலகிடக்கு ஏற்க மாட்டினமாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.